பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -9-3-தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு-

திருப் புல்லாணி திருப்பதி மங்களா சாசன திருமொழிகள் இதுவும் மேல் திரு மொழியும்
நாயகி பாவனை இவற்றிலும்  தொடருகிறது –
பிரிந்தவர்கள் இரங்குவது கடல் கரையிலே –
அவனே வந்து கூடுவான் என்று ஆறி இருக்க மாட்டாமல் அவன் மன்னிய திருப் புல்லாணியே போய்த் தொழுவோம்
என்று நெஞ்சை அழைப்பதும் தோழியை அழைப்பதுமாக செல்லுகிறது இத் திரு மொழி –

————————————–

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப்   பூஞ்செருந்தி  மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே –9-3-1-

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன்-
நைவிக்கிலேன்-அழித்துக் கொள்ள மாட்டுகின்றிலன்
தன்னை -அவன் தன்னை -என் தன்னை -என்று இரண்டு
அவனை வருத்தப் படுதுக்கை தன்னைத் தான் மாய்த்து கொள்ளுகையே  -ஆக இரண்டும் ஓன்று
பெருமாளுக்காக தனது  உயிரைக் காத்துக் கொண்டு இருந்த சீதா பிராட்டி போலே
பரகால நாயகியும் -தன்னை முடித்துக் கொண்டால் அவரும் முடிந்தவர் ஆவாரே– அநீச்வரமாய் ஆகுமே –
தன்னை நைவிக்கிலேன்-
நான் ஜகத் உப சம்ஹாரம் பண்ணுகிறிலேன் -என்னை நைவித்தான் என்று தன்னை நைவித்தால் பின்னை ஆர் உண்டு
இவள் அவனை நைவிக்கை யாகிறது -தான் முடிகை இறே
நீருக்குப் போக குடம் உடைந்தாரைப் போலே
அவர் வரக் கொள்ள இத்தலை வெறும் தரையாக கிடக்கும் அன்று அவரைக் கிடையாதே –
முடிந்து பிழைப்போம் என்றால் முடியப் பெறு கின்றிலோம்-உயிரை நோக்கிக் கொள்ள பற்றாசு வேண்டுமே –
அதற்காக திருப் புல்லாணி தொழுவோம் என்கிறாள் மேல்-

செருந்தி -ஸூர புன்னை -அதன் மலர்களும் தாதுக்களும் பொன்னிறமாய் இருக்கும்
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி -பொன்னை நைவித்தல் -நிறத்தினால் தோற்பித்தல்
பூம் செருந்தி மண நீழல் வாய் –
பரப்பு மாறப் பூத்து இருப்பது -பரிமளம் மிக்கு இருப்பது -நிழல் செய்து இருப்பதாய் இருக்கிறபடி
நிறமும் மணமும் நிழலும் -இவை எல்லாம் உண்டாய் இருக்கிறபடி –
ஓர் இந்த்ரியம் கொண்டு ஒதுங்க நிழல் இல்லை-
சஷூர் இந்த்ரியத்துக்கு   நிறம் -க்ராண  இந்த்ரியத்துக்கு மணம்-ஸ்பர்ச இந்த்ரியத்துக்கு நிழல் –
மணி நீழல் வாய் -தவறான பாடம்
அழகிய நிறமும் மனமும் உடைத்தான புன்னை மர நிழலிலே சம்ச்லேஷித்து
என் மேனி நிறத்தைக் கொள்ளை கொண்டு -என்னை வெறும் தரை யாக்கி விட்டு –
அகன்று போன பெருமான் உறையும் இடம் திருப் புல்லாணி
வஞ்சக் கள்வன் மாயன் ஆகையால் தன காரித்தைச் செய்தான் –
நாம் சேஷ பூதர் ஆகையாலே நம் காரித்தைச் செய்வோம் –

————————————————

உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் முன்னொரு நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே -9-3-2-

இங்கேயே இருந்து சிந்தித்து உருகுவதனால் என்ன பயன் -திருப் புல்லாணி செல்வோம் -அங்கு வண்டு முதலிய
திர்யக் ஜந்துக்களும் தங்கள் அபிமதம் பெற்று கழித்து வாழ்கின்றன ஆதலால் நாமும் நம் அபிமதம் பெற்று வாழ்வும்
தொழுதும் எழு-ந ஜீவேயம் ஷணம் அபி விநா தாம் அஸி தேஷனாம் -என்றவன் உள்ள இடம் அன்றோ –
அவனது ஆற்றாமை விஞ்சி இருக்குமே –
அவனைக் கண்டால் நம் உருக்கமும் சிந்தனையும் தீருமே
பொருது முந்நீர் கரைக்கே மணி யுந்து -பொருள் திரட்டிக் கொள்ள பிரிய வேண்டாத படி மணியும் முத்தும் மலியும் –
ஆத்மானம் மானுஷம் மன்யே -தேவ பித்ரு கார்யம் ஸ்வ ஆர்ஜிதமான பொருள் கொண்டு செய்தால் தானே பலன்
ஆக பொருள் ஈட்டும் கடமை பரம புருஷனான பரி பூரணன் ஆனாலும் உண்டே –

——————————————-

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

நாட்டாரைப் போலே இல்லாமல் ஆழ்வார்கள் மறக்க வழி தெரியாமல் பிரிவில் வாடி படாத பாடு படுவார்களே
எது செய்தால் மறக்கேன் மனமே -மறந்து பிழைக்க மருந்து தருவார் உண்டோ –
மறக்க வழி தேடுமவள்  புல்லாணியே தொழுதும் எழு -என்பான் என்
எம்பெருமானை கிட்டியாகிலும் மறக்கலாமோ -நாட்டார் படிக்கு எதிர் தட்டு அன்றோ இவர்கள் படி
எதைப் பெற வேண்டுமானாலும் அவன் இடமே தான் பெற வேண்டும் -என்றுமாம்
கம்பீர வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –
ஏது செய்தால் மறக்கேன் மனமே –
நாட்டார் தம்தாம் உடைய அபிமதரைப் பிரிந்தால் கூடின போது மறக்க மாட்டாராய்-
பிரிந்த போது நினைக்க மாட்டாராய் இருப்பர்கள் –
இங்கன் அன்றிக்கே பிரிவில் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றது –
இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய் இருந்த பின்பு
கிட்டினால் தான் மறக்கலாமாகில் பார்க்கலாம் -போந்து காணாய் -என்கிறாள் –
இவள் படி வ்யாவ்ருத்தமாய் இறே இருப்பது  –

பிரியக் கூடாத நிலத்திலே பிரிந்து வஞ்சித்த பெருமான் உறையும் இடம் என்று இத்தையே அத்தலததுக்கு நிரூபகமாய் –
ஒரு நாளும் பிரியேன் என்று சொல்லி பிரிந்தானே
நித்ய வசந்தமான திருப் புல்லாணியைச் சென்று தொழுவோம் நெஞ்சே-

——————————————————-

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும்  எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க்  கரைக்கே  மணி யுந்து புல்லாணியே —9-3-4-

நம்முடைய தலைவன் என்று சொல்லலாம் படி சம்ஸ்லேஷித்து பிரிந்தான்
மது பானம் பண்ணுகிற வண்டே சாஷியாக வந்தான்
நான் உபவாசத்தால் மெலிந்து கிடக்க அந்த வண்டு மது உண்டு களித்து-
அவன் இடமே மண்டி உள்ளதே  -என்ன பாக்கியம்
ஒரு நாளும்  தாமும் நோவு படாதே -பிறர் நோவும் அறியாதே உண்டு களித்து திரியும் வண்டுகள்
நமக்கு சாஷி சொல்ல மாட்டாவே
தகுந்த சாஷி இல்லாமல் கலந்த பாவியேன் -கொடியேற்கு -என்கிறார்
பிரியேன் பிரிந்தால் தரியேன் -என்று சொல்லி பிரிந்தான்
மங்கை நல்லாய் போய்த் தொழுதும்  எழு -நிர்பந்திக்கிறாள்
அவன் போய் மன்னும் புல்லாணியே தொழுதும் என்றும்
அவன் மன்னும் புல்லாணியே போய்த் தொழுதும் -என்றுமாம்-

———————————————

உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
புணரி யோதம் பணில மணி யுந்து  புல்லாணியே –9-3-5-

மூன்றாம் பாட்டில் மறக்க முடிய வில்லை என்றால் -இங்கே நினைக்க முடிய வில்லை என்கிறாள்
இரண்டும் அருமை போலும் இவளுக்கு
சமா த்வாதச தத்ராஹம் ராகவச்ய நிவேசனே –புஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காமா சம்ருத்தி நீ –
அவள் அத்தனை பாக்கியம் பண்ணினேன் இல்லையே -வினையேன் –
நடந்தவற்றை நினைத்த மாத்ரத்திலே நெஞ்சு சுடும்படியான பாவத்தைப் பண்ணினேன் -என்கிறாள்
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
கலவி செய்யும் பொழுது அவன் செய்து அருளிய ஸ்ருங்கார விலாசங்கள்
பூக் கொத்துகளை யுடைய நாழலின் யுடைய செவ்விப் பூக்களை பறித்து என் குழலிலே சூட்டினான்
ஒரு நொடி பிரிந்தாலும் பிராணன் பாறிப் பறந்து போய் விடும் படி அன்பை பொழிந்தான்
பிரியேன் சொல்லி வாய் மூடுவதற்கு முன்பே பிரிந்தானே
அத்ரோப விச்ய வை தேன காசித் புஷ்பை ரலங்க்ருதா –அந்ய ஜன்மனி சர்வாத்மா
விஷ்ணு ரப்யர்ச்சிதஸ் தயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5–13-35-
துணர் இன் நாழல்–துணர் -பூங்கொத்து -நாழல் -கொங்கு மரமும் குங்கும  மரமுமாம்
புணரி -கடல்
பணிலம் -சங்கு
பணிலம் மணி -சங்குகளின் நின்றும் யுண்டான முத்து -உம்மைத் தொகையாகவும் கொள்ளலாம் –

——————————

எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள்ளவிழும் மலர்க்காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே –9-3-6-

சம்ஸ்லேஷிக்கும் போது தனது திரு மேனியை பூர்வ அனுபவ யோக்யமாக சர்வ ஸ்வதானம் பண்ணின -வள்ளல்
கலந்து பரிமாறினவன் பிரிந்து -நான் பதறி கதறி ஓடி வரும்படி  எட்டாதவனாய் வஞ்சகம் செய்யும் மாயன் –
உபேஷித்தாலும் அபேஷித்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு உடையவன் -மணி வண்ணன்
அந்த வடிவு  அழகைக் காட்டி என்னை அனந்யார்ஹை யாக்கி எழுதிக் கொண்டவன் -எம்மான்
இப்படிப்பட்டவன் நித்ய வாஸம் செய்து அருளும்  திருப் புல்லாணியை  தொழுது எழு நெஞ்சே
ஏகாந்த ஸ்தலம் -கள்ளவிழும் மலர்க்காவியும் -திவ்ய தம்பதிகள் ஜலக்ரீடை பண்ண-
செங்கழு நீர் புஷ்பங்களை பறிக்க ஒருவருக்கு ஒருவர் முற்பட ஒருவர் பறித்து ஒருவர் மேல் எறிய-அது மேல் பட்டு மது ஒழுக
தூ மடல் கைதையும் தலை மகன் தோள் கொடுக்க ஏறிப் பறிக்கலாம் படியான வெள்ளை மடலை யுடைய தாழையும்
புள்ளும்-இதன் பேர் என்ன என்று தலைமகள் கேட்டு தலைமகன் சொல்ல பஷி வகைகளும்
அள்ளல் பழனங்களும்-அல்லல் அறியாத செல்வப் பிள்ளையாக வளர்ந்த தலைமகள் நீர் நிலங்களிலே புக்கு
அங்கே சேறுகளிலே அழுந்தி நின்றாள் தலைமகன் கை பிடித்து தூக்கி எடுக்க வேண்டும்படியான நிலங்களும்
உள்ள திருப் புல்லாணியை தொழுது எழுவோம் -என்கிறாள் –

—————————————

பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப்  புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே–9-3-7-

முத்தோடு கூட வெளுத்த மனற்களை கலந்து கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி வெளுத்த திரைகளானவை
குதிரை தாவுமா போலே தாவி வந்து தள்ளா நின்றுள்ள திருப் புல்லாணியை   தொழுவோம்
போய் அவன் பாலமாய் -என்றும் -போயவன் பாலமாய் -என்றும் -ஈடு பட்டோமாய்ச் சென்று
புதம் செய்தல் -தாவிப் பாய்தல் -புரவி -குதிரை-

———————————————

அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச்
சாலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு
உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே–9-3-8-

கலப்பையும் சக்கரப் படையும் கொண்ட இவரே நமக்கு பிராப்யர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப் படுமவர்
அன்புடையார் போலே கலந்து கபடமாக தலைக் கட்டிற்று
ஒரு பெண் பெண்டாட்டியை இப்படி வஞ்சித்தோமே-என்ற இரக்கமும் இல்லாமல் இருந்தாலும்
நம்மால்   ஆறி இருக்கப் போமோ –
உலவு கானல் கழி-உலவு கால் நல் கழி என்று பிரித்து -கால் -காற்று என்றும் –
நீர்க்கால் -என்றும் பொருள் கொள்ளலாம் –

——————————————

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப்
பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாத லில்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப்
போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே –9-3-9-

வழி அல்லா வழியில் சென்றாகிலும் பெற்றுத் தீர வேண்டிய அபிநிவேசம் கிளர்ந்ததான பின்பு
ஸ்வயம் போக்யமாகச் செய்ய வேண்டிய கார்யங்களையும் உபாயமாகச் செய்வோம்
இடைவிடாது திரு நாம சங்கீர்த்தனம்  பண்ணக் கடவோம் –
சத்தம் கீர்த்த யந்தோ மாம் யதந்தச் ச த்ருடவ்ர்தா –நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா நித்ய யுக்தா உபாசதே -ஸ்ரீ கீதை -9-14-
குளித்து -சாதனா அனுஷ்டானத்துக்கு ஸ்நானம் -இருந்த படியே அதிகாரி யாவதற்கு உரிய நாம் –
நியம நிர்பந்தம் உள்ள வழியில் சென்று
உச்சி தன்னால  ஓளி மா மலர்ப் பாத நாளும் பணிவோம்- ஸ்வயம் பிரயோஜனமாக ஒளி மலர் பாதத்தை
சிரமேல் கொள்ளும் நாம் யோனி உபாயமாக அனுஷ்டிப்போம்
நமக்கே நலம் ஆதலில் -இத்தால் -இவை நம்மை அழிக்காது
நிரபேஷ ரஷகத்வம் ஸ்வரூபம் அழிக்கும் அவனை மட்டும் அழிக்கும்
தஸ் தஸ்ய  சத்ருசம் பவேத் -என்று இருந்து நாம்வாழ்ந்த வாழ்வு போதும்
சாதனாந்தர்களுக்கும் பலன் தர வேண்டியது அவன் அன்றோ -உனக்கு ஒன்றும் கொடுப்பது இல்லை என்று
சங்கல்பித்தவன் இடம் இவை பலிக்குமோ -என்ன
ஆது தாரான் எனிலும் தரும் -அவன் கொடுக்க மாட்டேன் என்று முஷ்டி பிடித்தாலும்
என்னுடைய பிரம்மாஸ்திரம் -பலன் கொடுத்தது அன்றி நில்லாது
அன்றியும் அன்பராய் அவன் மன்னு புல்லாணியே தொழுதும் -பலன் கிடைக்குவுமாம்–கிடைக்காமவுமாம் –
நாம் பக்தி உக்தராய்க் கொண்டு தொழுவோம்
இத்தைக் கேட்ட தோழி மயங்கி நின்று போது மாதே -வலியப் பிடித்து தோழியை இழுக்கிற படி
அநந்ய உபாயத்வம் குலைந்தபடியும் -ஓதி நாமம் –குளித்து –பாதம் பணிவோம்
அநந்ய உபேயத்வம் குலைந்த படியும் -நமக்கே நலம்
பிரேமபரவஸ்ர்க்கு இவை அவத்யம் அன்று
பிரேம பாரவஸ்யதை-யாலே விளைந்தவை ஆகிலும் கலக்கத்தாலே வந்தவை தானே
ஜ்ஞான விபாக கார்யமான அஜ்ஞானத்தால் வருமவை எல்லாம் அடிக்கழஞ்சு பெரும்
உபாய பலமாய் உபேய அந்தர்பூதமாய் இருக்குமது   உபாய பிரதிபந்தகம் ஆகாது –

————————————

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10-

இத் திரு மொழியில் ஏதேனும் ஒரு விதமாக அன்வயம் உள்ள பக்தர்களுக்கு துன்பம் இல்லா திரு நாடே வாழ்ச்சியாகும்
கலங்கல் இல்லாப் புகழான் -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்
தன் தலையாலே முயற்சி செய்ய நினைப்பது அவத்யம் என்ற
தெளிவுற்ற குடியிலே பிறந்த இவருக்கு தெளிவிக்கு மாறாக அருளிச் செய்த திரு மொழி இவர் புகழ்ச்சிக்கு கலக்கமோ என்றால்
இல்லை -பகவத் விஷயத்தில் இவருக்கு இத்தனை பிராவண்யம் உண்டாவதே என்று கொண்டாடும் படி இருக்குமே –

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading