ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
—————————————-
ஸ்ரீ தேவி
பூ தேவி
நீளா தேவி
கோதா தேவி
தயா தேவி —
குணத்தைக் குறித்து ஸ்தோத்ரம் இதுவே
108 -ஸ்லோகங்கள்
1power 1-multiplied by 2 power 2 multiplied by 3 power 3=108
கருவியாக்கி திருவேங்கடமுடையானே அருளிச் செய்த ஸ்லோகம்
கைங்கர்ய ஸாம் ராஜ்ய பட்டாபிஷேகம் -பலன் -106 ஸ்லோகம்
திருவாய் மொழி சாரம்-ஒவ்வொரு பத்தின் சாரமும் பத்து ஸ்லோகங்கள்
அனுஷ்டுப் -முதல் 10–பரத்வம்
11-20-ஆர்யா பா வகை-அதி போக்யன்
21-30–ஒவபத்சந்தஸ் -திருமேனி உடன் கூடியவன்
31-40-மாலினி பா -பேர் ஆனந்தம் தர வல்லவன்
41-50–மந்தாக்ராந்தா முக்தி அளிப்பவன்
51-60-ஸரணாகதி அடைக்கல நெறி
61-70 சிகரீ -தடைகளைப்போக்கி
71-80-ஹரிணீ இஷ்ட ங்கள் அளிப்பவன்
81-90-அனைத்து உறவாகவும் அவனே
91-104-வசந்த திலகம் -அர்ச்சிராதி கதி மூலம் அழைத்து செல்பவன்
105-106-மாலினி -பயன்
107-108-ஸாதூல விக்ரீதம் -பயன் –
—–
1-பிரபத்யே தம் கிரிம் ப்ராய ஸ்ரீ நிவாச அனுகம்பயா
இஷூ சார ஸ்ரவந்த்யா இவ யன்மூர்த்யா சர்க்கராயிதம் –
கருப்பஞ்சாறு போன்ற திருமலை -சக்கை கழிந்து மோஷைக ஹேது திருவங்கடமலை -ஸ்திரம்-
சம்சாரிகள் மேலே இரங்கி தானும் நடுங்குவதால் அனுகம்பா என்கிறார் –
ஞானம் இச்சா கிரியை –கிருபையால் -நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேணுமே -சங்கல்ப அனுகுணம் –
தயை -பர துக்க துக்கித்தவம் – பர துக்க நிராகரண இச்சா-கிரியை -தேசிகன் –
தம் கிரிம் பிரபத்யே –ஸ்ரீ நிவாஸா அனுகாம்பாயா–உச்சைகி நீச வர நீர்மை ஸ்வபாவம் -தயா தேவி -ஈஷூ சாரம் -கரும்பு ரசம் –
ஸ்ரீநிவாஸனுடைய தயை என்பது கருப்பஞ் சாறாகப் பெருகி உள்ளது.
இது ஆறு போன்று ஓடிச் சென்று, சர்க்கரைக் கட்டி போன்று உறைந்து நின்றது.
இப்படிப்பட்ட சர்க்கரை மலையாகிய திருவேங்கடமலையை நான் சரணம் அடைகிறேன்.
ஸ்ரீநிவாஸனின் தயை என்ற குணம் செய்கின்ற செயலையே வேங்கடமலையும் செய்வதால்,
அந்தத் தயை குணமே திருவேங்கட மலையாக நின்றதோ என்று தோன்றுகிறது.
கரும்பின் சக்கைகளை நீக்கி விட்டுச் சாற்றை மட்டும் எடுத்துக் கொள்வது போல் –
ஸ்ரீநிவாஸனிடம் உள்ள “பாவங்களுக்குத் தண்டனை விதிப்பது” போன்ற செயல்களைத் தள்ளி விட்டு,
சாறு போன்ற தயை குணத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்
இங்கு தயை குணத்தை, கல் போன்ற ஒரு மலையுடன் ஒப்பிட்டுக் கூறுவது எவ்வாறு பொருந்தும் என்ற கேள்வி எழலாம்.
இதற்குச் சமாதானம் – மலை எவ்விதம் அசையாமல் உள்ளதோ, அது போன்று நம்மிடம்
ஸ்ரீநிவாஸனின் தயை என்பது அசையாமல் உள்ளது என்று கருத்து.
இங்கு உள்ள ஆறு என்பது ஸ்ரீநிவாஸனின் தயையானது, ஆகாச கங்கை போன்ற திருமலையில் உள்ள
நதிகளைப் போன்று உள்ளதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
அநு கம்பை –ஜீவன் துன்பப்பட்டு நடுங்கும் போது அவன் மீது இரக்கம் கொண்டதன் காரணமாகத் தானும் நடுங்குகிறானே-பீஷாத் வாத பவத- வேதங்கள் வாயு -ஸூர்யன் போல்வார் இவனைக் கண்டு நடுங்கு வதாகச் சொல்ல இங்கு ஜீவன் துன்பம் கண்டு இரங்கி தானும் நடுங்குவதாக வியப்பாக அருளிச் செய்கிறார்
ந மமார தி³தேர்க³ர்ப⁴꞉ ஶ்ரீநிவாஸானுகம்பயா .
ப³ஹுதா⁴ குலிஶக்ஷுண்ணோ த்³ரௌண்யஸ்த்ரேண யதா² ப⁴வான் -ஸ்ரீ மத் பாகவதம் -6-18-65–
திருமகள் கேள்வனின் கருணை வெள்ளம்
கரும்பின் சாறு போல் பெருக்கெடுத்ததுவே
ஒரு மலையாக உருவெடுத்தது தான்
திருவேங்கட மலையே நீயே சரணம்
———————-
2-விகாஹே தீர்த்த பஹூளாம் சீதளாம் குரு சந்ததிம்
ஸ்ரீ நிவாச தயா அம்போதி பரிவாஹ பரம் பராம்
தயை -ஏரி -அந்த நீர் வெள்ளத்தில் இருந்து பெருகும் நதியில் –
நேராக வெள்ளத்தில் மூழ்கி விடாமல் -படித் துறை போலே குரு பரம்பரை –
சம்சார தாப த்ரயங்கள் தீர ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளில் நீராடுவோம் –
ஸ்ரீநிவாஸனின் தயை என்பது பெரிய ஏரி போன்று உள்ளது.
அதிலிருந்து ஓடி வரும் குளிர்ந்த நதியில் ஆங்காங்கே உள்ள படித் துறைகளாக ஆசார்ய பரம்பரை உள்ளது.
அவற்றில் இறங்கி நான் நீராடுகிறேன்.
ஸ்ரீநிவாஸனின் தயை என்பது ப்ரவாகங்களாக, கருணையே உருவான நம்முடைய ஆசார்ய பரம்பரையாக வந்தது என்றார்-
அதிக வேகத்துடன் ஓடி வரும் ஸ்ரீநிவாஸனின் தயை என்ற வெள்ளத்தில் நாம் நேரடியாக இறங்கி நீராட இயலாது என்பதால்,
நமக்கு வழி காட்டும் படித் துறைகளாக ஆசார்யர்கள் உள்ளனர் என்று கருத்து.
இந்த பூர்வாச்சார்யர்களின் ஸ்ரீ ஸூக்திகளாகிய தடாகத்தில் நீராடி தாப த்ரயங்களும் நீக்கப் பெறுவோம்
துறைகள் பலபல நிறைந்த ஆறு போலே
கருணை வேங்கடவன் உருவாம் கடலிலே
இறங்கும் துறைகளாய்ச் சிறக்கும் குருக்களின்
வரிசையில் அடியேன் படிந்து களிப்பேனே
—————————————————
3-க்ருதிந கமலா வாஸா காருண்ய ஏகாந்திந பஜே
தத் தே யத் ஸூக்தி ரூபேண த்ரிவேதீ சர்வ யோக்யதாம்
தயா தேவியே நித்ய ஸூரிகளை ஆழ்வார்களாக அவதரிப்பித்து
அருளிச் செயல்களை அருளச் செய்வித்து
வேதாந்த பொருளை சர்வாதிகாரமாக அறியும் படி பண்ணி அருளினாள் –
மூன்று வேதங்களும் ஆழ்வார்களின் ப்ரபந்தங்கள் மூலமே அனைவரும் கற்கும் விதமாக அமைந்தன.
ஸ்ரீநிவாஸனின் தயை என்பதை மட்டுமே தங்கள் புகலிடம் என்று புகுந்த ஆழ்வார்களின் பிரபந்தங்களையே,
அந்தப் பிரபந்தங்களை அருளிச் செய்த ஆழ்வார்களையே நான் விடாமல் தொழுகிறேன்.
நித்ய ஸூரிகளின் அவதாரமாகவே ஆழ்வார்களை அவதரிக்கச் செய்து,
அவர்கள் மூலமாகவே வேதங்களைத் தமிழ்ப் படுத்தினாள்.
ஆழ்வார்கள் ஸ்ரீநிவாஸனின் தயை என்பதே வடிவெடுத்தது போன்றவர்கள் ஆவர்.
மும்மறை தன்னையும் மனிதர் அனைவரும்
செம்மையாய்க் கற்றிட தமிழில் வடித்து
செங்கமலி நாதன் திருவருள் கதியென
இங்கு வாழ்ந்து உயர்ந்த ஆழ்வாரைப் பணிவனே
———————————————————-
4-பராசர முகான் வந்தே பகீரத நயே ஸ்த்திதான்
கமலா காந்தா காருண்ய கங்கா ப்லாவித மத்விதான்
அனுகம்பா என்று பிராட்டியையும் –
அடுத்து குரு பரம்பரையும் –
அடுத்து ஆழ்வார்களை முதலில் சொல்லி-
அடுத்து பரசராதிகளை படைத்து ஸ்ரீ நிவசனின் தயையை விளக்கி அருளிச் செய்தமையால்
புராண இதிகாசங்களை படித்து கேட்டு ஸ்ரீ நிவாசனின் தயை என்னும் கங்கையிலே நீராடுவோம் –
பகீரதன் பெரும் தவம் செய்து கங்கையை உலகிற்குக் கொண்டு வந்தான்.
இது போன்று பராசரர் முதலான முனிவர்கள், ஸ்ரீநிவாஸனின் தயை என்னும் கங்கையைக் கொண்டு வந்தனர்.
அந்த நதியில் நம்மை மூழ்கச் செய்த அவர்களை நான் வந்தனம் செய்கிறேன்.
முதலில் மஹரிஷிகளைக் கூறாமல் ஆழ்வார்களைக் கூறியது ஏன்?
பராசரர் போன்றவர்கள் பக்தியை மட்டுமே பெரிதாகக் காட்டி, ஸ்ரீநிவாஸனின் தயை குணத்தை விட
பலம், தேஜஸ் போன்றவற்றை அதிகமாகக் காட்டுபவர்கள் ஆவர்.
ஆகவே, அவர்கள் மூலமாக ஸ்ரீநிவாஸனின் தயை பற்றி அதிகம் அறிய இயலாது.
ஆனால் ஆழ்வார்கள் சரணாகதி என்பதையே பெரிதாகக் காட்டியவர்கள் ஆவார்கள்.
பக்தியைவிட இந்தச் சரணாகதி நெறி பன்மடங்கு உயர்ந்தது.
திருவாய்மொழி போன்றவற்றில் ஸ்ரீநிவாஸனின் தயை என்பதை மட்டுமே உயர்வாகக் கூறப்பட்டது.
மஹரிஷிகள் தங்கள் தவத்தால் புராணங்களையும்,
பகீரதன் போன்றவர்கள் தங்கள் தபோ பலத்தால் கங்கை போன்றவற்றையும் ஏற்படுத்தினார்கள்.
ஆக இவை மனிதர்களால் வெளிப்பட்டது.
ஆனால், ஆழ்வார்களைக் கொண்டு ஸ்ரீநிவாஸன் தனது தயை குணத்தை தானாகவே வெளிப்படுத்தினான்.
ஆக, இது இறைவனால் வெளிப்பட்டது.
எனவே மஹரிஷிகளுக்கு முன்பாக ஆழ்வார்களைக் கூறியது பொருத்தமே ஆகும்.
கமலா காந்தனின் கருணையாம் கங்கை போல்
எமைப்போல் வரேலும் இழுக்கற மூழ்கிட
தமரைக் கழுவிய பகீதரன் போலவே
அமைந்த பராசரர் வழியரைப் பணிவனே
—————————————————————————-
5-அசேஷ விக்நம் சமநம் அநீக ஈஸ்வரம் ஆஸ்ரயே
ஸ்ரீ மத கருணா அம்போ தௌ சிஷா ச்ரோத இவ உத்திதம் –
தயை என்னும் ஏரியில் இருந்து வந்து அருளினவர் -ஸ்ரீ விஷ்வக் சேனர் —
அவரை வணங்குவோம் -அவர் தடையான இடையூறுகளை போக்கி
ஸ்ரீ நிவாசன் இடம் நம் போல்வாரையும் சேர்ப்பித்து அருளுவார் –
சிக்ஷை என்றால் கல்வி, தண்டனை என்று இரு பொருள் உண்டு.
தவறு செய்பவர்களுக்கு ஏற்ற தண்டனையை அளித்து, பின்னர் அவர்கள் மேலும் அதே போன்ற
தவறுகளைச் செய்யாமல் அவர்களுக்கு உபதேசம் செய்தல் என்னும் பொருள் பட இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார்.
ஸ்ரீநிவாஸனை நாம் அடைவதற்குத் தடையாகவுள்ள அனைத்து இடையூறுகளையும் நீக்குபவர்;
ஸ்ரீநிவாஸனின் கருணை என்ற ஏரியில் இருந்து
“தவறு செய்பவர்களைத் திருத்துவது” என்ற வாய்க்கால் போன்று வெளி வந்தவர்;
ஸ்ரீநிவாஸனின் சேனைக்குத் தலைவராக வுள்ளவர் –
இப்படிப்பட்ட விஷ்வக்சேனரை வணங்குகிறேன்.
திருமாலின் அருள் கடலில் தோன்றியோடும் தண்டிப்பின்
உருவாயும் உபதேசனை உருவாயும் ஆகின்ற
சிறுவோடை போன்றவராம் தடையனைத்தும் ஒழிப்பவராம்
பெரும் சேனை முதலியாரைப் பணிந்து அடியேன் ஏத்துவனே
———————————————————————–
6-சமஸ்த ஜநநீம் வந்தே சைதந்ய ஸ்தன்ய தாயிநீம்
ஸ்ரேயசீம் ஸ்ரீ நிவாசஸஸ்ய கருணாம் இவ ரூபிணீம்
தயா தேவியே ஞானப் பாலூட்டி பேணி அருளுகிறாள் –
இதில் ஸ்ரீ தேவியையும்
அடுத்த இரண்டு ஸ்லோகங்களாலும் ஸ்ரீ பூமா நீளா தேவிகளை வணங்குகிறார்-
ஸ்ரேயசீம் ஸ்ரீ நிவாசஸஸ்ய–என்பதால்
ஸ்ரீ நிவாசனுடைய மேன்மைக்கும் தயா தேவியே காரணம் என்கிறார் –
இந்த உலகம் முழுமைக்கும் தாயாக உள்ளவளும்,
ஸ்ரீனிவாஸனின் கருணையே வடிவம் எடுத்தது போன்றவளும் ,
அவனிடத்தில் நாம் ஈடுபட வேண்டும் என்ற ஆவல் உண்டாக ஞானம் என்னும் தாய்ப் பாலை அளிப்பவளும்,
ஸ்ரீனிவாஸனுக்கே சிறப்பை அளிப்பவளும் ஆகிய அலர் மேல் மங்கையை வணங்குகிறேன்.
இந்த ஸ்லோகத்தில் மஹா லக்ஷ்மியையும்,
அடுத்த ஸ்லோகத்தில் பூமா தேவியையும்,
அதற்கும் அடுத்த ஸ்லோகத்தில் நப்பின்னை பிராட்டியையும் கூற வுள்ளார்.
நாம் ஸ்ரீனிவாஸன் அருகே செல்லும் போது நம்மிடம் உள்ள குற்றங்களை ஸ்ரீனிவாஸனின் கண்களில் படாமல்
நப்பின்னை மறைத்து விடுகிறாள்.
இதனையும் மீறி ஸ்ரீனிவாஸனின் கண்களில் நமது குற்றம் தென்பட்டு விட்டால்,
பூமாதேவி அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு செய்து விடுகிறாள்.
நமது குற்றங்களை ஸ்ரீனிவாஸன் ஏற்றுக் கொண்டாலும் நமக்கு உதவ வேண்டும் என்ற குணத்தை மஹா லக்ஷ்மியே ஏற்படுத்துகிறாள்.
இங்கு கவியின் சாமர்த்தியத்தைச் சற்று காண வேண்டும். ச்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய என்றார்.
ஸ்ரீநிவாஸனின் மேன்மைக்கு இவளே காரணம் என்றார்.
அனைவரிடமும் கருணையாக இருந்தால் மட்டுமே ஒருவனுக்கு மேன்மை உண்டாகும்.
அந்தக் கருணை ஸ்ரீநிவாஸனுக்கு உண்டாக இவளே காரணம்,
ஆகவே அவன் மேன்மைக்கு இவளே காரணம் என்றார்.
பெரும் ஞான முலைப் பாலைப் புகட்டிவிடும் தாயாவாள்
ஒரு சமனும் இல்லாத பெரு மேன்மை உருவானாள்
திருமாலின் அருள் தன்னின் தனி வடிவாயத் திகழ்ந்திடுவாள்
பிரபஞ்சத்தின் தாயாவாள் பிராட்டிக்கே என் வணக்கம் –
———————————————————————–
7- வந்தே வ்ருஷகிரி ஈசச்ய மஹிஷீம் விஸ்வ தாரிணீம்
தத் க்ருபா பிரதிகாதானாம் ஷமயா வாரணம் யயா –
அஜ்ஞ்ஞான தடைகளை நீக்கி
ஷமை திருக் குணம் மூலம் குற்றங்களை பொறுப்பிக்கச் செய்து
உலகம் முழுவதும் தாங்கும் ஸ்ரீ பூமா தேவியை வணங்குகிறார் –
இந்த உலகம் முழுவதையும் தாங்குபவளும்,
ஸ்ரீநிவாஸனின் மஹிஷியும்,
ஸ்ரீநிவாஸனின் கருணை நம் மீது விழுவதற்கு ஏற்படும் தடைகளைத் தடுப்பவளும்,
க்ஷமை என்ற பெயர் கொண்டவளும் ஆகிய பூமா தேவியை வணங்குகிறேன்.
இங்கு ஸ்ரீநிவாஸனின் இடது புறம் அமர்ந்துள்ள பூமா தேவியைக் கூறுகிறார்.
நமது அறியாமையால் செய்யும் பாவங்கள், ஸ்ரீநிவாஸனின் தயை நம்மிடம் ஓடி வருவதைத் தடுக்கின்றன.
இவ்விதம் தடுக்கப்பட்ட அவனது தயைக்கு உண்டான தடையை, தனது க்ஷமை என்ற குணம் மூலமாக நீக்கி,
ஸ்ரீநிவாஸன் நமது குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு, தனது கருணையை நம் மீது காண்பிக்கும்படிச் செய்கிறாள்.
திருமலை நாதனின் திவ்ய துணைவியாய்
உறும் வினைத் தடைகளை உடனடி விலக்கியே
திருமால் கருணையே நம்மிடம் பாய்ந்திட
பொறை வுரு மண் மகள் பொன்னடி தொழுவேனே
———————————————————————-
நிசா மயது மாம் நீளா யத் போக படலைர் த்ருவம்
பாவிதம் ஸ்ரீ நிவாஸஸ்ய பக்த தோஷேஷு அதர்சனம் -8-
போக மயக்குகளால் தோஷங்களை காணாமல் இருக்கும் படி செய்து அருளும்
நீளா தேவியை நப்பின்னை பிராட்டியை வணங்குகிறார்
பாவிதம் -பாவனை செய்கிறானாம்
இந்த ஒரே ஸ்லோகத்தில் தயை சப்தம் இல்லை –
இவளுடைய போக மயக்கங்கள் மூலமாக ஸ்ரீநிவாஸனின் கண்கள் நம்முடைய குற்றங்களை
காணாமல் மறைக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட நீளா தேவி என்னும் நப்பின்னை, தனது திருக்கண்களால் என்னைக் கடாக்ஷிப்பாளாக.
அதிகமான காமம் உள்ளவர்களுக்குப் படலை என்னும் கண்புரை (cataract) நோய் உண்டாகும் என்று
வைத்திய சாஸ்த்ரம் கூறுகிறது. கண்புரை உள்ளவர்களால் சரியாகப் பார்க்க இயலாது.
இங்கு ஸ்ரீநிவாஸனின் நிலை இது போன்று ஆகிறது.
நீளாதேவி அளவற்ற இன்பத்தை ஸ்ரீநிவாஸனுக்கு அளித்து, தனது குழந்தைகளான அடியார்களின் குற்றங்களை
அவன் காண இயலாமல் மறைத்து விடுகிறாள்.
ஆயினும் ஸ்ரீநிவாஸன் நமது குற்றங்களைக் காணாமல் இருப்பதில்லை.
அவன் நீளா தேவிக்காக அவ்விதம் காணாமல் இருப்பது போன்று பாவனை செய்கிறான் என்பதை,
பாவிதம் என்ற பதம் கூறுகிறது.
தயா சதகத்தில் இந்த ஒரு ஸ்லோகத்தில் மட்டுமே, தயை என்பது கூறப்படாமல் உள்ளதைக் காண்க.
மட நல்லாள் நப்பின்னையின் மயக்குகின்ற போகங்கள்
படலம் போல் பரவியதால் பக்தர்களின் குற்றங்கள்
படவாகாப் போயினவே பெருமானின் கண்களுக்கு
அடியேனைக் காத்தருள்வாய் அவ்வாறே நப்பின்னாய் –
————————————————————————
9-கமபி அநவதிம் வந்தே கருணா வருணாலயம்
வ்ருஷ சைல தட ஸ்தானம் ஸ்வயம் வ்யக்திம் உபாகதம்
அவதி இல்லா கருணைக் கடல் அன்றோ ஸ்ரீ நிவாசன் -அவன் ஸ்வயம் வ்யக்தன் அன்றோ –
தடஸ்தம்-அஞ்சி அவன் கையை எதிர்பார்ப்பார்க்கு தோற்றுவான்
ஸ்வயமாகவே நம்மை வரிப்பவன் –
எல்லை இல்லாததும், திருமலையின் அருகில் உள்ளவர்களுக்கு தானாகவே தோற்றம் அளிப்பதும்
ஆகிய கருணை என்ற கடலை வணங்குகிறேன்.
இதுவரை ஆசார்ய பரம்பரையில் கீழிருந்து மேலாகக் கூறி வந்து, முதல் குருவான ஸ்ரீநிவாஸனிடம் முடிக்கிறார்.
அவதி என்றால் எல்லையும் கூடியது என்று பொருள்.
இங்கு அநவதி என்பதன் மூலம் எல்லை யற்றது என்பதை உணர்த்தினார்.
திருமலை அப்பன் தானாகவே தோன்றியவன் என்பதை ஸ்வயம் வ்யக்த என்பதன் மூலம் கூறினார்.
தடஸ்த என்ற பதம் மூலம் உபனிஷத்துகளில் உள்ள ஒரு கருத்தைக் கூறுகிறார்.
தடஸ்தர் என்றால் குளத்தில் இறங்காமல், கரையிலேயே நின்று கைகளை நீட்டுபவர் என்பதாகும் .
இதன் மூலம் உணர்த்தப்படுவது என்ன?
யார் ஒருவர் பர ப்ரஹமத்தை அறிந்து கொண்டு விட்டோம் என்று நினைக்கிறார்களோ
அவர்களுக்குப் ப்ரஹ்மம் தெரிவது இல்லை;
யார் ஒருவர் பர ப்ரஹ்மத்தை அறிய இயலாது என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பர ப்ரஹ்மம் புலப்படும்.
ஆக “நாம் அறிவோம்” என்று இறங்கினால் ஸ்ரீநிவாஸன் தூரத்திலேயே நிற்பான்.
இறங்குவதற்கு அஞ்சி, கரையிலேயே நின்றால் தானாகவே அவன் வருவான்.
மேலும் இதன் மூலம் உணர்த்தப்படுவது –
நாம் நமது முயற்சியால் அவனை அடைந்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு அவன் தென்படுவதில்லை.
யார் ஒருவனைத் தனக்குப் ப்ரியமானவன் என்று ஸ்ரீநிவாஸன் நினைக்கிறானோ
அவனுக்குத் தன்னையும், தனது கருணையையும் வழங்கி, தன்னையும் வெளிப்படுத்துவான்.
இதனையே தேசிகர் ஸ்வயம் என்ற பதம் மூலம் கூறுகிறார்.
ஏழு மலை சேஷ மலை என விளங்கும் வேங்கடத்தின்
தாழ்வரையில் வாழ்ந்து வரும் தவப்பயனை உற்றவர்கள்
காட்ச்சியுற தோன்றியுள்ள கரை காணா அருள் கடலை
வாழ்த்துகிறேன் ஒப்பில்லாத மா கடலை வணங்குகிறேன் –
——————————————————————
10-அகிஞ்சன நிதிம் ஸூ திம் அபவர்க்க த்ரி வர்க்கயோ
அஞ்சனாத்ரி ஈஸ்வர தயாம் அபிஷ் டௌமி நிரஞ்ஜநாம்
நினைத்த மாத்ரத்தில் வேண்டியவற்றை அளிக்கும் நிதி –
நான்கு வித புருஷார்த்தங்களையும் அளிப்பவன்-
வீட்டை முதலில் சொல்லி அறம் பொருள் இன்பம் அடுத்து அருளுகிறார்
நினைவும் கூட வேண்டாம் இசைவித்து நம்மைக் கொள்ளுவான்
அஞ்சான தேவி தவம் இருந்து இங்கே சிறிய திருவடி பெற்றாள்
அஞ்சனம் குற்றம் நிரஞ்சனம் -ஸ்வா பாவிக குற்றம் அற்றவனையும்
நமது தோஷங்களை பார்க்காத குற்றம் புரிய வைக்கிறாள் தயா தேவி –
ஸ்ரீ நிவாசனை திசை திருப்பிய குற்றம் தயா தேவிக்கு என்றுமாம் –
எந்த விதமான கதியும், வேறு ஏதும் உபாயம் இல்லாமலும் உள்ளவர்கள் சரணம் அடைவதற்கு ஏற்ற நிதி போன்றதும்;
மோக்ஷம் என்பதை வழங்குவதும்; அறம்-பொருள்-இன்பம் என்பவற்றை அளிப்பதும்;
எந்த விதமான தோஷங்களும் அற்றதும் ஆகிய ஸ்ரீநிவாஸனுடைய தயை என்னும் தேவியைத் துதிக்கிறேன்.
இங்கு நிதி என்ற சொல்லானது வெகு ஆழத்தில் உள்ள புதையலைக் குறிக்கும்.
அதனை அடைய வேண்டும் என்றால், பல ஆட்கள் கொண்டு முயன்றால் மட்டுமே இயலும்.
இதனை ஏழைகள் செய்வது இயலாது .
ஆனால் இந்தத் தயை என்னும் நிதி,
எந்த முயற்சியும் இல்லாதவர்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் வேண்டியவற்றை அளிக்க வல்லதாகும்.
கிஞ்சித் என்றால் சிறிதளவு என்று பொருள். இந்தச் ச்லோகத்தில் அகிஞ்சன என்ற பதம் மூலம்
அவனது தயையைப் பெற “இந்தச் சிறிதளவு” என்பது கூட அவசியமில்லை என்று கூறினார்.
இங்கு அஞ்சனம் என்ற பதம் குற்றம் என்பதையும் கூறும் என்றாலும்,
நிரஞ்சனம் – குற்றமற்றவள் என்று முன்பின் விரோதமாக கூறுகிறார். இது ஏன்?
ஸ்ரீநிவாஸன் இயல்பாகவே தோஷம் அற்றவன். ஆக தயா தேவியும் குற்றம் அற்றவளாகவே இருத்தல் வேண்டும்.
ஆனால் நீதியைச் சரிவர நிலை நாட்ட வேண்டிய ஸ்ரீநிவாஸனை, அவனது தயை என்ற குணம்,
நம் போன்று குற்றம் செய்பவர்களையும் மன்னிக்கும்படி செய்து விடுகிறது.
இதனால் நீதி சரிவர அமையவில்லை எனலாம் அல்லவா?
ஆக ஸ்ரீநிவாஸனை திசை திருப்பிய குற்றம் தயா தேவிக்கு உள்ளது என்று ரஸோக்த்தியாகக் கூறுகிறார்.
கொஞ்சமேனும் பயனுள்ள கைம்முதலே அற்றவருக்கு
விஞ்சியதோர் நிதிக்குவியல் போன்றதுவாய் வீடளித்து
எஞ்சிலிலா பொருள் அறமும் இன்பமும் விளை நிலமாம்
அஞ்சன மலை நாதன் தன் அருளுக்கு என் வாழ்த்துக்களே –
———————————————————————————–
11-அநு சர சக்த்யாதி குணாம் அக்ரேசர போத விரசித ஆலோகாம்
ஸ்வா தீன வ்ருஷ கிரீசாம் ஸ்வயம் பிரபூதாம் பிரமாணயாமி தயாம் –
ஞான குணம் முன் செல்ல சக்த்யாதி பஞ்ச குணங்களும் பின் வர –
தனது வசத்தில் உள்ள ஸ்ரீ நிவாசனைக் கொண்டு மேன்மை உடைய தயா தேவியை வணங்குகிறேன்
சரணம் அடைகின்றேன் -அவளே தானே வந்து தன்னைக் காட்டிக் கொடுத்து ஸ்துதி பண்ணுவிக்கிறாள்-
ஞானாதி ஆறு குணங்களும் தயைக்கு அடங்கினவையே என்பதை
அடுத்து ஒன்பது ஸ்லோகங்களிலும் விரித்து அருளுகிறார்
அடியார் துயர் வெளிச்சம் இட்டு காண்பிக்க ஞானம் முன் செல்ல மற்றவை
இவளுக்கு பின் வந்து கார்யங்கள் செய்கின்றன
இந்த தயா சாதகமே தயா தேவியின் மேன்மைக்கு பிரமாணம் என்கிறார் –
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு அறிந்தவர் அன்றோ –
தயா தேவியின் பின்னே சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம் மற்றும் தேஜஸ் என்ற ஐந்து குணங்களும்
வேலைக்காரர்கள் போன்று செல்கின்றன.
அவளுக்கு முன்னே வழிக் காட்டியபடி ஞானம் என்ற குணம் செல்கிறது.
இப்படிப்பட்ட தயாதேவி, தன்னிடம் வசப்பட்ட ஸ்ரீநிவாஸனை தன்னிடமே கொண்டவளாய் ,
அதனால் தானே மேன்மை யுடையவளாய் உள்ளாள். இப்படிப்பட்ட தயா தேவியை நான் சரணமடைகிறேன்.
பகவான் என்ற சொல்லுக்கு ஏற்றம் தரும் ஆறு குணங்களும்,
தயை என்ற ஒரு குணத்திற்கே அடங்கின என்பது சரியா?
இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்து வரும் ஒன்பது ச்லோகங்கள் மூலம் நிரூபிக்கிறார்.
ஸ்ரீநிவாஸனின் அடியார்கள் யாரேனும் துயரம் கொண்டால் அவர்கள் எழுப்பும் துயர ஒலி தயா தேவிக்குக் கேட்கிறது.
இவள் பரபரப்பு அடைந்து , தனது அந்தக் குழந்தையை காக்க வேண்டும் என்று ஓடுகிறாள்.
இவள் ஸ்ரீநிவாஸனின் பட்ட மஹிஷியாக உள்ள போதிலும், குழந்தைக்காக ஓடும் அவசரத்தில் பல்லக்கைத் தேடி அதில் செல்வதில்லை.
ஆக இவள் ஓடும் போது, சக்தி போன்ற குணங்கள் இவளுக்கு பின்னேயே ஓடி வருகின்றன.
அந்தக் குழந்தை (துன்பத்தில் உள்ள அடியார்) எங்கு, எதற்காகக் குரல் கொடுத்தது என்று
வெளிச்சம் இட்டு காண்பிப்பதற்காக, ஞானம் என்ற குணம் தயாதேவிக்கு வழிகாட்டியபடி முன்னே ஓடுகிறது.
அந்தக் குழந்தையை சென்று அடைந்த பின்னர் அவள் பின்னே ஓடி வந்த சக்தி முதலான குணங்கள்,
தயாதேவியின் விருப்பம் காரணமாக, அந்தக் குழந்தைக்கு உதவத் தொடங்குகின்றன.
ஸ்வாதீன என்ற பதம் காண்க.
இதன் மூலம் தயாதேவிக்கு ஸ்ரீநிவாஸன் முழுமையாகக் கட்டுப்பட்டவன் என்று உணர்த்துகிறார்.
ஸ்ரீநிவாஸனிடம் தயாதேவி இல்லாமல் எதுவும் நிகழாது. ஸ்ரீநிவாஸனே இவளுக்கு வசப்பட்டுள்ளான் என்றால்,
இவளுக்கு எஜமானன் யார் என்ற கேள்வி ஏற்படும்.
அதற்கு விடையாக – ஸ்வயம் ப்ரபூதம் – இவளே இவளுக்கு எஜமானி என்றார்.
ப்ரமாணயாமி – என்று ஏன் கூறவேண்டும்? ப்ரமாணம் என்றால் சாட்சி என்று பொருள்.
தேசிகர் இந்த ச்லோகத்தை இயற்றும் வரையில் தயாதேவியின் பெருமை எத்தகையது என்பதை விளக்க
வேறு நூல் ஆதாரங்களே இல்லை எனலாம் .
தயா சதகம் என்ற இந்த நூலை மட்டுமே தயாதேவியின் பெருமைகள் விளக்கும் ஆதாரம் எனலாம்.
அதனால் அந்தப் பதத்தை இட்டார்.
சக்தி எனும் ஐங்குணங்கள் பின் தொடர ஞானம் எனும் ஓர் குணமோ வெற்றி யுரைக்
கட்டியமே கூறுவதாய் ஒளி மிக்கக் கைப்பந்தம் ஏந்தியதாய் முன் செல்ல
தன் கையிலே வயப்பட்ட வேங்கடனைத் தாங்கியவளாய் ஒப்பற்ற மேன்மையுடன்
பக்தர்களைக் காத்திடவே விரைகின்ற பெரும் கருணை நல்லாள் என் அடைக்கலமே –
————————————————————
12- அபி நிகில லோகே ஸூ சரித முஷ்டிந்த்ய துரித மூர்ச்ச்நா ஜூஷ்டம்
சஞ்ஜிவயது தயே மாம் அஞ்ஜன கிரி நாத ரஞ்ஜநீ பவதீ
அகில புவன என்று ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்தியை–நிகில லோகே -என்றும்
சஞ்ஜீவி நீம் என்றத்தை சஞ்ஜீ வயம் – என்றும்
ஆத்மாவை அறியாமல் மயங்கிக் கிடக்கும் நம் போல்வாரை மூலிகை கொண்டு
உயிர் பிழைக்க வைத்து அருளுபவள் –
பேஷஜம் பிஷக் -மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் –
அஞ்ஜன கிரி நாத ரஞ்ஜநீ பவதீ -ஸ்ரீ நிவாசனை மகிழ்விப்பது போலேவே –
அல்லி மலர் போக மயக்குகள் –
பித்தர் பனி மலர் பாவைக்கு –
இளைய பெருமாளுக்கு திருவடி சஞ்ஜீவினி பர்வதம் தூக்கி கொண்டு வந்து உயிர் பிழைப்பித்தது போலே
தயை தாயே! இந்த உலகில் நாம் செய்யும் புண்ணியங்கள் அனைத்தையும் ஒரே பிடியில் விழுங்க வல்ல
பல பாவங்களை நான் செய்தபடி உள்ளேன். அந்தப் பாவங்களின் விஷம் காரணமாக மயங்கிக் கிடக்கின்றேன்.
ஸ்ரீநிவாஸனை நீ எவ்விதம் மகிழ்விக்கிறாயோ அதே போன்று என்னையும் உயிர்ப்பிக்க வேண்டும்.
இங்கு மயக்கம் என்பது தான் செய்த பாவம் என்ற விஷத்தால் ஏற்பட்டது என்றும்;
அவை தனது ஆத்மாவை அறியாமை என்ற மயக்கத்தில் ழூழ்க வைத்தன என்றும் கூறினார்.
தாய் ஒருவள் தனது குழந்தை மயக்கம் வந்து விழும்போது மூலிகைகளை எடுத்து வந்து வைத்தியம் செய்வாள்.
தான் மயக்கத்தில் உள்ளபோது திருமலையில் கிடைக்கும் அபூர்வமான மூலிகையான
ஸ்ரீநிவாஸனின் தயை என்பதன் மூலம் தனது மயக்கம் தெளிய வாய்ப்புண்டு என்றார்.
மேலும் இங்கு அஞ்ஜனகிரி நாதன் என்று கூறியது காண்க.
இதிலும் ஸ்வாமி தேசிகனின் சாமர்த்தியம் புலப்படுகிறது.
எப்படி? இலட்சுமணன் மூர்ச்சை அடைந்து விழுந்தபோது ஸஞ்ஜீவினி பர்வதத்தை அனுமன்
(அஞ்ஜனா தேவி அனுமனைப் பெற தவம் இடந்த இடம் என்ற பொருத்தம் காண்க)
தூக்கி வந்து உயிர் பிழைக்க வைத்தான் அல்லவா?
அது போன்று நீயும் (தயாதேவி) என்னை உயிர்ப்பிக்க வேண்டும் – என்றார்.
எஞ்சலிலா உலகோரின் நன்மை எல்லாம் ஓர் பிடியில் விழுங்குவதில் வல்லனவாம்
நஞ்சனைய அடியேனின் பாபங்களால் நசுக்குண்டு மயக்குற்றுக் கிடக்கின்றேன்
அஞ்சன மலை தனில் வாழும் ஸ்ரீ நிவாஸன் அனைத்துலக நோய் தனக்கும் மருந்தாவான்
ரஞ்சித்துப் பெருமை யுறும் தயைத் தாயே ரக்ஷிப்பாய் அடியேனை அவனாலே –
——————————————————————————-
13-பகவதி தயே பவத்யா வ்ருஷகிரி நாதே சமாப்லுதே துங்கே
அப்ரதிக மஜ்ஜநாநாம் ஹஸ்த ஆலம்ப மத் ஆகஸாம் ம்ருக்ய
தயை வெள்ளத்தில் எனது பாபங்கள் மூழ்கிப் போகின்றன –
ஸ்ரீ நிவாசனும் மூழ்கிப் போகின்றானே
வேம் -எரித்தல்-பொசுக்குதல் –
பிரளயத்தில் மூழ்காத அவனையும் மூழ்க அடிக்க வைக்கும் பிரபாவம் – கருணை வெள்ளம்
பெருமை மிகுந்த தயா தேவியே! உனது தயை என்ற வெள்ளமானது கரை புரண்டு ஓடுகிறது.
என்னுடைய பாவங்கள் அதில் மூழ்கி விடுகின்றன.
இந்த வெள்ளத்தில் ஸ்ரீநிவாஸனும் மூழ்கியபடி இருப்பதால், அவனது கைகளில் எனது பாவங்கள் தேடும்படி ஆகின்றன.
கிருஷ்ணன் கீதையில் – ஞானம் என்பது அனைத்தையும் எரித்து விடும் – என்றான்.
ஆனால் கருணையே வடிவான தயா தேவியால் நம் பாவங்களை எரிப்பது என்ற கொடுமையான செயல்களை
கூடச் செய்ய இயல்வதில்லை.
மாறாக, நமது பாவங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஸ்ரீநிவாஸனை மூழ்க வைத்து,
அவனுடைய அந்த நினைவுகளைக் கழுவி விடுகிறாள்.
திருவேங்கடம் என்ற பதத்தில் உள்ள வேம் என்பது எரித்தல், பொசுக்குதல் என்பதாகும்.
நமது பாவங்களை எரிப்பது திருவேங்கட மலை என்பது இருக்க,
இங்கு இவர் உண்மையில் அவ்வாறு நிகழ்வதில்லை, அவை மூழ்கடிக்கப்படுகின்றன என்றார்.
அருள் கடலாய் விளங்குகின்ற பகவதியே அளப்பரிய நெடிதுயர்ந்த வேங்கடவன்
ஒருவனையே தன்னுள்ளே மூழ்கிடவே உறச் செய்யும் பெருமை தனை யுடையவளே
ஒரு தடையும் அற்றவனாய் உன் கடலில் ஒரு மூச்சில் மூழ் கிட்ட என் வினைகள்
உறுவாரோ எவரேனும் கைகொடுத்து உயிர்ப்பிக்க எனைத் தேடி தவிப்புறுமே
——————————————————————————-
14-க்ருபண ஜன கல்பலதிகாம் க்ருத அபரா தஸ்ய நிஷ்க்ரியாம் ஆத்யாம்
வ்ருஷகிரி நாதயே த்வாம் விதந்தி சம்சார தாரிணீம் விபுதா –
கற்பகக் கொடி கேட்டதை மட்டுமே தர வல்லது
பாபங்களை போக்கி மோஷம் அருளாதே
ஸ்ரீநிவாஸனின் தயை தேவியே!
வேறு கதியில்லாதவர்களுக்கு அனைத்தையும் வழங்கும் கற்பகக் கொடி நீயே!
பாவம் செய்தவர்களுக்கு அபயம் அளிக்கும் முதல் பிராயச் சித்தம் நீயே!
ஸம்ஸாரத்தில் சிக்கித் தவிப்பவர்கள் கரையேறுவதற்கு உதவுபவள் நீயே –
இப்படி அல்லவோ அறிஞர்கள் உன்னைக் கூறுகின்றனர்?
திரு வேங்கட நாதனுடை அருள் துணையே தக்கதொரு பக்தி முதலாம் துணையின்றி
வருந்துகிற அடியவருக்குத் துணை நின்றே விரும்பியதை வழங்குகின்ற கற்பகம் நீ
பெரும் பாபம் செய்தவருக்கு முதல் துணையாய்ப் பரிகாரச் செயல் போலே விளங்குகிறாய்
பிறவிக்கடல் தன்னிலிருந்து கரையேற்றும் படகாக உன்னை முனிவர் கூறுவரே
—————————————————————-
15-வ்ருஷகிரி க்ருஹமேதி குணா போத பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி முகா
தோஷா பவேயு ஏதே யதி நாம தயே த்வயா விநா பூதா –
ஞானாதி குணங்கள் நீ இல்லை என்றால் குற்றங்களே ஆகுமே
க்ருஹச்தன் தானே மற்ற ஆச்ரமங்களுக்கு உதவுபவன் –
ஸ்ரீ நிவாசன் கமலா க்ருஹமேதி என்பார் யதிராஜ சப்ததியில்
ரகுவீர கத்யத்திலும் ஸ்ரீ ராமனை க்ருஹச்தன் என்கிறார் –
தயா தேவியே! திருமலையில் இல்லறத்தில் உள்ள ஸ்ரீநிவாஸனுடைய
ஞானம், பலம் , வீர்யம், ஐச்வர்யம், சக்தி போன்றவை உன்னுடன் சேர்ந்து இல்லாமல்
பிரிந்தால் என்னவாகும் என்றால் –
அவை குணங்களாக இருப்பதை விடுத்து, மக்களுக்குத் தீமை ஏற்படுத்தும் குற்றங்களாகவே மாறி விடும்.
இங்கு ஸ்ரீநிவாஸனை ஸ்வாமி தேசிகன், க்ருஹஸ்தன் என்று கூறுவதைக் காண்க.
யதிராஜ சப்ததியில் ஸ்ரீநிவாஸனை – கமலா க்ருஹமேதி – என்றார்.
இது போன்று ரகுவீர கத்யத்தில் இராமனை க்ருஹஸ்தன் என்று வர்ணித்தார்.
க்ருஹஸ்தன் என்று ஸ்வாமி கூறுவதில் வேறு காரணம் உள்ளது –
ப்ரம்மச்சாரி, ஸந்ந்யாஸி முதலானவர்கள் க்ரஹஸ்தனையே தங்களுக்கு உதவியாக கொள்கின்றனர்.
ஆக க்ருஹஸ்தனுக்கு பல உயர்ந்த குணங்கள் இருப்பது அவசியம் ஆகிறது.
ஆகவே ஸ்ரீநிவாஸனுக்கு இந்தப் பெயர் பொருத்தமே என்று ஸ்வாமியின் கருத்து.
நற் சுனைகள் நிறைந்த திரு வேங்கடத்தில் நற் குடும்பம் நடத்தி வரும் பெருமானின்
பொற் குணங்கள் ஞான பலம் இறைமையும் சேர் போர் வீரம் சக்தி ஒளி எனும் ஆறும்
குற்றத்தையே மனிதரிடம் காண்பனவாய்க் கோணுதலாம் நிலையினையை அடைந்திருக்கும்
நற் கருணை எனும் தாயே நீயொருத்தி நல் துணையாய் அமையாது போயிருந்தால் –
——————————————————————-
16-ஆஸ்ருஷ்டி சந்ததாநாம் அபராதா நாம் நிரோதீ நீம் ஜகத
பத்மா சஹாய கருணே ப்ரதி சஞ்சர கேளிம் ஆசரதி
ப்ரதி சஞ்சரம்-நாட்டியத்தில் பின் நோக்கி செல்வது –
பிரளயம் -மேல் மேல் குற்றங்கள் பண்ண விடாமல் செய்து அருளும் லீலை ஆகும்
பத்மாவதியுடன் கூடிய ஸ்ரீநிவாஸனின் தயா தேவியே!
இந்த உலகம் ஸ்ருஷ்டி செய்யப்பட்டது முதலாக, இந்த உலகில் உள்ளவர்கள் தொடர்ந்து பாவங்கள் செய்தபடியே உள்ளனர்.
இதனைத் தடுக்க நீ ப்ரளயம் என்னும் விளையாட்டைச் செய்கின்றாய் போலும்.
ப்ரதி ஸஞ்சரம் என்ற பதம் ப்ரளயத்தைக் குறிக்கும்.
ஸஞ்சரம் என்றால் பரத நாட்டிய சாஸ்திரத்தில் “பின்னோக்கிச் செல்லுதல்” என்று பொருள்.
ப்ரளயத்தின் போது அனைத்தும் பகவானிடம் மீண்டும் சென்று ஒன்றி விடுவதால் (லயித்து விடுவதால்),
இந்தப் பதம் ப்ரளயத்தைக் குறிக்கும்.
ஒரு மனிதனிடம் ஒரு படகைக் கொடுத்து, நதியில் செல்லும்படிக் கூறியதாக வைப்போம்.
அவன் படகில் செல்லாமல் தன் விருப்பப்படி நதியில் மூழ்கிச் சென்றான் என்றால்,
படகு கொடுத்தவனுக்கு வருத்தம் ஏற்படும் அல்லவா?
இதே போன்று, உடல் கொடுத்த தயா தேவிக்கு, மனிதர்கள் தவறான பாதையில் செல்வதைக் கண்டு வருத்தம் ஏற்படுகிறது.
ஒரு நாட்டிய மேடையில் நடை பெரும் நிகழ்வுகள் அபஸ்வரமாக ஒலிக்கும் போது,
நாட்டியமாடுபவர்கள் பின் நோக்கி நகர்வது வழக்கம்.
இந்த உலகையே நாட்டிய மேடையாகக் கொண்டால், அங்கு அபஸ்வரம் உண்டானால், தயாதேவியானவள் ப்ரளயம் ஏற்படுத்தி விடுகிறாள்.
அரவிந்த வாசினியின் கேள்வனாவான் அத்திருமலை நாதன் தன் தயா தேவி
ஸ்ருஷ்ட்டி காலம் முதலாக உலகினிலே சேதனர்கள் இடைவிடாது செய்து வரும்
பெரும் பாவச் செய்வினைகள் அளவிலாமல் போவதனைக் கண்டு இரங்கி கருணையுடன்
பிரளயம் எனும் விளையாட்டை ஏற்படுத்தி மக்களுக்கு ஓய்வுதனை அளிக்கின்றாய் –
—————————————————————————
17-அசித் அவிசிஷ்டான் பிரளயே ஜந்தூன் அவலோக்ய ஜாத நிர்வேதா
கரண களேபர யோகம் விதாசி வ்ருஷ சைல நாத கருணே த்வம்
சிந்திக்கவும் செயல் ஆற்றவும் கரண களேபரங்களையும் உடனே அளிக்கிறாள் –
இவளால் தூண்டப்பட்ட இவள் திருமுக மலர்சிக்காகவே ஸ்ருஷ்டிக்கிறான் –
ஸ்ரீநிவாஸனின் தயா தேவியே! ப்ரளயத்தின்போது அனைத்து உயிரினங்களும் அசேதனப் பொருள்கள் போன்று,
அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு நீ மனம் வருந்துகிறாய்.
உடனே, ப்ரளயத்தில் உனக்கு ஏற்பட்ட விருப்பத்தை நீக்கி, அவர்களுக்குப் புலன்களுடன் கூடிய உடலை அளிக்கிறாய்.
கடந்த ச்லோகத்தில் தயாதேவியே ப்ரளயத்தின் காரணம் என்று கூறி,
இங்கு அவளே ஸ்ருஷ்டிக்கும் காரணம் என்று கூறுவதைக் காண்க.
இதன் கருத்து, தயாதேவியால் தூண்டப்பட்ட ஸ்ரீநிவாஸன் இவற்றைச் செய்கிறான் என்பதாகும்.
இங்கு கூறப்பட்ட யோகம் என்பது ப்ரளயத்தின் பின் ஒவ்வொரு ஜீவனுக்கும் உடல் மற்றும் புலன்கள் அளிக்கும் செயலாகும்.
கரணம் என்றால் ஞானேந்திரியங்கள் ஆகும். ஜீவன் கரணம் மற்றும் களேபரத்தோடு இணையும் போது,
அவனுக்குச் சிந்திக்கவும் செயலாற்றவும் செய்யத் தேவையான திறன் ஏற்படுகிறது.
திருவேங்கட நாதன் தனை அகலாது துணை கொண்டு நிலைத்திருக்கும் கருணை யம்மா
பிரளயத்தின் காலத்தில் அறிவின்றி புலன்களையும் இழந்தனவாய் சடம் போலே
இருக்கின்ற உயிர்கள் தமைக் கண்டதனால் உளம் வருந்தி அவர்களுக்குப் புலன் உடலம்
அறிவெல்லாம் அளித்து அருளி நல் வழியில் ஆவர் புகவே தகுதியினை நல்கினையே –
————————————————————————————
18-அநு குண தசா அர்ப்பிதேந ஸ்ரீ தர கருணே சமாஹித ஸ்நேஹா
சமயசி தம பிரஜா நாம் சாஸ்திர மயேந ஸ்த்திர ப்ரதீபேந
பிரளயம் -சிருஷ்டிக்கு பின்பு சாஸ்திர பிரதானம் -சத்வ குணம் என்னும் திரி –
அன்பு என்னும் எண்ணெய் ஊற்றி-
சாஸ்திரம் ஞான விளக்கு -சாஸ்திர பிரதானம் -அஜ்ஞானாதிகள் நீங்க –
மஹா லக்ஷ்மியைத் தரித்தவனின் கருணை தேவியே! சாஸ்திரம் என்னும் நிலையாக எரியும் தீபத்தில்,
ஸத்வ குணம் என்னும் திரி கொண்டு, அன்பு என்னும் எண்ணெய் ஊற்றி நீ ஏற்றுகிறாய்.
இதன் மூலம் மக்களின் அறியாமை என்ற இருள் நீக்கப்படுகிறது.
பதினோராவது ச்லோகத்தில் ப்ரளயத்தைப் பற்றிக் கூறினார்.
இதனை ஏற்படுத்துவதும் தயாதேவியே என்றார். 17-ஆவது ச்லோகத்தில் தயை மூலமாகவே ஸ்ருஷ்டி ஏற்படுவதாகக் கூறினார்.
அதன் அடுத்த நிலையான சாஸ்திரங்கள் உண்டாவதை இங்கு கூறினார்.
முதலில் ப்ரளயம் உண்டாகிறது. அடுத்து ஸ்ருஷ்டி ஏற்படுகிறது. இவை இரண்டும் உடல் தொடர்பு கொண்டவையாகும்.
ஒன்றில் உடல் அழிக்கப்படுகிறது, மற்றொன்றில் உடல் உருவாகிறது. அடுத்த நிலையாக நான்முகன் படைக்கப்பட்டு,
அவனுக்கு வேதங்கள் அளிக்கப்படுகின்றன. இது ஆத்மா தொடர்புடையது. இந்த நிலையை இங்கு கூறுகிறார்.
ஸ்ரீநிவாஸனுடைய தயாதேவியே ! உலகில் இருளில் வழி தடுமாறாதிருப்பதற்காக எண்ணெய் வார்த்துத்
திரியிட்டு விளக்கை ஏற்றி வைப்பர்.
அவ்வொளியால் மக்கள் தவறான வழியிற் சென்று தடுமாறாமல் நேர்வழியிற் செல்லலாகும்.
நீ உலகுக்கெல்லாம் தாயாயுள்ளாய் , எல்லா மக்களும் உன் குழந்தைகள் .
அவர்கள் பால் நீ கொண்டுள்ள அன்பு தான் நீ கொடுக்கும் விளக்குக்கு எண்ணெயாகும்.
அவர்களுக்கு ஸமயத்தில் தலையெடுக்கும் நற்குணமே திரியாகும்.
நீ வெளியிடும் வேதங்கள் முதலிய சாஸ்த்ரங்களே அவர்களுக்குக் கொடுக்கும் சாசுவதமான விளக்காகும்.
அவர்களின் அஞ்ஞானமே விளக்கால் ஒழியும் இருளாகும்.
மக்களுக்கு நற்குணம் வாய்க்கும் ஸமயம் பார்த்து மிக்க அன்புடன் வெளியிடும் சாஸ்த்ரங்களின் கருத்தை
அவர்கள் உணர்ந்து தங்கள் அஞ்ஞானம் ஒழிந்து நல்ல தெளிவு பெற்றுத்
தவறான செயல்களை விலக்கி நேரிய வழியில் நடந்து நல்வாழ்வு பெறச் செய்கின்றாய்.
ஸ்ரீ தரனின் இணை பிரியா தயா தேவீ நல்லன்பாம் எண்ணெய் தனை நிறைத்திட்டு
உரிய கணம் மேலோங்கும் நற் குணத்தை உற்றதிட திரியாக்கி வைத்து நீயே
அரிய வுரை செப்புகின்ற நன்னூல்கள் அரு மறைகள் எனும் தீபச் சுடர் ஏற்றி
அறியாமை எனும் இருளை மக்களிடம் அடியோடு ஒழித்து அவரைக் காக்கின்றாய் –
———————————————————————-
19-ரூடா வ்ருஷாசல பதே பாதே முக காந்தி பத்ரளச் சாயா
கருணே ஸூ கயசி விநதான் கடாஷை விடபை கராபசேய பலை
ஸ்ரீ நிவாசனின் திருவடிகளில் வெளிப்படுகிறாய்
அடிக் கீழ் அமர்ந்து புகுவார்க்கு கடாஷம் அளித்து அருளுகிறான் –
கடாஷம் அடியாகவே -தயா வ்ருஷத்தில் இலைகள் தளிர்கின்றன
தரையோடு தரை கிடந்தது அண்டுபவர்கள் பலத்தை எளிதாக கொள்வார்கள் –
தயா தேவியே! நீ ஸ்ரீநிவாஸனின் திருவடிகளில் இருந்து வெளிப்படுகிறாய்.
அவனது திருமுகத்தில் காணப்படும் ஒளி மூலமாகவே, இலைகள் நிறைந்த மரம் போன்று அழகு பெறுகிறாய்.
உன்னை வணங்கி, உனது நிழலைச் சிலர் அடையக் கூடும். அவர்களுக்கு, மிகவும் எளிதாகப் பறிக்கவல்ல
“கடாக்ஷம்” என்னும் பழங்களைக் கொடுத்து இன்பம் அளிக்கிறாய்.
தயா தேவியானவள் ஸ்ரீநிவாஸனின் திருவடிகளில் தனது வேரைக் கொண்டுள்ளாள்.
ஆக இவள் ஸ்ரீநிவாஸனின் திருவடிகளை அடைபவர்களுக்கு மட்டுமே புலப்படுகிறாள்.
ஸ்ரீநிவாஸன் தனது திருமுகத்தைக் கவிழ்த்து, தனது திருவடிகளில் உள்ள தயை என்னும் இந்த மரத்தைக் காண்கிறான்.
அவனுடைய பார்வையில் இருந்து விழும் ஒளி மூலமாக அந்த மரத்தில் தயை என்னும் நிழல் அளிக்க வல்ல இலைகள் தழைக்கின்றன.
இந்த மரத்தின் கிளைகளாக ஸ்ரீநிவாஸனின் கடாக்ஷங்கள் உள்ளன.
இந்த மரத்தில் உள்ள பழங்களானவை, தயா தேவியை யார் ஒருவர் மிகவும் பணிவாக,
தரையோடு தரையாகக் கிடந்து அண்டுகிறார்களோ அவர்களுக்கு, தங்கள் கைகளால் எளிதாகப் பறிக்கும்படி உள்ளது.
திருமலையின் நாதனுடைத் திருவடியில் தலை வணங்கி அடியவர்கள் பணிவதனால்
கருணை நீயே முளைத்து எழுந்த ஒரு மரமாய் கரும் பசுமை அவன் முகத்தின் ஒளி என்னும்
நிறைந்து அடர்ந்த இலைகளோடும் கூடி அவன் நோக்குகளே தாழ்ந்த பெரும் கிளைகளாக
கரம் கொண்டு பறித்து உண்ணும் கனி யளித்துக் களிப்பூட்டி பக்தர்களைக் காக்கின்றாய் –
—————————————————————————–
20-நயநே வ்ருஷாசல இந்தோ தாரா மைத்ரீம் ததா நயா கருணே
த்ருஷ்டஸ் த்வயா ஏவ ஜனிமான் அபவர்க்கம் அக்ருஷ்ட பச்ச்சயம் அநு பவதி —
தாரா மைத்ரீ–கண்டவுடனே அன்பு நிருபாதிகமாக -அவளது கடாஷம் அடியாகவே இவனது கடாஷம் –
அவனே க்ருஷிகனாய் இருந்து பலம் அளிக்கிறான் –
தயா தேவியே! திருமலையில் உதித்த குளிர்ந்த சந்திரன் போன்ற ஸ்ரீநிவாஸனின் திருக்கண்களின்
விழியினுடைய நட்பை நீ கொண்டுள்ளாய் . உன்னால் பார்க்கப் பட்ட மனிதன் ஒருவன்,
உழவு போன்ற சிரமம் இன்றி கிட்டும் பலன் போன்று, எந்த விதமான முயற்சியும் இன்றி மோக்ஷம் அடைகிறான்.
தாரா மைத்ரீ என்றால் “கண்டவுடன் அன்பு” என்பதாகும். இதற்கு எந்த விதமான காரணமும் இருக்காது.
தயா தேவியின் பார்வை நம் மீது விழுந்தது என்றால், எந்த விதமான காரணமும் இல்லாமல்
ஸ்ரீநிவாஸனின் பார்வை நம் மீது விழுந்து விடும்.
அவளது பார்வையைத் தொடர்ந்தே இவனது பார்வையும் செல்கிறது என்று கருத்து.
ஒரு தோட்டமானது தோட்டக்காரனின் கவனிப்பு இல்லாமலேயே, மழை முதலானவற்றின் மூலமாகச் செழித்து வளரக்கூடும்.
இது போன்று மோக்ஷத்துக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் ஏதும் அவசியம் இன்றி,
நமக்கு தயா தேவியின் கருணை காரணமாக, மோக்ஷத்திற்கான முயற்சிகளையும் அவனே மேற் கொண்டு,
நமக்கு மோக்ஷ பலன் அளிக்கிறான்.
நீடுயர்ந்த திரு மலையில் அனைவரது நயனங்களும் விருந்து கொள விளங்குகின்ற
ஈடில்லா முழு நிலவாம் ஸ்ரீ நிவாஸன் இரு கண்ணின் நட்ப்பு தாரை தயை யுன்னால்
ஊடிலாது நோக்கல் என்னும் பேறுடனே உலகத்தில் பிறப்புற்ற மனிதன் தான்
பாடிலாது பெறற்க்கு அரிய வீடென்னும் பெரும் பயனைப் பெற்றதனைத் துய்க்கிறானே –
——————————————————————————-
21-சமய உப நதை தவ பிரவாஹை அநு கம்பே க்ருத சம்ப்லவா தரித்ரீ
சரணாகத சஸ்ய மாலிநி இயம் வ்ருஷசைல ஈச க்ருஷீ வலம் திநோதி
சமய -சரணாகதி மார்க்கம் -தயா தேவியின் கருணையால் உலகோர் சரண் அடைய
பக்தி உழவன் ஸ்ரீ நிவாசன் -வ்ருஷ சைல ஈசன் -மகிழ்கிறான் –
தயா தேவியே! இந்த உலகம் சரியான நேரத்தில் ஓடி வரும் உனது கருணையால் சூழப்பட்டுள்ளது.
அதில் உள்ள பயிர்களின் வரிசையாக, ஸ்ரீநிவாஸனைச் சரணமடைந்தவர்கள் உள்ளனர்.
இதனைக் கண்ட , ஸ்ரீநிவாஸன் என்ற உழவன் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறான்.
ஸமய என்ற பதம் எம்பெருமானாரின் சரணாகதி மார்க்கத்தைக் குறிக்கும்.
இந்த மார்க்கம் உண்டான பிறகே, இந்த பூமி எங்கும் எம்பெருமானைச் சரணம் அடைந்தவர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
அதற்கு முன்பு பாவங்களைத் தடையற்றுச் செய்து வந்த மனிதர்கள், பலர் இருந்தனர்.
அவர்களின் சுமையைத் தாங்க இயலாமல், அந்தந்த காலங்களில் பூமா தேவி பகவானிடம் முறையிட்டபடி இருந்தாள்.
அவனும் அவ் வப்போது பல்வேறு அவதாரங்கள் எடுக்க நேரிட்டது.
ஆனால், எம்பெருமானாருக்குப் பிறகு பூமியில் சரணாகதி செய்தவர்கள் அதிகமாக, பாவம் செய்தவர்கள் குறைய –
இதனால் பூமி தேவிக்கு பாரமும் குறைந்தது.
இங்கு “வ்ருஷசைல” என்று கூறியதைக் காண்க. இதன் மூலம் ஸ்ரீநிவாஸன் என்ற உழவன்
தனது நிலமான இந்தப் பூமியை, உழவன் ஒருவன் எவ்விதம் உயரமான இடத்திலிருந்து கண்காணிப்பானோ
அது போன்று செய்கிறான் என்பது உணர்த்தப்பட்டது.
கருணை எனும் எம் தாயே காலத்தின் நிலை அறிந்து
பெருக்கெடுத்த உன் வெள்ளம் பாய்ந்திடவே முளைத்தெழுந்த
சரணாகதர் எனும் அடியோர் செழும் பயிரின் வரிசை கண்டு
திருவேங்கடவன் உழவன் தன் திருவுள்ளம் களிப்புறுமே –
——————————————————————————-
22-கல சோததி சம்பதோ பவத்யா கருணே சன்மதி சம்ச்க்ருத்யா
அம்ருத அம்சம் அவைமி திவ்ய தேஹம் ம்ருத சஞ்ஜீவனம் அஞ்ஜநா சல இந்தோ –
திருப் பாற் கடல் போலே நீ -அறிவு என்னும் மத்து வைத்து கடைந்து
ஸ்ரீ நிவாசன் திரு மேனி ஒத்த சந்தரன் வெளி வந்தான் –
தயா தேவி தன்னுள் உள்ள அமிர்தம் கொண்டே அவனது திவ்ய மங்கள விக்ரஹம் –
அஞ்ஜ நாசல இந்தோ -திருமலையில் சந்தரன் தானே – அர்ச்சாவதாரம் –
தயா தேவியே! நீ திருப்பாற்கடல் போன்று மிகவும் பெருமையுடன் உள்ளாய்.
அதில் அறிவு என்ற மத்து மூலம் நல்லவர்கள் கடையும் போது, நிகழ்ந்தது என்ன?
இறந்தவர்களை எழுப்ப வல்ல அம்ருதம் போன்ற ஸ்ரீநிவாஸனின் சந்திரனை ஒத்த திருமேனி வெளிப்பட்டது என்று எண்ணுகிறேன்.
இங்கு ஸ்ரீநிவாஸனுடைய திவ்ய மங்கள விக்ரஹம், தயா தேவி தன்னுள் இருந்து கொடுத்த அம்ருதம் என்று கூறுகிறார்.
பகவானின் ரூபங்கள் ஆகமங்களில் 5 விதமாகக் கூறப்பட்டுள்ளது. அவையாவன:
பர – பரமபதம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளவன்
வ்யூஹ – வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருந்தன், 12 வடிவங்களான கேசவன், நாராயணன், மாதவன்,
கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன்.
ஹார்த – ஒவ்வொரு ஜீவனிலும் அந்தர்யாமியாக உள்ளவன்
விபவ – இராமன், க்ருஷ்ணன் போன்ற திரு அவதாரங்கள்
அர்ச்ச – திருவரங்கம் நம்பெருமாள் போன்ற திவ்யமங்கள விக்ரஹங்கள், சாளக்ராமம் முதலானவை.
திவ்ய தேஹம் என்ற பதம் மூலம் ஸ்வாமி தேசிகன், இந்த 5 ரூபங்களையும் சேர்த்தே குறித்த போதிலும்,
“அஞ்ஜனாசல இந்தோ – திருமலையின் சந்திரன்” – என்று கூறியதால், அர்ச்சா ரூபத்தையே கூறினார் என்று கொள்ள வேண்டும்.
திருப் பாற் கடல் கடையப் பட்ட போது அதிலிருந்து – அமிர்தம், சந்த்ரன் போன்றவை வெளிப்பட்டன.
இவை அனைத்தையும் மிகவும் பொருத்தமாக ஸ்வாமி இங்கு கூறுவதைக் காண்க.
பாற் கடலாய் நீ யமைய புரிசிந்தை எனும் மத்தால்
ஆற்றலர்கள் கடைந்ததனால் அஞ்சன மலை உச்சி தனில்
தோன்றியதோர் அரு மருந்தாம் ஸ்ரீ நிவாஸன் எனும் மதியை
ஏற்றமிகு அமுதமென அறிகின்றேன் தயா தேவீ –
——————————————————————–
23-ஜலதே இவ சீததா தயே த்வம் வ்ருஷ சைல அதிபதே ஸ்வ பாவ பூதா
பிரளய ஆரபடீ நடீம் தத் ஈஷாம் பிரசபம் க்ராஹயசி பிரசித்தி லாஸ்யம் –
ஸ்ரீ நிவாசனது ஸ்வ பாவமாகவே நீ உள்ளாய்-பிரளயத்தில் இருந்து சிருஷ்டிக்க தூண்டி விடுகிறாய்
ஆரபடீ -கொடிய தாண்டகம் –லாஸ்யம் -இனிமையான நாடகம் -முந்தியது பிரளயம் -பிந்தியது சிருஷ்டி
ஸ்ரீ கண்ணன் காளியன் தலையில் ஆரபடீ நடனம் ஆடியதாக யாதவாப்யுதயத்தில் அருளிச் செய்கிறார் —
தயா தேவியே! கடலுக்கு எவ்விதம் குளிர்ச்சி என்பது ஸ்வபாவமோ அது போன்று
ஸ்ரீநிவாஸனுக்கு நீ ஸ்வபாவமாக உள்ளாய்.
ப்ரளய காலத்தில் அவனது ஸங்கல்பம் மிகவும் கொடுமையாக ஆடுகிறது.
இவ் விதம் ஆடும் அந்த நாட்டியக் காரியை திசை திருப்பி, மென்மையான ஸ்ருஷ்டி என்னும் நடனம் ஆடும்படிச் செய்கிறாய்.
நீரானது எவ்வளவு சூடாக இருந்தாலும் சிறிது நேரம் கழித்து தனது இயல்பான தன்மையான குளிர்ச்சியை அடைந்து விடும்.
இது போன்று, நாம் எவ்வளவு கொடிய பாவங்கள் செய்தாலும் கோபம் கொள்ளும் ஸ்ரீநிவாஸன்,
உடனேயே தனது ஸ்வபாவமான கருணையை அடைந்து விடுகிறான்.
இங்கு ஆரபடீ என்பது அகோர தாண்டவம் என்னும் கொடிய நடனமாகும்.
இதனை ஆண்கள் ஆடினால் தாண்டவம் என்றும், பெண்கள் ஆடினால் ஆரபடீ என்று கூறுவர்.
இதன் எதிர்பதம் லாஸ்யம் என்னும் இனிமையான நடனமாகும்.
இங்கு ப்ரளயம் என்பதை ஆரபடி என்றும், ஸ்ருஷ்டி என்பதை லாஸ்யம் என்பதாகவும் கூறினார்.
தயா தேவி தனது முயற்சியால் ப்ரளயம் என்ற குணத்தில் இருந்து, ஸ்ருஷ்டி என்ற குணத்திற்குத் திருப்புகிறாள் என்று தோன்றும்.
ஆனால் அது உண்மை அல்ல – காரணம் பகவானின் ஸங்கல்பத்திற்கு மாறாக எதுவும், யாராலும் நடக்க இயலாது.
அவனுடைய ஸ்வபாவம் கருணை உள்ளதாக இருப்பதாலும், அந்த நேரம் அறிந்து
தயா தேவி அவனிடம் விண்ணப்பிப்பதாலும், அவன் ஸ்ருஷ்டி செய்கிறான்.
ஸ்வாமி தேசிகன் தன்னுடைய யாதாவாப்யுதயம் என்னும் காவியத்தில், கண்ணன் காளியனின் தலைகளில்
ஆரபடீ நடனம் ஆடியதாகக் கூறுகிறார்.
திரைக்கடலின் இயல்பான தன்மை போல திருவேங்கட நாதனுக்கு நீயாவாய்
ப்ரளயமெனும் தாண்டவத்தை ஆடுமவன் சிந்தை தனை நீ வலிய தணிப்பித்து
அருள் எனும் ஆட்டம் தன்னை உவந்தேற்று ஆடிடவே வைக்கின்றாய் தயை நீயே
கருணையுடன் படைப்பென்னும் சாந்த நடம் கைக்கொள்ளச் செய்கின்றாய் தயா தேவீ
——————————————————————–
24-ப்ரணத பிரதிகூல மூல காதீ பிரதீக கோபி வ்ருஷாசல ஈச்வரச்ய
களமே யவச அபசாய நீத்யா கருணே கிங்கரதாம் தவ உபயாதி-
ஸ்ரீ நிவாசன் கோபம் தவிர்க்க பிரளயத்தில் இருந்து சிருஷ்டிக்க மாற்றி அருளியது முன் ஸ்லோகத்தில் அருளி
இதில் -அத்தை அடியார்கள் துன்பங்கள் விளைப்பவர் மேல் பிரயோகிக்கப் பண்ணி அருளுகிறாள் –
அவன் கோபம் இவளது கிங்கரன் என்கிறார் –
தயா தேவியே! தனது அடியார்களை விரோதிப்பவர்களை அழிக்க வல்லதாக ஸ்ரீநிவாஸனின் கோபம் உள்ளது.
இது பயிரில் உள்ள களைகளை அழிக்கும் விதமாக உள்ளது. இந்த கோபம் உனக்கு வேலையாளாக உள்ளது.
கடந்த ச்லோகத்தில் ஸ்ரீநிவாஸனின் கோபத்தை, ப்ரளயத்தில் இருந்து ஸ்ருஷ்டிக்கு மாற்றுவதன் மூலம் தவிர்ப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் இந்த கோபம் வீணாகப் போவதை தயா தேவி விரும்புவதில்லை.
ஆகவே அதனை அடியார்களின் துன்பங்கள் மீது செல்லும்படிச் செய்து விடுகிறாள்.
ஸ்ரீநிவாஸனுக்கு விரோதிகள் யாரும் இல்லை. ஆனால் அவனது அடியார்களின் விரோதிகளை, தனது விரோதி என்றே அவன் கொள்கிறான்.
இந்தக் கோபம் தயாதேவிக்கு அடிமையாக உள்ளது என்றார்.
இதன் பொருள் – இவள் நினைத்தால் அந்தக் கோபம் ஸ்ரீநிவாஸனிடம் ஏற்படுவதும் , ஏற்படாமல் போவதும் நிகழ்கிறது – என்பதாகும்.
இங்கு தயாதேவியின் வேலையாளாக இருப்பதற்கு ஸ்ரீநிவாஸனின் கோபம் முயல்கிறதே அல்லாமல்,
தயா தேவி அதனைத் தனக்கு அடிமையாக்க வேண்டும் என்று எண்ணவில்லை – என்னும் கருத்து வெளிப்படுகிறது.
ஏற்றமிகு திருவேங்கட நாதனுக்கும் என்றேனும் தோன்றுகிற ஒப்பற்ற
சீற்றம் தான் அடியவரின் பகைவர் குலம் நசிந்திடவே செய்துனக்குப் பணி செய்யும்
நாற்றுகளைக் காத்திடவே கலையறுப்பு ஞாலத்தில் நடப்பதனைக் கண்டுள்ளோம்
ஆற்றல் மிகு தயா தேவீ உன் தனக்கு அடிமை செய்யும் வேங்கடவனின் சினம் தானே –
————————————————————————
25-அபஹிஷ்க்ருத் நிக்ரஹான் விதந்த கமலா காந்த குணாத் ஸ்வ தந்த்ரதா ஆதீன்
அவிகல்பம் அநு க்ரஹம் துஹா நாம் பவதீம் ஏவ தய பஜந்தி சந்த –
அவன் ஸ்வ தந்த்ரன்
இவளோ பசி கன்றுக்கு பாலையே சுரப்பது போலே அருளையே பொழிபவள் –
இத்தை அறிந்து உன்னையே சரண் அடைகிறார்கள்
தயா தேவி! ஸ்வதந்திரம் போன்ற ஸ்ரீநிவாஸனின் எண்ணற்ற குணங்கள், தண்டனை அளிப்பதை விலக்குவதில்லை.
இதனை அறிந்த பெரியவர்கள், அனுக்ரஹத்தை மட்டுமே அருளும் உன்னைச் சரணம் அடைந்தனர்.
ஸ்வதந்திரம் என்பது அனைவருக்கும் எஜமானனாக (ப்ரபு) உள்ள தன்மையாகும்.
இந்த நிலையானது, தன்னுடைய ஆணையை மீறுபவர்களுக்கு தண்டனை அளிக்காமல் இருக்காது.
ஆக ஸ்ரீநிவாஸனின் குணங்கள் காப்பது, தண்டிப்பது என்ற இரண்டுக்கும் பொதுவானதாகும்.
ஆனால் தயாதேவியோ காப்பதற்கு மட்டுமே உள்ளாள். தண்டிப்பது என்றால் அவளுக்கு என்னவென்றே தெரியாது.
பசுவானது தனது கன்றுக்குப் பால் சுரப்பது போல், இவள் அனுக்ரஹத்தைச் சுரக்கிறாள்.
இதனால் அறிஞர்கள் தயா தேவியையே அண்டுகின்றனர்.
இட்டம் போல் செயல் படுதல் முதலான எண்ணற்ற வேங்கடவன் குணங்களுக்குச்
சிட்டர்களைக் காத்தலுடன் குற்றங்களைத் தண்டிக்கும் இயல்பினையும் கண்டவர்கள்
நிட்டூரம் எனும் தன்மை துளியின்றி நல்லருளே சுரக்கின்ற கொள்கை தனைத்
திட்டமாகக் கொண்டுள்ள கருணை நீயே திடமான சரணம் எனப் பணிகின்றார் –
————————————————————————–
26-கமலா நிலயஸ் த்வயா தயாளு கருணே நிஷ்கருணா நிரூபணே த்வம்
அத ஏவ ஹி தாவக ஆஸ்ரிதா நாம் துரிதா நாம் பவதி த்வத் ஏவ பீதி
ஸ்ரீ நிவாசனை கருணாவானாக பண்ணி அருளும் உன்னை அண்டியவர்கள் பாபங்கள்
உன்னை கண்டாலே நடுங்க நீ கருணை உள்ளவள் அல்லையோ என்னப் பண்ணுகிறது
தயா தேவியே! ஸ்ரீநிவாஸசன் உன்னால் கருணை உள்ளவன் என்று ஆகி விடுகிறாள்.
ஆனால் உனக்குக் கருணை இல்லையோ என்று தோன்றுகிறது –
காரணம், உன்னை அண்டியவர்களின் பாவங்கள், உன்னைக் கண்டு அல்லவோ நடுங்குகின்றன?
தயையைக் கண்டு அடியார்களின் பாவங்கள் நடுங்குகின்றன.
அந்தப் பாவங்கள் குறித்து, தயா தேவிக்கு கருணை ஏற்படுவதில்லை.
ஆனால் தனது தொடர்பு உள்ள அனைவரையும் கருணை கொண்டவர்களாக மாற்றுவது தயா தேவியின் இயல்பாகும்.
இவளது தொடர்பு உள்ளதால் தான் ஸ்ரீநிவாஸனே கருணை உள்ளவனாக இருக்கிறான் என்றார்.
கருணை நீயே அகலாது மன்னியதால் கமலநாதன் தயாளு எனப்பெயர் கொண்டான்
கருணை நீயோ கருணையற்ற ஒருத்தியென கூர்ந்து நாமே ஆராய்ந்தால் காண்கின்றோம்
சரணமென உன்தனையே அடைந்தவரைச் சார்ந்த கொடும் பாபங்களின் கூட்டமெல்லாம்
பெருமச்சம் உற்றவனாய் நடுக்கமுறும் பரிதாப நிலை கண்டோம் உன் தனாலே –
————————————————————————————–
27-அதி லங்கித சாசநேஷூ வபீஷ்ணம் வ்ருஷ சைல அதிபதி விஜ்ரும்பித ஊஷ்மா
புன ஏவ தய ஷமா நிதானை பவதீம் ஆத்ரயதே பவதீ அதீனை
ஊஷ்மா -கடுமையான ஜூரம் -தவறான வழியில் செல்வர்களை கண்டு ஸ்ரீ நிவாசனுக்கு
ஊஷ்மா வர அதற்கு நிதானம் மருந்து ஷமை அருளுகிறாள் –
தயா தேவியே! ஸ்ரீநிவாஸன் தனது ஆணைகளை மீறி நடப்பவர்களிடம் மிகுந்த கோபம் கொள்கிறான் .
ஆயினும் அந்தக் குற்றங்களை நீ மன்னிப்பதாக உள்ளதால் உன்னை நாடுகிறான்.
“ஊஷ்மா” என்றால் கடுமையான ஜுரம் என்றும்,
“நிதான” என்றால் அதற்குரிய மருந்து என்றும் ஆயுர் வேதத்தில் கூறுவார்கள்.
தான் படைத்த மனிதர்கள் தவறான வழிகளில் நடப்பதைக் கண்டு ஸ்ரீநிவாஸனுக்கு ஜுரம் வந்து விடுகிறது.
அவனுக்கு ஏற்ற வைத்தியங்களை தயா தேவி செய்கிறாள். இதன் மூலம் அவனைக் காப்பாற்றுகிறாள்.
“புனரேவ” என்ற பதம் மூலம் – தயா தேவியை ஸ்ரீநிவாஸன் மறக்கும் போது தான் இவ்விதமாக உயிர்கள் பாவம் செய்து,
அவனுக்கு ஜுரம் ஏற்படுகிறது என்பதையும்;
அதன் பின்னர் அவன் தயா தேவியிடம் திரும்பும்போது அந்த ஜுரம் நீங்கப் பெறுகிறது என்பதையும் கூறினார்.
தயாதேவி ஸ்ரீநிவாஸனுக்கு பொறுமை என்னும் ஊசி மருந்தை செலுத்தும் போது, அவனுடைய ஜுரமானது இறங்கி விடுகிறது.
இதன் மூலம் தயா தேவி ஸ்ரீநிவாஸனை விட்டுச் சிறிது அகன்றாலும், ஸ்ரீநிவாஸனுக்குத் துன்பம் ஏற்படுகிறது என்று கருத்து.
கணம் தோறும் தன்னுடைய விதிகள் தமைக் கடக்கின்ற மனிதர் பால் வளர்ந்தெழுந்த
சினமுடைய திரு வேங்கட நாதன் தன் திருவுள்ளம் அனல் போல் கொதிக்கையிலே
கணப் பொழுதில் மறுபடியும் தண்மை தனை கருணை நீயே அவனுடையச் செய்வதனால்
மனமுவந்து வேங்கடனும் உன் மீது மட்டில்லா ஆதரமே கொண்டுளனே –
——————————————————————-
28-கருணே துரிதேஷூ மாமகேஷூ பிரதிகாராந்தர துர்ஜயேஷூ கின்ன
கவசாயி தயா த்வயைவ சாரங்கீ விஜய ஸ்த்தானம் உபாஸ்ரித வ்ருஷாத்ரீம்
தயா தேவியை கவசமாக பூண்டு நமது பாபங்களை எதிர் கொள்கிறான் –
சர்வ சக்தன் இவளைக் கொண்டு நம்மை சீர் படுத்தவே இவளை கேடயமாக கொண்டுள்ளான் –
கருணாதேவியே! எனது பாவங்கள் எந்தவிதமான ப்ராயச்சித்தம் மூலமும் வெல்ல இயலாததாக உள்ளன.
இதனைக் கண்டு வருத்தம் கொண்டவனும், சாரங்கம் என்னும் வில்லை உடையவனும் ஆகிய ஸ்ரீநிவாஸன்,
உன்னைத் தனது கவசமாகப் பூண்டான். இவ்விதம் நமது பாவங்களை எதிர்த்து வெற்றி பெறும் இடமாகத் திருமலையை ஏற்றான்.
நாம் பாவங்கள் என்னும் எண்ணற்ற அம்புகளை ஸ்ரீநிவாஸன் மீது தொடுத்தபடி நின்று, அவன் மனதைப் புண்படுத்திகிறோம்.
இவை நீங்கும்படி பலவிதமான ப்ராயச்சித்தங்கள் என்னும் சேனைகளை அவன் ஏற்படுத்தினால் கூட,
அவற்றால் நமது பாவங்களை வெல்ல இயலவில்லை.
இதனால் அவன் தயாதேவியைத் தனது கவசமாகப் பூண்டு நமது பாவங்களை எதிர் கொள்கிறான்.
இந்தப் போரில் அவன் வெற்றி பெறும் இடமாகத் திருமலை உள்ளது.
இங்கு சார்ங்கம் என்னும் வில் உடையவன் என்று ஸ்வாமி தேசிகன் கூறுவதில் ஒரு காரணம் உள்ளது.
ஸர்வ வல்லமை கொண்ட அவனால் நமது பாவங்களை விரட்ட இயலாதா?
அவனால் முடியவில்லை என்றாலும் அவனது சார்ங்கம் விரட்டி விடும்.
ஆயினும் அவன் இங்கு அவ்விதம் செய்ய விரும்பவில்லை.
தன்னுடைய தயா தேவி மூலம் நம்மை சீர் படுத்துவதையே விரும்புகிறான்.
இதனால் அவளைத் தனது கேடயமாகக் கொண்டு நிற்கிறான் என்று கருத்து.
பரிகாரம் எதனாலும் வெல்லவாகா பாபங்கள் பல பலவாம் என்தனதே
சாரம் போலே அவை பாய்ந்து பெருமானின் திருவுள்ளம் புண்ணடைய வைத்ததனால்
தரித்தனனே கருணை யுன்னைக் கவசமென சார்ங்க வில் தனையும் கைக்கொண்டு
திருவேங்கடம் எனும் வெற்றிக் களம் தனில் நிற்கின்றான் என் வினையை வென்றனனே –
—————————————————————————–
29-மயி திஷ்ட்டதி துஷ்க்ருதாம் பிரதானே மித தோஷான் இதரான் விசிந்த்வதீ த்வம்
அபராத கணை அபூர்ண குஷி கமலா காந்தா தயே கதம் பவித்ரீ –
உனது திரு வயிறு நிறைய என்னைப் போலே அதீத பாபம் செய்பவர்களையே தேடிக் கொள்வாய் –
தயாதேவியே! பாவம் செய்தவர்களில் முதன்மையானவனாக உன் முன்பாக நான் உள்ளேன்.
நீ என்னைக் கவனிக்காமல், குறைவான பாவங்கள் செய்தவர்களைத் தேடுகிறாய்.
இவ்விதம் நீ செய்தால், குறைந்த பாவங்கள் மட்டுமே உனது வயிறுக்குக் கிடைக்கும்.
இவ்விதம் வயிறு நிறையாமல் நீ எவ்விதம் வாழ்வாய்?
இங்கு தயாதேவிக்கு உணவாக நாம் செய்யும் பாவங்கள் கூறப்படுகிறது.
நமது பாவங்களை அவள் தீர்ப்பதால் இவ்விதம் கூறப்பட்டது.
கடந்த ச்லோகத்தில் நமது பாவங்கள் காரணமாக ஸ்ரீநிவாஸன் துன்பம் அடைகிறான் என்று கூறினார்.
இங்கு அதே பாவங்கள் அதிகமாகும் போது தயாதேவிக்கு மகிழ்வு அதிகமாவதாகக் கருத்து.
இதன் காரணம் – பாவங்கள் அதிகமாகும்போது, நமக்கு அதிகமாக உதவக் கூடிய வாய்ப்பு கிட்டியது
என்று மகிழ்வதாகக் கொள்ள வேண்டும்.
பாவங்களை உன துணவாய்க் கொண்டுள்ளாய் பெரும் வயிறு தனை யுடையாய் திருமகளே
மேவியுறை வேங்கடவன் தயா நீயே முதல்வன் நான் பாவிகளுள் என நிற்க மா உலகில் மற்றவரை நாடி அவர் பாபங்களைப் புசித்தாலும் வயிறு ஆராய்
ஆவி தன்னை எவ்வாறு நீ தரிப்பாய் என அடியேனும் உன் மீது இரக்கமுற்றேன்
———————————————————————-
30-அஹம் அஸ்மி அபராத சக்ரவர்த்தீ கருணே த்வம் ச குணேஷூ சார்வ பௌமீ
விதுஷீ ஸ்த்திதிம் ஈத்ருசீம் ஸ்வயம் மாம் வ்ருஷ சைல ஈஸ்வர பாத சாத் குரு த்வம்
நான் அபராத சக்ரவர்த்தி நீ அவன் குணங்களுக்கு பேரரசி நீயே முன் வந்து
என்னை வென்று அவன் திருவடிகளிலே சேர்த்து அருள வேண்டும் –
தயாதேவியே! நான் குற்றம் செய்பவர்களுக்கும் பாவங்களுக்கும் சக்ரவர்த்தியாக உள்ளேன்.
நீயோ ஸ்ரீநிவாஸனின் குணங்களுக்கு பேரரசியாக உள்ளாய்.
இவ்விதம் எனது நிலைமையை அறிந்த நீ, நீயாகவே முன் வந்து என்னை
ஸ்ரீநிவாஸனின் திருவடிகளில் நிற்கும்படிச் செய்ய வேண்டும்.
இங்கு தன் மீது தயாதேவி படை எடுத்து வந்து, தனது குற்றங்கள் என்ற நாட்டைக் கைப்பற்றித் தன்னையும் சிறைபிடித்து
ஸ்ரீநிவாஸனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
அவ்விதம் அவனிடம் கொண்டு சென்று, அவனது தாமரை போன்ற திருவடிகளில் நிறுத்த வேண்டும் என்று வேண்டுகிறார்.
தீ வினைகள் எனும் பெரிய உலகத்தின் நிகரற்ற பேரரசன் அடியேன் நான்
மூவாத நலன்களுக்கு அரசியென முடி சூடி விளங்குகிறாய் தயா நீயே
மாவிந்த உண்மையினைத் தெளிவாக மனம் கொண்ட நீ தானே வேங்கடத்தை
மேவியுறை நாதனுடைத் திருவடியில் மன்னும்படி எனைச்சேர்க்க வேணுமன்றோ –
——————————————————————–
31-அசிதில கரணே அஸ்மின் அஷத ஸ்வாச வ்ருத்தௌ வபுஷி கமன யோக்யே வாஸம் ஆசாதயேயம்
வ்ருஷகிரி கடகேஷூ வ்யஞ்ஜயத்ஸூ பிரதீதை மது மதன தயே த்வாம் வாரிதாரா விசேஷை
மது அரக்கனை வென்ற ஸ்ரீ நிவாசனது கருணையே எனக்கு நடக்கும் திறன் உள்ள போதே உனது கல்யாண குணங்கள்
வெளிப்படும்-குளிர்ந்த தெளிந்த – அருவிகள் கொண்ட திருமலையில் அடிவாரத்தில் வாழ அருளுவாய் –
மது என்ற அரக்கனை அழித்த ஸ்ரீநிவாஸனின் கருணையே!
இந்த உடல் தனது புலன்கள் தளராத நிலையில் உள்ள போதே, மூச்சு தடைப்படாது உள்ள போதே,
நடக்கும் திறன் தளராமல் உள்ள போதே , நான் செய்ய விருப்புவது – உனது குணங்களை வெளிப்படுத்துவது போல்
விழும் அருவிகள் கொண்ட திருமலையின் அடிவாரத்தில் வாழ்வேனாக.
ஸ்வாமி தேசிகன் வாழ்ந்த காலத்தில் திருமலை மீது செல்ல எளிதான பாதையோ வாகனங்களோ இல்லை.
திடமான உடல், தீர்க்கமான புலன்கள் ஆகியவை இருந்தால் மட்டுமே செல்ல முடியும்.
ஆகவே ஸ்வாமி, தான் நன்றாக உள்ளபோதே திருமலைக்குச் செல்லவேண்டும் என்று வேண்டுகிறார்.
கொடு வரக்கன் மது தன்னைச் செற்றவனின் கனிவான தயாதேவி வேண்டுகிறேன்
உடல் தன்னில் புலன்கள் எல்லாம் தளராமல் ஒரு நிலையில் மூச்சு தானும் அமைந்திருக்க
நடப்பதற்கும் ஒரு குறையும் அற்ற போது நின் தன்னை ஒக்கும் நீர்ச்சுனை நிறைந்த
நெடுவரையாம் வேங்கடத்தில் அடியேனும் நிரந்தரமாய் வாழ்வதற்கு அருள்வாயே –
—————————————————————————-
32-அவிதித நிஜ யோக ஷேமம் ஆத்ம அநபிஜ்ஞம் குண லவ ரஹிதம் மாம் கோப்துகாமா தயே த்வம்
பரவதி சதுரை தே விப்ரமை ஸ்ரீ நிவாசே பஹூ மதிம் அநபாயாம் விந்தசி ஸ்ரீ தரண்யோ
ஸ்ரீ நிவாசனை மயக்கி தன வசப்படுத்தி நீசனேன் நிறை ஒன்றும் இல்லாத என்னையும் அவனது
திருவடிகளில் சேர்ப்பிக்கப் பண்ணி அருளிய உன்னை ஸ்ரீ தேவி பூமா தேவிமார்கள் புகழ்கிறார்கள் –
தயாதேவியே! நான் எனது குற்றம் குறைகளை அறியாதவன், என்னையே அறியாதவன்,
உயர்ந்த குணங்கள் ஏதும் இல்லாதவன் ஆவேன்.
இப்படிப்பட்ட என்னை, உனக்கு வசப்பட்ட ஸ்ரீநிவாஸன் மூலம் நீ காத்து நின்றதால் –
மஹாலக்ஷ்மியிடமும், பூமாதேவியிடமும் மிகுந்த பெருமை பெற்றாய்.
ச்லோகம் 30 ல், தன்னைச் சிறை பிடித்து ஸ்ரீநிவாஸனிடம் சேர்க்கும்படிக் கூறினார்.
அவனது சபையில் – நான் (ஸ்வாமி தேசிகன்) ஸம்ஸாரத்தில் இருந்து விடுதலை பெற்று மோக்ஷம் பெறத் தகுதி உடையவனா?
அல்லது மறுபிறவி எடுத்து தண்டனை பெறத் தக்கவனா என்று விசாரணை நடக்க உள்ளது.
சரியான தீர்ப்பு அங்கு வழங்கப்படும். ஆயினும் என் போன்ற பாவிகளுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு.
இதனால் என் பொருட்டு தயாதேவி செய்த முயற்சிகள் அனைத்தும் விணாகிவிடும்.
ஆக தயாதேவி ஸ்ரீநிவாஸனை மயக்கி, தன் வயப்படுத்திக் கொள்கிறாள்.
அவன் சரியான தீர்ப்பு கூறாதபடி, எனக்கு நன்மை செய்யும் விதமாக, தீர்ப்பை அமைக்கிறாள்.
மஹாலக்ஷ்மியும் பூமாதேவியும் குற்றம் செய்த தங்களது குழந்தையான என்னை, தாயாதேவி இவ்விதம்
ஸ்ரீநிவாஸனை வசப்படுத்தி என்னைக் காப்பாற்ற முயற்சி செய்ததைக் கண்டு அவளைப் புகழ்கின்றார்கள்.
தன்னலனைப் பேணுதற்கும் நலன் பெறவும் நானறியேன் என்னையுமே அறியகில்லேன்
நுண்ணளவும் நற் கணமே அற்றவன் நான் துணிவுற்றாய் எனைக் காக்க தயா தேவீ
உன்னுடைய திறமை மிகு மயக்குகளால் உன் வயத்துக் கொண்டனை நீ வேங்கடனை
மண் மகளும் திரு மகளும் உனைப் போற்றும் மாண்பு தனைப் பெற்றனையே நித்தியமே –
————————————————————-
33-பல விதரண தஷம் பஷபாத அநபிஜ்ஞம் ப்ரகுணம் அநு விதேயம் ப்ராப்ய பத்மா சஹாயம்
மஹதி குண சமாஜே மாந பூர்வே தயே த்வம் ப்ரதி வதஸி யதார்ஹம் பாப்ம நாம் மாமகா நாம் –
ஸ்ரீ நிவாசனே நீதிபதி பிராட்டியே துணை நீதிபதி –
பஷ பாதம் இல்லாமல் நீதி மனு தர்மத்தின் படி வழங்குபவர்கள் -குண பதம் ஆண்பாலில்
பத்ம சஹாய -தயா தேவி வாதாடி -மாநபூர்வம் -தகுந்த ஆதாரங்களுடன் -எதிர் வாதம் செய்து சேர்ப்பிகிறாள்-
தயாதேவியே! நாங்கள் செய்த வினைகளுக்குத் தகுந்தபடி பலனை அளிப்பதில் வல்லவன்;
ஓர வஞ்சனை இன்றி தீர்ப்பு அளிப்பவன்; நேர்மையான குணம் உடையவன்; எளிதாக அணுகவல்லவன்;
பெரியபிராட்டியைத் துணையாக கொண்டவன் – இப்படிப்பட்ட ஸ்ரீநிவாஸனை நீ அடைந்து
அவனது குணங்கள் வீற்றுள்ள சபையில், எனது பாவங்களுக்காக எதிர்வாதம் செய்கிறாய்.
இங்கு ஸ்ரீநிவாஸனை நீதிபதியாகவும், பெரிய பிராட்டியை துணை நீதிபதியாகவும் கூறுகிறார்.
இங்கு நீதிபதிகளின் மூன்று முக்கிய தன்மைகள் கூறப்பட்டன.
1. குற்றத்திற்குத் தகுந்த தண்டனை அளிப்பதில் வல்லவராக இருக்கவேண்டும். இதனை “பல விதரண தக்ஷம்” என்று கூறினார்.
2. நீதிபதியானவர் வாதிக்கோ அல்லது பிரதிவாதிக்கோ சாதகமாகவும் ஓரவஞ்சனையாகவும் இருத்தல் கூடாது.
இதனை “பக்ஷபாதா அநபிஜ்ஞம்” என்றார்.
3. சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கவேண்டும். இதனை “ப்ரகுணமனு” என்று மநுதர்மத்தின் மூலம் கூறினார்.
4-அந்த நீதிபதி சட்டத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதை – விதேயம் – வசப்பட்டவன் – என்று கூறினார்.
5-அடுத்து சிக்கலான வழக்காக இருந்தால் ஒரே நீதிபதி தீர்ப்பு கூறாமல் பல நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு மூலமே
தீர்ப்பு வழங்குவது பழக்கமாகும். இதனை “பத்மா ஸஹாய” என்று கூறினார்.
இங்கு குற்றவாளியின் சார்பாக தயாதேவி வாதாடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இங்கு “குண” என்ற பதம் ஆண்பாலில் உள்ளது.
ஆக , ஸ்ரீநிவாஸனின் குணங்கள் என்னும் ஆண்மக்கள் அமர்ந்துள்ள சபையில்,
தனக்காக ஒரு பெண் வாதாடுவதை உயர்த்திக் காட்டினார்.
(இதிலிருந்து ஸ்வாமி பெண்களுக்குக் கொடுக்கும் மரியாதையை உணரலாம்).
தயாதேவி எவ்விதம் வாதாடினாள்? ஏதோ சில வார்த்தைகள் மூலமாகவா என்றால், அப்படி அல்ல என்றார்.
அவள் “மாநபூர்வம்” – தகுந்த ஆதாரங்களுடன் வாதாடினாள் என்றார்.
ஆக இந்தச் ச்லோகம் மூலம் ஸ்வாமி தேசிகன், தனக்கு ஸ்ரீரங்கநாச்சியார் அளித்த –
ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் – அனைத்து வித்தைகளும் அறிந்தவர் – என்ற பட்டத்தை நிரூபித்தார்.
ஈர்க்கும் என் தன் தீ வினைகள் தொடுத்தனவே என் மீது பெரும் வழக்கு நாதன் முன்
சார்வாயான் நேராளன் அடியவருக்கு நண்பனவன் திருமகளைத் துணை கொண்டான்
பேர் குணங்கள் அவையினிலே தயா நீயே பரிந்து எனக்கு ஆதரவாய் வாதங்களால்
போர் தொடுத்தாய் சாத்திரங்கள் துணை கொண்டு பெரும் வெற்றி பெற்று என்னைக் காத்தனையே –
————————————————————————-
34-அநு பவிதம் அக ஓகம் ந அலம் ஆகாமி கால பிரசமயிதும் அசேஷம் நிஷ்க்ரியாபி ந சக்யம்
ஸ்வயம் இதி ஹி தயே த்வம் ச்வீக்ருத ஸ்ரீ நிவாஸா சிதிலித பவபீதி ஸ்ரேயசே ஜாயசே ந –
கர்மங்கள் அனுபவித்தோ பிராயச் சித்தங்களாலோ கழிக்க இயலாதவையாக உள்ளனவே போன்ற எதிர்வாதங்கள் செய்ய
இவர்கள் பயங்களைப் போக்கி அருள பூமியிலே இருந்து அருளும் படி பிராட்டியும் ஸ்ரீநிவாசனும் தீர்ப்பு அளிக்கின்றனர் –
தயாதேவியே! எனது பாவங்களின் பயனை நான் முழுவதுமாக அனுபவிப்பதற்கு எதிர்காலம் முழுமையும் போதாது.
அப்பாவங்களைத் தகுந்த ப்ராயசித்தம் செய்து ஒழிக்கலாம் என்றால் அதுவும் இயலாது.
ஆகவே ஸ்ரீநிவாஸனை நீ வசப்படுத்தியவளாய், எங்களைக் காக்க, எங்களை ஸம்ஸாரத்தில் இருந்து நீக்கும்படியாக உள்ளாய்.
(கடந்த ச்லோகத்தில் தயாதேவி தனக்காக வாதாடுவதாகக் கூறினாள். அந்த வாதத்தை இங்கு விளக்குகிறார்)
தயாதேவி (ஸ்ரீநிவாஸனும் பத்மாவதியும் நீதிபதிகளாக வீற்றுள்ள சபையில்) : “இந்த ஜீவன் எண்ணற்ற பாவத்திற்கான பலனை
அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் தீர்ப்பு வழங்கினால், இவன் வாழ்க்கை காலத்திற்குப் பின்னும் தண்டனை காலம் நீடிக்குமே!
அப்படி என்றால், இவன் அந்த தண்டனை காலத்தை அனுபவித்து, தனது வினைப் பயனை எவ்வாறு கழிக்க இயலும்?”
நீதிபதிகள் : “இவன் புண்ணியம் செய்த அளவிற்கு ஏற்ற பாவ பலனை கழித்து விட்டு,
எஞ்சிய பாவத்திற்கு மட்டும் தண்டனை தருகிறோம். இது சரியான தீர்ப்பு தானே?”
தயாதேவி : “அப்படி என்றால் முழுமையான வினைப் பயனை மன்னித்து விடலாமே”
சபையில் உள்ளவர்கள் (ஸ்ரீநிவாஸனின் மற்ற குணங்கள்) : “முழுமையாக மன்னிக்க இயலாது. வேண்டுமென்றால்
இவன் வேறு ஏதேனும் ப்ராயச் சித்தம் செய்து விட்டு போகட்டுமே”
தயாதேவி : “உங்களுக்கு இவனைத் தெரியாது. இவன் ப்ராயச் சித்தம் செய்யும்படியான குற்றங்களே செய்வது இல்லை.
இவனது குற்றங்களுக்கு ப்ராயச் சித்த விதிகளே இதுவரை இல்லை”
இரு வாதங்களையும் கேட்ட ஸ்ரீநிவாஸனும் பத்மாவதியும் தயாதேவியிடம்,
“இவர்கள் போன்றவர்களுக்காக நீ இந்தப் பூமியில் இருந்து, இவர்களின் பயத்தைப் போக்கியபடி இருப்பாயாக”, என்று கூறினர்.
———————————————–
35-அவதரண விசேஷை ஆத்ம லீலாப தேசை அவமதிம் அநு கம்பே மந்த சித்தேஷூ விந்தன்
வ்ருஷப சிகரி நாத த்வத் நிதே சேந நூநம் பஜதி சரண பாஜாம் பாவிந ஜன்ம பேதான்-
என்நின்ற யோனியுமாய் பிறந்து அருளுகிறான் உனது தூண்டுதலால —
நாம் பிறந்து கழிக்க வேண்டிய கர்ம சுமைகளை தானே தரித்து அருளுவதற்க்காக
மூடர்கள் -சிசுபாலாதிகள் இகழ்வையும் பொருள் படுத்தாமல்
சிலராவது திருந்த மாட்டார்களா என்கிற நப்பாசையால் -என்றவாறு –
தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான்.
இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான்.
ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான்.
இது உனது கட்டளையால் அல்லவா?
கடந்த ச்லோகத்தில் தயாதேவி தனது வாதத்தினால் குற்றம் செய்த ஜீவனுக்கு மோக்ஷத்தைப் பெற்றுக் கொடுக்கிறாள் என்று கூறினார்.
ஆனால் அந்த ஜீவனுக்குப் பதில் அவனுக்கு ஏற்பட வேண்டிய தண்டனையை வேறு யாராவது அனுபவித்தே தீர வேண்டும்
(காரணம் கர்ம பலன் என்பது அனுபவித்துக் கழிக்கப்பட வேண்டியதாகும். எந்தப் பரிகாரம் மூலமும் கர்ம பயன்களை,
அனுபவிக்காமல் அழிக்க இயலாது).
தயாதேவியின் சொற்களுக்கு இணங்கி, ஸ்ரீநிவாஸனே அந்த ஜீவனுக்கு பதிலாகப் பல பிறவிகள் எடுக்கிறான்.
ஆக நாம் நமது கர்ம பலன் காரணமாக எடுக்க வேண்டிய பிறவிகளை, தான் எடுத்து அனுபவிக்கிறான் என்று கருத்து.
மேலும் தன்னிடம் சரணம் அடைந்தவர்கள் செய்த தவறுகளுக்காக, அவர்கள் எடுக்க வேண்டிய பிறப்பு என்ற சுமைகளை தானே ஏற்கிறான்.
இதனைத் தனது லீலை என்று ஒரு பெயருக்காக மட்டுமே கூறிக் கொள்கிறான்.
இவ்விதம் பிறந்த அவன் – ஹிரண்யன், சிசுபாலன், இராவணன் போன்றவர்களால் இழிவும் படுத்தப்பட்டான்.
இதனைக் கீதையில் – என்னை புரிந்து கொள்ளாதவர்கள் என்னை அவமதிக்கிறார்கள் – என்று நொந்து கொண்டான்.
நலமலதே அறியாத தயா தேவீ நீ தானே இடுகின்ற கட்டளையால்
விளையாடல் எனும் பெயரால் வேங்கடவன் வியப்பான அவதாரம் பலவெடுப்பான்
புலைத்தனமே வடிவெடுத்தார் நிந்தனையேரி வரேலும் பொறுத்திடுவான் அடியான்
நலம் தனையே மனம் கொண்டு உறுதியோடு நாநா வித பிறவிகளை எடுப்பானே –
————————————————————————————-
36-பரஹிதம் அநு கம்பே பாவ யந்த்யாம் பவத்யாம் ஸ்த்திரம் அநு பதி ஹார்தம் ஸ்ரீ நிவாசே ததா ந
லலித ருசிஷூ லஷ்மீ பூமி நீளா ஸூ நூ நம் ப்ரதயதி பஹூமாநம் த்வத் பிரதிச்சந்த புத்த்யா-
உன்னையே ஸ்ரீதேவி பூமாதேவி நீளா தேவிகளின் பிரதி பிம்பமாக ஸ்ரீ நிவாசன் நினைக்கிறான் –
நன்மை செய்வதையே சிந்தித்தபடி இருப்பதால் –
தயாதேவியே! மக்களுக்கு நன்மை செய்வதை மட்டுமே நீ சிந்தித்தபடி உள்ளாய்.
உன்னிடம் ஸ்ரீநிவாஸன் எதனையும் எதிர்பாராமல் மிகுந்த அன்பு கொண்டுள்ளான்.
அவன் அழகான ஒளி பொருந்திய மஹாலக்ஷ்மி, பூமாதேவி, நீளாதேவி ஆகியோரிடம் மதிப்பு கொண்டு இருப்பது
ஏன் என்றால் – அவர்களை உனது பிரதிபிம்பம் என்று நினைக்கிறான். இது உறுதியே.
கடந்த ச்லோகத்தில், தயாதேவியின் சொற்களுக்கு இணங்கவே ஸ்ரீநிவாஸன் பல அவதாரங்கள் செய்து பூமியில் வாடுவதாகக் கூறினார்.
இதனால் நமக்கு ஓர் ஐயம் ஏற்படலாம் –
நம்மை இவ்விதம் வாடும்படிச் செய்துவிட்டாளே என்று தயாதேவி மீது ஸ்ரீநிவாஸனுக்கு வெறுப்பு ஏற்படுமா என்பதாகும்.
இதற்கான விடையை இங்கு கூறுகிறார்.
ஸ்ரீநிவாஸனின் அன்பு எந்தவித காரணமும் இல்லாமல் தயாதேவியிடம் உள்ளது என்பதை “அநுபதி” என்று கூறினார்.
ஸ்ரீநிவாஸன் தனது தேவிகளை தயாதேவியின் பிரதி பிம்பம் என்று கருதுவதால் மட்டுமே அவர்களிடம் அன்பாக உள்ளான் என்றும் கூறினார்.
பிறருடைய நலம் ஒன்றே எண்ணம் கொள் பரிவுடையாய் தயா நீயே என்பதனால்
திருவேங்கட நாதனுமே நின்னிடத்தில் நிலையாக இயல்பான அன்புடையான்
திருமகளும் மண்மகளும் நீளையுமே நிகரற்ற ஒளி மிக்க அழகுடையாய்
உருவினிலே நின் சாயை என்பதனால் உயர் மதிப்பே தான் கொண்டான் அவரிடத்தே –
—————————————————————————
37-வ்ருஷகிரி சவிதேஷூ வ்யாஜத வாஸ பாஜாம் துரித கலுஷிதா நாம் தூயமா நா தயே த்வம்
கரண விலய காலே காந்தி சீக ஸ்ம்ருதீ நாம் ஸ்மரயசி பஹூ லீலம் மாதவம் சாவதா நா —
திருமலையின் அருகில் வசிக்கும் அனைவருக்கும் அவனையே இவர்களுக்காக
அவன் லீலைகள் பல செய்த படி இருந்தாலும்- அஹம் ஸ்மராமி மத் பக்தம் என்னப் பண்ணும் படி அருளுகிறாள் –
தயாதேவியே! திருமலையின் அருகில் ஏதோ ஒரு காரணத்தினால் வசித்து வந்தாலும்,
அவர்கள் பாவம் செய்தால் நீ அவர்களைக் குறித்து வருத்தம் கொள்கிறாய்.
அவர்களது புலன்கள் ஒடுங்கி அந்திம காலம் நெருங்கும் போது, அவர்களின் நினைவுகள் பல்வேறு விஷயங்களில் சிதறினாலும்,
நீ செய்வது என்னவென்றால் – பல்வேறு லீலைகள் புரியும் ஸ்ரீநிவாஸன், அவர்களை நினைக்கும்படியாக நீ செய்து விடுகிறாய்.
இங்கு “ஏதோ ஒரு காரணம்” என்பது கவனிக்கத்தக்கது.
இங்கு ஸ்ரீநிவாஸனின் இருப்பிடத்தின் அருகில் வாசம் செய்பவர்கள், அவனுடைய நினைவுடன் வாசம் செய்ய வேண்டும்
என்ற அவசியம் இல்லை என்பதை உணர்த்துகிறார்.
இப்படிப்பட்டவர்கள் எந்த வகையான பாவம் செய்தாலும், அவர்கள் இறக்கும்போது ஸ்ரீநிவாஸனின் நினைவே
அவர்களுக்கு வரவில்லை என்றாலும் தயாதேவி உதவுவதாகக் கூறுகிறார்.
இது திருமலையின் மகிமையைக் குறிக்கும்.
தயாதேவி ஸ்ரீநிவாஸனுக்கு இவர்களின் நினைவை உண்டாக்கி அவர்கள் பக்கம் திருப்புகிறாள்.
ஸ்ரீமத் பகவத் கீதை (8-6) – யாம் யாம் வாபி ஸ்மரண் – அந்திம காலத்தில் எந்தப் பொருளை நினைத்து…
வராக புராணம் – அஹம் ஸ்மராமி பக்தாம் நயாமி பரமாம் கதிம் – எனது பக்தனை அவனது இறுதிகாலத்தில்
நான் (பகவான்) நினைத்துக்கொண்டு, அவனுக்கு உயர்ந்த கதி அளிப்பேன்.
பகவானுக்கு நமது அந்திம காலத்தில், நம்முடைய நினைவை ஏற்படுத்துபவள் தயா தேவியே ஆவாள்.
தீவினையே செய்து வரும் களங்கமுடன் திருமலையின் அருகிடத்தே வாழ நேரும்
பாவிகள் மேல் பரிவுற்ற தயா தேவி புலன்கள் எல்லாம் செயலற்று நினைவிழந்து
ஆவி தானும் போகும் நிலை உற்றபோது அன்னவரும் தனை நினைக்க மாதவனை
மேவிய நீ கவனமுடன் எண்ணும்படி மூட்டுகிறாய் கருணை யுன் தன் தன்மையாலே –
———————————————————————
38-திசி திசி கதி வித்பி தேசிகை நீயமா நா ஸ்த்திரதரம் அநு கம்பே ச்த்யான லக்நா குணை த்வம்
பரிகதவ்ருஷ சைலம் பாரம் ஆரோ பயந்தீ பவ ஜலதி கதா நாம் போத பாத்ரீ பவீத்ரீ –
தயா தேவியை ஸ்ரீ நிவாசனின் திருக் கல்யாண குணங்களால் உறுதியாக சமைத்த தோனியாகவும்
ஆசார்யர்கள் வழி நடத்தும் மாலுமிகள் –
சம்சார கடலில் சிக்கிக் கிடக்கும் சேதனர்களை திருமலை நோக்கி செலுத்துகிறார்கள் –
தயா தேவியே! சிறந்த வழிகளை அறியும் ஆசார்யர்களால் நீ பல திசைகளிலும் செலுத்தப்படுகிறய்.
ஸ்ரீநிவாஸனின் குணங்கள் என்ற உறுதியான கயிறுகளால் கட்டப்பட்ட படகு போன்று நீ உள்ளாய்.
நீ ஸம்ஸாரத்தில் உள்ளவர்களை ஏற்றிக்கொள்கிறாய்.
அவர்களைத் திருமலை என்ற ஸ்ரீநிவாஸனின் கரையில் சேர்த்து விடுகிறாய்.
இங்கு தயாதேவியை ஒரு படகு என்று வர்ணிக்கிறார். அந்தப் படகு சரியானபடி அமைக்கப் பட்டிருக்க வேண்டும்.
சரியான மாலுமிகளால் வழி நடத்தப்பட வேண்டும். சரியான பயணிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும்.
சரியான இலக்கை நோக்கிச் செல்லவேண்டும்.
இங்கு ஸ்ரீநிவாஸனின் குணங்கள் என்ற கயிற்றினால் தயாதேவி என்ற படகு கட்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தப் படகை வழி நடத்தும் மாலுமிகளாக ஆசார்யர்களைக் கூறினார்.
ஸம்ஸாரத்தில் சிக்குண்டு, பல பாவங்களைச் செய்தபடி உள்ளவர்களே இந்தப் படகில் ஏறத் தகுதியானவர்கள் ஆவர்.
அவர்கள் சென்று சேர வேண்டிய சரியான திசையானது திருமலையாகும்.
அறு குணமாம் கயிறுகளால் பிரியாமல் அழுத்தமுடன் கட்டிய நல் படகாவாய்
உறும் கதியை நன்குணர்ந்த குரவர்களே உனைச் செலுத்தும் படகோட்டி ஆவார்கள்
பிறவியெனும் பெரும் கடலிலே தத்தளிப்பார் பிழைத்திடவே அவர் தம்மைக் கருணையுடன்
திருவேங்கட மலை நிற்கும் நாதன் எனும் திடக்கரையில் சேர்ப்பவள் நீ தயா தேவீ –
———————————————————————–
39-பரிமித பல சங்காத் பிராணி ந கிம்பசா நா நிகம விபணி மத்யே நித்ய முக்த அநு ஷக்தம்
ப்ரசதநம் அநு கம்பே ப்ராப்த வத்யா பவத்யா வ்ருஷகிரி ஹரி நீலம் வ்யஞ்ஜிதம் நிர்விசந்தி –
வேதமாக பெரிய கடைத் தெருவில் அல்ப பலன்களுக்கு அலைந்து திண்டாடும் மக்களுக்கு
திரு மலையில் உள்ள நீல மணியைக் காட்டி மோஷம் அடையும் பாதையில் திருப்பி அநு க்ரஹம் பண்ணி அருளுகிறாள்
பலன்களில் விருப்பம் உள்ள அற்ப மனிதர்கள் தங்கள் ஆசை காரணமாக வேதங்கள் என்ற கடைத்தெருவில் புகுந்து விடுகின்றனர்.
அவர்கள் மீது நீ கொண்ட அனுக்ரஹம் காரணமாக, அவர்கள் திருமலையின் நாயகனான இந்திர நீல மணியை அனுபவிக்கின்றனர்.
வேதங்கள் என்பது பல விஷயங்களும் உலவுகின்ற கடை வீதி போன்றதாகும்.
அங்கு அற்ப பலன்கள் முதல் உயர்ந்த மோக்ஷ பலன் வரை அனைத்தும் கிடைக்கும்.
அங்கு வரும் அற்ப மக்கள் சிலர், தங்களுக்குத் தேவையான அற்ப பலன்கள் மட்டுமே அளிக்கக்கூடிய பொருள்களை மட்டுமே அனுபவிப்பர்
(அந்தப் பகுதிகளை மட்டுமே ஓதுவார்கள்). இதனைக் கண்ட தயாதேவி,
“இங்கு மோக்ஷம் போன்ற உயர்ந்த பொருள்கள் கிடைக்கும்போது, இந்த மக்கள் அழியக்கூடிய பொருள்களை விரும்புகின்றனரே”,
என்று வருத்தம் கொள்கிறாள்.
இந்நிலையில் அவர்களுக்காக மனம் இறங்கி, அவர்களை மோக்ஷ பாதையில் திருப்ப எண்ணி,
ஸ்ரீநிவாஸன் என்னும் நீல மணியைக் காண்பிக்கிறாள்.
மறைகள் எனும் கடைத்தெருவில் உட் புகுந்த மயர்வுடையோர் மிகத்தாழ்ந்த பலன்களிலே
உறுமாசை தனைத் தொடர்ந்து சென்றிடுவார் உற்றிடுவார் அல்லலென நினைத்து நீயே
கருணையுடன் வழி காட்டி அரும் பெரியோர் காலமெல்லாம் இடையறாமல் அனுபவிக்கும்
கரு மணியாம் வேங்கடவன் தனை நாடிக் களித்திடவே செய்திடுவாய் தயா தேவீ –
————————————————
40-த்வயி பஹூ மதி ஹீந ஸ்ரீ நிவாச அநு கம்பே ஜகதி கதிம் இஹ அந்யாம் தேவி சம்மந்யதே ய
ச கலு விபத சிந்தௌ சந்நிகர்ஷே வஹந்த்யாம் சமயதி ம்ருக த்ருஷ்ணா வீசிகாபி பிபாசாம்
நீ இருக்க தேவதாந்தரங்களை நாடுவது –
கங்கை இருக்க தாகம் தீர்க்க கானல் நீரை பார்த்து செல்வாரைப் போலேவே –
தயாதேவியே! இந்த உலகில் உள்ள ஒருவன் உன்னை மதித்து,
உன்னை நாடாமல் மற்றொரு தெய்வத்தைப் பெரிதாக எண்ணக்கூடும்.
இப்படிப்பட்டவன் புனிதமான கங்கை ஓடும்போது, அதன் அருகில் உள்ள கானல் நீரில்
தனது தாகத்தைத் தீர்க்க முயல்பவன் போன்றவன் ஆவான்.
ஸ்ரீநிவாஸனின் தயை என்பது நமது பாவங்கள் அனைத்தையும் தீர்க்கவல்ல நதி போன்று ஆகும்.
அந்த நதியானது அவன் கருணை என்னும் குளிர்ச்சியுடன், நமக்கு அருகிலேயே எப்போதும் வற்றாமல் ஓடியபடி உள்ளது.
இதனை உணராத ஒருவன் வேறு ஒரு தெய்வத்தை அண்டுவது எப்படி உள்ளது என்றால் –
கங்கை அருகில் உள்ளபோது, கானல் நீரைத் தேடி மான்கள் செல்லுவது போன்று ஆகும்.
ம்ருகத் த்ருஷ்ணா என்ற பதம் கானல் நீரைக் குறிக்கும். ம்ருகம் என்பது மான்களைக் குறிக்கும்.
அவை கானல் நீரை, உண்மையான நீர் என்று எண்ணி ஓடுவதால் இந்தப் பதம் இடப்பட்டது.
திருமாலின் கருணை எனும் நீ இருக்க சகமிதிலே வாழுமெவன் நின்னிடத்தே
பெரு மதிப்பை வைக்காது வேறு தேவைப் பெரிதாக எண்ணி நலம் உற்றிடுவான்
பெருக்கெடுக்கும் தேவ நதி அருகினிலே பாய்ந்தோடிச் செல்கையிலே எவனேலும்
மருட்சியினால் கானலாற்று நீர் தன்னைப் பருகுவதால் அவன் தாகம் தணிந்திடமோ-
—————————————————————
41-ஆஜ்ஞாம் க்க்யாதிம் தநம் அநு சரான் ஆதி ராஜ்ய ஆதிகம் வா காலே த்ருஷ்ட்வா கமல வசதே அபி அகிஞ்சித் கராணி
பத்மா காந்தம் ப்ரணி ஹித வதீம் பால நே அநந்ய சாத்யே சார அபிஜ்ஞா ஜகதி க்ருதிந சம்ஸ்ரயந்தே தயே த்வாம்
சதுர்முகனின் ஆஜ்ஞாம் -ஆளும் தண்மை -க்யாதி தனம் -வேலையாட்கள் -அநு சரான் -உலக ஆட்சி ஆதி ராஜ்ய ஆதிகம்
அவனைத்துமே காணாமல் போக -வேதங்களையும் தொலைத்து வருந்த -உன்னையே மக்கள் நாடுகிறார்கள் –
ஸ்ரீ நிவாசனும் உனது வசத்திலே உள்ளதால் என்கிறார்
தயாதேவியே! இந்த உலகின் உண்மையான தன்மையை அறிந்த புண்ணியசாலிகள் –
ஸ்ரீநிவாஸனின் திருநாபியில் உதித்த தாமரையில் வாழும் ப்ரம்மனின் கட்டளை, புகழ், செல்வம், அடியாட்கள், ஆளும் தன்மை
ஆகிய அனைத்தும் ஒரு காலகட்டத்தில் சிறிய பயனைக் கூட அளிக்க இயலாமல் காணாமல் போவதைக் காண்கின்றனர்.
ஆகையால் அவர்கள் மற்ற யாராலும் செய்ய இயலாத செயலாகிய அடியார்களைக் காக்கும் செயலை உடைய
ஸ்ரீநிவாஸனையே வசப்படுத்திய உன்னைச் சரணம் என்று பற்றுகின்றனர்.
இந்த உலகில் மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளவன் ப்ரம்மனாகிய நான்முகன் ஆவான்.
அவனது பதவியே ஒரு நேரத்தில் ஆட்டம் கண்டுவிடும் என்றால், நம் போன்ற அற்பர்களின் நிலை பற்றிக் கூறவும் வேண்டுமா?
ப்ரம்மனின் ஆளும் தன்மை (ஆஜ்ஞாம்), புகழ் (க்யாதி), தனம், வேலையாட்கள் (அனுசராந்)
மற்றும் உலக ஆட்சி (ஆதிராஜ்ய ஆதிகம்) ஆகிய அனைத்தும் ஒரு காலத்தில் ஏதும் இல்லாமல் போய்விடும்.
உதாரணமாக வேதங்களைத் தொலைத்து விட்டு, ஏதும் செய்யாமல் ப்ரம்மன் நின்றான் அல்லவா?
ஆகவே அனைத்தும் அறிந்தவர்கள் உன்னை நாடுகின்றனர். காரணம்,
இந்த உலகைக் காக்கும் ஸ்ரீநிவாஸனும், அந்தக் காக்கும் செயலை நீ கட்டளை இடுவதால் அல்லவோ செய்கிறான்?
நாபிக் கமல நான்முகன் தன்னின் நிகரில் புகழும் செல்வமும் ஆட்சியும்
சோபிக்காதே சிதைவுறும் காலமே தனை யறி வல்லமை கொண்ட நல்லோர்
மா புவி முழுமையும் காப்பது என்றதோர் மற்றவர் இயலா மா பெரும் தொழிலில்
ஏவுதல் மாதவன் தன்னை கருணை நீ என்றே உனையே இறுகப் பற்றுவர் –
————————————————————————
42-பிராஜா பத்ய ப்ரப்ருதி விபவம் ப்ரேஷ்ய பர்யாய துக்கம் ஜன்ம
ஆகாங்ஷாத் வ்ருஷகிரி வநே ஜக்முஷாம் தஸ்த்துஷாம் வா
ஆசாஸாநா கதிசன விபோ த்வத் பரிஷ்வங்க தன்யை
அங்கீகாரம் ஷணம் அபி தயே ஹார்த்த துங்கை அபாங்கை —
ஸ்ரீ நிவாசனின் அழகான திருக்கண்கள் கடாஷம் -அபாங்கி -அன்பும் நிறைந்த –
ஹார்த்த துங்கை -தயா தேவியால் அணைக்கப் பட்டு
எம்பெருமான் திருமலை மேல் ஏதேனும் ஆவேனே என்னப் பண்ணும் –
அந்த திருக்கடாஷம் விழும் படி இங்கே வாழ வேணும் –
தயாதேவியே! ப்ரம்மன் முதலானவர்களின் செல்வத்தை ஒரு சில உயர்ந்தவர்கள் துன்பம் என்றே கருதவர்.
அப்படிப்பட்டவர்கள் – நீ அணைத்துக் கொள்வதாலும், அதனால் பெருமை பெற்றதாலும்,
உனது மகிழ்ச்சியால் உயர்வு பெற்றதாலும் ஆகிய ஸ்ரீநிவாஸனின் கடாஷம் என்பது
தங்கள் மீது ஒரு நொடியாவது விழவேண்டும் என்று விரும்புகின்றனர்.
இதனை எதிர்பார்த்து திருமலையில் உள்ள அசையும் பொருளாகவோ அல்லது அசையாத பொருளாகவோ ஆகிய பிறவியை விரும்புகின்றனர்.
இங்கு குலசேகர ஆழ்வார் அருளிச்செய்த “ஊனேறு செல்வத்து” என்று தொடங்கும் பெருமாள் திருமொழியின் கருத்தைக் கூறுகிறார்.
அதில் ஆழ்வார் – குருகாய்ப் பிறப்பேன், மீனாய்ப் பிறப்பேன், தம்பமாய்ப் பிறப்பேன், பொன்வட்டிலாய்ப் பிறப்பேன் என்று கூறி,
இறுதியில் “எம்பொருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே” என்று கூறினார்.
இங்கு இவ்வித விருப்பத்தை ஏன் உயர்ந்தவர்கள் மட்டுமே கொள்வதாகக் கூறினார்?
காரணம் அவர்கள் ஸ்ரீநிவாஸனின் அழகான கண்களால் (அபாங்கி) பார்க்கப்பட்டு இவ்விதம் ஆயினர்.
மேலும் அந்தப் பார்வை – “ஹார்த்த துங்கை” – மிகவும் அன்பு நிறைந்த பார்வை என்று கூறினார்.
மேலும் அந்தப் பார்வை தயா தேவியால் அணைக்கபட்டது என்று கூறினார்.
ஸ்ரீநிவாஸனின் பார்வை ஒரு நொடி பட்டால் கூட, நம் வாழ்வு உயர்ந்ததாகும்.
இதனை வால்மீகி, “இராமனை யார் காணவில்லையோ, இராமன் யாரைக் காணாமல் உள்ளானோ,
அப்படிபட்டவன் உலகினரால் பழிக்கப்படுவான்” என்றார்.
ஆக நாம் இவ்விதம் இருக்காமல், ஸ்ரீநிவாஸனின் பார்வை நம் மீது விழும்படி வாழவேண்டும்.
நான்முகன் முதலியோர் நலமுயர் செல்வமும் நரகமாம் துன்பமே நிகரெனும் உண்மையில்
ஊன்றிய ஒரு சில உயர்வோர் கருணையே உன்னுடைய அணைப்பில் உற்றிடும் பெருமையும்
தேனனை அன்பு சேர் நாதனின் பாவையின் நல்லொரு கணமே நாடி திருமலை
கானகம் தன்னிலே ஜங்கமம் ஸ்தாவரம் எனுமோர் பிறவியை எடுத்திட விரும்புவார் –
————————————————————————–
43-நாபீ பத்ம ஸ்ப்புரண ஸூபகா நவ்ய நீலோத்பல ஆவா
க்ரீடா சைலம் கமபி கருணே வ்ருண்வதீ வேங்கடாக்க்யம்
சீதா நித்யம் பிரசதநவதீ ஸ்ரத்ததான அவகாஹ்யா
திவ்யா காசித் ஜயதி மஹதீ தீர்க்கிகா தாவகீ நா
தாமரை நீள் வசத் தாடகம் ஸ்ரீ நிவாசன் -தாபத் த்ரயம் தீர குள்ளக் குளிர்ந்து –
ஸ்ரத்ததான -நம்பிக்கை பக்தி அன்பு கொண்டு -நீராட வேணும்
ஹரி சரஸ் -முகுந்த மாலை –
தயாதேவியே! திருவேங்கடம் என்னும் மலையில் ஒரு பொய்கை (ஏரி) உள்ளது. அது உனதாக உள்ளது.
மிகவும் பெரியதாகவும் உயர்ந்தும் குளிர்ந்தும் உள்ளது. உந்தியில் உள்ள தாமரை மலரால் மேலும் அழகு பெற்றது.
கருநெய்தல் மலர் போன்ற ஒளி உடையது. நம்பிக்கை உள்ளவர்கள் நீராடும் இடமாக உள்ளது.
இங்கு ஸ்ரீநிவாஸனின் திருமேனியை ஒரு ஏரியாகக் கூறுகிறார்.
ஏரியின் நடுவில் தாமரை மலர் இருந்தால் அழகு பெறும் அல்லவா?
இங்கு ஸ்ரீநிவாஸனின் நாபியில் உள்ள தாமரை மலரைக் கூறினார்.
கடும் கோடை நாள் ஒன்றில் நடந்து வந்த மனிதன், குளிர்ந்த நீர் உள்ள ஏரியைக் கண்டால்
அதில் நீராடி இன்பம் அடைவான் அல்லவா? இதேபோன்று, தாபத்ரயத்தால் வாடும் மனிதர்கள்
ஸ்ரீநிவாஸன் என்னும் ஏரி மூலம் இன்பம் அடையலாம்.
நம்மாழ்வார் – தாமரை நீள் வாச தடம் – என்று பகவான் தன்னிடம்
தாமரை மலர் சூழ்ந்த மணம் வீசும் ஏரி போன்று வரவேண்டும் – என்றார். இதே கருத்தை அடியொட்டி, இவரும் கூறுவது காண்க.
ச்ரத்ததநா என்ற பதம் காண்க.
இதன் பொருள் – யாருக்கு அவன் மீது நம்பிக்கையும், பக்தியும், அன்பும் உள்ளதோ அவர்களே நீராடுவார்கள் என்று கருத்து.
இது ஆண்டாள் திருப்பாவையில் அருளிச்செய்த – நீராடப் போதுவீர் போதுமினோ – என்பதை அடியொட்டி உள்ளதைக் காண்க.-ஹரி ஸரஸ் -முகுந்த மாலி ஸ்ரீ ஸூக்தி
கருணையே உன் தன் ஓர் எழில் பொய்கை திருவேங்கடம் எனும் க்ரீடை மலையிலே
ஒரு விடம் கொண்டு விளங்குகின்றதே உந்தித் தாமரையின் ஒளியினைப் பரப்புமே
கரு நிறப் பூக்கள் கவினுற நிற்குமே குளிர்ச்சியும் தெளிவும் குறையா என்றுமே
கருத்திலே சிறந்த நல் மனமுடை அடியார் களித்துக் குளித்திடப் பாங்காய் அமையுமே –
—————————————————————————
44-யஸ்மின் த்ருஷ்டே தத் இதர ஸூ கை கம்யதே கோஷ்பதத்வம்
சத்யம் ஜ்ஞானம் த்ரிபி அவதிபி முக்தம் ஆனந்த சிந்தும்
த்வத் ச்வீகாராத் தம் இஹ க்ருதின ஸூ ரி ப்ருந்த அனுபாவ்யம்
நித்ய அபூர்வம் நிதிம் இவ தயே நிர்விசந்தி அஞ்ஜன அத்ரௌ
சத்யம் ஞானம் அநந்தம்-நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -என்பதையே த்ரிபி அவதிபீ முக்தம் -என்கிறார் –
அந்த ஆனந்த கடலை நீ ச்வீகாரமாகக் கொண்டதால் திரு மலையில் இன்றும் அனுபவிக்கிறோம் –
ஸ்ரீநிவாஸன் மூன்று எல்லைகளை யும் கடந்து, ஸத்யம் – ஞானம் – ஆனந்தம் என்று நித்யசூரிகள் அனுபவிக்கும்படி உள்ளான்.
அவனைக் கண்டால் எந்தவித உலக விஷயங்களும், பசுவின் குளம்பு அடி அளவு போன்று அற்பமாக இருக்கும்.
இப்படிப்பட்ட ஆனந்தக் கடலாகிய அவனை, நீ உன்னுடையவனாக ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டாய்.
இதனால் இந்தப் பூமியில் உள்ளவர்கள் புண்ணியம் செய்தவர்களாக,
ஸ்ரீநிவாஸனை திருமலையில் என்றும் உள்ள செல்வமாக அனுபவித்து வருகின்றனர்.
மூன்று எல்லைகள் என்பது என்ன?
பரம்பொருளைத் தவிர்த்து மற்ற பொருள்கள் அனைத்தும் தேசபரிச்சேதம், காலபரிச்சேதம் மற்றும் வஸ்துபரிச்சேதம்
என்னும் எல்லைக்கு உட்பட்டவையாகும்.
ஓர் இடத்தில் உள்ள பொருள் மற்றோர் இடத்தில் (அதே நேரத்தில்) இல்லை என்பது தேச பரிச்சேதம் ஆகும்.
பரம்பொருள் அனைத்து இடத்திலும் உள்ளதால் இந்த எல்லை கிடையாது.
ஒரு பொருள் ஒரு நேரத்தில் உள்ளது, மற்றொரு நேரத்தில் இல்லாதது என்ற எல்லையுடன் காணப்படலாம்.
இது கால பரிச்சேதம் ஆகும். பரம்பொருள் மட்டுமே எப்போதும் உள்ளது.
ஒரு பொருள் அந்தப் பொருளாக மட்டுமே இருக்க முடியும், வேறொரு பொருளாக இருக்க முடியாது.
இது வஸ்து பரிச்சேதம் ஆகும். பரம்பொருள் அனைத்துப் பொருள்களுமாகவே உள்ளது.
ஆக பரம்பொருளான ஸ்ரீநிவாஸனுக்கு இந்த மூன்று எல்லைகளும் கிடையாது.
தைத்திரீய உபநிஷத் – பரம் பொருளை, “ஸத்யம், ஞானம், அனந்தம்”, என்று கூறியது.
இங்கு ஸ்வாமி தேசிகன், அனந்தம் என்ற பதத்திற்குப் பதிலாக –
த்ரிபி அவதிபீ முக்தம் – மூன்று எல்லைகளில் இருந்தும் விடுபட்டவன் என்று கூறினார்.
இடம் பொருள் காலமாம் எனும் வரை அற்றவன் இன் கடல் அமரர்க்கு என்றும் புதியவன்
கடலணைச் சுகமும் கறவையின் குளப்படிக் கீழ் நீர் ஆகும் அவனைக் காணவே
வட வேங்கடமுறை மலர்மகள் கேள்வனை மா பெரும் நிதியின் வடிவாய்க் காண்பரே
திடமுடன் கருணையே நீயே ஏற்றதால் நல்வினை மிகுந்த நல்லோர் தாமே –
—————————————————————
45-சாரம் லப்த்வா கமபி மஹத ஸ்ரீ நிவாச அம்புராசே
காலே காலே கன ரசவதீ காளிகா இவ அனுகம்பே
வ்யக்த உன்மேஷா ம்ருகபதி க்ரௌ விச்வம் ஆப்யயாயந்தீ
சீல உபஜ்ஞம் ஷரதி பவதீ சீதளம் சத் குண ஓகம்
ஸ்ரீ நிவாசன் குணக்கடலில் சாரம் மட்டுமே கொண்டு உலகோர் வாழ-
ஏற்றத் தாழ்வு பாராமல் – பொழிந்து நனைக்கிறாய்
தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் என்ற கடலில் இருந்து உயர்ந்த சாரத்தை நீ எடுத்துக் கொண்டாய்.
சரியான காலங்களில் பெய்யும் சரியான அளவுடன் கூடிய மழையைப் போன்று,
நீ திருமலையை உனது குளிர்ந்த குணங்கள் மூலம் நனைக்கிறாய்.
இதன் மூலம் இந்த உலகம் முழுவதும் குளிர்வடையும்படிச் செய்கிறாய்.
கடல் நிறைய நீர் உண்டு. ஆனால் அந்த நீரை அப்படியே உபயோகிக்க இயலாது.
அதில் உள்ள சாரத்தை மேகம் எடுத்து, மழையாகப் பெய்யும்போது மட்டுமே அந்த நீர் பயன்படும்.
இங்கு இது போன்று, ஸ்ரீநிவாஸனின் குணங்கள் என்பது நமக்கு நேரடியாகப் பயன் அளிக்காது.
தயாதேவி மூலமாகவே, அவனது கடல் போன்ற குணங்கள் நமக்குப் பயன் அளிக்கும்.
மேலும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பேதம் பாராமல் மழை பெர்ய்வது போன்று,
தயாதேவியும் தனது கருணை மழையை, ஏற்றத்தாழ்வு பாராமல் பொழிகிறாள்.
திருமால் எனும் மா திரைகடல் தன்னில் நனிசுவை சாரமே முகந்து கருணையே
அரிமலை மீதினில் அருவுருக் கொண்ட அடர் முகில் அனைய அமர்ந்து பரவியே
உரியதோர் காலமே உற்றிடும் போதினில் உயர்ந்த நல் சீலமாம் ஒப்பிலா குணங்களைப்
பெரு மழையாகவே பொழிந்தே பரிவுடன் புவிதனைக் குளிர்ந்திடப் பண்ணுவாய் நீயே –
——————————————————————————
46-பீமே நித்யம் பவ ஜல நிதௌ மஜ்ஜதாம் மாநவாநாம்
ஆலம்பார்த்தம் வ்ருஷகிரிபதி த்வத் நிதேசாத் பிரயுங்க்தே
பிரஜ்ஞா சாரம் பிரகிருதி மஹதா மூல பாகேன ஜூஷ்டம்
சாகா பேதை ஸூ பகம் அநகம் சாஸ்வதம் சாஸ்திர பாணிம்
உனது ஆணையின் படியே அழகிய திருக்கரங்களை நீட்டிக் காட்டி அருளி –
அவையே சாஸ்திரம் -திருமந்த்ரார்த்தம் –
எனது திருவடி நிழலில் ஒதுங்கினால்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று முத்ரை காட்டி அருளுகிறான்
இந்த உலகில் மனிதர்கள் ஸம்ஸாரம் என்னும் பயங்கரமான ஸமுத்திரத்தில் மூழ்கியபடி உள்ளனர்.
அவர்கள் கரையேறும் பொருட்டு – ஞானமே சாரமாகவும், பெருமை உடையதாகவும்,
ப்ரணவத்தின் மூலத்துடன் சேர்ந்ததாகவும், சாகைகள் என்ற விரல்கள் கொண்டதாகவும்,
தோஷங்கள் அற்றதாகவும் இருக்கும் சாஸ்த்ரம் என்னும் தனது அழகான திருக்கரத்தை
உனது கட்டளைக்கு ஏற்ப ஸ்ரீநிவாஸன் நீட்டுகிறான்.
அச்சமே மிகுந்த ஆழ்வினைக் கடலெனும் அல்லலில் மூழ்கிடும் அனைத்து மனிதரும்
சிக்கெனைப் பிடித்திட சிறந்த நல் ஞானமே சாரமாம் ப்ரணவச் சொல்லே வேராய்
உச்சியில் பற் கிளை யுற்றதாய் எழிலுடன் ஊறுகள் அற்றதாய் உறுதியாய் மறை எனும்
கைத்தலம் தன்னையே திருமால் நீயிடும் கட்டளை பணிந்தே கொடுக்கிறான் நீட்டியே –
—————————————————————————–
47-வித்வத் சேவா கதக நிகஷை வீத பங்க ஆசயாநம்
பத்மா காந்தா பிரணயிதி தயே தர்ப்பணம் தே ஸ்வ சாஸ்திரம்
லீலா தஷாம் த்வத் அனவசரே லாளயன் விபர லிப்சாம்
மாயா சாஸ்த்ராணி அபி தமயிதம் த்வத் ப்ரபன்ன ப்ரீதீபான்
உன்னைத் தெளிவாகக் காட்டும் கண்ணாடி போன்ற பாஞ்சராத்ம ஆகமாதிகளை அருளியும்
பக்தர்கள் ஹிருதயத்தை தூய்மையும் படுத்தி அருள்கிறான்
அடியவர்களின் எதிரிகளை அடக்க மோஹ சாஸ்திரத்தையும் அளிக்கிறான் –
தயாதேவியே! தேத்தாங்கொட்டை எவ்விதம் தண்ணீரைத் தூய்மைப்படுத்துமோ அது போன்று,
ஞானிகள் மூலம் மக்களின் மனதை ஸ்ரீநிவாஸன் தூய்மைப்படுத்துகிறான்.
அவர்களுக்கு உன்னைத் தெளிவாகக் காட்டும் கண்ணாடி போன்ற பாஞ்சராத்ர சாஸ்திரத்தையும் அருள்கிறான்.
நீ இல்லாத நேரம் பார்த்து, உனது அடியவர்களின் எதிரிகளை அடக்க மோஹ சாஸ்திரங்களை இயற்றுகிறான் .
வேதத்தில் உள்ள சாஸ்திரங்கள், பலவகையான தேவதைகளைக் கூறி, அவர்களின் பெருமையையும் கூறுவதாக உள்ளனவே!
இதற்கான சமாதானத்தை கூறுகிறார். இங்கு கூறப்படும் சாஸ்திரம் என்பது ஸ்ரீமந்நாராயணன்,
தானே இயற்றிய பகவத் சாஸ்திரம் அல்லது பாஞ்சராத்ர ஆகமம் என்பதைக் குறிக்கும்.
இதில் மற்ற தேவதைகளைப் பற்றி ஏதும் கூறப்படுவதில்லை.
ஸ்ரீநிவாஸனின் தயாதேவியை முழுமையாக ப்ரதிபலிக்கும் கண்ணாடி போன்றது இந்தச் சாஸ்த்ரம் என்றார்.
தேத்தாங்கொட்டை என்பது நீரில் உள்ள மண்ணைத் தனியே பிரித்து, நீரைத் தெளிய வைக்கும்.
இது போன்று ஞானிகள் அருகில் சென்று நாம் செய்யும் தொண்டு மூலம் நமது மனம் தூமையை அடையும்.
உன்னைச் சரணம் என்று அடைந்த அடியார்களுக்கு இருக்கும் பகைவர்கள், தனக்கும் பகைவர்களே என்று ஸ்ரீநிவாஸன் எண்ணுகிறான்.
அவர்களை மேலும் தவறான பாதையில் நடத்திச் செல்வதற்காக மோஹசாஸ்த்ரங்களை ஏற்படுத்துகிறான்.
இது போன்ற மாயா சாஸ்திரங்களைக் கற்ற அவர்கள், தர்மத்தைக் கை விட்டு, அதர்ம வழியில் சென்று,
இறுதியாக நரகம் சென்று விடுவர். இது ஸ்ரீநிவாஸனின் லீலையே ஆகும்.
இறை நிலை யுணர்ந்த அறிவோர் தமக்கு இயற்றும் பணிவிடை என்கிற கதகம்
உரைத்தலால் மனமலம் ஒழிந்த அடியவர் உன்னை நோக்கிட உதவிடும் ஆடியாம்
அரு நூல் இயற்றுவான் அலர் மகள் கேள்வனே அருகு நீ அற்றிடில் அடியவர் பகைவரைச்
செறுத்திடும் மாய நூல் செய்திட வஞ்சமாம் மாதரின் லீலையில் முனைகிறான் கருணையே -கதகம்-தேத்தாங்கொட்டை
——————————————————————————-
48-தைவாத் ப்ராப்தே வ்ருஷகிரி தடம் தேஹி நி த்வத் நிதாநாத்
ஸ்வாமின் பாஹி இதி அவச வசனே வந்ததி ஸ்வாப மந்த்யம்
தேவ ஸ்ரீ மான் தசதி கருணே த்ருஷ்டிம் இச்சன் த்வதீயாம்
உத்காதேன சுருதி பரிஷதாம் உத்தரேண ஆபிமுக்யம்
உன்னால் கடாஷிக்கப் பட்டு புண்ய செயல்களை செய்து திருமலை அடிவாரத்தில் வந்து ரஷிக்க
அபேஷிப்பார்க்கு அப்படியே செய்கிறேன் என்று அருளுகிறான்
இவை எல்லாம் உன் மேல் கொண்ட காதலினால் தானே -நீ உகப்பாய் என்பதால்
தயாதேவியே! உன்னால் உதவப்பட்டு புண்ணிய செயல்கள் பல செய்த ஒருவன்,
தனது உயிர் பிரியும் நேரத்தில் திருமலையின் அடிவாரத்திற்கு வந்து,
“ஸ்வாமி! என்னை காக்க வேண்டும்”, என்று கூறக்கூடும்.
உடனே ஸ்ரீநிவாஸன் தனது கடைக்கண் பார்வையை பெற விரும்பியவனான அந்த மனிதனுக்கு நன்மை செய்யும் விதமாக,
வேதங்களின் தொடக்கத்தில் உள்ள “ஓம்” என்பதை அளிக்கிறான்.
“ஓம்” என்ற பதத்திற்கு “அப்படியே செய்கிறேன்”, என்று பொருள் உண்டு.
மரணம் அடையும் நேரத்தில் திருமலையை அடைந்து, “என்னைக் காப்பாயாக”, என்று கூறும்போது
ஸ்ரீநிவாஸன் இவ்விதம் கூறுகிறான். இது ஏன் என்றால், ஸ்ரீநிவாஸன் தனது மனதில்,
“இந்த மனிதனைக் காப்பாற்றினால் மட்டுமே தயாதேவி நம் மீது விருப்பம் கொள்வாள்”, என்று எண்ணுகிறான்.
கருணையே உனதருள் கிட்டிடும் விதியால் திருமலைத் தடத்தைச் சேர்ந்திடும் மனிதனும்
பரமனே காத்தருள் என்று தன் வயமறப் பேசிட திருவுடன் கூடிய நாதனே
கருணை யுன் நோக்கினைக் கிட்டிட விரும்பியே கிளர் மறை முதல் சொல் பிரணவம் என்கிற
அருள் ஒலி விடையாய் அருளியே அவன் முன் அக்கணம் தோன்றுதல் அம்மலைச் சிறப்பே –
—————————————————————————-
49-ச்ரேயஸ் ஸூ திம் சக்ருதபி தயே சம்மதாம் ய சகீம் தே
சீத உதாராம் அலபத ஜன ஸ்ரீ நிவாசச்ய த்ருஷ்டிம்
தேவ ஆதி நாம் அயம் அந்ருணதாம் தேஹவத்தேவ அபி விந்தன்
பந்தான் முக்தோ பலிபி அநகை பூர்யதே தத் பிரயுக்தை –
உனது தோழியான ஸ்ரீ நிவாஸன் கடாஷ அலைகளே அனைத்து நன்மைகளையும் அளிக்கும்
தயாதேவியே! உனது தோழியாக உள்ளதும், மோக்ஷம் அளிப்பதும், குளிர்ச்சியாக உள்ளதும் ஆகிய
ஸ்ரீநிவாஸனின் கடைக்கண் பார்வையை ஒரு முறையாவது பெற்று விட்டால் நிகழ்வது என்ன?
அப்படிப்பட்ட மனிதன், இந்த உடலுடன் இருக்கும்போதே ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட்டவனாகவும்,
தேவர்கள் முதலானோரின் கடன்களில் இருந்து விடுபட்டவனாகவும்,
தேவர்களால் அளிக்கப்பட்ட உயர்ந்த அன்பளிப்புகளைப் பெற்றவனும் ஆகிறான்.
ஒரு மனிதன் பிறக்கும் நேரத்திலேயே, அவனது முன்வினைப் பயன் காரணமாக பகவானின் கடைக்கண் பார்வை,
அவன் மீது விழக்கூடும். இதனை ஜாயமாந கடாக்ஷம் என்பார்கள்.
இந்தக் கடாக்ஷம் ஏற்பட்டால் ஆசார்ய தொடர்பு கிட்டி, மோக்ஷத்திற்கான ப்ரபத்தியை செய்து கொள்வான்.
இப்படிப்பட்ட கடாக்ஷம், அந்த மனிதனுக்கு மோக்ஷம் கிட்டும் வரையில் அவனுக்கு நேரும் துன்பங்கள்
அனைத்தையும் நீக்கி நன்மை செய்தபடி இருக்கும்.
இந்தக் கடைக்கண் பார்வை மூலம் ப்ரபத்தி கைகூடியவனுக்கு வரும் நன்மைகளை எண்ண இயலாது.
உடல் உள்ளவரை ஒரு மனிதன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கடன்பட்டபடியே உள்ளான்.
தேவர்களின் கடன் அவிர்பாகம் அளிப்பதாலும், முனிவர்களின் கடன் வேதங்கள் கற்பதாலும்,
பித்ருக்களின் கடன் வம்சத்தை உருவாக்குவதாலும் அடைக்கப்படும்.
ஆனால் இந்தக் கடன்கள் அனைத்தும் ப்ரபத்தி மூலம் கழிந்து விடுகின்றன.
மோக்கம் தரு தன்மை மிகு வண்மை யுடைய ஸ்ரீ நிவாஸனின் மலர்க்கண்ணின் நோக்கே யுன் நல் தோழி தயா தேவி
நோக்கதனை ஒரு முறையே நண்ணியவோர் பாக்கியவான் தேஹமுடன் இருக்கையிலே தேவர் முனி பிதுரர் கடன்
போக்கியதன் நிலை தன்னை பூ வுலகில் யடைந்தவனாய் பந்தமெனும் ஸம்ஸார பிணை ஒழிந்து இவ்வுடலை
நீக்கியவனாய் செல்கையில் தேவர்களே முன் வந்து நலம் மிகுந்த பரிசுகளால் நிறைத்திடுவான் அவர்களையே –
————————————————————————–
50-திவ்ய அபாங்கம் திசஸி கருணே யேஷூ சத் தேசிக ஆத்மா
ஷிப்ரம் ப்ராப்தா வ்ருஷகிரி பதம் ஷத்த்ர பந்து ஆதய தே
விஸ்வ ஆசார்ய விதி சிவ முகா ஸ்வ அதிகார உபருத்தா
மன்யே மாதா ஜட இவ ஸூ தா வத்சலா மாத்ருசே த்வம்
மந்த புத்தி குழந்தை மேலே வத்சலையான தாய் வைக்கும் அதிக அன்பை போலே-
ப்ரஹ்மாதிகளை விட்டு நம் போல்வாரையும் கடாஷித்து அவன் திருவடிகளிலே சேர்த்து அருளுகிறாள் –
தயாதேவியே! நீ ஒருவனுக்கு அருள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து,
உன் கடைக்கண் பார்வையை வைத்தால் போதும். அவர்களின் ஆசார்ய உருவமாக நீயே வந்து,
அவர்கள் க்ஷத்திரபந்து போன்று பாவம் செய்தவர்களாக இருந்தாலும் ஸ்ரீநிவாஸனை அடைந்து விடுவர்.
உலகின் ஆசார்யர்களாக உள்ள ப்ரம்மன், சிவன் முதலானோர் தங்களுடைய பதவிகளில் கட்டுண்டு
மோக்ஷம் பெறாமலேயே இருந்து விடுகின்றனர்.
மந்த புத்தியுள்ள குழந்தையிடம் தாய் சற்று அதிகமான அன்பு வைப்பது போல
என் போன்றவர்கள் விஷயத்தில் உனக்கு அதிகமான அன்பு உண்டு என்று நினைக்கிறேன்.
க்ஷத்ரியர்களில் மிகவும் தாழ்ந்தவன் க்ஷத்திரபந்து என்பவன் ஆவான்.
இவன் காடு மலைகள் எங்கும் அலைந்து, ஒரு ரிஷி மூலமாக, “கோவிந்தா”, என்ற திருநாம உபதேசம் பெற்று மோக்ஷம் அடைந்தான்.
இப்படிப்பட்டவனை திருத்திய அந்த ரிஷி போன்ற வடிவங்களிலேயே தயாதேவி வருவதாகக் கூறுகிறார்.
இந்த உலகிற்கே குருவாக விளங்கும் ப்ரம்மன், சிவன் முதலானோர் மோக்ஷம் பெற அனைத்து தகுதிகளும்
உடையவராக இருந்தாலும் அவர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரே மோக்ஷம் பெறுகின்றனர்.
இப்படி உள்ளபோது, பாவம் செய்தவர்கள் கூட ஆசார்யனை அண்டினால் மோக்ஷம் கிட்டி விடும் என்பது எப்படி என்று சாத்தியமாகும்?
இதற்கு விடையாக – சாமர்த்தியம் உள்ள குழந்தைகளை விட மந்தமான புத்தி உள்ள குழந்தைகளிடம்
தாய்க்கு அன்பு அதிகமாக இருக்கும். இதனால் க்ஷத்திரபந்து போன்றவர்கள் மோக்ஷம் பெறுகின்றனர் என்றார்.
சத்துவ நல் குரவர் தம் திருவுருவே கொண்டவளாய் தயை யுன் தன் நோக்குதனைச் செலுத்துகின்ற மானிடவர்
கத்திர பந்துவினைப் போலே கடிதில் திருவேங்கடவன் கழல் தன்னை எய்தினராய் கதி நலமே உறுகின்றார்
எத்தகைய ஸாஸ்திரமும் இயற்றவல்ல அயன் சிவனார் எனும் உலக ஆசான்கள் எக்காலும் பந்தமுற்றார்
புத்தியில்லா சடமே போல் கிடக்கின்ற என் தனையே புத்திரனாய்க் கருதி நீயே பரிவுதனைப் புரிவாயே –
——————————————————————————-
அடுத்த பத்து ஸ்லோகங்களால் சரணாகதி ஒன்றே மோஷம் பெற எளிய உபாயம் என்பதை விளக்கி அருள்கிறார் –
மோக்ஷம் கிட்டுவதற்கு முன்னால் ஒருவனது பாவங்கள் அழியவேண்டும். இதனை மேலே கூறினார்.
இனி அடுத்த கட்டமாக இந்த பத்து ச்லோகங்களில் சரணாகதி செய்ய போகிறார்.
சரணாகதி என்பது ஸ்வாமி தேசிகன் இந்த உலகிற்கு அளித்த மிகப் பெரிய பரிசாகும்.
இதனை மோக்ஷத்திற்கான நேரடிப்பாதை என்று இவரே உபதேசித்தார்.
51-அதிக்ருபண அபி ஜந்து அதிகம்ய தயே பவதீம்
அசிதில தர்ம சேது பதவீம் ருசிராம் அசிராத்
அமித மஹா ஊர்மி ஜாலம் அதி லங்க்ய பவ அம்புநிதிம்
பவதி வ்ருஷாசல ஈச பத பத்தன நித்ய நதீ
ஆகின்ஜய அநந்ய கதி உள்ளாருக்கு தயா தேவியே சம்சாரம் கடக்கும் பாலம் –
தயாதேவியே! எந்த விதமான உதவியும் இல்லாத ஒருவன் – மிகவும் அழகானதும், அழியாததும்,
பகவானை அடையும் பாலம் போன்றதும் ஆகிய உன்னைச் சரணம் என்று அடைந்துவிட்டால் போதும்.
இன்பம், துன்பம் என்று மாறிமாறி எழும் அலைகள் நிறைந்த ஸம்ஸாரக் கடலில் இருந்து மீண்டு,
ஸ்ரீநிவாஸனின் திருவடி என்ற அழியாத செல்வத்தைப் பெற்று விடுகிறான்.
இந்தச் ச்லோகத்தில் (51) சரணாகதி அடையும் வழியைக் கூறிவிட்டு, 59 ஆவது ச்லோகத்தில்
இந்த வழியை உபதேசித்த ஆசார்யர்களைத் துதித்து, 60 வது ச்லோகத்தில் சரணாகதி செய்கிறார்.
சரணாகதிக்கு வேண்டிய முக்கியமான தகுதியானது
ஆகிஞ்சன்யம் மற்றும் அனன்யகதித்வம் – வேறு எந்த உதவியும் இல்லாதவன், இவனைத் தவிர்த்து கதி இல்லாதவன் – என்பதாகும்.
இவை மிகவும் அவசியமாகும்.
இங்கு தயாதேவியை ஸம்ஸாரம் என்ற கடலைக் கடக்க உதவும் பாலமாக உருவகம் செய்து கூறுகிறார்.
அறிவும் ஆற்றலும் அற்றவன் ஒருவனேலும் அழகிய பாலமாய் அமைந்த கருணை யுன்னை
சரணமாய் அடைந்து சீறும் பேரலைகள் நிறைந்த இப் பவக்கடல் தன்னையே கடந்தவனாய்
விரைவிலே வேங்கட நாதனின் இணையடியாம் மா பெரும் நகரினைச் சேர்ந்ததன் புண்ணியத்தால்
வரையிலா காலமே வளர் பெரு நிதியினையே பெற்றுக் களிக்கும் கதியினை அளிக்கின்றாய் –
——————————————————————————
52-அபிமுக பாவ சம்பத் அபி சம்பவி நாம் பாவி நாம்
க்வசித் உப லஷிதா க்வசித் அபங்குர கூடகதி
விமல ரச ஆவஹா வ்ருஷகிரி ஈச தயே பவதீ
சபதி சரஸ்வதீ இவ சமயதி அகம் அப்ரதிகம்
சரஸ்வதி நதி போலே நேராகவும் மறை முகமாகவும் உதவுகிறாள் –
பாபங்கள் துன்பம் என்ற தண்டனை மூலம் விலகுகின்றன-
தயாதேவியே! ஸரஸ்வதி நதியானது ஒரு சில இடங்களில் கண்ணுக்குப் புலப்பட்டும்,
ஒரு சில இடங்களில் புலப்படாமலும் தடையில்லாமல் ஓடுவது போன்று நீயும் உள்ளாய். எப்படி எனில் –
தெளிவாக உள்ள அன்பு என்பதைக் கொண்டு உன்னிடம் வருபவர்களின் தீராத பாவங்களை நீக்கி,
வற்றாத செல்வம் அளிக்கிறாய்.
இங்கு மறைவதும் தெரிவதும் ஆகிய தன்மைகளுடன் நதி ஓடுவதாக ஏன் கூறவேண்டும்?
நமக்குத் துன்பங்கள் ஏற்படுவது என்பது, நம்மை நல்வழியில் திருத்துவதற்காக,
ஸ்ரீநிவாஸன் தனது கருணையால் அந்த நிலையை உண்டாக்குவதே ஆகும்.
இந்த நிலையில் தயாதேவி மறைமுகமாக உதவி செய்கிறாள்.
நமது பாவம் அனைத்தும் பலவிதமான துன்பம் என்ற தண்டனை மூலம் நீக்கப்படுகின்றன.
ஆனால் வெளிப்பார்வைக்கு இது துன்பம் போன்று தோன்றலாம்.
இத்தகைய பாவங்கள் நீங்கினால் மட்டுமே மோக்ஷம் பெற இயலும் என்பதால்
பாவங்களுக்கான ப்ராயச்சித்தம் துன்பம் என்னும் வடிவில் வருகிறது.
த்ரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி கலப்பதை நாம் காண்கிறோம்.
இந்த இடத்தில் கங்கையும் யமுனையும் போன்று நம்மால் ஸரஸ்வதீயைக் காண இயலவில்லை.
இதன் காரணம் அவள் மறைமுகமாகக் கலப்பதே ஆகும்.
இதே போன்று தயாதேவியும் நமக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் உதவியபடி உள்ளாள்.
ஸரஸ்வதி நதி யன்ன சிறப்புடையாய் தயா தேவீ தெளிவான அன்பென்னும் நீர் தன்னைப் பெருக்குகின்றாய்
பெருமானின் மனமுவக்கும் செயல் என்னும் செல்வத்தைப் பூரணமாய் உற்றவருக்கு வெளிப்படையாய் அருள்கின்றாய்
பெருமானின் மனம் கலக்கும் செயல்களினால் மாசடைந்த பாவிகளும் தூய்மை யுற பெரு மனமே கொண்டவளாய்
மறை முகமாய்ச் சிலவிடத்தில் பரிகாரம் முதலியதில் மூட்டுவதின் மூலமாக விரைவாக அருள்கின்றாய் –
———————————————————————–
53-அபி கருணே ஜனச்ய தருண இந்து விபூஷண தாம்
அபி கமல ஆஸ நத்வம் அபி தாம வ்ருஷாத்ரி பதே
தரதமதா வசேன தநுதே தநு தே விததி
பர ஹித வர்ஷ்மாணா பரிபசேளிம கேளி மதீ
உனது லீலைகளாலே சிவ-தருண இந்து விபூஷண தாம் -பிரம -கமல ஆஸ ந–பரமபதங்கள் -வ்ருஷாத்ரி பதே
போன்றவற்றை பெறுகிறார்கள் –
மற்றவர்களுக்கு நன்மை செய்வதை மட்டுமே குறிக்கோளாக உள்ள வடிவம் எடுத்த தயாதேவியே!
உனது லீலைகள் எவ்விதம் உள்ளது என்றால் – உன்னை அண்டியவர்களின் தன்மைக்கு ஏற்ப
இளம் சந்திரனை தலையில் சூடிய சிவனின் பதவியையும், தாமரையில் அமர்ந்த ப்ரம்மனின் பதவியையும்,
ஸ்ரீநிவாஸனின் இடமாகிய பரமபதத்தையும் அளிக்க வல்லதாகும்.
மிகுந்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவன் சிவனாகவோ அல்லது சிவனை விட மேம்பட்ட ப்ரமனாகவோ ஆகமுடியும்.
இதனை தயாதேவியே செய்விக்கிறாள். இதனையும் மீறி மோக்ஷத்தை விரும்பி,
அதற்கான உபாயமான ஸ்ரீநிவாஸனைக் கைக்கொண்டால் பரமபதத்தை அளிக்கிறாள்.
இங்கு மற்ற தெய்வங்களைத் தூஷிக்காமல் ஸ்வாமி தேசிகன் அழகான பதங்கள் மூலம் அவர்களைக் கூறுவது காண்க.
தருண இந்து விபூஷணதாம் என்பது சிவனைக் குறிக்கும். கமல ஆஸன என்பது ப்ரம்மனைக் குறிக்கும்.
நலம் தனையே அனைவருக்கும் நல்குதலாம் பக்குவத்தில் தேர்ந்த யுன் தன் விளையாடல் தனிச் சிறப்பே தயா தேவீ
பலதரமாம் நல் வினைகள் புரிந்தவர்கள் தம் தமக்குப் பொருத்தமுற பலன் தன்னைப் புரிவதுவே உன் தன்மை
இளம் பிறையை அணி கொண்ட இறையவனாம் சிவனாயும் எழில் கமல மலர் அமரும் பிரமனாயும் ஆக்குகின்றாய்
சிலருக்கோ வேங்கடவன் தலம் என்னும் பரமபதம் சேர்கின்ற பெரு நலனைச் செய்கின்றாய் நீ யன்றோ –
——————————————————————————-
54-த்ருத புவநா தயே த்ரிவித கதி அனுகூல தரா
வ்ருஷகிரி நாத பாத பரிரம்பவதீ பவதீ
அவிதித வைபவா அபி ஸூ ர சிந்து இவ ஆத நுதே
சக்ருத் அவகாஹமாநம் அப தாபம் அபாவம் அபி –
கங்கைக்கும் தயா தேவிக்கும் சாம்யம் -த்ருத புவன -மூன்று லோகங்களையும் காத்து அருளி -த்ரிவித கதி -மூன்று லோகங்களிலும் ஓடி –
ஐஸ்வர்யம் கைவல்யம் மோஷம் மூன்றையும் அருளி –வ்ருஷகிரி நாத பாத பரிரம்பவதீ-
அவனது திருவடி சம்பந்தத்தால் பெற்ற சாம்யமும் உண்டே –
தயாதேவியே! இந்த உலகம் முழுவதையும் தாங்குபவளாக,
மூன்றுவிதமான பலன்களுக்கு உதவியாக உள்ளவளாக,
ஸ்ரீநிவாஸனின் திருவடிகளுடன் தொடர்பு கொண்டவளாக நீ உள்ளாய்.
இவ்விதம் உனது பெருமையை அறியாத போதும் உன் தொடர்பு ஏற்பட்ட ஒருவன்,
புண்ணிய நீராகிய கங்கையில் நீராடியது போன்று தனது பாவம் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்.
இங்கு கங்கைக்கும் தயாதேவிக்கும் உள்ள ஒற்றுமையைக் கூறுகிறார்.
இவற்றை த்ரித புவந, த்ரிவித கதி அனுகூலதர, வ்ருஷகிரி நாத பாத பரிரம்பவதி – என்று விளக்குகிறார்.
த்ருத புவந என்றால் மூன்று உலகங்களையும் காப்பது என்பதாகும்.
கங்கையானது இந்த உலகிற்குத் தேவையான நீர் அளித்துக் காப்பதுபோல், இவள் கருணையால் காக்கிறாள்.
த்ரிவதகதி என்றால் மூன்றுவிதமான ஓட்டம் கொண்டது என்பதாகும்.
கங்கையானது – ஆகாயம், பூமி, பாதாளம் என்ற மூன்று இடங்களிலும் பாய்வது போன்று,
இவள் ஐச்வர்யம், கைவல்யம், மற்றும் மோக்ஷம் ஆகியவற்றின் காரணமாக உள்ளாள்.
ஆக தயாதேவி ஐச்வர்ய காமன் (செல்வம் விரும்புபவன்), கைவல்யார்த்தி (பரமாத்மாவைவிடத் தனது ஆத்மாவை விருப்புவன்),
மோக்ஷார்த்தி ஆகியவர்களுக்கு உதவுகிறாள்.
கங்கைக்கு மஹாவிஷ்ணுவின் திருவடித் தொடர்பு உள்ளது போல் இவளுக்கும் ஸ்ரீநிவாஸனின் திருவடிகளின் தொடர்பு உள்ளது.
பெரும் ஞாலம் தனைத் தாங்கி பொருள் செல்வம் பேர் அறிவு பெரு வீடு எனும் மூன்றடைய பேர் உதவி நல்குகிறாய்
திருவேங்கட நாதன் தன் திருவடியை வருடுவதால் தேவநதி கங்கையைப் போல் திகழ்கின்ற தயை உன் தன்
பெருமை தனை அறியாத போதிலுமே கங்கை தனில் முழுக்காடல் செய்பவனும் முழுத் தூய்மை பெறுவது போல்
ஒருக்காலே உன் பெருக்கில் உணராமல் ஆழ்வனையும் ஒட்டாமல் எப்பாவமும் தாபமுமே –
—————————————————————————————————-
55-நிகம சமாஸ்ரிதா நிகில லோக சம்ருத்தி கரீ
பஜத் அக கூல முத்ருஜ கதி பரிதப்த ஹிதா
ப்ரகடித ஹம்ச மத்ஸ்ய கமடா த்யவதார சதா
விபுத சரித் ச்ரியம் வ்ருஷகிரி ஈச தயே வஹசி –
மேலும் -வேதங்களால் போற்றப்பட்டும் -பாய்ந்து வரும் இடங்களை வளப்படுத்தியும்
கரைகளை அழித்தும் -பாபங்களை அழித்தும்-
அன்னம் மீமை ஆமை -ஹம்ச மத்ஸ்ய கூர்ம-ஆனந்தமாக உள்ளே அவஹாகித்து வசிக்கும் -போன்ற
சாம்யங்களும் உண்டே –
நீ அனைத்து வேதங்களாலும் போற்றப்படுகிறாய். அனைத்து உலகிற்கும் செழுமை அளிக்கிறாய்.
உன்னை அண்டியவர்களின் பாவங்கள் என்ற கரையை உடைக்கும் நதியாக உள்ளாய்.
துன்பம் கொண்டவர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கிறாய்.
அன்னம், மீன், ஆமை போன்றவற்றை உடைய கங்கையின் பெருமையை நீ கொண்டுள்ளாய்.
கங்கை வேதங்களாலே போற்றப்பட்டது; இதே போன்று தயாதேவியும் வேதங்களால் போற்றப்படுகிறாள்.
கங்கையானது தான் பாய்ந்து வரும் இடங்களை வளப்படுத்துகிறது;
இதே போன்று தயாதேவி அனைவரையும் செழிக்க வைக்கிறாள்.
கங்கை தான் வரும் பாதையில் உள்ள கரைகளை உடைத்துப் பாய்கிறது.
இதே போன்று தயாதேவியும் நமது பாவங்கள் என்னும் கரைகளை உடைக்கிறாள்.
கங்கையில் அன்னம், மீன், ஆமை முதலான உயிர்கள் ஆனந்தமாக உள்ளன.
இதே போன்று தயாதேவி மூலம் ஸ்ரீநிவாஸன் ஹம்ஸம், மத்ஸ்யம் மற்றும் கூர்மம் முதலான அவதாரங்கள் எடுக்கிறான்.
தேவ நதி வுருவொத்த வேங்கடவனின் தயா தேவீ துதிக்கும் உமை மும்மறைகள் தேவநதி தருக்கள் தமை
மேவி நிலம் தனைச் செழுத்திக் கரை பெயர்க்கும் வெள்ளம் தன்னில் மூழ்குவோரைத் தூய்மையாக்கி மீனாமை நிறைந்திருக்கும்
மேவி யுன்னைச் சரணடைவார் பெரும் பாவக்கரை யுடைத்து மூவுலகும் செழிப்பாக்கி முத்தாபம் நீக்கி யுன் தன்
ஏவுதலால் வேங்கடவன் அன்னம் முதல் மீனாமை எண்ணற்றப் பிறப்பெடுத்து எமைக் காக்க வைக்கின்றாய் –
————————————————————————————–
56-ஜகதி மிதம்பசா த்வத் இதரா து தயே தரளா
பல நியம உஜ்ஜிதா பவதி சந்தப நாய புன
த்வம் இஹ நிரங்குச ப்ரசகன ஆதி விபூதி மதீ
விதரசி தேஹி நாம் நிரவதீம் வ்ருஷசைல நிதிம்
அவ்வருள் அல்லன அருளும் அல்ல -ஸ்ரீ நிவாசனை அளிக்க வல்லவள் தயா தேவி ஒருவளே –
தயாதேவியே! இந்த உலகத்தில் உள்ள மற்ற தேவதைகளின் தயை என்பது
அற்பமான பலன்களைத் தரவல்லது, நிலையற்றது, பயன் அளிக்கும் என்ற நிச்சயம் அல்லாதது,
துன்பம் அளிக்கக்கூடியது ஆகும்.
நீ தடையில்லாத சக்தி மட்டும் ஐஸ்வர்யம் உடையவளாக இருந்து கொண்டு,
இந்த உலகில் உள்ள அனைவருக்கும் திருமலையில் உள்ள ஸ்ரீநிவாஸன் என்ற நிதியை அளிக்கிறாய்.
சரணாகதிக்கு முக்கியமான சிந்தனை என்னவென்றால், பகவானைத் தவிர நம்மைக் காக்க வல்லவர்கள்
வேறு யாரும் இல்லை என்ற சிந்தனையாகும். இந்த உலகில் ப்ரம்மன், இந்திரன் போன்ற பல தேவதைகள்
இருந்த போதிலும் அவர்களால் மோக்ஷம் என்ற பலனை அளிக்க இயலாது.
அவர்கள் அளிக்கும் பலன்கள் – உயர்ந்த பலன்கள் அளிக்காதவை என்ற நிலையும்,
துன்பங்களையும் அளிக்கவல்ல நிலையும் கொண்டதாகும்.
நம்மாழ்வார் – அவ்வருள் அல்லன் அருளும் அல்ல – என்பது காண்க .
இத்தகைய உயர்ந்த பலனை தயாதேவி மட்டுமே அளிக்க வல்லவள் ஆவாள்.
அவள் அளிக்கும் பலன் எது என்றால் ஸ்ரீநிவாஸனே ஆவான்.
மற்றவரின் கருணைகளோ மிதமான நிலையற்ற பலன்களையே தருவதிலும் உறுதியின்று துயரளிக்கும்
அற்பமான அவை தன்னில் அளவற்ற வலியுடையாய் அழகு திரு வேங்கடவனை அணைந்த திரு தயை நீயே
உற்ற உன் தன் அடியாருக்கு உதவுதலில் நிலை நிற்பாய் ஒரு தடையும் அற்றவளாய் உயர் செல்வம் நல்குகின்றாய்
வற்றாத பெரு நிதியாய் வேங்கடத்தில் நிலை கொண்டு விளங்குகின்ற திருமாலை வழங்குதல் உன் மேன்மை யன்றோ –
———————————————————————————–
57-ச கருண லௌகிக ப்ரபு பரிக்ரஹ நிக்ரஹயோ
நியதிம் உபாதி சக்ர பரிவ்ருத்தி பரம்பரயா
வ்ருஷப மஹிதர ஈச கருணே விதரங்க யதாம்
ஸ்ருத மித சம்பதி த்வயி கதம் பவிதா விசய
க்ருத்ய கரண-அக்ருத்ய அகரண -மஹா விஸ்வாசம்-மூன்றும் சரணாகதிக்கு வேண்டும் -என்பதை –
வேதங்கள் மூலம்
உனது மகிமைக்கு சங்கை இல்லாமல் அறிந்து கொள்ளலாம் –
தயா தேவியே! இந்த உலகில் உள்ள பிரபுக்களின் தயை என்பது
அவர்களுக்கு வேண்டியவர்களிடம் உண்டாவதையும், வேண்டாதவர்களிடம் வெறுப்பு உண்டாவதையும் காணலாம்.
நன்கு அறிந்தவர்கள், இந்த விருப்பு-வெறுப்பு என்பது சக்கரம் போன்று மாறிமாறி வரும் என்று உணர்ந்து கொள்கின்றனர்.
இவ்விதம் அறிந்தவர்களுக்கு வேதங்கள் மூலம் கூறப்பட்ட உனது பெருமை பற்றி எவ்விதம் சந்தேகம் ஏற்படும்? (ஏற்படாது)
இந்த உலகில் உள்ள பிரபுக்கள் தங்களிடம் பணிவாக நடந்து கொள்பவர்களிடம் அன்புடனும்,
விரோதமாக நடப்பவர்களிடம் கோபத்துடனும் உள்ளனர்.
இந்த உலகில் உள்ள சாதாரண பிரபுக்களே இவ்விதம் நீதியுடன் நடக்கும்போது,
ஸ்ரீநிவாஸன் அவரவர்கள் நடந்து கொள்ளும் முறைக்கு ஏற்ப பலன் தருவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இவ்விதம் நடந்து கொண்டால் ஸ்ரீநிவாஸன் நம்மைக் கை விடமாட்டான் என்ற நம்பிக்கை வேண்டும்.
ஆக இந்த ச்லோகத்தில் சரணாகதிக்கு இன்றியமையாததாக உள்ள மூன்று செயல்கள் கூறப்பட்டுள்ளன. அவையாவன:
ஸ்ரீநிவாஸன் விதித்தவற்றை ஏற்று நடப்பது
அவன் விதிக்காதவற்றை செய்யாமல் இருப்பது
அவன் கை விட மாட்டான் என்று மஹாவிச்வாசம் கொள்வது
பாவுடைய சான்றோர்கள் பொழிகின்ற அருள் தனக்கும் பணிக்கின்ற தண்டனைக்கும் பொருந்துகிற காரணங்கள்
உருள் சகடம் போலமையும் உண்மை தன்னை உணர்ந்தவர்கள் உயர்ந்த நல் மறை எல்லாம் ஓவாது போற்றுகின்ற
திரு வேங்கட நாதன் தன் சீர் குணமாம் தயை நீயே நல்லவருக்குச் சிறப்பான நன்மைகளைச் செய்வதையும்
அறவழியைக் கடப்பவர்க்கு அளவான தண்டனையை அளிப்பதையும் கொண்டதனால் அயிர்ப்பாரோ உன் தனையே -அயிர்ப்பாரோ–ஐயப்படுவாரோ
———————————————————————————————
58-வ்ருஷகிரி கிருஷ்ண மேக ஜநிதாம் ஜனி தாப ஹராம்
த்வத் அபிமதிம் ஸூ வ்ருஷ்டிம் உப ஜீவ்ய நிவ்ருத்த த்ருஷ
பஹூ ஷூ ஜலசாயேஷூ பஹூமாநம் அபோஹ்ய தயே
ந ஜஹதி சத்பதம் ஜகதி சாதகவத் க்ருதின –
ஸ்ரீ நிவாசன் கரியமேகம் -அபிமானம் மழை பொழிவதையே சாதகப் பறவை போன்று –
சரணா கதர்-அவன் கருணையை மட்டுமே பற்றி தாபம் நீங்கப் பெறுகிறார்கள்
தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் என்ற கரிய மேகத்தில் இருந்து, ஸம்ஸார தாபத்தை நீக்கவல்ல
உனது அபிமானம் என்ற மழையைப் பொழிய வைக்கிறாய்.
புண்ணியம் செய்தவர்கள் – மழை நீரை மட்டுமே பருகி உயிர் வாழும் சாதகப்பறவை போன்று,
இந்த மழையையே பருகியபடி உள்ளனர். இவ்விதம் இந்த மழையைக் கொண்டு,
தங்கள் தாபம் நீங்கப் பெற்ற அவர்கள், இந்த வழியை விடாமல் உள்ளனர்.
இந்த உலகில் சாதகப்பறவை என்ற பறவையானது தனது தாகத்தைத் தீர்த்து கொள்ள, மழை நீரை மட்டுமே நம்பி இருக்கும்.
இந்தப் பறவையானது குளம் அல்லது ஆறுகளில் இருந்து நீரைப் பருகுவதற்காகக் குனிந்து முயற்சித்தால்,
அதன் தொண்டையில் உள்ள ஒரு குழி போன்ற அமைப்பு தடுத்துவிடும்.
இங்கு சரணாகதி செய்ய நினைப்பவர்களை சாதகப் பறவையாகவும், ஸ்ரீநிவாஸனின் கருணையை மழையாகவும் கூறினார்.
ஆக சரணாகதி செய்பவர்கள், சாதகப்பறவையானது மழை நீரை மட்டுமே எதிர்பார்ப்பது போன்று,
ஸ்ரீநிவாஸனின் கருணையை மட்டுமே நினைத்தபடி இருக்க வேண்டும் என்று கருத்து.
சகத்தினிலே நீர்த்துளியைத் தீண்டாமல் வான் மேகம் சொரிகின்ற மழை தன்னால் தாகம் தீர் சாதகம் போல்
தகவுடையோர் வேறெந்த தெய்வம் எனும் நீ நிலையின் திசை தனையும் நோக்காது திருமலையின் கருமை நிற
முகில் அன்ன பரமன் தானே பிறப்பித்த கருணை யுன் தன் பிறவித்துயர் நீக்குகின்ற பரிவென்னும் மழை தானே
உகுக்கின்ற நீர் ஒன்றால் உயிர் காத்து அறம் என்னும் ஓர் வழியைப் பிறழாதே ஒழுகிடுவார் நிச்சலுமே –
———————————————————————————————————–
59-த்வத் உதய தூலிகாபி அமுநா வருஷ சைல ஜூஷா
ஸ்த்திர சர சில்பிநா ஏவ பரிகல்பித சித்ரதிய
யதிபதி யாமுன பிரப்ருத்ய பிரதயந்தி தயே
ஜகதி ஹிதம் ந ந த்வயி பரந்யசநாத் அதிகம்
ஸ்ரீ நிவாசன் -சிற்பி -நீயே எழுது கோல்-
ஆளவந்தார் ராமானுஜர் போன்றவர்கள் புத்தி என்னும் சுவரில் தத்தவ உபதேசங்களை எழுதி
அதன் மூலம் சரணாகதி பரந்யாசம் உபாயமே சிறந்தது என்று அறிவித்து அருளினான் –
தயாதேவியே! அனைத்து உலகங்களையும் படைக்கவல்ல சிற்பியாக ஸ்ரீநிவாஸன் உள்ளான்.
அவன் யதிகளின் தலைவரான ராமானுஜர், ஆளவந்தார், போன்றவர்களின் புத்தி என்னும் சுவரில்,
தத்துவ உபதேசங்களை எழுதினான். இத்தகையை எழுதுகோலாக நீயே உள்ளாய்.
இதன் மூலம் அந்த ஆசார்யர்கள் உன்னிடம் ப்ரபத்தி (சரணாகதி , பரந்யாஸம்) என்ற உபாயத்தை விட
இந்த உலகில் வேறு உயர்ந்த உபாயம் ஏதும் இல்லை என்றனர்.
நிற்பனவும் நடப்பனவும் நிறை வுலகைப் படைக்கின்ற சிற்பி எனத் திகழ்கின்ற திருமலையான் கருணை யுன் தன்
உற்பவிக்கும் எழுச்சி எனும் எழுது கோலால் வரைந்திட்ட உருக்களெனும் அறிவுடைய எதிராசா யாமுனராம்
பொற் குணத்தோர் உன்னிடமே புரிகின்ற சரணம் எனும் பிரபத்தி எனும் மேம்பட்ட பேர் உபாயம் இல்லை என
சொற் கொண்டும் நூல் கொண்டும் சீர் உலகில் எங்களுக்குச் சிறப்பான நல்லுரைகள் சாற்றிடுவார் அன்புடனே –
————————————————————————————-
60-ம்ருது ஹ்ருதயே தயே ம்ருதித காம ஹிதே மஹிதே
த்ருத விபுதே புதேஷூ விதத ஆத்ம துரே மதுரே
வ்ருஷகிரி சார்வ பௌவம தயிதே மயி தே மஹதீம்
பவுக நிதே நிதேஹி பவமூலஹாரம் லஹரீம் –
அகலகில்லேன் இறையும்-போலேவே இந்த 60 ஸ்லோகத்தில்
கருணை அலை தம் மீது வீசும் படி சரணம் புகுகிறார் –
மென்மையான இதயத்தையும், தேவர்களைக் காக்கும் தன்மையையும்,
ஆசையை அடக்கியவர்களுக்கு நன்மை அளிப்பவளும், உலகைக் காக்கும் பொறுப்பை ஆசார்யர்களிடம் விட்டவளும்,
ஸ்ரீநிவாசனுக்குப் பிரியமானவளும், அனைத்து மங்களங்களுக்கும் இடமாக உள்ளவளும்,
இனிமையானவள் என்ற போற்றப்படுபவளும் ஆகிய தயாதேவியே!
இந்த ஸம்ஸாரம் என்ற துயரத்தை அடியோடு நீக்க உனது கருணை என்னும் அலையை என் மீது வீசுவாயாக
(ஸ்ரீனிவாஸன், தயையே வடிவாக உள்ளவன். ஆக அவனிடத்தில் சரணம் புகுவதை மறைமுகமாக
அவனுடைய தயை இடத்தில் சரணம் புகுவதாகக் கூறினார்).
இந்தச் ச்லோகத்தின் மூலம் சரணாகதியை ஸ்வாமி தேசிகன் கூறினார்.
திருவாய்மொழி 6-10ல் இறுதிப் பாசுரத்தில் (6-10-10) ஸ்வாமி நம்மாழ்வார் ஸ்ரீநிவாஸனிடம் –அகலகில்லேன் இறையும் – என்று தொடங்கி – புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –
என்று நிறைவு செய்து, அவனிடம் சரணாகதி செய்தார்.
அவரைப் போன்றே இவரும் அதே 6-10ல் சரணாகதி செய்தது குறிப்பிடத்தக்கது.
இளகியதே உன்னுருவம் ஏற்றமிகு அறிவோரை இன்னலறக் காப்பவளே இச்சை தனை வென்றிட்ட
உளத்தோரை நலம் தந்து ஊக்குவிக்கும் தயா தேவீ உயர்ந்தவராம் குருக்களிடம் உன் பொறுப்பை ஒப்படைத்து
மலையாம் திருவேங்கடத்தே மன்னிடம் எம் பிரான் தன்னின் மனத்திற்கு இனியவளாய் மங்களத்தின் உறைவிடமாய்
விளங்குபவளே பிறப்பு இறப்பாம் வினைகள் எனும் பெரு மரத்தை வேர் அறுக்கும் பேர் அலையை வீசிடுவாய் என் மீதே –
——————————————————————–
61-அகூபாரை ஏக உதக சமய வைதண்டிக ஜவை
அநிர்வாப்யாம் ஷிப்ரம் ஷபயிதும் அவித்யாக்க்ய படபாம்
க்ருபே த்வம் தத்தாக்ருத் ப்ரதிம வ்ருஷ ப்ருத்வீதர பதி
ஸ்வரூப தவை குண்ய த்வி குண நிஜ பிந்து பிரபவசி
பிரளயத்தில் வடவாமுகாக்னி மூலம் அழியாத அவித்யாதிகளை
ஷணப் பொழுதில் அழித்து சரணா கதர்களை கரை ஏற்று அருளுகிறாய்-
தயாதேவியே! மிகவும் பெரியவனான ஸ்ரீநிவாஸனின் ஸ்வரூபத்தை விட நீ நான்கு மடங்கு பெரியவளாக உள்ளாய்.
ப்ரளயத்தின் போது, விதண்டாவாதம் செய்பவர்களின் பேச்சுக்கு ஒப்பாக எழும்பும் பேரலைகளால்
அணைக்க இயலாத அவித்யை என்னும் வடவாமுகாக்நியை நீ அணைக்கிறாய்.
சரணாகதியை அனுஷ்டித்த பின்னர் முக்தர்கள் போன்று தோஷங்கள் அற்றவராக வேண்டும்.
அவித்யை என்னும் அஜ்ஞானம் தொலைவது சரணாகதியின் பலனாகிய மோக்ஷமாகிறது.
அவித்யை என்று கர்மமும் அழைக்கப்படும். இந்தக் கர்மம் என்பது ப்ரளய காலத்திலும் நீங்குவதில்லை.
ப்ரளய காலத்தில் கிளம்பும் வடவாமுகாக்நி, அனைத்து உலகங்களையும் தகிக்கச் செய்வதாகும்.
அந்த அக்னியை அணைக்கும் வலிமை கொண்ட ஸமுத்திரங்கள் கூட, கர்மங்களை ஏதும் செய்ய இயலாது.
அப்படிப்பட்ட அலைகளின் செயல்கள், கர்மத்தைப் பொறுத்த வரையில், வெட்டிப் பேச்சு பேசுபவர்களின் வாதம் போன்றதாகும் என்றார்.
ஆனால், தயாதேவியோ, தனது ஒரு துளியால் கர்மத்தை அழித்துவிடுகிறாள்.
பெரிதான திருமலையின் பதியான பெருமானின் புனிதாத்மா தனைக் காட்டில் ஈரிரண்டு மடங்காகப்
பெரிதான கருணை யுன் தன் ஒரு திவலை ஆகுமென புகழுடையாய் வீண் வாதம் புரிபவரின் வேகத்தின்
உருக் கொண்டு எங்கும் நிறை ஊழி தனின் கடலாலும் ஒழித்திடவே இயலாத என் வினையின் தொகுப்பான
நெருப்பினையும் விரைவினிலே சாம்பலாக்கும் திறனுடைத்துன் திவலை ஒன்றே என்பதனால் நீ என்னைக் காப்பாயே –
———————————————————————
62-விவித்சா வேதாளீ விகம பரிசுத்தே அபி ஹ்ருதயே
படு ப்ரத்யாஹார பரப்ருதி புடபாக ப்ரசகிதா
நமந்த த்வாம் நாராயண சிகிரி கூடஸ்த்த கருணே
நிருத்த த்வத் த்ரோஹா ந்ருபதி ஸூ தா நீதிம் ந ஜஹதி
வேதாளீ -பெண் பேய் ஆசை போலே -மனசை கலக்கி -உயிரையும் அழிக்கும்-புலன் அடக்கம் பக்தி யோக அங்கம் –
சரணாகதர் தவறு செய்தால் -ராஜகுமார நியாயம் படி சிறிய தண்டனை மட்டுமே கொடுத்து திருத்திப் பணி கொள்கிறாள் –
தயா தேவியே! அறிஞர்கள் தங்கள் உள்ளத்தில் உள்ள ஆசை என்னும் பேயை ஒழித்து, தூய்மை அடைந்து விடுகின்றனர்.
ஆயினும் புலன்களை அடக்குதல் போன்ற கடினமான செயல்களுக்கு அஞ்சியபடி உன்னைச் சரணம் புகுகின்றனர்.
அதன் பின்னர் உனக்குத் துரோகம் செய்யாமல் அரசகுமார நீதியைக் கடைபிடித்தபடி உள்ளனர்.
இங்கு வேதாளி என்பது பெண் பேய் ஆகும். அதற்குக் கேட்டவற்றை கொடுத்தபடி இருக்க வேண்டும்.
இல்லை என்றால், ஆளை விழுங்கி விடும். இதனை ஆசையுடன் ஒப்பிடுகிறார்.
ஆசை என்பது மனதை கலக்கி, உயிரையும் எடுத்து விடும் இயல்புடையது.
இவ்விதம் உள்ள ஆசையை அழித்துவிட்டாலும், பக்தி யோகம் என்பது கடினமாகவே உள்ளது.
பக்தி யோகத்திற்குப் புலன் அடக்கம், ப்ராணாயாமம் போன்ற கடினமான செயல்கள் அங்கமாக உள்ளன.
இதனைக் கடைபிடிப்பதில் உள்ள சிக்கல்களை அறிந்தவர்கள், உன்னைச் சரணம் அடைகின்றனர்.
இவ்விதம் சரணம் அடைந்த பின்னர் அவர்கள் தவறு செய்யாமல் உள்ளனர்.
ஒரு அரசனின் மகன் அரசனின் ஆணையை மீறி நடந்தால், அரசன் தனது மகனாக உள்ளதால்
சிறு தண்டனை மட்டுமே அளிப்பான். இதனை அரசகுமார ந்யாயம் என்பர்.
இது போன்று தயாதேவியும், தன்னிடம் சரணம் புகுந்தவர்கள் தவறு செய்தால் சிறு தண்டனை மட்டுமே அளிக்கிறாள்.
பல்வேறு ஆசைகளாம் பெண் பேய்கள் தமை யெல்லாம் பூண்டோடு ஒழித்ததனால் பரிசுத்தமாகி யுள்ள
நல் மனத்தைக் கொண்டவரும் நலிகின்ற புலன்கள் தமை நன்கடத்தல் முதலியதால் புடமிடவே மிகவச்சம்
உள்ளவராய் திருமலையின் உச்சி தனை இல்லமென உற்றிருக்கும் கருணை யுன் தன்
நல்லடியார் தெரியாமல் செய்துவிடும் தவறுக்கு நிருபகமன் தனையொத்த நீதியினால் உய்ந்திடுவார் –
————————————————
63-அநந்ய அதீன சத் பவதி பரதந்திர ப்ரணமதாம்
க்ருபே சர்வே த்ரஷ்டா ந கணயதி தேஷாம் அபக்ருதிம்
பதி த்வத் பாராத்த்யம் ப்ரதயதி வ்ருஷ ஷமாதர பதி
வ்யவஸ்த்தாம் வையாத்யாத் இதி விகடயந்தீ விஹரசி
ஸ்வ தந்த்ரனாக இருந்தாலும் அடியார்க்கு பரதந்த்ரனாக இருப்பதையே விரும்பும் அவனது சௌலப்யத்தை ஸ்துதிக்கிறார்-
தயாதேவியே! திருவேங்கடத்தின் சக்ரவர்த்தியாகிய ஸ்ரீநிவாஸன் யாருக்கும் வசப்பட்டவன் அல்லன்.
இவ்விதம் சுதந்திரமான அவன் செய்வது என்ன? தன்னை வணங்குபவர்கள், தன்னிடம் சரணம் அடைந்தவர்கள்
இட்டதே தனக்குச் சட்டம் என்று அவர்களிடம் வசப்பட்டு நிற்கிறான்.
அனைத்தையும் எப்போதும் காண்பவனாக உள்ளபோதிலும், தன்னிடம் சரணம் புகுந்தவர்களின் குற்றங்களை
அவன் கணக்கில் கொள்ளுவதில்லை. உனக்கு அவன் கணவனாக இருந்தபோதிலும்,
உனக்கு அடிமை என்றே தன்னைக் காண்பித்துக் கொள்கிறான்.
இப்படியாக நீ வரம்பை மீறியபடி, அவனிடம் தைரியமாக விளையாடுகிறாய் போலும்.
அவன் அனைவருக்கும் எஜமானனாக உள்ளவன், சுதந்திரன் என்றே அனைவரும் போற்றுகின்றனர்.
ஆனால் நீ உனது செயலால் அவனைச் சரணம் அடைந்தவர்களிடம், அவன் கீழ்ப்படிந்து நடக்கும்படிச் செய்கிறாய்.
க்ருஷ்ண கர்ணாம்ருதத்தில் லீலா சுகர் கூறியது போன்று தேர் ஓட்டுவது, குதிரைகளை கழுவுவது, தூது செல்வது
போன்ற செயல்களை செய்யும்படி நீ செய்து விடுகிறாய்.
அத்துடன் நீ நீற்பதில்லை, அவன் அனைத்தையும் காண்பவனாக உள்ள போதிலும் தனது அடியார்களின் குற்றங்களைப்
பார்க்காமல் இருக்கும்படிச் செய்துவிடுகிறாய். அப்படியே பார்த்தாலும், அவைகளைக் காணாதது போன்று
அவன் தனது கண்களை மூடிக்கொள்கிறான். அனைத்தையும் அறிந்த அவனை ஏதும் அறியாதவன் போன்று மாற்றி விடுகிறாய்.
அவன் அனைத்திற்கும் சேஷியாக, யஜமானன் போல் இருந்தாலும் உனக்கு அடிமையாகவே உள்ளான்.
இங்கு திருவேங்கடமுடையானின் மேன்மையைத் தாழ்த்திக் கூறுவது போல் இருந்தாலும், அவனது ஸௌலப்யத்தைத் துதிக்கிறார்.
அந்நியருக்கு வசப்படாத அத்திருமலை நாயகனே அவனடியில் சரண் புகுந்த அடியவர்க்கே ஆட் படுவான்
ஒன்றிலாமல் அனைத்தையுமே ஒரே காலம் அறிந்திடுவான் உற்ற தமர் பிழைகளையோ ஒருக்காலும் அறியாதான்
உன்னுடைய கணவனேலும் உனக்கு அடிமை எனும் தன்மை உலகறிய பறை சாற்றி உகந்திடுவான் தயா தேவீ
மன்னு மறை கூறுகின்ற வரைமுறையைக் குலைத்தவளாய் விளையாடும் உன்னுடைய வீரியத்தைச் சொலப் போமோ
————————————————————————————————————————
64-அபாம் பத்யு சத்ரூன் அசஹன முனே தர்ம நிகளம்
க்ருபே காகச்ய ஏகம் ஹிதம் இதி ஹிநஸ்தி ஸ்ம நயநம்
விலீன ஸ்வா தந்த்ரிய வ்ருஷகிரி பதி த்வத் விஹ்ருதிபி
திசதி ஏவம் தேவ ஜனித ஸூ கதிம் தண்டன கதிம்
தண்டித்தாலும் அது நன்மையே பயக்கும் -சமுத்திர ராஜன் –அபாம் பதி -புண்ய நதிகளின் கணவன் –பெருமாள் கோபம் கண்டு
கங்கை யமுனை மனைவிகள் சூழ வந்தான் என்பதால் இந்த பத பிரயோகம் –
பரசுராமன் –அசஹன முனி -புண்ணியங்கள் மீது பானம் விட்டு மோஷ தடைகளை நீக்கி அருளினார் பெருமாள் –
காகாசூரன் -பிரஹ்மாஸ்திரம் வீணாகக் கூடாது என்பதால் ஒரு கண்ணை மட்டும் பறித்தான் –
தயாதேவியே! திருவேங்கடமுடையான் உனது லீலைகள் காரணமாகத்
தனது சுதந்திரத்தை இழந்து உன்னிடம் வசப்பட்டு நிற்கிறான்.
இதனால் அவன் செய்தது – ஸமுத்திரராஜனின் பகைவர்களை அழித்தான்;
இராமனின் பெருமையை பொறுத்துக் கொள்ள முடியாத பரசுராமனின் புண்ணியம் என்ற விலங்கை அழித்தான்;
காகாசுரனின் ஒரு கண்ணை நீக்குவது அவனுக்கு நன்மை என்று கருதி அழித்தான்.
இப்படியாக தண்டனை வழங்கும் செயலையும் நன்மை விளையும்படிச் செய்கிறான்.
கடந்த ச்லோகத்தில் தயாதேவியின் செயல்களால் ஸ்ரீநிவாஸன் தண்டிப்பது இல்லை என்று கூறினார்.
இந்தச் ச்லோகத்தில் அவன் அப்படியே தண்டித்தாலும் அந்த தண்டனை நன்மை அளிக்கும்படியாக உள்ளது என்று கூறுகிறார்.
இங்கு இராமாயணத்தில் இருந்து மூன்று உதாரணங்களைக் கூறுகிறார்.
கடலைக் கடப்பதற்காக வெகு நேரம் காத்து இருந்த ராமன், ஸமுத்திரராஜன் வராத காரணத்தால் கோபத்துடன்,
“இந்தச் ஸ்முத்திரத்தையே வற்றச் செய்து விடுகிறேன். வானரங்கள் அதன் பின்னர் மண் மீதே நடந்து போகலாம்”,
என்று கூறி அம்பைத் தொடுத்தான். அந்த நேரத்தில் பதறியபடி ஓடிவந்த ஸமுத்திரராஜனைக் கண்டு சாந்தமானான்.
ஆனால் தொடுத்த ராமபாணம் வீணாகி விடக்கூடாது என்பதால் அந்த அம்பை, ஸமுத்திரராஜனின் பகைவர்கள் மீது ஏவினான்.
இங்கு ஸமுத்திரராஜனை அபாம் பதி: என்றதைக் காண்க.
இதன் பொருள் – புண்ணிய நதியின் கணவன் என்பதாகும்.
இவ்விதம் ஸ்வாமி தேசிகன் கூறுவதற்குக் காரணம் உள்ளது. கோபத்துடன் நின்ற ராமனிடம் ஓடி வரும்போது
ஸமுத்திரராஜன தனியாக வராமல், கங்கை – யமுனை போன்ற தனது மனைவிகள் சூழ வந்ததாக வால்மீகீ கூறுகிறார்.
இதனை சுட்டிக் காட்டவே ஸ்வாமி இந்தப் பதத்தைச் சாமர்த்தியமாக அமைத்தார்.
இராமன் சீதையை மணம் முடித்து வரும்போது எதிரில் வந்த பரசுராமன் அவனை எதிர்த்தார்.
அப்போது இராமன் தனது வில்லை முறித்தபோது, அதனை எங்கு விடுவது என்று பரசுராமனையே கேட்க,
அவரது வேண்டுகோளின்படி அவரது புண்ணியங்கள் மீதே தொடுத்தான்.
இதன் மூலம் பரசுராமன் மோக்ஷம் பெறத் தடையாக இருந்த அவரது புண்ணியங்கள் என்ற விலங்கு நீங்கியது.
இங்கு பரசுராமனை அஸஹந முநி – பொறுமை இல்லாத முனிவர் – என்று முரணாகப் பதங்கள் இட்டு குறிப்பிட்ட சாமர்த்தியம் காண்க.
அடுத்து சீதையின் ஸ்தனங்களைக் கொத்திய காகாசுரனைப் பற்றிக் கூறுகிறார்.
இதனைக் கண்ட இராமன் ஒரு புல்லை எடுத்து, அதனையே ப்ரஹ்மாஸ்திரமாக ஏவினான்.
எங்கும் சுற்றிய காகம், இராமனின் திருவடிகளிலேயே சரணம் என்று புகுந்தது.
ஆனால் தனது பாணம் வீணாகக் கூடாது என்பதற்காக, அதன் ஒரு கண்ணை மட்டும் பறித்தான்.
திருவேங்கட நாதன் தன் ஸ்வதந்த்ரத்தை இழந்தவனாய்த் தண்டனையும் நர் பயனாய்ச் செய்வதும் உன் லீலையாலே
பெரும் கடலாம் வேந்தன் தன் பகைவரையே அழித்ததுவும் பொறுமையிலா பரசுராமன் புண்ணியத்தை இழந்ததுவும்
ஒரு காகம் தவறு இழைக்க ஒரு கண்ணை அழித்து அதின் உயிர் பிழைக்கச் செய்ததுவும் ஒரு ராம அவதாரத்தில்
கருணை எனும் தேவி யுன் தன் கட்டளையால் கட்டுண்டான் கவின் மிகுந்த திருமலையில் குடியிருக்கும் பெருமானே –
————————————————————————————-
65-நிஷாதா நாம் நேதா கபிகுலபதி காபி சபரி
குசேல குப்ஜா ஸா வ்ரஜ யுவதய மால்ய க்ருத் இதி
அமீஷாம் நிம் நத்வம் வ்ருஷகிரி பதே உன்னதிம் அபி
ப்ரபூதை ஸ்ரோதேபி பிரசபம் அனுகம்பே சமயசி
குகன் சுக்ரீவன் சபரி குசேலன் கூனி கோபிகள் மாலாகாரர் -போன்றாரையும்
உனது கருணை வெள்ளம் ஸ்ரீ நிவாசனிடம் ஒன்ற வைத்ததே
தயாதேவியே! வேடர்களின் தலைவனான குகன், குரங்குகளின் அரசனான சுக்ரீவன், காட்டுப் பெண்ணான சபரி,
கிழிந்த உடை அணிந்த குசேலன், கூனியான குப்ஜை, இடைப்பெண்களான கோபிகைகள், மாலை தொடுப்பவன் –
இப்படியாகப் பலரது தாழ்வையும், ஸ்ரீநிவாஸனின் உயர்வையும் உன்னுடைய கருணை என்ற வெள்ளம் மூலமாக ஒன்றாக்குகிறாய்.
பகவானின் மிகவும் உயர்ந்த குணம் ஸௌசீல்யம் என்பதாகும். இது உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற பேதம் பாராமல்
அனைவருடனும் கலந்து பழகும் தன்மையாகும். இந்தச் ச்லோகம் மூலம் தயாதேவி பகவானின்
இந்தக் குணம் வெளிப்படும்படிச் செய்வதை உணர்த்துகிறார்.
இங்கு இராமாயணத்தில் இருந்து மூன்று உதாரணங்களும், பாகவதத்திலிருந்து நான்கு உதாரணங்களும் கூறப்படுகின்றன.
முதலாவதாக கூறப்பட்டவன் குகன் ஆவான். இவன் இராமனால் – எனது தோழன் இவன் – எனப்பட்டவன் ஆவான்.
அடுத்து சுக்ரீவன் கூறப்பட்டான். இராமன் சுக்ரீவனிடம், “உனக்கு ஒரு ஆபத்து வரும் என்றால், சீதை என்னிடம் வந்து என்ன பயன்?”, என்றான்.
அடுத்துக் கூறப்பட்டவள் சபரி ஆவாள். இவள், தான் உண்ட பழம் சுவையாக இருந்தால் மட்டுமே இராமனுக்கு அளித்தாள். அதனையும் இராமன் ஏற்றான்.
இராமன் தொடக்கத்தில் இருந்தே மனிதனாகத் தன்னை காட்டிக் கொண்டதால் அவனிடம் இந்த சீல குணம் வெளிப்படுவது வியப்பில்லை.
ஆனால் கண்ணன் பிறந்தது, வளர்ந்தது போன்ற ஒவ்வொரு நிலையிலும் தன்னைப் பரம்பொருளாகவே வெளிப்படுத்தினான்.
அவன் பலரிடமும் இதே சீல குணத்தை காண்பித்தான். அவன் (கண்ணன்) மிக உயர்ந்த நிலையில் உள்ளபோது,
தன்னை நாடி வந்த ஏழையான குசேலனுக்கு அளித்த கௌரவத்தில் அவன் சீலம் வெளிப்பட்டது.
குப்ஜை என்ற கூனிப்பெண் கம்சனுக்குச் சந்தனம் அரைத்து எடுத்துச் செல்லும் போது,
எதிரில் வந்த கண்ணனுக்கு அந்தச் சந்தனத்தை பூசினாள். அவனும் உடனே அவளது ஊனத்தை நேர்படுத்தினான்.
அடுத்து ஏதும் அறியாத, ஆண்டாள் கூறியது போல் – அறிவு ஒன்றும் இல்லா ஆய்குலம் – என்னும்
இடையர்களுடன் சரிசமமாகக் கலந்து பழகினான்.
அடுத்து மதுராவில் மாலை தொடுத்துப் பிழைப்பு நடத்திய மாலை கட்டும் ஒருவன் வீட்டுக்குச் சென்று,
அவனைக் கௌரவம் செய்தான். இவை அனைத்தும் தயாதேவியின் செயல்களே ஆகும் என்றார்.
வேடரினக் குகனோடு தோழமை தான் கொண்டதுவும் வாநரர்க்குத் தலைவன் தனை வரித்திடவும் நண்பன் என வேடர் குலச் சபரி தரும் இனிய கனி சுவைத்திடவும் வறியவனாம் குசேலனுடன் வேறிலாது கலந்திடவும்
ஆட்டிடையர் பெண்களுடன் அகன்றிடாது ஒன்றிடவும் எள்ளல் யுற்ற கூனி தன்னை இளமையாக்கி மாலைகளைத்
தொடுப்போனுக்கு அருளிடவும் செய்ததனால் தாழ்வருடன் திருமாலைச் சமமாக்கும் திறனுடையாய் தயா தேவீ –
———————————————————————
66-த்வயா த்ருஷ்ட துஷ்டிம் பஜதி பரமேஷ்டி நிஜபதே
வஹன் மூர்த்தி அஷ்டௌ விஹரதி ம்ருடா நீ பரிப்ருட
பிபர்த்தி ஸ்வா ராஜ்யம் வ்ருஷ சிகரி ஸ்ருங்காரி கருணே
கநாசீர தேவ அஸூர சமர நாசீர ஸூ பட
உனது அருளாலே இந்திர சிவ ப்ரஹ்மாதிகள் தங்கள் தங்கள் பதவி பெற்றார்கள் –
அஷ்ட மூர்த்தி -ருத்ரன் -பஞ்ச பூத ம் -சந்த்ர ஸூர்ய -யாகம் பண்ணும் எஜமான் இவர்கள்
எனது அதீனமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துப் பெற்றான்
மஹா தேவன் பசுபதி என்றும் பட்டம் பெற்றான்
இந்திரன் மஹேந்த்ரன் அதிராஜன் ஸ்வாராட்யன் -பட்டம்
த்வயா த்ருஷ்ட-தயா தேவி கடாக்ஷ லேசத்தாலே இவர்கள் பெற்ற பிரசாதங்கள்
திருவேங்கடமலைக்கு ஆபரணமாக உள்ள ஸ்ரீநிவாஸனின் தயாதேவியே!
மிக உயர்ந்த இடத்தில் உள்ள ப்ரம்மன் உனது பார்வையால் கடாக்ஷம் பெற்ற தன்னுடைய இருப்பிடத்தில் மகிழ்வுடன் உள்ளான்.
உன்னுடைய பார்வையைப் பெற்ற பார்வதியின் நாயகனான சிவன் எட்டு மூர்த்திகளுடன் சுகமாக உள்ளான்.
உனது பார்வை பெற்றவனும், தேவ அசுரர்களின் யுத்தத்தில் வென்றவனும் ஆகிய இந்திரன் தேவலோகத்தை ஆள்கிறான்.
இந்தச் ச்லோகத்தின் மூலம் ப்ரம்மன், ருத்ரன் மற்றும் இந்திரன் ஆகியோர்
தங்களது அதிகாரப் பதவியில் இருப்பது தயாதேவியின் காரணமாகவே என்றார்.
மலை வேங்கடச் சிங்காரன் மனம் கலந்த தயை யுன் தன் மலர்க்கண்கள் வீச்சு தனால் மலர் மகனாம் ப்ரம்மனுமே
உலகுகளின் தலைவன் எனும் உயர்ந்ததுவாம் இடம் கொண்டு உளமாற இன்புறுவான் உருத்திரனாம் பெயர் கொண்டு
மலைமகள் நாதனுமே மூர்த்திகளே எட்டெடுத்து விளையாடிக் களிக்கின்றான் வாசவனோ தேவர்களின்
தலைவனின் அரக்கருடன் சமர் தொடுத்து வென்றி கொண்டு சொர்க்கத்தில் பேரரசாம் சிறப்புதனைப் பெற்றனனே –
————————————————————————
67-தயே துக்த உதன்வத் வ்யதியுத ஸூதா சிந்து நயத
த்வத ஆஸ்லேஷாத் நித்யம் ஜனித ம்ருத சஞ்ஜிவன தசா
ஸ்வ தந்தே தாந்தேப்ய சுருதி வதன கர்ப்பூர குளிகா
விஷூண் வந்த சித்தம் வ்ருஷ சிகரி விஸ்வம்பர குணா —
திருப் பாற் கடலில் அமிர்தம் கலந்தால் போலேயும் –
வேதங்களின் வாயில் கர்ப்பூர குளிகைகள் போலேயும் –
தயா தேவி ஸ்ரீ நிவாசன் சேர்த்தி புலன்களை வென்ற அடியார்களுக்கு இன்பம் பயக்கும் –
திருமலையில் நின்றபடி இந்த உலகத்தைத் தாங்கி நிற்கும் ஸ்ரீநிவாஸனுடைய திருக் கல்யாண குணங்களில்
உன்னுடைய சேர்க்கையும் தெரிகிறது. இதனால் நடப்பது என்ன?
திருபாற்கடலுடன் அமிர்தக் கடல் கலந்தால், எவ்விதம் இறந்தவர்களையும் பிழைக்க வைக்கும் சக்தி உண்டாகிறதோ
அது போன்று – வேதங்களின் வாயில் கர்ப்பூரக் குளிகைகள் போன்றும், இந்த்ரியங்களை வென்றவர்களுக்கு ரசிக்கும்படியும் உள்ளன.
கடந்த ச்லோகத்தில் ப்ரம்மன், ருத்ரன் மற்றும் இந்திரன் ஆகியோர் சிறப்பது தயாதேவியால் மட்டுமே என்றார்.
இந்தச் ச்லோகத்தில், ஸ்ரீநிவாஸனின் குணங்கள் சிறப்பதும் இவளாலேயே என்றார்.
தயாதேவி இல்லை என்றால், ஸ்ரீநிவாஸனின் குணங்களும் குற்றங்களாகிவிடும் என்று 15-ஆவது ச்லோகத்தில் கூறினார்.
இங்கு தயாதேவியின் பெருமைகளை பல விதமாகக் கூறுகிறார். அவையாவன:
1. ஸ்ரீநிவாஸனின் குணங்களுடன் இவள் சேரும்போது, திருப்பாற்கடலுடன் அமிர்தம் சேர்வது போன்றுள்ளது என்றார்.
அமிர்தம் எவ்வாறு இறந்தவர்களையும் பிழைக்க வைக்குமோ அதுபோன்று, தயாதேவி மூலமாக அறிவிழந்த பலரும் ஞானம் பெறுகின்றனர்.
2. கர்ப்பூர உருண்டைகளை வாயில் அடக்கிக் கொண்டால் நறுமணம் வீசும். இது போன்று தயாதேவி வேதங்களில்
புகுந்து அவை ஸ்ரீநிவாஸனின் குணங்களைப் போற்றுவதன் மூலம் மேலும் மணம் பெறச் செய்கிறாள்.
3. புலன்களை வென்றவர்களுக்கு தயாதேவி மிகுதியான இன்பம் அளிக்கிறாள்.
உலகுகளின் காவலனாம் உயர்ந்த திரு வேங்கடனின் ஒப்பற்றத் திருக் குணங்கள் கருணை எனும் உந்தனுடன்
கலந்ததனால் அமுதமுடன் கலந்த திருப் பாற் கடல் போல் கவினுறுமே இறை யுணர்வே இன்மையினால் இறந்தவரின்
நிலை கொண்ட மனிதருக்கு நல் மருந்தாய் உயிரூட்டும் நான்மறைகள் திரு வாய்க்கு நறு மணமாய்க் கற்பூரக்
குளிகைகள் போல் விளங்கித் தமை வுரைப்பவரை உள்ளூருக்கும் கொடும் புலனை வென்றவருக்குக் காலமெல்லாம் சுவை தருமே –
————————————————————————
68-ஜகத் ஜன்ம ஸ்த்தேம பிரளய ரசநா கேளி ரஸிக
விமுக்தி ஏக த்வாரம் விகடித கவாடம் பிரணயி நாம்
இதி த்வயி ஆயத்தம் த்விதயம் உபதீக்ருதய கருணே
விசுத்தா நாம் வாசாம் வ்ருஷ சிகரி நாத ஸ்துதி பதம்
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் மோஷ ப்ரதம் எல்லாம் தனது லீலையே -கேளி ரசிக பிரயோகங்கள் –
தனது திருவடிகளை அடைந்தார் மேல் நண்பன் காதலன் போலே –
பிரணயிநாம் -பத பிரயோகம் -இவர்களுக்கு தானே அளிக்கும் பரிசு மோஷம்
தயாதேவியே! இந்த உலகில் உள்ள அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கின்ற செயல்கள்
என்னும் விளையாட்டின் மீது மிகுந்த சுவை சொண்டவனாக உள்ளான்;
தன் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்தவர்களுக்கு மோக்ஷம் என்ற கதவைத் திறந்து அதன் உள்ளே செல்லும் வழியாக உள்ளான்.
இப்படிப்பட்ட இரண்டு தன்மைகளும் உன் வசப்பட்டு இருக்கின்றன.
ஸ்ரீநிவாஸன் இந்த இரண்டு தன்மைகளையும் உன்னிடமிருந்து கைக்கொண்டதன் காரணமாக
வேத வரிகளால் போற்றப்படக் கூடியவனாக உள்ளான்.
வேதங்கள் இவனைத் தவிர வேறு யாரையும் புகழ்வதில்லை. இவனை அவை இரண்டு காரணங்களுக்காக மிகவும் புகழ்கின்றன.
ஒன்று – இவன் படைத்து, காத்து, அழிக்கவும் செய்கிறான்; இரண்டு – மோக்ஷம் பெறத் தகுதி உள்ள ஜீவனுக்கு
ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளித்து, மோக்ஷம் அளிக்கிறான்.
இங்கு கேளி என்ற பதமும், ரஸிக என்ற பதமும் காண்க. இவற்றின் மூலம் இந்தச் செயல்களை
ஸ்ரீநிவாஸன் யாருடைய கட்டளைக்கு இணங்கவும் செயயவில்லை என்பதும்,
தன்னுடைய விளையாட்டிற்காகவே செய்கிறான் என்றும் விளங்கும்.
ப்ரணயிநாம் என்ற பதம் காண்க. தன்னிடம் சரணம் அடைந்தவர்களை வெறும் சரணாகதர்கள் என்று அவன் நினைப்பதில்லை.
தன்னை விரும்பும் நண்பனாகவும், தனது காதலனாகவும் அவர்களைப் பார்க்கிறான்.
இப்படிப்பட்டவர்களுக்கு அவன் மோக்ஷம் என்ற பரிசை அளிக்கிறான்.
இங்கு மோக்ஷம் எனபது அவனாகவே நமக்கு அளிக்கும் பரிசு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
உலகு தன்னைத் தோற்றிடவும் இருத்திடவும் அழித்திடவும் ஒழிவிலாத விளையாட்டில் ஒழியாத சுவையுடைத்தும்
அளவிலாது தன் கழலை அடி பணியும் அன்புடையோர் அணுகிடவே முக்தி எனும் உயர் பதத்தின் வாயில் என்றும்
நிலையிரண்டும் கருணை யுன்னால் தன்னிடத்தே பெற்றதனால் திரு வேங்கட மலை யுறையும் ஸ்ரீ நிவாஸன் தூய்மையுடன்
விளங்குகின்ற மும்மறை தம் வாக்குகளின் இடையறாத வாழ்த்துக்கு உற்றவனாய் விளங்குவதும் மிகத் தகுமே
——————————————————–
69-கலி ஷோப உன்மீலத் ஷிதி கலுஷ கூலங்ககஷ ஜவை
அனுச்சேதை ஏதை அவட தட வைஷம்ய ரஹிதை
பிரவாஹை தே பத்மா சஹசர பரிஷ்காரிணி க்ருபே
விகல்ப்ப்யந்தே அநல்பா வ்ருஷ சிகரிண நிரஜ்ஜர கணா
பத்மா சஹசர பரிஷ்காரிணி-தயா தேவி மிதுனத்துக்கும் திரு ஆபரணம் போலே என்றவாறு -திருமலை அருவி போலே இவளது கருணா பிரவாஹம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் வாசி இன்றி பொங்கி வருகிறது-
பெரியபிராட்டியின் நாயகனான ஸ்ரீநிவாஸனுக்கு ஆபரணமாக விளங்கும் தயாதேவியே!
இந்த உலகில் கலியின் குழப்பம் காரணமாகப் பாவங்கள் வேகமாக வளர்கின்றன.
அந்தப் பாவங்கள் என்னும் கரையை உடைக்கும் வேகத்தை கொண்டதும், ஓய்வே இல்லாததும், மேடுபள்ளம்
என்ற வேறுபாடு காணாததும் ஆகிய உன்னுடைய கருணை என்னும் ப்ரவாஹம் எப்படி உள்ளது என்றால் –
திருவேங்கடமலையில் பாய்கின்ற மிகப் பெரிய அருவிகளில் உள்ள வெள்ளம் போன்று உள்ளது.
திருமலையில் உள்ள அருவிகள் கரை புரண்டு, மேடுபள்ளம் காணாமல் ஓடுவதாகும்.
அவ்விதம் அவை ஓடும்போது, அனைத்து அசுத்தங்களையும் நீக்கியபடி ஓடுகின்றன.
இதே போன்று தயாதேவியின் ப்ரவாஹங்கள் உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரின் பாவங்களை நீக்கியபடி ஓடுகிறது.
இங்கு தயாதேவியை – பத்மா ஸஹசர பரிஷ்காரிணி – என்று கூறியதைக் காண்க.
இதன் மூலம் தயாதேவி, ஸ்ரீநிவாஸனுக்கும் பத்மாவதிக்கும் ஆபரணம் போன்று உள்ளாள் என்று கூறினார்.
அலர் மகளின் கேள்வனுக்கு அழகூட்டும் தயா தேவீ அலை பாயும் உன் வெள்ளம் அன்னவையாய் அமைந்தனவே
மலை வேங்கட அருவிகளே எனப் புகல்வார் பெரியோரே மலிகின்ற கலிகாலப் பாபங்களின் கரை யுடைக்கும்
வலி மிக்க வேகமுடன் விடுதலிலா பாய்ச்சலினால் மேடு பள்ளம் வாசியற வினை யனைத்தும் ஒழிக்கின்ற
நிலை தன்னால் வேங்கடத்தின் நெடிய பெரும் அருவிகளும் நின் தனது வெள்ளங்களும் நிகர் என்றே கருதுவரே –
—————————————————————————–
70-கிலம் சேதோ வ்ருத்தே கிம் இதம் இதி விச்மேர புவனம்
க்ருபே சிம்ஹ ஷ்மாப்ருத் க்ருதமுக சமத்கார கரணம்
பரந்யாச சந்த பிரபல வ்ருஜின ப்ராப்ருத ப்ருதாம்
பிரதி பிரஸ்தானம் தே சுருதி நகர ஸ்ருங்காடக ஜுஷூ
தர்மம் அர்த்தம் காமம் மோஷம் -நான்கு புருஷார்த்தங்களையும் அளித்தாலும்
மோஷார்த்திகள்-சரணா கதி வ்யாஜ்யத்தால் கர்மங்கள் தொலைக்கப் பட்டு பேற்றைப் பெறுவதைக் கண்டு உலகம் வியக்கிறது
ஸ்ரீ நிவாசனை வித்வான் என்றும் திருமலையை சிங்க மலை என்றும் பத பிரயோகம் –
தயாதேவியே! வேதங்கள் என்னும் நகரத்தின் நான்கு வழிகளும் கூடும் பாதையில் நீ நிற்கின்றாய்.
அங்கு பரந்யாசம் என்பதன் மூலம் மறைக்கப்பட்ட பாவங்களை சுமந்து கொண்டு வருபவர்களை நீ பார்க்கிறாய்.
இவ்விதமான உபகாரத்தை கொண்டு வரும் அவர்களை எதிர்நோக்கிச் செல்கிறாய்.
இதனைக் காண்பவனும், இந்த உலகையே வியக்க வைக்கும் தன்மை கொண்ட சிங்கமலை என்று போற்றப்படும்
திருமலையின் வித்வான் ஆனவனும் ஆகிய ஸ்ரீநிவாஸன், “இது என்ன விந்தையான செயல்”?, என்று வியக்கிறான்.
வேதம் என்னும் நகரத்தை அடைய நான்கு பாதைகள் உள்ளன. அவை தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் என்பதாகும்.
அந்தந்த பாதையில் செல்பவர்கள் அந்தந்த பயனை அடைவார்கள். இப்படியாக அந்த நான்கு வழியில் செல்பவர்கள்
சேரும் சந்தியில் தயாதேவி நிற்கிறாள். எந்தப் பலனை விரும்பி, எந்த வழியாக வரப்போகிறார்கள் என்று எதிர் பார்த்தபடி நிற்கிறாள்.
இவற்றில் மோக்ஷத்தை விரும்பிச் சரணாகதி செய்தவன், அந்தச் சரணாகதி மூலம் தன்னுடைய பாவங்கள்
அனைத்தையும் மறைத்துக் கொண்டு மோக்ஷ பாதை வழியாக வருகிறான்.
இப்படியாக தயாதேவிக்கு நைவேத்தியம் போன்று, தன்னுடைய பாவங்களைச் சரணாகதி என்னும் துணியால் மூடி வருகிறான்.
இதனை முற்றிலுமாக உணர்ந்த தயாதேவி, அவன் கொண்டுவரும் நைவேத்தியம் என்னவென்று காணாமலேயே
அவனை மிகவும் ஆவலுடன் வரவேற்கிறாள். ஆக, பரந்யாசம் என்ற உபாயத்தில் தயாதேவி தன்னையே மறந்து விடுகிறாள்.
இதனைக் கண்ட அனைவரும், ஸ்ரீனிவாஸனும், “தயாதேவியின் புத்திக்கு ஏதேனும் ஆகிவிட்டதா?
பாவம் செய்தவர்களையும் இப்படி எதிர் கொண்டு வரவேற்கிறாளே”, என்று வியக்கின்றனர்.
தயாதேவியின் இந்தச் செயலை நன்றாகச் சாஸ்திரம் அறிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
இதனாலேயே ஸ்வாமி தேசிகன் ஸ்ரீநிவாஸனை வித்வான் என்று கூறினார்.
நான் மறைகள் என்கின்ற நகரத்தின் மத்தியிலே நாற் சந்தி வரை சென்று சரணாகதி என்கின்ற
சால்வையினால் மூடிய தீ வினை என்னும் பண்டத்தைச் சமர்ப்பிக்க வருவாரை நீயோடி முன் வந்து
மேன்மையுடன் வரவேற்க உன் மனமே பிறழ்ந்து என மூவுலகும் வியப்புற நீ வைப்பதனைக் காண்கின்ற
தேனருவி நிறைந்தோடும் திருமலையின் பேர் அறிஞன் திருமாலின் திருவுள்ளம் திகைப்புறுமே தயா தேவீ –
———————————————————————
71-த்ரிவித சிச் அசித் சித்தா ஸ்த்தேம பிரவ்ருத்தி நியாமிகா
வ்ருஷகிரி விபோ இச்சா ஸா த்வம் பரை அபராஹதா
க்ருபண பர ப்ருத் கிங்குர்வாண ப்ரபூத குணாந்தரா
வஹசி கருணே வைசஷண்யம் மத் ஈஷண சாஹசே
ஸ்ரீ நிவாசனுடைய இச்சா ரூபமே தயா தேவி -யோக ஷேமம் வஹாம் யஹம் –
அவனுடைய ஞானாதி திருக் கல்யாண குணங்களை
நீசனேன் நிறை ஒன்றும் இல்லாதவனான என் போல்வாருக்கும் அவனது
திருக் கடாஷ வீச்சை திருப்புவது என்ன சாகாச செயல் –
தயாதேவியே! மூன்று வகையாக உள்ள சேதனம் மற்றும் அசேதனம் ஆகியவற்றின்
ஸ்வரூபம், இருப்பு, செயல் ஆகியவற்றை நீயே நியமிக்கிறாய். மற்றவர்களால் தடுக்கப்படாமல் உள்ளாய்.
ஆதரவு இல்லாதவர்களின் சுமையைத் தாங்குபவளாக உள்ளாய்.
ஸ்ரீநிவாஸனின் குணங்களை அனைத்தும் உனக்குத் தொண்டு செய்பவளாக,
உயர்ந்த குணங்கள் கொண்டவளாக நீ உள்ளாய். ஸ்ரீநிவாஸனின் இச்சை என்பதன் வடிவமாக உள்ளாய்.
இப்படிப்பட்ட நீ எனக்கு அருள் புரிவது என்னும் துணிவுடைய செயலைச் செய்யும் சாமர்த்தியம் கொண்டுள்ளாய்.
இங்கு ஸ்ரீநிவாஸனின் இச்சா ரூபமாக தயாதேவி கூறப்பட்டாள்.
அனைவரையும் காப்பாற்றவேண்டும் என்பதே ஸ்ரீநிவாஸனின் இச்சை – அதுவே தயாதேவி ஆகும்.
இது பின்வருமாறு கூறப்படுகிறது:
மூன்று விதமான தேதனங்கள் – நித்யர், முக்தர், பக்தர்;
மூன்று விதமான அசேதனங்கள் – ப்ரக்ருதி, காலம், சுத்த ஸத்வம்.
இந்த ஆறின் ஸ்வரூபம் இருப்பு மற்றும் செயல்பாடு ஆகிய அனைத்தும் ஸ்ரீநிவாஸனின் இச்சையால் நியமிக்கப்படுகிறது.
ஆக இதனை தயாதேவியே நியமிக்கிறாள்.
தயாதேவியே யாராலும் கட்டுப்படுத்த இயலாதவளாக உள்ளாள். இதன் கருத்து –
ஸ்ரீநிவாஸனின் விருப்பம் என்பது யாராலும் கட்டுப்படுத்த இயலாதது என்பதாகும்.
ஸ்ரீநிவாஸனே பகவத் கீதையில் – என்னை உபாஸிப்பவர்களின் யோகம் மற்றும் க்ஷேமங்களை நானே சுமப்பேன் என்று கூறினான்.
ஆக நம்முடைய பாரங்களை அவனது இச்சா ரூபமான தயாதேவி சுமக்கிறாள்.
இவ்விதம் நமக்கு உதவ தயாதேவிக்கு வேலையாட்கள் வேண்டாமா?
இவளது வேலைக்காரர்களாக ஸ்ரீநிவாஸனின் ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் ஆகிய குணங்கள் உள்ளன.
என் போன்ற கொடியவன் மீதும் உன்னுடைய கடாக்ஷத்தை நீ திருப்ப முயல்வது எத்தனை துணிச்சலான செயல்!
உன்னுடைய இந்தச் சாகசம் எத்தனை சாமர்த்தியமாக உள்ளது!
மூ வகையாம் சித் அசித்தின் வடிவுகளை நிலை நிற்பை முயற்சிகளை உன் தனது வயமாக்கி நியமிக்க
யாவராலும் தடுப்பரிய இயல்புடையாய் தயை நீயே எவ்வழியும் அறியாத ஏழைகளின் பொறுப்பேற்க
ஏவல் செயும் மற்றெல்லா உயர் குணங்கள் திருமலையின் எம்பெருமான் தன்னுடைய இச்சைதனின் வடிவாவாய்
மேவி என்னைக் காத்தல் எனும் முடிவுடன் நிற்கும் உன் தன் மஹத்தான துணிவுக்கு வேறெவரே ஈடாவார் –
————————————————-
72-வ்ருஷகிரி பதே ஹ்ருதயா விஸ்வ அவதார சஹாயிநீ
ஷபித நிகில அவத்யா தேவி ஷமா ஆதி நிஷேவிதா
புவன ஜனனீ பும்ஸாம் போக அபவர்க்க விதாயிநீ
விதமசி பதே வ்யக்திம் நித்யாம் பிபர்ஷி தயே ஸ்வயம்
தயா தேவியே ஸ்ரீ மஹா லஷ்மி -தயா தேவி இரண்டு பதங்களையும் பிரயோகித்து அருளுகிறார் –
தயாதேவியே! திருவேங்கடமுடையானின் திருமார்பில் வசிப்பவளாகவும்,
அவனது அனைத்து அவதாரங்களிலும் துணை நிற்பவளும், அனைத்து பாவங்களையும் நீக்குபவளும்,
பொறுமை முதலான குணங்களால் ஆராதிக்கப்படுபவளும், அனைத்து உலகங்களுக்கும் தாயாக உள்ளவளும்,
உலகில் உள்ளவர்களுக்குப் பல பயன்களையும் மோக்ஷத்தையும் அளிப்பவளும் ஆகிய நீ –
தமோ குணம் சற்றும் இல்லாத பரமபதத்தில் நித்யமாக உள்ள உனது திருமேனியைக் கொண்டுள்ளாய்.
இந்தச் ச்லோகத்தில் மஹாலக்ஷ்மிக்கும் தயாதேவிக்கும் பொருந்தும் விதமாகப் பலவற்றைக் கூறியது காண்க.
இதன் மூலம் மஹாலக்ஷ்மியே தயாதேவியின் ஸ்வரூபம் என்று உணர்த்துகிறார்.
தயை என்ற ஒரு குணத்தைத் துதிப்பதும், அந்த குணத்தை உபாஸிப்பதும் எவ்விதம் பொருந்தும் என்று
ஸ்வாமி தேசிகனிடம் சிலர் கேட்டனர். அவர்களுக்குப் பதில் அளிக்கும் விதமாக,
இந்தச் ச்லோகம் மூலம் தயை என்பவள் ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மியே என்று கூறுகிறார்.
இங்கு இந்தச் ச்லோகத்தில் தயே, தேவி என்று இரண்டு பதங்களையும் உபயோகித்ததை காண்க.
இதன் மூலம் மஹாலக்ஷ்மியும், தயாதேவியும் ஒன்றே எனக் கூறி இவ்விதம் பதங்களை இட்டார் போலும்.
திரு வேங்கடவன் திரு மார்பில் திருமகளும் தயை நீயும் நிலைத்து அவன் தன் பிறப்புகளில் துணை நிற்பீர் இருவருமே
பொறுமை முதல் குணங்கள் எலாம் பணிவிடையே செயுமுமக்கே புவனங்கள் அனைத்துக்கும் படைப்புத்தாய் ஆவீர்கள்
மறுமைக்கும் இம்மைக்கும் முன்னின்றும் பலன் அளிப்பீர் மருள் துளியே அற்றதுவாம் வைகுண்டப் பெரும் பதத்தும்
மருள் ஒழித்து நாள் குணமே உடையோர்கள் தம்மிடத்தும் மன்னியவராய் உறைகின்றீர் மலர்மகளும் தயை நீயும் –
——————————————————————
73-ஸ்வயம் உதயின சித்த ஆதி ஆவிஷ்க்ருதா ச சுப ஆலயா
விவித விபவ வ்யூஹ ஆவாசா பரம் ச பதம் விபோ
வ்ருஷகிரி முகேஷூ ஏதேஷூ இச்சா அவதி பிரதிலப்யதே
த்ருட விநிஹிதா நிஸ்ரேணி த்வம் தயே நிஜ பர்வபி
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சா ரூபங்கள் அனைத்துக்கும் தலைவனாக திருவேங்கடமுடையான் –
தயா தேவி ஏணி போன்று -நம்மையும் அவனையும் இணைப்பவள
ஆவாசா பத பிரயோகம் -அந்தர்யாமி நிலை-
தயாதேவியே! ஸ்வயமாகத் தோன்றிய விக்ரஹங்கள் கொண்ட திவ்ய தேசங்கள்,
சித்தர்கள் முதலானவர்களால் வெளிப்படுத்தப்பட்ட திவ்ய தேசங்கள், பலவகையான விபவ அவதாரங்கள்,
பலவகையான வ்யூஹ திருமேனிகள், அனைத்து உலகிற்கும் நாயகனான பரவாஸுதேவன் வீற்றுள்ள பரமபதம்,
திருவேங்கடமலை – முதலான இடங்களில் அவரவர்களுக்கான விருப்பத்திற்கு ஏற்ப வணங்கி,
அதற்கான பலனை மக்கள் பெருகின்றனர்.
இப்படிப்பட்ட பலன்களை அடைவதற்கு அவர்கள் ஏற்கவல்ல ஏணியாக நீயே உள்ளாய்.
இங்கு எம்பெருமானின் ஐந்து வகையான திருமேனிகளைக் கூறுகிறார். அவையாவன:
தானாகவே அவன் வெளிப்பட்ட க்ஷேத்ரங்கள் மற்றும் சித்தர்கள் மூலம் வெளிப்படுட்த்தப்பட்ட க்ஷேத்ரங்கள் –
இவற்றில் அர்ச்சையாக உள்ளான்.
இராமன் , கண்ணன் முதலான திருஅவதாரங்கள் விபவம் எனப்படும்.
வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் ஆகிய நான்கும் வ்யூஹம் எனப்படும்.
ஆவாசா என்று ச்லோகத்தில் உள்ள பதம் வீட்டைக் குறிக்கும். இதன் கருத்து எம்பெருமான் அந்தர்யாமியாக உள்ள நிலையாகும்.
பர ரூபம் எனப்படும் பரவாஸுதேவன்
மேலே உள்ள அனைத்து நிலைகளுக்கும் தலைவன் போன்று திருவேங்கடமுடையான் உள்ளான் என்று கூறுகிறார்.
இவற்றை அடைய உதவும் ஏணியாக தயாதேவி உள்ளாள். ஏணியானது ஏறவும் இறங்கவும் பயன்படும்.
இது போன்று இங்கு தயாதேவி என்னும் ஏணியானது நாம் ஸ்ரீநிவாஸனிடம் ஏறிச் செல்ல உதவும்,
அவன் நம்மிடம் இறங்கி வரவும் உதவும் என்று கருத்து.
திருவேங்கடம் முதலானாத் தான் தோன்றித் தலங்களிலும் சித்தர்களும் தேவர்களும் தோற்றுவித்த ஆலயத்திலும்
வரையிலாத பல் வகையாம் விபவம் என்னும் அவதரிப்பும் வியூகங்கள் என்பவனாய் விளங்குகின்ற மேனிகளும்
இருதயத்தின் குகை தன்னில் இருந்துறையும் வடிவங்களும் ஈடில்லாத பெரும் பதமாம் வைகுண்டம் தனியிடத்தும்
விரும்பியதாம் பலன்களையே அடியவர்கள் பெறுவதற்கு உறுதிமிக்க ஏணி என விளங்குகின்றாய் தயை நீயே –
—————————————————————-
74-ஹிதம் இதி ஜகத் த்ருஷ்ட்யா க்லுப்தை அக்லுப்த பலாந்த்ரை
அமதி விஹிதை அந்யை தர்மாயிதை ச யத்ருச்சயா
பரிணத பஹூச்சத்மா பத்மா சஹாய தயே ஸ்வயம்
பிரதிசசி நிஜ அபிப்ரேதம் ந பிரசாம்யத் அபத்ரபா
ப்ராசங்கிகிக ஸூ க்ருத்-உலகின் நன்மைக்காக செய்யும் நல்ல செயல்கள்
ஆநு ஷங்கிக ஸூ க்ருத் -பலனை எதிர்பார்த்து செய்யும் நல்ல செயல்கள்
அபுத்தி பூர்வக ஸூ க்ருத் -நம்மை அறியாமல் செய்பவை
யாத்ருச்சிக ஸூ க்ருத் -தற்செயலாக செய்பவை
இப்படி பட்டியல் போட்டு நீயே ஊகித்து கொண்டு விரும்பியவற்றை நீயே அளித்து அருள்கிறாய் –
மஹாலக்ஷ்மியின் நாதனான ஸ்ரீநிவாஸனின் தயாதேவியே!
இந்த உலகினரால் – தகுந்த பயன் அளிக்கவல்ல புண்ணியச் செயல்கள்;
பலனைத் தரவல்லது என்று அறியாமல் செய்த புண்ணியச் செயல்கள்;
தர்மம் என்ற வகையில் செய்யப்பட்ட புண்ணியச் செயல்கள்; தற்செயலாகச் செய்யப்பட்டப் புண்ணியச் செயல்கள்;
வேறு பல புண்ணிய ச் செயல்கள் – இப்படியாக நாங்கள் பலவற்றைச் செய்தோம்.
இப்படிப்பட்ட தர்மங்களை நீயாகவே யூகித்துக்கொண்டு, காப்பாற்றுதலுக்குத் தகுதியே இல்லாத
என் போன்றவர்களைக் காப்பாற்றுவதில் மற்றவர்களுக்கு வெட்கம் உண்டானாலும்,
நீ அந்த வெட்கத்தை கைவிட்டு, நாங்கள் விரும்பியதை நீயாகவே அளிக்கிறாய்.
உயர்ந்த பலனை பெறுவதற்கு, அந்தப் பலனை அடையும் தகுதி என்பது சரியான கர்மங்கள் மூலம் அமையும்.
ஆனால் மோக்ஷம் என்ற புருஷார்த்தமோ அல்லது தயாதேவியின் கருணையோ கிட்டுவதற்கு
எந்த நற்செயலும் நம்மிடம் இருப்பதில்லை.
இதனை உணர்ந்த தயாதேவி, நாம் செய்த நல்ல செயல்களைத் தானாகவே பட்டியல் இட்டுப் பார்க்கிறாள்.
நற்செயல்கள் பலவகைப்படும். அவையாவன:
ப்ராஸங்கிக ஸுக்ருத் – உலகின் நன்மைக்காகச் செய்யப்படுபவை, கிணறு வெட்டுதல் போன்றவை.
ஆனுஷங்கிக ஸுக்ருத் – ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்யும் கர்மமானது, எதிர்பாராத விதமாக மேலும் ஒரு பலனை அளிக்கும் நிலையாகும்.
அபுத்திபூர்வக ஸுக்ருத் – நம்மை அறியாமலேயே செய்யும் நற்செயல் மூலம் விளையும் பயன்.
யாத்ருச்சிக ஸுக்ருத் – தற்செயலாக விளையும் பயன்.
நம்மிடம் எந்த உபாயமும் இல்லாதபோது நம்மைக் காப்பாற்ற நினைப்பது வெட்கம் அளிக்கக்கூடிய செயலாகும்.
ஆனால் அந்த வெட்கத்திற்குப் பரிகாரமாக, நம்மை அறியாமல் நாம் செய்த புண்ணியங்களை எண்ணி
தயாதேவி நம்மைக் காக்கிறாள்.
அலர் மாதின் கேள்வனது அன்பென்னும் திரு மகளே அறியாமல் செய்கின்ற அல்பமான நல் வினையும்
உலகத்தோர் நலம் என்று உரைக்கின்ற நற் செயலும் உளமாரக் கருதாது உறுகின்ற புண்ணியமும்
நலமென்னும் அறச்செயலும் தற்செயலாய் நேருதலும் நலமளிக்கும் மற்றும் பல நல் வினைகள் என்பவையும்
நலம் செய்யும் நல் வாய்ப்பாய் நீ எண்ணி நாண் விடுத்து நல்குகிறாய் நாம் விரும்பி நாடுகின்ற பெரும் நலனே –
————————————————————-
75-அதி விதி சிவை ஐஸ்வர்ய ஆத்ம அநுபூதி ரசை ஜ நான்
அஹ்ருதயம் இஹ உபசந்த்ய ஏஷாம் அசங்க தசா அர்த்தி நீ
த்ருஷித ஜனநா தீர்த்த ஸ்நான க்ரம ஷபித ஏ நசாம்
விதரசி தயே வீத ஆதங்கா வ்ருஷாத்ரி பதே பதம் –
கங்கையில் இறங்கி தாகம் தீர்த்து கொள் என்று சொல்வாரைப் போலே சொல்லி இறங்க வைத்து -வெள்ள மிகுதி உண்டாக்கி
நீராட வைத்து புனிதமாக்கி-மோஷம் அளிப்பது போலே
ஐஸ்வர்யம் கைவல்யங்களை கொடுத்து அனுபவிப்பித்து பின்பு வைராக்கியம் பிறப்பித்து மோஷார்த்திகளாக ஆக்குவிக்கிறாய்-
தயாதேவியே! ப்ரம்மனுக்கும் சிவனுக்கும் மேலாக உள்ள ஐச்வர்யம் மற்றும் கைவல்யம் ஆகியவற்றை
உனக்கு மனம் இல்லாதபோதும், இந்த உலக மக்களுக்கு அளிக்கிறாய்.
இதன் மூலம் அவர்களை ஆனந்தம் அடைவது போன்று செய்து, அவர்கள் அந்தப் போகங்களில் உள்ள
பற்றுதல்களை நீக்கும்படிச் செய்கிறாய். இதன் மூலம் அவர்களுக்கு வைராக்யம் ஏற்படுத்தி,
ஸ்ரீநிவாஸனின் திருவடிகளை அடையும்படிச் செய்கிறாய். இது எப்படி உள்ளது என்றால் –
ஒருவனின் பாவத்தைத் தீர்க்க அவனை கங்கை நதியில் நீராட வைக்கும் எண்ணம் கொண்ட ஒருவன்,
அவனிடம், “இந்த நதியில் இறங்கி உன்னுடைய தாகத்தைத் தீர்த்து கொள்வாய்”, என்று கூறி
மறைமுகமாக அவன் பாவங்களை அழிப்பது போன்று உள்ளது.
முரட்டுக் குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே விடும் தாய், பின்னர் சரியான காலம் வரும்போது அவர்களை அடக்குகிறாள்.
அந்த நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கும் சிறந்த அறிவு உண்டாகி விடுகிறது.
நாம் உலக விஷயங்களை விரும்புவதை அறிந்த தயாதேவி, அதனை ஆதரிக்கிறாள்.
நாம் அந்த விஷயங்களிலேயே மூழ்கி, நாளடைவில் சிறந்த ஞானம் கிட்டப் பெறுகிறோம்.
அந்த நேரத்தில் நம்முடைய பாவங்கள் அகன்று விடுகின்றன. அதன் பின்னர் மோக்ஷத்தின் மீது விருப்பம் உண்டாகிறது.
இந்த மன மாற்றத்திற்காகவே காத்திருந்த தயாதேவி, சட்டென்று நம்மை
ஸ்ரீநிவாஸனின் கருணைக்கு இலக்காக்கி, அவனது திருவடிகளையும் நமக்கு அளிக்கிறாள்.
அயன் தானும் அரன் தானும் அனுபவிக்கும் மேன்மை தனை அதன் தன்னில் மேம்பட்ட ஆத்மாவின் அனுபவத்தை
நயந்திடுவார் தமக்கு அவற்றை நல்குவதில் மனமின்றி நயப்பவற்றில் ஏற்படுத்தி நசையதிலும் நழுவிடவே
தயை நீயே பற்று ஒழிந்த நிலை தன்னை அடைந்தவர்கள் தாகமற நல் நதியில் நீராடும் நல் விதி போல்
பயன் பெற நீ கலக்கமற பெருமை மிகு வேங்கடவனின் பத மலராம் பெரு வீடு பதவி தனை அருள்கின்றாய் –
——————————————————————
76-வ்ருஷகிரி ஸூ தா சிந்தௌ ஜந்து தயே நிஹித த்வயா
பவ பய பரிதாப சித்த்யை பஜன் அகமர்ஷணம்
முஷித கலுஷ முக்தே அக்ரேசரை அபிபூர்யதே
ஸ்வயம் உப நதை ஸ்வ ஆத்ம ஆனந்த ப்ரப்ருதி அநு பந்திபி
அகமர்ஷண ஸூக்தம் படி நீராடி பாபங்கள் போக்குவதை போலே ஸ்ரீ நிவாசன் என்னும் அமிர்தக் கடலில் நீராட்டி புண்ய
பாபங்கள் போகப் பெறச் செய்து இங்கேயே நிரதிசய நித்ய அனுபவம் பெறச் செய்கிறாள்-
தயாதேவியே! உன்னால் திருவேங்கடமலையில் உள்ள அமிர்தக் கடலில் சேர்க்கப்படும் ஒருவன்
தன்னுடைய ஸம்ஸார பயம், தாபத்ரயம், பாவங்கள் ஆகியவை நீங்கப் பெறுகிறான்.
இதனால் மிகுந்த தூய்மை அடைகிறான். இவ்விதமாக அவன் அங்கு பாவங்கள் அழிக்கும் சரணாகதியை அடைந்தவனாகிறான்.
இதன் மூலம் தன் முன்பாக தானாகவே வரும் மோக்ஷ ஆனந்தம், தனக்கு அந்தர்யாமியாக உள்ள
ஸ்ரீநிவாஸனை அனுபவிக்கும் ஆனந்தம் முதலானவற்றால் சூழப்படுகிறான்.
அகமர்ஷணம் என்னும் ஒரு நீராடுதல் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய நீராட்டம் மூலம் ஒருவனது பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
ருக் வேதத்தில் உள்ள அகமர்ஷண ஸூக்தத்தை கூறியபடி அன்றாடம் நீராடினால், ஒருவனது பாவம் நீங்கிவிடும்.
அகமர்ஷணம் என்னும் நீராடுவதை ஸ்ரீநிவாஸன் என்னும் அமிர்தக் கடலில் செய்யும் போது,
ஒருவனது பாவங்கள் அடியுடன் நீங்கி விடும் என்பதில் ஐயம் இல்லை.
இத்தகைய பாவங்களை நீக்கவல்ல ப்ரபத்தியை தயாதேவி செய்விக்கிறாள்.
இதன் மூலமாக அவனுக்கு மோக்ஷம் கிட்டுவது உறுதியாகும்.
அப்படிப்பட்ட மோக்ஷத்தின் ஆனந்தத்தை அனுபவிக்கும் வரை, அவன் தன்னுடைய அந்தர்யாமியாக உள்ள
ஸ்ரீநிவாஸனை எண்ணியபடி, அவனது கைங்கர்யத்தில் ஈடுபட்டபடி இருந்து ஆனந்தத்தில் திளைக்கிறான்.
இப்படியாக தயாதேவி பலவாறு உதவுகிறாள்.
திருவேங்கட மலை மீதில் நிலை பெற்ற அமுதக்கடல் தனில் மூழ்க சேதனனைச் சேர்க்கின்றாய் தயை நீயே
பெரும் பிறவி பயன் தானும் படுதுயரும் ஒழிந்திடவே பிரபத்தி என்னும் நீராட்டம் புரிந்தவனும் தூய்மையாகி
வரப்போகும் முக்திக்கு வழி கோலும் தன் மனத்துள் விளங்கும் இறை தனை நினைதல் வெளிக்கோயில் தனில் அமைந்த
இறை யுருவைத் தொழுதல் எனும் இன்பங்களை அனுபவித்து இவ்வுலக வாழ்வு தனை இனிதாகப் போக்குவனே –
————————————————————————-
77-அநிதர ஜுஷாம் அந்தர்மூலே அபாய பரிப்லவே
க்ருதவித் அநகா விச்சித்ய ஏஷாம் க்ருபே யம வச்யதாம்
பிரபதன பல பிரத்யாதேச பிரசங்க விவர்ஜிதம்
பிரதிவிதம் உபாதத்சே சார்த்தம் வ்ருஷாத்ரி ஹிதைஷிணா
உத்தராகத்தையும் சிஷையாலோ பிராயச்சித்ததாலோ போக்கி அருளி
சரணாகதனை சேர்ப்பித்து அருளுகிறாய் –
தயாதேவியே! எந்தப் பலன்களையும் நாடாமல், எந்தத் தெய்வங்களையும் நாடாமல்
உன்னையே சரணம் என்று பற்றியவர்களுக்கு, அவர்களது பலன் தர ஆரம்பித்து விட்ட கர்மங்கள் காரணமாக,
புத்தியால் உணர்ந்தும் பாவம் செய்யும் சூழ்நிலை ஏற்படலாம். இதன் மூலம் அவர்கள் பாவங்களுக்கு ஆளானாலும்,
அவர்கள் செய்த சரணாகதியை நீ மறக்காமல், அந்தப் பாவத்திற்காக அவர்களுக்கு வரப்போகும் யமனின் தொடர்பை விலக்குகிறாய்.
அவர்கள் செய்த சரணாகதிக்கு இடையூறு இல்லாமல் ஸ்ரீநிவாஸனுடன் கலந்தபடி உள்ள நிலையை பரிகாரமாகச் செய்கிறாய்.
சரணாகதி செய்தவனுக்கு அவன் தற்போது வாழ்கின்ற வாழ்க்கை என்பது பலன் தர ஆரம்பித்துவிட்ட
கர்மங்களை (ப்ராரப்த கர்மம்) ஒட்டியே உள்ளது. எனவே அவன் செய்யக்கூடாததை செய்தாலும்,
செய்ய வேண்டியதைக் கைவிட்டாலும் பாவம் வந்து சேர்கிறது.
சரணாகதி செய்த ஒருவன் தன்னுடைய மனம் அறிந்து தவறுகளைச் செய்யாமல் இருக்க வேண்டும்
என்று எண்ணிய போதிலும், அவன் அனுபவித்துக் கழிக்க வேண்டிய கர்மங்களானவை,
அவனைத் தவறு செய்யத் தூண்டுகின்றன. இதனால் அவனது சரணாகதி கழிந்து விடுமா என்றால் – இல்லை.
தயாதேவி அவன் செய்த சரணாகதியை மறப்பதில்லை. அவனுக்கு மோக்ஷம் தருவதாக
ஸ்ரீநிவாஸன் அளித்த வாக்குறுதியை தயாதேவி காப்பாற்றுகிறாள்.
ஆனால் செய்த பாவங்களுக்கான பலன் என்பது யமனின் பிடியில் அகப்படக் காரணமாகி விடுவதால்,
அந்தப் பாவங்களை நீக்க வேண்டிய உபாயத்தை தயாதேவி தகுந்த ப்ராயச்சித்தம் மூலமாகச் செய்து விடுகிறாள்.
இது சிறு தண்டனையாகவோ, ப்ராயச்சித்த ப்ரபத்தியாகவோ இருக்கலாம்.
வேறெந்த பலன் தனையும் வேறெந்த தேவு தனையும் விரும்பாத அடியவர்கள் விளைவிக்கும் வினைகளினால்
நேருகின்ற குற்றம் தனை நினையாது தயை நீயே நமன் பிடியில் அவர் தாமே சிக்காமல் செய்கின்றாய்
ஆராத நலன் தனையே அகம் கொண்ட திருமலையின் நாதனுடன் சிந்தித்துச் சரணாகதி பலனுக்கு
நேருகின்ற தடைகளினை நீக்கிவிடும் பரிகார நற் செயலை அடியாரைச் செய வைத்துக் காக்கின்றாய் –
———————————————————-
78-ஷண விலயி நாம் சாஸ்திர அர்த்தா நாம் பலாய நிவேசிதே
ஸூர பித்ரு கணே நிர்வேசாத் ப்ராக் அபி பிரளயம் கதே
அதிகத வ்ருஷ ஷமா ப்ருத் நாதாம் அகால வசம் வதாம்
பிரதிபுவம் இஹ வ்யாசக்க்யு த்வாம் க்ருபே நிருப ப்லாவாம்
யாகம் யஜ்ஞம் போன்றவற்றுக்கு பலம் அளிப்பவளும் நீயே –
தேவதாந்த்ரங்கள் நித்யம் இல்லையே –
ஷணம்-கர்ம பலன் அளிக்க தேவதாந்த்ரங்கள் ஸ்திரம் இல்லவே –
அகால வசம் வதாம்-காலவசப் படாமல் –
தயாதேவியே! சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட கர்மங்களுக்கான பலன்களை அளிப்பதற்கென்று
தேவர்கள், பித்ருக்கள் போன்றவர்களின் கூட்டம் உள்ளது. ஆனால் இவர்கள் அளிக்கும் பலன்கள் மிகவும்
குறைந்த காலத்திலேயே மறைந்து விடுகின்றன.
மேலும் இவர்களும் அந்தப் பலன்கள் அழிவதற்கு முன்பாகவே அழித்து விடுகின்றனர்.
ஆனால் நீயோ ஸ்ரீநிவாஸனை அடைந்தவளாக, காலத்திற்குக் கட்டுப்படாதவளாக, யாராலும் தடுக்க இயலாதவளாக உள்ளாய்.
இதனை உணர்ந்த அறிஞர்கள் அவர்களின் இடத்தில் நீ இருப்பதாகக் கூறினர்.
யாகம், ஹோமம் முதலான கர்மங்களை, விரும்பும் பலனை அடையும் பொருட்டு சாஸ்திரங்கள் விதித்துள்ளன.
அத்தகைய பலனை அளிப்பதற்காக தேவர்களையும் பித்ருக்களையும் ஸ்ரீநிவாஸன் நியமித்துள்ளான்.
அவர்களும் அவன் ஆணைக்கு ஏற்ப நமக்குப் புண்ணிய பலன்களை அளிக்கின்றனர்.
ஆனால் நம்முடைய புண்ணிய பலன்கள் நமக்குக் கிட்டும் காலம் வரையில் அந்தத் தேவர்களும், பித்ருக்களும்
அழியாமல் இருப்பதற்கு உத்திரவாதம் இல்லை. அவர்கள்அழிந்து விட்டால் நமக்கு அந்தப் பலன்களை யார் அளிப்பார்கள்?
அந்தச் செயலை தயாதேவியே செய்வதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
நிலையிலவே சாஸ்திரம் தம் கருமம் என நினைந்து அவற்றின் பலன் தரவே நியமித்த
பல தேவும் பிதுராளும் பலன் தரு முன் பிரளயத்தில் அழிவு தனை உறுவுதனால்
மலை வேங்கட நாதனது கருணை யுன் தன் காலத்தின் வசமுறாது தடையின்றி
நிலை நிற்கும் தன்மையினால் பலன் தரவே நிற்கின்றாய் நீ என்றே கூறுவரே –
———————————–
79-த்வத் உபசத நாத் அத்ய ஸ்வ வா மஹா பிரளயே அபி வா
விதரதி நிஜம் பாத அம்போஜம் வ்ருஷாசல சேகர
தத் இஹ கருணே தத் தத் க்ரீடா தரங்க பரம்பரா
தரதமதயா ஜுஷ்டாய தே துரத்யயதாம் விது
கர்மங்கள் உபாசனங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப விளம்பம் உண்டே ஆகிலும்
பேறு நிச்சயம் உன்னை அடைந்தவர்களுக்கு –
தயாதேவியே! உன்னை நாங்கள் சரணம் அடைவதால் ஸ்ரீநிவாஸன் செய்வது என்ன?
தன்னுடைய தாமரை போன்ற திருவடிகளை அவன் எங்களுக்கு இன்றோ, நாளையோ அல்லது
ப்ரளய காலத்திலேயோ நிச்சயம் அளித்துவிடுவான்.
இப்படியாக எங்களைக் காப்பாற்றும் விஷயத்தில் அவனது நினைவுகளை தொடர்ச்சியாக எழும்
உனது அலைகள் தூண்டியபடி உள்ளன. இதனைத் தடுக்க இயலாது என்று அறிஞர்கள் உணர்ந்த்துள்ளனர்.
தயாதேவியைச் சரணம் அடைந்த ஒருவனுக்கு, ஸ்ரீநிவாஸன் தன்னுடைய கைங்கர்யம் என்னும் மோக்ஷத்தை அளித்தே ஆக வேண்டும்.
இந்த விஷயத்தில் தயாதேவியை மீறி ஸ்ரீநிவாஸனால் நடக்க இயலாது.
ஆனால் அவரவர்களின் கர்மங்கள், உபாஸனைகள், விருப்பங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப,
இத்தகைய மோக்ஷம் என்பது கிட்டும் காலமானது வேறுபடுகிறது.
கருணை யுனைச் சரணடைந்தால் யுடனேயோ தாமதித்தோ பெரும் ஊழிக் காலத்திலோ
திரு வேங்கட நாதன் தன் மலரன்ன திருவடியைத் தருவது உன் லீலை எனும்
திரைகள் தாம் மேலுறலாம் தாழ்வதுமாம் தன்மை தனை உற்ற போதும் உனை மீறித்
திரு வேங்கடவன் செயல்படாத பெருமை தனை நீ யுடையாய் என்று அறிவோர் சாற்றுகின்றார் –
—————————————————-
80-பிரணஹித தியாம் த்வத் சம்ப்ருக்தே வ்ருஷாத்ரி சிகா மனௌ
பரஸ்ருமர ஸூ தா தாரா ஆகாரா ப்ரசீததி பாவநா
த்ருடமிதி தயே தத்த ஆஸ்வாதம் விமுக்தி வலாஹகம்
நிப்ருத கருத நித்யாயந்தி ஸ்த்திர ஆசையா சாதகா
த்யானம் அமிர்த பெருக்காக வளர்த்து பேற்றை அளிக்கிறாள் –
தயாதேவியே! உன்னுடன் எப்போதும் சேர்ந்தே நிற்கும் ஸ்ரீநிவாஸனிடம் மனதை ஒருவன் நிலை நிறுத்தி,
இடைவிடாமல் த்யானிக்கக் கூடும். அவனுக்கு, அந்தத் த்யானம் என்பது அமிர்தப் பெருக்காக விளங்குகிறது.
இவன் போன்றவர்களுக்கு மோக்ஷம் என்னும் மழையைப் பொழிகின்ற மேகமாக ஸ்ரீநிவாஸன் உள்ளான்.
மழை நீரை மட்டுமே நம்பியுள்ள சாதகப் பறவைகள் போன்று, இவ்விதம் த்யானம் செய்பவர்கள்,
ஸ்ரீநிவாஸன் என்னும் மேகத்தை எதிர்பார்த்தபடி, உறுதியுடன் உள்ளனர்.
இங்கு மோக்ஷம் அடைவதற்காக ஸ்ரீநிவாஸனிடம் மனதைச் செலுத்தி, பக்தி யோகத்தில் ஈடுபடுவதைக் கூறினார்.
அவர்களுக்கு ஸ்ரீநிவாஸன், த்யானத்தை மேலும் வளர்க்கிறான். இவர்கள், சாதகப் பறவைகள் போன்று,
மோக்ஷம் என்னும் மழையைப் பொழியவல்ல ஸ்ரீநிவாஸனை எதிர்பார்த்தபடி உள்ளனர்.
திருமலையின் உச்சியிலே கருணை யுன்னைச் சேர்ந்த கரு மணி மாலை மனம் தனிலே
நிறுத்தி யோகு புரிவோருக்கு அமுத மழை நிகரான நினைவமைதல் நிச்சயமே
பெரு வின்ப முக்தி தரும் முகில் தனையே பொறாத உறுதியுடன் நினைந்து ஒழுகி
சிறகினையும் அசைக்காத சாதகம் போல் திடமுடனே நிலை நிற்பார் யோகிகளே –
———————————————————–
81-க்ருபே விகத வேலயா க்ருத சமக்ர போஷை த்வயா
கலி ஜ்வலன துர்க்கதே ஜகதி காள மேகாயிதம்
வ்ருஷ ஷிதிதர ஆதிஷூ ஸ்த்திதிப தேஷு ஸா நுப்லவை
வ்ருஷாத்ரி பதி விக்ரஹை வ்யபகத அகில அவக்ரஹை
அடுத்த பத்து ஸ்லோகங்களில் தசாவதாரம் -அதற்க்கு அவதாரிகை இது –
அர்ச்சாவத திரு மேனி கருடன் நித்ய சூரிகள் உடன் இருந்து
அனைத்து பஞ்சங்களும் நீங்கப் பெறுகின்றன -கார்மேக திருமேனியால் தாபத் த்ரயங்கள் நீங்குகின்றன –
தயாதேவியே! எல்லையற்ற கருணை கொண்டவளாகிய உன்னால் பூரணமாகக் காக்கப்படுகிறது;
இந்த உலகின் அனைத்துத் துன்பங்களையும் நீங்கச் செய்கிறது;
திருவேங்கடமலை முதலிய திவ்யதேசங்களில், ஆதிசேஷன் போன்ற பரிவாரங்களுடன் கூடி உள்ளது –
இப்படியாக எங்கும் உள்ள ஸ்ரீநிவாஸனின் அர்ச்சை விக்ரஹங்கள், கலி என்னும் வேதனை அளிக்கவல்ல
நெருப்பினால் வருந்தும் உலகிற்கு, மழை மேகம் போன்று உள்ளன.
அடுத்து வரும் 10 ச்லோகங்களில் தசாவதாரத்தைக் கூற உள்ளார்.
அதன் அவதாரிகையாக இங்கு அர்ச்சாவதாரத்தைப் பற்றிக் கூறுகிறார்.
வ்யபகத அகில அவக்ரஹை – என்றால் அனைத்துப் பஞ்சங்களும் நீக்கப்படுகின்றன என்பதாகும்.
இது மழை இல்லாத நிலை, அதிகமாக மழை பெய்யும் நிலை போன்றவையாகும்.
இந்த நிலைகள் அனைத்தும் ஆங்காங்கே உள்ள அர்ச்சாவதார விக்ரஹங்கள் மூலமாக நீங்கி விடுகின்றன.
மழை பொழியும் மேகங்கள் மலை உச்சியில் காணப்படுவது போன்று,
கருணை பொழியும் ஸ்ரீநிவாஸனின் விக்ரஹங்கள் திருமலை போன்ற உச்சிகளில் உள்ளன.
மேகங்களுக்கு இடி-மின்னல் போன்றவை ஆதரவாக உள்ளது போன்று,
இவனுடைய அர்ச்சாவதார விக்ரஹங்களுடன் ஆதிசேஷன், கருடன் போன்றவர்களும் அர்ச்சையில் உள்ளனர்.
இந்தக் கலி காலத்தில் உள்ள பாவங்கள் நம்மைச் சூழ்ந்து கொண்டு, நெருப்பு போன்று வருத்துகின்றன.
இந்த வேதனையை நீக்கும் விதமாக, கார்மேகம் போன்ற ஸ்ரீநிவாஸனின் விக்ரஹங்கள் உள்ளன.
கரை காணாக் கடல் போன்ற கருணை எனும் தேவி நீயே கருத்தூன்றி வளர்த்ததனால் கவர்ச்சி மிகு பொலிவுடனே
திருவேங்கடம் முதலான தலங்களிலே திகழ்கின்ற திருமாலின் திருவுருக்கள் தடையெல்லாம் அகற்றியவாய்
நெருப்பன்ன கலியுகத்தால் தகிப்பிற்கு உள்ளாகி நிற்கின்ற இவ்வுலக நல்லுயிர்கள் உய்ந்திடவே
கரு முகில் போல் தண்மை யளி கருணை மழை பொழிவனவாய் கழல் பணியும் அடியாரைக் காத்திடவே அமைந்தனவே –
———————————————————
82-பிர ஸூ ய விவிதம் ஜகத் தத் அபி வருத்தயே த்வம் தயே
சமீஷண விசிந்தன பரப்ருதிபி ஸ்வயம் தாத்ருசை
விசித்ர குண சித்ரிதாம் விவித தோஷ வைதேசிகீம்
வ்ருஷாசல பதே தநும் விசசி மத்ஸ்ய கூர்ம ஆதிகாம் –
மீன்கள் குட்டிகளை பார்த்தே வளர்ப்பது போலேயும்
ஆமைகள் நினைத்தே குட்டிகளை வளர்ப்பது போலேயும்
மத்ஸ்ய கூர்ம திரு மேனியில் புகுந்து செயல் பட்டு அருளுகிறாய் –
தயாதேவியே! இந்த உலகைப் படைத்து, அதனைப் பாதுகாக்க எண்ணும் நீ,
பார்த்தல்-நினைத்தல் முதலான செயல்களைச் செய்ய விரும்புகிறாய் போலும்.
அதனால்தான் நீ – விசித்ரமான குணங்கள் கொண்டதும், தோஷங்களுக்கு அப்பால் உள்ளதும் ஆகிய
ஸ்ரீநிவாஸனின் மீன், ஆமை முதலான திருமேனிகளில் புகுந்து விடுகிறாய் போலும்.
இந்த உலகைப் படைத்த பின்னர், இதில் உள்ள உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தயாதேவிக்கு வந்துவிடுகிறது.
தனது குழந்தைகள் போன்ற நம்மை அவள் எவ்வாறு பாதுகாக்கிறாள் –
ஸ்ரீநிவாஸன் எடுக்கும் மீன், ஆமை முதலான அவதாரங்களில் இவள் புகுந்து விடுவதம் மூலம் ஆகும்.
இதன் மூலம் எப்படி நம்மைக் காக்கிறாள்?
மீன்கள் தங்கள் குழந்தைகளைத் தங்கள் கண் பார்வை மூலமே காப்பாற்றியபடி இருக்கும்
(ச்லோகத்தின் பொருளில் உள்ள பார்த்தல் என்பது காண்க).
ஆமைகள் தங்கள் குட்டிகளை, தங்களது எண்ணத்தின் மூலமே வளர்க்கும் திறன் உள்ளவை
(ச்லோகத்தின் பொருளில் உள்ள நினைத்தல் என்பது காண்க) ஆகும்.
இது போன்று, மீனாக ஸ்ரீநிவாஸன் மச்சாவதாரம் எடுக்கும்போது, அவன் கண்களின் கடாக்ஷத்தில் இவள் புகுந்து,
அந்தப் பார்வை நம் மீது விழும்படிச் செய்கிறாள். அவன் ஆமையாக கூர்மாவதாரம் செய்யும்போது,
தனது சிந்தனை முழுவதையும் நம் மீது வைக்கும்படிச் செய்கிறாள்.
பல்வேறு உலகுகளைப் படைத்து அதனுள் உயிர் இனத்தைப் பாலிக்கத் திருவேங்கட மலை வாழும் பெருமானே
பல் வேறு குறைகளுக்குப் புறம்பான மீனாமை முதலான புகழ் மிக்க உருக்களினைத் தரித்தவனாய்
பல் வேறு பிறப்பெடுக்கும் மேனிகளில் தயை நீயே புகுந்திருந்தே அவ்வவற்றின் பார்த்தலுமாம் நினைத்தலுமாம்
பல்வேறு செய்கையினால் பலபலவாம் குணங்களினால் போற்றிட்டே வளர்க்கின்றாய் பல்லுலகு அனைத்தையுமே –
——————————————————-
83-யுகாந்த சமய உசிதம் பஹதி யோக நித்ரா ரசம்
வ்ருஷ ஷிதிப்ருத் ஈச்வரே விஹரண க்ரமாத் ஜாக்ரதி
உதீர்ண சதுரர்ணவீ கதன வேதி நீ மேதி நீம்
சமுத்ருதவதீ தயே தத் அபி ஜுஷ்டயா தம்ஷ்ட்ரயா
மஹா வராஹம் -கடல்கள் குளம்பு அளவுக்கே இருக்க கோரைப் பற்களின் இடையில்
கிழங்கை எடுப்பது போலே பூமியை உத்தாரணம் பண்ணி அருளினாய்
தயாதேவியே! ப்ரளய காலம் நடக்கும்போது ஸ்ரீநிவாஸன் தனது அழகான கண்களை மூடியபடி,
யோகநித்திரையின் இன்பத்தை அனுபவித்தபடி சயனித்துள்ளான்.
அதன் பின்னர் தன்னுடைய லீலைகளை நடத்துவதற்கான நேரம் வந்தவுடன் விழித்துக் கொள்ளும்போது,
நான்கு கடல்களாலும் பூமியானது விழுங்கப்படுகிறது. அந்த நேரத்தில் இந்தப் பூமியை உன்னுடைய
சேர்ந்துள்ள வராஹனின் கோரைப்பற்கள் மூலமாக மேலே உயர்த்தினாய்.
வராஹங்கள் பொதுவாக நீரில் விளையாடியபடி தங்களது கோரைப்பற்களின் இடையில் கிழங்கை எடுப்பது வழக்கம்.
இங்கு வராஹனாக ஸ்ரீநிவாஸன் நின்றபோது அவனது குளம்பு அளவிற்கே நான்கு கடல்களும் இருந்தன.
அந்த நீரில் இருந்து பூமியை ஒரு கிழங்கு போல் எளிதாக எடுத்துக் கொண்டான்.
ஊழி தனில் பொருந்தியதாம் யோகு நிலை உறக்கத்தின் இன்பத்தை நுகர்பவனாய் இனிய நிலை மேற் கொள்ளும்
ஏழு மலைப் பெருமானே இன்புறும் தன லீலையிலே இச்சை கொண்டு யோகுறக்கம் கலைந்து எழவே பொங்குகின்ற
ஆழிகளே பரவியதால் இவ்வுலகு வெள்ளமதில் ஆழ்ந்துற்ற துயர் கண்டு ஆதரத்தால் தயை நீயே
ஏழுமலையான் கொண்ட இரு வடிவ வராஹத்தின் எயிறு தனால் இவ்வுலகை எடுத்து எழும்ப வைத்தனையே –
———————————————————-
84-சடா படல பீஷணே சரபச அட்டஹாச உத்படே
ச்ப்புரத் க்ருதி பரிச்ப்புடத் ப்ருகுடிகே அபி வக்த்ரே க்ருதே
தயே வ்ருஷகிரி ஈசிது தநுஜ டிம்ப தத்த ஸ்தநா
சரோஜ சத்ருசா த்ருசா சமுதித ஆக்ருதி த்ருச்யசே –
உக்ரமான ஸ்ரீ நரசிம்ஹன் திருக்கண்களில் பக்த பிரகலாதனுக்கு குளிர்ந்த கடாஷமும் இருந்ததே -உன்னால் அன்றோ –
தயாதேவியே! அடர்ந்த பிடரி மயிர்க்கற்றைகளால் பயங்கரமாக இருந்தது; மிகவும் வேகத்துடனும்
அச்சம் அளிப்பதாகவும் இதன் சிறப்பு இருந்தது; கோபத்தில் புருவங்கள் நெரித்தபடி நின்றன;
கோபத்தில் இந்த நரஸிம்ஹனின் திருமுகம் ஜொலித்தது – அப்படிப்பட்ட கோபமான முகத்தில் இருந்த
திருக்கண்கள், தாமரை போன்று மகிழ்வுடன் ப்ரஹ்லாதனுக்கு தாய் பால் ஊட்டும் தாய் போன்று மகிழ்வைக் காண்பித்தது.
இது ஏன் என்றால் அந்தத் திருக்கண்களின் வடிவமாக நீ இருந்ததாலேயே ஆகும்.
ஹிரண்யன் பெற்ற வரத்திற்கு ஏற்ப பகல்-இரவு அல்லாத நேரம், உயிர் உள்ளது-உயிர் இல்லாதது என்னும்படியான
நகம் என்ற ஆயுதம், மனிதன்-மிருகம் அல்லாத நரஸிம்ஹம் என்று எண்ணிப் பார்க்க இயலாத சேர்க்கையில்
ஸ்ரீநிவாஸன் வந்தது வியப்பல்ல. ஆனால் மற்றோரு மிகவும் வியப்பான செயலை ஸ்வாமி தேசிகன் கூறுகிறார்.
அது என்ன? ஹிரண்யனுடன் யுத்தம் செய்தபோது கோபத்தில் கண்கள் நெருப்பு போன்று காணப்பட்டன;
நரசிம்ஹத்தின் பிடரி மயிர்கள் அந்தக் கண்களை மறைத்தபடி முன்னே விழுந்தன;
கண்களுக்கு மேலே உள்ள புருவங்கள் கோபத்தில் துடித்தன;
கண்களுக்கு கீழே இருந்த வாய் மூலம் உலகையே நடுங்க வைக்கும் கர்ஜனை மற்றும் சிரிப்பு வெளிப்பட்டது.
இவை அனைத்தும் அந்தக் கண்களில் ப்ரதிபலித்தன.
ஆனால் அதே கண்கள் அருகில் நின்ற ப்ரஹ்லாதனை குளிரும்படி கடாக்ஷித்தன. இது என்ன ஒரு வியப்பான சேர்க்கை!
ஒரே கண்கள் மூலம் விரோதி மீது கோபமும், அதே நேரத்தில் அதே கண்கள் மூலம் பக்தன் மீது கடாக்ஷமும் செலுத்தியது
இந்த ஒரு அவதாரத்தில் மட்டுமே காணலாம்.
ஆனால் உக்கிரமான நரசிம்ஹத்தின் திருக்கண்களில் குளுமை எவ்விதம் வந்தது?
அங்கு தயாதேவி இருந்த காரணத்தினால்தான் என்று கூறலாம்.
திருவேங்கட ஈசன் தன் தயை என்னும் பெருமாட்டி சிங்கவுரு கொண்டவனே சீற்றத்தால் முகம் சிவக்க
பெரும் பிடரி மயிற்கற்றைப் பெரும் அச்சம் ஊட்டிடவே பெருஞ்சிப்பின் பேரொலியும் புருவங்கள் துடிதுடிப்பும்
இரணியனைப் பீதி கொள வைத்திடினும் செந்தாமரை கண்ணினையே அவன் மகன் மேல் கருணை நிறை முலைப்பாலைச்
சொரிந்திட்டு மகிழ்வு ஊட்டச் சிறந்ததோர் அருள் யுருவைக் காட்டிடவே வைத்தனை நீ திருமலையின் நாயகனை –
———————————————————-
85-ப்ரசக்த மதுநா விதி பிரணிஹிதை சபர்யா உதகை
சமஸ்த துரிதச் சிதா நிகம காந்தி நா த்வம் தயே
அசேஷம் அவிசேஷத த்ரிஜகத் அஞ்ஜ நாத்ரி ஈசிது
சர அசரம் அசீகர சரண பங்க ஜேன அங்கிதம்
ஸ்ரீ நிவாசன் உடைய திருவடி கொண்டே உலகு அளந்த போது அனைத்து இடங்களிலும் முத்ரை இட்டாள் தயா தேவி
அஞ்ஜநாத்ரி ஈச என்கிற பத பிர யோகம் அதனாலே தான் –
தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் த்ரிவிக்ரமனாக உயர்ந்த போது அவனது திருவடிகள் ப்ரம்மனால்
ஸமர்ப்பிக்கப்பட்ட நீரால் நனைக்கப்பட்டது; தேன் நிரம்பியது போன்று காணப்பட்டது;
பாவங்கள் அனைத்தையும் நீக்கியவிதமாக இருந்தது. இப்படியாக இருந்த ஸ்ரீநிவாஸனின்
தாமரை போன்ற திருவடியைக் கொண்டு இந்த உலகம் முழுவதும் எந்தவிதமான வேற்றுமையும் இன்றி நீ முத்திரை இட்டாய்.
இங்கு ஸ்வாமி தேசிகனின் கவித்திறனை ஆராயலாம். ஸ்ரீநிவாஸனின் திருவடிகளைக் கொண்டு
தயாதேவி அனைத்து இடங்களிலும் முத்திரை இட்டாள் என்று கூறினார்.
முத்திரை இடுவதற்கு மை எனப்படும் அஞ்சனம் தேவையாகும்.
இதனால் ச்லேடையாக ஸ்ரீநிவாஸனை அஞ்சநாத்ரி ஈச என்று சாமர்த்தியமாகச் சொற்களை அமைத்துள்ளதைக் காண்க.
தன்னுலகை எட்டிய வத் திருவேங்கடவன் மலரடியைச் சதுர்முகனும் மனமுவந்து ஸ்துதி செய்து ஸமர்ப்பித்த
நன்னீரால் தேன்மா சேர்ந்துமுவாய் அனைத்துவித தீ வினைகளையும் ஒழிப்பதுமாய் நான்மறைகள் போற்றுதலாம்
நன் மணமே திகழுமதாய் நன்கு அதிலே உட் புகுந்து சரம் என்னும் அசைவனவும் அசரம் என்னும் அசையாதவவையும்
மன்னிய இம்மூவுலகும் முழுவதையும் வேறிலாது முத்திரையே இட்டிடவே வைத்தனையே தயை நீயே –
———————————————————–
86-பரஸ்வத தபோதன ப்ரதன சத் க்ரது உபாக்ருத
ஷிதீச்வர பசு ஷரத் ஷதஜ குங்கும ஸ்த்தாசகை
வ்ருஷாசல தயாளு நா நநு விஹர்த்தம் ஆலிப்யதா
நிதாய ஹ்ருதயே தயே நிஹத ரஷிதா நாம் ஹிதம் —
ஷத்ரிய வதமும் யஜ்ஞத்தில் பசு வதையால் பசுக்கு நன்மை போலவே இருந்தாலும் தயா தேவி தூண்டாமலே செய்த செயல்
என்றே அருளிச் செய்கிறார் இந்த பரசுராம அவதார சேஷ்டிதத்தை-
தயாதேவியே! கருணை மிகுந்த ஸ்ரீநிவாஸனால் கொல்லப்பட்டதன் மூலம் க்ஷத்ரிய அரசர்கள் காப்பாற்றபட்டனர்.
இப்படியாக அவர்களின் க்ஷேமத்தை விருப்பியவரும், கோடாலியைக் கொண்டவரும் ஆகிய
பரசுராமரின் யுத்தம் என்ற யாகத்தால், யாகப்பசுக்கள் போன்று அரசர்கள் பலி ஆக்கப்பட்டனர்.
அவர்களது உடலில் இருந்து பாய்கின்ற இரத்தம் என்ற குங்குமச் சாந்தினால் நீ பூசப்பட்டாய் போலும்.
பல பேரைக் கொன்ற செயல் எவ்விதம் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நன்மையாகும் என்ற கேள்வி எழலாம்.
இதற்கான சமாதானத்தையும் ஸ்வாமி தேசிகன் சாமர்த்தியமாக விளக்குகிறார்.
கண்ணன் கீதையில் யுத்தம் என்பதை ஒரு யஜ்ஞமாகவே காணவேண்டும் என்று கூறினான்.
ஒரு யஜ்ஞத்தில் பசுக்களை வதம் செய்வது வழக்கம் ஆகும். ஆனால் அந்தப் பசு வதை என்பது பாவம் ஆகாது.
எப்படி என்றால் யாகத்தில் கொல்லப்பட்ட பசுக்கள் மிகவும் உயர்ந்த சரீரம் எடுத்து, ஸ்வர்கம் செல்வதாக வேதங்கள் கூறுகின்றன.
ஆக அந்தப் பசுவதை உண்மையில் பசுக்களுக்கு நன்மையே செய்கின்றது அல்லவா?
அதே போன்று பரசுராமனுடன் நடந்த யுத்தம் என்ற யஜ்ஞத்தில் மாய்ந்த அரசர்கள் பசுக்கள் போன்று நன்மை அடைந்தனர் எனலாம்.
தயாதேவியை மிகவும் கருணை வாய்ந்தவள் என்று 108 ச்லோகங்கள் இயற்ற வந்த ஸ்வாமி தேசிகனுக்கு,
பரசுராமனின் செயல்கள் நற்செயலாக இருந்த போதிலும், அவை கொடுமையான செயலாகவே தோன்றியது போலும்.
அதனால்தான் கருணையே வடிவமான தயாதேவி, ஸ்ரீநிவாஸனைத் தூண்டுவதாக பல ச்லோகங்களில் கூறிய போதிலும்,
இந்த ச்லோகத்தில் அவ்விதம் கூறாமல் விட்டது காண்க.
திருவேங்கட மலை நிற்கும் தயாளு வெனும் பெருமானை தயை நீயே கோடாலி தனைப்பிடித்த தவத்தோனாம்
பரசுராமன் தனுள் புகுத்திப் போர்கள் எனும் வேள்விகளில் பாரினிலே கொடுமைகளைப் புரிந்ததனால் ஏற்பட்ட
பெரும் பாவம் தனைப் போக்கும் பெரும் பலனை உளம் கொண்டு பேர் அரசு வேந்தர்களைப் பலியிட்டே அவர்களது
பெருக்கெடுத்த இரத்தத்தின் பெரும் குழம்புக் குங்குமத்தின் பூச்சுக்களால் உன்தனையே பொலியுறவே செய்தனையே –
———————————————————————-
87-க்ருபே க்ருத ஜகத் ஹிதே க்ருபண ஜந்து சிந்தாமணே
ரமா சஹசரம் ததா ரகுதுரீணயந்த்யா த்வயா
வ்யபஜ்யத சரித்பதி சக்ருத் அவேஷணாத் தத் ஷணாத்
ப்ரக்ருஷ்ட பஹூ பாதக ப்ரசம ஹேதுநா சேதுநா
ரமா சஹசரம்-சிறை இருந்தவள் ஏற்றம் என்பதால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டே பத பிரயோகம்
சேது தர்சனத்தாலே கர்மங்கள் கழிய வைத்த அவதாரம் –
அனைத்து உலகிற்கும் நன்மை புரிபவளாகவும் வேறு கதி இல்லாத உயிர்களின் விருப்பத்தை
நிறைவேற்றுபவளாகவும் உள்ள தயாதேவியே! முன்பு ஒரு காலத்தில் மஹாலக்ஷ்மியின் துணைவனான ஸ்ரீநிவாஸனை,
ரகுவம்சத்தில் சிறந்தவனான இராமனாகத் திருஅவதாரம் செய்வித்தாய்.
அப்போது உனது கடாக்ஷம் காரணமாக அனேக கொடிய பாவங்கள் அழியக் காரணமாக அமைக்கப்பட்ட அணையால் கடல் பிளக்கப்பட்டது.
இந்த உலகில் வேறு கதி இல்லாதவர்கள் அனைவருக்கும் அடைக்கலமாக நின்றவன் இராமனே ஆவான்.
மிக உயர்ந்த சரணாகதி தத்துவமானது ஓங்கி வெளிப்படுவதும் இராமாயணத்திலேயே ஆகும்.
சரணாகதிக்குத் தகுந்த ப்ரமாணமாக விளங்குவது இராமாயணம் ஆகும்.
சரணாகதியில் பெரியபிராட்டி வழிகாட்ட, அவள் பின்னே செல்வது மரபாகும்.
இங்கு ஸ்வாமி தேசிகன் “ரமா ஸஹசரம்” என்ற பிராட்டியை முன் நிறுத்திக் கூறியது காண்க.
சரணாகதிக்கு முக்கியமான தகுதியானது நம்முடைய பாவங்கள் கழிவதாகும்.
இராமன் அமைத்த சேது பாலத்தை ஒருமுறை தரிசித்தாலே பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.
ஆக இராமன் சேது பாலத்தை அமைத்து, சரணாகதி கிட்ட வழி செய்தது காண்க.
இராமனுக்குக் கடலரசன் மீது கோபம் வரவழைத்து, வானரசேனைகள் கடலைத் தாண்டும் விதமாக
இராமன் பாலம் அமைக்கும்படிச் செய்தது தயாதேவியின் செயலே ஆகும்.
இதன் உட்கருத்து –
பாவம் நிறைந்த பெரும் கடலான ஸம்ஸாரத்தைக் கண்ணால் பார்க்கக்கூடிய ஒரு வஸ்துவை ஏற்படுத்தி,
இப்படியாக ஒரு சுலபமான முறையில் பாவங்கள் நீங்கும்படிச் செய்தது தயா தேவையின் தந்திரமாகும்.
உலகத்தின் நலம் ஒன்றே உளம் கொண்டு வருத்தமுறும் உயிர்களுக்கு ஓர் சிந்தாமணி எனத் திகழும் தயை நீயே
மலை வேங்கடத்தலத்து யுறையும் மலர்மகளின் கேள்வனையே முன்னொரு நாள் இராமன் என வடிவெடுக்கச் செய்து அவனை
அலை கடலைக் கடந்து இலங்கை அவன் படையே அடைந்திடவே அணை ஒன்றைக் கடல் நடுவே அமைத்திடவே செய்தனையே
உலகோர் தாம் ஒரு முறையே உற்று அதனை தர்சித்தால் ஓர் க்ஷணத்தில் கொடு பாபம் அனைத்தையும் அழிக்கும் அவ்வணையே –
——————————————————————–
88-க்ருபே பரவத த்வயா வ்ருஷ க்ரீசிது க்ரீடிதம்
ஜகத் ஹிதம் அசேஷத தத் இதம் இத்தம் அர்த்தாப்யதே
மதச்சல பரிச்யுத ப்ரணத துஷ்க்ருத ப்ரேஷிதை
ஹத பிரபல தா நவை ஹல தரச்ய ஹேலா சதை
மது உண்டு மதி மயங்கியதைப் போல் காட்டிக் கொண்டு அடியார்கள் குற்றங்களைக் காணாமல்
ஸ்ரீ கிருஷ்ணனுடன் சேர்ந்து அரக்கர்களையும் அழித்தான்-
தயாதேவியே! உன்னிடம் வசப்படுள்ள ஸ்ரீநிவாஸனின் லீலைகள் அனைத்தும் இந்த உலகின் நன்மைக்காகவே ஆகும்.
இந்த வியப்பான செயல்கள் உண்மை என்பது, கலப்பையை கையில் கொண்ட பலராமனின் செயல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.
அவன் மதி இழந்த நிலை என்பதைக் கைக்கொண்டு அசுரர்களை அழித்தார்.
தயாதேவி ஸ்ரீநிவாஸனைப் பலராமனாக அவ தரிக்க வைத்தாள்.
க்ஷத்ரியனாகப் பிறந்த பலராமன், அரசர்கள் போன்று தானும் மதுவைப் பருகும் பழக்கம் கொண்டான்.
அதனால் மதி மயங்கியது போன்று தன்னைக் காட்டிக் கொண்டான்.
இதன் மூலம் தன்னுடைய அடியார்களின் குற்றங்களைக் காணாதவர் போன்று நடந்து கொண்டான்.
அதே நேரத்தில் கண்ணனுடன் சேர்ந்து பல அரக்கர்களையும் அழித்தான்.
மலை யரசாம் வேங்கடத்தில் மன்னி யுறை ஈசன் யுன் தன் வசமாகிப் புரிகின்ற விளையாடல் எல்லாமே
உலகுக்கு நலம் என்னும் உண்மை தனை தயா தேவீ உட் கொண்ட மது தன்னால் உறும் கலக்க மதி கொண்ட
பலராமன் எனப் பிறந்து பணிவோர் தம் தீவினையைப் பாராதவன் போல் செய்தும் பார் தன்னை நலிவித்த
வலியரக்கர் தமை யழித்தும் பலபலவாய் அவன் புரிந்த விளையாடல் தன்னாலே விளங்கிடவே செய்தனையே –
———————————————————————-
89-ப்ரபூத விபுத த்வஷித் பரண கின்ன விச்வம்பரா
பரஅபநயநச் சலாத் த்வம் அவதார்ய லஷ்மீ தரம்
நிராக்ருதவதீ தயே நிகம் சௌத தீப ச்ரியா
விபச்சித் அவகீதயா ஜகதி கீதயா அந்தம் தம –
தயாதேவியே! சிறந்த வலிமை கொண்ட தேவர்களுக்குப் பகைவர்களாக விரும்பிய அசுரர்களின் பாரத்தால் பூமாதேவி வருந்தினாள்.
அவளது வருத்தத்தை நீக்குவது என்ற ஒரு பாசாங்கு செய்து ஸ்ரீநிவாஸனைக் கண்ணனாக அவதரிக்கச் செய்தாய்.
அப்போது – வேதம் என்னும் மாளிகையின் உச்சியை அடைய உதவும் ஒளி போன்றதும், அனைத்து அறிவுள்ளவர்களால்
போற்றப்படுவதும் ஆகிய ஸ்ரீமத் பகவத் கீதை மூலம் இந்த உலகை சூழ்ந்த அஜ்ஞானம் என்னும் இருளை நீக்கினாய்.
இந்தப் பூமியின் பாரத்தை நீக்கவும், நம்முடைய சுமைகளை நீக்கவும் மஹாலக்ஷ்மியால்தான் இயலும் என்று உணர்ந்த
ஸ்ரீநிவாஸன் கண்ணனாக அவதரித்தபோது தன்னுடைய திருமார்பில் மஹாலக்ஷ்மியையும் சுமந்து வந்தான்.
இதனை விளக்கவே ஸ்வாமி தேசிகன், லக்ஷ்மீதரம் என்று அருளிச் செய்தார்.
இங்கு கீதையின் இரண்டு பெருமைகளைச் சுட்டிக் காண்பிக்கிறார்.
வேதம் என்னும் மாளிகையில் நாம் உள்ளே புகுந்து அனைத்தையும் உணரவைக்கும் விளக்காக கீதை உள்ளது என்பது முதல் பெருமையாகும்.
அனைவராலும் போற்றப்படும் உன்னதமான சாஸ்திரமாகக் கீதை உள்ளது என்பது இரண்டாவது பெருமையாகும்.
இங்கு உள்ள அவிகீதயா என்ற பதம் காண்க. விகீதா என்றால் ஆக்ஷேபம் செய்தல் என்று பொருள் ஆகும்.
ஆனால் கீதை அனைவராலும் ஏற்றுக் கொள்ளபடுவதால் அவிகீதயா என்றார்.
இராமன் நம்மிடம் இருந்தான் என்பதற்கும், கண்ணன் நம்மிடம் இருந்தான் என்பதற்கும்
இக்காலத்தில் வேள்வி எழலாம் என்று ஸ்வாமி தேசிகன் அன்றே தீர்க்க தரிசனமாக முடிவு காட்டினார் போலும்.
எனவேதான் இராமன் இருந்ததற்கான சாட்சியாக விளங்கும் சேது பாலத்தையும்,
கண்ணன் இருந்ததற்கான ஆதாரமான ஸ்ரீமத் பகவத் கீதையையும் கூறினார் போலும்.
தேவரிடம் பகை கொண்டு நலிந்தவரை வஞ்சித்த தீ வினையால் வலி மிக்கத் தானவரைச் சுமந்ததனால்
மா வருத்தம் மேலிட்ட மண் மகளின் பாரத்தைப் போக்கிடுதல் எனும் பெயரால் மலர்மகளின் நாதன் தனைப்
பூ வுலகில் கண்ணன் எனபி பிறக்க வைத்து வேதம் எனும் மாளிகையின் தீபம் என மறை வல்லோர் ஒரு மனதாய்ப் பாவிக்கும் கீதை தன்னைப் புகட்ட வைத்து அறியாமைப் பேர் இருளை ஒழித்திட்டாய் புவி தனிலே தயை நீயே –
———————————————————————-
90-வ்ருஷாத்ரி ஹய சாதின பிரபல தோ மருத் ப்ரேங்கித
த்விஷா ஸ்ப்புட தடித் குண த்வத் அவசேக சம்ச்காரவான்
கரிஷ்யதே தயே கலி பிரபல கர்ம நிர்மூலன
புன க்ருத யுகாங்குரம் புவி க்ருபாண தாராதர
கல்கியாக புதிய யுகம் தொடங்கி வைக்க திருமலை மேல் ஸ்ரீ நிவாசன் குதிரையில் அமர்ந்து
கத்தி வீசி காற்றை எங்கும் பரப்புகிறான் –
தயாதேவியே! திருவேங்கட மலையில் வாசம் செய்பவனும், குதிரை ஓட்டுவதில் வல்லவனும் ஆகிய
ஸ்ரீநிவாஸனின் தோள்களில் இருந்து எழும் காற்றால் வீசப்பட்டதும், மின்னல் போன்று ஒளி வீசுவதும்,
உன்னுடைய தோய்த்தல் காரணமாகச் சுத்தி அடைந்ததும் ஆகிய கத்தி என்னும் கருமேகம் –
கலியுகத்தில் பூமியில் உள்ள தாபங்களை வேருடன் அறுத்து,
க்ருதயுகம் உண்டாவதற்குத் தேவையான் முளைகளை உற்பத்தி செய்யப்போகிறது.
இங்கு கல்கி அவதாரம் குறித்துக் கூறுகிறார். கலி காலத்தின் இறுதியில் இந்த உலகில்
பாவம் நிறைந்த மக்கள் மட்டுமே இருப்பார்கள். அவர்களை அழித்துவிட்டுப் புதிய பயிர் போன்று
புதிய யுகத்தைத் தொடங்கி வைப்பான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மேகம் எங்கும் பரவுவதற்கு காற்று அவசியமாகும். இந்தக் காற்றானது, ஸ்ரீநிவாஸன் தனது கத்தியை வீசுவதால் உண்டாகிறது.
மலை மீது குதிரையில் அமர்ந்தபடி காற்று வீசினால், மேகம் எங்கும் பரவ ஏதுவாகும் அல்லவா?
மல்கும் புகழ் வேங்கடத்தில் மன்னி யுறை ஸ்ரீ நிவாஸன் பரி மீதில் பவனி வந்து மல் தோளாம் காற்றினுடை
தள்ளுதலால் பரவியதாய் தயை தன்னில் தோய்ந்ததனால் தீட்டலுற்று மின்னல்கள் நிறைந்ததுவாய் கலி என்னும்
வல் கோடைத் தாபத்தை வேர் அறுக்கும் கத்தி என்னும் முகில் தன்னால் கருணை என்னும் மாதன்னைப் பெய்விக்கும்
கல்கி என்னும் அவதாரம் தனை எடுத்துப் பூமியிலே கிருதயுக முளை தன்னைக் கிளர்ந்திடவே செய்திடுவாய் –
———————————————————
91-விஸ்வ உபகாரம் இதி நாம சதா துஹா நாம்
அத்யாபி தேவி பவதீம் அவதீர யந்தம்
நாதே நிவேசய வ்ருஷாத்ரி பதே தயே த்வம்
ந்யச்த ஸ்வ ரஷண பரம் த்வயி மாம் த்வயா ஏவ —
துஹா நாம் -கறத்தல் -ஸ்ரீ நிவாசன் பசு -தயா தேவி கருணையை பால் போலே கறந்து அளித்து சரணா கதரை ரஷிக்கிறாள்
மம வ்ரதம்-என்றவன் வ்ரதம் பங்கம் ஏற்படாத படி இடைவிடாத கைங்கர்யம் அளித்து அருளுகிறாள் –
தயாதேவியே! இப்படியாகக் கூறியபடி இந்த உலகிற்கு நீ பல நன்மைகளை எப்போதும் அளித்து வருகிறாய்.
ஆயினும் உன்னை நான் தொடர்ந்து அலக்ஷ்யம் செய்தபடியே உள்ளேன். உன் மூலமாக, உன்னிடத்தில்
என்னுடைய ரக்ஷணத்தை (என்னைக் காப்பாற்றும் பொறுப்பு) நான் வைத்துள்ளேன்.
இப்படிபட்ட என்னை, நீ ஸ்ரீநிவாஸனிடம் எப்போதும் வைத்திருப்பாயாக.
துஹாநாம் என்ற பதம் கறத்தல் என்ற பொருள் தரும்.
இதன் மூலம் தயாதேவி ஸ்ரீநிவாஸனைப் பசுவாக நினைத்து, அவனிடமிருந்து கருணையைப் பால் போன்று
கறந்து நமக்கு அளிக்கிறாள் என்று கருத்து. தாயானவள் குழந்தைக்கு இவ்விதம் பால் புகட்டும்போது,
அந்தத் தாயை குழந்தை தள்ளிவிடக் கூடும். ஆயினும் தாயானவள் பொறுமையுடன் குழந்தையைக் கவனிக்கிறாள்.
இது போன்றே தானும் (ஸ்வாமி தேசிகன்) தயாதேவியை உதாஸீனம் செய்தாலும், தன்னை அவள் கைவிடக்கூடாது என்கிறார்.
தாமாகவே சென்று தயாதேவியிடம் சரணாகதி அடைந்து, அதன் பின்னர் அவளை அலட்சியம் செய்தால்
அவள் நம்மைக் கைவிடுவது சரியே.
ஆனால் அவளாகவே வந்து நம்மைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுவதாக அல்லவோ கூறி உள்ளாள்?
இவ்விதம் விரதம் பூண்டபின், நம்மிடம் குறை கண்டு காப்பாற்ற மறுத்தால், அந்த விரதத்திற்குப் பங்கம் வந்து விடும் அல்லவா?
எனவே அந்தப் பங்கம் ஏற்படாமல் இருக்க ஸ்ரீநிவாஸனுக்கு நாம் எப்போதும் கைங்கர்யம் செய்யும்படி
உள்ள நிலையை அளிக்கவேண்டும் என்றார்.
இப்படியே நன்னலத்தை இவ்வுலகம் முழுதுமே எப்போதும் சுரக்கின்றாய் எம் வேங்கட தயை நீயே
தப்பாமல் என் தனையே தனைக் காக்கும் பொறுப்பு தனைத் தன்னிடத்தில் நீ தான் ஸமர்ப்பிக்கச் செய்திட்டாய்
இப்பவுமே அடியேன் நான் இன்னலையே செய்தவனாய் இரக்கமுள்ள உன்னிடத்தே இழைக்கின்றேன் புறக்கணிப்பே
இப்பாவி தனையே நீ இரக்கமுடன் பொருத்தருளி எம்பெருமான் திருவடியில் ஈந்திடுவாய் தயை நீயே
———————————————————————–
92-நை சர்க்கிகேண தரஸா கருணே நியுக்தா
நிம்ன இதரே அபி மயி தே விததி யதி ஸ்யாத்
விஸ்மாபயேத் வ்ருஷகிரி ஈஸ்வரம் அபி அவார்யா
வேலா அதி லங்கன தசா இவ மஹா அம்புராசே
அஹங்கரித்து இருக்கும் என்னையும் மூழ்கடிக்கும் உனது கருணை வெள்ள பிரவாஹத்தை கண்டு ஸ்ரீநிவாசன் வியந்தபடி உள்ளான் –
தயாதேவியே! உன்னுடைய கருணை என்னும் வெள்ளமானது, காப்பாற்றும் தன்மையைக் கொண்டுள்ளது.
அந்த வேகத்துடன் வீசும் உனது வெள்ளம், தாழ்மை என்பதே இல்லாமல் அஹங்காரம் என்ற உச்சியில் நிற்கின்ற
என் வரையில் வந்து வீசுகிறது. இப்படியாக கரையை உடைத்துக் கொண்டு வீசுகின்ற உன்னுடைய
கருணை என்னும் வெள்ளமானது, ஸ்ரீநிவாஸனையே வியப்பில் ஆழ்த்துகிறது.
ஸ்ரீநிவாஸன் மலையின் உச்சியில் நிற்கிறான். நான், என்னுடைய அஹங்காரம் காரணமாக,
அவனுக்குக் கட்டுப்படாதவன் என்னும் சிந்தனையுடன், அவனையும்விட உயர்ந்தவன் என்ற எண்ணத்துடன் உள்ளேன்.
ஆனால் உன்னுடைய வெள்ளமானது, நான் இருக்கும் உயரமான இடத்தையும் எட்டிப் பிடித்துவிடுகிறது.
இப்படியாக தன்னுடைய தலைக்கு மேலே ஓடும் வெள்ளத்தை ஸ்ரீநிவாஸன் வியந்து பார்க்கிறான்.
தன்னுடைய திருமலை மூழ்கிவிடும் ப்ரளயகாலம் வந்துவிட்டதோ என்று எண்ணுகிறான்.
அடியார் கண் தயை யுன் தன் அருள் வெள்ளம் பாய்வதிலே அதி விரைவு இயல்பாக அமைந்துளதை எவராலும்
தடுத்திடவே இயலாதே தவறுகளே செய்து வரும் நானோ வோர் உயர்வான நிலமாக இருக்கின்றேன்
விடுக்காது என் மீதும் வெள்ளத்தைப் பாய்ந்திட்டு வலுவாக எனைத் தன்மை உறச் செய்தும் தயை உன்னைத்
தடையிலாமல் கரை யுடைத்து தரணி எல்லாம் பரவிடுமோர் திரை கடலாய்க் கண்டு மிகத் திகைக்கின்றான் வேங்கடவனே –
—————————————————————————————
93-விஜ்ஞாத சாசன கதிர் விபரீத வ்ருத்த்யா
வ்ருத்ர ஆதிபி பரிசிதாம் பதவீம் பஜாமி
ஏதம் விதே வ்ருஷக்ரீச தயே மயி த்வம்
தீ நே விபோ சமய தண்டதரத்வ லீலாம்
வ்ருத்தாசூரன் போலே சாஸ்திரங்கள் மீறிய தகாத வழிகளில் நின்றாலும் சரணாகதன்
என்பதையே கொண்டு ரஷித்து அருள வேணும் –
தயாதேவியே! சாஸ்திரங்கள் எதனைத் தடுக்கின்றன, எதனைச் செய்தால் தண்டனை அளிக்கின்றன என்பதை நான் அறிவேன்.
ஆயினும் வ்ருத்ராஸுரன் முதலானவர்கள் கடைப்பிடித்த தகாத வழியை நான் பின்பற்றியபடி உள்ளேன்.
இப்படியாக நான் நின்றாலும் – என்னை ஏதும் அறியாதவன் என்று எண்ணியும், உன்னிடம் சரணம் புகுந்தவன்
என்ற காரணத்தாலும் ஸ்ரீநிவாஸன் என்னைத் தண்டிக்கும் நிலையை நீ தணிக்க வேண்டும்.
சாஸ்திரங்களை நன்றாக அறிந்தவன் தவறு செய்தால் தண்டனை அதிகம் என்பதும்,
சாஸ்திரம் தெரியாதவர்கள் தவறு செய்தால் தண்டனை குறைவு என்றும் கூறப்படுகிறது.
இங்கு தனக்குச் சாஸ்திரம் தெரிந்த காரணத்தால், தனக்குத் தண்டனை அதிகம் என்று ஸ்வாமி உணர்ந்தார்.
எனவே தனக்காக ஸ்ரீநிவாஸனிடம் பரிந்து பேசும்படிக் கூறினார்.
திருவேங்கட நாதன் தன் தயா தேவீ மறு சரணம் ஸாஸ்த்ரத்தால் அவன் விதித்த செயல் முறையை நன்கு அறிந்தும்
முரண்பட்ட செயல்களையே மதியாது செய்தவனாய் விதித்துள்ள செயல் தன்னை வரிக்காது புறக்கணித்தேன்
விருத்திரனைப் போலே அசுரர் வழி நடந்து போகின்ற வினையுடைய அடியேனின் விஷயத்தில் தண்டனையைப்
புரிதல் எனும் விளையாட்டைப் புரியாமல் இருப்பதற்குப் பெருமானின் சீற்றத்தைப் பரிந்து யுரைத்துத் தணிப்பாயே –
—————————————————————————–
94-மா சாஹஸ் உக்தி கன கஞ்சுக வஞ்சித அந்ய
பச்யத் ஸூ தேஷு விததாமி அதி சாஹசாநி
பத்மா சஹாய கருணே ந ருணத்சி கிம் த்வம்
கோரம் குலிங்க சகு நே இவ சேஷ்டிதம் மே
குலிங்க பறவை சிங்கம் உறங்கும் பொழுது வாயில் ஒட்டிக் கொண்டுள்ள மாமிசம் உண்டு கொண்டே
சாஹச செயலை செய்யாதே என்று சொல்வது போலே
தப்புக்களை செய்து கொண்டே மற்றவர்களுக்கு சாஸ்திரம் மீறக் கொடாது என்று உபதேசம் செய்கின்றனர் –
தயாதேவியே! மற்ற மனிதர்களிடம் ஸாஹஸம் செய்யாதே (அசட்டுத் துணிச்சலுடன் காரியம் செய்யாதே)
என்று கூறியபடி, உத்தமான மனிதன் என்று வேஷம் போட்டபடி , அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
நான் (ஸ்வாமி தேசிகன்) ஸாஹஸச் செயல்களைச் செய்கிறேன்.
குலிங்கம் என்ற பறவையின் செயல் போன்ற எனது துணிவான செயலை நீ ஏன் தண்டிக்காமல் உள்ளாய்?
கடந்த ச்லோகத்தில் சாஸ்திரங்களை மீறுவது தவறு என்று தெரிந்தும் அதனைத் தான் செய்வதாகக் கூறினார்.
இங்கு அந்த செயல்களைச் செய்யக்கூடாது என்று மற்றவர்களுக்கு உபதேசித்த போதிலும்,
அவைகளைத் தான் செய்வதாகக் கூறுகிறார். இதற்கு குலிங்கம் என்ற பறவையை உதாரணமாகக் கூறுகிறார்.
அந்தப் பறவையின் வாயில் இருந்து எப்போதும் “மா சாகஸம்” – ஸாகஸம் செய்யாதே என்ற ஒலி வந்து கொண்டே இருக்கும்.
ஆனால் அந்தப் பறவையானது, சிங்கம் உறங்கும்போது அதன் பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாமிசத்தை இழுத்துக் கொண்டுவரும்.
இதனை போன்றே தானும் செய்வதாகக் கூறுகிறார்.
மலர் மகளின் கேள்வன் தன் மனம் கவர்ந்த தயா தேவீ மற்றவரைத் தீ வினையில் முயலாதீர் என்றென்று
நலமுரைக்கும் கவசத்தை நன்கு அணிந்து நான் அவரை வஞ்சித்து அவருடைய முன்பேயே துணிவான
பல பலவாம் தீ வினைகள் புரிகிறேன் அடியேனே புரியாதீர் துணிவென்று போதித்ததையே தான் செய்யும்
குலிங்கம் எனும் பறவை போலே கோரமாக நான் புரியும் கொடும் வினையை நீ ஏனோ தடுக்காமல் இருக்கின்றாய் –
——————————————————————————
95-விஷேபம் அர்ஹசி தயே விபலாயிதே அபி
வ்யாஜம் விபாவ்ய வ்ருஷசைல பதே விஹாரம்
ஸ்வா தீன சத்த்வ சரணி ஸ்வயம் அத்ர ஜந்தௌ
த்ராகீயசீ த்ருடதரா குண வாகுரா த்வம்
ஸ்ரீ நிவாசன் உடைய திருக் கல்யாண குண வலையாக இருந்து விலங்கு போலே திரியும் எங்களை –
உண்டியே உடையே உகந்தொடும் எங்களை –
ஸ்ரீ நிவாசன் உடைய வேட்டை என்னும் வ்யாஜத்தாலே வலைப்படுத்தி
உங்களிடம் சேர்த்துக் கொள்ள வேண்டும் -விஷேபம் -வீசுதல் –
தயாதேவியே! உனக்கு அடங்கியதும், ஸத்வ குணத்தால் ஆனதும், நீண்டதாகவும், உறுதியானதாகவும் உள்ள
ஸ்ரீநிவாஸனின் குணம் என்னும் வலையாக நீ உள்ளாய்.
உங்களிடம் இருந்து என் போன்ற விலங்குகள் எத்தனை தூரம் ஓடினாலும், ஸ்ரீநிவாஸனின் வேட்டை என்பதை
ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, என் போன்றவர்கள் சென்ற வழியை அறிந்து, பிடித்துக்கொண்டு,
உங்களிடம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
நாங்கள் உலக விஷயம் என்னும் காடுகளில் மேய்ந்தபடி உள்ளோம். எங்களை பிடிக்கும் வேட்டை என்பதைச்
சாக்காக வைத்துக் கொண்டு, நாங்கள் திரிகின்ற இடத்திற்கு நீ ஸ்ரீநிவாஸனை அழைத்து வரவேண்டும்.
நாங்கள் எங்கே ஓடி ஒளிந்தாலும், எத்தனை தூரம் ஓடினாலும், எளிதாகப் பிடிக்கும்படி, நீ நீளமான கயிறாக வேண்டும்.
நாங்கள் உனது வலையை அறுத்துக் கொண்டு ஓட முயற்சித்தாலும், நீ உறுதியான கயிறாக இருக்க வேண்டும்.
விக்ஷேபம் என்றால் வீசுதல் என்று பொருள். இங்கு தயாதேவி கடாக்ஷத்தை வீசவேண்டும் என்று கூறுகிறார்.
தொலை தூரம் ஓடினாலும் விலங்குகளைப் பிடித்திடவே நற் கயிற்றால் உறுதியாக நீண்டதாக அமைந்த பெரும்
வலை போல நீ யுள்ளாய் வேங்கடவனின் தயா தேவீ விலங்குகளின் வழி போன்று ஸத்வ குண வழி யறிவாய்
விலங்கு போலே புலன் சுவையின் வழி நாடித் திரிகின்ற வினையுடைய அடியேனை வெகு தூரம் சென்றாலும்
விளையாட்டாம் வேங்கடவனின் வேட்டை தனைக் காரணமாய் வைத்து என்னைப் பிடிப்பதற்கு வீசிட நீ தக்கவளே –
————————————————————–
96-சந்தன்யமாநம் அபராத கணம் விசிந்தய
த்ரச்யாமி ஹந்த பவதீம் ச விபாவயாமி
அஹ்நாய மே வ்ருஷ கிரீச தயே ஐஹீமாம்
ஆஸீ விஷ க்ரஹண கேளி நிபாம் அவஸ்த்தாம்
பாவங்களையும் பிராயச் சித்தங்களையுமே மாறி மாறி செய்து கொண்டு கொடிய விஷம் உள்ள பாம்பை
கையில் பிடித்து விளையாட்டு காட்டும் பாம்பாட்டி போலே உள்ளேன் –இந்த நிலையில் இருந்து மாற்றி அருள வேணும் –
தயாதேவியே! தொடர்ச்சியாகச் செய்யப்படும் என்னுடைய பாவக்கூட்டங்களை நினைத்து நான் நடுங்கியபடி உள்ளேன்.
உன்னுடைய கருணையை நன்றாகத் த்யானிக்கிறேன்.
இவ்விதம் கொடிய விஷம் கொண்ட பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விளையாடுவது போன்ற என்னுடைய நிலையை நீ மாற்ற வேண்டும்.
தன்னுடைய செயலானது பாம்பாட்டியின் செயல் போன்று உள்ளது என்றார்.
பாம்பாட்டி பாம்புடன் விளையாடும்போது, அவனை அவைகளில் சில கடித்துவிடும்.
உடனே அவன் தகுந்த வைத்தியம் செய்து கொள்வான். பின்னர் மீண்டும் விளையாடும்போது, இதே நிலை உண்டாகும்.
இது போன்று பாவம் – ப்ராயச்சித்தம் என்றே வாழ்க்கையைக் கடத்துவதாகக் கூறுகிறார்.
இந்த நிலையில் இருந்து தன்னை மாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறார்.
தீம்புகளாம் வினைகளையே தொடர்ந்து நானே செய்வதையும் நினைந்திட்டு அஞ்சுகின்றேன் நின் தனையும் உளத்துள்ளே
ஓம்புகிறேன் திருமலையில் உற்றவனின் தயா தேவீ ஒப்பற்ற வியப்பு இதுவே உயிர் அழிக்கும் விஷமுள்ள
பாம்புடனே விளையாடும் பொல்லாத வினைகளையே பழகுவதே வாழ்வாகப் பொருந்தி நிற்கும் என்னுடைய
வீம்பான நிலை தன்னை விரைவாக ஒழித்திட்டு வேங்கடவனின் திருவடியில் வைக்காயோ எனை நீயே
——————————————————
97-ஔ த்ஸூக்ய பூர்வம் உபஹ்ருத்ய மஹா அபராதான்
மாத பிரசாதயிதம் இச்சதி மே மன த்வாம்
ஆலிஹ்ய தான் நிரவசேஷம் அலப்த திருப்தி
தாம்யசி அஹோ வ்ருஷ க்ரீச த்ருதா தயே த்வம்
பாபங்கள் எல்லாம் செய்து கொண்டே சமர்ப்பித்தாலும் திருப்தி அடையாமல் உண்டு கொண்டே இருக்கிறாயே –
குழந்தை அதிக பாபங்கள் செய்தால் குழந்தைக்கு நம்மால் அதிக அளவு ரஷிக்க முடியுமே என்ற எண்ணமோ –
தாயாகிய தயாதேவியே! எனது மனமானது நான் செய்யும் மிகப் பெரிய பாவங்களை ஆசையுடன்
உனக்குச் சமர்ப்பணம் செய்தபடி உள்ளது. இதன் மூலம் உன்னை மகிழ்விக்க எண்ணுகிறது.
அப்படிப்பட்ட அதனையும் நீ ஏற்றுக் கொண்டு, மீதம் வைக்காமல் உண்கிறாய்.
இப்படியாக உண்ட பின்னரும் த்ருப்தி அடையாமல் உள்ளாயே!
தன்னுடைய பாவங்கள் அனைத்தையும் தயாதேவிக்குச் சமர்ப்பணம் என்று அளித்தாலும், அவள் அவற்றை
மிகவும் மகிழ்வுடன் ஏற்பதாகக் கூறுகிறார் – காரணம் பாவங்கள் அதிகரித்தால் தான் இந்தக் குழந்தையை
அதிக அளவு காப்பாற்ற இயலும் என்று தயாதேவி நினைக்கிறாள்.
கருணை எனும் தாய் உனக்குக் காணிக்கையாய் என்னுடைய குற்றங்களை ஆவலுடன் கொடுத்து உன்னை மகிழ்விக்கும்
விருப்பத்தால் அடியேன் தன் மனம் தானே துடிக்கிறதே வேங்கடத்தில் எழுந்தருளி வேந்து செயும் எம்பெருமான்
தரிக்கின்ற கருணை நீயோ சிந்தாமல் பாபங்கள் தமை யனைத்தும் சுவைத்திட்டும் தணியாத பசியோடு
வருந்துகிறாய் அடி பணிந்த என் செயலைப் பொதாயும்(பெறிதாயும் ) உனதருளைச் சிறிதாயும் உளம் கொள்ளல் உன் சிறப்பே –
—————————————-
98-ஜஹ்யாத் வ்ருஷாசல பதி ப்ரதிகே அபி ந த்வாம்
கர்ம உபதப்த இவ சீதளாம் உதன்வான்
சா மாம் அருந்துத பரந்யாச ந அநு வ்ருத்தி
தத் வீஷணை ச்ப்ருச தயே தவ கேளி பத்மை
சரணா கதி செய்த பின்பும் நாங்கள் மீண்டும் மீண்டும் பாபச் செயல்கள் செய்வதால் ஸ்ரீநிவாசன் எங்கள் மேல் கோபம் கொள்கிறான்
நீ மறைந்து நின்று இருந்தாலும் உன்னைக் கண்டு பிடித்து உனது சிபாரிசால் சிறிய தண்டனையே கொடுக்கிறான்
த்ரௌபதி கோவிந்தா கூப்பிட்டதையையே பெரிய சுமையாகக் கொண்டவனுக்கு
நாங்கள் மீண்டும் மீண்டும் காப்பாற்று என்பதால் நீயும் அவனும் வருந்துகிறீர்கள் –
பெரிய கடலானது எத்தனை வெய்யில் அடித்தாலும், தனது இயல்பான குளிர்ச்சியைக் கைவிடாமல் உள்ளது.
அந்தக் கடல் போன்ற ஸ்ரீநிவாஸன், எங்களது பாவங்களைக் கண்டு எங்கள் மீது கோபம் கொண்டாலும்,
உன்னை விடாமலேயே உள்ளான். ஒரு முறைக்கு மேல் உன்னிடம், “என்னைக் காப்பாற்றுவாயாக”, என்று கூறினால்
மனவேதனை அடையும் தன்மையுள்ள நீ, உனது விளையாட்டுப் பொருளான தாமரை போன்ற
ஸ்ரீநிவாஸனின் கடாக்ஷங்களால் என்னைத் தொடுவாயாக.
ஸ்ரீநிவாஸனிடம் சரணாகதி அடைந்தவர்கள், அதன் பின்னர் செய்யும் பாவங்களைக் கண்டு அவனுக்கு மிகுந்த கோபம் உண்டாகிறது.
அவனது கோபம் கண்டு நீ அஞ்சியபடி மறைந்து கொள்கிறாய். ஆயினும் அவன் உன்னை மீண்டும் கண்டுபிடித்து,
உன் மூலமாக எங்களுக்கு உரிய தண்டனையைச் சிறிதளவாக ஆக்கிவிடுகிறான்.
த்ரௌபதி தன்னை ஒருமுறை “கோவிந்தா” என்று அழைத்ததே தன்னைப் பெரும் கடனாளி ஆக்கிவிட்டதாகக் கண்ணன் கூறினான் அல்லவா?
அப்படி உள்ளபோது மறுபடியும் காப்பாற்று என்று உன்னிடம் வேண்டினால் நீ நொந்து கொள்வது நியாயமே ஆகும்.
வெயில் தன்னால் சுட்டாலும் வார் கடலே தன் தண்மை விடாதது போல் அடியாரின் வினைகளினால் சினத்திற்கு
வயமாகும் நிலை தனிலும் வேங்கடவன் கருணை யுனை விட்டிடாமல் பற்றுவதும் மஹத்தான சிறப்பாமே
அயிர்ப்புதனால் ஒரு முறைக்கும் அதிகமாக பர ந்யாஸ அடைக்கலமே செய்வதனால் உளம் வருந்தும் தயை யுன் தன்
கையிலுள்ள நாதன் தன் கடை நோக்காம் தாமரையால் கனிவுடனே அடியேனைக் குளிர்ச்சியாக வருடாயோ –
————————————————————–
99-த்ருஷ்டே அபி துர்பலதியம் தமநே அபி த்ருப்தம்
ஸ்நாத்வா அபி தூளி ரசிகம் பஜநே அபி பீமம்
பத்த்வா க்ருஹாண வ்ருஷ சைல பதே தயே மாம்
த்வத் வாரணம் ஸ்வயம் அநு க்ரஹ ஸ்ருங்கலாபி –
ஸ்நாத்வா அபி தூளி ரசிகம்-யானை புழுதியை குளித்த பின் தன்மேல் போட்டுக் கொள்வது போலே பாபங்களை செய்து கொண்டே இருக்கிறோம்
இதே பத பிரயோகம் ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ரெங்க ராஜ சதகத்தில் செய்து அருளி உள்ளார்
அனுக்ரஹம் -கடாஷம் -பின்னே வந்து பிடித்தல் -இரண்டு பொருள்கள் -தவத் வாரணம் -உன் யானை உன்னை ஒதுக்குபவன்-
ஆதலால் -பின்னே வந்து சங்கிலியால் கட்டி அருள வேணும்
யதிராஜ சப்தத்தி -59-யதி ஷோணீ பர்த்து பாத யுகளம் மா மக மன மாதங்க பிரதம நிகளம் -என்று
ஸ்ரீ பாஷ்ய காரரின் அழகான இரண்டு திருவடிகளும் மதம் கொண்ட யானை போன்ற தம் மனதுக்கு முதல் விலங்கு என்கிறார் –
இதே கருத்தை தனது பகவத் த்யான சோபனத்தில் -மே சிந்தா ஹஸ்தி நீ பூஷாணானாம் ரச்மிபி த்ருட நியமிதா சித்ரம் ஆலான-என்று
யானை போன்ற தம்மனம் திருவரங்கனின் அழகான திருக் கரங்கள் என்னும் மரத்தில்
அவனது திரு ஆபரண ஒளி என்னும் கயிற்றால் கட்டப்பட்டு விட்டது என்கிறார்
தயாதேவியே! என் கண் முன்பாக உள்ள பொருள்களைக் கண்டு எனது புத்தி கலங்குகிறது.
நீ அதனை அடக்க முயற்சி செய்தாலும் எனது புத்தி மேலும் கர்வம் கொள்கிறது.
எத்தனை நீராடினாலும் புழுதியை விரும்பும் யானை போன்றும், எத்தனை உபசாரம் செய்தாலும் மயங்காமல்
விளங்குவதும் ஆகிய எனது புத்தியை நீ உனது கடாக்ஷம் என்ற சங்கிலி கொண்டு காட்டுவாயாக.
யானையைத் தொட்டு நம் வசப்படுத்த முடியாது, வ்லை வீசிப் பிடிக்க இயலாது. அதற்குத் தெரியாமல், பின்னே வந்து,
சங்கிலியால் கட்டியே அதனை அடக்க இயலும். அரண்மனைக்கு அழைத்து வந்து, எத்தனை உபசாரம் செய்தாலும்,
அந்த சுகத்தைக் காட்டிலும், சுதந்திரமாக திரிவதையே விரும்பும்.
எத்தனை நீராட்டி வைத்தாலும் புழுதியை மேலே பூசிக் கொள்வதையே விரும்பும்.
மேலே உள்ள யானையைப் போன்று தனது புத்தி உள்ளதாகக் கூறுகிறார்.
யானை புழுதியை இறைப்பது போன்று, தன் மீது பாவம் என்பதைப் பூசிக் கொள்வதாகக் கூறுகிறார்.
அநுக்ரஹம் என்ற பதத்திற்கு – கடாக்ஷம், பின்னே வந்து பிடித்தல் – என்று இரு பொருள்கள் உண்டு.
த்வத் வாரணம் என்ற பதத்திற்கு – உனது யானை, உன்னை ஒதுக்குபவன் – என்று இரு பொருள்கள் உண்டு.
ஆக, யானையாகிய தன்னை, பின்னே வந்து சங்கிலியால் கட்டுவதே இயலும் என்றார்.
ஸ்ரீபராசரபட்டர் அருளிச் செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் – ஸ்நாத்வா அபி தூளி ரஸிகம் –
யானையானது தன் மீது புழுதியை இறைத்துக் கொள்வது போன்று,
பெரியபெருமாள் எனது தாழ்வான துதிகளை ஏற்றுக் கொள்கிறான் – என்பதைக் காண்க.
பட்டர் உபயோகித்த – ஸ்நாத்வா அபி தூளி ரஸிகம் – என்ற பதங்களையே ஸ்வாமி தேசிகன் கையாண்டதைக் காண்க.
தான் அருளிச் செய்த யதிராஜ சப்ததியில் (59) – யதி க்ஷோணீ பர்த்து: பாத யுகளம் … மாமக மந: மாதங்க ப்ரதம நிகளம் –
ஸ்ரீபாஷ்யகாரரின் அழகான இரண்டு திருவடிகளும் … எனது மனமாகிய மதம் கொண்ட யானையின் முதல் விலங்கு – என்றார்.
இதே கருத்தை, தான் அருளிச் செய்த பகவத் த்யான ஸோபானத்தில் (7) –
மே சிந்தா ஹஸ்திநீ பூஷணானாம் ரச்மிபி: த்ருட நியமிதா சித்ரம் ஆலாந – யானை போன்ற தனது மனமானது,
திருவரங்கனின் அழகான திருக்கரங்கள் என்னும் மரத்தில், அவன் அணிந்துள்ள திருவாபரணங்களின்
ஒளி என்னும் கயிறு கொண்டு கட்டப்பட்டுவிட்டது – என்றார்.
நேரிலுள்ள பொருள் தனிலும் நயப்பிலாது மனம் கலங்கும் தண்டிக்கிலும் அடங்காது செருக்கோடு துணிந்து நிற்கும்
நீராட்டின் புழுதியிலே நன்குளையும் உணவோடு நெருங்கிடிலோ அச்சுறுத்தி நெடிதுயர்ந்து நின்றிடுமோர் வாரணம் போல் அடியேனும் வளர்ந்துள்ளேன் திரு வேங்கடவன்
விருப்பமுறும் தயா தேவீ வழி தவறி நடக்கும் என்னை
ஆரருளாம் சங்கிலியால் அழுத்தமுறக் கட்டி யுன் தன் ஆளுகைக்கு உட்படுத்தி அறிவு ஊட்டிக் காப்பாயே –
———————————————————————————–
100-ந அத பரம் கிமபி மே த்வயி நாத நீயம்
மாத தயே மயி குருஷ்வ ததா பிரசாதம்
பத்த ஆதர வ்ருஷகிரி பிரணயீ யதா அசௌ
முக்த அநு பூதிம் இஹ தாஸ்யதி மே முக-
முக்தர்கள் பெரும் பேற்றை இந்த பூமியில் இங்கேயே-திருமலையிலே பெற வேணும்
அபீதி ஸ்தவம்-20- -பிரபோ முகுந்த –ரங்க தாம்நி வயம் ஸ்வயம் சமுதிதம் தவ வபு —
சதா நிசா மயந்த த்ரிதச நிர்வ்ருதிம் புவி விந்தேமஹி -என்று
இதே போலே ஸ்ரீரங்கத்திலே முக்தர் பேற்றை அளிக்க பிரார்த்திக்கிறார்
தயாதேவியே! இதற்கு மேல் உன்னிடம் விண்ணப்பிக்க வேண்டியது வேறு எதுவும் இல்லை.
திருவேங்கட மலையில் மிகவும் விருப்பத்துடன் எழுந்தருளியுள்ள ஸ்ரீநிவாஸன் என்னிடம் மிகுந்த அன்பு செய்ய வேண்டும்.
அவன் பரமபதத்தில் முக்தர்களுக்கு எத்தகைய அனுபவம் அளிப்பானோ, அதனை எனக்கு நீ அருளிச் செய்ய வேண்டும்.
தயாதேவி ஸ்வாமி தேசிகனிடம், “கிம் தே பூய: ப்ரியமிதி கில ஸ்மேர வக்த்ரா விபாஸி (ஸ்ரீஸ்ருதி – 23) –
உனக்கு இன்னும் நான் என்ன செய்ய வேண்டும், நீ என்ன விரும்புகிறாய்?”, என்று கேட்டாள்.
அதற்கு ஸ்வாமி, “பரமபதத்தில் முக்தர்கள் பெறும் ஆனந்தத்தை நான் இந்தப் பூமியிலேயே பெற வேண்டும்”, என்றார்.
ஸ்வாமி தன்னுடைய அபீதிஸ்தவத்தில் (20) – ப்ரபோ .. முகுந்த … ரங்கதாம்நி …. வயம் ஸ்வயம் ஸமுதிதம்
தவ வபு: ஸதா நிசாமயந்த: த்ரிதச நிர்வ்ருதிம் புவி விந்தேமஹி –
ஸ்ரீரங்கநாதா! அழகியமணவாளா! தானாகவே வெளிப்பட்ட உன்னுடைய அற்புதமான திருமேனியை எப்போதும் சேவித்தபடி,
முக்தர்கள் பெறும் ஆனந்தத்தை, இந்தத் திருவரங்கத்திலேயே வாழ்ந்து நான் பெறுவேனாக – என்று கூறியது காண்க.
இங்கு முகுந்த என்ற பதத்தையே பெரியபெருமாளுக்கு உபயோகித்தார்.
ஆக ஸ்ரீநிவாஸனின் அன்புடனும், தயாதேவியின் கடாக்ஷத்துடனும் திருவரங்கத்திலே வசிப்பது ஸ்வாமி தேசிகனின் திருவுள்ளம் எனலாம்.
ஆயினும் ச்லோகத்தில் உள்ள இஹ என்ற பதம் திருமலையையைக் குறிப்பதாக கொண்டு –திருமலையில் வசிப்பதை விரும்பியதாகவும் கொள்ளலாம்.
தரணிக்குத் தாயாகத் திகழ்கின்ற தயா தேவீ திருமலையில் காதலுற்றத் திரு மாலைக் கருணையுடன்
பேருலகில் முக்தர்கள் பெறுகின்ற அனுபவத்தைப் புவியினிலே இப்போதே பூரணமாய் நானுறவே
பேர் அருளைச் செய்யும்படி பரிவுடனே அருளிடுவாய் புரிந்திட்டேன் அடியேன் பர ந்யாஸம் நின்னிடமே
வேறு எதுவும் இது தன்னில் மேலாக நின்னிடமே வேண்டுதற்கு இலை எனவே வேட்பது நான் இது ஒன்றே –
———————————————————————————
101-நிஸ் ஸீம வைபவ ஜுஷாம் மிஷதாம் குணா நாம்
ஸ்தோது தயே வ்ருஷகிரீச குணேச்வரீம் த்வாம்
தை ஏவ நூநம் அவஸை அபி நந்திதம் மே
சத்யாபிதம் தவ பலாத் அகுதோபயத்வம்
தயா தேவியை புகழ்ந்து ஸ்துதித்தலால் மற்ற குணங்களும் மகிழ்ந்தன என்கிறார் –
யாருக்கும் அஞ்சாத தன்மை இத்தால் சித்தித்தது என்கிறார்
தயாதேவியே! எல்லையற்ற மேன்மை உடையதான ஸ்ரீநிவாஸனின் மற்ற திருக்கல்யாண குணங்கள் அனைத்தும்
பார்த்துக்கொண்டு நிற்கும்போது, அவைகளின் தலைவி போன்று இருக்கும் உன்னை நான் துதித்தேன்.
இதனைக் கண்டு அந்தக் குணங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. அவைகள் என்னைக் கொண்டாடின.
இதனைக் காணும்போது, உனது பலம் மூலமாக யாருக்கும் அஞ்சாத தன்மை சித்திக்கும் என்பது உண்மையாகிறது.
ஸ்ரீநிவாஸனுடைய மற்ற குணங்கள் பார்த்து கொண்டு இருக்கும்போதே, அவற்றைப் புறக்கணித்து,
தயை குணத்தை மட்டும் புகழ்ந்ததைப் பற்றிக் கூறுகிறார். தயை குணத்தின் மேன்மை காரணமாகவும்,
தயை குணத்தின் மீது மற்ற குணங்களுக்குப் பொறாமை இல்லாத காரணத்தாலும்
அவை தன்னைக் கோபிக்கவில்லை என்றார்.
இதன் காரணம் – தயாதேவியைத் துதிப்பவர்களுக்கு யார் மூலமாகவும் அச்சம் ஏற்படாது.
எல்லையிலா புகழுடைய எஞ்சிய நற் குணங்கள் தம் எதிரிலேயே திரு வேங்கட நாதனது திருக் குணங்கள்
எல்லோருக்கும் தலைவி என ஏற்றவளாய் தயை யுன்னை ஏத்தும் இந்த ஸ்துதி செய்த என் தனக்கு பயம் எதுவும்
இல்லாத பெரும் தன்மை உன் தனது பலத்தாலே ஏற்பட்டு நிலையாக இருப்பதனை அக் குணங்கள்
எல்லாமே கண்டு உன்னை ஏத்துகின்ற படியாலே என் தனது அச்சமின்மை உண்மை என ஆனதம்மா –
——————————————————————
102-அத்ய அபி தத் வ்ருஷகிரீச தாயே பவத்யாம்
ஆரம்ப மாத்ரம் அநிதம் பிரதம ஸ்து தீநாம்
சந்தர்சித ஸ்வ பர நிர்வஹணா சஹேதா
மந்தச்ய சாஹசம் இதம் த்வயி வந்தின மே
வேதங்களும் பின் வாங்கிய விஷயத்தில் மந்த புத்தி உள்ளவன் கை வைத்ததால்-
மன்னிக்க முடியாத குற்றம் செய்ததாகக் கண்டு பொறுமை காட்டி அருள வேணும் என்கிறார்
தயாதேவியே! இன்று தொடங்கி இயற்றப்பட்ட ச்லோகம் முதலாக, எல்லையற்ற காலமாக இருந்து வரும்
வேதங்கள் உட்பட அனைத்தும் உன்னைப் பற்றிப் புகழத் தொடங்கின.
ஆயினும் ஓர் அடி கூட நகராமல் அப்படியே நின்று விட்டன. இப்படிப்பட்ட மேன்மை உடைய உனது விஷயத்தில்,
குறைந்த புத்தியே உடையவனான எனது இந்தத் துணிவான செயலை நீ பொறுத்துக் கொள்ளவேண்டும்.
மற்றவர்கள் விஷயத்தில் பொறுமை காட்டும் நீ,
உன்னைப் பற்றிய விஷயத்தைத் தொடங்கிய என் விஷயத்திலும் பொறுமை கொள்ளவேண்டும்.
அனைத்துக் குற்றங்களையும் தயாதேவி பொறுத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில்,
தான் (ஸ்வாமி தேசிகன்) துதி பாடியதாகக் கூறுகிறார்.
அனைத்தையும் அறிந்த வேதங்கள், பகவானின் குணங்களைப் புகழத் தொடங்கி –
யதோ வாசோ நிவர்த்தந்தே – வாக்கும் மனமும் அவனை எட்ட முடியாமல் திருபுகின்றன – என்று கூறியது.
அப்படிப்பட்ட பகவானின் குணங்களைப் புகழத் தொடங்கினாலும் மன்னிக்கலாம்;
ஆனால் தான் புகழத் தொடங்கியது – பகவானின் குணங்களுடைய பேரரசியாக உள்ள தயாதேவியை என்பதால்
மன்னிக்க இயலாத குற்றம் புரிந்ததாக வருந்துகிறார். இந்தக் குற்றத்தை தயாதேவி பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
திரு வேங்கட நாதன் தன் தயை எனும் பெரும் தேவீ ஸ்துதித்து உன்னைப் பாராட்டும் துணிவு தன்னை மேற் கொண்ட
அறிவுற்ற அடியேனின் இப் பெரிய பிழை தன்னை அருள் கொண்டு பொறுத்திடுவாய் அதற்கும் நீ வல்லவளே
அறியாத காலம் முதல் அருள் உன்னை ஸ்துதிப்பதிலே ஆரணங்கள் எல்லாமே அமைந்திட்ட போதிலுமே
பெரும் காலம் ஆன பின்பும் புகழ்கின்ற முதல் கட்டப் படி தாண்டிச் செல்லாமல் புதையுற்று நின்றனவே –
————————————————
103-ப்ராய தயே த்வத் அநு பாவ மஹா அம்புராசௌ
ப்ரா சேதச ப்ரப்ருதய அபி பரம் தடஸ்த்தா
தத்ர அவதீர்ணம் அதல ஸ்ப்ருசம் ஆப்லுதம் மாம்
பத்மாபதே பிரஹசன உசிதம் ஆத்ரியேதா
அதல ஸ்பருசம்-தரை காண முடியாமல் கடலில் இறங்கி தவிக்கின்றேன் –
வால்மீகி போன்றாரும் செய்யாத செயலை செய்வதாக கோலி-மூழ்கின்றேன்
குழந்தை தத்தி தத்தி நடப்பதை கண்டு மகிழும் பெற்றோர் போல் நீயும் ஸ்ரீ நிவாசனும் சேர்ந்து மகிழ்கிறீர்கள்
நம்மாலேகூட முடியாத செயலை இந்த நம் பையல் முயல்கின்றான் என்று ஸ்ரீ நிவாசன் சிரிக்கின்றான் –
தயாதேவியே! பெரிய கடல் போன்ற உனது பெருமையின் கரையிலேயே வால்மீகி முதலான முனிவர்கள் நின்று விட்டனர்.
அப்படிப்பட்ட கடலில் நான் இறங்கி, அதன் தரையில் கால் படாமல் மூழ்கியபடித் தவிக்கிறேன்.
என்னைப் பார்த்து ஸ்ரீநிவாஸனும் பெரியபிராட்டியாரும் சிரிக்கின்றனர்.
இப்படிப்பட்ட என்னை, நீயே ஆதரிக்க வேண்டும்.
ச்லோகத்தில் உள்ள “அதலஸ்ப்ருசம்” என்ற பதம், தரை காண இயலாமல் தவிக்கும் நிலையைக் கூறுகிறது.
தங்களது குழந்தை தத்தித்தத்தி நடப்பதைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ந்து சிரிப்பது போல்
தனது நிலை கண்டு ஸ்ரீநிவாஸன் சிரித்தான் என்றார்.
இங்கு ஸ்ரீநிவாஸன் தனது மனதில், “நம்மாலேயே தயாதேவியை முழுவதுமாக அறிய இயலவில்லை.
இப்படி உள்ளபோது இவன் புரிந்து கொண்டானோ?”, என்று கேலியாகச் சிரிப்பதாகவும் கொள்ளலாம்.
பெரும் கடலாம் உன்னுடைய பெருமை தனை தயா தேவீ பாட வந்த வால் மீகிப் பெரு முனிவர் பலர் தாமும்
பெரும் பாலும் கரை தன்னில் பணிவோடு நின்றுனது பெருமை தனின் சிறு துளியே பேசியராய் ஓய்ந்தனரே
இறங்கினனே அக்கடலுள் அடியேனே துணிச்சலுடன் இறுதி வரைச் சென்றிடவே அதில் மூழ்கி எழுகின்ற
அரும் செயலில் உற்றிடும் நான் அரவிந்த மகள் பதியின் நகைப்புக்கு உள்ளானேன் ஆதரிப்பாய் எனை நீயே –
——————————————
104-வேதாந்த தேசிக பதே விநிவேச்ய பாலம்
தேவ தயா சதகம் எதத் அவாதயத் மாம்
வைஹாரிகேண விதினா சமயே க்ருஹீதம்
வீணா விசேஷம் இவ வேங்கட சைல நாத –
லீலைகள் செய்வதையே ஸ்வ பாவமாக கொண்ட ஸ்ரீ நிவாசன் தூப்புல் பிள்ளையை வேதாந்த தேசிகனாக்கி
வீணையை கையில் எடுத்து மீட்டுவது போலே இந்த தயா சாதகத்தை ஆக்கி வைத்தான் –
தான் வீணை -அவன் வீணை வித்வான் -அர்ஜுனனை தேர் தட்டில் நிறுத்தி தானே அனைத்தும் செய்து அருளியது போலே
திரு அத்யயன உத்சவத்தின் மேன்மையை நிலை நாட்டி -அத்வைதிகளை வென்று –மீண்டும் நடை பெற செய்ததால்
திருவரங்கன் வேதாந்தாசார்யர் பட்டம் கொடுத்து அருளினான் –
தயாதேவியே! எப்போதும் லீலைகள் செய்வதையே ஸ்வபாவமாகக் கொண்டுள்ள ஸ்ரீநிவாஸன்,
ஏதும் அறியாத இந்தத் தூப்புல் பிள்ளையை, வேதாந்தாசார்யன் என்ற ஸ்தானத்தில் வைத்தான்.
சரியான நேரத்தில் வீணையைக் கையில் எடுத்து மீட்டுவது போன்று, என்னை இந்த தயாசதகத்தை இயற்ற வைத்தான்.
இங்கு ஸ்ரீநிவாஸனை வீணை வித்வானாகவும், தன்னை அவனால் மீட்டப்பட்ட வீணையாகவும் கூறுகிறார்.
வீணை இனிமையாக ஒலி எழுப்பியது என்றால், அது வீணை வித்வானின் திறமையே அன்றி வீணையின் திறமையால் அல்ல.
அர்ஜுனனைத் தேர்த் தட்டில் ஒரு சாக்கு போக்காக மட்டுமே அமர வைத்து, தானே போர் நிகழ்த்திய கண்ணனைப் போன்று,
தன்னை முன் நிறுத்தி, தன் மூலமாக தயாதசகம் இயற்றினான் என்று கருத்து.
தன்னை வேதாந்தாசார்யன் என்று கௌரவித்ததாகக் கூறியதன் பொருள் என்ன?
ஒரு முறை திருவரங்கத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த திருஅத்யயன உற்சவத்தை,
அத்வைதிகள் – தமிழில் கோவில் உற்சவங்கள் நடத்தக்கூடாது – என்று ஆட்சேபம் செய்தனர்.
அப்போது நம்பெருமாள் நியமனத்தின் பேரில் அங்குள்ள ஆசார்யர்கள், ஸ்வாமி தேசிகனைத் திருவரங்கத்திற்கு வருமாறு பணித்தனர்.
நம்பொருமாளின் உத்தரவை ஏற்று திருவரங்கம் வந்த ஸ்வாமி தேசிகன், தனது வாதத்தால் அத்வைதிகளை வென்றார்.
இதன் மூலம் அத்யயன உற்சவத்தின் மேன்மையை நிலை நாட்டினார்.
இந்தச் செயலை கண்டு மகிழ்ந்த அழகிய மணவாளன் ஸ்வாமிக்கு – வேதாந்தாச்சாரியன் — என்று விருது அளித்து கௌரவித்தான்.
இங்கு ஸ்ரீநிவாஸனைப் பற்றி கூறும் போது திருவரங்கனை ஏன் கூறவேண்டும்?
அமலனாதிபிரானில் – வடவேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் –
என்று கூறியதால், ஸ்ரீநிவாஸனே திருவரங்கன் என்பதும், பெரியபெருமாளே ஸ்ரீநிவாஸன் என்பது புலப்படுகிறது.
திருவேங்கட மலை நிற்கும் திருமகளின் கேள்வன் தான்
சிறுவனாகும் அடியேனுக்கு வேதாந்த ஆரியனாம்
பெரும் பதவி தந்து எனை ஓர் ஆளாக்கித் தயை நூறாம்
பெரு நூலை இசைத்திட்டுப் புரிந்தனனே விளையாட்டே –
——————————————————–
105- அநவதிதம் அதிக்ருத்ய ஸ்ரீ நிவாச அநு கம்பாம்
அவிதத விஷயத்வாத் விச்வம் அவரிட யந்தி
விவித குசல நிவீ வேங்கடேச பிர ஸூ தா
ஸ்துதி இயம் அநவத்யா சோபதே சத்வ பாஜாம்
கவி தார்ஹ சிம்ஹம் வேங்கடேசனே அருளிச் செய்தார் என்றும் ஸ்ரீ நிவாசனே பண்ணி வைத்தான் என்றும்
உண்மையைச் சொல்வதால் வெட்கப் பட வேண்டாமே
ஸ்ரீநிவாஸனின் எல்லையற்ற தயை குணத்தைக் குறித்து, அவனது கருணையை இலக்காக கொண்டு,
இந்த ஸ்துதியானது வேங்கடேசனிடம் இருந்து தோன்றியது.
இதில் உள்ள அனைத்தும் உண்மையாக, பொய்யில்லாமல் இருப்பதால், யாரையும் வெட்கம் அடையச் செய்யாதவாறு உள்ளது.
அனைத்துச் க்ஷேமங்களையும் அளிக்கவல்ல செல்வமாக உள்ளது. தோஷங்கள் அற்றதாக உள்ளது.
இப்படியாக இந்த ஸ்துதி, ஸத்வ குணம் உள்ளவர்களுக்கு இனிமையை அளிக்கும்படி இருக்கிறது.
ச்லோகம் 102, 103 ல், இந்த ஸ்துதியை தான் இயற்றியதாகக் கூறினார்.
ஆனால் ச்லோகம் 104 ல், இந்த ஸ்துதியை தன் மூலமாக ஸ்ரீநிவாஸனே இயற்றியதாகக் கூறினார்.
“கவிதார்க்கிக ஸிம்ஹம்” என்று பெயர் பெற்றவர் இப்படி முன்பின் முரணாகப் பேசலாமா என்ற வேள்வி எழலாம்.
அதற்கு இந்தச் ச்லோகத்தில் ஸமாதானம் கூறுகிறார். எப்படி எனில் –
இந்த ஸ்துதியை வேங்கடேசன் ஆகிய ஸ்ரீநிவாஸன் இயற்றினான் என்பதும்,
வேங்கடேசனாகிய ஸ்வாமி தேசிகன் இயற்றினார் என்பதும் ஆகிய இரண்டுமே உண்மையாகுகிறது
(ச்லோகத்தில் உள்ள வேங்கடேசன் என்னும் பதம் இருவரையுமே குறிக்கும்).
இங்கு யாருக்கும் வெட்கம் உண்டாகாது என்று ஏன் கூறவேண்டும்?
ஒரு வஸ்துவிடம் இல்லாத தன்மையை, அதற்கு இருப்பதாகப் பொய்யாகக் கூறித் துதித்தால் –
துதிக்கப்படும் வஸ்து, துதிக்கப்படும் வஸ்துவைத் துதிப்பவர் ஆகிய இருவருக்குமே வெட்கம் ஏற்படும்.
ஆனால் இந்த ஸ்துதியில் உள்ள விஷயங்கள் அனைத்தும் உண்மையாக இருப்பதால் யாருக்கும் வெட்கம் ஏற்படாது என்றார்.
திருமகளின் உறைவிடமாம் திருமாலின் எல்லையிலா தயை குறித்து வெங்கடேசன் என்கின்ற அடியனிடம்
பிறந்திட்ட இத் ஸ்துதியில் பொய் கலவா நற் பொருள்கள் பொதிந்து உளதால் இந்நூலைப் படிப்பவரும் கேட்பவரும்
தரணியிலே யாவருமே தலை குனிந்து நாண் யடையும் நிலை ஏதும் ஏற்படாமல் நலம் தனையே பலவாறு
தருகின்ற திறமையுடன் சிறக்கின்ற இக் கவிதை சாதுக்களின் உள்ளங்களில் ஸோபித்து விளங்கிடுமே –
—————————————————————-
106-சதகம் இதம் உதாரம் சம்யக் அப்யச்ய மானான்
வ்ருஷகிரீம் அதிருஹ்ய வ்யக்தம் ஆலோக யந்தீ
அனிதர சரணா நாம் ஆதி ராஜே அபி ஷிஞ்சேத்
சமித விமத பஷா சார்ங்க தந்வா அநு கம்பா
அப்யாசம் பல முறை படித்தல் சமயக் சரியாக படித்தல் கடாஷ அலை வீசி சரணா கதர்களின் சக்ரவர்த்தி ஆக்குவிப்பாள்-
யார் யார் எதனை விருப்பினாலும், அதனை அளிக்கும் வள்ளல் போன்று இந்த நூறு ச்லோகங்களும்
அவர்கள் விரும்புவதை அளிக்க வல்லது.
இதனை நன்றாக, பாராயணமாகப் படிப்பவர்களை – திருமலை மீது எழுந்தருளி, ஏற்றத் தாழ்வின்றி கடாக்ஷிக்கும்
ஸ்ரீநிவாஸனின் தயாதேவியானவள், அவர்களது விரோதிகளை அடக்கி விடுவாள்.
வேறு கதி இல்லாத சரணாகதர்களின் கூட்டத்திற்குச் சக்ரவர்த்தி என்ற முடி சூட்டுவாள்.
அப்யாஸம் என்றால் பலமுறை படிப்பதாகும். ஸம்யக் என்றால் சரியாகப் படிப்பதாகும்.
ஆக இதனை மீண்டும் மீண்டும் சரியாகப் படிப்பதன் பலனைக் கூறுகிறார்.
இவ்விதம் படிப்பவர்களை தயாதேவி திருவேங்கடமலையின் மேலே நின்று கொண்டு பார்த்தபடி உள்ளாள்.
அவர்களுக்குத் தன் கடாக்ஷத்தை வீசியபடி உள்ளாள்.
அனைத்து நல்ல பயன்களையே அள்ளித்தரும் இந்நூறாம் அரு நூலை நன்றாக அறிந்து ஓதிப் பழகுகின்ற
மனிதர்களைத் திரு வேங்கட மலை மீதே ஏறி நின்று மலர்க்கண்ணால் அருள் புரிந்து சார்ங்க வில்லாளன்
மனமுகாந்த கருணை மகள் மாளாத தடை விலக்கி மனத்தாலும் வேறுபாயம் விழையாது சரணடைந்த
அனைத்தோறும் அனுபவிக்கும் அழியாத பெரும் பதத்தில் ஆட்சி செய முடி சூட்டி அரசர் என ஆக்குவளே –
———————————————————————
107-விஸ்வ அனுக்ரஹ மாத்ரம் வ்யதி ஷஜத் சவர்க்க அபவர்க்காம் ஸூ தா
சத்ரீசீம் இதி வேங்கடேஸ்வர கவி பக்த்யாம் தாம் அஸ்துத
பத்யா நாம் இஹ யத் விதேய பகவத் சங்கல்ப கல்ப தருமாத்
ஜ்ஞ்ஜாமாருத தூத ஸூத நயத சாம்பாதிக அயம் க்ரம
பகவத் சங்கல்பம் என்கிற கற்பக மரத்தில் இருந்து தயை என்னும் காற்றால் வீழ்ந்த கனிகள் போல்வன இந்த பிரபந்தம்
அனைத்து உலகிற்கு கடாக்ஷம் அளிக்கவல்ல தாயாகவும், அமிர்தம் போன்று இனியவளும்,
ஸ்வர்கம் மற்றும் மோக்ஷத்தை அளிப்பவளும் ஆகிய தயாதேவியே!
வேங்கடேசன் என்னும் கவி, பக்தியுடன் இவ்விதமாகத் துதித்தார். இந்தத் துதியில் துதிக்கப்பட்ட தயாதேவி
இட்டதே சட்டமாக ஸ்ரீநிவாஸனின் ஸங்கல்பம் உள்ளது. இந்தச் ஸங்கல்பம் என்ற கற்பக மரத்திலிருந்து,
என்னுடைய புத்தி மூலம் இந்த 100 கனிகள் பெறும் காற்றில் விழுந்தது போன்று உதிர்ந்தன.
எந்த ஒரு பலனும் பகவானின் ஸங்கல்பம் மூலமே கிட்டும். அப்படிப்பட்ட பகவத் ஸங்கல்பம் என்பது
கற்பகம் மரம் போன்று இருந்தாலும், அது தயாதேவிக்கு அடங்கியதாகவே உள்ளது.
இந்த ஸ்துதியானது, அப்படிப்பட்ட பகவத் ஸங்கல்பம் மூலம், தயை என்னும் காற்று வீசி விழுந்த கனிகள் என்று கூறுகிறார்.
ச்லோகத்தில் உள்ள ஸ்வர்கம் என்ற பதம் தர்மம், அர்த்தம், காமம் என்ற மூன்றையும் குறிக்கும்.
இந்த மூன்றையும், மேலும் மிக உயர்த்த புருஷார்த்தமான மோக்ஷத்தையும் அளிப்பது தயாதேவியே என்று கூறினார்.
இதில், தான் பக்தியுடன் இயற்றியதாகக் கூறினாலும், பகவத் ஸங்கல்பமே உயர்ந்தது என்று உணர்த்துவதை காண்க.
இன்ப மிகு தேவுலகும் எல்லையிலா பெரும் பதமும் ஏந்தியளாய் உலகுக்கு அருள் புரியும் தாயாவாள்
இன்னமுதாம் தயை தன்னை இவ்வாறு வேங்கடேசன் என்னும் இந்த கவி தானே அன்புடனே ஸ்துதிட்டான்
இந்நூலின் பாடல்கள் எம்பெருமான் தன்னுடைய இச்சை எனும் கற்பகமாம் என்றதோர் மரத்து இருந்து
இன்னருளாம் பெரும் காற்றால் ஓர் கணத்தில் உதிர்ந்தனவாம் இன் கனி போல் அடியாரின் இன் சுவைக்கு ஏற்றனவே –
—————————————————–
108-காமம் சந்து மித கரம்பிதகுண அவத்யானி பத்யானி ந
கஸ்ய அஸ்மின் சதகே சத் அம்பு கதகே தோஷ ச்ருதிம் ஷாம்யாதி
நிஷ்ப்ரத்யூஹ வ்ருஷாத்ரி நிர்ஜ்ஜர ஜரத்காரச் சலேன உச்சலன்
தீன ஆலம்பன திவ்ய தம்பதி தயா கல்லோல கோலாஹல
கல்லோல கோ லாஹல ஓடி பெருகும் தயா தேவி
மனதை தெளிய வைக்கும் பிரபந்தம்
ஸ்ரீ நிவாசன் அவன் சங்கல்பம் தாம் மூவரும் சேர்ந்து அருளிய பிரபந்தம்
குற்றங்கள் திருமலை அருவி ஓசையில் மறையும்
தயா தேவி அனைத்து குற்றங்களையும் குறை சொல்வாரையும் பொறுத்து கொள்வாள் –
வருத்தத்தில் உள்ளவர்கள் பற்றும் இடமாகத் திவ்ய தம்பதிகளின் கருணை என்னும் அலை பெரிதாக முழங்கியபடி ஓடுகிறது;
தடையில்லாமல் திருமலையில் ஓடுகின்ற அருவிகள் பெரும் முழக்கம் செய்தபடி உள்ளன;
இவை சாதுக்களுக்குத் தேத்தாங்கொட்டை போன்று உள்ளன.
எனது இந்தச் ச்லோகங்கள் எத்தனை குற்றம் கலந்ததாக இருந்தாலும் இருக்கட்டும்.
இந்தத் துதிகளில் குற்றம் கூறுபவர்களின் சொற்கள் என்ன ஆகும் என்றால் –
இப்படியாக உள்ள பலவிதமான முழக்கங்கள் காரணமாக அவர்களது குற்றச்சாட்டுகள் யாருக்கும் கேட்காது.
அவ்விதம் யார் காதிலாவது கேட்க, இந்த அலை முழக்கங்கள் இடம் கொடுக்குமா?
திருமலையில் திவ்ய தம்பதிகளின் கருணை என்ற அலை பெரும் ஒசையுடன் கொட்டும் அருவிகளில் எப்போதும் ஓடியபடி உள்ளது .
தனது ச்லோகங்களில் குற்றம் கூறுபவர்களின் குரல்கள், இந்த அருவிகளின் ஓசையில் அடங்கிவிடும் என்று கூறுகிறார்.
தயாதேவி அனைத்து குற்றங்களையும் பொறுத்துக் கொள்பவள் என்றாலும், தனது துதிகளின் மீது
குற்றம் கூறுவதைப் பொறுத்துக் கொள்ளமாட்டாள் என்று வேடிக்கையாக கூறுகிறார்.
ஆயினும் இவ்விதம் குற்றம் சொல்லுபவர்களைத் தயாதேவி,
தனது சொற்களைக் காப்பாற்றுவதாகத் தண்டிக்காமல் விட்டு விடுகிறாள் என்றார்; அவர்களது குரலை மட்டும் மறையச் செய்கிறாள்.
தேத்தாங்கொட்டை என்பது தண்ணீரைத் தூய்மைப்படுத்துவதாகும்.
இந்தச் ச்லோகமானது தேத்தாங்கொட்டை போன்று மனதைத் தெளிய வைக்கும் என்றார்.
ச்லோகத்தில் உள்ள ந: என்ற பதம் காண்க.
இந்த பதம் நாங்கள் என்ற பொருளைக் குறிக்கும்.
இதன் மூலம் ஸ்ரீநிவாஸன், அவனது ஸங்கல்பம் மற்றும் தன்னையும் கூறி – எங்கள் மூவரின் இந்தச் ச்லோகம் என்று கூறினார்.
இந்த ச்லோகத்தைத் தொடங்கும்போது தயாதேவியை இறுகிப்போன சர்க்கரை மலையாகக் கூறினார்.
முடிக்கும்போது தயாதேவியை, தனது ச்லோகத்தைக் கேட்டு “கல்லோல கோலாஹல” என்று – ஓடி வரும் தயாதேவியாகக் கூறி முடித்தார்.
பத்து பத்தென அடியேனால் பாடி வைத்த நூல் இதிலே பண்புகளும் மாசுகளும் பொதிந்து இருந்தால் போகட்டும்
பொத்து பொத்தென இரைச்சலுடன் பொழிகின்ற திருமலையின் பல்லருவி தமைப் போன்ற பெரும் தெய்வத் தம்பதியின்
எத்தடையும் அற்ற தயை எனும் அலையின் முழக்கம் தான் எள்ளளவும் மாசிலாத ஆன்றோராம் நீர் தனையே
சுத்தமிடும் கதகம் போல் சதகம் இதைக் குறை கூறும் சொற்களினை அறவொழித்துச் சீர் பெறவே செய்திடுமே –
—————————————————
(கருணை, கருணை, அனுதாபம் மற்றும் இரக்கம் ஆகியவை அந்த வார்த்தை குறிக்கும் சில அர்த்தங்கள்). உண்மையில், தயா தயா தேவியாக உருவகப்படுத்தப்பட்டு இறைவனின் மனைவியாக ஆக்கப்பட்டார். மற்ற மனைவிகளான லட்சுமி, பூ தேவி மற்றும் நிலா தேவி அனைவரும் தயா தேவியின் பிரதிபலிப்புகளாக இருப்பதால் இறைவனுக்கு மிகவும் பிரியமானவர்கள். (36). இறைவனின் அனைத்து மங்களகரமான பண்புகளிலும் (கல்யாண-குணங்கள்), தயா பேரரசி (30, 101). ஆனால் தயாவின் இருப்பைப் பொறுத்தவரை, மற்ற அனைத்து குணங்களும் நம்மைப் பொறுத்தவரை இறைவனில் தோஷங்களாக (தவறுகளாக) இருக்கும் (15), ஏனெனில் அவை அனைத்தும் நம் பாவங்களுக்காக நம்மைத் தண்டிக்க மட்டுமே அவருக்கு உதவும். இறைவன் தன்னைத் தாக்கும் நமது பாவங்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு கவசமாக தயாவை அணிந்துள்ளார். (28). இறைவனின் உச்ச மகிமையின் இரண்டு முக்கிய அம்சங்களான ஜகத்-வியாபாரம் மற்றும் ஆன்மாக்களை சம்சாரத்திலிருந்து விடுவித்தல், இதற்காக வேதங்களால் அவர் புகழப்படுகிறார், இவை உண்மையில் தயா தேவியின் சாதனைகள் (68). தயா என்பது துன்பத்தில் இருப்பவர்களைப் பாதுகாக்க இறைவனின் விருப்பம் (இச்சா) என்று வரையறுக்கப்படுகிறது (71).
ஸ்ரீ தயாசதகம் ஸம்பூர்ணம்
ஜயதி யதிராஜ ஸூக்தி: ஜயதி முகுந்தஸ்ய பாதுகாயுகளீ
ததுபயதந: த்ரிவேதீம் அவத்யயந்த: ஜயந்தி புவி ஸந்த:
கவிதார்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:
——————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ திரு வேங்கடத்தான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply