ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-1-7-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-

அவதாரிகை –
கீழில் திரு மொழியில் -சப்பாணி கொட்டகை யாகிற அவனுடைய பாலா சேஷ்டிதத்தை தத் காலத்திலே யசோதைப் பிராட்டி
அனுபவித்தால் போலே பிற்பாடராய் இருக்கும் தாமும் அதில் ஆதார அதிசயத்தாலே அவளுடைய பாவ யுக்தராய்க் கொண்டு பேசி அனுபவித்தார் நின்றார்
அவன் தளர் நடை யாகிற சேஷ்டிதத்தை தத் காலம் போலே அனுபவித்து இனியராகிறார் இதில் –
திருவடிகள் ஊன்றி நடக்கும் பருவம் அன்றிக்கே நடை கற்கும் பருவம் ஆகையால் தவறித் தவறி நடக்கும் நடை தானே தளர் நடையாவது —

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல்
உடன் கூடி கிண்கிணி யாரவாரிப்ப வுடை மணி பறை கறங்கத்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –1-7-1-

பதவுரை

சங்கிலி கை தொடர்–இரும்புச் சங்கிலியின் தொடர்பு
சலார் பிலார் என்ன–’சலார்பிலார்’ என்று சப்திக்கவும்
தூங்கு–தொங்குகின்றனவும்
பொன்–பொன் கயிற்றிற்கட்டி யிருப்பனவுமான-
மணி–மணிகள்
ஒலிப்ப–ஒலிக்கவும்
படு–உண்டான
மும்மதம் புனல்–மூன்று வகையான மதநீர்
சோர–பெருகவும்
நின்று–இருந்து கொண்டு
வாரணம்–யானை
பைய–மெல்ல
ஊர்வது போல்–நடந்து போவது போல
கிண் கிணி–காற் சதங்கைகள்
உடன் கூடி–தம்மிலே தாம் கூட்டி
ஆரவாரிப்ப–சப்திக்கவும்
உடை–திரு வரையில் கட்டிய
மணி–சிறு மணிகள்
பறை கறங்க–பறை போல் சப்திக்கவும்
சார்ங்கம்–சார்ங்கமென்னும் வில்லை
பாணி–கையிலேந்திய பிள்ளையாகிய இவன்
தட தாள் இணை கொண்டு–(தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால்
தளர் நடை–இளநடையை
நடவானோ–நடக்கமாட்டானோ?
[நடக்கவேணும். ]

சார்ங்க பாணி -சார்ங்கத்தை கையில் யுடையவன்
தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்ன– சங்கிலித் தொடரானது -சலார் பிலார் என்று சப்திக்கவும்
தூங்கு பொன்மணி ஒலிப்பப்-பொன் கயிற்றில் தொங்குகின்ற மணியானது த்வனிக்கவும்
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல்-உண்டாக்கப்பட்ட -இரண்டு கன்னமும் சிச்னமும் ஆகிற மூன்று இடங்களில் நின்றும்
மத நீரானது பெருகும்படி யானையானது மெள்ள நின்று நடக்குமா போலே
உடன் கூடி கிண்கிணி யாரவாரிப்ப திருவடிச் சதங்கைகள் ஒன்றோடு ஓன்று சப்திக்கவும்
வுடை மணி பறை கறங்கத்–திருவரையில் சாத்தின மணியானது பறை -படகம் போலே ஒலிக்கும் படியாகவும்
தடம் தாளிணை கொண்டு -பருத்த ஒன்றுக்கு ஓன்று ஒத்த திருவடிகளாலே
தளர் நடை நடவானோ –

துடர் இத்யாதி –
மதாதி அதிசயத்தாலே கம்பத்தை முறித்து துவளா இழுத்துக் கொண்டு நடக்கையாலே காலில் கிடக்கிற சங்கிலிகைத்
தொடரானது சலார் பிலார் என்று சப்திக்க -துடர் என்று விலங்கு -ஆனை விலங்கு சங்கிலிகை யாய் இ றே இருப்பது
சலார் பிலார் -சப்த அநு காரம்

தூங்கு இத்யாதி –
முதுகில் கட்டின பொன் கயிற்றில் தொங்குகிற மணியானது தவனிக்க
பொன் மணி என்கிற இடத்தில் பொன் என்கிற இத்தால் பொன் கயிற்றைச் சொல்லுகிறது
படு இத்யாதி
உண்டாக்கப்பட்ட மூன்று வகையான மத ஜலம் அருவி குதித்தால் போலே வடிய
மும்மதப் புனலாவது -மதத்தால் கபோல த்வயமும்-க மேட்ர ஸ்தானம் ஆகிற மூன்று இடங்கள் இருந்து வடிந்த ஜலம்
வாரணம் -இத்யாதி
ஆனையானது அந்த மத பாரவசயத்தாலே அலசமாய்க் கொண்டு மெள்ள நடக்குமா போலே
உடன் இத்யாதி –
சேவடிக் கிண்கிணி என்கிறபடியே திருவடிகளில் சாத்தின சதங்கை வடமானது நழுவி விழுந்து திருவடிகளோடே சேர்ந்து
இழுப்புண்டு வருகையால் அதிலுண்டான சதங்கைகள் தன்னிலே கூடி சப்திக்க என்னவுமாம்
உடை இத்யாதி
திருவரையில் கட்டின மணியானது பறை போலே சப்திக்க
தடம் தாள் இத்யாதி
பருவத்துக்கு ஈடாய் பரஸ்பர சத்ர்சமாய் இருக்கிற திருவடிகளைக் கொண்டு
சார்ங்க பாணி -ஸ்ரீ சார்ங்கத்தை திருக் கையிலே யுடையவன் -இது ஈஸ்வர சிஹனங்களுக்கு எல்லாம் உப லக்ஷணம்
திரு அவதரிக்கிற போதே ஈஸ்வர சிஹனங்கள் தோன்றும்படி யாக இ றே வந்து திரு அவதரித்தது
தளர் நடை நடவானோ
திருவடிகள் ஊன்றி நடக்கும் பருவம் அன்றிக்கே நடை கற்கும் பருவம் ஆகையால் தள்ளம் பாறி -தவறி -நடக்கும் நடை

——————————————-

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளைப் போலே
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடமுடைத் தாமைத் தாலி பூண்ட வனந்த சயனன்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ -1-7-2-

பதவுரை

செக்கரிடை–செவ் வானத்திலே
நுனி கொம்பில்-கொம்பின் நுனியிலே
தோன்றும்–காணப்படுகிற
சிறுபிறை முளை போல–சிறிய பிறைச் சந்திரனாகிய முளையைப்போல,
நக்க–சிரித்த
செம் அவர் வாய்–மிகவுஞ் சிவந்த வாயாகிய
தி்ண்ணை மீது–மேட்டிடத்தில்
நளிர் வெண் பல் முளை–குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள்
இலக–விளங்க
அஃகுவடம்–சங்கு மணி வடத்தை
உடுத்து–(திரு வரையில்) தரித்த
ஆமைத் தாலி–ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை
பூண்ட–கழுத்திலணி்ந்து கொண்டவனும்
அனந்த சயனன்–திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும்
தக்க மா மணிவண்ணன்–தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
வாசுதேவன்–வஸுதேவ புத்திரனுமான இவன்
தளர் நடை நடவானோ .

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளைப் போலே-செம்மானத்திலே நுனிக் கிளையில்
தோன்றும்படி விளங்கா நின்ற இளம் திங்களுடைய முளை போலே
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக-சிரிக்கும் அளவில் மிகவும் சிவந்து இருந்துள்ள அதரமாகிற
உன்னத ஸ்தானத்தின் மேலே குளிர்ந்ததாய் வெளுத்து இரா நின்றுள்ள திரு முத்துக்களுடைய அங்குரங்கள் விளங்கும்படி
அக்கு வடமுடைத் தாமைத் தாலி பூண்ட வனந்த சயனன்–சங்கு மணி வடத்தை திருவரையிலே தரித்து ஸ்ரீ கூர்ம ஆகாரமான திரு ஆபரணத்தை
திருக் கழுத்தில் சாத்திக் கொண்டவனாய் திரு அனந்த ஆழ்வான் மேல் கண்வளர்ந்து அருளுமவனாய்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் -தகுதியான நீல மணி போன்ற வடிவை யுடையவனாய் ஸ்ரீ வாசு தேவர் திரு மகனான ஸ்ரீ கண்ணபிரான்
தளர்நடை நடவானோ –

செக்கர் இத்யாதி
செக்கர் வானத்திடையிலே -சாகாக்ரத்திலே தோன்றும் படி உன்நேயமான பால சந்த்ர அங்குரம் போலே
நக்க இத்யாதி
ஸ்மிதம் செய்கையாலே மிகச் சிவந்திருந்துள்ள திரு அதரமாகிற உயர்ந்த நிலத்தில் மேலே குளிர்ந்து வெளுத்து இருக்கிற
திரு முத்தின் அங்குரத்தினுடைய தேஜஸ்ஸானது பிரகாசிக்க
அக்கு வடமுடுத்து
சங்கு மணி வடத்தை திருவரையிலே சாத்தி
ஆமைத் தாலி பூண்ட
ஸ்ரீ கூர்ம ஆகாரமான தாலியாகிற ஆபரண விசேஷத்தைத் திருக் கழுத்திலே சாத்தி இருக்கிற
அனந்த சயனன்
அவதாரத்தினுடைய மூலத்தை நினைத்துச் சொல்கிறது –
ஏஷ ஸ்ரீ மான் நாராயண ஷீராப்தி –ஆகதாம் மதுராம் புரீம்
தக்க மா மணி வண்ணன்
தகுதியான நீல ரத்னம் போன்ற திரு நிறத்தை யுடையவன்
வாசுதேவன் இத்யாதி
ஸ்ரீ வாஸூ தேவர் திரு மகன்
தளர் நடை நடவானோ

————————————-

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்ப்
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்
மின்னல் பொலிந்ததோர் கார் முகில் போலக் கழுத்தினில் காறையொடும்
தன்னில் பொலிந்த விருடீகேசன் தளர்நடை நடவானோ –1-7-3-

பதவுரை

மின் கொடியும்–கொடி மின்னலும்
ஓர் வெண் திங்களும்–அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான (முழுவதும்) வெண்மையாயுள்ள ஒரு சந்த்ரனும்
சூழ்-(அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும்
பரிவேடமும் ஆய்–பரி வேஷத்தையும் போல
பின்னல்–(திருவரையில் சாத்தின) பொற் பின்னலும்
துலங்கும் அரசிலையும்–விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திருவாபரணமும்
பீதகம் சிறு ஆடையோடும்–(இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும்,
மி்ன்னில்–மின்னலினால்
பொலிந்தது–விளங்குவதாகிய
ஓர்–ஒப்பற்ற
கார் முகில் போல–காளமேகம் போல
கழுத்தினில் காறையோடும்–கழுத்திலணிந்த காறையென்னும் ஆபரணத்தோடும் (கூடிய)
தன்னில் பொலிந்த–(இவ்வாபரணங்கள் திருமேனிச்சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற
இருடீகேசன்–‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன்
தளர்நடை நடவானோ-.

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்ப்–மின்னல் கொடியும் -உகாரம் சாரியை -அத்விதீயமாய்
வெளுத்து இரா நின்ற சந்த்ர மண்டலமும் அத்தைச் சூழ்ந்த பரி வேஷமும் போலே
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்-அரையில் பூண்ட பொன் பின்னலும்-அதில் கோக்கப் பட்டு விளங்கா நின்ற
அரசிலைக் கோவையும் சிற்றாடையும் ஆகிற இவற்றோடும்
மின்னல் பொலிந்ததோர் கார் முகில் போலக் கழுத்தினில் காறையொடும்-மின்னலாலே விளங்குமதாய்-அத்விதீயமாய்
கறுத்து இரா நின்ற மேகம் போலே திருக் கழுத்தில் பூண்ட காறை என்னும் திரு ஆபரணத்தோடும் கூட ஸ்வதா ப்ரகாசனாய்
தன்னில் பொலிந்த விருடீகேசன்-கண்டவர்களுடைய இந்திரியங்களைக் கவருமவனான கண்ணன் -ஹ்ருஷீ கேசன் –
தளர்நடை நடவானோ —

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்ப்–
மின் கொடியும் அத்தோடு சேர்ந்ததோர் அகளங்க சந்த்ர மண்டலமும் -அத்தைச் சூழ்ந்த பரி வேஷமும் போலே
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்
திருவரையில் சாத்தின பொன் பின்னலும் அதிலே கோவைப் பட்டு பிரகாசிக்கிற வெள்ளி அரசிலைப் பணியும்
இவற்றுக்கு மேலே சாத்தின பொன்னின் சிற்றாடை யுமாகிற இவற்றோடும்
மின்னல் பொலிந்ததோர் கார் முகில் போலக் கழுத்தினில் காறையொடும்-
மின்னாலே விளக்கப்பட்ட தொரு காள மேகம் போலே திருக் கழுத்தில் சாத்தின காறையோடும்
தன்னில் பொலிந்த விருடீகேசன்-இவ் ஒப்பனைகள் மிகையாம் படி தன் அழகால் சமர்த்தனாய் இருப்பானாய் –
அவ் அழகால் கண்டவர்களுடைய இந்திரியங்களைத் தன் வசமாக்கிக் கொள்ளுமவன்
தளர்நடை நடவானோ —

———————————————-

கன்னற்குடம் திறந்தால் ஒத்தூறிக் கணகண சிரித்து  உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திரு மார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிகின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ –1-7-4-

பதவுரை

கன்னல் குடம்–கருப்பஞ்சாறு நிறைந்த குடம்
திறந்தால்–பொள்ளல் வி்ட்டால் (அப் பொள்ளல் வழியாகச் சாறு பொசிவதை)
ஒத்து–போன்று
ஊறி–(வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய
கண கண–கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
உவந்து–ஸந்தோஷித்து
முன் வந்து நின்று–என் முன்னே வந்து நின்று
முத்தம் தரும்–(எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மை யுள்ளவனும்
என் முகில் வண்ணன்–எனது முகில் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
திரு–பெரியபிராட்டியார்
மார்வன்–மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன்
தன்னை பெற்றேற்கு–தன்னைப் பெற்ற எனக்கு
தன்–தன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
தந்து–கொடுத்து
என்னை–(தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய) என்னை
தளிர்ப்பிக்கின்றான்–தழைக்கச் செய்கிறான்,
(இவன்)–
தன் ஏற்றும்–தன்னோடு எதிர்க்கிற
மாற்றலர்–சத்ருக்களுடைய
தலைகள் மீதே–தலைகளின் மேலே (அடியிட்டு)
தளர்நடை நடவானோ.

கன்னற்குடம் திறந்தால் ஒத்தூறிக் கணகண சிரித்து -கரும்பு ரசக்குடமானது-வாய் திறந்தால் போலே -திருப் பவளத்திலே
அமிர்தம் ஊறி வடிய காண காண என்று சிரித்து
உவந்து முன் வந்து நின்று முத்தம் தரும் -ஸந்துஷ்டனாய்க் கொண்டு முன்னே வந்து நின்று அதர பானம் தருமவனாய் –
என் முகில் வண்ணன் எனக்கு பவ்யனாய்-நீல மேகம் போன்ற -திரு நிறத்தை யுடையனாய் –
திரு மார்வன்- பெரிய பிராட்டியை திரு மார்பிலே யுடையனாய்
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிகின்றான்-தன்னை பிள்ளையாகப் பெற்ற எனக்கு தன்னுடைய
திருப் பவளத்திலே ஊறுகின்ற அமுதத்தை கொடுத்து தாயான என்னை தழைப்பியா நின்ற இவன்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே -தன்னோடு எதிர்த்த சத்ருக்களுடைய தலைகள் மேலே
தளர்நடை நடவானோ-

கன்னற்குடம் திறந்தால் ஒத்தூறிக் -கருப்பஞ்சாற்றுக் குடம் -இல்லி-திறந்தால் -பொசிந்து புறப்படுமா போலே திருப் பவளத்தில் ஜலமானது ஊறி வடிய
கணகண சிரித்து உவந்து-கண கண எனச் சிரித்து ப்ரீதனாய்க் கொண்டு -கண கண என்றது விட்டுச் சிரிக்கிற போதை சப்த அநு காரம்
முன் வந்து நின்று முத்தம் தரும் -முன்னே வந்து நின்று தன்னுடைய அதராஸ் வாதத்தைத் தாரா நிற்கும் -முத்தம் -அதரம்
என் முகில் வண்ணன் திரு மார்வன்-எனக்கு பவ்யனாய் காள மேகம் போன்ற வடிவை யுடையவனாய் அந்த பவ்யதைக்கு
ஊற்று வாயான ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்தை யுடையவன்
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிகின்றான்-தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய எனக்குத்
தன்னுடைய வாக் அம்ருதத்தைத் தந்து என்னை தழைப்பியா நின்றான்
இங்கு -வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிகின்றான்-என்று வர்த்தமானமாகச் சொல்லுகையாலே முன்பு முத்தம் தரும் -என்றது
எப்போதும் தன் விஷயத்தில் அவன் செய்து போரும் ஸ்வபாவ கதனம் பண்ணின படி
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே -தன்னோடு எதிர்ந்த சத்ருக்களானவர்களுடைய தலைகள் மேலே
தளர்நடை நடவானோ —

——————————————

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல்
பன்னி யுலகம் பரவிவோவாப் புகழ்ப் பலதேவன் என்னும்
தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை  நடவானோ –1-7-5-

பதவுரை

முன்–முன்னே
நல்–அழகிய
ஓர்–ஒப்பற்ற
வெள்ளி பெருமலை–பெரிய வெள்ளிமலை பெற்ற
குட்டன்–குட்டி
மொடுமொடு–திடுதிடென்று
விரைந்து–வேகங்கொண்டு
ஓட–ஓடிக்கொண்டிருக்க,
பின்னை–(அந்தப் பிள்ளையின்) பின்னே
(தன் செருக்காலே அப்பிள்ளையைப் பிடிப்பதற்காக)
தொடர்ந்தது-தொடர்ந்ததுமாகிய
ஓர்-ஒப்பற்ற
கரு மலை–கரு நிறமான மலை பெற்ற
குட்டன்–குட்டி
பெயர்ந்து–தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு
அடி இடுவது போல்–அடி யிட்டுப் போவது போல, –
உலகம்–லோகமெல்லாங்கூடி
பன்னி–(தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து
பரவி-ஸ்தோத்ரஞ்செய்தும்
ஓவா–முடிவு காண முடியாத
புகழ்–கீர்த்தியை யுடைய
பலதேவன் என்னும்–பலராமன் என்கிற
தன் நம்பி ஓட–தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக்கொண்டிருக்க
பின் கூட செல்வான்-(அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர்நடை நடவானோ -.

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோட-முன்னே நன்றாய் -அத்விதீயமாய் -பெரிய வெள்ளி மலை ஈன்ற
குட்டியானது திடு திடு என்று வேகமாய் ஓடச் செய்தே
பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல்-அக்குட்டியின் பின்னே தொடர்ந்த கறுத்த மலை ஈன்ற –
மலையால் உண்டாக்கப் பட்ட ஒரு குட்டியானது பெயர்ந்து அடி இடுமா போலே
பன்னி யுலகம் பரவிவோவாப் புகழ்ப் பலதேவன் என்னும்-உயர்ந்தவர்கள் -உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே -ஆராய்ந்து ஸ்துதித்து
எல்லை காண ஒண்ணாத கீர்த்தியை யுடையனாய் பலதேவன் என்னும் பெயரை யுடையனான
தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் –தன் தமையனானவன் முன்னே ஓட பின்னே அவனைக் கூடுவதற்காக விரைந்து நடக்கிறவன்
தளர் நடை  நடவானோ

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோட-
முன்னே விலக்ஷணமாய் -அத்விதீயமாய் -பெரியதாய் இருந்துள்ள வெள்ளி மலை ஈன்ற குட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல்-
அந்தக் குட்டியின் பின்னே தன் செருக்காலே அத்தைப் பிடிக்கைக்காக தொடர்ந்து அஞ்சன கிரி ஈன்றதொரு குட்டி
தன் சைஸவ அநு குணமாகக் காலுக்கு கால் பேருந்து அடி இட்டுச் செல்லுமா போலே
பன்னி யுலகம் பரவிவோவாப் புகழ்ப் பலதேவன் என்னும்தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான்–உயர்ந்தவர்கள் –
லோகம் எல்லாம் கூடி தங்கள் ஞான சக்திகள் உள்ள அளவெல்லாம் கொண்டு ஆராய்ந்து ஸ்துதித்தாலும் முடிவு காண ஒண்ணாத
புகழை யுடையவனாய் -பல தேவன் என்னும் பேரை யுடையனான தன்னுடைய தமையனானவன் செருக்கி முன்னே ஓட –
அவன் பின்னே அவனைக் கூட வேணும் என்று தன் சைஸவ அநு குணமாக த்வரித்து நடக்குமவன்
தளர் நடை  நடவானோ –

——————————————–

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இரு காலும் கொண்டு அங்கு அங்கு எழுதினால் போலே இல்ச்சினை பட நடந்து
பெருகா நின்ற வின்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து
கரு கார்க்கடல் வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ –1-7-6-

பதவுரை

கரு கார் கடல் வண்ணன்–மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
காமர் தாதை–காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,-
ஒரு காலில்-ஒரு பாதத்திலே
சங்கு–சங்கமும்
ஒரு காலில்–மற்றொரு பாதத்தில்
சக்கரம்–சக்கரமும்
உள் அடி–பாதங்களின் உட் புறத்திலே
பொறித்து-ரேகையின் வடிவத்தோடு கூடி
அமைந்த–பொருந்தி யிருக்கப் பெற்ற
இரு காலும் கொண்டு–இரண்டு திருவடிகளினாலும்
அங்கு அங்கு–அடி வைத்த அவ்வவ் விடங்களிலே
எழுதினால் போல்–சித்திரித்ததுபோல
இலச்சினை பட–அடையாளமுண்டாம்படி
நடந்து-அடி வைத்து
(தனது வடிவழகைக் கண்டு)
பெருகா நின்ற–பொங்குகிற
இன்பம் வெள்ளத்தின் மேல்–ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே
பி்ன்னையும்–பின்னும்
பெய்து பெய்து–(ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு
தளர்நடை நடவானோ -.

கரு கார்க்கடல் வண்ணன் காமர் தாதை -கறுத்ததாய்-குளிர்ந்து இரா நின்ற -கடல் போன்ற திரு நிறத்தை யுடையவனாய்
மன்மதனுக்குப் பிதாவானவன்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த-ஒரு திருவடியில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் –
மற்றொரு திருவடியில் ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வானுமாக -உள்ளங்காலில் உள்ளடிகளில் -ரேகையைப் பொறித்து
இரு காலும் கொண்டு அங்கு அங்கு எழுதினால் போலே இல்ச்சினை பட நடந்து-சமைந்த இரண்டு திரு அடிகளாலும் –
அடியிட்ட அவ்வவ் இடங்களிலே எழுதினால் போலே -லக்ஷணம் -அடையாளம் -படும்படி -நடந்து
பெருகா நின்ற வின்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து-ப்ரவஹியா நிற்கிற
ஆனந்த ப்ரவாஹத்தின் மேலே மேல் மேலும் ஆனந்தத்தை வர்ஷித்திக் கொண்டு
தளர்நடை நடவானோ-

ஒரு திருவடிகளில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் ஒரு திருவடிகளில் திருவாழி ஆழ்வானுமாக உள்ளடிகளிலே
ரேகா ரூபேண பொறித்துச் சமைத்த இரண்டு திருவடிகளையும் கொண்டு
அடியிட்ட அவ்வவ் ஸ்தலங்களில் தூலிகை கொண்டு எழுதினால் போலே அடையாளப் படும் படி நடந்து
இந்த நடை அழகையும் வடிவு அழகையும் கண்டு மேல் மேல் எனப் பெருகா நின்ற ஆனந்த சாகரத்துக்கு மேலே
பின்னையும் உத்தரம் உத்தரம் ஆனந்தத்தை யுண்டாக்கி
இருண்டு குளிர்ந்து இருக்கிற கடல் போன்ற திரு நிறத்தை யுடையவன்
கருமை -இருட்சி -கார் -குளிர்த்தி
அன்றியே
கருமை -பெருமையாய் -கார் -இருட்சியாகவுமாம்
அன்றிக்கே
கார் என்று மேகமாய் காள மேகம் போலேயும்-கடல் போலேயும் இருக்கிற திரு நிறத்தை யுடையவன் என்னவுமாம் –
காமர் தாதை -அழகால் நாட்டை வெருட்டித் திரிகிற காமனுக்கு உத்பாதகன் ஆனவன் -காமனைப் பயந்த காளை இறே –
காமனைப் பயந்த பின்பு-பிரசவாந்தஞ்ச யவ்வனம் -என்னும் படி அன்றிக்கே – கீழ் நோக்கிப் பிராயம் புகுமாய்த்து –
காமர் தாதை இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து -தளர் நடை நடவானோ -என்று அன்வயம் –

—————————————

படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறு துளி போல்
இடம் கொண்ட செவ்வாயூறி யூறி யிற்றிற்று வீழ நின்று
கடும் சேக்கழுத்தின் மணிக்குரல் போலுடை மணி கண கண எனத்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –1-7-7-

பதவுரை

படர்–படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள
பங்கயம் மலர்–தாமரைப்பூ
வாய் நெகிழ–(மொட்டாயிராமல்) வாய் திறந்து மலர
(அதில் நின்றும் பெருகுகி்ன்ற)
பனிபடு–குளிர்ச்சி பொருந்திய
சிறு துளி போல–(தேனினுடைய) சிறுத்த துளியைப்போலே
இடம் கொண்ட–பெருமை கொண்டுள்ள
செவ்வாய்–தனது சிவந்த வாயினின்றும்
ஊறிஊறி–(ஜலமானது) இடைவிடாமற் சுரந்து
இற்று இற்று வீழநின்று–(நடுவே) முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று -,
கடும் சே–கொடிய ரிஷபத்தின்
கழுத்தில்–கழுத்திலே கட்டப்பட்டுள்ள
மணி–மணியினுடைய
குரல் போல்–ஒலிபோலே
உடை மணி–(தனது) திருவரையிற் கட்டிய மணி
கண கண என–கண கண வென்றொலிக்க-

படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறு துளி போல்-படரா நின்ற தாமரை மலரானது விகஸித்த அளவிலே
குளிர்ந்த மதுவானது சிறுக்கத் துளித்து விழுமாப் போலே
இடம் கொண்ட செவ்வாயூறி யூறி யிற்றிற்று வீழ நின்று-விசாலமாய் சிவந்து இரா நின்ற திருப் பவளத்தில் அமிருதமானது
நிரந்தரமாக ஊறி முறிந்து விழும்படி நின்று
கடும் சேக்கழுத்தின் மணிக்குரல் போலுடை மணி கண கண எனத்-குரூரமான ரிஷபத்தின் கழுத்தில் கட்டின மணியினுடைய
ஒலியைப் போலே அரையில் சாத்தின மணியானது கண கண வென்று சப்திக்கும் படி
தடம் தாளிணை கொண்டு -ச விகாசமாய் பரஸ்பர சதர்சமான திருவடிகளைக் கொண்டு
சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –

பெருத்து இருந்துள்ள தாமரைப் பூவானது முகுளிதமாய் இருக்கை அன்றிக்கே -வாய் நெகிழ்ந்த அளவிலே
குளிர்த்தியை யுடைத்தானா அகவாயில் மதுவானது சிறுகத் துளைத்து விழுமாப் போலே
இடமுடைத்தாய் சிவந்து இருந்துள்ள திருப் பவளத்தில் ஜலமானது நிரந்தரமாக ஊறி முறிந்து விழும்படி நின்று
கடிதான சேவின் கழுத்தில் கட்டின மணியினுடைய த்வனி போலே திருவரையில் கட்டின மணியானது கண கண வென்று சப்திக்கும் படி
ச விகாசமாய் பரஸ்பர சதர்சமான திருவடிகளைக் கொண்டு சார்ங்க பாணியானவன் தளர் நடை நடவானோ –

————————————-

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே யருவிகள் பகிர்ந்து அனைய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ அணி யல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்தறியா மணிக் குழவி யுருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ –1-7-8-

பதவுரை

கரு–கருநிறமான
சிறு–சிறிய
பாறை–மலையினுடைய
பக்கம் மீது–பக்கத்திலே
(மேடுபள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற)
அருவிகள்–நீரருவிகள்
பகர்ந்து அனைய–ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற
(திருவரையிற் சாத்திய)
அக்கு வடம்–சங்கு மணி வடமானது
ஏறி இழிந்து தாழ–உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்
அணி–அழகிய
அல்குல்–நிதம்பம்
புடை–பக்கங்களிலே
பெயர–அசையவும்
உலகினில்–உலகத்திலுள்ள
மக்கள்–மனிதர்
பெய்து அறியா–பெற்றறியாத
மணி குழலி உருவி்ன்–அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும்
(தக்க இத்யாதி இரண்டாம் பாட்டிற் போலப் பொருள் காண்க. )

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே -கரு சிறு பாறை பக்கம் மீது -கறுத்த சிறிய மலையின் தாழ் வரையில் மேலே
யருவிகள் பகிர்ந்து அனைய-அருவிகளானவை ஒளி விடுமாப் போலே
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ அணி யல்குல் புடை பெயர-திருவரையில் சாத்தின வளை மணி வடமானது
தாழ்ந்தும் உயர்ந்தும் தொங்கும்படியாகவும் அழகிய நிதம்பமானது பக்கங்களில் அசையும்படியாகவும்
மக்கள் உலகினில் பெய்தறியா மணிக் குழவி யுருவின்-உலகத்திலே மனிசர்கள் பெற்று அறியாத மநோஹரமான சிறுப் பிள்ளை வடிவை யுடையவனாய்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் -தகுந்த நீல மணி போன்ற திரு நிறத்தை யுடையவனான ஸ்ரீ வஸூ தேவர் திரு மகன்
தளர் நடை நடவானோ

கறுத்த நிறத்தை யுடைத்தாய்ச் சிறுத்து இருந்துள்ள மலையினுடைய பார்ஸ்வத்திலே நிம் நோந்நதமான அருவிகள் ஒளி விடுமாப் போலே
பகர்-ஒளி
திருவரையில் சாத்தின வளை மணி வடமானது தாழ்ந்தும் உயர்ந்தும் நாலும் படியாக
அழகிய நிதம்ப பிரதேசமானது பார்ஸ்வங்களிலே அசைய
லோகத்தில் மனுஷ்யர் பெற்று அறியாத அழகிய குழவி வடிவை யுடைய
தகுதியான நீல ரத்னம் போன்ற நிறத்தை யுடையனான ஸ்ரீ வஸூ தேவர் திருமகன் தளர்நடை நடவானோ

————————–

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்
தெண் புழுதி யாடித் திரிவிக்ரமன் சிறு புகர் பட வியர்த்து
ஒண் போதலர் கமலச் சிறுகாலுறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ  –1-7-9-

பதவுரை

திரிவிக்கிரமன்–(தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன்
வெள் புழுதி–வெளுத்த புழுதியை
மேல் பெய்து கொண்டு–மேலே போகட்டுக் கொண்டு
அளைந்தது–அளைந்ததாகிய
ஓர் வேழத்தின் கரு கன்று போல்–ஒரு கரிய குட்டியானை போல,
தெள் புழுதி–தெளிவான புழுதியிலே
ஆடி–விளையாடி
சிறு புகர் பட–சிறிது காந்தி உண்டாக வேர்த்துப் போய்,
வியர்த்து–வேர்த்துப் போய்,
போது–உரிய காலத்திலே
அலர்–மலர்ந்த
ஒள்–அழகிய
கமலம்–தாமரைப் பூவை ஒத்த
சிறு கால்–சிறிய பாதங்கள்
உறைத்து–(ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்)
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
தண் போது கொண்ட–குளிர்ந்த புஷ்பங்களுடைய
தவிசின் மீது–மெத்தையின் மேலே
தளர்நடை நடவானோ-.

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்-வெள்ளைப் புழுதியை
மேலே ஏறிட்டுக் கொண்டு அளைந்த ஒரு கறுத்த யானைக் குட்டி போலே
தெண் புழுதி யாடித் திரிவிக்ரமன் சிறு புகர் பட வியர்த்து-தெள்ளிய புழுதியில் விளையாடி மூன்று அடியால்
உலகத்தை அளந்தவன் சிறிது திரு மேனி புகர்த்துத் தோன்றும்படி ஸ்வேதம் கொண்டு
ஒண் போதலர் கமலச் சிறுகாலுறைத்து ஒன்றும் நோவாமே-அழகியதாய் உரிய காலத்திலே விகஸித்த
தாமரைப் பூ போன்ற சிறிய திருவடிகள் மிதித்த இடத்திலே ஒன்றும் நோவாத படி
தண் போது கொண்ட தவிசின் மீதே -குளிர்ந்த பூக்களை யுடைய மெத்தையின் மேலே
தளர்நடை நடவானோ  —

வெளுத்த புழுதியை மேலே ஏறிட்டுக் கொண்டு அளைந்த தொரு கரிய ஆனைக் கன்று போலே
தெள்ளிய புழுதியைத் திரு மேனியில் ஏறிட்டுக் கொண்டு
ஆஸ்ரிதனான இந்திரன் அபேக்ஷிதம் செய்க்கைக்காகத் திருவடிகளின் மார்த்வம் பாராதே லோகத்தை அளந்தவன்
ஏறிட்டுக் கொண்ட புழுதி ஸ்வேத பிந்துக்களாலே நனைந்த இடங்களிலே திரு மேனி சிறுது புகர்த்துத் தோன்றும்படி வியர்த்து
அழகியதாய்த் தனக்கு அடைத்த காலத்தில் அலர்ந்த தாமரைப் பூ போலே இருக்கிற சிறியதான திருவடிகள்
மிதித்த இடத்திலே ஓன்று உறுத்து -உறைத்து-நோவாதபடியாக
குளிர்ந்த பூக்களை யுடைத்தான மெத்தை மேலே தளர் நடை நடவானோ -தவிசு -மெத்தை –

——————————–

திரை நீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத்துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயரப்
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர்ச் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ –1-7-10-

பதவுரை

செம் கண் மால்–சிவந்த கண்களையும் கரு நிறத்தையுமுடைய
கேசவன்–கேசவனென்னுந் திருநாமமுடைய இவன்,
திரை நீர்–அலைகின்ற நீரையுடைய ஸமுத்திரத்தின் நடுவில்
(அசைந்து தோன்றுகிற)
சந்திரன் மண்டலம் போல்–ப்ரதிபிம்ப சந்த்ர மண்டலத்தைப் போல
தன் –தன்னுடைய
திரு நீர்–அழகிய ஒளியை யுடைய
முகத்து–திருமுகத்திலே
துலங்கு–விளங்குகின்ற
சுட்டி–சுட்டியானது
எங்கும்–எல்லா விடத்திலும்
திழ்ந்து–ப்ரகாசித்துக் கொண்டு
புடை பெயர்–இடமாகவும் வலமாகவும் அசையவும்
பெரு நீர்–சிறந்த தீர்த்தமாகிய
திரை எழு கங்கையிலும்–அலை யெறிகிற கங்கையிற் காட்டிலும்
பெரியது-அதிகமான
ஓர்–ஒப்பற்ற
தீர்த்த பலம்–தீர்த்த பலத்தை
தரும்–கொடுக்கின்ற
நீர்–ஜலத்தை உடைத்தான
சிறு சண்ணம்–சிறிய சண்ணமானது
துள்ளம் சோர்–துளி துளியாகச் சொட்டவும்
தளர்நடை நடவானோ-.

திரை நீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண் மால் கேசவன் தன்-அலை எரிகிற கடலின் இடையில் சலித்துத் தோற்றுகிற சந்த்ர
மண்டலம் போலே சிவந்த திருக் கண்களையும் கறுத்த நிறத்தையும் யுடையனாய் பிரசஸ்த கேசனான இவன் தன்னுடைய
திரு நீர் முகத்துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயரப்–உஜ்ஜவலமாய் நீர்மையை யுடைத்தான திரு முக மண்டலத்தில்
பிரகாசியா நின்ற சுட்டியானது எங்கும் விளங்கி இடதும் வலதுமாய் அசைய
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்-புண்ய தீர்த்தங்களில் சிறந்ததாய்
வெள்ளை நீர் அலை எறியா நின்ற கங்கா நதியில் காட்டிலும்
பெரியதாய் அத்விதீயமான தீர்த்த பலத்தை
தரு நீர்ச் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் -தரத் தக்க ஜலத்தை யுடைய சிறிய சண்ண மானது -குஹ்ய அவயவம்- துளிக்கத் துளிக்க
தளர்நடை நடவானோ –

திரைக் கிளப்பத்தை யுடைத்தான சமுத்திர மத்யத்திலே சலித்துத் தோற்றுகிற சந்த்ர மண்டலம் போலே
சிவந்த திருக் கண்களையும் அதுக்குப் பரபாகமான கறுத்த நிறத்தையும் யுடையனாய் பிரசஸ்த கேசனாய் இருக்கிறவன் -மால் -கரியவன்
தன்னுடைய அழகியதாய் நீர்மையை யுடைத்தான திரு முக மண்டலத்தில் விளங்குகிற சுட்டியானது எங்கு
தீர்த்தங்களில் பிரசித்தமாய் ப்ரவாஹ ஜாலம் மாறாமல் அலை எறிகிற கங்கையில் காட்டிலும் பெரியதாய் அத்விதீயமான
தீர்த்த பலத்தைத் தரும் ஜலத்தை யுடைத்தான சிறுச் சண்ண மானது துளிக்கத் துளிக்க தளர் நடை நடவானோ –

——————————————

இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய வஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன வுரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே –1-7-11-

பதவுரை

ஆயர் குலத்தினில் வந்து–இடையர் குலத்திலே வந்து
தோன்றிய-அவதரித்த
அஞ்சனம் வண்ணன்–மை போன்ற கருநிறமுடையனான கண்ணன்
தன்னை–தன்னை (க்கண்டு)
தாயர்–தாய்மார்கள்
மகிழ–மனமுகக்கவும்
ஒன்னார்–சத்ருக்கள்
தளர–வருத்தமடையவும்
தளர்நடை நடந்தனை–தளர்நடை நடந்ததை
வேயர்–வேயர் குடியிலிருப்பவரெல்லாராலும்
புகழ்–புகழப் பெற்ற
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சீரால்–சிறப்பாக
விரித்தன–விவரித்துச் சொன்ன பாசுரங்களை
உரைக்க வல்லார்–சொல்ல வல்லவர்கள்
மாயன்–ஆச்சர்யமான குணங்கள யுடையவனும்
மணி–நீல மணி போன்ற
வண்ணன்–நிறமுடையனுமான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணியும்–வணங்க வல்ல
மக்களை–பிள்ளைகளை
பெறுவார்கள்–அடைவார்கள்.

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய வஞ்சன வண்ணன் தன்னை–இடைக் குலத்திலே வந்து
ஆவிர்பவித்தமை போன்ற வடிவை யுடைய கண்ணனை
தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை-பெற்ற தாயான யசோதையும் அவளை ஒத்த பரிவர்களும் ஹர்ஷிக்கவும்-
கம்சாதி சத்ருக்கள் மனம் ஒடுங்கிப் போகவும் தளர் நடை நடந்த பிரகாரத்தை
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன வுரைக்க வல்லார்-வேயரானவர்கள் ஸ்லாகிக்கும் படியான
பெரியாழ்வார் சீரமையோடே விஸ்தரித்து அருளிச் செய்த இவற்றை ஓத வல்லவர்கள்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே -ஆச்சர்ய சக்தி யுக்தனாய் நீல மணி போன்ற
வர்ணத்தை யுடையனான எம்பெருமானுடைய திருவடிகளில் அடிமை செய்யத் தக்க பிள்ளைகளைப் பெறுவார்கள்

கோப குலத்திலே வந்து ஆவிர்பவித்த -ராஜ குலத்தில் ஆவிர்பவித்தமை அடி அறிவார் அத்தனை இறே -இது இறே எல்லாரும் அறிந்தது
கண்டவர் கண் குளிரும்படி அஞ்சனம் போலே இருக்கிற திரு நிறத்தை யுடையவனை
பெற்ற தாயாரான யசோதையும் அவளோபாதி ஸ்நேகிகளானவர்களும் ப்ரீதராம் படியாகவும்
தொட்டில் பருவத்திலே பூதனை சகடாதிகள் நிரசனம் அறிந்த கம்சாதிகள் -சத்ருக்கள் -தலை எடுத்து நடக்க வல்லனானமை கண்டு –
என்னாகப் புகுகிறோம் -என்று பீதராய் அவசன்னராம் படியாகவும் தளர் நடை நடந்த பிரகாரத்தை
வேயர் தங்கள் குலத்தில் உதித்தவர் ஆகையால் அக்குடியில் உள்ளார் எல்லாரும் தம்முடைய வைபவத்தைச் சொல்லிப் புகழும்படியான பெரியாழ்வார்
சீர்மையோடே விஸ்தரித்துச் சொன்ன இவற்றை ஏதேனும் ஒரு படி சொல்ல வல்லவர்
ஆச்சர்யமான குணங்களை யுடையவனாய் நீல ரத்னம் போன்ற வடிவை யுடையவனுடைய திருவடிகளில்
ஸ்வ சேஷத்வ அநு ரூபமான விருத்தி விசேஷத்தை பண்ணும் சத் புத்திரர்களை பெறுவர்
மக்கள் என்று அவிசேஷமாகச் சொல்லுகையாலே -வித்யையாலும் ஜென்மத்தாலும் வரும் உபய வித புத்திரர்களையும் சொல்லுகிறது

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading