ஸ்ரீ உபகார சங்க்ரஹம்- சில்லரை ரஹஸ்யம்–

சில்லறை ரகசியங்கள் -மூன்று வகை
1–அம்ருத ரஞ்சனி -17-ரகஸ்ய கிரந்தங்கள் –
2–அம்ருத அஸ்வதனி– 11–ரகஸ்ய கிரந்தங்கள்
3–தனி ரகசியங்கள் -8—ரகஸ்ய லிரந்தங்கள்
இவற்றுள் நான்கு கிரந்தங்கள் இப்பொழுது லுப்தம்
உபகார ஸங்க்ரஹம் இரண்டாவது வகையில் உள்ள ஏழாவது கிரந்தம் –

———————————-

பூர்வ உபகார பரம்பர அதிகாரம் –அஞ்ஞான ஸூஹ்ருதங்கள் / சிஷா ரூபம் /
உசித சேஷ வ்ருத்தி அபேக்ஷை / கருணாதீன -27- உபகாரங்கள்
சாதன அதிகாரம் –பக்தி பிரபக்திகளும் அவற்றின் அங்கங்களும்
நிர்யாண அதிகாரம் –பொய்ந்நின்ற ஞான பாசுர விளக்கம்

அந்தமிலாப் பேரின்பம் அருந்த ஏற்கும் அடியோமை அறிவுடனே என்றும் காத்து
முந்தை வினை நிரை வழியில் ஒழுகாது எம்மை முன்னிலையாம் தேசிகர் தம் முன்னே சேர்த்து
மந்திரமும் மந்திரத்தின் வழியும் காட்டி வழிப் படுத்தி வான் ஏற்றி அடிமை கொள்ள
தந்தை என நின்ற தனித் திருமால் தாளில் தலை வைத்தோம் சடகோபன் அருளினாலே-

பரம ஹிதத்தின் விளக்கம் –

சர்வாத்மாக்களுக்கும் சர்வவித பந்துவான சர்வேஸ்வரனுடைய சாசன ரூபமாய்க் கொண்டு ப்ரவர்த்தமாய்-
சாஸ்திரம் ஹி வத்சல தரம் மாதா பித்ரு சஹஸ்ரத-என்னும்படி
சர்வருக்கும் சர்வ தேசத்திலும் சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தையிலும்
சர்வ அஹித நிவ்ருத்தியையும் -சர்வ ஹித ப்ரவ்ருத்தியையும் -உண்டாக்குகைக்குத் திரு முகமாய் நின்ற சாஸ்த்ரத்திலே-
பிரதானமான உபநிஷத் பாகத்திலே-
சம் யங் நியாய -அநு க்ருஹீத -சதாசார்ய உபதேசத்தாலே-
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணம் நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவருக்கு உரியேனோ -இத்யாதிகள் படியே
சம்சயாதி ரஹிதமான சத் அசத் விவேகம் பிறந்து அது அடியாக
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -இத்யாதிகளில் சொன்ன தீவிரமான சம்சார நிர்வேதமும்
ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லா சிற்றின்பம் –ஒழிந்தேன் என்னும்படி -சர்வ சுகாந்தர விரக்தியும்
துரந்தமாய் துர் நிவாரமான துஷ் க்ருத பல ப்ரவாகத்தைப் பற்ற -மாற்றமுள– இத்யாதிகளில் படியே
மற்றொரு ப்ரவ்ருத்தி பண்ண ஒட்டாத மஹா பீதியும் பிறந்த அதிகாரிக்கு மேல் செய்ய அடுத்து என் என்னில்

நியாஸ விம்சதி முதல் ஸ்லோகத்தில் சதாசார்யருக்கு வேண்டிய -14-குணங்களை விவரிக்கிறார்
சித்தம் சத் சம்பிரதாயத்தில் நிலை நிற்றல் / ஸ்திர இதயம் / அந கம் / ஸ்ரோத்ரியம் / ப்ரஹ்ம நிஷ்டம் / சத்வஸ்தம் / சத்ய வாசம் /
சமய நியதய சாது வ்ருத்ய ஸமேதம் / டம்ப அஸூயாதி முக்தம் / ஜித விஷய ஞானம் / தீர்க்க பந்தும் / தயாளும் /
சிக்ஷித்து சாஸ்திரம் படி பிரவர்த்திப்பித்தும் / ஸ்வ பர ஹித பரம் /

போன நீருக்கு அணை கோலாதே
வேண்டாத நீரைத் தேக்கவும் பாராதே
விளை நிலத்துக்கு அபேக்ஷிதமான நீரை விரகால் தேக்கிக் கொள்ளுமவர்களைப் போலே
தனக்கு ஸ்வரூப அனுரூபமான சரண வசீகரண விசேஷத்தை நிஷ்கர்ஷித்து
சரண்யனுடைய ஆபீமுக்ய விசேஷ ஹேதுவாக அவன் தானே முன்பு செய்த உபகார பரம்பரையை
முகப் பச்சையாக்கி
மேல் செய்ய வேண்டும் உபகார பரம்பரையை ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களை முன்னிட்டுக் கொண்டு அபேக்ஷிக்குமது பரம ஹிதம்

நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ -ந மேதயா – ந பஹு நா ஸ்ருதேந -யமைவைஷ வ்ருணுதே
தேந லப்யா தஸ்யைஷ ஆத்மா வ்ருணுதே தநூம் ஸ்வாம்

———————–

ஜீவனுக்கு எம்பெருமான் அநாதி காலமாகச் செய்யும் நான்கு அடிப்படை உபகாரகங்கள்

சர்வேஸ்வரன் நமக்கு முன்பு செய்த உபகார பரம்பரை எது -மேல் அபேக்ஷிக்கும் படி உபகார பரம்பரை எது என்னில்
1–இச்சாத ஏவ தவ விஷ்வா பதார்த்த சத்தா நித்யம் பிரியாஸ் தவ து கேச ந தே ஹி நித்யா
நித்யம் த்வ தேக பரதந்த்ர நிஜ ஸ்வ ரூப பாவத்க மங்களா குண ஹி நிதர்சனம் ந –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36–என்கிறபடியே –
சர்வ வஸ்துக்களுடையவும் -ஸ்வரூப ஸ்வ பாவ –ப்ரவ்ருத்தி -பலன்கள் –
தான் இட்ட வழக்காம் படி நிற்கிற சர்வேஸ்வரன் தன் உதார குண அதிசயத்தாலே
மேல் நமக்குத் தருகைக்குத் தானே சங்கல்பித்து வைத்த
நித்ய நிர்தோஷ நிரதிசய மஹா ஆனந்த அனுபவத்துக்கு ஆஸ்ரயமான அஹம் அர்த்தத்தை அந்யதா கரிக்க வல்லவனாய் இருக்க
நித்ய இச்சையால் அந்யதா கரியாதே -இது நித்தியமாகக் கடவது -என்று நிலை நிறுத்தி வைத்து
ஸ்வரூப சத்தா ரக்ஷண ரூபமான நித்ய சித்த உபகாரம் –

2– -இந்த ப்ரத்யக் ஆத்ம ஸ்வரூபத்துக்கு பரம புருஷார்த்த அனுபவ ரூபமாயும் —
தத் விரோதி நிவர்த்தன -வ்யாஜ ரூபமாயும் பரிணமிக்கக் கடவ தர்ம பூத ஞானத்தை மாற்றாதே
நித்ய இச்சையால் இத்தை அஹம் அர்த்தத்துக்கு நித்ய தர்மமாக்கி வைத்தது ஸ்வ பாவ ரக்ஷண ரூபமான நித்ய உபகாரம் –

3–இப்படி நின்றால் அநாதியான-அவித்யாதி -கர்மாதி -சக்ர-பரிவ்ருத்தியாலே பரிப்ராமித்து
அநுசித போகங்களிலே ஆழங்கால் பட்டு -ஆஞ்ஞா அதி லங்கந ருசியாய் அசமஞ்சன் படியே அனர்த்த ஹேதுக்களை அனுஷ்ட்டித்து
சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் அரு நகரத்து அழுந்தும் பயன் படைத்தேன் –
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீ வினைகள் தீர்ந்தேன் நின்னடைந்தேன் திரு விண்ணகரானே –பெரிய திருமொழி –
என்கிறபடியே அதி கோரங்களான நரகங்களில் விழுந்து அழுஞ்சிறையிலே கிடக்குமவனுக்கு
நாய்களோடு ஓக்க நடுவே சில தீனி இடுமா போலே -நரக -துல்யங்களாய் வருகிற -ஸ்வர்க்காது விஷ மதுக்களை புஜித்தும்
நித்ய நைமித்திக -பிராகிருத -பிரளயங்களில் படியே மூர்ச்சித்த சிறையின் படியாய் அநாதி காலம் மூச்சடக்கிக் கிடந்தும்
இவற்றில் அநுதாபாதி களும் அற்றுப் போந்த நம்மைப் பற்ற -அவ்யாஜ கிருபையால் அவசர பிரதீஷானாய் நின்றதும் –

4–இப்படி நின்றால் அபராத ப்ரவாஹத்தில் விலக்கற்று-விலக்குவாரையும் விலக்கிப் போகும் நம்மை சர்வ சமனாய்
கர்ம அனுரூப -பல பிரதனாய்க் கொண்டு
ஸ்வச் சந்த -லீலா ப்ரவ்ருத்தனான தானே விலக்கி விளையாடுகைக்கு அஞ்ஞாத ஸூ ஹ்ருதாதிகள் என்று
சில அல்ப வியாஜ்யங்களை அந்நிய பல ஹேதுக்கள் இல்லாதபடி அமோகங்களாக சங்கல்ப்பித்ததுவும்
ஸ்வ இச்சா மாத்ர அநு பந்திகளுமாய் அநாதிகளுமான உபகாரங்கள்

இவை நாலும்–ஞான ஸ்வரூபமும் –தர்ம பூத ஞான ஸ்வ பாவமும் -அவசர ப்ரதீஷனாக நின்றும் —
அஞ்ஞான ஸூ ஹ்ருதங்களை செய்வித்தும் — மேலுள்ள உபகார நிலங்களுக்கு எல்லாம் அதிஷ்டானங்களாய் நிற்கின்றன –

——————–

இந் நினைவு உண்டானாலும் -தவிர்த்தாலும் -தனக்கு ஒரு சேதம் அற்று இருக்க -ஓர் அவசரத்தில் நமக்கு
அஞ்ஞாத ஸூ ஹ்ருதிகளை உண்டாக்கின இது மோக்ஷ உபாய உக்தங்களான உபகாரகங்களில் பிரதம உபகாரம்

முற்பட முக்தரானவர்களைப் பார்த்து
விதமஸி பத்தே லஷ்மீ காந்தம் விசித்திர விபூதிகம் -ச சிவா-கமித சம்பத்யா விர்பவத் ஸஹ ஜாக்ருதி
ஸ்புட தத ப்ருதக் சித்தி சித்த்யத் குணாஷ்டக-தத் பலோ பஜதி பரமம் சாம்யம் போகே நிவ்ருத்தி கதோஜ்ஜிதம் —

ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று -அஷ்ட குண சாம்யம் பெறுவான்-

மோக்ஷ ப்ரதனை பற்ற இன்னாதாகாதே
அதோ அதோ தர்சநே கஸ்ய மஹிமா நோப ஜாயதே -என்கிற நியாயத்தாலே பிற்பட்ட இருக்கிறவர்களைப் பார்த்து
அவர்களுக்கு முன்னே நம்மை அங்கீ கரிக்கும் படிக்கு உகந்து
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள் -தன் முடிவு ஓன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை –சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே -2–5–8-என்கிறபடியே
என்று அறிந்து உசித மோக்ஷ விருத்தியை அபேக்ஷிக்குமது
நிபுண க்ருத்யம்
இப்பிரகாரம் இன்று என்னைப் பொருளாக்கி –உற்றேன் உகந்து பணி செய்து -இத்யாதிகளிலும் அபிப்ரேதம்

———————–

அவசர அநு குண -சர்வ கார்ய கர்த்தாவான -ஈஸ்வரன் பண்ணுகிற காதா சித்க உபகார ஆரம்பத்திலே
இன்று என்னை பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் –
அன்று என்னை புறம் போகப் புணர்த்தது என் செய்வான் -என்கிற விசாரத்தை வைத்து
சர்வ தந்த்ர ஸித்தமான அநாதி சாமக்ரீ ப்ரவாஹ விசேஷ வைசித்ரிக்கு அநு குணமாக அல்லாத
போக வியவஸ்தாதிகள் போலே இங்கும்
கார்ய தர்சனத்தாலே ஒரு வியவஸ்தாபகம் உண்டு என்று பொதுவில் புத்தி பண்ணி
விடுவேனோ என் விளக்கை என்னாவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடவே செய்து இலை வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரானையே –என்கிறபடியே
இக்கால விசேஷத்திலே அவனுடைய உபகாரத்துவமே அநு சந்தேயம்

ஈஸ்வரன் கீழும் மேலும் பண்ணும் தண்ட விசேஷங்கள் எல்லாம் -சிஷா விசேஷ ரூபங்களான உபகாரங்களாம்
இவற்றால் ஒருவனுக்கு அப்போது புரிதல் இன்றிக்கே ஒழிந்தாலும்
புருஷாந்தரத்துக்கும் அவன் தனக்கும் தெளிவு வருவது ஒரு காலத்திலும் சிஷையாய்த் தலைக் கட்டும்

———————————

உபகார பரம்பரைகள் மோக்ஷ பர்யந்தம் -27-

1–அஞ்ஞான ஸூ ஹ்ருதாதிகளுக்கு ப்ரசன்னனாய் -ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு யா புத்தி பாவிதா புரா-இத்யாதிகள் படியே –
விபரீத -வாச நா -தார்டயத்தாலே உபதேச நைரர்தக்யம் பிறவாதபடி
யம் து கர்மணி யஸ்மின் ச ந்யா யுங்க்த ப்ரதமம் பிரபு -ச ததேவ ஸ்வயம் பேஜே ஸ்ருஜ்யமானா பு ந பு ந -மனு ஸ்ம்ருதி –1–28-
இத்யாதிகள் படியே விசேஷித்து நம்மை ஸூக் ருத-வாச நா -ப்ரவாஹ ஹேதுவான சாத்விக ஸ்ருஷ்டியிலே கூட்டினதுவும்

2–அடியிலே வேதங்களை பிரவர்த்திப்பித்ததுவும்

3–இவற்றுக்கு பரிகரங்களான சாஸ்திரங்களை ஸ்வ முகத்தாலும் ரிஷி முகங்களாலும் உண்டாக்கினதுவும்
சந்தஸ் கல்பம் சிஷா நிருக்தம் ஜ்யோதிஷம் வியாகரணம் போன்ற ஆறு அங்கங்களையும் –
மஹா பாராதர ஸ்ரீ இராமாயண இதிகாசங்களையும்
விஷ்ணு நாரதீய பாகவத கருட பத்ம வராஹ சாத்விக ஆறு புராணங்களையும்
ப்ரஹ்மாண்ட ப்ரஹனவைவர்த்த மார்க்கண்டேய பவிஷ்ய வாமன ப்ரஹ்ம -ஆறு ராஜஸ புராணங்களையும்
மத்ஸ்ய கூர்ம லிங்க சிவ ஸ்கந்த அக்னி போன்ற ஆறு தாமச புராணங்களையும்
மேலே -18-உப புராணங்களும் உண்டே
சர்க்கம் ப்ரதிஸர்க்கம் வம்சம் மன்வந்த்ரம் வம்ச அநு சரிதங்கள் உள்ளவையே புராணங்கள் –
இவற்றில் ரஷகம் பிரளயம் ஹேது வ்ருத்தி அபாஸ்ரே
தர்ம சாஸ்திரங்கள் -ஆபஸ்தம்ப –ஒளஷன்ஸா–போதாயன -கௌதம -ஹாரீத -ஹரண்யகேசி -வைகானச -வசிஷ்ட -விஷ்ணு
ஸ்ம்ருதிகள் -அங்கிரஸ-அத்ரி -பிரஹஸ்பதி -பிராத பராசர -தக்ஷ -தேவால்-கோபில -காத்யாயன –
மனு -நாரத -பராசர -சம்வர்த்த -வியாச -யஜ்ஜ்வல்க -எம
பாஞ்சராத்ர ஆகமங்கள் –

4–ப்ரவர்த்தக பரம்பரையை ஸ்ருஷ்டித்ததுவும் –
தத் விஞ்ஞான அர்த்தம் ச குரும் ஏவபி கச்சேத் / ஆசார்யன் புருஷ வேதா /

5–சாத்விக வ்ருத்த வியாமோஹன அர்த்தமாக -நின் மாட்டாய மலர் புரையும் திரு உருவம்
மனம் வைக்க மாட்டாத பல சமய மதி கொடுத்தாய்
என்கிறபடியே அந்நிய சாஸ்திரங்களைச் ஸ்ருஷ்டிக்கச் செய்தே த்ரை தண்ட தாரிண பூர்வம் விஷ்ணுநா ரஷிதா த்ரயே –
என்கிறபடியே வேத ரக்ஷை பண்ணினதுவும்

6—ஆழ்வார்களும் ஆச்சார்யர்களையும் கொண்டு -வேத தத்வார்த்தம் பிரகாசனம் பண்ணினதுவும்

7—இப்படி ப்ரவர்த்தமான சாஸ்திரத்தில் ப்ரதிபாதிதமான தர்மத்தினுடைய சம்யக் ஸ்தாபன அர்த்தமாக –
சம்பவாமி யுகே யுகே என்கிறபடி அவதரித்ததுவும்

8—வடிவு அழகாலும் சீலத்தாலும் வசீகரிக்குமதுவும்

———————————-

சாதனா அதிகாரம்

இப்படி சேதனனை உபாய விசேஷ அனுஷ்டானத்திலே ஒருப்படுத்தி
நோய் எல்லாம் பெய்ததோர் ஆக்கையைச் சுமந்து கொண்டு இருக்கிற இவனுக்கு
ஸ்திதே மனசே சுச்வஸ்தே சரீரே சதி யோ நர தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபம் ச மாம் ஜம்
ததஸ்தம் ம்ரியமானம் து காஷ்ட பாஷாண ஸந்நிபம் அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயம்மி பரமாம் காதிம் – -இத்யாதிகளில் படியே
சரீர மனசா ஆகந்துக ஸஹஜங்களான சதுர்வித வியாதிகளாலும் கலக்கம் வராதபடி
அஸ்து தே ததைவ சர்வம் சம்பத்சயதே – என்னும் அனுக்ரஹ விசேஷத்தாலே
தாது சாம்யே சரீர ஸ்வஸ்தயங்களையும் மனஸ் ஸ்தைர்யத்தையும் பிறப்பிக்குமதுவும்

2–மனஸ் ஏகாக்ரமான அளவிலே இவனுக்கு அங்க பஞ்சக சம்பன்னமான ஆத்ம ரஷா பர சமர்பணத்தை உண்டாக்குமதுவும்
ஆனு கூல்ய சங்கல்பம் -பிரதி கூல்ய வர்ஜன்யம் -கார்ப்பண்யம் -மஹா விசுவாசம் -கோப்த்ருத்வ வரணம்

3–இதற்கு அகிஞ்சன்ய அடியான கைம்முதல் இல்லாதாரை
ஆபிரயாண அனுவர்த்த நீயமாய் அந்திம ப்ரத்யயமான உபாயாந்தரத்திலே மூட்டுமதுவும்

4–இதற்கு வரும் அந்தராயங்களை விலக்குமதுவும்

5—தாதாமி புத்தி யோகம் தம் யேன மாம் உபாயந்திதே என்கிறபடியே பிரபத்திக்கு விவதானம் இல்லாத
பரமபக்தி தசை உண்டாக்குமதுவும் –
சித்த உபாய பூதனான சரண்யனுடைய ஸ்வ பிரசாத சம்பாதன ரூபமான சாத்திய உபாய உபகாரம்

6-இது பூர்வ உபகார பரம்பரையில் பிரதிபுத்தனான முமுஷுவுக்கு பிரதம அபேக்ஷணீயம்-இவ் வபேஷை உபாய பிரார்த்தனையாம்

இவ் உபாயத்திற்கு முமுஷுத்வம் அதிகாரம் ஆகையால்-பாரமார்த்திகி என்கிற சூரணையிலே சொன்ன பல பர்வங்களும்
சாரீரிக சாஸ்திரத்தில் உத்தராக பூர்வாக அஸ்லேஷ விநாசங்கள் முதலாக அநாவ்ருத்தி சப்தாத் என்கிறது அறுதியாகச் சொன்ன
அர்த்தங்கள் எல்லாம் உபாய ஸாத்ய பலமாகத் தெரிந்தவனுக்கு
இப்பலத்தை அபேக்ஷித்திக் கொண்டு உபாய அனுஷ்டானம் ஆகையால்
இவ்வபேஷை பல காமன மாத்ர ரூபையாய்க் கொண்டு அதிகார தசையிலும் பல பிரார்த்தனா ரூபையாய்க் கொண்டு
உபாய அனுஷ்டான தசையிலும்
அனுஷ்டித்த உபாயனுக்கு சமீபம் ராஜ சிம்ஹஸ்ய -இத்யாதிகளில் படியே த்வ்ரவன்வித விசுவாச ரூபையாய்க் கொண்டு
உத்தர க்ருத்ய திசையிலும் அனுவர்த்திக்கக் கடவது

வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது / நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டும் /
சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை என் நினைந்து போக்குவார் இப்போது /

7–இப்படி நின்றவனுக்கு சர்வேஸ்வரன் செய்யும் உபகாரங்கள் ஆவன –

1–உபாய அதிகம காலத்திலே பிராரப்த கர்மா வ்யதிரிக்தங்களான பூர்வ கர்மங்களில் உபாய விபாதிகளுக்கு
அனுகூலம் அல்லாத ஸூ ஹ்ருதங்கள் இவனுக்கு பலம் கொடுக்கக் கடவன அல்ல என்று சங்கல்பிக்கையும்

2-இப்படியே உத்தரங்களான ஸூ ஹ்ருதங்களில் வித்யா அனுபகாரங்களையும்
பிராமாதிக பாபங்களையும் பல உத்பாதகங்கள் இல்லாதபடி பண்ணுகையும் –

3–பிராமாதிகம் அல்லாதவற்றுக்கு பிராயாச்சித்த சிஷாவிசேஷ உபகிலேசங்களாலே யதா அதிகாரம் பரிகாரம் பண்ணுமதுவும்

4–ஸ்வ தந்த்ர பிரபன்ன நிஷ்டனுக்கு அபேஷா அனுகுணமாக ப்ராரப்தயையும் அப்போதே நிஸ்சேஷமாக வாதல்
சரீராரந்தராதி ஹேதுக்களான அம்சங்களை யாதல்
உத்தர க்ருத்யா ரூப சாஸ்த்ரரீய கைங்கர்ய விசேஷத்திற்கு விரோதிகளை யாதல் கழித்துக் கொடுக்குமதுவும்

5—கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள் செய்யும் -இத்யாதிகள் படியே கைங்கர்ய பரனுக்கு
கால உசித பய ஸ்தானங்களால் கலக்கம் வராதபடி பண்ணுமதுவும்

6–உபாயமாக வாதல் பலமாக வாதல் அனுஷ்டிக்கிற கைங்கர்யங்களை இட்டபடி கல்படையாக்கி
சங்கல்பதேவ பகவான் இத்யாதிகளில் படியே பல மநோ ரத பூர்த்தியை உண்டாக்குமதுவும்
இங்கு இருந்த நாள் பண்ணும் உபகாரகங்கள்

—————————-

இப்படி இருந்த முமுஷுவுக்கு –

1-ரசஸ்தா அப்ராசஸ்தா தேச கால நிமித்த நியமம் இல்லாதபடி சங்கல்பித்ததுவும்

2-யம் யோகிநா பிராண விநியோக காலே யத்நேந சித்தே விநிவே சயந்தே -என்கிறபடியே
பக்தி யோக நிஷ்டனுக்கு ஸ்வ யத்ன ஸாத்ய அந்திம ப்ரத்யய விசேஷத்தைத் தலைக் கட்டிக் கொடுக்குமதுவும்

3–நிஸ்சேஷ பர ந்யாஸம் பண்ணி சாதக வ்ருத்தி யானவனுக்கு அபேக்ஷ அனுகுணமாக
சரீர பேத ஸமயே து கேவலம் மதீய யைவ தயாயே அதி ப்ரபுத்தே-
இத்யாதிகளில் படியே தன் கிருபா மாத்திரத்தாலே ஸ்வ விஷய அந்திம ப்ரத்யயத்தைப் பிறப்பிக்குமதுவும்
வாழும் வகை அறிந்தேன் –எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று / அவனே கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர்

4-ததஸ்தம் ம்ரியமானாம் து காஷ்ட பாஷாண ஸந்நிபம் –என்னும்படி இவன் கிடைக்கும் அளவிலும்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்–என்றும்
தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
அன்று இவ்வையகம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மகரக் குழைக் காதனை மைந்தனை மதிள் கோவில் இடை கழி ஆயனை
அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே –பெரிய திருமொழி -7–3- -2 -என்றும் சொல்லுகிறபடியே
இவனைக் கடாக்ஷித்து அருளி ஜுகுப்ஸை பண்ணாதே இவன் பக்கல் ஸ்ருதி சொன்ன ரதி யுடையனாமதுவும்
இப்படி இந்திரிய பிராண பூத ஸூஷ்ம சம்யுக்தனான ஜீவனை நிசர்க ஸுஹார்த்தம் உடைய ஹார்த்தனான தன் பக்கலிலே இளைப்பாற்றி
இப்படி ஸ்தூல சரீரத்தின் நின்றும் வித்வத் அவித்வத் சாதாரணமான உதக்ராந்தி க்ரமத்தை நடத்தி -நிர்ணய அதிகாரம் –

5-ஸ்வர்க்க நரகாதிகளுக்குப போகும் நாடி விசேஷங்களில் பிரவேசிப்பியாதே -ஒருவன் அடியேன் உள்ளான் என்னும்படியே
ஹார்த்த ரூபத்தாலே இடம் பார்த்து எடுக்க நினைக்கிற தனக்கும் -பர ரூபத்தாலே மீளா அடிமைப பணி கொள்ள இருக்கிற தனக்கும்
செவ்விதான சேம வழிக்கு முகமான ப்ரஹ்ம நாடி முகத்திலே பிரவேசிப்பிக்குமதுவும்

6–சேற்றிலே விழுந்த சிறு மக்களை பிதா அழுக்குடனே எடுத்துக் கொண்டு கரை ஏறுமா போலே
ஸூஷ்ம சரீரத்தோடு ஸ்தூல சரீரத்தில் நின்றும் கொண்டு புறப்படுமதுவும்

இவை முமுஷுக்கு உதக்ரமான காலத்தில் செய்யும் உபகாரங்கள் –

———————————————-

1-இப்படி நல் வழிப படுத்துகைக்கு ஒருப்பட்ட தான்–பால கிரீட விசேஷத்தாலே வழி தப்பிப் போன குமாரனை
ஆரண்ய பிரதேசத்தில் நின்றும் மீட்டு அஸ்தான விசேஷத்து அளவும் ஸூ ப்ரீதனாய்க் கொண்டு நடத்துகிற ஸார்வ பவ்மன்
தன் ச மந்தரானவர்கள் எல்லாரும் இக்குமாரனை சத்கரிக்கும் படி பண்ணுமா போலே தனக்கு அந்தரங்கர்களான
அர்ச்சிராதி புருஷர்களை இட்டு தம் தாம் எல்லைகள் தோறும் இவனை எதிர்கொண்டு உபசரிக்கும்படி பண்ணுமதுவும்

2-அப்படி -அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே -என்கிறபடியே ஆதி வாஹிகரைக் கொண்டு
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயந்த முடிவில் பெரும் பாழைக் கடத்துமதுவும்

3-விரஜை என்கிற அம்ருத நதியைக் கிட்டித்து ஆகாரத்தில் நின்றும் எடுத்த ரத்னத்தின் அழுக்கு கழற்றுமா போலே
ஆத்மாவை அனுபந்தித்திக் கொண்டு கிடக்கிற ஸூஷ்ம அசித்தைக் கழித்து ஒளிக் கொண்ட சோதி என்னும்படி பண்ணுவதும்
இப்பால் உள்ள உபகாரங்கள்

—————————–

1-அக்கரையில் -திவ்ய லோக -திவ்ய ஜனபத -திவ்ய நகர -திவ்ய விமான –திவ்ய ஆஸ்தான -திவ்ய பர்யங்க -பிராப்தி பர்யந்தமாக
பரியங்க வித்யைகளிலும் -சாகாத்யான ஐயாக்ய சம்ஹிதைகளிலும் -சூழ் விசும்பு அணி முகிலிலும் -சொல்லுகிற
ஸத்கார பரம்பரைகளை உண்டாக்குமதுவும்

2-தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ் கொள்ளுமதுவும் –

3-இருள் அகற்றும் எரி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள் கொள்ளுமதுவும்

4-ஆத்ம அபகாரிக்குள்ளே இருந்து -அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று மநோ ரதித்த இவனை
ச வியாச இவ யே நித்ய நிர்தோஷ கந்த -என்னும்படி நிற்கிற மேலாத் தேவரானவர்கள் –
நித்ய அபிவாஞ்சித பரஸ்பர நீச பாவைக -என்கிற நியாயத்தாலே தங்களுக்கு மேலாக ஆதரிக்கும்படி பண்ணுமதுவும்

5-உள்ள உலகு அளவும் யானும் உளனாவன்-என்று பாவித்தவனை அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனைத் தினைத்தனையும் விடாதபடி
ஆதி உண்டாகிலும் அந்தம் இல்லா பரிபூர்ண அனுபவத்தை கொடுக்குமதுவும்

6-இவ்வனுபவ பரிவாகமான அபிமத ரூபங்களான அசேஷ சேஷ வ்ருத்தி விசேஷங்களையும் கொள்ளுமதுவும்

7-இவனுக்கு வந்த அதிசயமும் தன் பேறாக நினைத்து இருக்கும் படி சர்வ சேஷியான தனக்கு இவை எல்லாவற்றாலும் வந்த
சந்தோஷத்தைக் கண்டு இவன் க்ருதார்த்தனமாம் படி பண்ணுமதுவும்

8-கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ என்று இருந்த இவனைப்
பிணை கொடுக்கிலும் போக ஒட்டாதே இருந்த நிரதிசய ஆனந்த அனுபவ பரிவாஹம் நித்யமாம்படி நடத்துமதுவும் —

எல்லா முனிவும் தீர்ந்து சிறைக் கூடத்தில் நின்றும் புறப்பட விட்ட ராஜ குமாரனுக்கு
ஸ்திரமான யுவராஜ்யம் கொடுக்குமா போலே இருக்கிற பிரதான உபகார வர்க்கம் –

——————————————

இப்படி நம்முடைய அபேஷா நிரபேஷ முகமாகத் தன்னுடைய புத்தி அதீனமான சஹகாரி விசேஷ ஸஹித சம்பந்த குண விசேஷங்களாலே
முன்பு சர்வேஸ்வரன் பண்ணின உபகார பரம்பரைகளை முன்னிட்டுக் கொண்டு
மேல் தேச கால பரிச்சேதம் இல்லாத திவ்ய கைங்கர்யம் பர்யந்தமாக அபேக்ஷிக்கை முமுஷுவுக்கு பிராப்தம் ஆகையால்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான திருமாலால் மயர்வற மதிநலம் பெறும்படி அருளப்பட்ட நம்மாழ்வார்
தம்முடைய அனுபவ பரிவாஹங்களான பிரபந்தங்கள் நாலில் முதல் பிரபந்தமாய் இவர் தம் வ்ருத்தாந்தங்களை முன்னிடுகையாலே
திருவிருத்தம் என்ற பேர் பெற்ற பிரபந்தத்தில் முதல் பாட்டில் பூர்வ உபகார ஸ்ம்ருதியை முன்னிட்டுக் கொண்டு
உத்தர உபகார அபேக்ஷையிலே உபக்ரமிக்கிறார் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாவது
சம்சார மூலமான பிராந்தி ஞானமும் –
அது அடியாக வந்த பிரதிகூல அனுஷ்டானமும் –
அது அடியாக வந்த ரஜஸ் தமஸ் பிரசுரமான பிராகிருத தேகமும் –
இவை மற்றும் உள்ள ஹேயங்களுக்கு எல்லாம் உப லக்ஷணம் -இங்கே அநுக்த சமுச்சயமும் கொள்ளவுமாம் –

பொய் நின்ற ஞானம் என்றது –
நஸ்வரம் ஆகையால் பொய் என்னலாம் படி நிற்கிற அபோக்யமான விஷயத்தில் கரணயாதமை பிறக்கிற போக்யதா புத்தி ஆகவுமாம்
அநாதி காலம் பரம புருஷார்த்தத்தை இழந்து சம்சாரத்தில் அகப்பட்டுக் கிடந்த இதில் அநு தாபம் தோற்றும் படி
இந்நின்ற நீர்மை –
இப்படி நின்ற பிரகாரத்தை
இனி யாம் உறாமை
சர்வ லோக சரண்யனாய் -சரணாகத வத்சலனான உன் திறத்தில்
பிரதி புத்தரான நாங்கள் இதற்கு மேல் இப்பிரதிகூல பரம்பரைகளை அடையாதபடி
யாம் -என்கிற
இது -பரித்ராணாயா சாதூனாம் -என்கிற சாது பஹுத்வத்தைக் காட்டுகிறது
பசு மனுஷ்யா பஷி வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரய -இத்யாதிகள் படியே சம்பந்திகளையும் கூடக் காட்டுகிறதாகவுமாம்
உயிர் அளிப்பான் –
உனக்கு அநந்யார்ஹ சேஷமாய் வைத்து -அசத் கல்பமாய்க் கிடந்த ஆத்ம ஸ்வரூபத்தை –
தாச பூதோஹம் -என்கிறபடியை நித்தியமாக அனுபவிக்கப பண்ணுவான்
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய்
தேவ திரியக் மனுஷ்ய ஸ்தாவரங்கள் -என்கிற எல்லா பிரகாரத்தாலும் பிராமண சித்தங்களாய் நின்ற பூத ஜாதகங்கள் நாலிலும்
பிறப்பிலியாய் பல் பிறவிப பெரு மாயன் –
அவற்றோடு சஜாதீயன் என்னலாம் படி ஸ்ரீ ஜென்ம ரகஸ்யத்தின் படியே
சத்தியமாய் –
ஞான சங்கோசாதி தோஷ பிரசங்க ரஹிதமுமாய்
நித்ய நிர்தோஷ சுத்த சத்வமய திவ்ய மங்கள விக்ரக பரிணாம ஆத்மகமுமாய்
ஸ்வ இச்சா மாந்தரை ஹேதுகமாய்
கர்ம க்ருத கால நியம ரஹிதமாய்
சாது பரித்ராணாதி மாத்ர ப்ரயோஜனமாய்
வ்யூஹ வ்யூஹாந்தர-விபவ -விபவாந்தர -ரூபமாயுள்ள அவதார வர்க்கத்தாலே
நிலை வரம்பில் பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -என்னும்படி பிறந்தாய் –
இமையோர் தலைவா –
சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே -கர்ம வசத்தால் நாங்கள் இழந்து கிடக்க
நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணும்படி சர்வ சமனான சர்வ ஸ்வாமி யானவனே –
மெய் நின்று கேட்டு அருளாய் –
மெய் –
இப்படி ரஷ்ய யோக்யனான என்னுடைய படிகளும்
ரக்ஷண உன்முகனான உன்னுடைய படிகளும்
பிராமண சித்தர்கள் அன்றோ –
அவற்றில் ஓன்று அப்ரமாணங்கள் ஆகில் அன்றோ உனக்குக் கண் அழிவு சொல்லலாவது என்று தாத்பர்யம்
உன்னுடைய திவ்ய மங்கள விகிரஹத்துடன் சேவை சாதித்து அருள வேணும் என்றுமாம் –
திரௌபதிக்கு வராமல் புடவை சுரந்தது போலே ஆகாதே
நின்று கேட்டு அருளாய்
அவா அறச் சூழ்ந்தாய் -என்னும்படி நான் அவா அற்று வீடு பெறும் அளவும் அந்நிய பரனாகாதே
அபி முகனாய்க் கொண்டு கேட்டு அருளாய்
மெய் நின்று என்னவுமாம்
அப்போது நீ அவதரித்தது எல்லாம் ச பிரயோஜனமாம் படி உன் அவதார விக்ரகத்தோடே
ஒரு நாள் காண வாராய் -என்று இருக்கிற எனக்கு பிரகாசித்து நின்று என்கிறது
அங்கன் இன்றிக்கே
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் என்னும்படி என் அழுக்கு உடம்புக்குள்ளே ஜூகுப்ஸை பண்ணாதே
அணியனாய் நின்று என்னவுமாம் –
கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே-
நீ மயர்வற மதிநலம் அருளுகையாலே
நிருபாதிக தாஸ்யத்தில் நித்ய ப்ரதிஷ்டித புத்தியான நான்
என்னாலே உன்னை இன் கவி பாட ஒருப்பட்ட -என்நாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் —
என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே –
அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை –
நிரபேஷ ஸ்வ தந்த்ரனான உன்னாலே பிரேரிதனாய்க் கொண்டு பண்ணுகிற விஞ்ஞாபன கைங்கர்யங்கள் ஆகிற
நாலு பிரபந்தங்களையும் திருச் செவி சாற்றி
ஸ்ருதி விஷயங்களான இத்தை -தொண்டர்க்கு அமுது உண்ணலாம் படி பண்ணி அருள வேண்டும் என்று திரு உள்ளமாம் —

இப்பாட்டில்
சுத்த அசுத்த ரூபங்களான அசித்துக்களுடைய பேதமும்
சித் அசித் பேதமும்
பத்த முக்த நித்ய விபாகத்தை உடையரான ஜீவர்களுடைய அன்யோன்ய பேதமும்
ஜீவ ஈஸ்வர பேதமும்
ஈஸ்வர ஐக்யமும்
ஞான ஞாத்ரு பேதமும்
சத் அசத் ஞான பேதமும்
சத் அசத் அனுஷ்டான பேதமும்
சித்த ஸாத்ய உபாய பேதமும்
பர அவர புருஷார்த்த பேதமும்
கிடக்கிறபடி யதாஸ்தானம் சப்தமாகவும் அர்த்தமாகவும் அனுசந்திப்பது

இங்கு
இமையோர் தலைவா -என்கிற இதிலே –
சேஷியாய் ப்ராப்யமுமான ப்ரஹ்ம ஸ்வரூபமும்
யாம் -என்கிற இதிலே -சேஷ பூதனாய் -ப்ராப்தாவான -ப்ரத்யக் ஆத்ம ஸ்வரூபமும்
உயிர் அளிப்பான் -என்கிற இதிலே -நிருபாதிக சேஷ விருத்தி விசேஷ ரூபமான பல ஸ்வரூபமும்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிற இடத்திலே சேஷ விருத்தி விரோதி ஸ்வரூபமும்
கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே -என்கிற இதிலே –
விரோதி நிவர்த்தன வியாஜமாய் சோபாதிகமான சாஸ்திரீய சேஷ வ்ருத்தி விசேஷமும்
இமையோர் தலைவா -அடியேன் -என்கிற இதிலே -ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபம் முதலான அர்த்த பஞ்சகத்தினுடைய அனுசந்தானத்திற்கு
அஞ்சுருவாணியான சம்பந்தமும் சுருங்க அனுசந்தேயம் –
ஆகையாலே மேல் அருளிச் செய்யுமது எல்லாம் இதன் விஸ்தாரம் ஆகிறது –

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஸ் ச ப்ரத்யக் ஆத்மனா -பிரபாத் யுபாயம் பலம் சைவ ததா பிராப்தி விரோதி
ச வதந்தி சகல வேதா சே இதிஹாசா புராணாக –ஹரிதா சம்ஹிதை –

புருஷோத்தம வித்த்யையில் சொன்ன சர்வாதிக்யத்தை யுடையனான ஸ்ரீ யபதி
ஜகத் உபக்ருதி மர்த்யம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5–30–81—
ஜெகதாம் உபகாராய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–7–72-இத்யாதிகளில் சொன்ன
தன்னுடைய திவ்ய அவதார பிரகாரத்தை பஹுனி மே வியதீதானி என்று – தொடங்கி தான் அறிவித்தபடியே அறிந்தார்க்கு எல்லாம்
அதிகார அனுகுண உபாய பூர்த்தியைப பண்ணிக் கொடுத்து –
இத் தேகம் விட்டால் இனி ஒரு பிறவி வேண்டாதபடி ஸ்வ ப்ராப்தியைக் கொடுக்கும் என்கிற இவ் வுபகாரம்
இப் பாட்டுக்கு பிரதான தாத்பர்ய விஷயம் ஆகிறது –

——————————————–

அயம் அபி அபர மஹா உபகார கலி தோஷாவில சேதஸாம்
கருணா ஜலாதித யத் ஏஷ தேவா ப்ரத்யாமாச மயா நிஜ உபகாரான்

கருணைக் கடலான எம்பெருமான் தானே -கலி கோலாகலத்தால் பீடிக்கப் பட்ட ஜீவர்களை உஜ்ஜீவிப்பவே
அடியேன் மூலம் இந்த மஹா உபகாரத்தை அவன் உபகார பரம்பரைகளுக்குள் சேர்வித்து அருளினான்

தான் தனக்குத் தன்னாலே தோன்றி தன்னூர் ஒளி யணைக்கும் குணத்தாலும் தன்னைக் கொண்டு
தான் தனக்கு என்று அறியாத தன் குணத்தைத் தன் குணத்தால் தான் சிறையில் தானே கூட்டி
ஊன் மருத்துப புலன் மனம் மானாங்காரங்கள் ஒரு மூலப பிரகிருதி அன்றி நின்ற
நான் தனக்குத் தான் தனக்கு என்ற இசைவு தந்த நாரணனை நான்மறையால் நான் கண்டேனே –

கழியாத கரு வினையில் படிந்த நம்மைக் காலம் இது என்று ஒரு கால் காவல் செய்து
பழியாத நல் வினையில் படித்தார் தாளில் பணிவித்துப பாசங்கள் அடைய நீக்கி
கழியாத செவ்வழியில் துணைவரோடே தொலையாத பேரின்பம் தர மேல் ஏற்றி
அழியாத அருளாழிப் பெருமாள் செய்யும் அந்தமிலா உதவி எல்லாம் அளப்பார் ஆரே

ஸ்ரீ உபகார சங்க்ரஹம் சம்பூர்ணம்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading