பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-5-பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்–

திருக்கடல் மலை திருப்பதி விஷயம் —

பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்
படு கடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே
முளைத்து எழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போர்ஏற்றினை
புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே ————–2-5-1-

கடன்மலை தலசயனத்து -ஸ்ரீ ஸ்தல ஸ்தாயீ-ஸ்ரீ தல சயனப் பெருமாள் -ஸ்ரீ புண்டரீக மகரிஷிக்காக –
பவளத் தூண் -பக்தர்களின் யோக ஷேம பாரங்களை தாங்கிக் கொண்டு
திவ்ய சேஷ்டிதங்களைக் காட்டி அருளி ஆட் கொண்டு அருளுபவன்
பக்த சிந்தை யாகிற தோட்டத்திலே முளைத்து -அவ்விடத்திலே -அவிவிருத்தி அடையும் மதுரமான கரும்பு
சர்வ ஸ்வதானம் செய்து அருளுபவன்
பாரை யுண்டு -என்னாது -பாரயாதுண்டு -என்றது -அமுது செய்யாமல் மிச்சப் பட்ட வஸ்து எதுவும் இல்லை –
பார் என்று பேர் பெற்றவை எல்லாம் யுண்டு -என்றபடி
பார் இலக்கணையால் -உலகம் என்று சாமான்ய பொருளில் –
படுகடல் -ரத்னங்கள் படுகிற -யுண்டாகிற கடல் -ஆழ்ந்த கடல்-

———————————————————————-

பூண்ட வத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப்
பொய் நூலை மெய் நூல் என்று என்றும்  ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின்
எந்தை என் வணங்கப் படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை
நின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே –2-5-2-

காருண்யத்தால் அனைவரையும் மங்களா சாசன பரர் ஆக்குவிக்க அழைக்கிறார்
ஒருவரும் மீண்டு வரக் காணாமையாலே -அவர்களை விட்டு ஒழிந்து தாம் சேவிக்கப் பெற்ற பாக்யத்தை
வாயாராகச் சொல்லி மகிழ்கிறார் –
எந்தை என் வணங்கப் படுவானை
கணங்கள் ஏத்தும் -மகான்கள் கூட்டம் கூட்டமாக வந்து நின்று ஏத்தும் படி உள்ளவன்
நீண்டவத்தைக் கருமுகிலை -என்றும் -நீண்ட  வத்தக் கருமுகிலை -என்றும் பாட பேதம்
ஒரு வகையாலும் அளவிட முடியாதவன் -ஹஸ்தம்  அத்தம் -நீண்ட திருக்கைகள் என்றுமாம்
திரு நின்றவூர் பத்தராவி பெருமாள் என்னைப் பெற்ற தாயாரால் தூண்டப் பட்டு ஆழ்வார் திரு வாக்கால்  பாசுரம் பெற்றார் என்பர் பெரியோர்
நித்திலம் -நிஸ்தலம் – முத்து என்றபடி -ஆவி திக்ரு
விலஷணமான போக்யதையும் -குளிர்ந்த வடிவுடைமையும் -முத்துக் கொத்தாக -ஆழ்வார் அருளிச் செய்கிறார் –

—————————————————————-

உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில்  சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –2-5-3-

அங்காநி அந்ய தேவதா -சரீர சரீரி பாவம்
ஸ ப்ரஹ்ம ச சிவ  சேந்த்ரஸ்   சோஷர பரம்ஸ் ஸ்வராட் -என்றும் –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் -என்கிறார்
உலகு உய்ய -உலக வியாபாரங்கள் நடக்க
வரை மீ கானில் தடம் பருகு  கரு முகிலை –
நஞ்சீயர் வேறு விதமாக பொருள் சொல்ல -பிள்ளை அழகிய மணவாளப் பெருமாள் அரையர் –
பட்டர் அருளிச் செய்யும் விசேஷ அர்த்தத்தை சமர்ப்பிப்பாராம்
இளம் கன்றுகள் மலைக் காட்டில் யுண்டான தடாகங்களில் நீரிலே முன்னே இறந்குக் குடிக்க அஞ்ச
அவற்றை பழகு  விப்பதற்க்காக கண்ணபிரான் தன் முதுகிலே கையைக் கட்டி கவிழ்ந்து நின்று தண்ணீர் அமுது செய்து காட்டுவானாம்
அத்தைச் சொல்லுகிறது-

தவ நெறிக்கு ஒரு பெரு  நெறியை -தன்னை அடைய தானே -சித்த சீரிய உபாயம் –
ஆனை தன் மேல் ஏற ஆனை தானே உதவுமா போலே
மண்ணின் பாரம் நீக்க -கடும் பரி மேல் கல்கியாய் -பவிஷ்யவதாரம் –

—————————————————-

பேய்த்தாயை முலையுண்ட  பிள்ளை தன்னைப்
பிணை மருப்பில் கரும் களிற்றைப் பிணை மானோக்கின்
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
அந்தணர் தமமுதத்தைக் குரவை முன்னே
கோத்தானை குடமாடு கூத்தன் தன்னைக்
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-4-

நமது விரோதிகள் பூதனை பட்டது படும் –
பரமானந்த ஜனகமான திவ்ய மங்கள விக்ரஹம் யுடையவன் –
தயிர் வெண்ணெய் வயிறார விழுங்கி களித்தவன்
அந்தணர் தம் அமுதத்தினை -பெரியாழ்வார்
குரவை கூத்து இடையருக்கு செல்வம் விஞ்சி செருக்குக்கு போக்கு வீடாக ஆடுவர்
கோவர்த்தன கிரி தாரி -இவனே இங்கே சேவை சாதிக்கிறான் –

—————————————————–

பாய்ந்தானைத்  திரி சகடம்  பாரி வீழப்
பாலகனாய் ஆலிலையில் பள்ளி யின்ப
மேய்ந்தானை இலங்கொளி சேர் மணிக் குன்றன்ன
ஈரிரண்டு மால் வரைத் தோள் அம்மான் தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதிற் சென்று
அப்பொய்யறை வாய்ப்புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே-2-5-5-

பாலுக்கு அழுகிற பாவனையிலே தன் சிறிய திருவடிகளைத் தூக்கி உத்தைத்து சகடத்தை சின்ன பின்னம் ஆக்கினவன் –
பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றினில் வைத்து ஆலம்  தளரில் சுகமாக கண் வளர்ந்து அருளுபவன்
பாண்ட தூதனாக விஸ்வரூபம் எடுத்து மல்லர்களை முடித்தவன்
இப்படி விரோதி நிரசன ஸ்வபாவங்கள் இன்றும் விளங்கும்படி சேவை சாதிக்கிறான் –

——————————————————-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக்
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு
பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

கிளர் பொறிய மறி-
மறி -என்று ஆண் மானுக்கு பெயர்
பிணை என்று பெண் மானுக்கு பெயர் -அதனின் பின்னே  படர்ந்தானை -மாரீசனை கொன்று ஒழித்தது விவஷிதம் –
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை –
அனந்த சாயி-ராம -கிருஷ்ண -வராஹ -உலகளந்த பெருமாளே இவன் -அங்கு தப்பினார்களும் உஜ்ஜீவிக்கும் படி –

————————————————————–

பேணாத வலி யரக்கர் மெலியவன்று
பெரு வரைத் தோளிற நெரித்தன்ற வுணர்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனைப்
பொரு கடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் தன்னை
உள்ளுவார் உள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-7-

ராஷச வர்க்கங்கள் தோள்களை  துணித்து
இரணியன் உடைய மார்பை பிளந்து
ஆயாசம் தீர திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி
ஆஸ்ரிதர் கூக்குரல் கேட்டு புள்ளூர்ந்து அரை குலைய தலை குலைய வந்து ரஷிப்பவன்
பூதனை மாய அருளி -ஆஸ்ரிதர் ஸ்பர்ச த்ரவ்யமும் -அநாஸ்ரிதர் பிராணனும்- தாரகம் இவனுக்கு –

——————————————————————

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்
தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி
எண்ணானை எண்ணிறந்த புகழினானை
இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-

திரு மெய்யம் திரு மலையில் திரு வனந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளும் பெருமாளுக்கும் மங்களா சாசனம்
எண்ணானை-எண்ணுகிறவன் –எண்ணப் படுகிறவன் -எண்ணாதவன் -மூன்று பொருள்களிலும்
நம் போல்வாரை காத்து அருளும் வகையை எண்ணம் கொண்டும்
நித்ய சூரிகள் பணியுமாறு நலமந்த மில்லதோர் நாட்டில் இருக்க வேண்டியவன் நம் நடுவே கிடப்பதே –
இது என்ன நீர்மை -என்று பக்தர்களால் எண்ணப் படுபவன்
நம் குற்றம் குறைகளை ஒரு பொருளாக இட்டு எண்ணாதவன் –

————————————————————-

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப்
படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்
விண்டானை தென்னிலங்கை யரக்கர் வேந்தை
விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டாய வேதங்கள் நான்கும்
ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லத்தை தல சயனத்தே–2-5-9-

ஆயார் -ஆனார் என்றபடி
தாளாளற்கு-தாளாளான-தனக்கு என்றபடி
ருக்கு யஜூஸ் சாமம் அதர்வணம் -வேத வியாசர் பிரித்து அளித்த பெயர்கள்
முன்பு இருந்தவை -தைத்ரியம் -பௌடியம் – தலவகாரம் -சாமம் -என்பவை ஆகும்
ஐந்து வேள்விகள் -ப்ரஹ்ம-தேவ -பூத -பித்ரு -மனுஷ்ய யஜ்ஞம் –
வேதத்தில் நித்யம் ஒரு பிரஸ்னம் ப்ரஹ்ம யஜ்ஞம்
அக்னி ஹோத்திரம் தேவ யஜ்ஞம்
பிராணிகளுக்கு பலி இடுவது பூத யஜ்ஞம்
பித்ரு தர்ப்பணம் போல்வன பித்ரு யஜ்ஞம்
விருந்தளிப்பது மனுஷ்ய யஜ்ஞம்
கேள்வி -மனு பராசர ஸ்ம்ருதிகள்
அன்றிக்கே கேள்வியோடே அங்கமாறும் -உபதேச பரம்பரைகள்
சீஷா வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் -ஆறு அங்கங்கள் –

———————————————–

பட நாகத்தணைக் கிடந்து அன்று அவுணர் கோவை
பட வெகுண்டு மருதிடை போய்ப் பழன வேலி
தடமார்ந்த கடல் மல்லை  தல சயனத்துத்
தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவர் தம்மை
கடமாரும் கருங்களிறு வல்லான்
வெல் போர்க் கலி கன்றி யொலி செய்த வின்பப் பாடல்
திடமாக விவை யைந்தும் ஐந்தும் வல்லார்
தீவினையை முதலறிய வல்லார் தாமே —2-5-10-

திருவவதாரங்கள் செய்து அருளி விரோதி நிரசனம் செய்த ஸ்ரமம் தீர இங்கே கண் வளர்ந்து –
ஓத வல்லார்கள் முன்னைத் தீ வினைகளை வேரோடு அறுத்து தொலைத்து நித்ய அனுபவம் அனுபவிக்கப் பெறுவார்கள்
திடமாக -என்பதை ஐந்தும் ஐந்தும் வல்லார் என்பதிலும்
தீ வினையை முதலரிய  வல்லார் -என்பதிலும் அன்வயிக்கலாம் –
நிச்சயமாக போக்கிக் கொள்வர் என்றபடி

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading