ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை — -1-2-7-

சங்க ஸ்வபாவன் -அடியார் பக்கல் பற்றையே இயல்பாக உடையவன் -என்றார் கீழ் –
அவன் பற்றையே இயல்பாக உடையவன் ஆயினும்,-அபரிச்சின்ன அளவிட முடியாத-
உபய – இரண்டு விதமான மஹா விபூதியையுடையவனாய் இருந்தான்;
இவன்-அதி ஷூத்ரனாய் – மிகச் சிறியனாய்,-ஷூத்ர- மிகச் சிறிய உபகரணத்தை யுடையவனாய் இருந்தான்;
ஆன பின்னர், அவனை இவனால் கிட்டலாய் இருந்ததோ?
மேலும், கடலிலே புக்க துரும்பானது இரண்டு தலையிலும் நினைவு இன்றிக்கே இருக்கவும்,
திரைமேல் திரையாகத் தள்ளுண்டு போந்து கரையிலே சேருகிறது இல்லையோ?
‘அப்படியே அவனுடைய ஐஸ்வரிய-தரங்கமானது – அலையானது- இவனைத் தள்ளாதோ?’ என்னில்,
இந்த ஐஸ்வரியம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியானவனுடைய ஐஸ்வரியம் என்று அனுசந்திக்கவே –
நினைத்தால் தானும் அதுவாக அந்வயிக்கலாம் இறே -சேரலாமே!
ஆன பின்னர், சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார். ‘எங்ஙனம்?’ எனின்,

ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்று இருக்குங்காலத்தில்-அர்த்த ஆர்ஜனம் – பொருள் தேடும் விருப்பினால்
வெளி நாடு சென்றான்; அவளும் கரு உயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய
வாணிகமே தொழிலாக மகனும் பொருள் தேடப் போனான். இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக்கொண்டு
வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி
விவாதம் உண்டான சமயத்தில், இருவரையும், அறிவான் ஒருவன் வந்து,
‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்ததால்,
கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய்,
அவன் -ரக்ஷகனாய் -காப்பாற்றுகின்றவனாய் இவன் -ரஷ்யமாய் -காப்பாற்றப்படும் பொருளாய்
அந்வயிக்கலாம் அன்றோ-கலந்துவிடுவார்கள் அன்றோ? அது போன்று,

சமானம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதே ‘சீவான்மாவும் பரமான்மாவும் சரீரமாகிற ஒரு மரத்தினைப் பற்றியிருந்தால்
ஒருவன் இரு வினைப் பயன்களை -புஜியா நிற்கும் -நுகரா நிற்பன்; ஒருவன் -புஜிப்பித்து -நுகர்வித்து விளங்கா நிற்பன்;
அவன் நியாமகன் – ஏவுகின்றவன்; நாம்-நியாம்யம் – ஏவப்படும் பொருள்,’ என்னும் முறை அறியவே பொருந்தலாம் அன்றே!

ஓர் அரச குமாரன்-உத்யானத்தை – பூங்கா ஒன்றினைக் கண்டு புக அஞ்சினால், ‘இது உன் தகப்பனது காண்,’ என்னவே,
நினைந்தபடி நடந்து கொள்ளலாம் அன்றோ!
ஆன பின்னர்,ததீயம் – ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்,’ என்னும் நினைவே வேண்டுவது;
தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்-அந்வயிக்கலாம் – என்கிறார்.

————————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

சங்க ஸ்வ பாவனானால் அவன் பூர்த்தியும் இவன் குறையும் கொண்டு கார்யம் என் –
இவை ஆராயாதே கிட்ட ஒண்ணாதோ என்ன –
ஆனாலும் அவன் ஐஸ்வர்ய உத்ரேகம் இவனுக்குப் பயத்தை விளைவிக்கும் என்னுமத்தை ச நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –
கடலுக்கும் இத்தைத் தள்ள வேணும் என்னும் நினைவு இல்லை -துரும்புக்கும் தள்ளப் போகிறது என்கிற நினைவு இல்லை
ஐஸ்வர்ய தரங்கம்-இவனைத் தள்ளுகையாவது அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று அயோக்ய அனுசந்தானத்தால் பிற்காலிக்கை-
இத்தால் தானும் அவ்விபூத் அந்தர் பூதனாய்க் கொண்டு-சேஷ பூதனானால்
ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்தைக் கொண்டு கிட்டலாம் என்றதாயிற்று –
அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி -அம்பாலே தலை அறும்படி
தார்ஷ்டாந்திகத்தில்-ஜீவர்கள் சரீரமாகிற வ்ருக்ஷத்தில் சங்கதராய் இருக்கச் செய்தே-த்வம் மே -என்றால் அஹம் மே –
ஷிபாமி -ந ஷமாமி-இங்கனே பிணங்குகிற சமயத்தில்
ஆச்சார்யன் சம்பந்தத்தை உணர்த்தி உபதேசிக்க -இவன் அபிமானத்தில் போம்படி திருத்தி –
தேவர்க்கு சேஷமான இவ் வாத்மாவை இவன் அபாராத்தைப் பார்த்து தள்ள ஒண்ணாது -என்று அவன் திருவடிகளில் சரணம் புக்கு
இவ் வழியாலே இருவரும் கூடினால் -பொழுதே பல பகலும் இத்யாதிப்படியே இவன் சோகிக்க-
கர்மத்தை வியாஜி கரித்து தள்ளினோமே என்று அவனும் சோகிக்க –
இப்படி இருவரும் கீழ் இழந்த நாளைக்கு சோகிக்க -இருவரும் ரஷ்ய ரஷக பாவேந சேருகை
தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத்–அபிசாகதீதி-என்றதால் பலித்த நியாந்த்ரு நியாம்ய பாவ சம்பந்தமும் இப்பாட்டுக்கு விவஷிதம்-

——————-

அடங்கெழில் சம்பத்து, அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃது என்று, அடங்குக உள்ளே-1-2-7-

அடங்க எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –
போக பூமியாய் இருக்கும் நித்ய விபூதி –
கர்மா நிபந்தனமாக அவனாலே நியாம்யமாய் இருக்கும் இவ் விபூதி –
அதில் ததீயம் என்று அனுசந்திக்கப் புக்கவாறே கர்மா நிபந்தமான ஆகாரம் தோற்றாதே –
ததீய ஆகாரத்துவமே இறே தோற்றுவது-

அடங்கு எழில் அஃது என்று –
கட்டடங்க நன்றான செல்வத்தை எல்லாம் கண்டு, ‘நமக்கு வகுத்த ஸ்வாமியானவனுடைய செல்வம் இவை எல்லாம்,’ என்று
அனுசந்தித்து – நினைந்து, அவ் விபூதிக்குள்ளே தானும் ஒருவனாகச் சேரக் கடவன்;
‘சேரின் பயன் யாது?’ எனின், அப்போது சேஷிக்கு அதிசயத்தை விளைத்தான் ஆகலாம்;
‘சேஷிக்கு அதிசயத்தை விளைத்தால் இவ் வாத்துமாவுக்குப் பயன் யாது?’ எனின்,
அவனுக்குச் சேஷமாக இருக்கும் இவ் வாத்துமாவினுடைய ஸ்வரூப சித்தி, சேஷி பக்கல் கிஞ்சித்காரத்தாலேயாய் இருக்குமே?
அதாவது, அடிமை சித்திப்பதே பலன் என்றபடி.

அடங்குக உள்ளே –
ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்த ஞானம் தானும் அவன் விபூதியிலேயே ஒருவனாய்ச் சேர்தல் வேண்டும்-அந்வயிக்கலாம் இறே
சமுத்திரம் அபரிச்சின்னமானாலும் அளவிடக் கூடாததாக இருப்பினும், அதன் உள்ளில் -சத்தவங்களுக்கு –
மீன் முதலிய பொருள்களுக்கு வேண்டினபடி புகலாம்; அன்றே? அது போன்று, சம்பந்தஞானம் அடியாகக் கிட்டலாம்;
சம்பந்த ஞானம் இல்லாத த்ருணத்தை துரும்பை யன்றே கடல் கரையிலே ஏறத் தள்ளுகிறது?
ஆயின், சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தல் யாருடைய தொழில்?’ எனின்,
அது இருவரையுஞ் சேர்ப்பிக்கின்ற ஆசாரியனுடைய தொழில்.-கடகருடைய க்ருத்யம் –

———————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

அஃது அடங்க சர்வேஸ்வரனுடைய சம்பத்து என்று உள்ளே அடங்குகை -அந்தர்பவிக்கை-சேஷ பரார்தத்வாத்-
பரகத அதிசய ஆதானேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபயா ச சேஷி பர சேஷி –
பர சப்தம் உத்க்ருஷ்டத்தையும் ண்யத்தையும் சொல்லுமே -அதிசயம் -பிரயோஜன ரூபமான கைங்கர்யம் –
அஃது அடங்க இது அடங்க ஈசன் எழில் ஈஸ்வரனுடைய சம்பத்து என்று உள்ளே அடங்குக அன்வயி என்று அன்வயம்
ராஜ புத்ர த்ருஷ்டாந்தத்தில் பிதா புத்ர சம்பந்தத்தை ஒருவன் உணர்த்தினால் போலே
தார்ஷ்டாந்திகத்தில் சேஷி சேஷ பாவ சம்பந்தத்தை உணர்த்துகிறார்
மஹத்வம் உண்டானாலும் சம்பந்த ஞானம் அடியாக கிட்டுக்கைக்கு த்ருஷ்டாந்தம்
கடலில் சத்வங்களும் -ஞானம் இல்லாத துரும்பு கரையில் தள்ளப்படுவதை ப்ரத்யஷிக்கலாம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading