இன்றோ திருஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24
ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானங்களில் உள்ளவற்றில்
சில துளிகளை அடியேன் உங்களுடன் பகிர்ந்து கொண்டு சத்தை பெற உள்ளேன் –
———————–
திருப்பாவை அடியிட்ட அஞ்சு பட்டாலும் –
பிரபன்ன நிஷ்டாக்ரமமும் –
பிரபத்தவ்யன் அதி ஸூலபனாம் படிக்கு அடியான அவனுடைய அவதாரத்தின் அடிப்பாடும் சொல்லுகிறது
மேலிட்டுப் பத்துப் பாட்டும் –
பிரபத்திக்கு பூர்வ பாவியான வாக்ய குரு பரம்பரையினுடைய க்ரமம் சொல்லி
பகவத் விஷயத்தில் உத்யுக்தரானவர்களோடு போர அவஹாகித்தாரோடு வாசியற உத்தேச்யர் என்னும் இடம் சொல்லுகிறது
அது எங்கனே என்னில் –
பிள்ளாய் எழுந்திராய் -6-என்கையாலே
பகவத் விஷயத்தில் அபி நவமாக மூட்டும் -அஸ்மத் குருப்யோ நம-என்னும்படி சொல்லுகிறது
அநந்தரம் –
நாயகப் பெண் பிள்ளாய் -7-என்கையாலே -ஸ்வா சார்யனுக்கும் கௌரவ்யன் ஆகையாலே-
அஸ்மத் பரம குருப்யோ நம -என்கிறபடியைச் சொல்லுகிறது –
கோதுகலமுடையாய்-8-என்று சர்வராலும் கொண்டாடும்படி இருக்கையாலே-
அஸ்மத் சர்வ குருப்யோ நம -என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறது
மாமான் மகளே–என்கையாலே ஒளி புதுவை நகர் வாழும் பேர்கள் தாயான ஆண்டாளுக்கு அண்ணரான-
ஸ்ரீ மத் ராமாநுஜாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
இதுவும் ஆழ்வான் அளவும் அனுசந்தேயம்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் -10-என்கையாலே
சித்த உபாயத்தில் ப்ராப்ய வைலஷண்ய ஞானத்தை யுடையராய்
அத்தாலே உடையவருக்கு கௌரவ்யராய் இருக்கும் –
ஸ்ரீ பராங்குச தாசாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
கோவலர் தம் பொற்கொடி-11-என்கையாலே கிருஷ்ண பக்தி யுக்தரான நாத வம்ச யுக்தராய் இருக்கிற-
ஸ்ரீ மத் யாமுன முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
நற்செல்வன் தங்காய்-12- என்கையாலே திருக் குமாரத்தியார் பருவம் நிரம்பின பின்பு
சேற்றில் படியாய்க் கிடந்தது அநு சரணம் பண்ணியும்
மனத்துக்கு இனியானைப் பாடவும் -12-என்கையாலும் ஸ்ரீ ராம மிஸ்ராய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
போதரிக் கண்ணினாய் -13-என்றும் பங்கயக் கண்ணானைப் பாட -14-என்கையாலே
ஸ்ரீபுண்டரீ காஷாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
நாவுடையாய் -14-என்கையாலே தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே –
ஸ்ரீ மன் நாத முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது
எல்லே இளங்கிளியே 15-என்கையாலே ஸூக முகாத் அம்ருதத்ரவ ஸம்யுதம் -என்னும்படி –
திருவருள் கமுகு ஒண் பழத்ததான ஆழ்வார் திருப் பவளத்தில்
நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் / மொழி பாட்டோடும் கவி அமுதமாய்த் திருவாய் மொழி பிரவஹிக்க
அத்தாலே-அணி மழலைக் கிளி மொழியாளை -அநு கரிக்கையாலே –
ஸ்ரீ மதே சட்கோபாய நம-என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
அநந்தரம்
நித்ய கைங்கர்ய நிரதரான நித்யரையும்
நித்ய அநபாயினியான பிராட்டியையும் -உணர்த்தி -இவர்களை முன்னிட்டு
நித்ய முக்த அநு பாவ்யானான எம்பெருமானைப் பற்றும் படி சொல்கிறது –
நாயகன் -16-தொடங்கி அஞ்சு பாட்டாலே
ஜன பத சரிதந்த புஷ்யத் புரபரிபாலன நித்ய ஜாக ரூகாந்–ப்ரஹரண பரிவார வாஹனாட்யாந் குமுதா முகாந் கண நாயகாந் நமாமி –
ஸ்மேராந நாஷி கம லைர் நமத-புநாநாந் ரங்க த்வாரா வலி ஷூ சதஸ் ருஷ்வதி கார பாஜ –
சேநாந்யமந்ய விமுகாஸ் தம சிஸ்ரியாம
ஸைன்ய துரீண ப்ராண ஸஹாயம் ஸூத்ரவதி மாசி ஸ்ரீரியமம் பாம்
நம ஸ்ரீ ரங்க நாயக்யை யத்ப்ரூ விப்ரம பரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தா மணி மிவோத் வாந்தமுத் சங்கே அநந்த போகிந –என்னும்படி
வைகுந்தத்து அமரரான -கோயில் கொள் தெய்வங்களையும்
வானவர்களையும்
தேவியர்களையும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியை ஆயிர முகத்தினால் காப்பாருடைய அவதாரமானவரையும்
அவர்களையும் அதி சங்கை பண்ணி நெருங்க அணைத்துக் கொ௭ண்டு கிடக்குமவர்களையும் எழுப்பி
அவர்களுடனே எம்பெருமான் திருவடிகளில் சென்று கிட்டு அபேஷிதங்களை அர்த்திக்கும் படி சொல்லுகிறது
ஸ்ரீ யை நம
ஸ்ரீ தராய நம-என்று இறே க்ரமம் இருப்பது
வேதம் வல்லார்களைக் கொ௭ண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிகை-இறே
நல் ஞானத் துறை படிந்தாடி -என்னுமா போலே
நல் ஞானம் ஆகிறது –
ப்ராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கை –
விஞ்ஞானம் யதிதம் பிராப்தம் -என்னுமா போலே
துறை யாவது –
முறை தப்பாதே குரு பரம்பரை வழியே பற்றுகை
த்வய நிஷ்டர்க்கு குரு பரம்பரையே பிரதானமாகக் கடவது
துறை தப்பாதார் ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே
வேதம் வல்லார்கள் -என்ற இடத்து குரு பரம்பரையை நினைத்து –
கீழ்ப் பத்துப் பட்டாலும் அனுஷ்ட்டித்தார்கள்
விண்ணோர் பெருமாளில்- விண்ணோர் என்கிறது த்வார பாலர்கள் தொடக்கமாக
திவ்ய மஹிஷீகள் ஈறாக உள்ளவர்கள் -என்றபடி
இந்த யோஜனைகள் எல்லாம் -விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே -என்று சொல்லுகிற
ஆச்சார்ய அபிமான நிஷ்டையான ஆழ்வார் திரு மகளார் படிக்குச் சேரும் இறே
பாலேய் தமிழர் இசைக்காரர் பத்தர் -என்கிறவிடத்து
குண சாம்யத்தாலே யோஜித்த படியாகக் கடவது இங்கு
எட்டு எழுத்தின் இணைப் பொருளும் –இரண்டு தனில் பொருளும் –
இயல் வலித் தேர் அருச்சுனர்க்கு இறைவர் தம்மைத் தொட்டு உரைத்த
முறையறுதிப் பொருளை எல்லாம் தோன்றும் வகை -இத்யாதிப் படியே –
இப்பிரபந்தம் ரஹஸ்யார்த்தத்தை ப்ரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் –
அதில் த்வய யோஜனையும் மேலே யோஜிக்கப் படுகிறது –
அநந்தரம்
பாட்டுக்கள் எல்லாவற்றாலும் ப்ரதிபாதிக்கிறபடியே விசேஷ கடாக்ஷ லஷ்யமாம் படியை அபேக்ஷிக்கிற படியையும்
வீற்று இருந்து ஏழு உலகின் படியே திவ்ய ஸிம்ஹாஸனத்திலே பேர் ஓலக்கமாக இருக்கும் படியையும்
போற்றி -24-என்று சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணும் படியையும்
தங்கள் அர்த்தித்வத்தையும்
கைங்கர்ய உபகரணங்களை அர்த்திக்கும் படியையும்
எல்லாரும் ஒருவனோடு கூடி இருந்து குளிரும்படியையும்
பலத்துக்கு அநு குணமான சாதனங்கள் தங்கள் கையது இன்றிக்கே அவன் கையதாக இருக்கும் படியையும்
கைங்கர்ய விஷத்தையும்
மாதர்களை எழுப்பும் படியையும்
கைங்கர்ய பிரதிசம்பந்தியான ஸ்ரீ யபதி கடாக்ஷத்தாலே அந்த கைங்கர்யத்தைப் பெற்று வாழும்படியையும் சொல்லித் தலைக் கட்டுகிறது-
ஆகையாலே
குரு பரம்பரா விவரண பூர்வகமாக
த்வய விவரணமான இப்பிரபந்தமே
பிரபன்னனுக்கு அநவரதம் அநு சந்தேயம் என்றதாயிற்று
ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் -என்னக் கடவது இறே
இதி குரு பரம்பரா விவரணம் –
———————————
த்வயத்துக்கு ஸங்க்ரஹமான திருமந்திர யோஜனை காட்டப் படுகிறது -இப்பிரபந்தத்தாலே
நமோ நாராயணாய என்பாரே–நாச் -5–11-என்று இறே இவர் தாமே அருளிச் செய்தது –
இப்பிரபந்தத்தில்
ஊழி முதல்வன் -4-
பற்பநாபன் -4-என்று சேஷத்வ பிரதி சம்பந்தியான சேஷித்வத்தையும்
உனக்கே –என்கையாலே -உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும்
நாம் -5-என்றும் –
யாம் -24-என்றும் –
மகார வாச்யனாய் ப்ரக்ருதே பரனாய் -பகவத் சேஷ பூதனாய் இருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தையும்
சொல்லுகையாலே பிரணவ அர்த்தம் ஸங்க்ரஹணம் ஆயிற்று
தூயோமாய் வந்து நாம் -8-
தூயோமாய் வந்தோம் -16-
அபிமான பங்கமாய் -22-
மற்றை நம் காமங்கள் மாற்று என்கையாலே -நமஸ் ஸில் அர்த்தமும்
கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -1-என்றும்
நாராயணன் மூர்த்தி -7-என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -3-
என்றும் சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்
உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்னக் கடவது இறே
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -28-என்கையாலே அதில் சர்வவித பந்துத்வமும்
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கையாலே
சதுர்த்தி அர்த்தமும் சங்க்ருஹீதம் ஆயிற்று –
இதி திருமந்திர விவரணம்
கறவைகள் பின் சென்று -28-இத்யாதிகளாலும்
செய்யாதன செய்யோம் -2-
உன்னை அருத்தித்து வந்தோம் -28-
சிற்றம் சிறு காலை வந்து உன்னைச் சேவித்து
நாராயணன் -10-
புண்ணியம் நாம் யுடையோம் -28-
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-என்று தொடங்கி
தீயினில் தூசாகும் -5-என்றும்
எங்கள் மேல் சாபம் இழிந்து -22-என்றும்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -25-என்றும் சொல்லுகையாலே
சரம ஸ்லோகார்த்தம் சங்க்ருஹீதம் ஆயிற்று –
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் -என்றும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -என்றும்
நகர மருள் புரிந்து இத்யாதி -பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும்
அந்தியால் ஆம்பயன் அங்கு என் -என்றும் சொல்லக் கடவது இறே
திருப்பாவையால் -நாராயணன் -1-என்றும் –
பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் -2-என்றும்
ஓங்கி உலகளந்த உத்தமன் -3-என்றும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஆஹ்யதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி
ஏவம் விதனானவன் -மாயனை மன்னு -5-இத்யாதிப்படியே கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து -25-வளருகிற இடத்தே
பேய்முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -6- என்று பூதநா சகட நிராகரணம் சொல்லி
அதுக்கு மேலே தாமோதரன் -5-என்று வெண்ணெய் களவு காண்கையாலே – கட்டவும் அடிக்கவும் எளியனாய் இருந்த படி சொல்லி
மதுரையிலே மல்லரை மாட்டி -8-
வல்லானை -15-கொன்ற படியைச் சொல்லி
அநந்தரம்
தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-25-
அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே
இதி சரம ஸ்லோக விவரணம் –
ஆக –திருப்பாவையால் சொல்லிற்று ஆயிற்று
வேதார்த்தம் -அதாவது
1-திரு அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் -என்றும்
2-அவ தீர்ணனானவனுடைய வடிவழகே ருசி ஜனகம் -என்றும்
3-ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
4-இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேசியர் -என்றும்
5-ப்ராப்யமாகிறது -அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
6-தத் சாதனமும் அவன் திருவருளே -என்றும்
சொல்லிற்று ஆயிற்று
ஸூம்ய ஜமாத்ரு யோகீந்த்ர பாத ரேகாமயம் சதா
ததாயத் தாத்ம சத்தாதிம் ராமானுஜ முனிம் பஜே —
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply