ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -25 -பிரபாவ வ்யவஸ்த அதிகாரம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
————————————————————–

அதிகாரம் -25 -பிரபாவ வ்யவஸ்த அதிகாரம் —

ஸ்வரூபம் யத்யாத்ருக் குண விபவ லீலாதி ச விபோ
ததாஜ்ஞா ஸேதுச்ச சுருதி ப்ரவசேயம் ததகிலம்
ததா தத் பக்தாநாம் தத்துப சதநாதேச்ச மஹிமா
யதா அதீதம் சத் பிர்யதி பதிமுகை அத்யவசித –

இப்படி த்வயத்தில் த்வீயாந்த பதங்களாலே பிரகாசிதமான சித்தோபாய விஷயமாகவும்
ஆக்யாத பதத்தாலே சொல்லப்பட்ட சாத்ய உபாய விஷயமாகவும் பிறக்கும் வியாகுலங்கள் சமிப்பிக்கும் வழி காட்டினோம்
இவ் உபாய ப்ரபாப விஷயமாக பிரமாணங்கள் காட்டின அளவுக்கு ஏற நினைத்தும் குறைய நினைத்தும் வரும்
கலக்கங்கள் சமிப்பிக்க வேணும் –
ஆஸ்போடயந்தி பிதர ப்ரண் ருத்யந்தி பிதா மஹா
வைஷ்ணவோ ந குலே ஜாதே ச நஸ் சந்தார யிஷ்யதி-என்றும்
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும் மா சதிர் இது பெற்று -என்றும் சொல்லுகிறபடியே
அநு பந்திகளுக்கும் உத்தாரகமான பிரபாவத்தை உடையனாய் இறே இவ் உபாய நிஷ்டன் இருப்பது
யோ ஹ்யேநம் புருஷம் வேத தேவா அபி ந தம் விது-என்று
பகவத் ஞானம் உடையவனுடைய பிரபாவம் தேவர்களாலும் பரிச்சேதிக்க ஒண்ணாது என்றார்கள் இறே
ஆனாலும் இதுக்கு விருத்தம் இல்லாத பிரமாண பலத்தாலே முற்பட ஜாதி வ்யவஸ்தை சொல்லுகிறோம் –

ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதா ஸ்ம்ருதா
சர்வ வர்ணேஷூ சூத்ரா யே ஹ்ய பக்தா ஜனார்த்தனே –என்று பகவத் பக்தி யாகிற குண விசேஷ சதா சப்தாவங்களாலே
அபக்ருஷ்ட ஜாதியரை உத்க்ருஷ்ட ஜாதீய வாசக சப்தத்தால் சொல்லியும்
உத்க்ருஷ்ட ஜாதியரை அபக்ருஷ்ட ஜாதீய வாசக சப்தத்தால் சொல்லியும் இருந்தது
இது அடியாக பகவத் பக்தர் எல்லாரும் ஏக ஜாதியர் அன்றோ என்று ம்ருது பிரஜ்ஞர்கள் நினைப்பார்கள்
இங்கனே யாகில் பாகவத ப்ராஹ்மணன் இன்னபடி வர்த்திப்பான் -பாகவத சூத்ரன் இன்னபடி வர்த்திப்பான் என்று
ஆசார நியமங்கள் சொல்லும் சர்வ சாஸ்திரங்களும் விரோதிக்கும்

கேவல ப்ராஹ்மணனுக்கும் கேவல சூத்ரனுக்கும் உள்ள எல்லை
பாகவத ப்ராஹ்மணனுக்கும் பாகவத சூத்ரனுக்கும் கொள்ள வேணும் என்றும்
இவர்களை சமர் என்கிற சாஸ்திரங்களும் பரம புருஷார்த்த சாம்யாதிகளாலே -என்று கிடாம்பி அப்புள்ளார் அருளிச் செய்தார் –
குலம் தரும் -என்கிற பாட்டுக்கு வியாக்யானம் பண்ணி அருளிய அபியுக்தரும் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையும் –
ஜன்மத்தால் வ்ருத்தத்தால் குறைந்தான்
ஒருவனுக்கு பகவத் சம்பந்தம் உண்டானாலும் அவனை இவை யுடையான் ஒருத்தன் தாழ நினைக்க கூச வேண்டும்படி
யாயிற்று பகவத் பிரபாவம் இருக்கும்படி –
ஆனால் அவர்களோடு பெண் கொடுத்து கொள்ளுகிறது இல்லையே என்னில் அது ஜாதி நிபந்தனம்
ஸ்ரேஷ்டம் சொல்லுகை குண நிபந்தனை என்று நிஷ்கர்ஷித்தார்கள் –
குலம் தரும் -என்றதுவும் -பண்டைக் குலத்தை தவிர்ந்து என்றதுவும்
தொண்டைக் குலத்தில் உத்கர்ஷம் சொன்னபடி-தேவதாந்த்ராதி சங்கீர்ண குலமன்றே இவனது –
மா ஜநிஷ்ட ச நோ வம்சே ஜாதோ வா த்ராக் விபத்யதாம்
ஆ ஜன்ம மரணம் யஸ்ய வா ஸூ தேவோ வ தைவதம் -என்று இறே ஏகாந்தி குலத்தின் பாசுரம் –
இப்படி வேறு ஒரு குலமானாலும் ஜாதி சப்தமும் குல சப்தமும் பின்நார்த்தமாகவும் பிரயுக்தமாகையாலே
ஜாதி பேதியாது -குலம் பேதிக்கும் –
ஸ்ரீ வைஷ்ணவ குலம் அந்தண ஜாதி போலே –திரு ஸூரபியானாலும்-திருக் கோயில் பசு வானாலும் –
கோத்வம் கழியாது இறே —

மகர்ஷிகளும் -ச சூத்ரா இதி மந்தவ்ய -இத்யாதிகளில் படியே
பிரதிபத்தி விசேஷங்களைப் பற்ற உத்க்ருஷ்டர் பக்கல் அபக்ருஷ்டர் சப்தமும்
அபக்ருஷ்டர் பக்கலில் உத்க்ருஷ்ட சப்தமும் பிரயோகித்தார்கள் இத்தனை –
ஆகையால் பகவத் பக்தர் அல்லாத பிராமணர் சூத்ரர்களைப் போலே அநாதரணீயர் என்றும் –
பகவத் பக்தரான சூத்ரர்கள் பிராமணரைப் போலே ஸ்லாக நீயர் என்றும் சாஸ்திர தாத்பர்யம் –
இங்கன் அல்லாத போது -சண்டாளம் அபி வ்ருத்தச்தம் தம் தேவோ பிராமணம் விது -என்றும்
சண்டாள பிரத்யவசிதா பரிவ்ராஜக தாபஸா-என்றும்
ந தேன வ்ருத்தோ பவதி யே நாச்ய பலிதம் சிர
பாலோபி ய பிரஜா நாதி தம் தேவா ஸ்தவிரம் விது -என்றும்
சொல்லுகிற — இப்புடைகளிலே நிந்தா பரசம்சௌ பண்ணுகிற வாக்யங்களைக் கொண்டு
சர்வ மரியாதைகளும் கலங்கும் படியாம்
ஆன பின்பு பிரதிபத்தி விசேஷார்த்தம் அந்ய த்ரான்யத்வ கீர்த்தனம்
விசேஷ விதி சா காங்ஷா தத்ர தத்தத் பிரவ்ருத்ய -என்று இங்குற்றைக்கும் சமாதானம் –

ஸ்ரீ விதுரரும் ஸ்வ ஜாத்யனுரூபமாக விவாஹாதிகள் பண்ணினார்கள்
பக்தவத் ஸூ த்விஜாக்ரேஷூ நிஷண்ண பரமாசனே
விதுரான்நாதி புபுஜே சுசீ நி குணவந்தி ச -என்று இதனைக் கேட்ட துரியோதனன்
பீஷ்ம துரோணா வதிக்ரம்ய மாம் சைவ மது ஸூ தன
கிமர்த்தம் புண்டரீகாஷ புக்தம் வ்ருஷள போஜனம் -என்று கேட்க –
த்விஷதன்னம் ந போக்தவ்யம் நைவ போஜ யேத்
பாண்டவான் த்விஷசே ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவா -என்று உத்தரம் அருளிச் செய்கையாலே
ஸ்ரீ விதுரர்க்கு துரியோதனன் சொன்ன ஜாதி விசேஷத்தை இசைந்தான் ஆயிற்று –

ஆனால் பிராமணர்க்கும் ஷத்ரியர்க்கும் சூத்ரனுடைய பக்வ அன்னத்தை புஜிக்கை நிஷேதம் அன்றோ என்னில்
ஆர்யா திஷ்டித சூத்ரா அன்ன சம்ச்கர்த்தாராஸ் ஸ்யு-என்று ஆபஸ்தம்பாதிகள் சொல்லுகிறபடியே
யுகாந்தரங்களில் ஆர்ய பரதந்தரான அவ்விடத்தில் நிஷேதம் இல்லை
இது சுசிஸ்து பிரயதோ பூத்வா விதுரோன்ன முபஹாராத் -என்று
ஸ்ரீ விதுரருடைய குண விசேஷங்கள் சொல்லுகையாலே ஸூசிதம்
ப்ரஹ்ம வித்துக்களான இவர் யோக பிரபாவத்தாலே தேஹன்யாசம் பண்ணின பின்பு
ப்ராப்தனான தர்மபுத்திரன் செய்த சம்ஸ்கார விசேஷம் தூஷ்ணீம் அனுஷ்டிதமாதல் வ்யக்தி விசேஷ நியதம் ஆதலால் அத்தனை –
இது கொண்டு வ்யக்தந்தரங்களில் நிச சஞ்சாரம் பண்ண ஒண்ணாது –
இங்கன் அல்லாத போது தர்மோத்தரான பாண்டவர்களுக்கு ஒரு நியதி விசேஷத்தாலே வந்த
தார சாதாரண்யத்தைக் கொண்டு சர்வ லோகமும் வ்யாகுலமாம் படியாம்

ஆகையாலே தம் தம் ஜாதிகளை விடாதே நின்று அவ்வோ ஜாதிகளுக்கு உசித பிரக்ரியையாலே
யதாதிகாரம் பகவத் கைங்கர்யம் பண்ணப் பிராப்தம் –
மோஹன சாஸ்த்ரங்களில் சொன்ன ஜாதி உத்தராதிகளை ப்ரமாணிகர் நினைக்கலாகாது –
சரு வ்யத்யாசாதி களான சில விசேஷ நிதானங்களாலே வருகிற விச்வாமித்ராதிகளுடைய நிலை
வேறு சிலருக்கு கூடும் என்கை வசன விருத்தம் –
விதுராதிகளிலும் உத்க்ருஷ்ட ப்ரபாவரான ஆழ்வார்களுடைய வ்ருத்தாந்த விசேஷங்களை நாம்
அனுஷ்டானத்துக்கு திருஷ்டாந்தம் ஆக்கலாகாது –
அவர்கள் விருத்தாந்தங்களையும் ஆராய்ந்தால் ஸ்வ ஜாதி நியமத்தைக் கடந்தமை இல்லை –

விஷ்ணுர் நித்யம் வித்யயா தாத ஈடய தஸ்மாத் ஞானம் நித்ய ரூபம் வரேண்யம்
ப்ராப்யம் ஞானம் ப்ராஹ்மணாத் ஷத்ரியாத்வா வைச்யாஸ் சூத்ராத்வா அபி நீசாத பீஷ்ணம்-என்கிற ஸ்லோகத்தில்
பகவத் ஞானம் அவசியம் சம்பாத நீயம் யாகையால்
பூர்வ பூர்வா லாபத்தில் மற்றுள்ளார் பக்கலிலும் ஞான மாத்ரம் விசதமாக சம்பாத நீயம் என்று இவ்வளவு சொல்லிற்று –
இப்படி யானாலும் வித்யா மந்த்ராதிகளுடைய க்ரஹணம் ப்ரஹ்மணாதி விஷயத்தில் ஆக வேணும் என்னும் இடம்
சூர்யோ நாவஹம் ஜாதோ நாத அந்யத் வக்து முத்சஹே-என்று ஸ்ரீ விதுர வாக்யத்தாலே சித்தம் –
துலாதார தர்ம வ்யாதாதிகளும் தர்ம சந்தேஹம் கேட்க வந்த ப்ராஹ்மணரைத் தாங்கள் சம்பாவித்துத் தீர்த்த யாத்ரையிலே
வழி திகைத்தாரை வழியிலே சேர்த்த மாத்ரம் அவர்களைத் தெளிவித்து விட்டார்கள் அத்தனை
அல்லது முக்யமான ஆசார்யகம் பண்ணினார்கள் அல்லர்
இப் பிரகாரகாரங்கள் இவ் இதிகாசங்களிலே கண்டு கொள்வது –

பக்திரஷ்டா விதா ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ச ச பூஜ்யோ யதா ஹ்யஹம் -என்றதவும்
கன்யா ப்ரதா நாதி பரம் அன்று -ஞான ப்ரதா நாதி பரம் என்று வியாக்யானம் பண்ணினார்கள்
பூஜ்ய -என்கிற சப்தமும் சாதாரணம் ஆகையாலே -பாகவதத்வம் உண்டானால் சர்வரும் சாஸ்திரம் சொன்ன மட்டுக்களிலே
ஆதரணீயர்- இவர்களை சஜாதீயரோடு ஒக்க நினைத்து அவஞ்சை பண்ணின போது நரகமாம் -என்று இவ்வளவில் தாத்பர்யம்-
இவ்வர்த்தத்தை ய சூத்ரம் பகவத் பக்தம் என்று தொடங்கி மகரிஷி சங்க்ரஹித்தான்
ஆகையால் ஜாதி வ்யவஸ்தை குலையாதே நிற்க பாகவத பிரபாவம் கண்டு கொள்வது –

அதோ ஜதே நிர்க்ருஷ்டாயா சர்வச்யா வா வி நாசத
சா ஜாத்யம் விஷ்ணு பக்தா நாம் இதி மந்தமிதம் வச-என்றும்

வைஷ்ணவத் வேன மான்யத்வம் சமானம் முனி சம்மதம்
ஜாத்யாதி த்வம் சதஸ் சாம்யம் பக்தி காலே பவிஷ்யதி -ஸ்ரீ பகவத் கீதாதிகளிலும்
ஸ்த்ரியோ வைச்யாஸ் ததா சூத்ரா தே அபி யாந்தி பராம் கதிம் -என்றும்
ஸ்வே ஸ்வே கர்மண்யமிரத சம்சித்திம் லபதே நர -ஸ்வ கர்ம நிரதஸ் சித்திம் யதா விந்ததி தச்ச்ருணு -என்றும்
ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய சித்திம் விந்ததி மா நவ -என்றும்
தஸ்மாத் ச பிரணவம் சூத்ரோ மன்நா மாநி ந கீர்த்தயேத் -என்றும்
வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர புமான் விஷ்ணு ராரார்த்யதே பன்னா நான்யச் தத் தோஷ காரக -என்றும்
ந சலித நிஜ வர்ண தர்மதோ ய -என்றும் சொல்லி பாகவதனுக்கே யதாபூர்வம் ஜாதி வ்யவஸ்தையும்
அதுக்கு அனுரூபமான வ்ருத்த வ்யவஸ்தையும் ஸூஸ்பஷ்டமாக சொல்லப் பட்டது

இப்படி பாகவதத்வம் ஆகிற குணமும் அதடியாக வரும் புருஷார்த்த விசேஷமும் சமானமாய் இருக்க ஜாதி விசேஷங்களும்
வ்ருத்தி விசேஷங்களும் நித்ய வ்யவஸ்திதங்கள் என்னும் இடம் சூத்ர சாது கலி சாது -இத்யாதிகளிலும் பிரசித்தம் –
தம சூத்ரே ரஜ ஷத்ரே ப்ரஹ்மணே சத்த்வமுத்தமம் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
சத்வாதி குண தாரதம்யவத்தான சரீரத்திலே ப்ராஹ்மண்யாதிகள் வேறே –
மனஸ்சில் சத்வாதி குண விசேஷம் அடியாக சர்வ ஜாதிகளிலும் பிரசம்சா வாக்யங்களால் சொல்லப்பட்ட ப்ராஹ்மண்யாதிகள் வேறே-
இவற்றில் சாரீர குண விசேஷம் அடியாக வ்யவஸ்திதங்களான சாரீர ஜாதி விசேஷங்கள் உத்பத்தி சித்தங்களாய்
மரணாந்தரமாக ஸ்திரங்களாய் இருக்கும்
மானஸ மான சத்த்வாதி குண உன்மேஷம் அடியாக சொல்லுகிற ப்ராஹ்மண்யாதிகள்-சர்வ ஜாதிகளுக்கும் சம்பாவிதங்களாய்
ப்ரஹ்லாதிகளுக்கு ஜன்ம சித்தங்களாய் -நீக்கி உள்ளாருக்கு ஆச்சார்ய சம்பந்தாதி ஹேதுக்களாலே ஆகந்துகளாய் இருக்கும் –

இதில் சாரீர ஜாதி விசேஷங்களை இட்டு சில சாஸ்திரங்கள் நியதங்களாம்-
மானசமான ப்ராஹ்மாண்யாதிகளை இட்டு அவற்றுக்கு அனுரூபமான புருஷார்த்த விஷயங்களும்
பிரசம்சாதிகளும் சர்வ ஜாதியிலும் சம்பாவிதங்களாம்-
இதில் ப்ரஹ்மணாதிகள் பக்கலிலே மானசமான விபரீதாகாரங்கள் வந்தால்
சம தமாதி போக்யமாக சாஸ்திர சித்தமான ஜன்மத்திலே பிறந்து தப்பினான் என்று மிகவும் நிந்தை நடக்கும் –
ஜாத்யந்தரங்களிலே பிறந்து குணோத்தரனாய் போந்தான் ஆகில்
ஏதை சமேத சூத்ரோ அபி வார்த்தக மானமர்ஹதி -இத்யாதிகளில் படியே பரசம்சை மிகவும் நடக்கும் –
இவற்றில் சாரீரமாயும் மானசமாயும் வரும் உத்கர்ஷம் கர்வ ஹேதுவாமாகில் அனர்த்த கரமாம் –

இவ் விரண்டு வழியாலும் உள்ள அபகர்ஷம் –
குலங்களாய ஈரிரண்டில் -என்கிற பாட்டிலும்
ஐதித்வாஹம் வம்சே -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -61–என்கிற ஸ்லோகத்திலும் சொல்லுகிறபடியே
தான் நின்ற நிலை தெளிந்து -கார்பண்யத்தை விளைத்து -அகிஞ்ச நாதிகாரமான உபாய விசேஷத்தில் மூட்டுமாகில்
புருஷார்த்த காரனமாகையாலே ஸ்லாக்கியமாம் –
இப்படி ஜாதி வ்யவஸ்திதையும் -ஜாதி அனுரூபமான வ்ருத்த வ்யவச்தையும் உண்டானால்
சர்வருக்கும் பாகவதத்வ நிபந்தனமாக முன்பு சமர்ப்பித்த உத்தேஸ்யத்வ பிரபத்திக்கு விரோதம் இல்லை –
இப் பகவத் பரரில்-ஐ காந்த்யம் பகவத் யேஷாம் சமா நமதி காரிணாம்-என்கிறபடியே தேவதாந்திர ஸ்பர்சம் அற்றவர்கள் ஏகாந்திகள்-
அவர்களில் வைத்துக் கொண்டு ஜ்ஞாநீ து பரமைகாந்தி -என்கிறபடியே பிரயோஜனாந்த ஸ்பர்சம் அற்றவர்கள் பரமை காந்திகள் –
அவர்களில் வைத்துக் கொண்டு விளம்பாஷமராய் -சர்வ சக்தியான சேஷி பக்கலில் பரந்யாசம் பண்ணி -செய்கிற கைங்கர்யத்துக்கு
பிரயோஜநாந்தரம் கோலுகை-பொலிசைக்கு இடுவார் மாத்ரம் – என்கிற ஸ்ருத்யர்த்தத்தை தெளிந்து இக் கைங்கர்யத்துக்கு
மோஷமும் பிரயோஜனம் என்று கோலாதே கைங்கர்யைக பிரயோஜனராய் இருக்குமவர்களுடைய
பரமை காந்தித்வம் ஷோடச வர்ண ஸ்வர்ணத்தோடு ஒக்கும்
இம் மாற்று அறியும் மகரிஷிகள் மகா பாராதாதிகளிலே இப் பரமை காந்திகளுடைய மகாத்ம்யத்தை பிரபஞ்சித்தார்கள் –

இவன் பிரபாவத்தைப் பற்ற
நாராயணைக நிஷ்டச்ய யா யா வ்ருத்திஸ் ததர்சனம்
யோ யோ ஜல்பச்ய ச ஜப தத்த்யானம் யன்நிரீஷணம்
தத்பாதாம் ப்வதுலம் தீர்த்தம் ததுச்சிஷ்டம் ஸூ பாவ நம்
ததுக்தி மாத்ரம் மந்த்ராக்ராஹ்யம் தத்ச்ப்ருஷ்ட மகிலம் சுசி -என்கிற ஸ்லோகங்கள் பிரமாணமே யாகிலும்
இங்கு -யா யா வ்ருத்திஸ் ததர்சனம் -என்றது சாஸ்திர விருத்த வ்ருத்தியைச் சொன்னபடி அன்று –
தேச காலாதி வைகுண்யத்தாலே-ஆபத் ஸ்வ நந்தரா வ்ருத்தி -என்கிற நிலையில் நின்றாலும் அது
சமாராத நோப யுக்தமான சம்யகு பாதநமாம் -என்றபடி
மன் நிமித்தம் க்ருதம் பாபமபி தர்மாய கல்பதே -என்றதுக்கும் இதுவே தாத்பர்யம் –
இங்கன் அல்லாத போது அதி பிரசங்கம் வரும் –
யா யா சேஷ்டா -என்ற பாடமானாலும் அர்த்த ப்ராப்த சாஸ்திர ப்ராப்தங்கள் போலே –
ஸ்வ பாவ ப்ராப்தங்களான நிமிஷ உன்மேஷாதிகளும் சமர்ப்பணீயங்களாக ரகஸ்ய சாஸ்திர சித்தம் ஆகையாலே
தத் அர்ச்சனம் என்னலாம் –
இது நிஷித்தத்தில் பிரசங்கியாது-
பிரதிஷித்தம் அல்லாத ஸ்வ பாவ அர்த்த சாஸ்திரங்கள் இறே- சமர்ப்பணீயங்களாக ஓதப்பட்டன –
இதின் உப ப்ருஹ்மணமான-யத் கரோஷி யத் நாசி -ஸ்ரீ கீதை -9-27–என்கிற ஸ்லோகத்துக்கும்
இப்படி சாஸ்திர விரோதம் இல்லாத விஷயத்தில் தாத்பர்யம் –

இவற்றில் சாஸ்திர விருத்தங்கள் வந்தால் அதிகார அனுரூபமான நைமித்திகம் நிக்ரஹ சமனமான கைங்கர்யம்
யோ யோ ஜல்ப ச ச ஜப -என்றதவும்
பாருஷ்ய மதிவாதச்ச பைசுநம் சைவ சர்வச அசம்பத்த ப்ரலாபச்ச வாங்மயம் ஸ்யாச்சதுர்விதம் -என்று
சாஸ்திர பிரதிஷிதமான வ்ருதா ஜல்பத்தை சொன்னபடி அன்று –
தத்தவ ஹித விஷயமாக சிஷ்ய குரு ச பிரமச்சாரி சிஷ்ட ஸ்ரேயோர்த்திகளோடே அஜ்ஞாத ஜ்ஞாபநார்த்தமாகவும்
ஜ்ஞாத ஸ்த்ரீகணார்த்த மாகவும் சம்சய நிராகரணார்த்த மாகவும் பண்ணும் உக்தி பிரத்யுக்தி பரம்பரைகளைச் சொல்லுகிறது –
ந விக்ருஹ்ய கதாம் குர்யாத் -என்று சாமான்யேன சொல்லச் செய்தேயும் –
யதா சக்தி நிக்ருண்ஹீயாத் தேவதா குரு நிந்தகான் -என்று விசேஷித்து
தர்ம சாஸ்திர சித்தம் ஆகையாலே பாஹ்ய குத்ருஷ்டிகளைப் பற்ற விஜிகீஷூவாக சொல்லும்
வாக்ய பரம்பரையை ஜல்பம் என்றதாகவுமாம் –

தத் த்யானம் யன் நிரீஷணம்-என்றது நிஷித்த ந்ருத்தாதி தர்சனத்தைச் சொன்னபடி அன்று –
கைங்கர்யார்த்தமாக பிரவர்த்திக்கும் போது இவன் கண்ணுக்கு இலக்கான பதார்த்தங்கள் எல்லாம் –
அஹம் ஹரி சர்வாமிதம் ஜனார்த்தன -இத்யாதிகளின் படியே
நிற்கின்றது எல்லாம் நெடுமால்-நான்முகன் திருவந்தாதி -54- -என்று ப்ராஹ்மாத்மகமாய் தோன்றும் பிரகாரத்தைச் சொன்னபடி –

தத் பதாம் ப்வதுலம் தீர்த்தம் -என்றதுவும் பிராப்த விஷயத்தில் குணாதிக்யம் சொல்லுகிறது –
பாதோதகம் தீர்த்தமாக சொன்ன விஷயத்தில் நாராயணைக நிஷ்டத்வம் உண்டாயிற்றாகில் அது சர்வாதிக தீர்த்தம் என்றபடி
அல்லது பாகவதனுடைய பாதத்திலே யாத்ருச்சிகமாக பட்ட நிர்மால்ய ஜலாதிகளும் அதுலமான தீர்த்தம் என்றபடி அன்று –

தத் உச்சிஷ்டம் ஸூபாவநம்-என்றதுவும்
புனரூப நயனாதி பிரகரணங்களிலே பாவனமாக சாஸ்திர ப்ராப்தமான உச்சிஷ்ட விசேஷத்துக்கு
இக் குண விசேஷம் அடியாக பாவநத் அதிசயம் சொன்னபடி-
மற்றும் சிஷ்ய புத்ராதிகளுக்கு நாராயணைக நிஷ்டத்வம் உண்டானால் ஆசார்யாதிகளுக்கும் அவர்களுடைய
உச்சிஷ்டம் ஸூ பாவநம் என்றபடி அன்று
நிர்மால்யம் பஷயித்வைவம் உச்சிஷ்ட மகுரோரபி
மாசம் பயோவ்ரதோ பூத்வா ஜபன் அஷ்டாஷரம் சதா
ப்ரஹ்ம கூர்ச்சம் தத பீத்வா பூதோ பவதி பாவந–என்று பகவத் தர்ம நிஷ்டனுக்கு சமயாசாரம் சொல்லுகிற
சனத் குமார சம்ஹிதா வசனத்தை ஆகம பிரமாணத்திலே ஆளவந்தார் உதாஹரித்து அருளினார்
ஆகையாலே போனகம் செய்த சேடம் தருவேரேல் புனிதம் அன்றே -என்றதுவும் குரு விஷயமாம் அத்தனை –
பொதுவானாலும் பகவத் சங்கீர்த்தன பரர் தேச காலாதி வைகுண்யத்தாலே ஊன வ்ருத்திகளுமாய் ஊன காரகர்ககளுமாய்
இருந்தார்களே யாகிலும் தாங்கள் அமுது செய்த சேடம் தருவாராகில் புனிதமாம் என்றது இத்தனை
இதில் சேஷ சப்தம் -அன்ன சேஷ கிம் க்ரியதாம் -இஷ்டை சஹ புஜ்யதாம் -இத்யாதிகளிலே
ந்யாயத்தாலே பாண்டஸ்த விஷயமானால் விரோதம் இல்லை –
உச்சிஷ்ட சப்தம் தானும் ஸ்ருத்யாதிகளிலே பக்த சிஷ்டமாய் பாக பாத்ரச்த மானத்திலும் பிரயுக்தம்
பரித்யஜே தர்க்க காமௌ யௌ ஸ்யாதாம் தர்ம வர்ஜிதௌ
தர்மம் சாப்ய ஸூகோதர்கம் லோக சம்ருஷ்ட மேவ ச -என்று மன்வாதிகள் வ்யவஸ்தை பண்ணினார்கள் –

ததுக்தி மாத்ரம் மந்த்ராக்ராயம் -என்றது
இவன் தஞ்சமாக உபதேசித்த பாஷா வாக்யங்களும் திரு மந்த்ரம் போலே ஆதரித்து அனுசந்திக்க வேணும் -என்றபடி –
அல்லது இவன் சொல்லும் லௌகிக வ்யவஹாரங்கள் ஜபாதி யோஜ்யங்கள் என்றபடி அன்று
சொல்லும் அவிடு ஸ்ருதியாம் -ஞான சாரம் -40–என்றதுக்கும் இப்படி ஹிதார்த்தமான வாக்யமே விஷயம்-

தத் ஸ்ப்ருஷ்டம் அகிலம் சுசி -என்றது ஆதுர விஷயத்தில் ஸ்ப்ருஷ்ட்வா ஸ்நானம் போலவும் –
தீஷா காலத்தில் விஷ்ணு ஹஸ்த ப்ரதா நாக்ய ஸ்பர்சம் போலவும்
திருப் பிரதிஷ்டையில் மகா பாகவத ஸ்பர்சம் போலவும்
மற்றும் ஸ்பர்சம் விகிதமான இடங்களிலே
இவனுடைய ஸ்பர்சம் பெற்றதாகில் ஸ்ப்ருஷ்டமானவை எல்லாம் பரிசுத்தமாம் படி -என்றபடியே அல்லது

உதும்பரம் ந சாசேத்து காலிங்கோதும் பராலாபு பிம்பாநி பரிவர்ஜயேத் தான்யச்ன தஸ்து சத்தம் நித்யம் துராதரோ ஹரி —
வ்ருந்தாக கத காலிங்க பில்வோதும்பரபி -சடா யோ பஷயதி சம்மோஹாத் தஸ்ய துராதரோ ஹரி –
காலிங்கீம் ஷூத்ர வார்த்தாகம் தக் தாந்தம்மௌசலீம் ததா தும்பிகாபல மச்நீயாத் தஸ்ய துராதரோ ஹரி
யோத்தி வார்த்தாக காலிங்கம் ம ஸூர விசகான்யபி அந்தகாலே ஜகன் நாதம் கோவிந்தம் ந ஸ்மரிஷ்யதி –
தும்பம் கோசாதகம் சைவ பலண்டும் க்ருஞ்ஜனம் ததா சத்ராகம் விட்வராஹம் ச புக்த்வா சாந்த்ரயாணம் சரேத்
நாளிகா சண சத்ராக கு ஸூ ம்பாலாபு விட்பவான் கும்பீ கஞ்சுக வ்ருந்தாக கோவி தாராம்ச்ச வர்ஜயேத் ஷீரம்
லவண சம்மிச்ரம் உச்சிஷ்டேபி ச யத்க்ருதம் பாநம் ரஜக தீர்த்தே ச ஸூரா பாந சமம் விது
ஆர நாளம் ந சேவேத கதாசித் பகவத் பர ஸூரா கல்பம் ஹி தத் ஞேயம் தஸ்மாத் யத் நேன வர்ஜயேத் பிரமாதாதபி கீலாலம் ய–
ஸ்ப்ருசேத் வைஷ்ணவோ நர -உபசார சதே நாபி ந ஷமாமி வ ஸூ ந்தரே –
ஏகாதச்யாம் ஸூ ரஸ்ரேஷ்ட யோ புங்க்தே த்விஜ ஜன்மவான் பிரதிக்ராசமயம் புங்க்தே கில்பிஷம் ஸ்வா நவிட்சமம்
ஏகாதச்யாம் து யோ புங்க்தே சக்தஸ் சன்னி ரூபத் த்ரவ ஸூரா பாந சமம் பாபம் பவேத் தஸ்ய ந சம்சய
மத்யா பாநாத் ஸூ ரஸ்ரேஷ்ட பாதைவ நரகம் வ்ரஜேத் ஏகாதஸ் அன்ன காமஸ்து பித்ரு பிஸ் சஹ மஜ்ஜதி –
அன்ன தோஷா தசம நாத் நாநா விஷய தர்ச நாத் தேஹ சௌசாதி விரஹாத் சமலம் ஜாயதே மன –
ஆலச்யா யன்ன தோஷாச்ச ம்ருத்யுர் விப்ரான் ஜிகாம்சதி -இத்யாதிகளாலே
நிஷித்தமானவை எல்லாம் இவன் தொட்டவாறே சுத்தமாம் என்ற படி அன்று —

இப்படி விஷய விவஸ்தை பண்ணாத போது
பரிக்ருஹீத தமங்களான பஹூ சாஸ்த்ரங்களோடும் சிஷ்ட அனுஷ்டானத்தோடும் விரோதிக்கையாலே அதிவாத மாத்ரமாய் விடும்-
மஹா பிரபாவனான பரமை காந்தி பக்கலிலும் இஸ் சாஸ்திர நியமம் குலையாது என்னும் இடம் –
நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார்
உள்ளிட்ட பரமாச்சார்யர்களுடைய அந்திமதிவசாவதியான அனுஷ்டானங்களைக் கிட்டுத் தெரிந்து கொள்வது –

தேவ தைவிக சாஸ்த்ரங்களில் சொல்லுகிற நியமங்களை பாஹ்யரும் குத்ருஷ்டிகளும் ப்ராந்தியாலே
விடுகிற இடம் தாமஸ த்யாகம் என்னும் இடத்தை
நியதஸ்ய து சன்யாச கர்மணோ நோபபத்யதே
மோஹாத் தஸ்ய பரித்யாக தாமஸ பரிகீர்த்தித -ஸ்ரீ கீதை -18-7–என்கிற ஸ்லோகத்திலே அருளிச் செய்தான்

குடும்ப பரணாதிகளுக்கு அலைந்து சந்யாசாதிகளைப் பற்றுவாரைப் போலே துக்க ரூபைகளான பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு
சோம்பி விடுகிற இடம் ராஜஸ த்யாகம் என்னுமிடத்தை
துக்கமித்யேவ ய கர்ம காயக்லேச பாத் த்ய்ஜ்யேத்
ச க்ருத்வா ராஜசம் த்யாகம் நைவ த்யாக பலம் லபேத் -ஸ்ரீ கீதை -18-8 என்று அருளிச் செய்தான் –

தன் அதிகார அனுரூபமாக தவிர வேண்டுமவை தவிர்த்து -செய்ய வேண்டுமவை செய்யும் இடத்தில்
நான் ஸ்வ தந்த்ரனாக செய்கிறேன் என்றும்
எனக்கு இக் கர்மம் சேஷ பூதம் என்றும் –
எனக்கு இன்ன பலத்துக்கு இது தான் சாதனம் என்றும் பிறக்கும் நினைவை மாற்றி
சர்வேஸ்வரன் செய்விக்க அவனுக்கு சேஷமான கைங்கர்யத்தை அவன் உகப்பே பிரயோஜனமாக
அனுஷ்டித்து அனுசந்திக்கை சாத்விக த்யாகம் என்னும் இடத்தை
கார்யமித்யேவ யத் கர்ம நியதம் க்ரியதே அர்ஜூன
சங்கம் த்யக்த்வா பலஞ்சைவ த்யாக ச த்யாக சாத்த்விகோ மத –ஸ்ரீ கீதை -18-9-என்று அருளிச் செய்தான்

இப்படி பகவத் ப்ரீதி பிரயோஜனமாக அனுஷ்டிக்கிற இடத்தில் இப் ப்ரீதிக்கு மோஷமும் கோலாதே பூர்வ பிரவ்ருத்தியாலே பிறந்த
பரம காருணிகன் பிரசாதத்தாலே மோஷம் சித்தம் என்று நினைத்து முக்தனுடைய கைங்கர்யம் போலேயும்
அரோகனுடைய பால் வார்த்து உண்ணுகை போலேயும் அனுஷ்டிக்கை சாத்விக த்யாகத்தில் எல்லை நிலமாகக் கடவது –
இது பசித்து உண்பார் மாத்ரம்-இங்கன் அல்லாத போது ஓட்டத்துக்கு அப்பம் தின்பார் மாத்ரம்

சர்வ தர்மான் பரித்யஜ்ய என்கிற இடத்தில்
பிரதம யோஜனையில் புத்தி விசேஷ ரூபமான சாத்விக த்யாகம் சொல்லுகிறது என்று ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார்
இப் புத்தி விசேஷம் ஸ்வ தந்திர பிரபத்தி நிஷ்டனுக்கு ப்ரபத்ய நுஷ்டான காலத்திலும் பின்பு ஸ்வயம் பிரயோஜனமாய்
உபாயத்தோடு துவக்கற்ற உத்தர க்ருத்யத்திலும் உப ஜீவ்யம்
த்வி தீய யோஜனையில் -அல்ப சக்தியாய் -விளம்ப அஷமன் ஆனவனுக்கு துஷ்கரமாய் -சிரகாலம் சாத்தியமான உபாயாந்தரத்தைப்
பார்த்து சோகம் பிறக்க அவனுடைய சோகாப நோதநார்த்தமாக -ஸூ கரமாய் ஸூ கருத் கர்தவ்யமுமான உபாயாந்தரத்தை வித்திதாக்கி
நீ உபாயாந்தரத்தில் அலைய வேண்டா என்கிறது என்று அருளிச் செய்தார்
இப் பிரபத்திய நுஷ்டானத்துக்கு பூர்வ அவஸ்தையில் உபாயாந்தர அந்வயம் தைவாத் ஆகதமாய் பிரபத்திய திகாரத்தில் சொருகக் கடவது –
உத்தர அவஸ்தையில் உபாயாந்தர அந்வயம் சாஸ்த்ரத்வாத் ஆகதமாய் இப் பிரபத்தியினுடைய நைரபேஷ்யத்தில் நிற்கக் கடவது

பரித்யஜ்ய -என்கிற இது அனுவாதம் என்பாருக்கு அதிகாரம் சொல்லுகிறது என்று தாத்பர்யம் –
விதி என்பாருக்கு பிரபத்தி யாகிற உபாயத்தினுடைய நைரபேஷ்யாதிகளை சொல்லுகிறது என்று தாத்பர்யம் –
இப்படி பரித்யஜ்ய என்கிற இடத்தில் அதிகாரம் விவஷிதம் ஆனால் –
மாமேகம் -என்கிற இடத்தில் நைரபேஷ்யம் அனுசந்திக்கப் பிராப்தம் –
பரித்யஜ்ய என்று நைரபேஷ்யம் விவஷிதமானால் –
மாஸூச -என்கிற சோக நிஷேதத்தாலே அகிஞ்சனாக நிற்கிற நிலை தோற்றுகையாலே
அதிகாரமும் அர்த்த சித்தமாக கடவது அப்போது –
ப்ரக்ருதே பாஸ நன்யாயாத் ததங்க நாமுபச்திதௌ
அன்யேஷாம் சைத தங்கத்வ த்யாகோத்ர பிரதிபாத்யதே -என்றபடி
ஏக சப்தம் சாத்விக த்யாகத்தாலே தன் பக்கலிலே பராதீன கர்த்ருத்வாதிகளை விவஷித்தல் –
பலோபா யைக்யத்தைச் சொல்லுதல் –
ஏகமே சர்வ உபாய ஸ்தானத்திலே நிற்கிற நிலையைக் காட்டுதல் செய்யக் கடவது –
பிரபத்திக்காக ஒன்றும் அனுஷ்டிக்க வேண்டாவாகிலும் ஸ்வ தந்திர அதிகாரத்தாலே கிங்கரனான இவனுக்கு
ஸ்வாமியினுடைய ஆஜ்ஞாதி லங்கனம் ஆகாது என்று சமர்த்தித்தார்கள் –

ஆஜ்ஞா விரோதிபி ச்வார்ஹ பிராயச்சித்த பராங்முக
ஸ்வாதிகா ரோசித சர்வை பிரத்யவாயோ துரத்யய-என்றும்
ஆஜ்ஞா நுபாலனே தத் தத் பிரத்யவாய நிவாரணம்
ஸ்வாபி சந்தோஷ ப்ரீதி இதி லாபத்வயம் ஸ்திரம் -என்றும்
அநிச்சாதோ நிவர்த்ததே ஸ்வர்காத்யம் கர்மணாம் பலம்
அமர்யா தஸ்ய துர்வார பிரத்யவாய அந்ய ஹேதுக -என்றும்
இப் பிரபத்தியை பக்தி யோக அங்கமாக அருளிச் செய்தது -பிரபத்தி சகல பல சாதனமான படியை பிரக்ருதமான
பக்தி யோகம் ஆகிற பலத்திலே உதாஹரித்த படி –
இங்கு த்வதீய யோஜனையில் துஷ் கரங்களான பக்தி யோக பர்யந்த உபாயங்களினுடைய ஸ்தானத்திலே நிற்கிற உபாய விஷயமும்
பிரதம யோஜனையிலே புத்தி விசேஷ பூர்வகமான ப்ரபத்ய நுஷ்டானமும் க்ருத உபாயனுடைய
ஸ்வயம் பிரயோஜனமான கைங்கர்யமும் அனுசந்தேயம் –

கிஞ்ச
ஸூ துஷ்கரேண சோசேத்யோ யேன யேநஷ்ட ஹேதுநா
ஸ ஸ தஸ்யாஹ மேவதி சரமச்லோக சங்க்ரஹ -என்றும்
இந்த நிஷித்த அனுஷ்டானமும் விதி பல பிராப்தம் ஆகையாலே பிரபன்னனுக்கு புத்தி பூர்வாக
உத்தராகமும் லோபியாது என்று பிரமிப்பார்கள் –
இது மிகவும் பரிஹச நீயம் -எங்கனே என்னில் –

அலோபகர் பாபம் பண்ணினால் லோபியாது என்பார்கள் –
இவர்கள் பாபம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டும் என்றார்கள் ஆயிற்று -இது
பஷயோத்தம பிரதிச்சந்தம் மத்ச்யோ பளிசமாயசம்
அன்னாபி லாஷீ க்ரசதே நானு பந்த வேஷதே–என்கிற கணக்காம் –
இவை எல்லாம் நினைத்து
அஹோபத மஹத் கஷ்டம் விபரீதமிதம் ஜகத்
யே நாபத்ரபதே சாது அசாதுஸ் தேன துஷ்யதி -என்று மஹர்ஷி நிர்நவிண்ணன் ஆனான் –
பாவா பாவௌ ந தர்மாணாம் பிரபத்தே ரங்க மிஷ்யதே
ஸ்வ தந்திர சிஷ்ட்யா சக்யேஹா சேஷா பாவோதிகாரக-என்றும்
க்ரத்வ நங்கதயா யே து ததா நீம் அநநுஷ்டிதா
ஸ்வ காலே ஸ்வ விதேரேவ கார்யச்தே தத்வ தத்ர ந -என்றும் -சொல்லிற்று –
திச தர்மம தர்மம்ச -என்கிறதுவும் காம்யங்களையும் நிஷித்தங்களையும் விடச் சொன்னபடி –
த்யஜ சத்யாந்ருத ருதே அபி -என்கிறதும்
ஆத்ம அனுபவத்தையும் ஐஸ்வர்யத்தையும் பிரயோஜனமாக கோலாதே கொள் என்றபடி –
சத்யம் ஆத்ம அனுபவம் அந்ருதம் விஷய அனுபவம் –
வாசிகங்களை விசேஷித்து சொல்லிற்று ஆகவுமாம் -இதன் அருமை தோற்றுகைக்காக-
உபே சத்யாந்ருதே த்யக்த்வா -என்று அனுவதிகிறது -அனுசந்திக்கைக்காக -யேன த்யஜசி தத்த்யஜ -என்கிறது –

இப்படியானால் -ஆஜ்ஞாதி லங்கனத்துக்கு ஒருவிரகு இன்றிக்கே இருக்க –
தஸ்மாத் த்வமுத்தவோத் ஸ்ருஜ்ய சோத நாம் ப்ரதி சோத நாம்
பிரவ்ருத்திம் ஸ நிவ்ருத்திம் ஸ ச்ரோதவ்யம் ஸ்ரதமேவ ஸ -என்றும்
மாமேக மேவ சரணம் ஆத்மானம் சர்வதேஹினாம்
யாஹி சார்வாத்ம பாவேன யாஸ் யஸி ஹ்யகுதோபயம்-என்றும்
நிவ்ருத்தியையும் கூட விடச் சொன்ன படியாலும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற இடத்தில் சர்வ சப்தத்தை சங்கோசியாமைக்காகவும்
நிவ்ருத்தி ரூபங்களையும் கூட விட வேண்டுகையாலே -அவற்றை விடுகையாவது நிஷேதித்தவை எல்லாவற்றிலும்
யதா சக்தி அனுஷ்டானம் ஆகையாலே
இந்த நிஷித்த அனுஷ்டானமும் விதி பல பிராப்தம் ஆகையாலே பிரபன்னனுக்கு புத்தி பூர்வாக உத்தராகமும் லோபியாது
என்று பிரமிப்பார்கள் -இது மிகவும் பரிஹச நீயம் -எங்கனே என்னில் –
அலோபகர் பாபம் பண்ணினால் லோபியாது என்பார்கள் –
இவர்கள் பாபம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டும் என்றார்கள் ஆயிற்று -இது
பஷயோத்தம பிரதிச்சந்தம் மத்ச்யோ பளிசமாயசம்
அன்னாபி லாஷீ க்ரசதே நானு பந்த வேஷதே–என்கிற கணக்காம் –

இவை எல்லாம் நினைத்து
அஹோபத மஹத் கஷ்டம் விபரீதமிதம் ஜகத்
யே நாபத்ரபதே சாது அசாதுஸ் தேன துஷ்யதி -என்று மஹர்ஷி நிர்நவிண்ணன் ஆனான் –
இவர்கள் சொல்ல்லுகிறபடி அர்த்தமானால் யாவஜ்ஜீவம் இருந்து அனுஷ்டிக்கும் நிஷித்த அனுஷ்டானம் எல்லா பிரபத்திக்கும்
அங்கம் ஆகையால் -சாங்கப் பிரபதனம் சக்ருத் கர்த்தவ்யம் என்னும் இடம் கழியும் –
பிரபத்தி ஷணத்தில் எல்லா நிஷித்தங்களும் அனுஷ்டிக்கை அசக்யம் –
அப்போது யதா சக்தி நிஷித்த அனுஷ்டானம் பண்ணிக் கொண்டு பிரபத்தி பண்ணவும் கண்டு அறியோம் –
இப்பஷத்தில் பாபங்களும் அக்நீஷோமீய ஹிம்சை போலே பாப சப்த வாச்யம் அல்லாமையாலே
புத்தி பூர்வ உத்தராகத்தையும் கூட்டி –
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்கிற இடத்துக்கு தாங்கள் வியாக்யானம் பண்ணின பிரகாரமும் விருத்தமாம் –
யதா சக்தி த்ரிவித அபசாரங்கள் கர்தவ்யங்களாகவும் பிரசங்கிக்கும்

இது பூர்வ அனுஷ்டானத்துக்கும் பூர்வ சம்ப்ரதாயத்துக்கும் ஸ்வ அனுஷ்டானத்துக்கும் மற்றும் இப்போது காண்கிற
முமுஷூக்களினுடைய அனுஷ்டானத்துக்கும் விருத்தம்
இப்படிச் சொல்லுபவர்கள் தம்மை ஒரு பிரபன்னர் அர்த்த காமங்கள் அடியாக நலியப் புக்கால்
இது பிரபன்னர் தர்மம் அன்றோ என்று இவரை உகந்து இருக்கப் பிராப்தமாம் –
இந்த அநந்த பிரமாணங்களுக்கு விருத்தமாம் அளவே அன்றிக்கே இங்கு எடுத்த வசனங்களுக்கு விவஷிதமும் அன்று –

நிஷித்த நிவ்ருத்த ரூபங்கள் எல்லாம் சர்வ தர்ம சப்தத்தாலே சங்க்ருஹீதங்கள் என்னும் இடம்
தர்ம சப்தார்த்தம் அறியாமல் சொன்னபடி என்று சில ஆசார்யர்கள் நிர்வஹிப்பார்கள் -எங்கனே என்னில் –
நிவ்ருத்திகளிலே ஒரு பலத்துக்கு சாதனமாக நியம விசேஷங்கள் உடனேயே செய்தவை தர்ம சப்தார்த்தமாம் –
சாமான்யமான அஹிம்சாதி மாத்ரம் பாபா அபாபமாம் இத்தனை போக்கி தர்ம சப்தத்துக்கு முக்யார்த்தம் அன்று –
ஆகையால் பல விசேஷ நியம விசேஷங்களோடே கூடின அஹிம்சாதிகளை விடுகையாவது -பலங்களையும் நியமங்களையும் விடுகை –
மற்றும் நிவ்ருத்தி சாஸ்த்ரத்தில் சொன்ன நிவ்ருத்திகளை விடுகைக்கு விரகு இல்லை-
நியம விசேஷாதிகளோடே கூடாத அஹிம்சாதி மாத்ரமும் தர்ம சப்தார்த்தம் என்னும் பஷத்திலும் சொல்லுகிறோம்

அதர்ம பரிஹாரே அபி தர்மத்வேன விவஷிதே
ஸ்யாத் ஸ்வ தந்திர விதேரேவ நித்யம் தஸ்ய பரிக்ரஹ-என்றும்
ஆனுகூல்ய பரித்யாகம் ப்ராதிகூல்ய பரிக்ரஹம்
பிரபத்த்யங்கம் பிரதிஜ்ஞாதும் ந சக்யம் சாது சம்சதி -என்றும்
பிரபன்ன மதிக்ருத்யைய சதாசார்ய நதிக்கிரம
பிரபத்த்யத்யாய படித ப்ரதிசந்தீ யதாமிஹ -என்றும் -இப்படி அற்றபின்
சோத நாம் ப்ரதி சோத நாம் பிரவ்ருத்திம் ஸ நிவ்ருத்திம் ஸ -என்கிற இடத்திலும் பிரபத்திக்கு அங்கமாக ஒன்றும்
ஸ்வீ கரிக்க வேண்டா என்றதாம் அத்தனை –

முமுஷூ மாத்ரத்தைப் பற்ற த்ரை வர்ணிகான் த்யேஜேத்தர்மான்-என்கிற கட்டளையிலே -பலாந்தர சாதனமாக
சோதிதைகளான பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
அவற்றுக்கு உறுப்பான சாஸ்திரங்களையும் விடச் சொன்னதாகவுமாம் –
இங்கன் அன்றிக்கே -நித்ய நைமித்திகாதிகளுடைய ஸ்வரூப த்யாகம் விவஷிதம் என்னில்
முன்பு சொன்ன சர்வ சப்த விரோதமும் பிரசங்கிக்கும்
இந்த நிஷ்கர்ஷம் சத்வ நிஷ்டராய் விவேகிகளாய் இருப்பார் தெளிந்து அங்கீ கரிப்பார்கள் –
இவ்வர்த்தத்தை -செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் -என்றும்
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் -என்றும் அருளிச் செய்தார்கள்
நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -என்றதுக்கும்
தாத்பர்யத்தைப் பார்த்தால் ஷமிக்க வேணும் என்று அபேஷித்த படியாகை யாலே பிரபன்னனுக்கும் அபராதம் புகுந்தால்
அஜ்ஞானததா வா ஜ்ஞாநாத் அபராதேஷூ சத் ஸ்வ பி
பிராயச்சித்தம் ஷமஸ்வேதி ப்ரார்த்தநை கைவ கேவலம் -என்கிறபடியே ஷமை கொள்ளப் பிராப்தம்
பிராயச் சிந்தாந்தரா சக்த காலஷேபா ஷமோபி வா
புன பிரபத்யதே நாதம் அபிந்தன் லோக சங்கரஹம் –

முமுஷூத்வமே அடியாக புத்தி பூர்வக நிஷித்தங்கள் புகுரா என்னும் வார்த்தையும் –
வித்யதே ப்ராஹ்மணே தம -என்னுமா போலே ஔ சித்யத்தாலே சொன்னபடி அத்தனை –
முமுஷூ வுக்கே புத்தி பூர்வக நிஷித்தங்கள் புகுந்து பரிஹாரங்கள் பண்ணுகை –
மகரிஷிகள் பக்கலிலும் ருஷிபிராயர் பக்கலிலும் உள்படக் கண்டு போரா நின்றது இறே
இங்கன் அன்றாகில் உபாசகர்களும் முமுஷூக்கள் ஆகையாலே அவர்களுக்கும் புத்தி பூர்வக உத்தராகம் கடியாமையாலே
உத்தராகா ச்லேஷம் ப்ராமாதிக விஷயம் -புத்தி பூர்வ உத்தராகத்துக்கு ஷந்தவ்யம் இல்லை -என்று
வ்யவஸ்தை பண்ண ஒண்ணாது ஒழியும்-
உபாசகனுக்கும் பிரபன்னனுக்கும் -வர்ண ஆஸ்ரம ஜாதி கோத்ர ப்ரவர சரண குல தேச கால அவஸ்தா குண
சமயாதிகளை உபாதியாகக் கொண்டு சொன்ன நிஷித்தங்கள் தவிரும் இடத்தில் விசேஷம் இல்லை –
நிஷித்தங்கள் புகுந்தால் பிராயச்சித்தம் யதாதிகாரம் ஆகையாலே வைஷம்யம் உண்டு –
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் -என்கிறதுவும் அபராதம் புகுரும் என்கைக்கு லிங்கம் –
இங்கு செய்தாரேல் நன்று செய்தார் -என்றதுக்கு -ப்ராமாதிகமாகப் புகுந்தால் நாமே ஷமிப்பிதோம் -புத்தி பூர்வகமாகப் புகுந்தால் அவர்கள்
ஷமை கொள்ளாத அளவிலும் சிஸா விசேஷங்களாலே நாம் சமிப்பிதோம் -ஒரு படிக்கும் கை விடோம் -என்பதே தாத்பர்யம் –
நன்று செய்தார் என்பர் போலும் -என்று சொல்லுகையாலே இது வஸ்து வ்ருத்தியில் நன்று அன்று என்னும் இடம் ஸூசிதம்-

அபய சம்ப்லவே சத்ய பிராயச்சித்தம் சமாசரேத்
பிராயச் சித்திரியம் சாத்ர யுத்புன சரணம் வ்ரஜேத் -என்று சொல்லுகையாலே
புத்தி பூர்வக உத்தராகத்தில் ஈஸ்வரனுக்கு நிக்ரஹ ஹேச்சை உதியாது என்ன ஒண்ணாது –
சர்வ சக்தியானவனுக்கு நிக்ரஹ ஹேச்சை பிறந்தால் ஷமை கொள்ளாத போது பல சித்தி இல்லை என்னவும் ஒண்ணாது
ஈஸ்வரனுக்கு ப்ரீத்யபாவம் மாத்ரம் பிறக்கும் அத்தனை என்றால் தனக்கு அத்தால் மேலே
ஒரு பிரத்யவாயம் இல்லை யாகில் புன பிராயச்சித்தம் பண்ண வேண்டா –
தனக்கு பிரத்யபாவம் பிறக்கும் அத்தனை என்றாலும் பிரத்யவாயம் சித்தமாயிற்று -அதிலும் கழிந்ததுக்கு பிராயச்சித்தம் வேண்டா –
மேலும் அனுவ்ருத்தமாய் வரப் புகுகிற பிரத்யபாவத்தைப் பற்ற பிராயச் சித்தம் என்றால் இத்தோடு துல்ய யோக ஷேமதையாலே
யதா சம்பவம் ஸ்ருத்யாதி சித்தங்களான உப கிலேசங்களும் வரும் என்று பீதனாய் பிராயச்சித்தம் பண்ணப் பிராப்தம் –
ஆகையால் உப கிலேசங்களும் இங்குற்ற பகவத் அனுபவத்துக்கு கரணா சக்தி ஞான சங்கோச துக்காதிகள் அடியாக வரும் விச்சேத சங்கோசங்களும்
நியதாயுஸ் ஸூக்கள் அல்லாதார்க்கு ஆயுர் வ்ருத்தியாலே பரம பலத்துக்கு விளம்பமும் பிரசங்கியாமைக்கு புன பிரபதானம் பண்ணுகிறது –
இது வேண்டா என்பார்க்கும் நிஷித்தங்களை ஷமிக்கிற ந்யாயத்தாலே இதுவும் ஷமா விஷயம் ஆகையாலே இதுவே உசிதம்

புத்தி பூர்வ உத்தராகத்துக்கும் ஏற்கனவே பிரபத்தி பண்ண ஒண்ணாது என்னும் இடமும் முன்பு கோலின பலம் ஒழிய
பலாந்தரமாக ப்ரபத்யந்தரம் பண்ணுகையிலே விரோதம் இல்லை என்னும் இடமும் முன்பே சமர்த்தித்தோம் –
இப்படி பகவத் ஆஜ்ஞா சித்தமான சதாசார அனுபாலனத்திலும் விரோதம் இல்லாமை கண்டு கொள்வது –
பிரபன்னஸ்ய நிஷித்ரைபி அலேபமு பபாதயன்
யதாபிமத சத்வ்ருத்த நிஷ்டேப்ய கிம ஸூயதி-என்றும்
ஆஜ்ஞாதி லங்கநே யஸ்ய ரஷகத்வம் ந பஜ்யதே
ஆஜ்ஞா நுபாலநே தஸ்ய கதம் தது பருத்தயதே -என்றும்
ந சாசாரம் விநா கிஞ்சித் கைங்கர்ய முபபத்யதே
நஹி சௌஸ முக்ருத்வைவ சமாராதன மர்ஹதி -என்றும்
ஆசார பிரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரஸ்யுத
இதி பஞ்சம வேதே அபி சர்வ சாஸ்த்ரார்த்த ஈரித-என்றும்
பிரபத்தி ப்ரதி சந்தானம் ஆப்தைர் யது பதிஸ்யதே
தத் ஸ்வா திகார நியத ஹாநோ பாதான சித்தயே -என்றும்
ப்ரதி சந்தா நதோ ஹி ஸ்யாத் அதி பூர்வேஷ்வலே பதீ
புத்தி பூர்வேஷ் வபி புன பிரபத்தே ரேவ சங்க்ரஹ-என்றும்
அதோ நிரபராதேன வர்திதவ்யம் க்ருதாத்மநா
அபராத பிரசங்கே ஸ புன பிரபதனம் ஷமம்-என்றும் –
அடியிலே நிரபராதனாக வேணும் என்று கோலி பிரபத்தி பண்ணினவனுக்கும் பின்பு இதுக்காக
பரபத்யந்தரம் பண்ணினவனுக்கும் உத்தர கருத்தியம் நிரபராதமாகவே நடக்கும்

இதிஹாச புராணங்களில் சில வ்ருத்தாந்த தர்சன மாத்ரத்தைக் கொண்டு வசன விரோதத்தை அநாதரித்து-
பாகவதனுடைய புத்தி பூர்வக உத்தராகம் ஷந்தவ்யம் என்று சிலர் சொல்லுவார்கள் –
இதுவும் அவ்வோ பிரகரணங்களில் அபிப்ராயம் அறியாமல் வந்தது -மஹா ராஜருக்கும் உள்பட சமயாதி லங்கந மாத்ரமான
அபராதம் பெருமாள் திரு உள்ளத்திலே சோக அபிபவத்தாலே பிரதிபாசித்து
ந ச சங்குசித பன்னா யேன வாலீ கதோ கத
சமயே திஷ்ட ஸூ க்ரீவ மா வாலி பத மன்வகா -என்று அருளிச் செய்யக் கேட்டு
இளைய பெருமாள் பெருமாள் தாமே தணிய விட வேண்டும் படி சீறி அருளி கிஷ்கிந்தையிலே செல்ல
க்ருதாபரா தஸ்ய ஹி தே நாந்யத் பச்யாம்யஹம் ஷமம்
அந்தரேண அஞ்ஜலீம் பத்வா லஷ்மணச்ய பிரசாத நாத் -என்று இந்திர வியாகரண பண்டிதன் மஹா ராஜருக்கு உபதேசித்தான் இறே-
அவ்வளவில் மஹா ராஜரும் இசைந்து –
யதி கிஞ்சி ததிக்ராந்தம் விஸ்வாசாத் ப்ரணயேன வா
ப்ரேஷ் யஸ்ய ஷமிதவ்யம் மே ந கச்சினனபராத்யதி -என்று விண்ணப்பம் செய்ய வேண்டிற்று –
அப்பொழுது இளைய பெருமாளுக்கும் தாம் மிகுதியான சொன்ன வார்த்தைகளுக்கு
யச்ச சோகாபி பூதஸ்ய ச்ருத்வா ராமஸ்ய பாஷிதம்
மயா த்வம் புருஷாண் யுக்த தச்ச த்வம் ஷந்தும் அர்ஹசி-என்று ஷமை கொள்ள வேண்டிற்று –
இப்படி பிரபன்னனுக்கும் பிராரப்த கர்ம விசேஷங்களாலே புத்தி பூர்வக உத்தராகம் புகுரவும் கூடும்
அது புகுந்தால் அநு தப்தனாய் ஷமை கொள்ளவும் வேணும்-

ந தர்ம நிஷ்டோச்மி-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -22-என்றும்
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன்-இத்யாதிகளும்
கர்ம யோகாதிகளுக்காக சக்தி இல்லாமை சொல்லுகிறது அத்தனை —
யதா சக்தி பகவத் ஆஜ்ஞனா அநு பாலனத்தை தவிரச் சொல்லுகிறவன அன்று –
ஆகையால் பிரபன்னனுக்கும் ப்ராஹ்மண்யாதி விசிஷ்ட சரீரம் விடும் அளவும் அவ்வோ ஜாத்யாதிகளுக்கு ஈடான
பகவத் ஆஜ்ஞா அநு பாலனம் கர்த்தவ்யம் –

ஆஹார க்ரஹ மந்த்ரார்த்த ஜாத்யாதி நியமைர்யுத
குர்யால் லஷ்மீச கைங்கர்யம் சக்தி அநந்ய பிரயோஜன —

ஆசாராத்ம குண உபாய புருஷார்த்த விசேஷத
அதிகாரிணி வைசிஷ்ட்யம் பிரக்ருஷ்யே தோத்த ரோத்தரம்-

இப்பிரபாவ நியமம் ரகஸ்ய த்ரயத்தில் ஈஸ்வரனுடைய பிரசாசித்ருத்வாதி குண அநு பந்தமாக அநு சந்தேயம் —

தகவால் தரிக்கின்ற தன்னடியார்களைத் தன் திறத்தில்
மிகவாதாம் செய்யும் மெய்யருள் வித்தகன் மெய்யுரையின்
அகவாய் அறிந்தவர் ஆரண நீதி நெறி குலைதல்
அகவார் என் எங்கள் தேசிகர் உண்மை உரைத்தனரே —

சாதுர் வர்ண்ய சதுர் விதாச்ரம முகே பேதே யதாவஸ்திதே
வ்ருத்தம் தந் நியதம் குணா குணயா வ்ருத்தயா விசிஷ்டம் ச்ரிதா
த்யாகோ பப்லவா நித்ய தூர சரண வ்ரஜ்யா விதௌ கோவிதா
சிந்தாம் அப்யகுணந்தும் அந்திம யுகே அபி ஏகாந்திந சந்தி ந —

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading