திருவாய் மொழி –அவதாரிகை தொகுப்புக்கள் –1-1–11–

கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

ஆறாயிரப்படி
இத்திருவாய் மொழி என்கிற இப்பொருளை -ஒவ்சித்யத்தாலே அவன் திருவடிகளை பிரதிபாதிக்கிறது -என்கிறார் –

ஒன்பதினாயிரப்படி–
நிகமத்தில்
சமஸ்த கல்யாண குணகரனாய்-நிரவதிக க்ருபாம்போதியாய் -தனக்கு சத்ருசமான திவ்ய தேஹத்தை யுடையனாய் –
ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணை கதா நத்வங்களாலே சேதன அசேதனங்களில் காட்டில் அத்யந்த விலஷண ஜ்ஞானானந்த ஸ்வரூபனுமாய்
ஸ்வ அதீனமான அசேஷ சித் அசித் ஸ்வரூப ஸ்திதி சேஷ்டைகளை யுடையனாய் சமஸ்த ஜகத்தையும் சரீரதயா சேஷமாக யுடையனாய்
அப்ரதிபஷமாம் படி வேத பிரதிபாத்யனாய் வேதங்களில் பரராகச் சொல்லுகிற ருத்ராதிகளுக்கும் பரனாய்
பிரமாணமும் இல்லை பிரமேயமும் இல்லை என்கிற சூன்ய வாதிகளால் அவிசால்யமான தன்மையை யுடையனாய் பரமாணுக்கள் தோறும் புக்கு
அணு தரனாய் வியாபிக்க வல்லனாய் ஸ்ரீ யபதியாய் நாராயணான சர்வேஸ்வரனை தத் பிரசாத லப்தையான ஜ்ஞான த்ருஷ்டியாலே சாஷாத் கரித்து
தத் அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே தனக்குத் தானே பிறந்து இவனுடைய ஏவம் வித பரத்வ பிரதிபதகமாய்
சப்தச் சேர்த்தியையும் அர்த்த பௌஷ்கல்யத்தையும் யுடைத்தாய் இருந்துள்ள இப்பத்தும் எம்பெருமான் திருவடிகளிலே பரிசர்யா ரூபமாக பிறந்தன என்கிறார் –

பன்னீராயிரப்படி-
அநந்தரம் கீழ் உப பாதித்த பரத்வத்தை நிகமியா நின்று கொண்டு இத்திருவாய் மொழிக்கு பலம் மோஷமாக அருளிச் செய்கிறார்-

இருபத்து நாலாயிரப்படி-

நிகமத்தில் இப்படி உபய விபூதி நாதத்வமான பரத்வத்தை பிரதிபாதித்த இப்பத்தும் எம்பெருமான் திருவடிகளிலே
பரிசர்யா ரூபமாக பிறந்தன என்கிறது –

ஈடு
நிகமத்திலே –ச்ரோத்ரு புத்தி சமானத்துக்காக –
இத் திரு வாய் மொழி யில் அன்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading