நாராயண பரமாத்மா பரஞ்சோதி பரம தத்வம் பராயணம்-ஆனந்த மயன் -சாம்யாபத்தி பிரார்த்தனை இதில்
சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மம் -புண்ய பாப விதூய -நிரஞ்சன் பரம சாம்யம் உபைதி –
கண்ணனையே கையில் கொண்ட இவர்கள் திண்ணைப் பேச்சும் ஸாஸ்த்ரம் –
ஈராயிரப்படி -அவதாரிகை –
பெண்காள்-எளிவரும் இயல்வினன்-( 1-3-2-) என்கிறபடி நம்மை உள்ளபடி அறிந்தீர்கள் –
உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
தங்களுக்குச் செய்ய வேண்டுவது சொல்லுகிறார்கள் –
(பத்துடை அடியவர்க்கு எளியவன் -முதலில் -அத்வேஷம் மாத்திரமே போதும் –
பிறருக்கு அறிய வித்தகன் -சொல்லி எத்திறம் உரலினோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே -மோஹித்து -ஆறு மாதங்கள் –
தப்பைச் செய்தேன் தப்பைச் சொன்னேன் -அனுபவத்துக்கு போகாமல் உபதேசிக்க வேண்டும் -எளிமையே ஸ்வபாவம் –
மாலே மணி வண்ணா ஆலினிலையாய் -பரத்வம் வந்தேறி என்னும்படி
ஸுவ்லப்யம் -ஆஸ்ரித வ்யாமோஹம் நீரோட்டம் தெரிகிறதே கீழே உள்ளபடி அறியாமல் சொன்னது )
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்-
பதவுரை
மாலே–(அடியார் பக்கலில்) வியாமோஹ முடையவனே!
மணிவண்ணா–நீல மணி போன்ற வடிவை உடையவனே!
ஆலின் இலையாய்–(ப்ரளய காலத்தில்) ஆலந்தளிரில் பள்ளி கொள்பவனே!
மார்கழி நீராடுவனான்–மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார்–உத்தம புருஷர்கள்
செய்வனகள்–அநுட்டிக்கும் முறைமைகளில்
வேண்டுவன–வேண்டியவற்றை
கேட்டி ஏல்–கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்)
ஞாலத்தை எல்லாம்-பூமியடங்கலும்
நடுங்க–நடுங்கும்படி
முரல்வன–ஒலி செய்யக் கடவனவும்
பால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன-பால் போன்ற நிறமுடையதான
உன்னுடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை ஒத்திருப்பனவுமான
சங்கங்கள்–சங்கங்களையும்
போய் பாடு உடையன–மிகவும் இடமுடையனவும்
சாலப் பெரு-மிகவும் பெரியனவுமான
பறை–பறைகளையும்
பல்லாண்டு இசைப்பார்–திருப்பல்லாண்டு பாடுமவர்களையும்
கோலம் விளக்கு–மங்கள தீபங்களையும்
கொடி–த்வஜங்களையும்
விதானம்–மேற்கட்டிகளையும்
அருள்–ப்ரஸாதித்தருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.
அபஹத பாப்மா விஜர விமிருத்யு விசோக அபிபாத அபிஜித்சிக -ஆறும் வருத்தம் தீர்த்தல்
ஸத்யகாம ஸத்யஸங்கல்பம் மகிழ்ந்து –
அவன் இடம் உள்ளவை அனைத்தும் பிரார்த்தித்து பெறுகிறாள் -அவன் கொடுத்து தான் சாம்யா பத்தி –
மாலே -ஆச்ரித பவ்யன்
மணி வண்ணா -ஸுந்தர்யம்
ஆலினிலையாய்-மேன்மை -பரத்வம்
மூன்றும் சேர்ந்த கூட்டம் -ஆகார த்ரயம் அவளுக்கு -அநந்ய சரண்யத்வம் அநந்யார்ஹத்வம் அநந்ய போக்யத்வம்
இற் பிறப்பு இரும் பொறை கற்பு மூன்றும் -களி நடம் புரியக் கண்டேன்
வடபத்ரசாயி -வடமஹா தாமர்-நீராட்ட உத்சவம் ஏழு நாள்கள் -திருப்பாற்கடல் இங்கு கர்ப்ப க்ரஹம் –
பிரியாவிடை உத்சவம் -முதலில் ஆண்டாள் பெருமாளைப் பார்த்து -நமக்காக விண்ணப்பம்செய்யும் சேவை –
பின்பு இருவரும் சேர்ந்து நாம் மிதுனத்தில் கைங்கர்யம் -சமமாக நம்மைப் பார்க்கும் சேஷி தம்பதிகள் –
வேண்டுவன கேட்டியேல்-அவர்களையே பார்த்து மயங்கி இருக்க தொடை தட்டி
மார்கழி நீராடுவான்-நீராடுவதற்காக -நோன்புக்காக –
மேலையார் செய்வனகள் -முன்னோர் செய்த படியே –
வேண்டுவன சொல்கிறோம்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன-பூமியே நடுங்கும் படி
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே-அவனது நம்மிடம் வர வேண்டுமே
அப்பாஞ்ச ஜன்யம் -பெரியாழ்வார்-அங்கு மங்களாசாசனம் -இங்கு சாம்யா பத்தி பிரார்த்தனை
போல்வன சங்கங்கள் –பல வேண்டும் -மத்த பரதரம் கிஞ்சித் நாஸ்தி –
போய்ப் பாடுடையனவே-இடமுடைத்தான
சாலப் பெரும்பறையே -பேரி வாத்யம் -மேலே பறை கொள்வான் அன்று –
அறிந்து அறிந்து தேறி தேறி உணர வேண்டாமோ -கைங்கர்ய பிரார்த்தனை என்று உணர வேண்டாமோ –
பல்லாண்டிசைப்பாரே-
கோல விளக்கே -அழகிய மங்களமான விளக்கு
கொடியே
விதானமே-
ஆறு விஷயங்கள் -அபஹத -இத்யாதி ஆறும்
அருளேலோ ரெம்பாவாய்–அருளவே ஸத்ய காமம் ஸத்ய ஸங்கல்பமும் கிட்டும் –
மாலே-
வாத்சல்யமே ஸ்வரூபமானவனே
(ஸுவ்லப்யம் வ்யாமோஹம் வாத்சல்யம் -மூன்றும் இணைந்தே இருக்குமே
குணம் என்று சொல்லாமல் அவராகவே ஒட்டி இருப்பதால் ஸ்வரூபம் குண ப்ரஸுர்யத்தால் அதே வடிவம் )
மணி வண்ணா –
அபரிச்சேதனாய் இருக்கச் செய்தே-முந்தானையில் முடியலாம் படி இருக்கை
நீர்மை இன்றிக்கே காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு உடையவனே –
மார்கழி நீராடுவான்
மார்கழி நீராடுகைக்கு உபகரணம் தேடி வந்தோம்
அங்கி கைப் பட்ட இடத்திலும் அங்கம் கைப் படாது ஒழிவதே –
நாஸ்திகரைப் போலே -மார்கழி நீராட்டாவது என் என்ன
இது அறியாயோ என்ன
ஜ்யோதிஷ்டோமம் போலே ப்ரஸித்தமாய் இருக்க வந்தீர்களோ என்ன
எங்களுக்கு ஸ்வர்க்காதிகளில் ஸ்ரத்தை யுண்டோ என்ன
நிதித்யாசிதவ்ய-என்கிறால் போலே தான் உண்டோ என்ன
பிரமாணங்களை விஸ்வசித்தால் பலிக்கிலும் பலிக்கும் -தவிரிலும் தவிரும்
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட- தத் ததரேவ இதர ஜனா -என்று
பூர்வர்கள் அனுஷ்டித்தது ஆகையால் பலத்துக்கு இழவில்லை –
அது தானே அமையும் –
நீ இடையில் அறிவது ஓன்று அன்று
மேலையார் செய்வனகள் –
என்ன தப்பைச் சொன்னோம் –
நம்மைக் கோபியாதே வேண்டுவன சொல்லலாகாதோ என்றான்
வேண்டுவன கேட்டியேல்-
உன் அந்நிய பரதையாய் கேட்டால் சொல்ல வேணுமோ என்ன
அந்நிய பரதை என் என்னில்
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் முன்னே வந்து நிற்கையாலே
இவர்கள் வார்த்தை கேளாதே இவர்கள் வடிவு அழகிலே மண்டினான் என்கை
(தான் செய்த க்ருஷி பலித்ததே என்று பஞ்ச லக்ஷம் பெண்களைப் பார்த்து மயங்கி இருக்க )
இவர்கள் உன் காரியத்துக்கு வந்தோமோ என்ன
உங்கள் வடிவு அழகு கண்ணுக்கு இலக்கானவோபாதி
உங்கள் வார்த்தை என் செவிக்கு இலக்கு அன்றோ –
அதுவும் என் கார்யம் அன்றோ –
சொல்லுங்கோள்-என்ன
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன-பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே-போல்வன சங்கங்கள் –
இடமுடைத்தாய் உன் திரு மேனிக்குப் பகைத் தொடையாம்படி
பாலைத் திரட்டினால் போலே இருக்கிற நிறத்தை யுடைத்தாய்
ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் -என்கிறபடி அன்றிக்கே
நின்று முழங்கக் கடவதுமாய்
பல சொல்லி என் –
உன் கையில் பாஞ்ச ஜன்யம் போல் இருப்பன பல சங்கங்கள் வேணும் என்கிறார்கள் –
போய்ப் பாடுடையனவே
புகழ் என்றுமாம் -இதுவாயிற்று இனியோ என்ன
சாலப் பெரும் பறையே –
பறை -பெரும் பறை – சாலப் பெரும் பறை –
ஒரு மன்று அளவில் த்வநிக்கை அன்றிக்கே எங்கும் கேட்க த்வநிக்கிறது ஒரு பறை வேணும் –
யயவ் தூர்ய ப்ரணாதேந பேரீணாம் ச மஹா ஸ்வநை –
இதுவாய்த்து பின்னையோ என்ன
பல்லாண்டிசைப்பாரே-
திருப் பல்லாண்டு பாடுவாரும் வேணும் என்கை
(உனக்கும் பாகவதருக்கும் பல்லாண்டு பாட பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் போல்வார் )
கோல விளக்கே
மங்கள தீபம்
கொடியே
திருக் கொடி யாட வேணும்
விதானமே
திரு மேல் கட்டு
இவை வேணும் என்ன
பெண்காள் இவை நம்மால் செய்யலாய் இருந்தது இல்லை -என்ன
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்-
சர்வ லோகத்தையும் உன் திரு வயிற்றிலே வைத்து ஓர் ஆலிலையிலே கண் வளர்ந்த
உனக்கு முடியாதது உண்டோ –
(முடியானே கரணங்கள் ஒவ் ஒன்றும் மற்ற செயல்களை விரும்பியதையும் அருளினாயே )
தந்தோம் என்னும் அத்தனை அன்றோ -என்ன –
(நம் சடகோபனை தந்து அருளலாகாதோ– தந்தோம் தந்தோம் தந்தோம் என்று சொல்வதே போதுமே _
அப்படி யாகிறது -என்று புறம்பு தன்னைப் போலே ஒரு தத்வம் உண்டாகில் இறே
தன் கையில் சங்கு போலே இருக்கும் சங்கு உண்டாவது –
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ (நாச்சியார் – 11-1-)-என்று
இவர்கள் உகந்த சங்கு தன்னைக் கொடுத்தான்
பாரோர் எல்லாம் மகிழப் பறை கறங்க -(சிறிய திருமடல் )-என்று
கூத்தாடுகிற போது அறையில் கட்டின பறையையும்
பறை அடிக்கைக்கு ஸ்ரீ ஜாம்பவான் மஹா ராஜரையும் கொடுத்தான்
திருப் பல்லாண்டு பாடுகைக்குப் பெரியாழ்வாரையும் நம்மாழ்வாரையும் கொடுத்தான்
மங்கள தீபத்துக்கு (கோல விளக்கு) நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்
கொடிக்கு பெரிய திருவடியையும்
விதானத்துக்கு திரு அநந்த ஆழ்வானையும் கொடுத்தான்
(ஆதி சேஷன் விட்டுப்பிரியானே -படுக்கை விட்டு தூங்க முடியாதே -அக்குளத்தில் மீன் அன்றோ –
உத்தரீயம் விதானமாகக் கொடுத்தான் -ந ச தே விநா நித்ராம் –
முனிவன் வேண்ட திறல் விலங்கு இலக்குமனைப் பிரிந்தான் அன்றோ )
கருளப் புட்கொடி சக்கரப் படை வான நாட என் கார் முகில் வண்ணா-(ஸ்ரீ திருவாய் மொழி -5-7-3-)
வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்-( பெருமாள் திருமொழி -1-2 )
———————————-
(முக்தன் -சாம்யா பத்தி -புண்ய பாப விதூய பரமம் ஸாம்யம் உபைதி -அபஹத பாபமத்வாதிகள் -ஸ்வரூப ஆவிர்பாவம்-ஸ்வேன ரூபம் –
சாந்தோக்யம் -8-1-1-2-3-ஏவ மே விஷ சம்ப்ரசாத அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்சோதி ரூப சம்பத்ய
ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -இயல்பான நிலை-
சாந்தோக்யம் -8-7-1-ய ஆத்மா அபஹதபாப்மா -விஜர-விம்ருத்யு விசோக விஜிகத்ச அபிபாச சத்ய காம சத்ய சங்கல்ப
ஸாம்ய ஸ்ருதி -ஸஹ ஸ்ருதி -சாதர்ம்ய ஸ்ருதி
கூடிற்றாகில் நல்லுறைப்பு கூடாமையைக் கூடினால்– அது அதுவே -ஸ்வாமி சேஷபூதன் தன்மை மாறாதே
சாம்யா பத்தி பிரார்த்தனை இதில் -நோன்புக்கு உப கரணங்கள் இதில-
இதுவே தினப்படி ஸ்ரீ வில்லிபுத்தூரில் நாள் பாட்டு
தை மாத உத்சவம் 8 நாள் உத்சவம் -மா முனிகளுக்காக – கூடவே எழுந்து அருளி இவருக்கு முன் நீராட்டு உத்சவம் நடக்கும்
மூடு பல்லக்கில் வட பெருமாள் சந்நிதியில் நின்று நாள் பாட்டு மாலே மணி வண்ணா அனுசந்தேயம் ஆகும்-அன்றைக்கு பாசுரம் அல்ல -)
(ஸ்ரீ வில்லி புத்தூரில் காலை 9.30 மணிக்கு மேல் தங்கப் பல்லக்கில் ஆண்டாள் கோயிலில் இருந்து எழுந்து அருளி மாட வீதிகள் வழியாக
ராஜ கோபுரம் முன் எழுந்து அருளி அங்கு போர்வை படி களைந்து திருவடி விளக்கம் அரையர் சேவை நடந்து
பின்பு மண்டபங்கள் எழுந்து அருளி ரத வீதி சுற்றி மதியம் 1 மணிக்கு மேல் எண்ணெய் காப்பு மண்டபத்துக்கு எழுந்து அருளினார்
மதியம் 3 மணிக்கு மேல் எண்ணெய் காப்பு சேவை பக்தி உலாத்துதல் நடைபெறும்
இரவு 8 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் ரத வீதி புறப்பாடு -மூல ஸ்தானம் வந்து அடைதல் நடைபெறும்
தை முதல் தேதி மணவாள மா முனிகள் மங்களா சாசனம்-(1371-1443)
அடுத்த கனு அன்று பெரியாழ்வார் சந்நிதியில் கனு வைபவம் நடைபெறும்)
(நாராயண பரமாத்மா பரஞ்சோதி பரம தத்வம் பராயணம்-ஆனந்த மயன் -சாம்யாபத்தி பிரார்த்தனை இதில்
சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மம் -புண்ய பாப விதூய -நிரஞ்சன் பரம சாம்யம் உபைதி –
கண்ணனையே கையில் கொண்ட இவர்கள் திண்ணைப் பேச்சும் ஸாஸ்த்ரம் -)
(மாலே -ஆஸ்ரித பவ்யன் -ஸுலப்யம்
மணி வண்ணா -ஸுந்தர்யம்
ஆலினிலையாய்-மேன்மை -பரத்வம்
அச்யுதா -அமரர் ஏறே -ஆயர் தம் கொழுந்தே
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை போல் இங்கும்
மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் -ஆகார த்ரயம் அவளுக்கு -அநந்ய சரண்யத்வம் அநந்யார்ஹத்வம் அநந்ய போக்யத்வம்
இற் பிறப்பு இரும் பொறை கற்பு மூன்றும் -களி நடம் புரியக் கண்டேன்
1-ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன-பூமியே நடுங்கும் படி
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே-அவனது நம்மிடம் வர வேண்டுமே
அப் பாஞ்ச ஜன்யம் -பெரியாழ்வார்-அங்கு மங்களாசாசனம் இங்கு சாம்யா பத்தி பிரார்த்தனை
போல்வன சங்கங்கள் –பல வேண்டும் -மத்த பரதரம் கிஞ்சித் நாஸ்தி –
2-போய்ப் பாடுடையனவே சாலப் பெரும்பறையே -இடமுடைத்தான-பேரி வாத்யம் -மேலே பறை கொள்வான் அன்று –
அறிந்து அறிந்து தேறி தேறி உணர வேண்டாமோ -கைங்கர்ய பிரார்த்தனை என்று உணர வேண்டாமோ –
3-பல்லாண்டிசைப்பாரே-
4-கோல விளக்கே -அழகிய மங்களமான விளக்கு
5-கொடியே-த்வஜம்
6-விதானமே-மேல் கட்டி
ஆறு விஷயங்கள் -அபஹத -இத்யாதி ஆறும் ஸூசகம்-பிரார்த்தித்தே பெற வேண்டும் -அருள் என்கிறார்கள் )
(நோன்புக்கு ஸம்மானம் நாளைக்கு பாசுரம்)
———–
நாலாயிரப்படி-அவதாரிகை –
பெண்காள்-உங்களுக்கு அபேக்ஷிதம் என் என்று கிருஷ்ணன் கேட்க
நோன்புக்கு வேண்டும் உபகரணத்தைச் சொல்லி
அவற்றைத் தர வேணும் என்கிறார்கள் –
(பத்துடை அடியவர்க்கு எளியவன் -முதலில் -அத்வேஷம் மாத்திரமே போதும் –
பிறருக்கு அறிய வித்தகன் -சொல்லி எத்திறம் உரலினோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே -மோஹித்து -ஆறு மாதங்கள் –
தப்பைச் செய்தேன் தப்பைச் சொன்னேன் -அனுபவத்துக்கு போகாமல் உபதேசிக்க வேண்டும் -எளிமையே ஸ்வபாவம் –
மாலே மணி வண்ணா ஆலினிலையாய் -பரத்வம் வந்தேறி என்னும்படி
ஸுவ்லப்யம் -ஆஸ்ரித வ்யாமோஹம் நீரோட்டம் தெரிகிறதே கீழே உள்ளபடி அறியாமல் சொன்னது )
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்-
மாலே-
தங்கள் பக்கலிலே பண்ணின வ்யாமோஹம் இருக்கிற படி –
இவர்கள் பேச்சைக் கேட்ட பின்பு பண்டையிலும் பிச்சின் மேல் பிச்சாயிற்று –
பண்டு -சர்வேஸ்வரன் -நிர்வாஹகன் -சர்வஞ்ஞன்- சர்வசக்தன் -என்று இருப்பார்கள்
இப்போது இத் தத்துவத்தை அழகிதாக நிலையிட்டாள்
வாத்சல்யமே ஸ்வரூபம் என்றபடி
(ஆத்மாவுக்கு பாகவத சேஷத்வமே யாதாத்ம்ய ஸ்வரூபம்- அடியேன் உள்ளான்-நெடுமாற்க்கு அடிமை -உற்றதும் உன் அடியாருக்கு அடிமை )
பிராட்டி சக்ரவர்த்தி திருமகனை -விஹிதஸ்ய தர்மஞ்ஞய சரணாகத வத்ஸல-என்று ஸ்வரூபத்தை நிலையிட்டாள் –
அதுவே ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணம் –
இங்கு இவள் சரணாகத பக்ஷபாதி -என்று நிலையிட்டார்கள்
இதுவே மஹா பார்த்ததுக்கு உள்ளீடான பிரதான குணம்(மம ப்ராண பாண்டவர் என்று இருப்பவன் )
(குடப் பாம்பில் கை இட்டவன் -நடுநிலை அல்லவே ராஜா வான குலசேகரப்பெருமாள்
சுப்ரமண்ய பட்டர் ஐதிகம் -மத்யஸ்தராக இருக்க மாட்டேன் என்றாரே -பாகவதர் ஏற்றம் அறிந்து)
மணி வண்ணா
அபரிச்சேதனாய் இருக்கச் செய்தே-முந்தானையில் முடியலாம் படி இருக்கை
மணி வண்ணா
பிச்சு வடிவில் தெரிந்து இருக்கும் என்றுமாம்
மணி வண்ணா
பெண்கள் பிச்சுக்கு நிதானம்(கண்ணன் என்னும் கரும் தெய்வம் அன்றோ )
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
நீர்மை இன்றிக்கே காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு என்று
(மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை –
மயலை ஊட்டி விட்டு சமன் கொள் தரும் தடம் குன்றம் போல்
இவனும் தனது பிச்சை அருளி-இதிலும் -பித்திலும் – சாம்யா பத்தி அளிப்பானே)
(மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே)
மாலே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-விபீஷணோ மஹா ப்ராஜ்ஜோ பூமிம் சமவ லோகயன் -என்று
பெருமாளைக் கிட்டின பின்பு
நம்மைக் கைக் கொண்டு நம்மை உளோமாகப் பண்ண வல்லரே என்று
தான் இருந்த இருப்பைப் பெருமாள் நினைந்து இருந்தமை முகத்திலே தோற்றி இருந்தது
முற்பட்ட நினைவுக்கு ருஷி உவாச ச மஹா ப்ராஜ்ஞ- என்றான்-
பிற்பட்ட பெருமாள் பிரக்ருதியை அறிந்தபடிக்கு
விபீஷணோ மஹா ப்ராஜ்ஜோ பூமிம் சமவ லோகயன் -என்றபடியே நிலையிட்டார்கள் இவர்களும் –
(ராகவேண அபயம் தத்தே ஸன்னதோ – ராவணன் அனுஜனுக்கு தம்பிக்கு சரணாகதி தந்த பின்பே அவதார பிரயோஜனம் பெற்றான்
கிட்டாவிடில் பரமாத்ம ஸ்வரூப நாஸம் ஆகி இருக்குமே-விஜ்வர கிருதக்ருத்யன் ஆனான்
அந்தாம அன்பு –ஆரம் உள -ஆழ்வாரைப் பெற்ற பின்பே எல்லாம் சத்தை பெற்றதே)
(ருக்மிணி ஸந்தேஸம் –கல் நெஞ்சமோ -எனக்கோ எழுத்தாணி எடுத்து எழுதி உம்மையே அனுப்பி –
நானோ உருகி அன்றோ இருக்கிறேன்
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் -போல் இவர்கள் போக –
என்னில் முற்றம் பாரித்து என்னை முற்றம் பருகினான் போல் இவன் மாலாகி நிற்கிறான்)
(மணல் கொட்டகையில் இன்றும் பராங்குச பரகால யதிராஜர் நாலடி முன்னே வர நம்பெருமாள் விரைந்து வந்து விழுங்குவதை
நித்யம் மாலையில் உத்சவத்தில் காண்கிறோமே-)
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று இவர்கள் இருக்க
பெண்கள் நம்மை கடாக்ஷிப்பது காண் என்று பகவான் இருந்து இருப்பைக் கண்டு தலை சீய்க்கிறார்கள்
வந்த காரியம் இருவரும் மறந்தார்கள்
இருவர் நெஞ்சும் கல்லால் பண்ணினது போல் திகைத்து போய் அசைவில்லாமல் இருந்தார்கள்
ஆகிலும் இவர்கள் விடார்களே(ருக்மிணி பிராட்டியைப் போல்)
இவர்கள் அவனுக்கு வரிசை கொடுக்கிறார்கள் -செய்ய வேண்டிய கையோலை இட்டுக் கொடுக்கிறார்கள்
வைதேஹிக்கு பெருமாள் சொன்னது போல்-
(ரமதே கச்சித் பஸ்யத் சித்ர கூடே மயா ஸஹ -இவைற்றைப் பார் என்று பெருமாள் சீதைக்கு காட்டினால் போல் )
மார்கழி நீராடுவான்-
மார்கழி நீராடுகைக்கு உபகரணம் தேடி வந்தோம் -என்ன –
அங்கி கைப் பட்ட இடத்திலும் அங்கம் கைப் படாது ஒழிவதே –
நாஸ்திகரைப் போலே -மார்கழி நீராட்டாவது என் என்ன
இது அறியாயோ என்ன
ஜ்யோதிஷ்டோ மேந ஸ்வர்க்க காமோ யஜேத -என்கிறபடியே ஸித்தமாய் இருந்ததோ -என்ன
எங்களுக்கு ஸ்வர்க்காதிகளில் ஸ்ரத்தை யுண்டோ என்ன
நிதித்யாசிதவ்ய-என்கிறால் போலே தான் உண்டோ என்ன
பிரமாணங்களை விஸ்வசித்தால் பலிக்கிலும் பலிக்கும் -தவிரிலும் தவிரும்
யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட-என்று பூர்வர்கள் அனுஷ்டித்தது ஆகையால் பலத்துக்கு இழவில்லை –
அது தானே அமையும் -நீ – இறை இறை -அறிவது ஓன்று அன்று(நீ தேவாதி தேவன் -நாங்கள் அடியாருக்கு அடியார் -விஜாதீயன் )
(திரிபுரா தேவி -உடையவர் கை காட்டும் இடம் வியக்தியே பர தேவதை)
மேலையார் செய்வனகள் –
என்ன தப்பைச் சொன்னோம் -நம்மைக் கோபியாதே வேண்டுவன சொல்லலாகாதோ என்றான்
வேண்டுவன கேட்டியேல்
உன் அந்நிய பரதையாய் கெட்டால் சொல்ல வேணுமோ என்ன
அந்நிய பரதை என் என்னில்
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்கள் முன்னே வந்து நிற்கையாலே
ஆனைக்குப்பாடுவாரைப் போலே (சதுரங்கம் -chess)எங்கள் வார்த்தை கேளாதே இவர்கள்
கண்ணிலும் முலையிலும் இடையிலும் வடிவு அழகில் மண்டினான் என்கை
இவர்கள் உன் காரியத்துக்கு வந்தோமோ என்ன
உங்கள் வடிவு அழகு கண்ணுக்கு இலக்கானவோபாதி
உங்கள் வார்த்தை என் செவிக்கு இலக்கு அன்றோ –
அதுவும் என் கார்யம் அன்றோ -சொல்லுங்கோள்-என்ன
(ப்ராப்தாவும் ப்ராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே-God proposes God disposes Man poses-)
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன-பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே-போல்வன சங்கங்கள் –
இடமுடைத்தாய் உன் திரு மேனிக்குப் பகைத் தொடையாம்படி
பாலைத் திரட்டினால் போலே இருக்கிற நிறத்தை யுடைத்தாய்
ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -என்கிறபடி அன்றிக்கே நின்று முழங்கக் கடவதுமாய்
பல சொல்லி என் -உன் கையில் பாஞ்ச ஜன்யம் போல் இருப்பன
பல சங்கங்கள் வேணும் என்கிறார்கள் –
போய்ப் பாடுடையனவே
இடமுடைமை- பெருமை -புகழ் என்றுமாம் –
ருக்மிணிப் பிராட்டி மற்றையார்க்கு உதவியது என்கிற புகழ்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்-இத்யாதி
(கோங்கலரும் பொழில் மா லிருஞ்சோலயில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்க வில்
நாணொலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ)
இது ஓன்று – இனியோ என்ன
சாலப் பெரும் பறையே
ஒரு மன்று அளவில் த்வநிக்கை அன்றிக்கே எங்கும் கேட்க த்வநிக்கிறது ஒரு பறை வேணும் –
யயவ் தூர்ய ப்ரணாதே ந பேரீணாம் ச மஹா ஸ்வநை
இதுவாய்த்து பின்னையோ என்ன
பல்லாண்டிசைப்பாரே
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போவார் வேணும் என்கை -பின்னையோ என்ன
கோல விளக்கே
மங்கள தீபம் வேணும் என்ன -பின்னையோ என்ன
கொடியே
திருக் கொடி யாட வேணும் -பின்னையோ என்ன
விதானமே
திரு மேல் கட்டு
இவை வேணும் என்ன
பெண்காள் இவை நம்மால் செய்யலாய் இருந்தது இல்லை -என்ன
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்-
சர்வ லோகத்தையும் உன் திரு வயிற்றிலே வைத்து ஓர் பவனான ஆலிலையிலே
கண் வளர்ந்த உனக்கு முடியாதது உண்டோ
பெண்காள் -தந்தோம் என்னும் அத்தனை அன்றோ(அஸ்து தே என்னவே வேண்டும்-ஏன கேந பிரகாரம் த்வயம் அனுசந்தானமே போதும் என்றானே )-என்ன
அப்படி யாகிறது -என்று புறம்பு தன்னைப் போலே ஒரு தத்வம் உண்டாகில் இறே
தன் கையில் சங்கு போலே இருக்கும் சங்கு உண்டாவது
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ -என்று இவர்கள் உகந்த சங்கு தன்னைக் கொடுத்தான்
(தாமுகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே)
பாரோர் எல்லாம் மகிழப் பறை கறங்க-என்றும்
கன்றப் பறை கறங்க -என்று மரக்கால் கூத்தாடுகிற போது அறையில் கட்டின பறையையும்
பறை அடிக்கைக்கு ஸ்ரீ ஜாம்பவான் மஹா ராஜரையும் கொடுத்தான்
(பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –-சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே -சிறிய திருமடல்)
(கன்றப் பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்தாடினான் காணேடீ
மன்றில் மரக்கால் கூத்தாடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே -11-5-6-)
திருப் பல்லாண்டு பாடுகைக்கு-
அடியோமோடும் நின்னோடும் என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும்
பாகவத ஸம்ருத்திக்கு- பொலிக பொலிக -(5-2)என்னும் -நம்மாழ்வாரையும் கொடுத்தான்
மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்
கொடிக்கு பெரிய திருவடியையும்
விதானத்துக்குத் திரு அவதரித்த அன்று தன் பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த
திரு அநந்த ஆழ்வானையும் கொடுத்தான்
ஆலினிலையாய்
எல்லாம் கொடுத்தாலும் தன்னைக் கொடுத்தது ஆகாமையாலே அத்தவாளத்தையும் கொடுத்தான்
எல்லாத்தையும் கொடுத்தாலும் தன்னை ஒழிய ஓர் அடி இடாத பெண்கள் ஆகையாலே-
நயாமி பரமாம் கதிம்-(ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் )என்கிறபடியே அத்தவாளத்தலையைக் கவித்துக் கொண்டு போனான் என்றும்
கள்வன் கொல் -லில் -பிராட்டியை போலே ஒளித்துக் கொண்டு போக வேண்டாவோ
அது வேண்டாவே -ஊர் இசைந்ததே
கள்வன் கொல் யானறியேன் கரியானொரு காளை வந்து,
வள்ளி மருங்குல் என்றன் மடமானினைப் போதவென்று,
வெள்ளி வளைக் கைப்பற்றப் பெற்ற தாயரை விட்டகன்று,
அள்ளலம் பூங்கழனி யணி யாலி புகுவர் கொலோ.-3-7-1
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே ஒருவனே எல்லா அடிமையும் செய்வானை யுடையனாய் நின்றால்
சென்றால் குடையாம் -என்கிறபடியே
எல்லா அடிமையும் செய்ய வல்ல ஒருவனையும் கொடுத்து விடாதே
நித்ய விபூதியில் உள்ளார் அனைவரையும் கொடுக்கிறது என் என்னில்
எல்லாரும் ஸ்வரூப லாபம் பெறுகைக்காக-
(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –முதல் திருவந்தாதி -53-)
(ஆதி சேஷன் விட்டுப்பிரியானே -படுக்கை விட்டு தூங்க முடியாதே -அக்குளத்தில் மீன் அன்றோ –
உத்தரீயம் விதானமாகக் கொடுத்தான் -ந ச தே விநா நித்ராம் –
முனிவன் வேண்ட திறல் விலங்கு இலக்குமனைப் பிரிந்தான் அன்றோ )
கருளப் புட்கொடி சக்கரப் படை வான நாட என் கார் முகில் வண்ணா-(ஸ்ரீ திருவாய் மொழி -5-7-3-)
வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்-( பெருமாள் திருமொழி -1-2 )
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply