இறைவனைப் பற்றுமிடத்து வருகின்ற -அந்தராய பாரிஹாரத்தையும் -இடையூற்றை நீக்குந் தன்மையினை –
அருளிச்செய்கிறார்.
(இங்கு இடையூறு’ என்றது, கைவல்ய அனுபவத்தினை. ‘
ஆயின், அதனை இடையூறு என்றால் பொருந்துமோ?’ எனின், )
இந்திர பதத்தினைக் கோலுமவன், இல்வருகு உண்டான ஐஸ்வர்யத்தைக் கோலான்;
பிரஹ்ம பதத்தை ஆசைப்படுமவன், இவ்வருகு உண்டான இந்திர பதத்தில் கண் வையான்;
கைவல்யத்தை (ஆத்துமானுபவத்தை) ஆசைப்படுமவன் ஐஸ்வர்யம் முதலியவைகளில் கண் வையான்;
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் நித்ய மங்கள விக்ரஹ உக்தனாய் –
எல்லா நற்குணங்களையுமுடையனாய் திவ்வியமங்கள விக்கிரகத்தையுடையவனாய் –
இருக்குமவனைப் பற்றுமவன் இவை இத்தனையிலும் கண் வையான்;
ஆக, இங்ஙனம்,- இவை ஒன்றற்கு ஒன்று இடையூறு ஆதல் காண்க.
——————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —
செற்றது மன்னுரில்-என்றத்தைக் கடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார் –
ஆத்ம அனுபவம் அந்தராயம் என்னலாம் என்று விவஷித்து அநேக வாக்கியங்கள் அருளிச் செய்கிறார்
ப்ராப்யதயா பற்றினவன் கைவல்யத்தை இச்சியாதே -அத்தை அபேக்ஷியாது இருக்கையை பரிஹாரம் –
——————-
அற்றது பற்றுஎனில், உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில், அற்று இறை பற்றே-1-2-5-
அற்றது பற்று எனில் –
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் – உடலும் உடல் சம்பந்தமான பொருள்களும் ஆன இவற்றில்- உண்டான –
பற்றது அற்றும் –
ஆசை நீங்கியது -என்னும் அளவிலே
உற்றது வீடுயிர்
உயிர் வீடு உற்றது – ஆத்துமா மோக்ஷத்தை – பிராபித்தது- அடைந்தது; ‘அடையல் உறும்’ என்றபடி
விலக்ஷண- வேறுபட்ட- ஞானத்தையும் -ஸ்வரூபத்தினை யுமுடைய உயிர்ப் பொருளுக்கு-அசித் சம்சர்க்கத்தாலே –
உடலின் சேர்க்கையால்-திரோதானத்தைப் பண்ணுகிறது – மறதி உண்டாகிறது;
அம் மறதி-யோக அப்யாஸத்தாலே – யோகத்தின் பயிற்சியால் நீங்கினவாறே ஸ்வரூபம் பிரகாசிக்கும்;
அது நித்தியமாய் ஞான ஆனந்தங்களாய் இருக்கையாலே ‘இது தன்னையே அனுபவிக்க அமையாதோ! என்று
தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும்;
அங்கு அனுபவிக்கும் அவ் வின்பத்தினையே இங்கு ‘வீடு’ என்கிறார்.
அது செற்று –
அதனை முகஞ்சிதறப் புடைத்து.
மன் உறில் –
மன்ன உறில், அதாவது, தன்னைப் பற்றினால் ‘இன்னமும் அதற்கு அவ்வருகே ஓர் அனுபவம் உண்டு’ என்று
இருக்க வேண்டாதபடியான நிலை நின்ற-புருஷார்த்தத்தை – உறுதிப் பொருளைப் பற்றப் பார்க்கில் -.
அற்ற இறை பற்று –
ஆஸ்ரயண- அடைகின்ற – காலத்திலே அவனுக்கு என்று அத்யவசித்து – அறுதி செய்து, சேஷியான அவனைப் பற்றப் பார்.
அன்றிக்கே
விபக்தியை மாறாடி-அவனைப் பற்றி இத்தை அறப் பார் -என்னுதல்-
‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு’ என்னுமா போலே
———————-
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —
ஆத்ம விலக்ஷணம் -ஞானஸ்ய வைலக்ஷண்யம் நாம சர்வ வஸ்து சாஷாத்கரித்வம்-ஞான ஆனந்த ஸ்வரூபம்
பகவத் அனுபவத்துக்கு அந்தராயமாய் தன் பக்கலிலே அகப்படுத்திக் கொள்ளுமே-
மன்னுறில் –பகவத் அனுபவம் எல்லையான புருஷார்த்தம் -ஆகையால் பொருந்த யுறில்-என்றபடி –
சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்து அங்கு உள்ளார் இருக்கிறவர்கள் படியைக் கேட்டு இவனுக்கும் அபேக்ஷை பிறக்கும் –
பிறந்தாலும் தத்க்ரது நியாயத்தாலே ஈஸ்வரன் இத்தையே அனுபவிப்பிக்கும் என்றபடி –
அபரிச்சின்னம் ஆகையால் மேன் மேல் என வேறே புருஷார்த்தங்களில் ருசி பிறவாத படி நிலை நிற்குமே
இறை சேஷி -அது தீர்ந்து புல்கு -என்றும் இறையைப் பற்றி அறு -அறப்பார் என்றுமாம்
சர்வேஸ்வரன் பக்கல் மனஸ்ஸூ பிரவணமாக-இதர ஆசைகளை ச வாசனமாக விட்டு சம்சார நிவ்ருத்தி
பற்று அற்றது எனில் உயிர் வீடு உற்றது -அது செற்று மன்னுறில் அற்று இறையைப் பற்று -என்றும்
இறையைப் பற்றி அறு என்றுமாம்
இதர சங்க தியாக பூர்வகமாக ஆத்ம அனுபவத்தை இச்சியாதே சர்வ சேஷியை
ஆஸ்ரயிக்க வேணும்-என்றது இப்பாட்டு பிரமேயம் –
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply