ஸ்ரீ மத் வானமா மலை ஜீயர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ திருப்பாவை ஸ்வாப தேச வியாக்யானம் -ஸ்ரீ திரு நாம வைபவம்–

ஸூம்ய ஜமாத்ரு யோகீந்த்ர பாத ரேகாமயம் சதா
ததாயத் தாத்ம சத்தாதிம் ராமானுஜ முனிம் பஜே —

திருப்பாவை
முதலீட்டு அஞ்சு பட்டாலும்
ப்ரபந்ந நிஷ்ட க்ரமங்களையும்-
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது

மேல் பத்துப் பட்டாலும்
முற்பட்டவர்கள் பிற்பட்டவர்களை எழுப்பியது –
இத்தால்
பகவத் விஷயம் அபரிச்சின்னமாய் தனி அனுபவிக்க முடியாமையாலே
பெருக்காற்றிலே இழிவார் துணை தேடி இழியுமாயும்–
ஏக ஸ்வாது ந புஞ்ஜீத -என்று தனியே அனுபவிக்க மாட்டாத சாபல்யத்தாலும்
பகவத் அனுபவம் பண்ணுவார்க்கு ததீயர் எல்லீரும் வாரீர் என்கிறபடியே
துணை தேட்டமாய் இருக்கும் என்னும் இவ்வர்த்தத்தைக் காட்டிற்று –

பிரபத்தவ்யனுடைய திரு நாம ஸங்கீர்த்தனமே பிரபன்னனுக்கு கால க்ஷேபமாகையாலே
அந்த சங்கீர்த்தனத்துக்கு அதிகாரிகளானவர்களை கூட்டிக் கொள்ளும்படி சொல்லுகிறது
அது எங்கனே என்னில் –

இதில் முதல் பாட்டாலே –
புள்ளும் சிலம்பின் —
வெள்ளை விளி சங்கின் பேரரவம் –
அரி என்ற பேரரவம் –
பிள்ளாய் எழுந்திராய்
பரி ஸூ த்தராய் வ்ருத்த்யாபாசத்தை யுடையவர்களுடைய சப்த பிரமாணத்தை முன்னிட்டு
சத்வ குண நிஷ்டரை
சாத்விக சமாசார நிதர்சன பூர்வக பகவான் நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதராக்கும் படி சொல்லுகிறது

கிருஷ்ண அனுபவத்தில் புதியளாய் இருப்பாள் பெண்ணை எழுப்புகிறார்கள்

இத்தால்
பகவத் ஏக போக்யாரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜனராய்
இவ்விஷயத்தில் தேசிகர் இன்றிக்கே இருப்பாரை
அவர்கள் பக்கல் பரிவாலே தேசிகர் ஆக்குகை தங்களுக்கு க்ருத்யம் என்று இருக்கை
ஸ்ரீ வைஷ்ணத்வம் என்கிற ஸ்வபாவத்தைச் சொல்லிற்று –

———–

இரண்டாம் பாட்டில்
கலந்து பேசின பேச்சரவம்-
மத்தினால் ஓசைப்படுத்த – –
தயிர் அரவம் –
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் –
பேய்ப்பெண்ணே நாயகப் பெண் பிள்ளாய்
பகவத் அபிமத க்ரியா கலாபங்களாலே பகவத் போக்யமான வஸ்துவை விவேகித்து
தரிப்பார் படியைக் காட்டி
சத்வ பிரதானரை விரோதி நிரசன சமர்த்தனுடைய திரு நாம சங்கீர்த்தனத்திலே
ஸமாஹிதராக்கும் படி சொல்லுகிறது

கிருஷ்ண அனுபவத்தை தேசிகையாய் இவ்வனுபவத்தை விஸ்மரித்துக் கிடக்கிறாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள்

இத்தால்
பகவத் விஷயத்தில் ஞாதமான அர்த்தம் விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவாலே
போதயந்த பரஸ்பரம் என்கிறபடியே அறிவிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

————-

மூன்றாம் பாட்டில்
கீழ் வானம் வெள்ளென்று –
கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் –
மல்லரை மாட்டிய தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் –
சங்கீர்த்தனத்துக்கு அடுத்த சத்வ உத்தர காலத்தை முன்னிட்டு
சத்துக்களால் குதூஹலிக்கப்படும் விஷயரானவர்களை
சகல விரோதி நிவாகரனுடைய சங்கீர்த்தனத்திலே சங்கதராக்கி ஸமாஹிதராக்கும் படியைச் சொல்லுகிறது

கிருஷ்ணனால் கொண்டாடப் படும் ஏற்றமுடையவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் அனுபவத்தில் பிரத்யா சன்னராய் இருப்பார் இடத்தில் சாபேஷாராய் இருக்கையும் –
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைக் கிட்டுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் -என்கிறது

———–

நாலாம் பாட்டில்
சுற்றும் விளக்கு எரிய–
துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே —
மாமீர் அவளை எழுப்பீரோ —
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
ஞான தீப ப்ரகாசராய்
அத்தாலே
உத்துங்கமான பதத்திலே இருக்கும்படியான சம்பந்தம் உடையவர்களையும்
அவனுடைய சர்வ நாம சங்கீர்த்தனத்திலே சங்கதரானபடி சம்விதானம் பண்ணும் படி சொல்லுகிறது

————-

அஞ்சாம் பாட்டில்
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே –
பகவத் குண வித்தர் பாசுரம் கிடக்கையில் அபேக்ஷிக்கும் படி சொல்லுகிறது
கிருஷ்ணன் வந்த போது வருகிறான் என்று நிர்ப்பரையாய்க் கொண்டு கிடக்குமவளை எழுப்பிகிறார்கள் –
இத்தால்
தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று
பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை-பகவத் பிரேம அதிசயத்தால் தத் ஏக போகராய் இருக்குமவர்கள்
போகார்த்தமாக ப்ரேரிக்கை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிற அர்த்தம் சொல்லிற்று

————

ஆறாம் பாட்டில்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே –
புன மயிலே —
முகில் வண்ணன் பேர் பாட –
செல்வப் பெண்டாட்டி
அபிஜாதமும் ஆஹ்லாத கரமுமான திரு நாம சங்கீர்த்தனத்திலே அந்வயிப்பிக்கும்படி சொல்லுகிறது
பெண்கள் எல்லாம் கிருஷ்ணன் என்றால் படும் பாட்டை
அவன் தான் பட்டு -தண்ணீர் தண்ணீர் என்னும்படியாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
இத்தால்
ஞானீ த்வாதமைவ மே மதம் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று அவன் பக்ஷத்தில் இருப்பார் திறத்திலே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் என்னும் இவ்வர்த்தம் சொல்கிறது

————-

ஏழாம் பாட்டில்
நற் செல்வன் தங்காய் –
மனத்துக்கு இனியானைப் பாடவும்
பகவத் ப்ரத்யா சந்தரோடு ஆசத்தி யுடையாரையும் மநோபி ரமமான நாம சங்கீர்த்தனத்திலே
சமர்த்தராய் தத் யுக்தி பரராக்கும்படி சொல்லுகிறது
அபிஜாதையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

இத்தால்
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆசார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு உத்தேசியர் என்றும்
அவர்களடியாக பகவத் ஸமாச்ரயணீயம் பண்ணுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம் -என்கிறது –

————-

எட்டாம் பாட்டில்
கீர்த்திமை பாடிப் போய் –
போதரிக் கண்ணினாய் –
பாவாய் –
கள்ளம் தவிர்ந்து
பகவத் குண ஞான நிஷ்டரையும் இதிஹாச யுக்தமான குண நாம சங்கீர்த்த நத்திலே
பிரவணராக்கும்படி சொல்லுகிறது
நம் கண் அழகு உண்டானால் தானே வருகிறான் -என்று
அவயவ சோபையை மதித்துக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்
இத்தால்
பகவத் அனுபவ பரிகாரமாக ஞான வைராக்ய பக்திகளால் பூர்ணராய் இருக்குமவர் நிறத்திலும்
ததர்த்தமாக
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

————

ஒன்பதாம் பாட்டில்
செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின —
சங்கிடுவான் போதந்தார் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சவ்கந்த்ய சாரஸ்யா யுக்தர் விகாசத்தையும் –
சத்வோத்ரிகர் சமாராதான சம்விதான தத் பரராகிற படியையும் காட்டி
பரிபூர்ண ஞானரையும் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன தத் பரராக்கிச் சேர்த்துக் கொள்ளும் படி சொல்லுகிறது
எல்லார்க்கும் தானே நிரவாஹகையாய் –
எல்லாரையும் தானே எழுப்பக் கடவளாகச் சொல்லி விஸ்மரித்து
கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

இத்தால்
பகவத் விஷயத்தில் மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்னாக
பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –

————-

பத்தாம் பாட்டில்
எல்லே இளங்கிளியே —
பண்டே யுன் வாய் அறிதும் —
மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை மாயனைப் பாட
வாக் பாணிதி யுடையாரையும் ஸமஸ்த பிரதிபந்தக நிவர்த்தகமான சர்வேஸ்வர
நாம சங்கீர்த்தனத்திலே சஹகாரிகளாக்கிக் கொண்டபடியைச் சொல்கிறது
எல்லாருடைய திரட்சியும் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்

இத்தால்
ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம் அபிமதமாய் இருப்பவர்களைக் கண்டால்
அந்த சமூகமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் -என்கிறது —

ஏவம்வித சங்கீர்த்தனத்தாலே அவனுக்கு அறுதியாகையும்
அவனையும் எழுப்பி ஸ்வ அபேக்ஷித்ங்களை விண்ணப்பம் செய்து அடிமை செய்யும் படியையும்
அவன் அடிமை கொள்ளும் படியையும்
அவனுக்கு அறிவித்துத் தலைக் கட்டுகிறது
மற்று எல்லாம் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீமத் வானமா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading