ஸ்ரீ திருப்பாவை சாரம் – கீழ்வானம் வெள்ளென்று — —

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –
எல்லாரும் வந்து அழைக்கும் படி கிருஷ்ணனாலே வேண்டற்பாடு உடையாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்—
மிக்குள்ள பிள்ளைகளும் கோதுகலமுடைய பாவையை எழுப்புகிறார்கள் –
இப் பாட்டில் பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம்–உடையாள் ஆகையாலே–
பகவத அபிமதமானவரை எழுப்புகிறார்கள் –

கோதுகலமுடையாய்–என்று
சர்வராலும் கொண்டாடும்படி இருக்கையாலே-
அஸ்மத் சர்வ குருப்யோ நம -என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறது –

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து -உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-8-

வியாக்யானம் –

கீழ் வானம் வெள்ளென்று –
கிழக்கு வெளுத்தாலும் கிடந்தது உறங்கும் இத்தனையோ —எழுந்திராய் என்கிறார்கள்
அருணோதயத்துக்கு அஞ்சி இருள் சிதறி சிதறிப் போகிறது என்னவுமாம்
மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள் -என்று இவள் தகப்பனார் எம்பெருமானை எழுப்பினார்–
இவள் இவர்களை எழுப்புகிறாள்
கிழக்கு வெளுத்தது அன்று -உங்களில் யாரேனும் அத் திக்கைப் பார்க்கையாலே–
உங்கள் முகத்தில் ஒளி பிரதிபலிக்கையாலே கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது
இவர்கள் தான் திங்கள் திரு முகத்து சேயிழையார் இறே—அது அந்யதா ஜ்ஞானம்–
மற்று அடையாளம் உண்டோ என்ன
நாங்கள் பிரமித்தோமாய் ஆயிடுக -நீ விடிந்தது இல்லை என்று அறிந்தபடி எங்கனே -என்ன–
பஞ்ச லஷம் குடியில் பெண்களில்-உங்களை ஒழிய அல்லாதார்-உணராமையால் -என்ன-
வெள்ளென்று -என்றது வெள் என்றது -என்றபடி–
அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாம் படி–சத்வோத்தரமான காலம் ஆயிற்று –எழுந்திராய் -என்ன —
அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாய்த்து–சத்வோத்தரமான கால க்ருதமல்ல –
மரங்களும் இரங்கும் வகை -என்று
உங்களுக்கு ஸ்வ அநுமான க்ருதம் —வேறு அடையாளம் உண்டோ -என்ன –

அஞ்ஞானமானது சத்த்வோதய காலத்திலே விடப்பட்டு–
தனக்கு அபாஸ்ரயம் தேடித் போகா நின்றது காண் -என்ன –
அதுவும் உங்கள் சந்நிதியாலே–சந்நிஹித சேதன அஞ்ஞானம் போம்–
உங்களைப் பிரிந்தவாறே பழைய படியே உண்டாம்
அது சத்வ குண க்ருதம் அன்று -என்ன–
ஆனால் விடியாமைக்கு அடையாளம் என் சொல்லுகிறாய் -என்ன–
உங்களை ஒழிந்த பகவத் பிரவணர் உணராமை என்ன –

எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் –
பனிப்புல் மேய–அகாலத்திலே வீட்டு -வயல்கள் எல்லாம் பரந்தன–
ஸ்ரீ நந்த கோபர்க்கு முத்திறமும் உண்டே -ஆட்டுத் திறம்–மாட்டுத் திறம்-எருமைத் திறம்
அவற்றின் பின்னே கிருஷ்ணன் போம்–பின்னை ஆரைக் காண்பது -எழுந்திராய் -என்ன —
பெரியாழ்வார் பெண் பிள்ளை அக்நி ஹோத்ர அனுஷ்டானம் அறிகை ஒழிய-
சிறுவீடு வாசி அறிகையான-இடைச்சி பாவத்தில்- மெய்ப்பாடு–
கைவல்யம் பரமபததுக்கு பறைச்சேரி போலே -சிறு வீடு

மிக்குள்ள பிள்ளைகளும் –
உன்னை ஒழிந்தார் எல்லாரும் ஆற்றாமையாலே போந்தார்கள்–நீயே எழுப்பக் கிடந்தாய் –

போவான் போகின்றாரை-
அர்ச்சிராதி கதி -அக்ரூர யாத்திரை -திருவேங்கட யாத்ரை போலே–
போகையே பிரயோஜனமாக போகா நின்றார்கள்-
நான் இனி எங்கே போக -அவர்கள் போனார்கள் ஆகில் -என்ன

போகாமல் காத்து —
செய்யாதன செய்தோம் -என்று அடியில் நம்முடைய வ்யவஸ்த்தையை உணர்த்தி–
நீ வந்ததில்லை என்று அவர்கள் போகாதபடி தடுத்து –
பகவத் சந்நிதிக்கு போகையே பிரயோஜனமாக போகுமவர்களை–பாகவதரை முன்னிட்டு அல்லது
திருவடி தொழக் கடவோம் அல்லோம்-என்கிற நியமத்தை உணர்த்தி
போகாமல் தடுத்து -ஆளவந்தாரை சேவிக்காமல் அரங்கன் சேவையும் வேண்டாம் என்று மீண்டாரே-ஸ்ரீ பாஷ்யகாரர்
போவான் போவாரை போகாமல் –
இதே போலே கூரத் தாழ்வானும் -பின்பு உடையவர் சம்பந்தமே வேண்டுவது –
அரங்க சேவை வேண்டாம் என்றாரே

உன்னைக் கூவுவான் –
உன் வாசலிலே வந்து எழுப்பினோம் என்னும் தரம் பெறுகைக்கு-
உன்னை எழுப்பினோம் என்கிற அதிசயம் பெறுகைக்காக

வந்து –
தேச பிராப்தியே பிரயோஜனம் போலே –வந்து-உன் வாசலிலே வந்து நின்றோம் –

நின்றோம் –
நிலை பெற்று நின்றோம் -எல்லார்க்கும் கிருஷ்ணனோட்டை சம்பந்தம் ஒத்து இருக்க–
நீங்கள் என் பக்கலில் சாபேஷராய் வந்தோம்–என்று சொல்லக் கடவீர்களோ -என்ன-
சடாரி பெற இன்றும் நிற்கிறோமே கோயில்களில் –

கோதுகலம் -நமக்கு அவன் பால் -நாம் பக்தர்கள் மூலம் அவனிடம் கொள்ளும் கோதுகலம் -இறுதி படிக்கட்டு
ப்ராப்யத்துக்கு பிரதம பர்வம் ஆச்சார்யர் உகந்த பகவத் கைங்கர்யம்- –
மத்யம பர்வம் பகவான் உகக்கும் பாகவத கைங்கர்யம் –
சரம பர்வம் பாகவதர்கள் உகக்கும் ஆச்சார்யர் கைங்கர்யம் கைங்கர்யம்

அஷ்ட சகஸ்ரம் கிராமம் பருத்திக் கொல்லை நாச்சியார் -எச்சான் திரு மாளிகை –
வந்த அடியவர்கள் கௌரவிக்காமல் –
ஆறு மாதம் துணி துவைத்து பாகவத அபசாரம் தீர்த்துக் கொள்ள உபதேசித்தார் –
சொட்டை குலத்தில் உள்ளார் உளரோ -ஐதிக்யம்
திருவாட்டாறு -ஆதி கேசவன் பெருமாள் அடியார் தம் அடியேற்கு அருள் தருவான் அமைகின்றான் ஆழியான்
பெரியார்க்கு ஆட் பட்டக் கால் -பெறாத பயன் பெறுமாறு –
கரிய கோலத் திரு உரு காண்பன் நான் -திரி தந்தாகிலும் -அலங்காரம் பண்ணிக் கொண்டு-
திரு உடன்- பின்னே வந்து அருளினான் –
திருக் காண்பன் -உரு காண்பன் –கரிய கோலத் திரு உரு -கண்ணன் என்னும் கரும் தெய்வம் —
பக்த பக்தேஷு -பிரகடனம் -செய்த பின்பு
என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னிடைய ஆவியே என்னும் -நேர் தொடர்பு இல்லை -தாயார் மூலம் –

கோதுகலமுடைய –
உன்னை முன்னிட்டுக் கொண்டு செல்ல கிருஷ்ண விஷயீ காரம் உண்டு என்னும்படி–
அவனாலே கொண்டாடப் படுமவள் இறே-
பத்நீத்வம் அவிஷ்டமானாலும் கிருஷ்ண வல்லபை நீ அன்றோ–
நாங்கள் அவனுக்கு நல்லோம்-நீ அவனோட்டை சம்பந்தத்தால்-
எங்களுக்கு நல்லாய் இருப்புதீ ஆகையால் அவனிலும் ததீயரை உகக்கும் என்னுமிடம்
வேண்டற்பாடு உடையை நீ -அன்றோ

போவான் போகின்றார் -போவதே -ஸ்வயம் -பிரயோஜனம்
பல அபிசந்தி ரஹித கர்மங்கள் -செய்யும் கிரிசைகள் /
அர்ச்சிராதி கதி சிந்தனம் -திருவேங்கட யாத்திரை சிந்தனம் /
அக்ரூரர் பாரிப்பே அமையும் -அத்யமே சபலம் ஜென்மம் /
அவனிலும் ததீயரை கண்டு உகக்கும் கோதுகலம் உடையவள் அன்றோ இவள் –
எம்பெருமான் -ஆச்சார்யர் -பாகவதர் -மூன்று நிலைகள் –
குரூரேவ பரம் ப்ரஹ்மம் பரம் தனம் பாராயணம் பராங்கதி-
அவனே ஆசைப்பட்டு குரு ஸ்தானம் -தேர் தட்டிலும் குரு பரம்பரையிலும் இடம் பிடித்துக் கொண்டு நிற்கிறான்
வேதக பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம் -பேதம் பண்ணும் –
பித்தலாட்டம் –பித்தளை -ஹாடாகம் –ரஸவாதி போலே தொட்டே மாற்றுவார்கள்
இத்தை அறிந்தே மாமான் மகளே என்று அடுத்ததில் சம்பந்தம் –
சாம்யம் புத்தியும் ஆதிக்ய புத்தியும் –
ஆச்சார்ய துல்யர் என்றும் -/ சம்சாரிகளை விட தன்னை விட ஈஸ்வரனை விட ஆதிக்யர்
இதுக்கு அடி ஆச்சார்யர் வசனம் -கீதாச்சார்யர் வசனம் –
யஸ்மின் மிலேச்சேதி வர்த்ததே -என்னை போலே -வியாக்யானத்தில் எனக்கு கொடுக்கும் அளவாவது என்றபடி –
ஸ்வதந்த்ரன் அன்றோ அவன் -இவர்கள் பரதந்த்ரர்கள் –
அவனுக்கு அங்குசம் கடிவாளம் போடுவார்கள் -பாகவதர்கள் -ஆச்சார்யர் -பிராட்டி கூட்டம் /
மௌனி அவன் -இவர்கள் திருவாய் சோதி திறந்து சங்கைகளை போக்கி அருளுவார்கள்/
உதாசீனம் அவன்-செய்யும் தப்பை அனுமதி செய்வான் -அனுமந்தா பிரதம ப்ரவ்ருத்திக்கு –
இவர்கள் தட்டித் திருந்துவார்கள் / அபேக்ஷையுடன் செய்து அருளுவார்கள்
ஆகவே பாகவதர்களை -ஆச்சார்யவத்- தெய்வவத் -மாத்ருவத் பித்ருவத் – ஸ்வவத் ஸூஹ்ருத்வத் —
ஸ்வாமிவத் -த்ரஷ்டவ்ய ராஜாவத் -சொத்தை ஸ்வாமிக்கு சேர்ப்பதில் கர்தவ்யம் இவர்களுக்கு -/
நமக்கு நன்மை செய்து கொள்வது போலே அவர்களுக்கும் செய்ய வேண்டுமே -ஆகவே ஸ்வவத் /
பரம பாகவதம் சொகுசு வேண்டாம் என்று த்யஜிப்பார்கள்

கீதா பாஷ்யம் -ஞானி -பகவத் சேஷதைக ரச-ஆத்ம ஸ்வரூப வித் -அத்யந்த பிரித –
பக்தேர் வைக்கும் பிரிதம் அதிகம் –
தான் வைக்கும் ப்ரீதி அதிகம் எம்பெருமானார் காட்டி அருளி –
அப்படிப் பட்ட உயர்ந்த கோதுகலம் உடைய பாவாய் –
பெரியாழ்வார் ஆண்டாள் மட்டுமே உபயோகித்த கோதுகலம் –
அவர் பகவத் விஷயத்தில் இவள் பாகவத விஷயத்தில்
கோதுகலமுடைக் குட்டன் –வித்தகனே இங்கே போதராயே –
நம் ப்ரீதி குளப்படி- குதிரை கால் அழுந்த -அவன் ப்ரீதி கடல் அளவு –
ச மகாத்மா ஸூ துர்லப -இளைய பெண்கள் கிடைத்தார்களே ஹா ஹா-குளிரில் வர வேண்டுமா ஐயோ
மகரிஷிகள் -பெருமாள்-பரகத ச்வீகாரம் -ஸ்வகத ச்வீகாரம் திரு உள்ளம் புண்படுமே-

பாவாய் —
நாரீணாம்-என்றபடி நிருபாதிக ஸ்த்ரீத்வம் உண்டாளாகை–
பாரதந்திர பராகாஷ்டை உடையவள் அன்றோ என்கை –
பகவத அபிமான விஷயீ பூதராய்–அனன்யார்ஹரான ஸ்வாமி நீ –

எழுந்திராய் –
எழுந்திருக்கும் போதை பரிஸ்பந்தம் காண்கைக்காக–
நாங்கள் உணர்த்த -உணர்ந்தாய் -என்ற ஏற்றத்தை எங்களுக்கு தாராய்-
நீ எழுந்து இருந்தால் நமக்கு ஏதேனும் குறை உண்டோ —
எழுந்தால் செய்ய வேண்டியது என் என்ன -சொல்லுகிறார்கள் மேல் – –

பாடிப் பறை கொண்டு –
இதுக்கு முன்பு நாம் பெற்ற ஐஸ்வர்யம் போலேயோ–இப்பொழுது நாம் பெற புகுகிற ஐஸ்வர்யம்-
முன்பு கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாருக்கு தெரியாதபடி நெஞ்சால் கிருஷ்ணனை அனுபவித்து-
அவ் அனுபவ ஜனித ப்ரீதியானது புறம்பு ஒசியாதபடி அடங்கிப் போந்தோம்–
இப்போது நாட்டார் தாங்களே அனுமதி பண்ணுகையாலே-வாய்க்கால் வெட்டி நெஞ்சிலே கங்கும் கரையும்–
அறப் பெருகுகிற கிருஷ்ண அனுபவ ப்ரீதிக்கு போக்கு–
அணை வெட்டிவிட்டு கிருஷ்ண குணங்களை-நாம் வாயார நினைத்தபடி பாடக் கடவோம் –
பாடுகையாகிற புருஷார்த்தத்தை லபித்து-
பறை கொள்ளுகையாவது –
நாட்டாருக்கு நோன்பு–தங்களுக்கு சேவிக்கையே பலம் —பாடுவது எத்தை என்ன –

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய –
கிருஷ்ணனுடைய வீர சரித்ரங்களைப் பாடி–
மாவாய் பிளந்தானை–
நமக்காக கேசியைப் பிளந்து-நம்மையும் தன்னையும் உண்டாக்கித் தந்தவனை —
தன்னை நாம் கிட்டு அனுபவிக்கைக்கு ஈடாக-இடையிலே வன்னியம் அறுத்த
ஆண் பிள்ளையைப் பாடக் கடவோம்-
மல்லரை மாட்டிய —
அவ் ஊரில் பெண்களுக்கு உதவினபடியே–அது தங்களுக்கு உதவிற்று என்று இருக்கும் படி–
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய –
அஹங்கார நிராசகனை–காம க்ரோத நிவர்தகனை

தேவாதி தேவனைச் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிறவனை —பெரிய மேன்மையாய் உடையவனாய் இருக்கிறவன்-
ஸ்ரீ மதுரையிலே போய் குவாலயாபீட–சானூர முஷ்டிகர்களை அழியச் செய்து–
படை வீட்டில் பெண்களோட்டை பழக்கத்தாலே-பெரிய சமர்தனானவன் –
இடக்கையும் வலக்கையும் அறியாத நம் பக்கலிலே வரக் கூடுமோ -என்ன –

சென்று –
விரஹம் தின்று குறைக் கொள்ளியான நம் சரீரத்தை அவன் கண்டு புண் படும்படி–
அவன் இருந்த விடத்தே செல்லக் கடவோம்-
அவன் வேண்டற்பாட்டிலே இருக்கிலோ என்னில்-
சென்று –
பிராப்ய த்வரையாலே சென்று-அவன் வர பிராப்தமாய் இருக்க நாம் சென்று —
இவர்கள் நம -சொல்லுகையும் அத்தலைக்கு மிகுதியாய் இறே இருப்பது –

நாம் சேவித்தால் –
அத்தலை இத்தலை ஆனால் -அவன் வரக்கடவ -நாம்

ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ –
நம்மாலே பேறு என்று நாம் வரப் பார்த்து இருக்குமவர்கள்–
நாம் இருந்த இடத்தே வந்தது இவர்கள் செல்லாமை இறே-என்று இரங்கி
நமக்கும் உகந்து அருளும் காண் —
பிரணயித்வம் போனாலும் ஆர்த்த ரஷணம் தவிருமோ-அனுஷ்டியாது ஒழியுமோ
ஆவா வென்று கிருபை பண்ணி–ஆராய்ந்து அருள் -விசாரிக்கும் –
ஆன பின்பு அவன் அருளுக்கு ஹேது பூதையான நீ எழுந்து இராய்—
ஆவா வென்று ஆராய்ந்து அருளும்–கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் என்று அந்வயம்-

கீழ் வானம் வெள்ளென்று –
மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்து –
அர்வாஞ்சோ யத்பத சரசிஜத் வந்தவம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா யச்யான் வயமுபத்தா தேசிகா முக்திமாபு -என்றும்-
பாத கோடீ யோஸ் சம்பந்தேனே சமித்யமானே விபவான் -என்றும்
திரு வடி சம்பந்தத்தால் பின்னுள்ளாரையும் திரு முடி சம்பந்தத்தால் முன்னோர்களையும் வாழ்வித்தவர் எம்பெருமானார்-
மிக்குள்ள பிள்ளைகள் –
பூஜ்யர்கள் முன்னோ -அவர்களைப் போகாமல் காத்து -அருளினார் என்றபடி-
திருக் கோஷ்டியூர் நம்பி -அபசாரம் எம்பெருமானார் -கூரத் ஆழ்வான் -ஸ்ரீ ரங்கேச ப்ரோஹிதர் –விண்ணப்பம் –
உமக்குத் தந்தோம் உம்முடைய சம்பந்தம் உடையோர்க்கும் தந்தோம் –
மதுரகவி ஆழ்வார் -போவான் போகின்றாரை போகாமல் காத்து தெற்க்கே தேஜஸ் காட்டி –
செம்பொன் மாட குருகூர் வரும்படி உன்னை கூவுவான் வந்து நின்றார்
எழுந்திராய் –
இருந்த திருக்கோலம் கிருதக்ருத்யர் நம் ஆழ்வார் எங்கும் -பத்மாசனம் –
பிரபன்ன ஜன கூடஸ்தர்-பராங்குச பரகால எதிராஜர் -மூவரும் –அத்யயன உத்சவம்
நம் ஆழ்வார் திருவடி நிலை எல்லா ஆழ்வார்களுக்கும் சாதித்து –போகாமல் காத்து –
பாடுகையாகிற பறை கொண்டு -அங்கு அப் பறை கொண்ட வாற்றை வங்க கடலில் –

தேவாதி தேவன் தேவ அதி தேவன் -மனிசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவோ –
ஆசார்யர் சமமான அதிகமான யாரும் இல்லையே –
காலன் கொண்டு மோதிரம் –அஹங்கார கர்ப்பம் -பார்க்கும் பொழுது எல்லாம் பய ஹேது –
ஆசார்யர் தாமே அபிமாநிப்பதே உத்தாரகம் –

கீழ் வானத்தில் தேவாதி தேவன் –திருவத்தியூர் அனுபவம் -ஸூசகம்- -இமையோர் தலைவன் -அமரர்கள் அதிபதி

கிருஷ்ண பக்ஷம் -தேய் பிறை பித்ருக்களுக்கு இரவு -சுக்ல பக்ஷம் -வளர் பிறை -பகல் /
தேவர்களுக்கு தஷிணாயணம் இரவு -உத்தராயணம் -பகல் /
நான்முகனுக்கு -1000-சதுர்யுகங்கள் பகல் -அதே அளவு இரவு –71-சதுர்யுகங்கள் மன்வந்தரம்
கீழ் வானம் -ஆச்சார்ய சம்பந்தமே /சிறு வீடு -கைவல்யம் -ஜீவன் முக்தி /
போவான் போகின்றாரை போகாமல் காத்து -கைவல்யத்துக்கு-தூமாதி மார்க்கங்கள் – போக விடாமல் காத்து
மிக்குள்ள பிள்ளைகள் –
அர்ச்சிராதிகதிக்கு செலுத்த –
தேவாதி தேவன் -ஞானி தனக்கு ஆத்மா என்று கொண்டவன் அன்றோ
பாடி பறை கொண்டு -குரு பரம்பரை பூர்வகமாக தனியன்களை அனுசந்தித்து -கைங்கர்யங்களில் அந்வயம் –

நம் ஆழ்வார் உணர்த்த படுகிறார்
கோதுகுலமுடைய பாவாய் கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
நம் ஆழ்வார் அவதாரம் -போதில் கமலம் மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே –கிழக்கு வெளுத்தது –
ஆதித்ய ராம திவாகர அச்யுத பானு -வகுள பூஷண பாஸ்கரர்–கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -ஒருவர் மற்று ஒருவரிடம் ஆசை –ஆசையே வடிவு எடுத்தவர் –
ஆசையே கை கால் எடுத்து -ஆசையை படம் போட்டு காட்ட
கிருஷ்ணச்ய த்ருஷ்ண யவ வ-அவன் ஆசையும் இவன் இடம்-
கோதுகலமுடைய பாவாய் —
அவன் இடம் கோதுகலமுடைய என்றும் அவனது கோதுகலத்தை யுடையவள் என்றும்
ப்ரியோ ஹி ஞானி அத்யர்த்தம் ச ச ம ம ப்ரிய –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில்
முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினன்
ஆகவே அவனது கோதுகலத்தை அதிகமாக உடைய உத்தம அதிகாரி நம் குல பத்தி என்றதாயிற்று

கொண்டல் வண்ணன் சுடர் முடியன் ஒண் சங்கு கதை வாழ் ஆழியான் –
கிருஷ்ண தாகம் -கிருஷ்ணனுக்கும் தாகம் தீர்ப்பவர் நம்மாழ்வார்
மிக்குள்ள பிள்ளை – –
மதுரகவி ஆழ்வார் போக விடாமல் காத்து உன்னை கூவினர்
உனது தேஜஸ் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்ற கோதுகலம் உடைய -பாவாய் -எழுந்திராய் –
இருந்த திருக்கோலம் -நம்மாழ்வார் எங்கும்
பாடுகையாகிய பறை –வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல்–ஏற்ற நோற்றேர்க்கு –
நோன்பு நோற்றார் -வெம்மா பிளந்தான் தன்னை ஆற்றல் மிக்கு –
இங்கும் மா வாய் பிளந்தானை -மல்லரை மாட்டிய -ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் –
தேவாதி தேவனை –ஆழ்வார் சந்நிதிக்கு திரு நஷத்ரம் அன்று சென்று கடாஷிப்பார் திருக் காஞ்சியில் –
ஆ ஆ என்று ஆராய்ந்து அருளுவான் வாரிக் கொண்டு விழுங்குவான் போலே -என்னில் முன்னம் பாரித்து –
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும் ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

வாரிக் கொண்டு என்னில் முன்னம் பாரித்து முற்றப் பருகினான் நம் ஆழ்வார்
பிரிய ஞானி அஹம் அத்யர்த்தம் பிரிய -சச மம பிரிய -கீதை
அத்யர்த்தம் -ஞானிகள் அதிகமாக வைக்க -நானும் தான் வைத்தேன் அ பிரதான ச காரம் –
அவன் எண்ணம் திரு உள்ளம் படி என்னில் பெரிய அவா –அத்யந்த பிரியம் –
தேவாதி தேவன் -ஆதி பிரான் -எல்லாம் படைத்தான் சென்று
நாம் இவர் திரு புளி ஆழ்வார் இடம் இருக்க என்னைப் பாடு-கிளையை பிடித்து தொங்கி இருப்பார்கள்

———————————————

கோதுகலமுடைய பாவாய் என்ற பதம் நம்மாழ்வாரைக் குறிப்பதாம்.
பரசார பட்டர் நம்மாழ்வர் ஒருவரே கிருஷ்ண குதூகலத்தின் ஒரே வடிவம் என்கிறார்!
மேலும் நம்மாழ்வரே திருவாய்மொழியில் பல இடங்களில் தன்னை ஒரு பாவையாக பாவித்துக் கொண்டு பாடியிருப்பதை காரணமாகச் சொல்லலாம்.

அதோடு, “எழுந்திராய்” என்பது நம்மாழ்வாருக்கு மட்டுமே பொருந்தும், ஏனெனில் அவர் எல்லா திவ்யதேசங்களிலும்
அமர்ந்த திருக்கோலத்தில் தான் எழுந்தருளியுள்ளார்! அமர்ந்திருப்பவரைத் தானே எழுந்து கொள்ளச் சொல்ல முடியும் 🙂

“கீழ்வானம் வெள்ளென்று” சூரிய உதயத்தின் போது தானே இருக்கும். அது போல, கலியுகத்தின் தொடக்கத்தில்
இந்த வாகுலபூஷண பாஸ்கரன் அவதரித்ததால், அடியார்களுக்கு ஞானத்தெளிவு பிறந்தது!

கீழ்வானம் என்பது லீலாவிபூதி, மேல்வானம் என்பது நித்யவிபூதி. நம்மாழ்வார் தனது திருவாய்மொழிப் பாசுரங்களில்
லீலாவிபூதி நித்யவிபூதியாவதாக அருளியிருப்பதை (ஓராயிரத்துள் எப்பத்து உரைக்க வல்லார்க்கு வைகுண்டமாகும் தம்மூரெல்லாம்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வார் மன்னூடே) காண முடிகிறது.

எருமை சிறுவீடு மேய்வான் – வீடு மோட்சத்தைக் குறிக்கிறது. கீழ்வீடு கைவல்யத்தைக் குறிக்கிறது.
நம்மாழ்வார் தான் இதை “குறுகமிக உணர்வத்தோடு நோக்கி” என்று முதலில் தனது பாசுரம் ஒன்றில் குறித்தார்.
எருமை என்பது தாமச (அகங்காரம்,மமகாரம்) குணங்களைக் குறிப்பதாம்.
குருகூர் பிரானின் திருஅவதாரத்திற்கு முன் இக்குணங்கள் மாந்தர் பலரிடம் மிகுந்து காணப்பட்டதால்,
அவர்கள் கைவல்ய நிலையையே அடைய முடிந்தது!

“மிக்குள்ள பிள்ளைகளை” எல்லாம் தடுத்து நிறுத்தி இந்த கோபிகையை துயிலெழுப்பிக் கூட்டிச் செல்வதாகப் பாடுவதன் வாயிலாக,
ஆண்டாள் அக்கோபிகையின் சிறந்த பாகவதத் தன்மையை உணர்த்துகிறாள்.
ஆழ்வார்களில் தலையான நம்மாழ்வாரைத் தான் நாச்சியார் குறிப்பிடுவதாகக் கொள்வது இங்கு பொருத்தமானதே!

“போவான் போகின்றாரை” என்பது ஆச்சரியப்படுத்தும் ஒரு பிரயோகம்! “போவதற்காக போகின்றவரை” என்பதற்கு என்ன பொருள்?
அதாவது (பரமனைக் காணப்) போவதாகிய செயலே போதுமானது! அதுவே இலக்கும் ஆகி விடுகிறது.
உபாயம், உபேயம் என்று இரண்டும் ஒரு மாதிரி கலந்து விடுகிறது!
இதையே நம்மாழ்வார் தனது திருவிருத்தத்தில் “போவான் வழிக்கொண்ட மேகங்களே” என்று அருளியிருக்கிறார்!

அது போல “கூவுவான் வந்து நின்றோம்” என்று கோதை பாடுவதும் நம்மாழ்வாருக்குப் பிடித்த சொல்லாடலை ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

“கூவிக்கொள்ளும் காலமென்னும் குறுகாதோ” “என்னைக் கூவியருளாய் கண்ணனே” “கூவிக்கொல்லாய் வந்தந்தோ” என்று
நம்மாழ்வார் தன் பாசுரங்களில் அருளியிருக்கிறார்.

“வான நாயகனே! அடியேன் தொழ வந்தருளே!” என்று எம்பெருமானை தனக்கு தரிசனம் தர நம்மாழ்வார் அழைத்தது போல,
“தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்” என்று ஆண்டாள் நம்மாழ்வாரை பரமனின் தரிசனத்திற்கு துணைக்கழைக்கிறாள்!

இந்தப் பாசுரம், கோஷ்டியாக (கூட்டாக) ஆச்சார்ய உபதேசத்திற்குச் செல்லும் சீடர்களை குறிப்பில் உணர்த்துகிறது.

கீழ்வானம் வெள்ளென்று – ஒரு விதத்தில், கீழ்வானம் என்பது (அடியவர் வசமிருக்கும்) பரம்பொருளை வேண்டும்
ஆதாரத்தன்மையை குறிப்பில் தெரிவிக்கிறது. அந்த ஆதாரமானது, “வெள்ளென்று” தூய்மையானதாக இருந்தால் தானே,
“மேல் வானமாகிய” எம்பெருமான் அதன் மேல் வந்து அமருவான் !! –

“கீழ்வானம் வெள்ளென்று” என்பதற்கு, மோட்ச சித்தியைத் தேடும், ஆனால் உபாயம் அறியாமல் அக இருளில் உழலும்
சீடன் (பிரபன்னன்) ஒருவனுக்கு, ஆச்சார்ய சம்பந்தத்தினால், சத்வ குணம் தலையெடுப்பதையும்
ஞான வெளிச்சம் கிடைப்பதையும் உள்ளுரையாக கூறுவார் !!

எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் – பாகவத அனுபவத்தில் சதா சர்வகாலமும் திளைத்திருப்பதால்,
மோட்ச சித்தியை அடைய நிறைய சமயம் எடுத்துக் கொள்ளும் அடியவரை, பரபரப்பின்றி நிதானமாக மேயும் எருமை உருவகப்படுத்துகிறது.

‘சிறுவீடு’ என்பதை சிற்றின்பமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்। தொடர்ச்சியாக ‘பரந்தன காண்’ எனும்போது
தமோ குணங்கள் விலகிப் போவதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் !!!

மிக்குள்ள பிள்ளைகளும் – பக்தி யோகத்தை அனுசரிக்க தங்களின் தகுதியின்மையை உணர்ந்ததால்,
சரணாகதி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்த அடியவரை குறிப்பில் உணர்த்துகிறது.

உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் – ‘கோதுகலமுடைய பாவாய்’ என்ற
பதம் கண்ணனுக்கு மிக நெருக்கமான, அவனது பேரன்புக்குரிய கோபியர் குலப்பெண்ணை குறிப்பில் உணர்த்துகிறது.
அதனால் தான், மற்ற கோபியர், இவளை தங்களுடன் அழைத்துச் செல்வதன் வாயிலாக,
கண்ணனின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகி விடலாம் என்றெண்ணி இவளை துயிலெழுப்புகின்றனர்.

பாடிப் பறை கொண்டு – ஆச்சார்யனைப் போற்றி தனியன்கள் பாடுவதும், அவர் மேன்மையை பரப்புவதும்

மாவாய் பிளந்தானை மல்லரைமாட்டிய தேவாதி தேவனை – அடியவர்களின் புலன்களை தறிகெட்டு அலையச்செய்து,
அவர்களை அழிவை நோக்கிச் செலுத்தும் அல்லாதவைகள் (அகங்காரம்,மமகாரம்..) அனைத்தும் அரக்கர்களாகவும்,
அவற்றை முறியடித்து அடியார்களை நெறிப்படுத்தும் ஆச்சார்ய ஞானம், அவ்வரக்கர்களை மாயத்த
இறை சக்தியாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

தேவாதி தேவன் – காஞ்சி வரதராஜப் பெருமானை குறிப்பில் உணர்த்துவதாக சில பெரியோர் கூறுவர்,
இன்னும் சிலர் தேவநாதப் பெருமானை (திருவகீந்திரபுரம்) உணர்த்துவதாக சில பெரியோர் கூறுவர்

சென்று நாம் சேவித்தால் – ஆச்சார்ய திருவடியைப் பற்றுதல்

ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய் – ஆசார்யன், சீடர்களின் தகுதியை விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்த்து,
அவரவருக்கேற்ற பிரபத்திப் பலன் கிட்டுவதற்கு உபாயங்களை அருளுதலை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது!

————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading