ஸ்ரீ யபதி பல திவ்ய தேசங்களைக் காட்டி அருளி இவருடைய நித்ய விபூதி அபேஷிதம் மறக்கப் பண்ணி
வைத்து அருளி இருந்தான் இது காறும்
மீண்டும் கொடு உலகம் நீக்கி நலமந்த மில்லதோர் நாடு செல்ல அபி நிவேசம் மிக்கது
எம்பெருமான் நமது அபி நிவேசத்தை தலைக் கட்டி அல்லது நில்லான் என்று நிச்சயித்தார்
பயணம் புறப்படுவதாகவே பாரிப்பு கொண்டார்
பெண்கள் தம்முடன் பிறந்தகத்தில் பழகிய குறடுகள் ஏறி இறங்குமா போலே பயணத்துக்கு பூர்வாங்கமாக
தமக்கு மிக்க ஈடுபாடு யுண்டான திருப்பதிகளிலே சொல்லிக் கொள்வதாக நுழைந்து நுழைந்து புறப்படுகிறார்
ஒன்பது பாசுரங்களில் பதினெட்டு திருப்பதிகளை அனுபவிக்கும் அழகு இத் திரு மொழி ஒன்றுக்குமே உண்டு-
—————-
ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே–10-1-1-
ஒரு நல் சுற்றம் -அத்விதீயமான -விலஷண -பந்து
பிதா ச ரஷகச் சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி -ஸ்வாம்யாதாரோ மமாத்மாச போக்தாதாச்ய மநூதித-
அகவாயில் நின்று சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் பரம பந்து -சாஸ்திர அர்த்தம்
பிரிந்து தரித்து இருக்க மாட்டாமையால் -எனக்கு உயிர்
ஒண் பொருள் -சத்தையே உண்டாக்கும் பொருள்
வரு நல தொல் கதி -பிராப்ய பூமியும் தானே-
———————————————
பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே—10-1-2-
பொன் போலேயும் நீல மணி போலேயும் ச்ப்ருஹணீயமாக விரும்பத் தக்கவன்
ஹேமன கோதோ ந தா ஹேந சேதேந கஷணேந வா -ஏத தேவ மஹத் துக்கம் யத் குஜ்ஞா சமதோல நம் –
குந்துமனிக்கு ஒப்பாக சொல்வதே மகா துக்கம்
இன்னார் தூதன் -வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சியால் வன் தாம்புகளால் புடைக்க
அலந்தானை-திரு விருத்தம் -86-அலர்ந்தான் -என்பர் நஞ்சீயர் –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ -அவதார பிரயோஜனம் பெற்ற ஹர்ஷம்
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயனை அதி சூத்திர வஸ்துக்களுக்கு சமமாக சொல்வது துக்ககரம்
ஒட்டுரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய் பிற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி-
மணி -உள்ளாரை கண்ணுறங்க ஒட்டாதே –
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -சதா பஸ்யந்தி சூரய
தலைப்பில் முடிந்து ஆளலாம்
கடல் மலையில் இருக்கும் ரத்னம் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்
எனக்கு யாரும் நிகரில்லையே -என்னப் பண்ணும்
மைத்ரேய பரிபப்ரேச்ச ப்ரணிபத்யா பிவாத்யச -உலகம் எல்லாம் அனுவர்த்திக்கும்
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிவோம்
ஆஸ்ரயம் பொறுத்து மதிப்பு -உகந்து அருளின திவ்ய தேசங்கள் ஆழ்வார்கள் வாக்கால் பிரசித்தம்
ஒளியை விட்டு ரத்னம் இராது -பிராட்டி நித்ய வாஸம்
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ
ஒளியால் ரத்னம் மதிப்பு -அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய யா ஜனகாத்மஜா –
இழந்தவனை கதறப் பண்ணும் ரத்னம் -பழுதே பல காலமும் போயின -இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவி நில்லாதே
எழில் கொள் நின் — உன்னைக் காண்பான் நான் அலப்பாய் ஆகாயத்தை நோக்கி அழுவன் தொழுவனே -என்னப் பண்ணுவன் இவனும்-
இப்படிப் பட்டவனை நேற்று திரு வேங்கட மலையில் சேவித்து
இன்று திருத் தண்கா -விளக்கொளி பெருமாள் சந்நிதியில் சேவிக்கப் பெற்றேன் –
———————————
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை யாரமுதினைப் பைந்துழாய்
மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே–10-1-3-
ஆலிலை சயனித்து அருளிய பிரானை நேற்று திருவாலியிலும் இனி திரு நாங்கூரிலே சென்று காணக் கடவோம்
வேலா -கடல் கரையை சொல்லி இலக்கணையால் கடலை உணர்த்தும்
ஞாலம் உன்னி -ரஷணம் செய்து அருள இவன் யோகு செய்து கொண்டு இருக்கும் பிரான் என்றும்
உலகம் இவனை உன்னும் என்றும் –
————————————–
துளக்கமில் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே–10-1-4-
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு விரோதியைப் போக்கி அருளி அதனாலேயே பரம உஜ்வலனாய் பரம கிருபாவாளான
பெருமானை திருப்பேரிலே கண்டோம் இனி திரு வெள்ளறையில் காண்போம் –
துளக்கமில் சுடரை -காற்றாலும் வேறு எது ஒன்றாலும் அணைக்க முடியாத விலஷண பிரகாச யுக்தன் –
———————————-
சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே–10-1-5-
நடலை -துன்பம் -என் நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே -என்றாள் சூடிக் கொடுத்த நாச்சியாரும்
ருத்ரன் சாபம் தீர்த்து அருளி பெருமானை -இப்படிப் பட்ட குணசாலி யுண்டோ –
ஈடுபட்டு உடலுள் புகுந்து உள்ளம் உருக்கி என்பதாம் –
விடலை -ஆண்மகன் -திண்ணியன் -பாலை நிறத் தலைவன் -மணவாளன் -முப்பது வயதுக்குள் பட்டவன்
விடலை -என்று பாலை வனத்தில் தலை மகனை சொல்லுகிறது
இப்பாலையான பூமியை தனக்கு இருப்பிடம் ஆக்கின படியாலே
பாலை நிலமான சம்சாரத்துக்கு தலைவன் ஆனவனை
-தம்முடைய ஹிருதயத்தில் காட்டில் பாலை நிலம் இல்லை என்று இருக்கிறார் –
————————————-
வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி யருளும் யமரர் தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே –10-1-6-
திரு மேனியைப் பேணாதே பிரயோஜனாந்த பரர்களுக்கு கார்யம் செய்து அருளிய பிரானை
திருச் சேறையில் சேவித்து திருக் குடந்தையில் கண்டு சேவிப்போம்
வானையார் -வானத்தை இருப்பிடமாக யுடைய தேவர்கள்
ஆனை வாட்டி அருளும் –ஆனை -எருதுக்கும் பெயர் -கம்சன் ஏவிய அசுரன் எருது உருவம் கொண்டு -நிரசித்து அருளினவன்
நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளை நிரசித்து அருளினவன் என்றுமாம்-
———————————–
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெக்காவுளே —10-1-7-
பாந்தள் பாழி -திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
திரு வெக்காவில் சேஷ சாயி இறே-
வெக்கா- சேது வணை -நாக ஆணை நாகணை போலே வேகணை ஆக மாறி
வெக்கணை யாக திரிந்து -வெக்கா என மருவிற்று
வெண்ணெய் யுண்டு மகிழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணனை திரு அழுந்தூரிலே சேவித்து
திரு வெக்காவில் சேவிக்கப் பெறுவோம்
கூந்தலார் மகிழ் கோவலனாய் -ஆ மருவி அப்பன் என்பதால்
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப் பெருதும் என் ஆசையினால் கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்
கண் இணையால் கலக்க நோக்கி வண்டுலாம் பூம் குழலினார் உன் வாயமுதம் உண்ண
வேண்டிக் கொண்டு போவான் வந்து நின்றார் -என்றும்
முந்தை நன்முறை அன்புடை மகளிர் முறை முறை தந்தம் குறங்கிடை இறுத்தி
எந்தையே எந்தன் குலப் பெரும் சுடரே எழு முகில் கணத்து எழில் கவரேறே உந்தை யாவன் என்று உரைப்ப -என்றும்
கூந்தலார் மகிழ்ச்சி விளங்குமே-
—————–
பத்தராவியைப் பான்மதியை யணித்
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே -10-1-8-
தன் திருவடிகளுக்கு நல்லானாரானவர்களுக்கு உயிராய் இருப்பவனை தெற்குத் திருமலையில்
சேவித்து திரு விண்ணகரிலே சேவிப்பேன்
பத்தராவி -பக்தர்களுக்கு ஆவியாய் இருப்பவன் என்றும் பக்தர்களை ஆவியாகக் கொண்டு இருப்பவன் -என்றுமாம்
ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம்
பால் மதியை -பால சந்தரன் போலே களங்கம் அற்ற -ஆனந்தமாக -கண்டு கொண்டே
இருக்கும் படியாக வடிவு அழகை யுடையவன்
அணித்தொத்தை -மணித்தொத்தை -பாட பேதங்கள் -தொத்து பூம் கொத்து -மாலையையும் சொல்லும்-
—————————
கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனைக்
கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே—10-1-9-
குவலயா பீடத்தின் கொம்பை பறித்த பெருமானை திருக் கோட்டியூரிலே கண்ட பின்
இனி திரு நாவாயில் காண்போம் -என்கிறார்
கம்பம் -நடுக்கம் -யானை கட்டும் தறிக்கும் பெயர் -இப்பொருளில் ஜாதி உசித விசேஷணம்
நம்பன் -ஒரு நாளும் கை விடாதவன்
திரு நாவாய் -நம் ஆழ்வார் 9 பத்தில் மங்களா சாசனம் அருளிச் செய்த மலை நாட்டுத் திருப்பதி-
————————————
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –10-1-10-
பசுக்களை ஆளப் பிறந்தவன் -திருப்பேர் நகரில் மணவாளப் பெருமாளானாக சேவை சாதித்து அருளுபவன்
பெற்றமாளிகை -பாட பேதம் -பெருமை பொருந்திய மாளிகைகள் யுடைத்த திருப் பேர் நகர்
ஓத வல்லார்கள் ஒரு நாளும் பிரியாத நித்ய அனுபவமாம் படி பரமபதம் இவர்கள் இட்ட வழக்காகும்
கற்ற நூல் கலிகன்றி -ஆழ்வார் நூல்களை கற்றாரா -திரு மந்த்ரம் கற்ற இடத்தில் கற்கும் இத்தை இறே அல்லாதவையும்
எம்பெருமான் பக்கலிலே திருமந்த்ரார்த்தம் கற்றதால் சகல சாஸ்திரங்களையும் கற்றவர் ஆவாரே –
———————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply