ஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-11– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்

உத்தர வாக்யார்த்தம் ..
திரு மாலைக் கை தொழுவார் (முதல் திருவந்தாதி -52 ) என்றும்
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும்   திரு மாலை (திரு வாய் மொழி 1-5-7 ) என்கிறபடியே
புருஷகாரம் முன்னாகப் பற்றி -பிரயோஜனங்களைக் கொண்டு அகலாதே -அவற்றை ஒழிந்து –
ஒண் டொடியாள் திரு மகளும் ( திரு வாய் மொழி 4-9-10 ) 
அவனுமான சேர்த்தியிலே அடிமையே பேறு என்று கீழ்ச் சொன்ன உபாய பலத்தைக்   காட்டுகிறது பிற்கூற்று ..

உத்தர வாக்ய பிரதம பதார்த்தம் –
ஸ்ரீ மதே -பெரிய பிராட்டி யாரோடே -கூடி இருக்கிற அவனுக்கு –
நீ திரு மாலே (முதல் திருவந்தாதி -8 )  என்னும் படி மாம் /அஹம் என்கிற இடத்திலே ஸ்ரீ சம்பந்தத்தை வெளி இடுகிறது ..
முன்னில் ஸ்ரீ மஸ் -சப்தம்   சேர்க்கைக்கு உறுப்பான சேர்த்தியைச் சொல்லிற்று
கட்டிலும் தொட்டிலும் விடாத தாயைப் போலே அ -கார தத் விவரணங்களில்   உண்டான
ஸ்ரீ லக்ஷ்மி சம்பந்தத்தை விசதம் ஆக்குகிற இந்த ஸ்ரீ மஸ் -சப்தம்
அடிமையை வளர்க்கைக்கு   கூடி இருக்கும் படியைக் காட்டுகிறது ..

திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை விடாதே திரு இல்லா தேவரில் ( நான் முகன் திரு வந்தாதி -53 )
திரு நின்ற பக்கத்துக்கு (நான் முகன் திரு வந்தாதி -62 ) பெருமையை உண்டாக்கி
ஸ்வாமினியாய் தன் ஆகத் திரு மேனியாய் (நாய்ச்சியார் திரு மொழி 8-4 ) என்னும் படி திரு   மார்பைப் பற்றி சத்தை பெற்று –
திரு மார்பில் மன்னத் தான் வைத்து உகந்தான்   மலர் அடியே அடை   (பெரிய திரு மொழி 6-9-6 ) என்று  
திரு மார்பைப் பார்த்து காலைக் கட்டலாம் படி புருஷகாரமாய்
திரு மா மகளிரும் தாம் மலிந்து இருந்து ( திரு வாய் மொழி 6-5-8)  என்னும் படி படுக்கையிலே ஓக்க இருந்து
பிரியா அடிமையைக் கொண்டு (திரு வாய் மொழி 5-8-7 )
பிராப்யையாய் மூன்று ஆகாரத்தோடு கூடின ஞான தசையிலே தன்னைப் போலே அநந்யார்ஹை ஆக்கி ,
வரண தசையில் தன்னைப் போலே அநந்ய சாதனர் ஆக்கி
பிராப்ப்ய அவஸ்தையில் தன்னைப் போலே அநந்ய போக்யர் ஆக்குகையாலே
சார்வு நமக்கு ( மூன்றாம் திரு வந்தாதி -100) என்னும் படி ஆயிற்று   இவள் இருப்பது ..

சயமே அடிமை நிலை நின்றார் ( திரு வாய் மொழி 8-10-2)
திரு மாற்கு அரவு ( முதல் திருவந்தாதி -53)
மலிந்து திரு இருந்த மார்வன் (மூன்றாம் திருவந்தாதி -57 ) என்னும்படி
செய்கிற அடிமை அல்லாதார்க்கும் ஸித்தித்து – வர்த்தித்து – ரசிப்பது
கோல திரு மா மகளோடு ( திரு வாய் மொழி 6-9-3) என்கிற சேர்த்தியிலே   ஆசைப் பட்டால் இறே  
காதல் செய்து ( பெரிய திரு மொழி 2-2-2)
பொன் நிறம் கொண்டு எழ நிற்க (பெரிய திரு மடல் -145  ) தனித் தனியே விரும்புகையாலே இறே
தங்கையும் தமையனும் கொண்டு போந்து கெட்டான் (பெரிய திரு மொழி 10-2-3  ) 
கதறி அவள் ஓடி (பெரிய திரு மொழி 3-9-4  )  என்னும் படி தலை சிதறி முகமும் கெட்டது ..
அவன் தம்பியே சொன்னான் (பெரிய திரு மொழி 10-2-4  ) என்னும்படி
சேர்த்தியிலே நினைவாய் இறே   செல்வ விபீடணனன் (பெரிய திருமொழி 6-8-5  ) 
நீடரசு பெற்று ( பெரியாழ்வார் திருமொழி 3–9-10 )
அல்லல் தீர்ந்தேன் (பெரிய திரு மொழி 4-3-6  )  என்னும்படி வாழ்ந்தது ..

நாராயண சப்தார்த்தம் ..
நாராயண -பதம் அடிமை கொள்ளுகிறவன் உடைய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது ..
எழில் தரும் மாதரும்   (திரு வாய் மொழி 7-10-1  ) தானுமான சேர்த்தியிலே இன்பத்தை விளைகிறாப் போலே
வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த ( திரு வாய் மொழி 4-5-3 ) என்கிற படியே
ஸ்வரூப குண விக்ரஹ விபூதிகளோடே   கூடி ஆனந்தத்தை விளைத்து
அடிமையிலே மூட்டுமவன் உடைய பூர்த்தியைக் காட்டுகிறது ..
பிணங்கி அமரர் (திரு வாய் மொழி 1-6-4 ) பேதங்கள் சொல்லும் (திரு வாய் மொழி 4-2-4 ) குணங்கள் எல்லாம்
அனுபாவயங்களே ஆகிலும்
வகுத்த விஷயத்தில் இனிமைக்குத் தோற்று ஏவிற்றுச் செய்ய வேண்டுகை (பெரியாழ்வார் திரு மொழி 4-2-6 ) யாலே
எழில் கொள் சோதி ( திரு வாய் மொழி 3-3-1)
மலர் புரையும் (திரு நெடும் தாண்டகம் -5 )  என்கிற ஸ்வாமித்வ போக்யதைகளிலே இதுக்கு நோக்கு ..

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading