பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-4-காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்-

திருப்புல்லாணி ஏறப் புக்கால்-கால் நடை தாராத படி தளர்ச்சி யுற்றது
ஆகவே கண்ணில் கண்ட பறவைகளை தூது விடுவது –
முன்புள்ளார் நோவு பட எம்பெருமான் அவர்களுக்கு உதவின படிகளைச் சொல்லுவது
உறவினர்களுடைய ஹித வார்த்தைகளை கேளாத படியான நிலைமை பிறந்தமையை
சொல்லுவதாகச் செல்லுகிறது இத் திரு மொழி –

———————————————————-

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும்  எக்கில்  கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே –9-4-1-

தார்மிகராய் இருப்பார் வைத்த தண்ணீர் பந்தலிலே
வழியடிக்காரர் ஒதுங்குமா போலே
மடல் எடுத்தாகிலும் பிழைக்க நட்ட பனையிலே அன்றில் வந்து குடி புகுந்தது –
மடல் எடுக்க பனை மரம் அருகில் செல்ல அன்றில் -க்ரௌஞ்சம் -த்வனி காம உத்தீபகமாய் பிரிவாற்றாமை துயரை வளர்ந்து –
பெண்ணை மேல் பின்னும் அவ்வன்றில் பேடை வாய்ச் சிறு குரலும் என்னுடைய
நெஞ்சக்கு ஓர் ஈர்வாளாம் என் செய்கேன் -பெரிய திரு மடல்
மடல் பெண்ணைக் கா ஆர் அன்றில் -இலங்கை முழுதும் ராஷச மயம் என்னுமா போலே
கானம் முழுதும்  அன்றில்
அரி குரல் -அரித்தல் -ஹரித்தல்
ஏவாய் -ஏ -அம்பு -அம்பு விட்ட இடம் -அங்கே சூலத்தை கொண்டு குத்தினால் போலே அன்றிலின் அரு குரல்
பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்மின்  புண்புரை வேல் கொடு குத்தால்
ஒக்கும் நும்மின் குரல் -திருவாய்மொழி  -9-5-9-
எக்கு -வேல்படை ஈட்டி எக்கின் -அதை விட கொடிதாம் -மின்னின் நிலையிலே -காற்றில் கடியனாய் போலே
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பரிமளம் அசஹ்யம் ஆகாத தேசம் தேடித் புக அழகிதாக ஆசைப் பட்டேன்
விரோதியான இந்நிலத்தை விட்டு
பிராப்ய தேசத்திலே போய்ப் புக அழகியதாக கோலினேன் -என்கிறாள் –
அழகாக உண்டோம் என்று சொல்லுவாரைப் போலே பரிதாபம் தோற்ற சொல்லுகிறாள்
இது நமக்கோர் பான்மையே யாகாதே –
மாறாடி வருமது இன்றிக்கே இது ஸ்வ பாவமாய் விட்டதே
நித்ய சூரிகள் நித்ய அனுபவம் பண்ணா நின்றார்கள்
இவ்வருகு உள்ளார் விஷயங்களில் அந்ய பரராகா நின்றார்கள்
மூன்றாம் விபூதியாகா பண்ணி விட்டதாகாதே நோவு படுத்துகைக்கு நம்மை -என்கிறாள்  –

————————————–

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்
பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே –9-4-2-

பிரயோஜனாந்தர பரனான இந்த்ரனுக்குக்கா தன்னை அழிய மாறி –
மாசூணாச்   சுடருடம்பாய் மலராது குவியாது -உள்ள தன்னை
அலம் புரிந்த நெடும் தடக்கையைக் கொண்டு தானம் பெற்றானே
நமக்கு அப்படி அரும் பெரும் செயல்கள் செய்ய வேண்டாம் திரு முகம் காட்டி அருளால் ஆகாதோ
பொன்னம் கழி கானல் -இங்கு உள்ள நீரோடு காலுக்கு பெயர்
ஸ்ரீ வான மா மலையில் -சேற்றுத் தாமரை தடாகமும் -தேனமாம் பொழில் -தோப்பும் –
திரு மோகூரில் தாள தாமரை -தடாகம் போலே
அன்னமாய் -பிரமன் இழந்த வேதம் கொடுத்து அருளினான் –
நான் இழந்து இருக்கும் மேனி நிறம் மீட்டுக் கொடுப்பான்
அன்றிக்கே
இனத்தார் சஜாதீயன் பக்கல் போக நீங்கள் அஞ்ச வேண்டாமே
ஆங்கு இதனைச் செப்புமினே   —
ஒருத்தி நிறம் மீட்கைக்காக வந்து இருக்கிற இடத்தே அறிவியுங்கோள்-
ஒருத்திக்கே கார்யம் செய்யக் கடவோம் என்னும் நியதி உண்டோ –
சீதாப் பிராட்டிக்காக இங்கே தர்ப்ப சயனம் கிடந்தாயே
செப்புமின் -அறிவிப்பே அமையும் -அவனைக் கொண்டு வர முயல வேண்டா-

—————————–

வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வியறியாது நிற்கும் கொல் நித்திலங்கள்
பவ்வத்திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்
தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே-9-4-3-

புள்ளினங்காள் -விளியை இங்கும் கொண்டு -அவற்றை தனது சிந்தை நோயை
அவ்விடம் சென்று அறிவிக்க தூது விடுகிறாள்
திருத் துழாய் மாலையிலே பிடித்துக் கொண்டு என்னை தனியே விட்டு என் நெஞ்சு அவனுடன் போந்ததே
திருப் புல்லாணியை தொழ ஆசைப் பட்டேன் -அழகிதாக -அதற்குக் கிடைத்த பலன் இந்த நெஞ்சு நோய் –
சீதா பிராட்டி யுடைய சிந்தை நோயைத் தீர்க்க கையும் வில்லுமாக நிற்கும் அவரிடம் சென்று செல்லுமின்
திருத் துழாய் மாலை யணிந்த திரு மார்பிலே அணைய பெற வேணும் என்கிற ஆசையை தமக்கு அதிகரித்து இருக்கின்றமை –
நிற்கும் கொல்-வீணான ஆசை எனக்கு –
உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலதோர் உடன் ஆசை உண்டாகில் தரித்து இருக்கலாமே
நித்திலம் நிஸ்தலம் -முத்துக்களை கரையிலே கொண்டு தள்ளும் அலைகள் –

——————————

பரிய விரணியதாக மணி  யுகிரால்
அரியுருவாய்க் கீண்டான்  அருள் தந்தவா நமக்குப்
பொரு திரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன்
அரி மலர்க் கண்ணீர் ததும்ப  வந்துகிலும் நில்லாவே –9-4-4-

ஆத்மகதமாகச் செல்லும் பாசுரம் –
சிறுக்கனுக்கு அருளிய நீ நம்மளவில் அது செய்யாமை தகுதியோ –
திருப் புல்லாணியைத் தொழ ஆசை பட்டு அழகாக பேறு பெற்றேன் என்கிறார் மீண்டும்
அரி மலர்க் கண்ணீர் ததும்ப  வந்துகிலும் நில்லாவே –
கடல் திரைகள் வந்து சஞ்சரியா நிற்க -கடலும் திரையும் கண்டு கூட அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டோம்
இது வாகில் இவளுக்கு தேடித் போக வேணுமோ -என்று
என் உடம்பிலே கண்ண நீரையும் உண்டாம் படி பண்ணினான் –
கண்ண நீரை பெருக்கி விட்டான் சமத்காரமாக அருளுகிறார்
அம் துகிலும் நில்லா -விரஹ வ்யசனத்தாலே உடல் இளைத்துப் போகவே துகில் தரிப்பற்றதாயிற்று-

——————————

வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும்
புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே–9-4-5-

பெண்களை பரிசு அழிப்பதே அவன் தொழில் –
மெய் போலும் பொய் சொல்ல வல்லவன் போன்ற வார்த்தைகளை பலகாலும் சொல்ல
அவன் பின்னே போன நெஞ்சு திரும்பட்டும் -உங்கள் வார்த்தைகளைக் கேட்கிறேன் -என்கிறாள்
பெண்களுக்கு உதபுவன் அல்லன் என்பதை மறுத்து -வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன் -என்கிறாள்
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து இலங்கை நீறு எழச் செற்றது எல்லாம் ஒரு பிராட்டிக்காக அன்றோ
என் நெஞ்சு மீண்டு வரும் அளவும் நீங்கள் ஒரு மிடறாக திரண்டு என்னைப் பரிஹசித்தாலும் பழித்தாலும்
அப்பெருமானை பொய்யன் என்றாலும் அந்த  பொய்யுரைகளையே ஜீவன ஆதாரமாக கொண்டு தரித்து இருப்பேன் –
ஸ்ரீ ராமாவதாரத்தில் மெய்யும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பெய்யுமே நமக்குத் தஞ்சம் -ரசோக்தியாக பட்டர் அருளிச் செய்வர்
எம்பெருமானுடையது -என்னும் அத்தனையே கொண்டு தரித்து இருப்பார் ஆஸ்திகர் –
எல்லாரும் -தோழி மாரும்   தாய்மாரும்-

—————————————-

சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால்
செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன்
இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே–9-4-6-

ஆதித்யன் அஸ்தமித்தான் -சீத க்ரணன் -நளிர்மதி -நெருப்புப் போலே எரிப்பவனாகி என்னையே முடித்திடா  நின்றான்
திருப் புல்லாணியை ஆசைப்பட்டு நல்ல பலன் பெற்றேன் -கை வளையல்கள் கழன்று ஒழிந்தன  -மேனி நிறமும் போயிற்று
அஞ்சுடரில் -அம் சுடர் இல் -பிரித்து அழகிய சுடருக்கு இருப்பிடமான சந்தரன்
தான் அடுமால் -ஸூர்யன் தான் முடிந்து போனான் -சந்தரன் தான் முடியாமல் என்னை முடிக்கப் பார்க்கிறான் –
இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே-அவனோடு கலந்து மேலும் மேனி நிறம்
வளம் கொள்ளவும் ஆபரணங்கள் அணியப் பெறவும்
ஆசைப் பட்ட எனக்கு உள்ளவற்றையும் இழந்தேனே -வட்டிக்கு ஆசைப் பட்ட நான் முதலையும் இழந்தேன் -போலே –

—————————————

கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா வாடல்
தினை யேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனையார் மணி மாடப் புல்லாணி கை தொழுதேன்
வினையேன் மேல் வேலையும் வெந்தழலே வீசுமே –9-4-7-

மணிகளின் ஓசை நெருப்புக் கதவுமா போலே
கடல் தானும் வெப்பத்தை ஏறிட்டுக் கொண்டு அலைகள் வ்யாஜ்யத்தாலே நெருப்பை வீசுகின்றன –
அந்த நாகுகளை சேக்கள் தொடருகிற போது அவை ஓடுகிறது
தலைமகன் மேல் விழத் தான் இறாய்க்கும் படிக்கு
ஸ்மாரகமாய் நலியா நின்றதாயிற்று –
மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த கோல
நன்னாகுகள் உகளுமாலோ–திருவாய் மொழி –
தினையேனும் -அல்ப அளவு -எட்டனைப் பொது போலே -தினையும் எள்ளும் அல்பத்துக்கு உவமை சொல்வர்
புனையார் மணி மாடம் -மணி மாடங்கள் தோறும் நானும் அவனுமாய் இருந்து
அனுபவிக்க ஆசைப் பட்டது அழகாக சமைந்ததே-

—————————————–

தூம்புடைக் கை  வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப்
பூஞ்செருந்திப்  பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர்  வெந்தழலே–9-4-8-

தூம்புடைக்கை வேழம் -துளை
பாம்பின் அணையான்–சேஷ சாயி –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்
தன் திரு மேனியை அன்பருக்கு பூர்ண அனுபவ யோக்யமாய்த் தந்து அருளின அவனே
நம் திறத்தில் விபரீதமாக அருள் செய்தபடி என்னே
இளம் பிறையும் நெருப்பாக கதுவும் படி அன்றோ அவன் செய்து அருளிய திரு வருள்-

—————————-

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –9-4-9-

வேதங்களை யுண்டாக்கி -அவற்றின் பிரதிபாத்யமான தன்னை கிட்டுகைக்கு சாதனமாக யாகங்களையும் ஏற்படுத்தி
அவற்றின் பலனாக ஸ்வர்க்காதி லோகங்களையும் -சங்கல்பத்தாலே யுண்டாக்கி அருளி
உலகுக்கு விளக்காக சந்திர ஸூர்யர்களையும் யுண்டாக்கி அருளி
அனைத்துக்கும் தானே வேர் பற்றாய் இருந்து அருளி
இப்படிகள் எல்லாம் அருள் செய்வதையே விரதமாகக் கொண்டவன்
நமக்கு மாத்ரம் விபரீதமாக இருப்பது என்னே –
அருள் தந்த வா -எதிர் மறை இலக்கணை யால் அருள் தாராமையைக் காட்டும் –

வேதங்களை உபகரித்தவன் -வேதங்களால் பிரதிபாதிக்கப் படுபவன்
யஞ்ஞங்களை அமைத்தவன் -யஞ்ஞங்களால் ஆராதிக்கப் படுபவன்
மேல் உலகங்களை நாட்டினவன் -மேல் உலகங்களை அடைவிப்பவன் -என்றுமாம் –

அவனும் நானும் கலந்து உறங்காமல் இருக்க ஆசைப் பட்டத்துக்கு நானும் ஒதமும் உறங்காமல் உள்ளோம்
தனக்கு பிரதிநிதியாக ஓதத்தை ஆளாக்கி வைத்தான் போலும்
என்னை நலிய ஒதமும் -அதனால் நலிவு பட நானும் -ஆக இரண்டு வ்யக்திகள் தவிர வையம் எல்லாம் உறங்கிற்று

——————————————————

பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக்
கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே–9-4-10-

எப்போதும் வசந்த ருதுவாய்- சோலை சூழ்ந்த திருப் புல்லாணியிலே-பெண் பிறந்தவர்கள்
ஆசை நோய் மிகும்படி எழுந்து அருளி இருக்கிறவன்
ஆண்களும் பெண்ணுடை உடுத்து கதறும் படியான விலஷண அழகு வாய்ந்த பெருமாளை
அன்றோ ஆழ்வார் கவி பாடிற்று
இத் திரு மொழியை கற்றவர்கள் இவ் உலகில் வாழும்  தனையும்  குறை ஒன்றும் இல்லாத
கோமான்களாய் வீற்று இருந்து வாழப் பெற்று
பின்பும் மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் வாழப் பெறுவார்
கூர்தல் -மிகுதல்
உன்னுதல்-விரைந்து எழும்பல்-

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading