திரு விருத்தம் -36-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

(சீதாப்பிராட்டிக்காக செய்ததா
ஆண்மையை நிரூபிக்கச் செய்ததா
இலங்கை அழகுடன் இருக்கக்கூடாது என்று பொறாமையால் செய்ததா
தாயார் பாசுரம் என்றும் தோழி பாசுரம் என்றும்
ராத்திரி படுத்தும் பாடு
தலைமகன் கொடுமையைக் கூறுதல்
ஆடி ஆடி -2-4- விவரணம் இதுக்கு
அரக்கர் இலங்கை செற்றீர் அங்கும் உண்டே
மனத்துக்கு இனியானான ராமன் போய் கொடுமை செய்வாரோ –
ஏலாப் பொய்கள் உரைப்பான் -பெண்ணின் வருத்தம் அறியா கண்ணன் செய்தால் ஆறி இருக்கலாம்
பிரளயம் -வேஷம் மாற்றி இருள் என்று பேர் கொண்டு வந்து நலிய உதவாமல் உள்ளானே
குளிர்ந்த திருத்துழாய் ஆசைப்பட்டாள் என்ற காரணத்துக்காக -இக்காலத்திலும் இரங்காமல் -என்ன கொடுமை –
சீதாபிராட்டி காகவும் உதவாமல் கொடுமைகள் செய்வதிலே பிரவர்த்தினான் போலும்
அம்மனோ -விஷாத சோதகம் -)

அவதாரிகை

நன்மைகள் உள்ளது தத் தலையாலே என்று இருக்கையும் –
தீமைகள் உள்ளது நம் தலையாலே என்று இருக்கையும்-
ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கும்
நம்மாழ்வாருக்கு ஸ்வரூபம் –

இப்படி அத்தலை அல்லது அறியா இருக்கச் செய்தேயும்
இவனுடைய ரக்ஷகத்வத்திலே அதி சங்கை பண்ணும் படிக்கு
ஈடாகப் பிறந்த தசா விபாகத்தைச் சொல்லுகிறது –

ஏஷை வாசம் சதே லங்காம் ஸ்வேநா நீகே நமர்திதும் -என்று (வானர )முதலிகள் –
நான் அழிக்க நான் அழிக்க-என்று சொல்லுமா போலே –
வாடையும் ராத்ரியும்-
நான் நான் என்று நலிகிற படி –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–

பாசுரம் -36-துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் –
துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் –
ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

பதவுரை

துழா நெடு சூழ் இருள் என்று–(கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேட
வேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு)
எழா நெடு ஊழி எழுந்த–(முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின.
இக் காலத்தும்–இச் சமயத்திலும்
ஈங்கு இவளோ–இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ
தம் தண் தார் அது பெயர் ஆ–நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக
(துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக் கொண்டு)
வழா நெடு துன்பந் தன்–தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன்
என்று–என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு
இரங்கார்–(தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை;
அம்மனோ–அந்தோ!
இலங்கை–இலங்காபுரியிலுள்ள
குழாம்–கூட்டமான
நெடுமாடம்–பெரிய மாளிகைகளை
இடித்த–(தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின
பிரனார்–தலைவருடைய
கொடுமைகளே–கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!.

துழா நெடும் சூழ் இருள் என்று –
இருள் துழாவிப் கொண்டு வருகிறபடி
சத்தையை அழித்துக் கொண்டு வருகிற படி –
பதார்த்தங்களைத் துழாவிக் கொண்டு வருகிறபடி என்றுமாம் –
பற்றுகிற இடம் விடாதே மேல் விழுந்து பற்றுகிற படி –

சூழ் இருள்-
ஓர் அருகே ஒதுங்க என்றாலும் ஒண்ணாத படி சூழுத்துக் கொண்டு வாரா நின்றது –
தீர்க்கயாமா த்ரியாமா-என்று இறே பிரிந்தார் எல்லார்க்கும் வார்த்தை –

(மூன்று ஜாமம் கொண்டது இரவு –
சந்தியை -கழித்து 22 அரை நாழிகை தான்
சேர்ந்து உள்ளாருக்கு சட்டு என்று போகும் -பிரிந்தால் ஊழி போல் தானே இருக்கும் )

இருள் என்று –
வருகிற போது சன்யாசியாய்
கிட்டினவாறே ராவணன் ஆனால் போலே

தம் தண் தராது பெயரா –
தன் தோளில் இட்ட திருத் துழாய் மாலையை யாசைப்பட்ட
இத்தைக் கொண்டு –

எழா நெடு வூழி–
பேராத (அசையாத _ கல்பம் –
மலையாளர் வளைப்பு போலே வைத்த கால் வாங்காதே இருக்கிறபடி

எழுந்த-
தோற்றின –
சம்வர்த்த
பிரளய
கல்ப என்னும் படியே (பர்யாய சப்தங்கள் )
பிரளயமாய்க் கொண்டு பெருகா நின்றது-

தயமாந மநா -என்று சர்வேஸ்வரன் தயை பண்ணின வாறே –
அந்த பிரளயத்துக்கு முடிவு உண்டு
அவன் பக்கல் கிருபை இல்லாமையால்
இப் பிரளயத்துக்கு முடிவு இல்லை

விக் காலத்தும்–
ஸீதாதா வேண் யுத் க்ரதநம் க்ருஹீத்வா -என்று பிராட்டி
தன் திருக் குழலை சிம்சுபா வ்ருக்ஷத்திலே பிணைக்கப் புக்க
தசையாய் இறே இருக்கிறது

ஈங்கு இவளோ –
இப்படிப் பட்ட இவள் –
அவர்களையும் அவர்கள் தசையும் போலேயோ-
இவளும்
இவள் தசையும்

(சம்சாரிகள் போலவும் சம்சாரிகள் தசை போல்
அல்லவே இவளும் இவள் தசையும்
ஐந்து வாசிகள் சாதிக்கிறார் )

1-அவர்கள் அங்கு கரண களேபர விதுரராய் இறே இருப்பது –
இங்கு இவள் சத்தையைப் பற்றி நலிகிற படி –

2-அங்கு பிரகிருதி அளவிலே –
இங்கு ஆத்மா அளவிலே –

3-அங்கு நீர் பிரளயம் –
இங்கு ராத்திரி பிரளயம்

4-மூர்த்தமான ஜலம் மூர்த்தமான உடம்பை அழிக்கிறது அங்கு –
இங்கு அமூர்த்தமான ராத்திரி அமூர்த்தமான ஆத்மாவை அழியா நின்றது

5-அங்கு அவற்றினுடைய ஆபத்து தான் அறிந்ததுவே –
இங்கு ஆபத்தையும் அறிந்து
ரக்ஷக அபேக்ஷையும் உண்டாய் இரா நின்றது

வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் –
வழுவாத நெடும் துன்பத்தவள் என்று இரங்குகிறிலர்-

துக்கேந புபுதே ஸீதாம்-
திருவடி இவள் தாபம் கண்டு பிராட்டி என்று அறிந்தால் போலே
அறிதல்
ஒழிதல் செய்யும் அத்தனை இறே –

கர்மம் அனுபவ விநாஸ்யமாய் இருக்கும் –
இது அனுபவிக்க அனுபவிக்க வர்த்தியா நிற்கும் பகவத் ருசி அடியாக வருகிற துக்கமாகையாலே –

பகவத் ருசி மாறுவது
1-சைதன்யம் இல்லையாதல் –
2-விலக்ஷணம் அன்றியிலே ஒழிதல் செய்யில் இறே

ஹேய ப்ரத்ய நீகரான தமக்கு
தம்மை உகந்தாருடைய ஹேயத்தையும் போக்கிக் கொண்டு
அருள வேண்டாவோ

பிரணயித்வம் வேண்டாவாகில்
ஸ்வரூபமும் வேண்டாவோ –
(ரக்ஷணம் கிருபை தானே ஸ்வரூபம் )

ஆபத்து நிமித்தமாக ரக்ஷித்தான் ஆகில் -பிரளய ஆபத்தில்
இங்கு உண்டான சாதன சம்பத்தி -ஆழ்வாருடைய ஆற்றாமை -பொய்யானதோ
கிருபை கருணையும் சாதன சம்பத்தி -இங்கு இல்லாமல் போனதோ

ஆபத்து நிமித்தமாக தாம் இரங்காது ஒழிகைக்கு
பரதந்த்ரரோ

எங்களுக்குப் புறப்படில் குற்றம் –
தங்களுக்கு புறப்படாது ஒழியில் குற்றம் –

வரில் எங்கள் சேஷத்வம் அழியும்
வராது ஒழியில் தம்முடைய சேஷித்வம் அழியும் –

(பரகத அதிசய ஆதேய )
சேஷியைக் குறித்து சேஷ பூதன் அதிசயத்தை விளைக்கக் கடவன் இறே-

பூர்ண விஷயத்துக்கு அதிசயத்தை நினைக்கையாவது –
ஸ்வ ரக்ஷணத்துக்கு புறப்படாது ஒழியுமது –
(அவனைக் குறைவாளனாக ஆக்காமல் இருப்பதற்காக –
நாமே ரக்ஷணத்தில் இழியக்கூடாதே )

வைதர்ம்யன் நேஹ வித்யதே -என்னும் படியே
பெருமாள் தோள் வலியை நினைத்த படியால் சர்ப்பத்தின் வாயிலே புக்கால் போலே
ராவண சந்நிதியில் இருந்து –
த்வன் நீச சசவத் ஸ்ம்ருத-என்று
சசத்தோடு உன்னோடு வாசி என் என்று சொல்லக் கடவள்
(ஆனை போல் பெருமாள் நீ முயல் போல் )
இப்போது
(பராங்குச நாயகி )
சர்வேஸ்வரனுடைய ரக்ஷையை அதி சங்கை பண்ண வேண்டும் படி காணும்
ஸ்வரூப விபரியாஸம் இருந்த படி –

(ரக்ஷகத்வம் பிரணயித்தவம் போன்ற ஸ்வரூபம்
தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று இல்லாமல்
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -மறந்து இருந்தாள் )

இவளுக்கு அவன் பக்கல் குண ஞானமே காணும் உள்ளது
ஸ்வரூப ஞானம் இல்லை –
ஸ்வரூப ஞானம் உண்டாகில் அத்தலை பட்டதும் அறியாளோ –

அத்தலை –
நைவ தம் சாந்ந மஸகான்ன-ஆயிறே கிடக்கிறது
த்வத் கதே நாந்தராத்மனா -என்னும்படியே
குளப்படி கலக்கினால் போலே அன்று இறே-கடல் கலங்கும் படி
(கொசு பூச்சி கடித்தாலும் அறியாமல் உன்னையே நினைந்து இருந்தார்
சமுத்திர இவ கம்பீரமான பெருமாளே கலங்கி )

அத்தலை
ஊர்த்வம் மாசான்ன ஜீவிஷ்யே -என்று இருந்தால் –
இத்தலை –
நஜீவேயம் க்ஷணம் அபி -என்று இறே இருப்பது
இரண்டு தலையும் அந்யோன்யம் அபேக்ஷிதமாய் இறே இருப்பது-

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

இன்றாக நாளையாக இத்யாதி –நான்முகன் -7-
நாரணனே நீ என்னை அன்றி இலை –
பூர்ணனான உனக்கு
அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –
(ஏழை ஏதலன் கீழ் மகன் இருப்பாரே அன்றோ நீர் தேடுவது
இத்தனை நாளும் நான் உன்னை விட்டு சம்பந்தம் அறியாமல் உழன்றேன்
அப்பொழுதும் நீர் என்னையே கைக்கொள்ள அவகாசம் பார்த்து இருந்தீரே )

உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-
என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும்
விடப் போகாது –
(நான் விட முடியாது என்பதிலும் இரண்டாலும் நீர் விட முடியாதே என்பதே நிச்சயம் )

இப்பாசுரம் ஒட்டியே அமுதனார்
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி-48 —

நின் அருள் என்பாலதே-
உன் கிருபை என் பக்கல் அதே -அதில் சந்தேகம் இல்லை –

நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே–
சேஷ பூதனாய் உன்னை ஒழிய ஸ்திதி இல்லாமையால் –
உனக்கு சேஷ பூதனை ஒழிய சேஷித்வம் இல்லாமையால்
இரண்டுக்கும் அடி இது தான் என்கிறது –

நாரங்களை ஒழிந்த நாராயணன் இல்லாமையால் –
நாராயணன் என்று ஸ்வரூபத்தையும் குணத்தையும் சொல்லுகிறது

(நமக்கு ஸ்வரூப நாசம் மட்டும்
அவனுக்கு ஸ்வரூபமும் குணங்களும் நாசம் ஆகுமே )

குறைவாளனை ஒழிய நிறைவாளனாக மாட்டான் –
சேஷ பூதனை ஒழிய சேஷியாக மாட்டான் –

இரங்கார் –
வாராது ஒழிந்தால் –
பூசுவனவும்
புலர்த்துவனவும் இரட்டிக்க வேணுமோ
(பூசும் சந்தனம் இரண்டு மடங்கு பூசிக்கொள்கிறானே )

அம்மனோ –
புலி என்னுமா போலே –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிற
தத்துவத்தை
அம்மே என்று அஞ்ச வேண்டும்படி
இவளுக்குப் பிறந்த ஸ்வரூப அந்யதா பாவம்-

ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதத்ஸ்ஸன-என்று
புத்தி பூர்வம் பண்ணின பாபத்துக்கு அஞ்ச வேண்டாத படி இருக்க –
ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தை அறிந்தவனுக்கு
ப்ரஹ்மம் தன்னையே அறியச் செய்தேயும்-
அஞ்ச வேண்டும்படி இறே இவள் தசை –

ஓ என்று
க்ரூர்யத்தைச் சொல்லுகிறது –
அசை என்றுமாம் –

இலங்கைக் -குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
ஒருத்திக்காக
கடலை யடைத்து-
இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு
குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி
மூலையடி போகப் பண்ணின
இந்த உபகாரகனுடைய
இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று
எம்பார் அருளிச் செய்தார் –

இதுவும் அழகியது
ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அஸூ யையாலே அழித்தான் அத்தனை காண் –
ஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –

தாத்பர்யம்
பகவத் அனுபவ யோக்கியமான தசா விபாகம் பிறந்த அளவிலும் அவன் வந்து உதவாமல் இருப்பதால்
ஆழ்வாருடைய தளர்த்தியைக் கண்டு
சர்வேஸ்வரனை நிர்த் தயையானவன் என்று பாகவதர் பாசுரத்தை
நாயகனை வெறுக்கும் திருத்தாயார் பாசுரமாக அருளிச் செய்கிறார்
தாம் ஆசைப்பட்ட சர்வேஸ்வரன் அணிந்து திருத்துழாய் பெறாமல்
மேலே இரவும் வந்து
ஒன்றையும் பார்க்கவும் விடாமல்
நாலு பக்கம் சூழ்ந்து கல்பம் போல் நலிய
ஆற்றாமை மிக்கு இருந்த ஆழ்வாரை
முன்பு ஒரு பிராட்டிக்காக உதவினவன்
இந்த தசையிலும் இவளுக்கு உதவாமல் நிர்த்தயன் ஆனான் இனி நாம் செய்வோம் என்கிறார்கள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading