ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -26 -பிரபாவ ரஷ அதிகாரம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

——————————————————————-

அதிகாரம் -26 -பிரபாவ ரஷ அதிகாரம்-

சிலாதே ஸ்த்ரீத்வாதி விபரிணதி சத்வத்புதமிதம்
தத அப்யே தச் சித்ரம் யதுத தஹ நஸ்யைவ ஹிமதா
த்ருணஸ்யை வாஸ்த் ரத்வம் ரிபுஷூ நிஹதேரேவ ஹிததா
பதத்ரேணை வேஹ த்ரி புவன பரித்ராணமிதி ச –

உபாய பிரபாவ வ்யவஸ்தை சொன்னோம் –
இனிமேல் உபாய பிரபாவத்தை சங்குசிதமாகப் பார்த்து வரும் தப்புகள் பரிஹரிக்கிறோம் –

அத்யுத்கடை புண்ய பாபை இஹைவ பலம் அச்நேது-என்கிற கணக்கிலே
உபாய பக்தி பிராரப்த வ்யதிரிக்தாத்ய நாசி நீ
சாத்ய பக்திஸ்து ஸா ஹந்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ -என்கையாலே -ப்ராரப்தங்களையும் கூட அமுக்கி
தன் பலத்தை கொடுக்க வற்றான பிரபத்தியைப் பண்ணினவனுக்கு வித்யாந்தர ந்யாயத்தாலே உத்தர பூர்வார்த்தங்களும் –
இவ் வித்யைக்கு தன்னேற்றமான சாமர்த்யத்தாலே பிராரப்த கர்ம பலத்தைப் பற்ற உண்டான ஆர்த்தியாலே எல்லைக்கு ஈடாக
ஷணாந்தர திவசாந்தர ஜன்மாந்தராத் அனுவ்ருத்தியும் கழியக் கடவது என்று மாஸூச என்கிற வாக்யத்துக்கு அனுசந்தேயம் –

இவ் வர்த்தம் தத்த்வமாகில் பிராரப்த கர்ம விசேஷ பலமாய் கொண்டு வருகிற துக்கங்களும் –
துக்க காரணங்களான கர்மங்களினுடைய ஆஜர்னமும் கழிய வேண்டாவோ –
ஆர்த்தனாய் புருஷன் அர்த்திக்கக் கொடுக்க வேணும் என்னில்
ஆநு ஷங்கிகமான புங்க்தி பாவ நத்வாதிகளைப் போலே அநபி சம்ஹிதங்களையும் கூட ஹிதைஷியான ஈஸ்வரன் தானே கொடுக்கத் தட்டு என்-
இப்படிச் செய்யக் காணாமையாலே சோக விஷயமான அம்சம் எல்லாம் நிச்சேஷமாக பிரபத்தியாலே கழியும் என்னும் இடம்
பிரபத்தி பிரபாவ அதிசயத்தைப் பற்ற ஸ்துதி பண்ணின படி என்று சிலர் இதன் பிரபாவத்தை வரையிட்டுப் பார்ப்பார்கள்

இதுக்கு உத்தரம் –
அனுக்ரஹ சீலனாய் ஆஸ்ரயிப்பார்க்கு பிரபத்தி வாசக உச்சாரண ப்ராரம்பத்திலே கடுக மோஷம் கொடுத்து அருள த்வரிக்கும் ஈஸ்வரன்
இவனுடைய நசையாலே சிறிது காலம் இங்கேயே வைக்க இசைந்த அளவிலே இவ்விடத்தில் உள்ள சிற்றின்பங்களை
துக்க பிரசங்க ரஹிதமாக அனுபவிப்பிக்கும் ஆகில்
இவனுக்கு இந் நசை ஒரு காலும் மாளாது -பகவத் அனுபவத்தில் போக்யதா புத்தியும் கொழுந்து விட்டு வாராது -ஆகையால்
யன்யா நுக்ரஹம் இச்சாமி தனம் தஸ்ய ஹராம்யஹம் பாந்த வைச்ச வியோகேன சதா பவதி துக்கித
தேன துக்கேனே சந்தப்தோ யதி மாம் ந பரித்யஜேத் தம் பிரசாதம் கரிஷ்யாமி ய ஸூ ரைர் ரபி துல்ய –என்கிறபடிகளிலே
துக்காதிகளுக்கு காரணமான பிராரப்த கர்ம விசேஷத்தை சந்நிஹிதமான கசாதிகளைப் போலே துணையாகக் கொண்டு
பித்ராதிகளைப் போலே சிஷகனான ஈஸ்வரன்
சில கடின பிரக்ருதிகளுக்கு பண்ணுகிற அனுக்ரஹ விசேஷம் இது என்று அனுசந்திக்கை உசிதம் –

ஒரு வியாதி விசேஷத்தை உண்டோ என்று ராஜா கேட்க அவரும் ஒரு உபாத்யாயர் உண்டு என்று பட்டர் அருளிச் செய்தார் –
ஆயுஸ் ஸூ வளர்க்க ஒண்ணாத படி நியதாயுஸ் ஆனவனுக்கு உள்ளத்தில் உத்வேகம் பிறக்கைக்கும்
அநியதாயுஸ்ஸூ க்களுக்கு ஆயுஷ்காமீயங்களை இட்டு வளர்க்க நினையாமைக்குமாக துக்காதிகள் இவனுக்கு உபாத்த்யாயர்கள் –
இது ஆழ்வான் உள்ளிட்டார் பக்கலிலே பிரசித்தம்
அபசாரங்களையும் தத் பலங்களையும் சிலர்க்கு காட்டி மறைக்கிற இதுவும் –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போலே தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா என்று
நிர்வேதப் பூர்த்தியைக் கடுகப் பிறப்பித்து தான் இசைந்த சம்சார நிவர்த்தனத்தை கடுக இவனையும் இசைவிக்கைக்காக அத்தனை –

இவ் விடத்தில் பிரதி கூல அனுபவ அம்சம் துஷ்கர்ம பலம் –
இது சிஷணம் ஆகிறதுவும் பிராயாச்சித்ததில் மூட்டுகிறதுவும் உபாய பலம்
இவற்றில் சிஷணாதிகள் பிராரப்த ஸூஹ்ருத விசேஷ பழமையும் வரும்
பிராணார்த்தியாய் விழுந்த காகத்துக்கு பிராணன் கொடுக்கையாலே அங்கும் பிரபத்தி பலம் பூர்ணம்
துஷ் பிரக்ருதியான இக் காகத்துக்கு சிஷையாக ஒரு கண்ணை வாங்கி விட்டதுவும் நிக்ரஹம் அன்று -அனுக்ரஹ விசேஷம்-
ஆகையால் ஆபூத சம்ப்லவம் நரகத்திலே கிடக்கும்படி ஷண க்ருத பாப கர்மங்களிடைய பிரபாவமான
பகவன் நிக்ரஹ விசேஷத்தை இசைந்தால் போலேயும்
துக்க சம்சார காந்தாரம் அபாராமி பிதாவதாம் ஏக கிருஷ்ண நமஸ்காரோ முக்தி ரஸ்ய தேசிக –என்றும்
ஏகோபி கிருஷ்ணே ஸூ க்ருத ப்ரணாமோ தசாச்வமேதா வப்ருதேந துல்ய -தசாச்வமேதீ பு நரேதி ஜன்ம பிரணாமி ந புனர்பவாய -என்றும்
ஸூ க்ருத பிரணாம விசேஷத்தினுடைய பிரபாவத்தை இசைந்தால் போலேயும்
சக்ருதேவ பிரபன்னாய –அத பாதக பீதஸ்த்வம் குயோ நிஷ்வபி சஞ்ஜாதோ ய -சக்ருத் சரணம் கத -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
இப் பிரபத்தி பிரபாவத்தையும் சாஸ்த்ரார்த்தோ பப்லவ பிரசங்கம் இல்லாத விஷயத்தில் சுருங்காதே அனுசந்திக்கப் பிராப்தம்
தம் மாதா பித்ருத ஹந்தாரமபி பாதி பாவார்த்திஹா -என்றதுவும் உத்தாரக விஷயம் அல்லாத போது உபப்லவம் இல்லை
உத்தாரக விஷயத்தில் நிஸ்தார கர்மங்கள் முன்பே சொன்னோம்
சரணம் ச பிரபன்னா நாம் தவாஸ் மீதி ச யாசதாம்
பிரசாதம் பித்ரு ஹந்த்ருணாம் அபி குர்வந்தி சாதவ -இத்யாதிகளும் இப்படிக்கு ஸூகடிதங்கள்-

நம் தர்சனத்தில் நிலையுடையாராய் முமுஷூக்களாய்-கர்ம ஞான பக்தி பிரபத்திகளிலே ஏதேனும் ஒரு சாஸ்த்ரீய மர்யாதையாலே
பகவத் பிரவணர் ஆனார்க்கு
யாத மானஸம் ஜ்ஞாத்ய வச்தைகளிலே அர்த்த சங்காதிகள் ஆகிற சில வ்யாதிகள் நிச் சேஷமாக சமியாதமட்டைக் கொண்டு
இவர்கள் பிராக்ருதரைப் போலே
அசம்பாஷ்யர் என்று சில வைராக்ய மாத்ர பிரதானர்கள் சொல்லுவார்கள் –
இதுவும் பகவஸ் சாஸ்த்ராதிகளில் கின்நவ்ருத்யாதி பிரகரணங்களாலே பரிஹார்யம் –
டம்பி ஹைதுக பாஷண்டி பகவ்ருத்தீச்ச வர்ஜயேத்-
யே து சாமான்ய பாவேன மன்யந்தே புருஷோத்தமம்
தே வை பாஷண்டிநோ ஜ்ஞேயோ சர்வ கர்ம பஹிஷ்க்ருதா –
பும்ஸாம் ஜடா பரண மௌண்டயவதாம் வ்ருதைவ -இத்யாதிகளில் படியே
வழி தப்பினார் பக்கல் சொல்லும் வார்த்தையை நல் வழியில் அடி தடுமாறினார் பக்கல் சொல்லலாகாது இறே-
பாகவதரில் ஊன ஹீன பரிஸ் ரஸ்த நஷ்ட விஷயங்களிலும் பரிமாற்றங்களில் தாரதம்யம் விதித்ததே யாகிலும்
ஏகாந்த்யம் குலையாதே இருக்கில் முடிவில் ஒரு விரகாலே
இவர்கள் ஈடேறி விடுவார்கள் -இவர்கள் திறத்திலும் அபசாரம் ஆகாது என்று இறே சாஸ்திரம் விதித்தது –
தேஹாபிக்ரம நா சோஸ்தி பிரத்யவாயோ ந வித்யதே ஸ்வல்ப மப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்-என்றும் –
பார்த்த நைவேஹ நாமுத்ர விநாசஸ் தஸ்ய வித்யதே ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி -என்றும்
கர்ம யோகத்தில் சொன்ன பிரபாவம் பக்தி பிரபத்திகளில் கைமுதிக நியாய சித்தம் இறே
அபிசேத் ஸூ துராசாரோ பஜதே மாம நன்ய பாக் சாதுரேவ ச மந்தவ்ய -சமயக் வ்யவசிதோ ஹி ச -என்றும்
அபி பாபேஷ் வ பிரதா மத்பக்தா பாண்டு நந்தன முச்யந்தே பாதகை சர்வை பத்ம பத்ர மிவாம் பசா -என்றும்
சர்வேஸ்வரன் தானே அர்ஜுனனையும் தர்ம புத்ரனையும் பற்ற அருளிச் செய்தான் –

அப்படியே ஸ்ரீ புண்டரீக நாரத சம்வாதத்திலும்
சீரவாஸா ஜடீ வா ஸ்யாத் த்ரிதண்டீ முண்ட ஏவ வா
பூஷிதோ வா த்விஜஸ்ரேஷ்ட ண் லிங்கம் தர்ம காரணம்
யே ந்ருசம்சா துராத்மான பாபாசாரரத சதா
தே அபியாந்தி பரம் ஸ்தானம் நாரா நாராயாணாச்ரிதா -என்றும்

லிப்யந்தே ந ச பாபேன வைஷ்ணவா வீத கல்மஷா
புனந்தி சகலம் லோகம் சஹஸ்ராம் சுரி வோதித -என்றும்

ஜன்மாந்திர சஹஸ்ரேஷூ யஸ்ய ஸ்யாத் புத்தி ரீத் ருசீ
தாசோஹம் வா ஸூ தேவஸ்ய சர்வ லோக மகாத்மனே
சா யாதி விஷ்ணு சாலோக்யம் புருஷோ நாத்ர சம்சய
கிம் புனஸ் தத்கத ப்ராணா புருஷா சம்யதேந்த்ரியா -என்றும்

பகவத் பிரவணர் அனுவ்ருத்த தோஷர் ஆனாலும் யதார்ஹ பிராயச்சித்தாதி முகத்தாலே மோஷ சித்தியிலே
சம்சயம் இல்லை என்னும் இடத்தையும்
நிர்தோஷருக்கு கௌமுதிக ந்யாயத்தாலே கடுக மோஷ சித்தியையும் சொல்லி
அஸ்வமேத சதைரிஷ்ட்வா வாஜபேய சதைரபி
ந ப்ராப்னுவந்தி ஸூ கதிம் நாராயண பராங்முகா -என்றும்
பகவத் விமுகருக்கு அனந்தங்களான உத்க்ருஷ்ட ஸூஹ்ருதங்களாலும் ஸூகதி இல்லை என்று
மகரிஷி இவ்வர்த்தங்களை பிரபஞ்சித்தான் –
யே ஹ்யேனம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது-என்கையாலே பகவத் ஞானம் உடையவனுடைய பிரபாவம்
நித்ய ஸூரிகளுக்கும் பரிச்சேத்யம் அன்று இறே

ஆகையால் அனுவ்ருத்த புத்தி பூர்வ தோஷரான பாகவதர்க்கு உப க்லேசாதிகள் உண்டானாலும் அவஜ்ஞாதிகள் பண்ணலாகாது –
அவைஷ்ணவ நமஸ்காராத் அவமா நாச்ச கேசவே
வைஷ்ணவே பரிவாதாச்ச பதத்யேவ ந சம்சய -என்றும்
யதி நிந்தாபரோ நித்யம் வைஷ்ணவா நவ மன்யது
அத்யாத்ம விமுக சோஸ்து பிசஸ் தைந்யம் கரோதி ய -என்றும்
நித்யா நிஷ்டா ந சம்யுக்தான் அத்யாத்ம ஞான துர்பலான்
வ்யாமோஹயதி துர்புத்தி பிசஸ் தைந்யம் கரோதி ய -என்றும் சொல்லப் பட்டது இறே

ஸ்ரீ பாஷ்யகாரர் அக்ருத்ய கரண க்ருத்ய அகரணங்களோடு பகவத் அபசாராதிகளை சேர எடுத்தது
கோபாலி வர்த்தன ந்யாயத்தாலே பகவத் அபசாராதிகள் தீவ்ரங்கள் என்கைக்காக –
எல்லாம் பகவத் அபசாரங்களாய் இருக்க முக பேதங்களை விலஷித்து சிலவற்றை இங்கு பாகவத அபசாரங்கள் என்கிறது-
யாவை சில அபசாரங்களை புறம்பே செய்கிறான் -அப்படிப்பட்டவை தம்மையே
பகவத் பாகவத விஷயங்களிலே செய்தால் விஷய ஸ்வ பாவத்தாலே
ராஜ த்ரோஹாதிகளைப் போலே மிகவும் தண்ட ஹேதுக்களாம் என்று விசேஷோ பாதனத்துக்கு அபிப்பிராயம்
நரகத்துக்கு நாற்றங்காலான சம்சார மண்டலத்திலே நல்வழி நடப்பார் துர்பலராய் இருக்க பகவத் விஷயத்தைப் பற்றி அதிகார அனுரூபமாக
முக்தி மார்க்கத்துக்கு முன்னடியான கர்ம யோகாதி பர்வ பேதங்களிலே நின்றாரையும் நெகிழ நினைக்கை பாகவத அபசாரம் –

ந சப்த சாஸ்த்ரா பிர தஸ்ய மோஷோ ந போஜ நாச்சா தன தத் பரஸ்ய
ந சைவ ரம்யாவசத பரி யஸ்ய ந லோக சித்த க்ரஹணே ரதச்ய-இத்யாதிகளிலும் -பகவத் ப்ராவண்யம் இன்றிக்கே
சிச் நோதரே யே அபிரதா சதைவ ச்தேயான்ருதா வாக்பருஷாச்ச நித்யம்
வ்யபத தர்மா இதி தான் விதித்வா துராத்தேவா சம்பரிவர்ஜயந்தி -என்கிறபடியே
பாஹ்ய விஷய ப்ராவண்யமே யுடையாருக்கு மோஷம் இல்லை என்றபடி –
பராங்முகாநாம் கோவிந்தே விஷயா சக்த சேதஸாம்
தேஷாம் தத் பரமம் ப்ரஹ்ம தூராத் தூரதரே ஸ்திதம் -இத்யாதிகளிலும் இவ்வர்த்தம் சித்தம்
தன்மயத்வேன கோவிந்தே யே நரா ந்யச்த சேதச
விஷய த்யாகாதி நஸ் தேஷாம் விஜ்ஞேயம் ச ததந்திகே -இத்யாதிகள் பகவத் பரருமாய் விஷய த்யாகாதிகளும்
ஆனார்க்கு விளம்பம் இல்லை என்கின்றன-

உள்ளொரு பசை அற்று பசுத் தோல் போர்த்து புலிப் பாய்ச்சல் பாயும் கணக்கிலே பகவதவபானை பண்ணித்
திரிவாரையும் உள்ளறியும் அளவும் உபரிசராதிகள் அசூராதிகளை ஆதரித்தால் போலே ரூப நாமங்களை இட்டு
ஆதரிக்கப் பிராப்தம் -இப்படிக்கொத்த சைலூஷ வ்ருத்திகளைப் பற்ற
ந லிங்கம் தர்ம காரணம் -என்றும்
பலம் கதக வ்ருஷச்ய யத்யப்யம்பு பிரசாதனம்
ந நாம க்ரஹேண நைவ தஸ்ய வாரி ப்ரசீததி–என்கிறது –

ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா கோரேஷூ ச வ்யாதிஷூ வர்த்தமா நா
சம்கீர்த்ய நாராயண சப்த மாதரம் விமுக்த துக்கா ஸூ கி நோ பவந்து -என்றும்
அவிசே நாபி யன் நாம்நி கீர்திதே சர்வ பாதகை
புமான் விமுச்யதே சத்ய சிம்ஹத்ரஸ் தைர் ம்ருகைரிவ -என்றும்
சாங்கே த்யம் பரி ஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹௌநமமேவ வா
வைகுண்ட நாம க்ரஹணம் அசேஷாக விநாசனம் -என்றும்
ஹரிர் ஹரதி பாபா நி துஷ்ட சித்தை ரபி ஸ்ம்ருத
அநிச்சயாபி சம்ச்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக -என்றும்
ஏதா வதாலபக நிர்ஹரணாய பும்ஸாம்
சங்கீர்த்தனம் பகவதோ குண கர்ம நாம் நாம்
ஆக்ருச்ய புத்ரமகவான் யதஜாமிளோபி
நாராயணேதி மித்ரயமாண உபைதி முக்தம் -என்றும்

மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால்
கத்திர பந்துமன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய பித்தனைப் பெற்றும் -என்றும் சொல்லுகிற இவை எல்லாம்
பகவத் பிரவித்வேஷம் இல்லாதவனுக்கு ஆஸ்திக்யம் மந்தமானாலும் பாலாதிகளைப் போலே அர்த்த ஞானம் இல்லை யாகிலும்
வாய் வெருவுமா போலே அபிசந்தி இல்லையாகிலும் சங்கேச பரிஹாசாதிகளிலே துவக்குண்டு அபிசந்த்யந்தரம் உண்டாகிலும்
பிரயோஜனாந்தர சங்கம் உண்டாகிலும் -தோஷாந்தரங்கள் உண்டாகிலும் -சங்கீர்த்தனம் பாவன தமம் என்றபடி

அல்லது பகவத் பரிவாதாதி களுக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் பண்ணினாலும் பாபம் போம் என்றபடி அன்று –
பகவத் பரிவாதாதிகள் பாதகங்கள் ஆகவே இறே பரிகணித்துக் கிடப்பது –
யே த்விஷந்தி மஹாத்மானம் ந ஸ்மரந்தி ச கேசவம்
ந தேஷாம் புண்ய தீர்த்தேஷூ கதி சம்சர்கிணாமாபி -என்றும்
ய புத்ர பிதரம் த்வேஷ்டி தம் விதா தன்ய ரேதசம்
யோ விஷ்ணும் சததம் த்வேஷ்டி தம் வித்யா தந்தய ரேதசம் -என்றும் சொன்னார்கள் இறே –

கோப்ய காமாப்தயாத் கம்சோ த்வேஷாச் சைத்யாதயோ ந்ருபா
சம்பந்தாத் வ்ருஷ்ணயோ யூயம் ச்நேஹோ ப்தக்த்யா வயம் ப்ரபோ–என்கிறபடியே
ஏதேனும் ஒரு வகையிலே துவக்குண்டாரும் பிழைப்பர் என்றதுவும்
யயா கயா ச விதயா சம்பந்தா ச து பாவன-என்றதுவும் –
பூர்வ ஸூஹ்க்ருத விசேஷங்களாலே நியதரான அதிகாரி விசேஷங்களைப் பற்ற என்னும் இடமும்
இவர்களுடைய பூர்வாபர வ்ருத்தாந்தங்கள் சொல்லுகிற புராணாதிகளிலே பிரசித்தம்

இப்படி பகவத் ஷேத்ரத்தில் சரீர விச்லேஷாதிகள் மோஷோபகாரமாம் என்றதுவும் பஸ்வாதிகளைப் போலே யாகிலும் –
ப்ராதிகூல்யம் இல்லாதார்க்கு உபகாரமாம் என்றபடி
இங்கன் அல்லாத போது அங்கே பகவத் ப்ராதிகூல்யம் பண்ணப் புகுந்து
பட்டவர்களுக்கும் மோஷம் உண்டாகப் பிரசங்கிக்கும்
துஷ்டேந்த்ரிய வசாச் சித்தம் நருபாம் யத் கல்மைஷ்ர் வ்ருதம்
ததந்தகாலே சம்சுத்திம் யாதி நாராயணாலயே-என்கிற ஸ்ரீ சாத்த்வத வசனமும்
ஷேத்ர வாசாதி தத் பரரானார்க்கு சாஸ்திர விரோதம் இல்லாத சப்தாதி பிராவண்யத்தாலே முன்பு
பகவத் சாஷாத் காராதிகள் இல்லையாகிலும்
அந்திம காலத்தில் தெளிவுண்டாம் என்னும் இவ்வளவிலே தத் பரம் என்னும் இடம் பிரகரணாதி சித்தம்

யம் யோகின பிராண வியோக காலே யத்நேந சித்தே விநிவேசயந்தி-என்று சொல்லப் படுகிற
ஸ்வ யத்ன அபேஷை அற அந்திம காலத்திலே
இவர்களுக்கு தெளிவு வருகிற இது ஏற்றம் இது கேவலம் மதீயயைவ தயயாதி பிரபுத்த -என்று ப்ரபன்ன விஷயத்திலும் பிரதர்சிதம்
ஆகையால் பகவத் ப்ரதிகூலர்க்கு ப்ராதிகூல்ய விசேஷமான ரூப நாம ஷேத்ர வாச சங்கீர்த்த நாதிகள் தஞ்சமாகாது –
புண்ய ஷேத்ரங்களில் பண்ணும் பிரதிகூல சரணங்கள் மிகவும் பாதகங்களாம் என்னும் இடம் பஹூ சாஸ்திர சித்தம் –
இதுவும் பகவத் பிரபாவம் –
பகவத் பிரவணருக்கு வ்ருத்ரன் ஷத்ர பந்து உள்ளிட்டார்க்குப் போலே அனுகூல்யங்களதாமே எல்லா தோஷங்களையும்
ஒரு விரகாலே போக்கி உத்தாரகங்கள் ஆகும் –
ஆன பின்பு ஸ்வ சங்கல்ப நியதமாய் இருப்பது ஏதேனும் ஒரு வ்யாஜத்தாலே சர்வேஸ்வரன் ஸ்வரூப பிராப்தமான முக்த ஐஸ்வர்யம்
கொடுத்து அருள நினைப்பிட்ட அதிகாரிகள் பக்கல் உள்ள தோஷங்களை செலவு செய்வான் –

ஏக சாஸ்தா ந த்வதீய -அஸ்தி சாஸ்தா -என்றும்
ப்ரசாசிதாராம் சர்வேஷாம் -என்றும்
சாஸ்தா விஷ்ணுர சேஷச்ய-என்றும் -சொல்லப்படுகிறவன் தானே தெளிந்து
ராகாதி தூஷிதே சித்தே நாஸ்பதோ மது ஸூ தன
ந பத்நாதி ரதிம் ஹம்ஸ கதாசித் கர்த்தாம்பசி –என்று
இத்யாதிகளைப் பார்த்து நெகிழாதே -இவ்வதிகாரிகள் பக்கல் உள்ள குணாம்சத்தை
மருபூமியிலே தண்ணீர் பெற்றால் போலே உகந்து
கர்மணா மநஸா வாஸா யத பீஷ்ணம் நிஷேவதே
ததேவா பஹரத்யேநம் த்ஸ்மாத் கல்யாணமாசரேத்–என்கிறபடியே கர்ண த்ரயத்தாலும் தான் நல் வழி கை விடாதே
சம்சார விஷ வ்ருஷச்ய த்வே பலே ஹி அம்ருதோபமே
கதாசித் கேசவ பக்தி தத் பக்தைர் வா சமாகம -என்று இங்கு இருந்த காலத்துக்கு பிரயோஜனமாக எடுத்த
பரமனைப் பயிலும் திருவுடைய சிறு மா மனிசருடன் சேர்த்தியாகிற சீரிய பெறாப் பேற்றை
திருவருளால் பெற்றோம் என்று க்ருதார்த்தனாய்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினை என்று -வ்யவஸிதிதனாய்
ஆள்கின்றான் ஆழியான் யாரால் குறையுடையம் -என்கிறபடியே
பரமபதத்தில் பெறப் புகுகிற பரிபூர்ண கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு இங்கே முடி சூடி இருக்க பிராப்தம் –

இப்படி வ்யவஸ்திதமான பிரபாவம் ரகஸ்ய த்ரயத்திலே பல நிர்தேச பிரதேசங்களிலே அநு ஷங்க சித்தமாக அனுசந்தேயம்-

உண்மை உரைக்கும் மறைகளில் ஓங்கிய உத்தமனார்
வண்மை அளப்பரிது ஆதலின் வந்து கழல் பணிவார்
தண்மை கிடக்க தரம் அளவென்ற வியப்பிலதாம்
உண்மை உரைத்தனர் ஓரம் தவிர உயர்ந்தனரே —

ராக த்வேஷ மதாதிகை ரிஹ மஹாரஷோபி ரஷோபித
நிதயே ரஷிதரி ஸ்திதே நிஜ பர நயாசாபிதா நம் தப
யத் கஷீக்ருத மத்யசேத விவிதான் தர்மாநதர் மத்ருஹ
தத் பூ மார்ணவ லேச வர்ண நமபி ப்ராசாம் ந வாசாம் பதம் —

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading