ஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-12– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்

விபக்தி -அர்த்தம் .
ஆய -என்ற சதுர்த்தி கைங்கர்யத்தில் இரப்பைக் காட்டுகிறது ..
எய்தியும் மீள்வர்கள் ( திரு வாய் மொழி 4-1-9 ) என்கிற போகம் போல் அன்றிக்கே
மீளா அடிமை பணியாய் ( திரு வாய் மொழி 9-8-4)
சிற்று இன்பம் (திரு வாய் மொழி 4-9-10 ) போல் அன்றிக்கே அந்தமில் அடிமையாய் (திரு வாய் மொழி 2-6-5 )
வந்தேறி அன்றிக்கே தொல் அடிமை ( திரு வாய் மொழி 9-2-3) என்னும்படி சகஜமாய்
உகந்து பணி செய்து (திரு வாய் மொழி 10-8-10 ) என்னும்படி ப்ரீதியாலே வரக் கடவதாய்
இருக்கிற அடிமையைக் கருத்து அறிவார்
ஏவம் அற்று அமரர் ஆட் செய்வார் (திரு வாய் மொழி 8-1-1 ) என்னும்படி சொல் பணி செய்யுமா போலே
முகப்பே கூவி பணி கொண்டு அருள (திரு வாய் மொழி 8-5-7 ) வேணும் என்கிற இரப்போடே பெற வேணும் ..

நமஸ் -சப்தார்த்தம் ..
நம -என்று அடிமைக்கு களை யான அகங்கார மமகாரங்களைக் கழிகிறது
நலம் அந்தம் இல்லாதோர் நாட்டிலே ( திரு வாய் மொழி 2-8-4 )
அந்தமில் பேர் இன்பத்திலே (திரு வாய் மொழி 10-9-11 ) இன்புற்று இருந்து
தேவ விமலர் ( திரு வாய் மொழி 2-9-8) விழுங்குகிற
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுதமான (திரு வாய் மொழி 2-5-4 ) விஷயத்துக்கு
தான் நிலை ஆளாக உகக்கப் பண்ணுகிற அடிமை தனக்கு போக ரூபமாக இருக்குமாகில் ,
கண்ணி எனது உயிர் ( திரு வாய் மொழி 4-3-5) என்னும் படியே போகத்துக்கு பூ மாலையோ பாதி இருக்கிற
ஸ்வரூபத்துக்கு கொத்தை ஆகையாலே
நான் எனக்கு இனிதாகச் செய்கிறேன் என்கிற நினைவு கிடக்குமாகில் ,
ஆட்கொள்வான் ஒத்து ( திரு வாய் மொழி 9-6-7 )
உயிர் உண்கிறவனுடைய ஊணிலே புழுவும் மயிரும் பட்டால் போலே போக விரோதி என்று இவற்றைக் கழிக்கிறது ..
ஆவி அல்லல் மாய்த்து (திரு வாய் மொழி 4-3-3 ) என்றும் –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் (திரு வாய் மொழி 10-3-9 ) என்று
அத் தலை உகப்பே பேறானால், தனக்கு என்று இருக்குமது கழிக்க வேணும் இறே .

ஞான தசையிலே சமர்ப்பணம் போலே போக தசையிலே சேஷத்வமும் ஸ்வரூபத்துக்கு சேராது ..
திரு அருள் செய்பவன் போலே ( )
ஆட் கொள்வான் ஒத்து ( )
நீர்மையால் வஞ்சித்து (திரு வாய் மொழி 9-6-3 )
புகுந்து முறை கெட பரிமாறப் புக்கால் தன்னை உணருகை படிக்கையில் முறை கேடு இறே ..
கைங்கர்ய தசையில் தன் ஸ்வரூபத்திலும் அவன் ஸுந்தர்யத்திலும் கண்ணும் நெஞ்சும் போகாமல் அடக்க வேண்டுமதில் அருமை இறே
மற்றை நம் காமங்கள் மாற்று ( திருப் பாவை -29) என்று அவனை அபேக்ஷிக்கிறதும்
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் ( திரு வாய் மொழி 10-8-7 ) என்று களிக்கிறதும் ..

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading