ஸ்ரீ திருப்பாவை சாரம் – மார்கழி திங்கள் –

இன்றோ திருஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24

நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்த வியாக்யானங்களில் உள்ளவற்றில் சில துளிகளை அடியேன்
உங்களுடன் பகிர்ந்து கொண்டு சத்தை பெற உள்ளேன் –

—————————————

இந் நோன்புக்கு ஒரு காலம் நேர் படுவதே -என்று காலத்தை கொண்டாடுகிறார்கள்
மார்கழி திங்கள் -என்று தொடங்கி-சிறுமீர்காள் -என்னும் அளவும் பிராப்யம்–
மேல் பிராபகம் –
பிராப்ய பிராபக சங்கரஹம்-என்றுமாம்-
இப் பாட்டில்–அதிகாரி ஸ்வரூபத்தையும்–உபாய ஸ்வரூபத்தையும்–உபேய ஸ்வரூபத்தையும் ஸங்க்ரஹித்து-
இந் நோன்புக்கு காலம் நேர்பட்ட படியைக் கொண்டாடுகிறார்கள் –

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்–1-

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்-
பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ -என்றும்-
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் – இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும் பாவனமாயும் போக்யமுமாயும் இருக்கை-
தனுர் ராசி –சூர்யன் -ராசிக்குள் புகுவதை பொறுத்தே மாசங்களின் பெயர் –

ஒரு நல் விடிவு உண்டாகப் பெறுவதே -என்றான் இறே அக்ரூரன்
மாசத்தை கொண்டாடுகிறது–பஷத்தை கொண்டாடுகிறது–நாளை கொண்டாடுகிறது
தங்களுக்கு பகவத் கைங்கர்யத்தில் ருசி பிறந்த இன்று–மங்கள கார்யம் செய்யுமவர்களுக்கு தேட்டமான காலம்-

மதி நிறைந்த நன்னாளால்-
ஒருவரை ஒருவர் முகம் கண்டு அனுபவிக்கைக்கும்-
எல்லாரும் கூடிச் சென்று கிருஷ்ணனை எழுப்புக்கைக்கும்-நிலா உண்டாகப் பெற்றதே-
நள் இருள் கண் -என்ன வேண்டா விறே இவர்களுக்கு-
விரோதிக்கக் கடவ அவ் ஊராரே இசைந்து மேல் எழுத்து இடப் பற்றது இறே-
தன்னடையே நேர்பட்ட படியைக் கண்டு ஆச்சர்யப் படுகிறார்கள் –
த்வதீய கம்பீர மனோ அனுசாரீன–வைதிக விதிகளும் அடியார் மனம் பின் செல்லும்-
விமுகன் -பகவத் லாபம் உண்டானதே நல்ல நாள்–
அன்று நான் பிறந்திலேன்–பிறந்த பின் மறந்திலேன் –பிராணன் இல்லாதவர் பிராணன் பெற்ற படி–
சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால் என்ற நாளும் நாளாகும் என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய் மறவாது வாழ்த்துக என் வாய் -பேயாழ்வார் -17-
சென்ற நாள் செல்லாத –கழிந்த நாள்–மூன்றுமே நல்ல நாள் -என்றார்

எம்பெருமானார் விலஷண சந்தரன் –யதிராஜ சந்தரன் -என்றபடி-
மார்கழி மார்க்க சீர்ஷ–தலையான மார்க்கம் –ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –
சரம உபாயம் உயிர் நிலை ஆண்டாள் கருதியது –

மார்க்கம் சீர்ஷம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்கிற மதி நிறைந்த நன்னாள் –
ஆழ்வாராதிகள் -ஆச்சார்யாதிகள் -திருவதரித்த நக்ஷத்ரம் –

நீராட
கிருஷ்ண விரஹத்தால் பிறந்த தாபம் ஆறும்படி குளிக்கை
இத்தால் இவர்கள் நினைக்கிறது கிருஷ்ண சம்ச்லேஷம்
தமிழரும் கலவியை -சுனையாடல் -என்றார்கள்
மாசி பவுர்ணமி -கடல் நீராட்டம் – மாசி மகம் உத்சவம் உண்டே இன்றும்
மார்கழி பவுர்ணமி தொடங்கி தை பவுர்ணமி சுனை யாடல் -தமிழர்கள் –

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே சஸீதே மிவ ஹ்ருதம் -பாரதம் மோஷ தர்மம் -4-50-
நான் வெயில் காலத்தில் குளிர்ந்த மடுவில் படிவது போலே
பர ப்ரஹ்மத்தை அடைந்தவன் ஆகின்றேன் -என்கிறபடியே
க்ரீஷ்மே சீதமிவிஹ்ர்தம் –க்ரீஷ்ம காலத்தில் -வேனிற் பருவத்தில் மடுவிலே முழுகிக் கிடப்பாரைப் போலே-
என்று பகவத் சம்ஸ்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை திருஷ்டாந்தமாக சொல்லிற்று இறே

தாங்கள் நினைத்த படி சொல்லுகைக்கு ஈடான முறை உண்டாய் இருக்கச் செய்தேயும்
அத்தை தவிர்ந்து பகவத் சம்பந்தத்தையே பார்த்து கௌரவித்து-நீராட என்கிறார்கள்
புத்ரர்கள் ஆகவுமாம்-சிஷ்யர்கள் ஆகவுமாம்-பகவத் சம்பந்தம் உடையாரை கௌரவ்யர் என்கிறது-
பொற்றாமரை கயம நீராடப் போனாள்-என்னக் கடவது இறே
இத்தால் பிராப்யத்தை சொல்லுகிறது–வாசத் தடம் போல் வருவானே
மறை பாற்கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து–துறைப்பால் படுத்தி தமிழ் ஆயிரத்தின் சுவை அமிர்தம்
கறைப் பாம்பணை பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்தருத்த–நிறைப்பான் கழல் அன்றி சன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே-

போதுவீர் போதுமினோ
அல்ப பலமான ஸ்வர்க்க அனுபவத்துக்கு அதிகார அர்த்தமாக வேண்டும் தேவதைகளுக்கு ஓர் எல்லை இல்லை
இந்த நிரவதிக சம்பத்தை பெறுகைக்கு எவ்வளவு யோக்யதை வேணும் -என்னில்––இச்சையே அதிகாரம்–
அது அப்ராப்த விஷயம் ஆகையாலே அதிகாரி சம்பத்தி உண்டாக்கிக் கொண்டு இழிய வேணும்
இது வகுத்த விஷயம் ஆகையாலே இச்சைக்கு மேற்பட வேண்டுவது இல்லை –
நெடும் காலம் இழந்ததும் இவன் பக்கல் இச்சை இல்லாமையே —ஆகையால் இந்த இச்சையே வேண்டுவது –
சக்தியும் பிராப்தியும் அத்தலையில் பூர்ணம் ஆகையாலே–இச்சைக்கு மேற்பட வேண்டுவது இல்லை –
பகவத் கைங்கர்யம் பண்ணப் போருகையிலே-ருசி உடையவர்களாய்–கூடும் மனம் உடையீர் -மர்ம ஸ்பர்சி –
போதுமினோ –
அவர்கள் முன்னே போக-அந்நடை அழகு கண்டு நாங்கள் பின்னே போக இறே நினைக்கிறது —
சூத்திர விஷயத்துக்கு தனித் தேட்டம் ஆனால் போலே
அபரிச்சின்ன விஷயத்துக்கு துணைத் தேட்டம் ஆகையாலே சஹ காரிகளை -சொல்லுகிறார்கள்-போதுமினோ –
பிரதி கூலரையும் அகப்பட தேன மைத்ரீபவதுதே யதிஜீவிது மிச்சசி -என்னுமவர்கள் அபிமுகரைப் பெற்றால் விடுவார்களோ
ஏவ மற்றமரர் ஆட் செய்வார்–காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் ஸ்தப்தராய் கிடக்கும் பாகவதர்களை எழுப்ப வேண்டுமே

நேரிழையீர்
விலஷணமான ஆபரணத்தை யுடையீர்–
இவர்கள் போதுமினோ -என்ற பின்பு அவர்கள் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பு இருந்தபடி –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய -என்கிறபடியே–
கிருஷ்ணனுடைய வரவை கடாஷித்து–அவன் எப்பொழுது வந்து மேல் விழும்
என்று அறியாத படியாலே–தங்களை எப்போதும் அலங்கரித்த படியே இருப்பார்கள் என்றுமாம்-
இதுக்குத் தகுதியான–ஜ்ஞான பக்தி வைராக்யங்களை உடையராய் –

திங்கள் திரு முகத்து சேயிழையார்—தாப த்ரயங்கள் கழிந்து அழகிய திருமுகம்- ஆத்ம குணங்கள் பூஷணம்-

சீர் மல்கு ஆய்ப் பாடி –
இவ்வூரில் ஐஸ்வர்யம் வழிந்து போய் வேறு ஊருக்கு வெள்ளமிடப் போந்து இருக்கை –
அதாவது கிருஷ்ணன் உடைய இங்குத்தை நீர்மை பரம பதத்திலும் சென்று அலை எறியும் படியாய் இருக்கை –
வஸ்துவுக்கு குணத்தால் இறே உத்கர்ஷம்
அந்தகாரத்திலே தீபம் போலே பிரகாசிப்பதும் இங்கே யாகையாலே ஐஸ்வர்யம் பூர்ணம் ஆய்த்து இங்கே இறே
த்ரிபாத் விபூதியில் அடங்காத வஸ்து தன்னை நியாம்யம் ஆக்கி வர்த்திக்கிற ஊர் இறே
பண்டே கோ சம்ருத்தி உண்டாய் இருக்கச் செய்தே
பிள்ளைகள் கால் நலத்தாலே கறப்பன கடைவன வற்றால் குறைவற்று இருக்கை
நாழிப் பால் நாழி நெய் போருகை என்றுமாம் –
கிருஷ்ணன் தீம்பு செய்து மூலை படியே நடக்கிலும்-அதுவே அமையும் என்று இருக்குமூர் –

ஆய்ப் பாடி
பரம பதம் போலே தேஹாந்தர பரிக்ரகம் பண்ணிச் சென்று–அனுபவிக்க வேண்டாத ஊர்-
ஆசார பிரதானரான வசிஷ்டாதிகள் வர்த்திக்கிற திரு அயோதியை போல் அன்றிக்கே–
இடக்கையும் வலக்கையும் அறியாத இடையர் வர்த்திக்கிற ஊர்
பெருமாள் குணம் கண்டு உகக்கும் ஊர் போல் அன்றியே–கிருஷ்ணன் தீம்பு கண்டு உகக்கும் ஊர்

செல்வச் சிறுமீர் காள்
இவ் வாத்மாவுக்கு நிலை நின்ற ஐஸ்வர்யம் ஆவது–பகவத் பிரத்யாசத்தி இறே
ராஜ்யத்தை விட்டு வெறும் கையோடு பெருமாள் பின்னே போன-இளைய பெருமாளை
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன –என்றது இறே
ராவண பவனத்தின் நின்றும் கால் வாங்கி பெருமாள் இருந்த தேசத்தைக் குறித்து-வருவதாக –
பரித்யக்தா மயா லங்கா மித்ரா நிசதநா நிச -என்று
சர்வத்தையும் விட்டு ஆகாஸ் ஸ்தானனான–விபீஷண ஆழ்வானை-அந்தரி ஷக்த ஸ்ரீ மான் – என்றது இறே
அவனை ரஷகனாக அத்யவசித்து தன் பக்கல் முதல் அற்று–கை வாங்கின ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை —
சாது நாகவர ஸ்ரீ மான் -என்றது இறே

முக்த ஐஸ்வர்யம் -செல்வம் -பகவத் ஞான விசேஷமும் ப்ரீதி காரித கைங்கர்யம் –
பரிபூர்ண ஞானமும் அனுபவமும் –
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனனை -சர்வ சரீரத்வம் அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹம் –
சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டாத படி சாஷாத்காரம் –
தினைத்தளவும் விடாதவள் -அல்பமும் விடாமல் அனுபவித்து -கைங்கர்யம் அன்றோ
நித்ய கிங்கரோ பவ-அனுபவ கைங்கர்யங்கள் இரண்டும் உள்ள செல்வம் –
நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் -என்றபடி –

அப்படியே இவர்களும்
இங்கு ஐஸ்வர்யமாக சொல்லுகிறது கிருஷ்ண ப்ரத்யாசத்தியை–
ஆயர்
என்னும் காட்டில் ஜ்ஞான ஜன்மாக்களைக் காட்டுமோ -என்னில்-
லோகத்தில் பகவத் ஏகபரராய் இருக்குமா போலே-ஜ்ஞான ஜன்மம் உடையவர்களும் பகவத் ஏக பரராகையாலே

சிறுமீர்காள்
கிருஷ்ணனோடு ஒத்த பருவமாய் இருக்கை-துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்கிற படியே
எல்லாவற்றிலும் அவனுக்கு ஈடாய் இருக்கை
பருவம் நிரம்பின ஸ்திரீகளையும் புருஷர்களையும் கண்டால்–தேவதாந்தர பஜனம் பண்ணினாரையும்–
தம் தாமுக்காக நினைத்து இருப்பாரைப் போலே நினைத்து இருக்கும்
தனக்கு அனன்யார்ஹைகளாக நினைத்து இருப்பது இவர்களை–இத்தால் அவனுக்கேயாய் இருக்கிற
யோக்யதைச் சொன்ன படி
அதாவது–கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகாது இருக்கை-

சீர் மல்கும் -இத்யாதி –எம்பெருமானுடைய க்ருபா ஷமாதி கல்யாண குணங்கள்
தம் தம் விஷயங்களிலே சேர்ந்து பொங்கி-பரம பதத்தளவும் சென்று அலை எறியும்படி

கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் –
ஸ்ரீ நந்த கோபர் முன்பு பசும்புல் சாவ மிதியாவராய் ஆய்த்து -நம் சிறியாத்தானைப் போலே
ஆன்ரு சம்சய பிரதானராய் போருவது –
பிள்ளைகள் பிறந்த பின்பு அவர்கள் மேல் உண்டான வாத்சல்யத்தாலே —அவர்களுக்கு என்ன வருகிறதோ -என்று அஞ்சி
வேலைப் புகர் எழ கடைந்து பிடிக்கத் தொடங்கினார் –
அதிசயித மங்களா சாசனை பரராய்–பகவ லாபத்தாலே களித்து–பகவத் விஷயத்தை அசல் அறியாதபடி
ரஷித்துக் கொண்டு போருகிற ஆசார்ய விஷயத்தில்–தன்னுடைய நியாம்யத்தை தோற்றும்படி இருக்குமவனாய்

கொடும் தொழிலன் –
தொட்டில் கீழே எறும்பு புகுரிலும் சிம்ஹத்தின் மேல் விழுமா போலே–சீற்றத்தின் மிகுதியால் உதிரக் கையரானார்-
ந ஹிம்ச்யாத் சர்வா பூதானி -என்கிற சாமான்ய விதி–அக்னீ ஷோமீயம் பஸூ மாலபதே -என்கிற விசேஷத்தில் வாராது இறே-
ஸ்வார்த்தமாக செய்யும் அன்று இறே நிஷித்தமாவது–
அத்தலைக்கு என் வருகிறதோ என்று அஞ்சிச் செய்யுமன்று தர்மமாகக் கடவது –
மன் நிமித்தம் க்ருதம் பாபம் -இத்யாதி–
நின்பால் பொறுப்பு அரியனகள் பேசில் –ஆங்கே தலையை அறுப்பதே கருமம் கண்டாய் -என்றது இறே

நந்த கோபன் –
பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே ஆனந்தத்தை உடையவர் என்னுதல்—நாமதேயமாதல் –
இப்போது இவரைச் சொல்லுவான் என் என்னில்–உத்தேச்ய வஸ்துவை நோக்கித் தருபவர் என்னும் பிரீதியாலே –
நந்த கோபாலா -எழுந்திராய் என்று
எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறே–இவர்களுக்கு அவர் விதேயமாய் இருப்பது –

தசரதன் மகனுக்கு அன்றி தஞ்சம் இல்லேன் -சக்கரவர்த்தி திரு மகன் வீர தீர ஏக தேசம்
பெருமாளுக்கு நஞ்சீயர் சொல்ல
அங்காளராயன் அரசன் ஆபேஷிக்க
இவன் பெருமாள் திரு உள்ளம் அறியாதவன்
எல்லாம் நம் ஐயர் -என்று பெருமாள் அபிப்ராயம் –
பிராட்டியும் திருவடிக்கு முதலில் சக்கரவர்த்தி மருமகள் என்று தம்மை அறிமுகம்

குமரன் –
வெண்ணெய் களவு கண்டான்–பெண்களை களவு கண்டான்–ஊரை மூலையடி ஆக்கினான்–
என்று எல்லாரும் வந்து முறைப்பட்டால்
என் கண் வட்டத்திலே வந்து தோற்றினான் ஆகில் நியமிக்கக் கடவேன் -என்று
பெரிய உத்யோகத்தோடு இருந்தால் அவர் முன்னே தோற்றும் போது–ச விநயமாக தோற்றுகையாலே
கெட்டேன் இவனையோ எங்கனே பழி இட்டது -என்று–அவர்களையே பொடியும் படியாய் இருக்கை-
யசோதை பிராட்டி பொடியும் போதும் -உந்தம் அடிகள் முனிவர் -என்று அன்றே பொடிவது —
படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே –கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் –
என்று இறே இவள் இருப்பது

நந்த கோபன்
கூர் வேல் நுண்ணிய மதி -நந்த கோபன்-ப்ரஹ்மானந்தம் அனுபவிக்கும் -ஆச்சார்ய பதம் –
குமரன் –
பவ்யதை -சிஷ்யன் -லக்ஷணம் -தானே அனுஷ்ட்டித்து காட்டுவான் –

ஏரார்ந்த கண்ணி யசோதை-
யசோதை பிராட்டி கண்ணிலே அழகு குடி கொண்டாய்த்து இருப்பது –
பிள்ளையை மாறாதே பார்த்துக் கொண்டு இருக்கையாலே–அவ் வாசி யடைய கண்ணிலே தோற்றும்படியாய் இருக்கை –
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் தொழுகையும் -இவை கண்ட கண் இறே–அம்பன்ன கண்ணாள் யசோதை –
விலாசாட்சி -சஹ பத்ன்யா -கிண்ணகம்-அனுபவிக்க தேசிகர் சீதா பிராட்டி -அர்ச்சாவதார அழகு விபவம் விட ஏற்றம் –

யசோதை
யசோதா அறிவுறாய்-என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி–இறே இவர்கள் திறத்தில் அவள் அனுகூலித்து இருக்கும்படி

இளஞ் சிங்கம்
ஸ்ரீ நந்தகோபர் ஹித காமர் ஆகையாலே அங்கு விநயம் தோற்ற நின்ற படியைச் சொல்லிற்று –
இவள் பிரியமே நடத்துபவள் ஆகையாலே செருக்கும் மேணானிப்பும் தோற்ற நின்ற நிலையைச் சொல்லுகிறது –
அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -என்று–இவன் செய்தது எல்லாம் உத்தேச்யமாக விறே இவள் நினைத்து இருப்பது
ஆரேனும் வந்து முறைப்பட்டால் -அஞ்ச உரப்பாள்—இவன் தீம்பிலே தகண் ஏறும்படியாக வாய்த்து உரப்பது –
இளஞ் சிங்கம் —சிறுமியருக்கு ஒத்த பருவமாய் இருக்கை–சிங்கக் குருகு என்று பட்டர் அருளிச் செய்வர்-

யாதவ ஸிம்ஹம் -ராகவ ஸிம்ஹம் – நர ஸிம்ஹம் -ஸ்ரீ ரெங்கேந்திர ஸிம்ஹம் –

கார்மேனி –
நம்முடைய சகல தாபங்களும் ஆறும்படியான வடிவு–
தூ நீர் முகில் போல் தோன்றாய் -என்று பிரார்த்தித்த வஸ்து இறே-
இவர்களுக்கு பிரத்யஷித்து நிற்கிறது–மாதா பிதாக்கள் தங்களை மறைத்து வைத்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு

செங்கண்
அத் திருமேனிக்கு பரபாகமான சிவப்பை உடைய திருக் கண்கள் –
அகவாயில் வாத்சல்யம் அடைய திருக் கண்களில் தோற்றும்படியாய் இருக்கை –
ஐஸ்வர்யத்தாலும் குதறி இருக்கும் இறே-வடிவாலே அணைத்து–கண்ணாலே குளிர நோக்குகையிலே இறே கருத்து-
கண்
என்று ஜ்ஞானமாய் -அதுக்கு அழகாவது வஸ்துவை உள்ளபடி கிரஹிக்கை –
அத்தாலே பூரணமான ஞானத்துக்கு பிரகாசமாய்
தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜ்யாதி சகல அதிசய ப்ரதமான–திரு மந்த்ரத்திலே
தன்னுடைய சகல காரண்த்வாத்ய அதிசயங்கள் எல்லாம் பிரகாசிக்குமவனாய் —மந்த்ரோ மாதா -என்னக் கடவது இறே
இம் மந்த்ரம் தானும் சமஸ்த கல்யாண குணாத்மகனான–எம்பெருமானைத் தன்னுடைய கர்ப்பத்திலே
வைத்துக் கொண்டு எல்லாரும் அறியலாம்படி பிரகாசிப்பிக்கையாலே இம்மந்த்ரத்தை மாதா என்னக் குறை இல்லை–
ஆஸ்ரித சகல தாப நிவர்த்தகமாய்–பரம உதாரமான திரு மேனியை உடையனாய்
இத்தால் உபாய க்ருத்யம் சொல்லுகிறது–
அன்றிக்கே கார்மேனி -என்று மேகம் போலே-தர்சநீயமான திருமேனியை உடையவன் என்று
அழகை சொல்லுகையாலே-உபேயத்வம் சொல்லிற்று ஆகவுமாம்

கதிர் மதியம் போல் முகத்தான் –
பிரதாபத்துக்கும் குளிர்ச்சிக்கும் ஆதித்யன் உடைய புகரை-ஊட்டின சந்தரனைப் போல் ஆய்த்து–திரு முகம் இருக்கும் படி
பிரதிகூலருக்கு அநபிபவ நீயானாய்–அனுகூலருக்கு கிட்டி நின்று–அனுபவிக்கலாம்படி இருக்கை –
கதிர் மதியம் போல் -ஆஸ்ரியர் அணுகும் படியும் நாஸ்திகர் ஒழியும் படியும் –

கதிர் மதியம் போல் முகத்தான் –
அபூத உவமை -குளிர்ந்த பிரகாசமுடைய ஆதித்யன் போலேயும் தேய்த்தால் வருதல் இல்லாத சந்திரன் போன்ற தன்றோ

முகத்தான் –
அவ் வளவிலும் உபமானம் நேர் நிற்க மாட்டாமையாலே–உபமேயம் தன்னையே சொல்லுகிறது-
அத் திரு மேனிக்கு பரபாக சோப அவஹமாய் அகவாயில்–வாத்சல்ய பிரகாசகமாயும்–பரத்வ பிரகாசகமாயும்-இருந்துள்ள
சிவந்த திருக் கண் மலர்களை உடையனாய்-
கார் மேனி என்கையாலே -சௌலப்ய சௌசீல்யங்களையும்–
செங்கண் என்கையாலே -வாத்சல்ய ஸ்வாமித்வங்களும்-தோற்றுகையாலே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குண சதுஷ்ட்யமும் சொல்லிற்று ஆய்த்து
அநபிபவநீயதவம் சக்தி கார்யம் ஆகையாலே–ஆஸ்ரித கார்ய ஆபாதாக சதுஷ்டயமும் சொல்லிற்று ஆய்த்து-
இப்படி குணங்களை உடையனான நாராயணனே

நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே–சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படியாய்
இறே இவ் வவதாரம் தான் இருப்பது –
தேவ தாந்தரங்கள் அறியாத கோப வ்ருத்தர்கள் நோன்புக்கு அங்கமாக ஜெபிக்கும்–மந்த்ரமாக உபதேசிக்கையாலே
சொல்லுகிறார்கள் என்னவுமாம் –
இன்னவும் தன்னுடைய தமப்பன் மார் சொல்லவும் கேட்டு இருக்கும் இறே –
வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபி முக்யம் பண்ணிப் போருமவன்-
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் -என்றும்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றும்
திண்ணம் நாரணம் -என்றும்
நாரணனை நன்கு அறிந்தேன்-என்றும்
இவ்வர்த்தத்தில் ரிஷிகளும்
நாராயண சப்தார்த்தம் -என்றும்–ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்றும்
ஸ்ருதியும்-நாராயண பரம் பரமம் -என்றும்–பல விடத்திலும் சொல்லிற்று

நாராயணனே நமக்கே பறை தருவான்
சர்வ ஸ்வாமி யானவனே–நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் —
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்
அவதாரணத்துக்கு கருத்து
சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே–
தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற–சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –
நாரயணத்வம் சர்வ சாதாரணம் அன்றோ என்னில் –

நமக்கே -அதிகாரி ஸ்வரூபம்-நம -அர்த்தமே பாட்டுக்கள் தோறும் -நமக்கே -முதலில் –
கண்ணனை தூது போக சொல்லி -இழந்தார்கள் -தேரில் அருகே இருந்தாலும் -அர்ஜுனன் இழந்தான் –
பறை தரும் நாராயணனுக்கு -பல விசேஷணங்கள் -இதில் -கூர் வேல் -மங்களாஸாசனமே அவனுக்கு அரண்
பஞ்ச நாராயணன் இதில் உண்டே-நந்த கோப குமரன் -ஆச்சார்யருக்கு பவ்யன் -மந்திரத்தில் உள்ளான் -அவனை எடுத்துக் கொடுப்பார்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் நாராயணன் -போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம் -கலியன் –
கண்ணி -இரண்டு வரி பாசுரம் -அரவிந்த லோசனன் -கரும் தடம் கண்ணி -கை தொழுது -பராங்குச நாயகிக்கும் -அவ்வூர் தாயாருக்கும் –
மைய கண்ணாள் -செய்ய கோலத் தடம் கண்ணன் -வந்தது எல்லாம் ஏரார் இளம் கண்ணி -அம்பு அன்ன கண்ணாள் யசோதை –
கிருஷ்ண அனுபவம் அடைய கண்ணிலே காணலாமே –
கண் -ஞானம் -ஞானம் உடையவர் -கண்ணி -யசோதை -திரு மந்த்ரம் -நந்த கோபன் ஆச்சார்யர் -திரு மந்த்ர பரதந்த்ரன் –
ஆச்சார்ய பரதந்த்ரன் -ஆஸ்ரித பரதந்த்ரன் –
சர்வேஸ்வரனைப் பிள்ளையாகப் பெற்றதை கண்ணிலே காணலாமே -எடுத்த பேராளன் நந்த கோபன் –
நந்த கோபன் ஏரார்ந்த கண்ணி -ஆச்சார்யர் கடாக்ஷம் என்றபடி
மந்த்ரத்துக்குள் கண்ணி மந்த்ரம் த்வயம் -இரண்டு உண்டே -அழகு பொருந்திய த்வயம் –
அதில் நாராயணன் -இரண்டு ஆகாரம் -பறையாகவும் தருபவனாகவும் இருக்கும் நாராயணன்
அழகும் குணங்களும் அடுத்து –
கார் மேனி நாராயணன் -ஸுலப்யம் / ஸுசீல்யம் -நம்மிடம் வந்து பொழியும் -பல சாம்யங்கள் -உதார இத்யாதி
செங்கண் -வாத்சல்யம் -ஐஸ்வர்யம் –பரத்வம் -ஸ்வாமித்வம் -தாமரைக் கண்ணன் விண்ணோர் பரவும் – -பிள்ளைக்குத் தாய் வழி வரும் கண் –
கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -அபூத உவமை -சூர்ய தேஜஸ் கொண்ட சந்திரன் -முளைத்து எழுந்த திங்கள் தானாய் -சர்வ சக்தித்வம் —
ஆஸ்ரித ஸுவ்கர்ய ஆபாத -ஆஸ்ரித கார்ய சித்தி ஆபாத குணங்களும் -அவனாலே அவனை அடைவோம் -இதுவே அருளிச் செயல்களின் சுருக்கம்
இதைக் கொண்டே எம்பெருமானாரும் பஞ்ச நாராயணர் பிரதிஷ்டை செய்து அருளினார் –

நமக்கே –
அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி —அகிஞ்சநராய்–அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் —
சஹாயாந்தர நிரபேஷமாக அவனாலே புருஷார்த்தம் என்று இருக்கிற நமக்கே-
நமக்கே -என்கிற இடத்தில் ஏவகாரத்தால்–உபாயாந்தரங்களையும்–தன்னையே உபாயமாக பற்றினவர்களுக்கு-
அவதாரணம் -அகிஞ்சனமான நமக்கே —ஸ்வரூபம் அந்தர்கதம் உபாய பாவம்
அத் தலையால் நிறைவாலும் அவனே உபாயம்–இத்தலையால் குறையாலும் அவனே உபாயம்–
உள்ளபடி உணர்வில் நமக்கு ஓன்று உண்டு என்ன உள்ள விரகு இல்லை–
கொள்ளக் குறை இல்லை-அறிவொன்றும் இல்லாத ஆயர் குலம்–
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா-இவர்கள் தாங்களே இறே –
இற்றைப் பறை கொள்வான் அன்று காண – என்று -மேலே சொன்னார்கள் –

பறை தருவான் –
நாட்டுக்கு பறை என்று ஒரு வ்யாஜமாய்–தங்களுக்கு அபிமதமான அடிமையை யாய்த்து நினைக்கிறது–
இத்தை சாதித்துத் தருவர் ஆர் என்னில் –

நாராயணனே நமக்கே பறை தருவான் -இதுவே ஸ்ரீ பாஷ்யம் –
சமன்வய அதிகாரம் –சர்வ காரணத்வன்-நாராயணன் -சர்வ பூத அந்தராத்மா –ஏகோ -யஸ்ய பிருத்வி சரீரம் –
நாராயணனே ஏவ காரம் -இரண்டாம் அத்யாயம் -விரோதம் பரிக்ரஹித்து -அவிரோத அத்யாயம்
தருவான் -மூன்றாவது -உபாய பூதன்-பக்தியால் ப்ரீதனான அவனே உபாயம்
பறை -புருஷார்த்தம் -நான்காவது -பலாத்யாயம்
நமக்கே -சாத்திய உபாயத்தால் வசீகரித்த நமக்கே –

மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -ஸ்ரீ பரமபத அனுபவம் -ஸூ சகம்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –

நாராயணனே நமக்கே பறை தருவான் -திருப்பாவை -1
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -திருவாய்மொழி -9-4-2-
நமக்கே -அதிகாரி ஸ்வரூபம் -எண்ணே கொண்ட
பறை -பிராப்யததை -காண
தருவான் -உபாயத்தை -கண்ணே
பிராப்ய பிராபக அதிகாரி ஸ்வரூபம் இறே சாஸ்திர அர்த்த தமம் ஆவது –
பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம்-இரண்டிலும் –

நாராயணனே நமக்கே பறை தருவான் –
ப்ரபத்திக்கு வாசகம்
வசனம் -வாசகம் -வாஸ்யம் மூன்றும் உண்டே -சொல்லும் பொருளும் சொல்லப்படுபவனும் என்றவாறு
ரஹஸ்ய த்ரயம் –
சரணாகதன் -சரண்யன் -சரணாகதி மூன்றும் -சரணம் புகல் என்று பற்ற –
போதுமினோ -படிந்து -இரண்டும் வினை சொற்கள் -மட்டுமே உண்டு –
யமுனையில் படிந்து நீராடுவதே -நம் கர்தவ்யம்
அவனது கர்தவ்யம் தருவான் -ஒரே வினைச் சொல்
பரித்யஜ்ய -விட்டு -வ்ரஜ -பற்று -இரண்டு உண்டே / மோக்ஷயிஷ்யாமி -ஒரே வினைச் சொல் அங்கும் –
மாஸூச -சோகப்படாதே -வினைச் சொல்லும் உண்டே -செய்யாதன செய்வதும் செயலே
உய்யுமாறு எண்ணி உகந்து-அடுத்த பாசுரம் -ஆனந்தப்பட்டு பகவதீ கீதை -ஆனந்த மயன்-தானே
வெறும் துக்கப்படாதே பகவத் கீதை
ப்ரக்ருதி சம்பந்தம் நினைக்க துக்கம் / ப்ரஹ்ம சம்பந்தம் அனுசந்திக்க ஆனந்தம் –
அது வந்தேறி இது ஸ்வாபாவிகம்-கர்மம் தொலைந்தால் சரீரம் கழியும் -கர்மத்தால் சரீரம் –
மாஸூச -விதி / எண்ணி உகந்து ராக பிராப்தம் –
நாராயணனே பறை –ப்ராப்யம்
நாராயணனே தருவான் -ப்ராபகம்
நமக்கே பறை /நமக்கே தருவான்—அதிகார விசேஷணம் -அநந்யார்ஹத்வம் –
பிரயோஜனாந்தர / உபாயாந்தர பரர்கள் இல்லையே
அன்வய வ்யதிரேக இரண்டையும் அருளிச் செய்ய வேண்டுமே –
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் -நமக்கே விளக்கம் -ருசி விஸ்வாசங்களே செல்வம் –
நீராடி போதுவீர் -படிந்து இரண்டாலும் இத்தை சொல்லி –
சரணாகதிக்கு காலம் -சரணாகதி எப்படி -சரணாகதி யார் இடம் -சரணாகதி பண்ணுவார் யார் –
சரணாகதி -அனைத்தையும் அருளிச் செய்து –
விபீஷணன் -வந்த காலமும் இடமும் வகுத்த காலமும் வகுத்த தேசமும் -ஹனுமான் -வாதம் அபயப்ரதானத்தில் –
சீதை இருந்த இடம் அறிந்த பின்பே பெருமாள் இலங்கைக்கு –
அதே போலே ராமர் இருக்கும் இடம் அறிந்த பின்பே விபீஷணன் வர முடியும் –
ராம தூதன் அருளிச் செய்த செய்திக்கு விஷயமானானே இவன் –
சம்சாரி வெட்டி விட செய்யும் காலத்துக்கு நாள் பார்க்க வேண்டாம்
சம்சாரம் வளர்க்கும் கர்தவ்யம் கல்யாணாதிகள் இதுக்கு நாள் பார்க்க வேண்டுமே –
நந்த கோபன் குமரன் தருவான் –
ஆச்சார்யர்க்கு வசப்பட்ட சர்வேஸ்வரனே பிராப்யம் பிராபகம் என்றவாறு

நாராயணனே நமக்கே பறை தருவான்
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந் தண்ணந் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-
நல்ல வருள்கள் –
என் குற்றத்தை யாதல்
தன்னுடைய சர்வஞ்ஞதவம் ஆதல் பாராமல்
தன பேறாக பண்ணின அருள் –
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே
விடாய்க்கு அருளினான் என்று இருக்கின்றிலர்-
நமக்கே தந்தருள் செய்வான் –
பலர் அடியார் முன்பு அருளிய -திருவாய்மொழி -7-10-5–என்கிறபடியே
நித்ய ஸூரிகளும் தாம் பெற்ற பேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது –

எம்பெருமானார் விஷயமாகவே –
ஸ்ரீ பாஷ்யாதிகள் சாதிக்கும் பொழுது கதிர் போலேயும்
பகவத் விஷயாதிகள் சாதிக்கும் பொழுது ஆஹ்லாத சீதா நேத்ராம்பு -மதியம் போலேயும் இருப்பாரே
நாராயணனே நமக்கே பறை தருவான் – சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம்
தநூம் மக் நான் உத்தரதே லோகான் –உத்தாராக ஆச்சார்யர் அன்றோ

பாரோர் புகழ –
கிருஷ்ணனையும் நம்மையும் சேர ஒட்டாதவர்கள்–தாங்களே கொண்டாடும்படி
கிருஷ்ணன் வேண்டும் உபகரணங்களைக் கொடுக்க
பெண்கள் நோன்பிலே உபக்ரமித்தார்கள்–
பாருக்கு எல்லாம் அநாவ்ருஷ்டி இல்லாமையால்–வர்ஷித்தால் பார் எல்லாம் கொண்டாட ப்ரசக்தி இல்லாமையாலும்
சேர ஒட்டாதவர்கள் புகழ்கையே இவர்களுக்கு பரம உத்தேச்யமாய் இருக்கையாலும்
பாரோர் –
என்றதுக்கு கோப வ்ருத்தர் பரமாக அர்த்தம்-நாடு அடங்க அநாவ்ருஷ்டி தீர்ந்து சக்ருத்தமாய்த்து
என்று கொண்டாடும்படி-

பறை தருவான் -இத்யாதி
புருஷார்த்தத்தைக் கொடுப்பான் -ஆகையால் பூமிப் பரப்பில் உள்ள லௌகிக வைதிக பரம வைதிகர்
எல்லாரும் கொண்டாடும்படி
இந் நோன்பிலே அவஹாகித்து நீராடப் போதுமினோ என்று அந்வயம்-
காமனாதிகாரிகளுக்கு சாதனமாயும்
நிஷ்காமருக்கு நித்யமாயும்
பகவத் பிரபன்னர்க்கு கைங்கர்யமாயும்
போருகிற இந் நோன்பிலே-பகவத் அனுபவ ஏகாந்தம் என்று அத்யவசித்து
ஸ்ரத்தா பூர்வகமாதயதா விதானம் அனுஷ்டித்தால்-லௌகிக வைதிக பரம வைதிகர்கள் உடைய கொண்டாட்டம்-
தன்னடையே சித்திக்கும் இறே
யத்தாஷ்டாஷர சம்சித்தோ மஹா பாஹோ மஹீயதே-என்னக் கடவது இறே-

சமஸ்த கல்யாண குணாத் மகனான ஸ்ரீ மன் நாராயணனை
அவனை ஒழிய ப்ருதுக் ஸ்திதி யுபலபதி இல்லாதபடி-பிரவேசித்து-ஸ்வ சத்தையை லபித்தேன் -என்று
ப்ரஹ்ம அனுபவத்துக்கு-நீராட்டத்தை திருஷ்டாந்தமாக சொல்லுகையாலே-
நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-
நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-
இத்தால்-
உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக-அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-

நாம் விதித்த படி செய்வானாக -சொல் படி என்னாமல்-விதி அதிகிரமத்தில் பிரத்யவாயத்துக்கு
அஞ்சுவாரைப் போலே
நிரந்குச ஸ்வ தந்த்ரன் -இப்படி வித்தித்த படி செய்வதே -சௌலப்ய குணம் பாரோர் புகழ -என்றபடி-

படிந்து–இந் நோன்பிலே அவஹாகித்து–நீராடப் போதுவீர் போதுமினோ -என்று அந்வயம்

ஏல் ஓர்
பாதத்தை பூரித்துக் கிடக்கிறது–
எம் பாவாய்–
எங்கள் நோன்பு -என்னுதல்–
எங்கள் சந்தஸ் -என்னுதல்
ஏல் –
இப்படி ஆகில்–சம்போதனம் ஆகவுமாம்–
ஓர் -புத்தி பண்ணுங்கோள் -என்னவுமாம்-
அத்விதீயம்
ஏலோரெம்பாவாய்–
சொல் தொடர் என்றே கொள்ள வேண்டும் தடம் பொங்கத் தம் போங்கோ போலே
ஏல் — இயலுமா –ஆகுமா
ஏல் –
எமது கிரிசைகளை ஏற்றுக் கொள்–
ஓர் –
பேறு பெருவிக்கும் வகையை ஆராய்வாக
எம் பாவாய் –
எங்கள் விரதமே -நோன்பே –
பாவாய்
என்று ரதியைச் சொல்லிற்று ஆகவுமாம்-நாயனார்–
காம சமாஸ்ரயணம் அடுத்து செய்வதால்

நந்தகோபன் இளம் குமரன் நாராயணனே தருவான் -சுலபனானவன் —நாராயணனே –
ஒவ் ஒன்றிலும் சேர்த்து அன்வயித்து-இளம் சிங்கம்-ஐஸ்வர்யம் மேனானிப்பு சிங்க குருகு-

இப்பாட்டில் -ஏஷ ப்ரஹ்மபிரவிஷ்டோ ச்ம்க்ரீஷ் மே சீதமிவ ஹ்ருதம் -என்கிறபடியே
கிரீஷ்ம காலத்தில் சூர்ய கிரண தப்தனானவன் தன தாபம் ஆறும்படி குளிர்ந்த மடுவிலே
நாம ரூப விபாக அர்ஹனாம் படி-பிரவேசிக்குமா போலே
சம்சார தாபார்த்தனான தான் அந்த தாபம் ஆறும்படி
சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீ மன் நாராயணனை
அவனை ஒழிய ப்ருதுக் ஸ்திதி யுபலபதி இல்லாதபடி-பிரவேசித்து
ஸ்வ சத்தையை லபித்தேன் -என்று ப்ரஹ்ம அனுபவத்துக்கு
நீராட்டத்தை திருஷ்டாந்தமாக சொல்லுகையாலே
நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-

நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-

நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-
இத்தால்
உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக–அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து–

—–

அடியவர், தனக்கும் எம்பெருமானுக்கும் ஆன உறவை உணரும் நாள் “நன்னாள்” என்று போற்றப்படுகிறது!
“நீராடப் போதுவீர்” என்பது அடியவரை கைங்கர்யம் செய்ய அழைப்பதை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது.

மதி நிறைந்த – அந்த வேண்டுகோளை கேட்ட மாத்திரத்தில், கோபியரின் முகங்களும்
பவுர்ணமி நிலவை ஒத்த பிரகாசம் அடைவதாகவும் வைத்துக் கொள்ளலாம் ! வெண்ணிலவு, வானத்தில் மட்டுமே இல்லை

‘செல்வ சிறுமீர்காள்’ என்பதில் உள்ள ‘செல்வம்’ என்ற பதம் கண்ணன் மேல் உள்ள பேரன்பையும்,
அவனது துணை தரும் மகிழ்ச்சியையும் உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.

இப்பாசுரத்தில், ‘ஆய்ப்பாடி’ என்பது சம்சார சாகரத்தை உள்ளர்த்தமாக குறிக்கிறது.

“நேரிழையீர்” என்ற பதம் அமைதியையும், புலனடக்கத்தையும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற மாந்தரைக் குறிக்கிறது.

கூர்வேல் கொடுந்தொழிலன் — தன்னுடைய சங்கல்பத்தால், நமது பாவங்களுக்கு நிவர்த்தி தர வல்லவன்
கிருஷ்ணன் என்பதை உள்ளர்த்தமாக உணர்த்துகிறது.

கதிர் மதியம் போல் முகத்தான் — பரந்தாமன் ஒரே சமயத்தில், அடியார்களுக்கு அருளையும் (குளிர்ச்சி),
பகைவர்க்குத் துன்பமும் (வெப்பம்) தர வல்லவன் என்பதால் !

பறை தருவான் — “மோட்ச சித்தியை அடைவதற்கான உபாயங்களை அருள்வான்” என்பது உட்பொருள்.

“நாராயணனே” என்பது உபய ஸ்வரூபத்தையும், “நமக்கே” என்பது அதிகாரி ஸ்வரூபத்தையும் குறிப்பில் உணர்த்துகிறது.
இந்த இரண்டு சொற்களிலும் காணப்படும் ஏகாரம், பரமனை விட்டால் நமக்கு வேறு கதியில்லை என்பதை அறுதியிட்டு உணர்த்துகிறது

மேலும், கர்ம-ஞான யோகங்களை விடவும், பக்தி யோகமே பரமனின் அருளைப் பெறவும்,
அவனை அடையவும் சிறந்த மார்க்கமாக, திருப்பாவையின் முதல் பாசுரம் அறிவிக்கிறது.

———-

திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் -எங்கனே என்னில்
ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிர க்ரந்தத்துக்கும் முதல் ஸ்லோஹம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் கிரந்தத்துக்கும் முதல் சர்க்கம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ மஹா பாரதம் நூறாயிரத்து இருபத்தையாயிரம் க்ரந்தத்துக்கும் முதல் அத்யாயம் ஸங்க்ரஹமானால் போலேயும்
திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி ஸங்க்ரஹமானால் போலேயும்
முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு ஸங்க்ரஹமானால் போலேயும்
மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் ஸங்க்ரஹமானால் போலேயும்
முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் -ஸங்க்ரஹமான படி எங்கனே என்னில்-

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் –
என்கிற இடத்தில் முதலிட்டு அஞ்சு பாட்டுக்கும் ஸங்க்ரஹம் சொல்லிற்று –
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் –
என்கிற இடத்திலே பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு ஸங்க்ரஹம் சொல்லிற்று
கூர்வேல் கொடுந்தொழிலன் -என்கிற இடத்தில்
கோவில் காப்பானே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹமாகச் சொல்லுகிறது
நந்த கோபன் -என்கிற இடத்தாலே –
நாயகனாய் நின்ற நந்தகோபன் என்றும் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
குமரன் -என்றத்தால்
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹம்
கதிர் மதியம் போல் முகத்தான் -என்கிற இடத்தால் –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் -என்றும் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே என்றும் இத்யாதிகளுக்கு ஸங்க்ரஹம்
நாராயணன் -என்கிற இடத்தாலே-
நாராயணன் மூர்த்தி கேசவன் என்றும் நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும் ஓங்கி உலகளந்த உத்தமன் -என்றும்
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும்
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்றும்
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
நமக்கே பறை தருவான் -என்கிற இடத்தாலே –
பாடிப் பறை கொண்டு என்றும் நம்மால் போற்றப் பறை தரும் -என்றும்
இற்றைப் பறை கொள்வான் என்றும்
அறை பறை என்றும் சாலப் பெரும் பறை என்றும்
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும்
இறைவா நீ தாராய் பறை என்றும்
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
பாரோர் புகழ என்கிற இடத்தாலே –
நாடு புகழும் -என்றும்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்
ஏலோரெம்பாவாய் -என்கிற இடத்தாலே
முப்பது பாட்டிலே ஏலோரெம்பாவாய்க்கு ஸங்க்ரஹம்

இப்பாட்டில் காலத்தைக் கொண்டாட நின்று கொண்டு
பிரபந்த தாத்பர்யமான ப்ராப்ய பிராப்பகங்களைச் சொல்லுகிறது

கூர் வேல் –நாராயணன் -அகாரார்த்தம்
பாரோர் புகழப் படித்தால் உகாரார்த்தம்-நமஸ் -அகண்ட நமஸ் அர்த்தமும்
நேரிழையீர் -மகாரார்த்தம்
ஆக திருமந்த்ரார்த்தமும்

குமரன்- இளம் சிங்கம்- நாராயணன் -பர ஸ்வரூபம்
நேரிழையீர் -ஜீவ ஸ்வரூபம்
படிந்து -தக்க நெறி
கூர் வேல் கொடும் தொழிலன்- ஊழ் வினை
வாழ் வினை பறை புருஷார்த்தம்
ஆக அர்த்த பஞ்சகமும் -சொல்லிற்று ஆயிற்று

பகவத் பரத்வத்தால் சொல்லிற்று ஆகிறது வேதார்த்தம் –
அதாவது சர்வ ஸமாச்ரயணீய ஸ்தலம் -என்றும்
அவ தீர்ணனாவான் அழகே ருசி ஜனகன் -என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே அவன் தன்னையே மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் உத்தேச்யம் என்றும்
ப்ராப்யமாகிறது அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமுமாய் -யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
தத் சாதனமும் அவன் திருவடிகளே என்னலாயிற்று-
ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம்-

————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading