ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —-1-2-4–

விடப்படுகின்ற பொருள்கள் போன்று –
அபோக்யமுமாய் -இன்பம் அற்றனவாயும்,-ச தோஷமுமாய் – குற்றங்களையுடையனவாயும் இராது என்று
பற்றப்படுகின்ற விஷயத்தினுடைய போக்யதையை – இனிமையினை அருளிச்செய்கிறார்.

——————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

——————

இல்லதும் உள்ளதும், அல்லது அவன்உரு
எல்லையில் அந்நலம், புல்குபற்று அற்றே-1-2-4-

இல்லதும் –
பிரமாணங்களால் அறியக் கூடாததாய், முயற்கொம்பு என்பது போன்று உலகத்திலே இல்லாததாய் உள்ள தன்மையினைப் பற்றவாதல்,
இப்பி வெள்ளியாகத் தோன்றுதல் போன்று கண்களுக்குத் தோன்றுகிற அளவேயாகிப் பின் பிரமாணங்களைக் கொண்டு
நோக்கின் இல்லை என்று கூறத் தக்கதாயுள்ள தன்மையினைப் பற்றவாதல்
துச்சத்வம்–ப்ரதீதி மாத்திரம் பாத யோக்கியமான மித்யத்வம் -பற்றி – -‘இல்லது’ என்கிறார் அல்லர்;
விநாசித்வத்தைப் பற்றி – தோன்றி மறையும் மின்னலைப் போன்று, -அழியுந்தன்மையது ஆதலின், உடலை ‘இல்லது’என்கிறார்.

உள்ளதும் –
அழிந்து போகும் பொருளினும் -வியாவ்ருத்தியை -வேறுபட்டுள்ள தன்மையினை நோக்கி உயிரை ‘உள்ளது’என்கிறார்.
யத் அஸ்தி யந் நாஸ்தி (‘உள்ளது என்று கூறப்படும் உயிரும் இல்லது என்று கூறப்படும் உடலும்’ )என்று விஷ்ணு புராணமும்,
சத்யஞ்ச ந்ருத்தஞ்ச (‘சத்தியம் என்ற சொல்லால் கூறப்படும் உயிர்களும், பொய்மை என்ற சொல்லால் கூறப்படும் உடலும்’ )
என்று தைத்திரீய உபநிடதமும் ஈண்டு-சித்துக்களையும் அசித்துக்களையும் கூறுதல் ஒப்பு நோக்கத் தக்கன.
அன்றிக்கே
இல்லது உள்ளது என்பனவற்றிற்கு, ‘ஆத்மாவுக்கு இருப்பிடமான சரீரத்தின் படியும் –
அத்தை இருப்பிடமாக யுடைய ஆத்மாவின் படியும் அல்ல -என்றுமாம் –

அல்லது அவன் உரு –
நஸ்வரமாய் -அழிந்து போகின்ற அசித்தின் படியும் அன்று;
அசித் சம்சர்க்கத்தாலே -உடலின் சேர்க்கையால்-அஹம் ஸூகீ அஹம் தூக்கீ ( ‘நான் சுகத்தையுடையவன்,இத்யாதி ’ )என்கிற
ஆத்துமாவின்படியும் அன்று அவன் ஸ்வரூபம். ‘ஆயின், எங்ஙனம் இருக்கும்?’ என்னில்,

எல்லை இல் அந்நலம் –
‘ஆனந்த மய:’ என்றும்,
‘உணர்முழுநலம்’ என்றும்,
‘ஒடியா இன்பப் பெருமையோன்’ என்றும்,
‘சுடர்ஞான இன்பம்’ என்றும்,
ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் (‘எல்லா நற்குணங்களையும் இயற்கையாகவுடையவன் இறைவன்’ )என்றும்
கூறலாம்படி இருக்கும்.

புல்கு – குணஞானமுடையவனுக்கு, -குணாதிக விஷய- குணங்களால் மேம்பட்ட இறைவனுடைய அனுபவம் –
அங்கநாபரிஷ்வங்கம் போன்று போக ரூபமாய் இருக்குமாதலின், ‘புல்கு’ என்கிறார்.

பற்று அற்றே –
அது செய்யுமிடத்தில் இருகரையன் ஆகையன்றிக்கே, புறம்புள்ள பற்றுகளை அற்றே புல்கு.
இறைவன் 6‘பற்றிலார் பற்ற நின்ற’வனாதலின், பற்று அற்றே புல்க வேண்டும்.

————————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை —

விடப்படும் விஷயங்கள் -சித் அசித் வஸ்துக்கள் -நரக அவஹத்வம் –
த்யாஜ்யமான சம்சாரத்தில் விரக்தியும் உபாதேயமான பகவத் விஷயத்தில் திருஷ்ணையும் பிறக்கும்படி
த்ருதீய அத்தியாயத்தில் முதல் இரண்டு பாதத்தால் சம்சாரத்தின் தோஷத்தையும் பகவத் விஷயத்தினுடைய
ஹேயபிரத்ய நீகத்வ கல்யாணைகதாநத்வ ரூபமான வை லக்ஷண்யத்தையும் சொன்னவோ பாதி
இவரும் மூன்று பாட்டாலே சம்சாரத்தின் தோஷத்தை அருளிச் செய்து
இப் பாட்டில் பகவத் விஷய வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார் -என்று அருளிச் செய்வர்
இல்லத்துக்கு -ச ச விஷாணம் என்று சொல்லுகிற ஸூந்யவாதியையும் –
ஸூக்தி கார ஜாதம் என்கிற மாயா வாதியையும் போலே போலவும் இல்லை என்கிறது அல்ல என்கிறார் –
இல்லது இல் என்று க்ருஹம் -இல்லதும் இல் அதும் -அந்த இல் என்றபடி
உள்ளது–உள்ளானது ஆத்மா
இவை இரண்டையும் பற்ற பகவத் ஸ்வரூபம் வியாவ்ருத்தமாய் இருக்கும் –
எல்லையில் அந்நலம் ஸ்வரூப தர்ம ஆனந்தங்கள் -முழு உணர்வும் முழு நலமும் -நசியாத ஆனந்தம் மிக்கு இருப்பவன் –
கல்யாண குண உஜ்வலமான ஞான ஆனந்த லக்ஷண ஸ்வரூபம் -ஸமஸ்த கல்யாணத்வம் குண ஸ்வ பாவோ யஸ்ய –
பற்றற்றே -ஏவகாரம் -இருக்கற -விஷயாந்தரமும் பகவத் விஷயமும் -ப்ரபாகாந்தரமும் சித்தோ உபாயமும் –
பற்றிலர் -சாதனாந்தர சங்கம் இல்லாதவர் பற்றும்படி சரண்ய சரண்யனாய் நிற்பானாய்
அந்நலம் -அழகிதான் நலம் -அந்நலம் பற்றற்றே புல்கு -என்று அன்வயம்
சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக ஸ்வேதர சமஸ்து வஸ்து விலக்ஷண ஞான ஆனந்த ஸ்வரூப ஸமஸ்த கல்யாண
குணாத்மகனான பகவானுடைய ஆஸ்ரயணம் இப்பாட்டு பிரமேயம் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading