திருவாய் மொழி சாரத் தொகுப்பு –1-1–

பன்னீராயிரப்படி –
இதில் பரத்வ பிரகாசகமான முதல் திருவாய்மொழியில் தத் உபபாதகமான விலக்ஷண குண விபூதி விக்ரஹ யோகத்தையும்
ஆஸ்ரயமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் அபரிச்சின்னமான லீலா விபூதி சம்பந்தத்தையும்
அநந்தரம் மூன்று பாட்டாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூப
ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகள் ஸ்வ அதீனங்கள் என்னும் இடத்தையும்
அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களின் உடைய ஸ்வரூபம் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனம் என்னும் இடத்தையும்
மேலே ரக்ஷண ரூபையான ஸ்திதி வையதி கரண்யத்தாலே தத் அதீனை என்னும் இடத்தையும்
சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனங்கள் என்னும் இடத்தையும்
தத் உபபாதகமான சரீராத்ம பாவ சம்பந்தத்தையும்
அநந்ய ஈஸ்வரத்தையும் அவைதிகரால் அப்ரகம்ப்யத்வத்தையும் அகில வியாபகத்வத்தையும் சொல்லி
அசேஷ சேஷித்வ ரூபமான பரத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகிறார் –

ஈடு
முதல் பாட்டிலே –கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –விக்ரஹ வை லஷண்யத்தையும் சொல்லி
இரண்டாம் பாட்டில் -இவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சேதன அசேதன விலஷணம் என்று சொல்லி
மூன்றாம் பாட்டிலே -நித்ய விபூதியோபாதி -ததீயத்வாகாரத்தாலே அவனுக்கு அந்தரங்கமாகத் தோற்றுகிற லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
நாலாம் பாட்டில் -அந்த லீலா விபூதியினுடைய ஸ்வரூபம் அவன் அதீனம் -என்றார்
அஞ்சாம் பாட்டிலே -அதினுடைய ஸ்திதியும் அவன் அதீனம் என்றார்
ஆறாம் பாட்டிலே -அதினுடைய பிரவ்ருத்தி நிவ்ருத்தி யும் பகவத் அதீனம் என்றார் –
ஏழாம் பாட்டிலே -சரீர சரீரிகளுக்கு உண்டான லஷணம் ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டாகையாலே
இதுக்கும் அவனுக்கும் சொன்ன -ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்றார்
எட்டாம் பாட்டிலே குத்ருஷ்டிகளை நிரசித்தார்
ஒன்பதாம் பாட்டிலே ஸூ ந்யவாதியை நிரசித்தார்
பத்தாம் பாட்டில் வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்தார்
இப்படிகளாலே அவனுடைய பரத்வத்தை நிஷ்கரிஷித்தாராய் நின்றார் கீழ்

நிகமத்திலே –ச்ரோத்ரு புத்தி சமானத்துக்காக –
இத் திரு வாய் மொழி யில் அன்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

—————————————

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்
சடஜித் பபூவ -ஜெயித்தவர் இப்படி ஆனார்
ஆதி மே சதகே -ஆயிரத்தில் முதல் பத்தில் -சம்யக்-சமேதம் ஈசம் -கூடி -விசிஷ்ட குண ஆகிருதி விபூதி சமேதன் -ஆகிருதி செல்வம்
ஈசம் -பரத்வம் -ஈசிதவ்ய மற்றவர்கள்
ந தஸ்ய அப்யதிம –
பரம் அனுக்ரஹத -தத் ஆயத-தாஸ் தாஸ்யம் யோஜித மனஸ்

————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

சமாக்யா பந்தத்தி -1000 ஸ்லோகங்களும் ஆழ்வாருக்காக
நம் ஆழ்வார் ஸ்ரீ பாதுகை ஒரே கைங்கர்யம் –
32 பந்திகள் -32 அதிகாரங்கள்
ஆத்மா சித்தம் -தம் மனசுக்கு உபதேசித்து –
நிஸ் சீமோ குணத்வாத்-எல்லை யற்ற கல்யாண குணங்கள்
அமித ரசதய -முழு நலம் முழு உணர்வு
அனந்த லீலாச்பதத்வாத் -இலனது –நிலம் விசும்பு -லீலா விபூதி
–ஸ்வ ஆயத்த அசேஷ சத்தா ஸ்திதி எத்தன -நாம் -அவர் நின்றனர்
பிதா வைபாவதாத் வைஸ்வ ரூபாத்யாத் – திட விசும்பு -சரீர சரீர பாவ
த்ரயத்ஷா பிரம்மா ஆத்மபாவாத் -முக்கண் -அரன் என உளன்
சத் அசத் அவகதே-உளன் எனில் உளன் -இரு தகமை யுடன் உளன் –
சர்வ தத்வேஷூ பூர்த்தே -சர்வ வியாபகன் ஸ்வரூப
பஸ்யன் யோகி பரம் -சாஷாத் கரித்து-பிணம் கிடக்க மணம் கொள்வார் இல்லை -யோகம் வேண்டாம் உய்யக் கொண்டார்
சொல் பணி-சொற்கள் ஆழ்வாருக்கு கிஞ்சித் கரிக்க போட்டி போட்டுக் கொண்டு வருமே -திருவுடைய சொற்கள்
வாசிகமாக அங்கு அடிமை செய்தான்
தத் பத கமலநதா ஆத்மா சித்தம் -திருவடியில் கொக்குவாயும் படு கண்ணியமாக திரு உள்ளம் சேர்ந்தவர்

——————————-

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—–1

————————————————————————–

அவதாரிகை –
இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள
எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி
அவன் பிரசாதத்தாலே
சாஷாத் கரித்து
அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி
ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று
தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து
உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-

மாறன் சொல் -வேராகவே விளையும் வீடு–
அதாவது
1–இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான வாழ்வார் திவ்ய ஸூக்தியடியாக பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
–ஸூக்தி மூலமாக இ றே முக்தி பலிக்கும் இ றே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி
அன்றிக்கே
2–ஆழ்வார் திரு நாமம் அடியாகவே -மாறன் சொல்-மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தத் உக்தியாலே யாதல்
தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இ றே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இ றே –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading