ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —
(யாமுனரின் மகனும், எம்பெருமானின் கடாக்ஷம் எம்பெருமானின் அருளை மிக எளிதாக நம் மீது விழச் செய்யும் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.
அவருடைய தாமரை பாதங்களில் பணிந்து, நமது சம்பிரதாயத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை என்றும் நினைவு கூர்வோம்.)
(திரு நக்ஷத்ரம் : ஆவணி ரோஹிணி
அவதார ஸ்தலம் : சங்கநல்லுர் (செங்கனூர்).
ஆச்சார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்: நாயன்அரசன் பிள்ளை , வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் , பரகால தாசர்,
செங்கனூரில் யாமுனரின் மகனாக கிருஷ்ணனாகப் பிறந்த அவர், பெரியவாச்சன் பிள்ளை என்று அழைக்கப்படுகிறார். அவர் நம்பிள்ளையின் முதன்மையான சிஷ்யர்களில் ஒருவரான இவர் , நம்பிள்ளையிடமிருந்தே அனைத்து சாஸ்திர அர்த்தங்களையும் கற்றவர் . நம்பிள்ளையின் அருளால் பெரியவாச்சன் பிள்ளை நம் சம்பிரதாயத்தில் ஆச்சாரியர் ஆனார்.
பெரியவாச்சன் பிள்ளை – நம்பிள்ளை
பெரிய திருமொழி 7.10.10 ல் அடையாளம் காணப்பட்டபடி, அனைத்துப் பொருளையும் கற்க எம்பெருமானார் அர்த்தத்தை எடுத்துக் கொண்டார். அருளிச்செயல். அவர் வியாக்கியான சக்கரவர்த்தி, அபய பிரதா ராஜா, முதலிய பெயர்களிலும் அறியப்படுகிறார். அவர் நாயன் அரசன் பிள்ளையை தனது மகனாக ஏற்றுக்கொண்டார்.
அவரது வாழ்நாளில், அவர் வியாக்கியானம் செய்துள்ளார்:
4000 திவ்ய பிரபந்தம் – அருளிச்செயல் அனைவருக்கும் வியாக்கியானம் எழுதியுள்ளார். பெரியாழ்வார் திருமொழிக்கு ஏறத்தாழ 400 பாசுரங்களுக்கான வியாக்கியானம் தொலைந்து போனது, காணாமல் போன பாசுர வியாக்கியானங்களை மாமுனிகள் தான் எழுதினார்.
ஸ்தோத்ர கிரந்தங்கள் – ஸ்தோத்திர ரத்னம், சதுஸ் ஸ்லோகீ, கத்ய த்ரயம் போன்ற பூர்வாச்சார்ய ஸ்ரீஉக்திகளுக்காக வியாக்கியானங்களை எழுதியுள்ளார்.
ஸ்ரீ ராமாயணம் – அவர் ஸ்ரீ ராமாயணத்திலிருந்து முக்கியமான ஸ்லோகங்களைத் தேர்ந்தெடுத்து, ராமாயண தனி ஸ்லோகத்தில் உள்ளவர்களுக்கு விரிவான விளக்கத்தை எழுதியுள்ளார். விபீஷண சரணஅகதி அத்தியாயத்தின் தலைசிறந்த விளக்கத்திற்காக அவர் அபய பிரதா ராஜர் என்று அழைக்கப்பட்டார்.
மாணிக்க மாலை, பரந்த ரஹஸ்யம், சகல பிரமனா தாத்பர்யம் போன்ற பல ரஹஸ்ய கிரந்தங்களையும் அவர் எழுதியுள்ளார், இது ரஹஸ்ய த்ரயத்தை சிறந்த முறையில் விளக்குகிறது. அவர் ரஹஸ்ய த்ரயத்தை ஆவணப்படுத்துவதில் முன்னோடியாக இருந்தார் – பிள்ளை லோகாசார்யர் நம்பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் போதனைகளின் சாரத்தை எடுத்துக் கொண்டு தனது அஷ்டாதஸ ரஹஸ்ய கிரந்தங்களை எழுதினார்.
அருளிச்செயல் மற்றும் ஸ்ரீ ராமாயணம் ஆகியவற்றில் அவரது நிபுணத்துவத்தை பாசுரப்படி ராமாயணம் எனப்படும் அவரது கிரந்தம் மூலம் புரிந்து கொள்ள முடியும், அங்கு அவர் ஸ்ரீ ராமாயணம் முழுவதையும் மிருதுவான முறையில் விளக்குவதற்கு அருளிச் செயலிலிருந்து சொற்களைப் பயன்படுத்துகிறார்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரிடம் நடந்த சம்பவத்திலிருந்தும் அவருடைய அருளின் ஆற்றலைப் புரிந்து கொள்ளலாம் . ஜீயர், தனது பூர்வாஸ்ரமத்தில் பெரியவாச்சான் பிள்ளையின் திருமாளிகையின் திருமடப்பள்ளியில் (சமையலறையில்) சேவை செய்து வந்தார். அவர் ஒரு படிப்பறிவில்லாதவர், ஆனால் தனது ஆச்சார்யன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருமுறை ஸ்ரீவைஷ்ணவர்கள் சில வேதாந்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பதைக் கேட்டபோது, அவர் அவர்களிடம் விவாதத்தின் தலைப்பைக் கேட்டார். அவர்கள் திமிர்பிடித்தவர்களாகவும், அவரைப் படிப்பறிவில்லாதவராகக் கருதியும், “முசல கிசலயம்” (புதிதாக மலர்ந்த பூண்டு) என்ற கிரந்தத்தைப் பற்றி விவாதிப்பதாகக் கூறினர். அவர் தனது ஆச்சாரியரிடம் சென்று இதைக் குறிப்பிட்டார் மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் அருளால் அவருக்கு எல்லாவற்றையும் கற்பிக்க முடிவு செய்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அனைத்து சாஸ்திரங்களிலும் மாஸ்டர் ஆனார் மற்றும் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஆனார் மற்றும் எங்கள் சம்பிரதாயத்தில் பல கிரந்தங்களை எழுதுகிறார்.
பெரிய பெருமாள் , பெரிய பிராட்டி , பெரிய திருவடி, பெரியாழ்வார் , பெரிய கோவில் போன்றே , ஆச்சான் பிள்ளையும் தன் பெருமையால் பெரியவாச்சான் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.
திருவாய்மொழிக்கு விளக்கவுரை எழுதும்படி பெரியவாச்சன் பிள்ளைக்கு நம்பிள்ளை தன் அருளால் கட்டளையிடுகிறார். அதை மனதில் கொண்டு, அனைத்து வேதங்களின் சாரமான நம்மாழ்வாரின் திருவாழிமொழிக்கு பெரியவாச்சான் பிள்ளை மிகவும் சுவாரஸ்யமாக வர்ணனையை எழுதினார். வர்ணனை ஸ்ரீ ராமாயணத்தைப் போலவே எழுதப்பட்டது, அதாவது, 24000 படிகளைக் கொண்டது (ஸ்ரீ ராமாயணத்தில் உள்ள 24000 ஸ்லோகங்களைப் போன்றது)..
அவரது வாழ்க்கையிலிருந்து பல சம்பவங்கள் வர்த மலை கிரந்தம் மற்றும் பிற பூர்வாச்சார்ய கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலவற்றை இங்கே பார்ப்போம்:
பட்டர் அஷ்ட ஸ்லோகீ
இவர் தமிழில் பல ரஹஸ்ய கிரந்தங்கள் அருளிச் செய்துள்ளார்
தற்போது 8 மட்டுமே கிடைக்கின்றன
1-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்
2-ஸ்ரீ மாணிக்க மாலை
3-ஸ்ரீ சகல பிரமாண தாத்பர்யம்
4-ஸ்ரீ உபகார ஸ்ம்ருதி
5-ஸ்ரீ நிகமநப்படி
6-ஸ்ரீ ரஹஸ்ய த்ரய விவரணம்
7-ஸ்ரீ ரஹஸ்ய த்ரய தீபிகை
8-ஸ்ரீ கலியன் அருள் பாடு)
தைவாதீனம் ஜகத் சர்வம் மந்த்ராதீநந்து தைவதம் தன் மந்தரம் ப்ராஹ்மணாதீனம் தஸ்மாத் ப்ராஹ்மண தைவதம் —என்கிறபடியே
உபய விபூதியும் ஸ்ரீ ஈஸ்வரன் இட்ட வழக்காய் இருக்கும் –
ஸ்ரீ ஈஸ்வரன் ஸ்ரீ திரு மந்தரம் இட்ட வழக்காய் இருக்கும் –
ஸ்ரீ திரு மந்த்ரம் ஸ்ரீ ஆச்சார்யன் இட்ட வழக்காய் இருக்கும் –
(மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரௌ |
த்ரிஷு பக்திஸ் ஸதா கார்யா ஸாது ஹி ப்ரதம ஸாதநம் ||
மந்த்ரத்திலும்
மந்த்ர ப்ரதானான ஆச்சார்யர் பக்கலிலும்
மந்த ப்ரதிபாத்யனான ஈஸ்வரன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க இருந்தால் கார்யகரம் ஆகும்)
ஆகையாலே உபய விபூதிக்கும் நிர்வாஹகனான ஸ்ரீ ஈஸ்வரனும் அவனை பிரதிபாதிக்கிற ஸ்ரீ திரு மந்த்ரமும்
ஸ்ரீ ஆச்சார்யன் இட்ட வழக்காகையாலே
ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதி பாதிக்கிற ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் ஸ்ரீ ஆசார்யனாலே என்னத் தட்டில்லை –
(இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித்
திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே)
(அதமோ தேவதா பக்தோ மந்த்ர பக்தஸ்து மத்யம: |
உத்தமஸ்து ஸ மே பக்தோ குரு பக்தோத்த மோத்தம: ||)
(இது முதல் மாணிக்கம்
இதே போல் பல மாணிக்கங்கள் சேர்த்து அருளிச் செய்த கிரந்தம் இது)
———-
ஸ்ரீ ஆச்சார்யன் ஆவான் –
ஆச்சார்யோ வேத சம்பந்தோ விஷ்ணு பக்தோ விமத்சர -மந்த்ரஜ்ஞோ மந்திர பக்தஸ் ஸ சதா மந்திர ஆஸ்ரயஸ் ஸூசி -என்றும்(ஞானமும் அறிவும் ப்ரேமமும் பக்தியும் வேண்டுமே)
குரு பக்தி சமா யுக்த புராணஜ்ஞோ விசேஷத-ஏவம் லஷண சம்பந்னோ- குருரித்யபி தீயதே -என்றும் சொல்லுகிறபடியே
வைதிக அக்ரேசரனாய்-ஸ்ரீ பகவத் பக்தி யுக்தனாய் -மாத்சர்ய வியுக்தனாய் -சகல வேத சார பூதமாய்
சகல மந்த்ரங்களுக்கும் காரணமாய் -இரண்டு பங்குக்கு ஒரு கை யோலை போலே
ஸ்ரீ எம்பெருமானோடு இவ் வாத்மாவுக்கு யுண்டான அவிநாபூத சம்பந்தத்தைக் காட்டக் கடவதாய்-
முமுஷூவுக்கு எய்ப்பினில் வைப்பான- ஸ்ரீ திரு மந்த்ரத்தை பக்தி ஸ்ரத்தைகளோடே அர்த்த சஹிதமாய் அனுசந்தித்துப் பெரிய மதிப்பனாய்
அர்த்த காமோபஹதன் அன்றிக்கே லோக பரிக்ரஹம் யுடையவனாய் இருப்பான் ஒருவன் ஸ்ரீ ஆசார்யனாகக் கடவன் –
(அவிநாபூத சம்பந்தத்தை-அப்ருதக் ஸித்தம் –
நான் உன்னை அன்றி இலேன் -நீயும் என்னை அன்றி இல்லையே –
உறவேல் ஒழிக்க முடியாதே -சர்வ சக்தனாலும் ஸம்பந்தம் இல்லை என்று அறுக்க முடியாதே -குடல் துவக்கு உண்டே)
(ஆச்சார்யர் திருவடிகளே ரக்ஷை -வெள்ளம் கடந்த கதை
என் திருவடிகளே சரணம் சொல்லி ஆச்சார்யர் அகப்படுத்திக் கொண்ட வ்ருத்தாந்த்தம்
தனது ஆச்சார்யர் திருவடிகளே ரக்ஷை இருக்க வேண்டுமே-ஞான ஸ்ருதி ரகு குணன் கதை
இரண்டு பறவைகள் சொல்லி அறிந்தான்-ரைக்குவாரோ -பறவை சொல்லி வந்தாயா-ஸ்ரத்தை கொடுத்து ஞானம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறியாமல்-)
அர்த்த காமோபஹதன் அன்றிக்கே லோக பரிக்ரஹம் யுடையவனாய் இருப்பான் ஒருவன் ஸ்ரீ ஆசார்யனாகக் கடவன் -ஸம்ஸாரத்திலே இருந்து உபதேசித்து கால க்ஷேபம் -பற்று இல்லாமல் -மாய வன் சேற்று அள்ளல் அழுந்தார் பொய் நிலத்திலே
இது இரண்டாவது மாணிக்கம்)
———–
ஸ்ரீ கூரத் ஆழ்வான்-ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளத்திலே சீறி அருளினார் என்று கேட்டு –
இவ் வாத்மா அவருக்கே சேஷமாய் இருந்ததாகில் அவருடைய இஷ்ட விநியோக பிரகாரம் கொண்டு கார்யம் என்-என்றார் –
தன்னை ஆஸ்ரயித்து வைத்துத் தன் திறத்திலே தீங்கு நினைத்து த்ரோஹியான நாலூரானை
ஸ்ரீ பெருமாள் – ந ஷமாமி –என்று முனிந்து அருள –
ஸ்ரீ பெருமாளோடு எதிரிட்டு -அவன் நான் பெற்ற லோகம் பெற வேணும் -என்று விண்ணப்பம் செய்தார் –
ஆக -இவ்விரண்டு அர்த்தத்தாலும் சிஷ்ய ஆச்சார்ய கிரமத்துக்கு சீமா பூமி ஸ்ரீ கூரத் ஆழ்வான் -என்று
அருளிச் செய்வர் -ஸ்ரீ வடுக நம்பி –
ஆச்சர்ய பதம் என்று தனியே ஒரு பதம் -அது உள்ளது ஸ்ரீ எம்பெருமானாருக்கே யாயிற்று –
ஆகையால் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று விஸ்வசித்து இருங்கோள் -என்றாயிற்று –
தம்முடைய சிஷ்யர்களுக்கு அருளிச் செய்வது –
(இது மூன்றாவது மாணிக்கம்
மேல் சிஷ்யர்களைப் பற்றி அருளிச் செய்கிறார்)
———-
நல்லடிக் காலத்தில் நம் ஸ்ரீ ஆச்சார்யர்கள் அதிகாரிகளைப் பெற்றால் அல்லது ஸ்ரீ பகவத் சம்பந்தம்
இருக்கும்படி சொல்லக் கடவதாய் இராது –
அதிகாரிகள் ஆவார் –
கருந் தரையிலே தாங்கள் நின்ற நிலையை அனுசந்தித்து இந் நின்ற நீர்மை யினி யாமுறாமை -என்றும்
இன்னொரு நாளை என்றே எத்தனை காலமும் போய்க் கிறிப் பட்டேன்-என்றும்
ஏஹி பஸ்ய சரீராணி -என்றும் –
இன்னம் கெடுப்பாயோ -என்றும் –
இவை என்ன யுலகு இயற்கை -என்றும் –
நாட்டு மானிடத்தோடு எனக்கரிது-என்றும்
நாட்டாரோடு இயல் ஒழிந்து -என்றும் –
ஒ ஒ உலகினது இயல்வே -என்றும் –
கூவி -வெருவி -இந் நிலத்தில் பொருந்தாமை தோற்றத் துவண்ட -சேதனனுக்காயிற்று ஸ்ரீ பகவத் சம்பந்தம் சொல்லுவது –
அங்கன் அன்றிக்கே –
வாய்க் கரையிலே பொரி புறம் தடவின ஆனுகூல்யம் கண்டாதல் —
த்யாஜ்யமான அர்த்த காமங்களிலே நசையாதல் –
நிலை நில்லாத ஒரு பிரபாவத்தை நச்சியாதல் –
ஒன்றாலே வந்ததுவும் துவட்சி யில்லாக் கழனி முண்டர்க்கு ஒரு நல் வார்த்தை சொன்னான் ஆகில்
தன் மதிப்பும் கெட்டு-
தன் கூற்றிலே ஒதுங்கின ஸ்ரீ பகவத் பிராப்தியும் நழுவ விட முடிந்து –
கேட்கிறவனையும் நாஸ்திகன் ஆக்குகிறான் இத்தனை –
(க்யாதி பூஜா லாபம் அபேக்ஷை இல்லாமல் உபதேஸிக்க வேண்டுமே-அவனே உபாயம் விஸ்வாஸம் குறையும்படி மற்ற ஒன்றில் கண் வைப்பவன் நாஸ்திகன் தானே)
(இது நான்காவது மாணிக்கம்)
———
ஸ்ரீ ஆச்சார்ய பேதமும் ஆத்ம பேதத்தோபாதி
பிதாவை -மாதுலனை -மாமனாரை -சாவித்ர் யுபதேசம் பண்ணினவனை -அத்யயனம் பண்ணு வித்தவனை –
ஒரு மந்த்ரம் உபதேசித்தவனை- (திரு மந்த்ரம் தவிர்ந்த மற்ற அனைத்து)ஸ்ரீ பகவன் மந்த்ரம் உபதேசித்தவனை –இப்படி ஆராய்ந்து பார்த்தால் அநேகராய் இருப்பார்கள் –
(அறியாதன அறிவித்த அத்தா)
இவர்கள் அடைய முமுஷூக்களுக்கு த்யாஜ்யர்கள் -இது என்-
ஸ்ரீ பகவன் மந்த்ரம் உபதேசித்தவனையும் அப்படிச் சொல்லலாமோ -என்னில்
ஸ்ரீ பகவத் அவதாரங்களும்- ஸ்ரீ பகவத் குணங்களும் – எல்லையாய் என்றும் இருந்து(இறந்து-பரந்து) இருக்கும்
ஸ்ரீ பகவத் அவதாரங்கள் தோறும் -ஸ்ரீ பகவத் குணங்கள் தோறும் -திவ்ய சேஷ்டிதங்கள் தோறும்- ஸ்ரீ திரு மந்த்ரங்களும் உளவாக இருக்கும் –
(பிறப்பில் பல் பிறவிப் பெருமான்-அஜாயமானோ பஹுதா வி ஜாயதே –
கர்ம வஸ்யன் அல்லவே இச்சாதீனம் தானே-குணங்களையோ தோஷங்களையோ எண்ண முடியாதே -இது அவனுக்கும் நமக்கும் ஸாம்யம்)
சம்சாரத்தில் ஸ்த்ரீ புமான்கள் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ரூபமான ஸ்ரீ கோபால மந்த்ரத்தை உபதேசிப்பாரும்
புத்ர பிரதமான மந்த்ரத்தை உபதேசிப்பாரும் -ஐஸ்வர்யம்- என்ன- ஆரோக்கியம் என்ன -விஜயார்த்தம் என்ன -சத்ரு நிரசனம் என்ன –
இவற்றுக்குத் தக்க மந்த்ரங்களையும் உபதேசிப்பார் எல்லாரும் சம்சாரத்தை அர்த்திப்பார்கள் ஆகையாலே ஸ்ரீ ஆச்சார்யர்களாக மாட்டார்கள் –
(புத்ர பாக்யம் பெற ராம மந்த்ரம்-ஐஸ்வர்யம் பெற கோபால மந்த்ரம்-முமுஷுக்களுக்கு இவை அனைத்துமே த்யாஜ்யம் தானே-நோய்கள் போகும் -கைங்கர்ய தடை களாகிய நோய்கள் போகும் போகும் ஆழ்வார்கள் அருளிச் செய்யும் பலன்கள்-)
இவ் வர்த்தம் ஸ்ரீ திரு மந்த்ரத்தைக் குறித்து அன்று -விநியோகம் கொள்ளுகிற சேதனனுடைய நினைவைப் பற்ற –
விபரீத ஸ்பர்ஸம் யுடைய ஸ்ரீ எம்பெருமான் -நீச ஸ்பர்ஸம் யுடைய மந்த்ரம் -நீச ஸ்பர்ஸம் யுடைய ஸ்ரீ ஆச்சார்யன் –
இவர்கள் அடைய முமுஷூக்களுக்கு த்யாஜ்யர்கள் –
விபரீத ஸ்பர்ஸம் யுடைய ஸ்ரீ எம்பெருமான் ஆவான் -இதர தேவ ஆலயங்களில் இருக்குமவன் –
நீச ஸ்பர்ஸம் யுடைய மந்த்ரமாவது -ஸ்ரீ பகவத் ஸ்ரீ பாகவத கைங்கர்ய ப்ராப்திக்கு அவ் வருகு யுண்டான ஆபாசங்களை அடையச் சொல்லுமது –
நீச ஸ்பர்ஸம் யுடைய ஆச்சார்யன் ஆவான் -இதுக்குப் புறம்பு சில சம்சாரத்தில் மினுக்கங்களைத் தோன்றச் சொல்லுமவன் –
————–
இனி ஸ்ரீ ஆச்சார்யன் யார் என்னில் –
ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பிரதி பந்தகமான ஸ்வ வியாபார நிவ்ருத்தி ரூபமான ப்ரபத்தியை உபதேசிக்கிறவன் ஆச்சார்யன் ஆவான் –
ஸ்ரீ யபதியான ஸ்ரீ எம்பெருமானையே ரஷகன் என்று விஸ்வசித்து நிர்ப் பரனாய் இரும் -என்று அருளிச் செய்யுமவன் –
————–
ஸ்ரீ சதாச்சார்யன் சச் சிஷ்யனை ஸ்ரீ பகவத் பிரசாதத்தாலே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவன் என்று மிகவும் ஆதரித்துக் கொண்டு போரும் –
சச் சிஷ்யனும் ஸ்ரீ சதாச்சார்யனுடைய ஆதரத்தைக் கண்டு இறுமாறாதே- தன் கருந்தரையை யுணர்ந்து
ஸ்ரீ பகவத் விமுகனாய் சப்தாதி விஷயங்களில் மண்டி உருமாய்ந்து கை கழிந்து நின்ற என்னை முதலடியிலே
அத்வேஷம் பற்றாசாகக் கொண்டு
தன்னுடைய நிரவதிக கிருபையாலே ரஷித்து அருளின மஹா உபகாரகன் -என்றும்
ஸ்ரீ ஆச்சார்யனாலே இப் பேறு பெற்றேன் என்றும் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்றும் –
உனக்கு என் செய்கேன் -என்றும்
ஸ்ரீ ஆச்சார்யன் பண்ணின மஹா உபகாரத்துக்கு பிரத் யுபகாரம் தேடிக் காணாமல் தடுமாறி
குருரேவ பரம் ப்ரஹ்ம-குருரேவ பராகதி -குருரேவ பரா வித்யா -குருரேவ பரம் தனம்
குருரேவ பர காம -குருரேவ பராயணம்- யஸ்மாத் தத் உபதேஷ்டாசௌ தஸ்மாத் குரு தரோ குரு-என்கிறபடியே
இஹ பர லோகங்கள் இரண்டும் ஸ்ரீ ஆச்சார்யன் திருவடிகளே என்றும்
திருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டும் அவனே என்றும் நினைத்து இருக்கும் –
(பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-)
(பாட்டுக் கேட்க்கும் இடமும் –எல்லாம் வகுத்த இடமே என்று இருக்க வேண்டுமே
அத்ர பரத்ர)
————–
ஸ்ரீ ஆச்சார்யன் சிஷ்யனுடைய ஹிதத்தைச் செய்யுமவன் -சிஷ்யன் ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய பிரியத்தை செய்யுமவன் –
ஸ்ரீ ஆச்சார்யன் சிஷ்யனுடைய ஆத்ம யாத்ரையை தனக்கு தேக யாத்ரையாக நினைத்து இருக்கும் -என்று விஸ்வசித்து இருக்கிறதற்கு மேல் இல்லை –
சிஷ்யனும் அப்படியே ஸ்ரீ ஆச்சார்யன் யுடைய தேக யாத்ரையை தனக்கு ஆத்ம யாத்ரையாக நினைத்து இருக்கும்
ஸ்ரீ ஆச்சார்யன் ஆனவன் சிஷ்யனுடைய உயிரை நோக்கும் -சிஷ்யன் ஸ்ரீ ஆச்சார்யனுடைய யுடம்பை நோக்கும் –
(ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் ———65-)
சிஷ்ய வஸ்துவை ஸ்ரீ ஆச்சார்யன் விநியோகம் கொள்ளக் கடவன் அல்லன் —
சிஷ்ய வஸ்துவை விநியோகம் கொள்ளுகிறான் -என்று இருக்கும் ஸ்ரீ ஆச்சார்யனுடைய அறிவையும் சங்கிக்க அடுக்கும்
(கொடுக்கில் கள்வனாம் கொள்ளில் மிடியனாம்)
சரீரமர்த்தம் ப்ராணஞ்ச சத் குருப்யோ நிவேதயத் -என்றும்
உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -என்றும் -சிஷ்யனுக்கு பிரதிபத்தி யாகையாலும்
இந்த ருசியை விளைப்பித்தான் ஸ்ரீ ஆச்சார்யன் ஆகையாலும் -ஸ்ரீ ஆச்சார்யனுக்கும் சிஷ்யனுக்கும் ஒரு நினைவேயாக வேணும் –
(ஆத்ம ஸமர்ப்பணமாவது-சேர பாண்டியன் திருடி எடுத்து மீண்டும் சமர்ப்பித்த விருத்தாந்தம்)
———
ஸ்ரீ ஆச்சார்யன் பொறைக்கு இலக்கான சிஷ்யனுக்கு பகவத் ஜ்ஞானமே கை வந்தது என்ன ஒண்ணாது –
ஸ்ரீ ஆச்சார்யன் கண் வட்டத்தில் வர்த்திக்கிற சச் சிஷ்யனுக்கும் ஆச்சார்யன் பிரியமே செய்கையாலே கோபத்துக்கு ஹேது இல்லை –
ஆகையால் பொறை குமரிருந்து போம் இத்தனை –
ஸ்ரீ ஆச்சார்யன் அர்த்த காமங்களில் நசை அற்றவன் ஆகையாலே த்யாஜ்யமான அர்த்த காமங்கள்
ஹேதுவாகப் பொறுக்கவும் வெறுக்கவும் ப்ராப்தி இல்லை –
இனி இவனுடைய ஹித ரூபமாக வெறுத்தான் ஆகிலும் அதுவும் ப்ராப்ய அந்தர்க் கதமாகக் கடவது –
(இவையே ஸ்ரீ வசன பூஷணத்தில் 309-362 சூர்ணிகைகளில் விவரித்து அருளிச் செய்துள்ளார்)
———–
ஸ்ரீ மட்டியூர் அரங்கத்தானும் ஸ்ரீ மணிகையோசைப் பிள்ளானும் ஸ்ரீ பெற்றியும் -ஸ்ரீ நஞ்சீயருமாக எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து
ஒரு வைஷ்ணவன் ஓர் ஸ்ரீ ஆச்சார்யன் ஸ்ரீ பாதத்திலே பகவத் சம்பந்தத்தைப் பண்ணி வேறு ஓர் ஸ்ரீ ஆச்சார்யன்
ஸ்ரீ பாதத்திலே ஸ்வரூப சிஷையாய் இருந்து
இருவர் பக்கலிலும் இவன் அனுவர்த்திக்கும் படி எங்கனே -என்று விண்ணப்பம் செய்ய –
யாரைத் தான் நீர் விடப் பார்க்கிறீர் -முற்படக் கருந் தரையிலே ஒரு வார்த்தையைச் சொல்லுமவர் –
ஸ்ரீ யபதியான ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடிகளையே விஸ்வசித்து நிர்ப்பரனாய் இரும் -என்று அருளிச் செய்யுமவர் –
(நினைக்க நினைக்க -விசுவாசம் பெருக பெருக பயம் -போகுமே
விலக விலக பயம் மிக்கு இருக்குமே)
பின்பு அவனைக் குறித்து ஒரு நல் வார்த்தை சொல்லுமவன் நீர் யார் ஸ்ரீ பாதத்திலே யுடையார் என்று கேட்டு
இவனை ரஷித்த ஸ்ரீ ஆச்சார்யனுக்கு ஒரு பிரியம் செய்தானுமுமாய் –
இவன் ஹிதத்தின் மேல் எல்லை நிலத்தைப் பிடித்து உன் ஸ்ரீ ஆச்சார்யன் திருவடிகளையே விஸ்வசித்து நிர்ப்பரனாய் இரும் –
என்றாயிற்று வார்த்தை சொல்லுவது –
ஆகையாலே இருவரும் உபாதேய தமர் -என்று அருளிச் செய்தார் –
ஏகாஷர ப்ரதாதாரம் ஆச்சார்யம் -யோ வமந்யதே -ஸ்வாந யோநி ஜாதம் ப்ராப்ய சண்டாளேஷ்வபி ஜாயதே -என்னக் கடவது இறே-
————-
முமுஷூக்களுக்கு மாதா பிதாக்கள் யார் -என்று கேட்க –
சரீரமேவ மாதா பிதரௌ ஜனயாத -என்கிற மாதா பிதக்களும் –
த்வம் மாதா சர்வ லோகாநாம் தேவ தேவோ ஹரி பிதா –பிதா மாதா ச மாதவ -என்று
பொதுவான மாதா பிதாக்களும் இவனுக்கு அன்று அவர்களும் அல்ல –
இனி யார் என்னில் –
ஸ்ரீ திரு மந்த்ரம் மாதாவையும் -பிதா ஸ்ரீ ஆச்சார்யனும் என்று அருளிச் செய்வர்
இத்தை நினைத்து இறே ஸ்ரீ நஞ்சீயரை ஸ்ரீ அனந்தாழ்வான்
திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய நிஷ்டர் ஆனீர் -என்று வாழ்த்திற்றும் –
உத்பாதக ப்ரஹ்ம பிதரோ கரீயான் ப்ரஹ்மத பிதா -என்றும் யுண்டு –
(வித்யை தாயாகப் பெற்று இத்யாதி –நாயனார்)
(ஞான பிரதன் ஸ்ரேஷ்டர்
வந்தே கோவிந்த தாதவ்)
———–
முமுஷூக்களுக்கு சம்சாரத்திலே இருக்கும் நாள் உசாத் துணை யார் -பொழுது போம் படி என்-என்று ஸ்ரீ நஞ்சீயரை ஸ்ரீ பிள்ளை கேட்க –
முமுஷூ என்று ஒரு ஜாதி அன்று –ஒரு ஆஸ்ரமம் அன்று -மோஷத்தில் இச்சை யுடையவனை முமுஷூ என்றது இத்தனை –
இவனுக்கு உசாத் துணையும் இவனோடு சேர்ந்து போது போக்கும் உள்ளதும் விரஜைக்கு அக் கரையிலே போனால் இறே-
இவ் விருப்பிலே ஓராசை யுடையவனுக்கு அன்றோ துணை வேண்டுவதும் போது போக்கும் உள்ளதும் –
இருக்கும் நாள் ஸ்ரீ பிராட்டிக்கு இலங்கையிலே உசாத் துணை யுண்டாகில் இவனுக்கும் சம்சாரத்தில் துணை யுண்டு –
அறிவு நடையாடின முமுஷூவுக்கு சம்சாரம் பிராட்டிக்கு இலங்கையோபாதி இறே –
அவளுக்கு ராவணன் அபிமானித்த அசோக வநிகையோபாதி- இவனுக்கு இவ் யுடம்பு
அவளுக்கு மாரீசனுடைய தோற்றரவோபாதி இவனுக்கு விஷய ப்ராவண்யம்
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்கள் -என்னக் கடவது இறே –
அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணி மாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8-
அவளுக்கு ராவணன் தோற்றரவோபாதி இவனுக்கு சம்சாரத்தின் தோற்றரவு –
அவளுக்கு தர்ஜன பர்த்சனாதிகளைப் பண்ணும் ராஷசிகளோபாதி இவனுக்கு புத்ர மித்ராதிகள் –
ஏகாஷி ஏக கர்ணிகைகளோபாதி இவனுக்கு அஹங்கார மமகாரங்கள் –
அவளுக்கு ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் பெண் மகளும் போலே இவனுக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் உசாத் துணையாய் இருக்கும் படி –
அவளுக்கு ஸ்ரீ திருவடி தோற்றரவோபாதி இவனுக்கு ஸ்ரீ ஆசார்யன் தோற்றரவும் –
அவளுக்குத் திருவடி வர்ஷித்த ஸ்ரீ ராம குணங்களோ பாதி இவனுக்கு ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ அருளிச் செயல்களும் –
ஸ்ரீ இராமாயண ஸ்ரீ மஹா பாரதாதி ஸ்ரீ பகவத் கதைகளும் –
அவளுக்கு ஸ்ரீ திருவடி ஸ்ரீ மோதிரத்தோ பாதி இவனுக்கும் ஸ்ரீ ஆசார்யன் திரு உள்ளமான ஸ்ரீ திரு மந்த்ரம் –
அவளுக்கு ஸ்ரீ திரு வாழி மோதிரம் சாத்தின மணி விரலை நினைப்பது -அணைத்த திருத் தோளை நினைப்பது –
அவ் வழியாலே திரு மேனியை முழுக்க நினைப்பதாய்-
இலங்கையிலே தனி இருப்பையும் மதியாதே ஸ்ரீ பெருமாளோடு ஒரு படுக்கையிலே இருந்தால் போலே
இவன் ஸ்ரீ திரு மந்த்ரத்தில் பிரதம அஷரத்தில் சொல்லுகிற ரஷகத்வ சேஷத்வங்களை நினைத்து –
அந்த ரஷகத்வ சேஷத்வங்களுக்கு இடைச் சுவரான அந்ய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிஷேதத்தைப் பண்ணித் தன்னை அனந்யார்ஹ சேஷம் ஆக்கின அவதாரணத்தை நினையா –
அவ் வனன்யார்ஹ சேஷ வஸ்துவுக்கு உஜ்ஜீவனம் நிருபாதிக சேஷியானவனுக்கு கிஞ்சித் கரிக்கை என்கிற
அர்த்தத்தைக் காட்டும் ஸ்ரீ நாராயண பதத்தை நினையா –
இப்படி ஸ்ரீ திரு மந்த்ரத்தில் அர்த்த அனுசந்தானத்தாலே சம்சாரத்தில் இருப்பையும் மதியாதே
பாமரு மூவுலகத்துக்கு உள்ளே தெளிவுற்ற சிந்தையராய் வர்த்திப்பார்கள் –
ஸ்ரீ பிராட்டிக்கு இலங்கையிலே பொழுது போக்கு போலே- முமுஷூவுக்கு சம்சாரத்திலே பொழுது போக்கு –
———–
சம்சாரிகளைக் காட்டில் முமுஷூவுக்கு வாசி எது போலே என்றால் -இலங்கையில் உள்ளார் தன்னிலமான வாசி தோன்ற
யுண்பார் யுறங்கு வாராய் -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளோடு போது போக்காய்
ஸ்ரீ பிராட்டி -ஊண் உறக்கமும் இன்றிக்கே பத்துக் கோடி செந்நாய்க்கு நடுவே ஒரு மான் பேடை இருந்தால் போலே
(திருவடி முதுகில் ஆரோஹணித்தால்
பரப்புருஷனை தீண்ட மாட்டேன் -என்னில் பிள்ளை அன்றோ
ராக்ஷசர் துரத்துவாரோ அஞ்சினேன்
ஆகாசம் செல்லும் போது பயப்படுவேன்
பல சொல்லியும் இறுதியில்
நான் எனது சக்தி கொண்டு உமது வாலில்நெருப்பு சுடாமல் இருக்க ஆணை இட்டேன்
ராமன் கையையே எதிர்பாரத்து இருப்பேன்
சொல்லினால் சுடுவேன் -அது தூயவன் வில்லக்கு ஆற்றலுக்கு தோஷம் -மாசு ஆகுமே
ஒரு ராஷசன் அங்கு வைக்க மற்ற ஒரு குரங்கு இங்கே கொண்டு வர ராமன் என்ன செய்தான் என்பார்களே
தத்த்ருஸ்ய ஸத்ருசம் பவேத் -போலவே
முமுஷு வும் பிர விருத்தி நிவ்ருத்திக்கு க்ஷ மர் இன்றிக்கே துரும்பு நறுக்கவும் பிராப்தி இல்லாமல் இருக்க வேண்டுமே)
முமுஷூவுக்கும் -உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை -என்றும்
நாட்டு மாநிடத்தோடே எனக்கரிது -என்றும்
நாட்டாரோடு இயல் ஒழிந்து-என்றும் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -என்றும் இருக்கை-
——-
சம்சாரிகளுக்கு வாஸ ஸ்தானம் ஒரு க்ராம மாத்ரமாய் -ஆஸ்ரயம் ஷேத்ரஜ்ஞனாய் இருப்பானோர்
எலி எலும்பனாய்-பிரயோஜனம் வயிறு வளர்க்கையாய் இருக்கும் –
முமுஷூவுக்கு இருப்பிடம் ஸ்ரீ எம்பெருமானேயாய்-ஆஸ்ரயம் ஸ்ரீ எம்பெருமானேயாய் -பிரயோஜனமும் கைங்கர்யமேயாய் இருக்கும் –
வைத்த பரிசிது காண்மின் -என்று இந்நிலத்து பொருந்தாமையும்-
பொருந்தின நிலத்தில் புகப் பெறாமையும் வடிவிலே தோற்றும் படியாய்
கண்கள் அசும் பொழுக நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் -என்று இருப்பார்கள் -என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்தார் –
இவ் விருப்பில் பொருந்தாமை விளைப்பித்து இரும்பைப் பொன் ஆக்குவாரைப் போலே கருந் தரையில் புகுந்து
ஸ்ரீ பகவத் விஷயத்தை உபகரித்த ஸ்ரீ ஆச்சார்யனுக்கு சிஷ்யன் பண்ணும் உபகாரம் ஏது என்னில் –
ஆச்சார்ய விஷயீ காரத்துக்கு இவ்வருகு சிஷ்யன் நல் வழிக்கு உறுப்பாக நடக்கும் நடக்கைகளை யுடைய
ஸ்ரீ ஆசார்யனுக்கு உபகரித்தானாக வாயிற்று –
ஆச்சார்யன் திரு உள்ளத்தில் அனுசந்தித்து இருக்கும் அது –
அவை யாவன –
தன் முன்னடி பார்த்து நடக்கையும் –
பிறருடைய குணா குண நிரூபணம் பண்ணாது ஒழிகையும்-
ஸ்வ தோஷத்தில் சர்வ ஜ்ஞனாய் இருக்கையும் –
பர தோஷத்தில் அஜ்ஞ்ஞனாய் இருக்கையும் –
அந்ய சேஷத்வம் ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் தேஹாத்மாபிமானம் ஆத்ம ஸ்துதி பர நிந்தை என்கிற
எல்லை மயக்குகள் பரிஹரித்து நடக்கையும்
ஸ்ரீ எம்பெருமானுடைய வாய் புகு சோற்றைப் பறியாது ஒழிகையும் -அதாவது –
ஸ்ரீ எம்பெருமானுடைய வகுத்த ரஷகத்வத்தை தான் தனக்கு ரஷகன் என்று இருக்கை –
ஸ்ரீ ஆச்சார்யனையும் திரு மந்தரத்தையும் எம்பெருமானையும் அவமானம் பண்ணாது ஒழிகையும் –
ஸ்ரீ ஆச்சார்யனை அவமானம் பண்ணுகை யாவது –
தன் முன்னடி பார்த்து நடவாது ஒழிகையும் –
அவன் அருளிச் செய்த ஸ்ரீ திரு மந்த்ரத்தை தரை இல்லாத் தரையிலே சிந்தி இழக்கையும் –
ஸ்ரீ திரு மந்த்ரத்தை அவமானம் பண்ணுகையாவது —ஸ்ரீ திரு மந்த்ரத்தை மறைக்கையும் -ஸ்ரீ திரு மந்த்ரம் அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்யனை அநாதரிக்கையும் –
ஸ்ரீ திரு மந்தரத்தால் பிரதிபாதிக்கிற அர்த்தத்தின் படி ஒழிய அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்ய தேஹாத்ம அபிமாநாதிகளிலே
மொத்துண்டு கிட்டம் தின்ற மாணிக்கம் போலே உருமாய்ந்து போகையும் –
ஸ்ரீ எம்பெருமானை அவமானம் பண்ணுகையாவது –
அவனுடைய ரஷகத்வத்துக்கு இடைச் சுவரான ஷேத்ரஜ்ஞரை ரஷகராக நினைத்து -அவர்கள் வாசல்கள் தோறும் நுழைந்து
ஸ்ரீ சர்வேஸ்வரனை ஸ்துதிக்கிற நாக்கை இட்டு புரோடாசத்தை நாய்க்கு இடுமா போலே ஷேத்ரஜ்ஞரை ஸ்துதிக்கையும்-
—————–
ஸ்ரீ எம்பெருமானுக்கும் ஆத்மாவுக்கும் ப்ராப்தி அவிநா பூதமாய் இருக்க -புருஷகாரம் வேண்டுவான் என் என்னில் –
இருக்கிற சம்சாரமும் -எடுத்த யுடம்பும் -இந்த ப்ராப்திக்கு இடைச் சுவரான
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்ய தேஹாபிமா நாதிகளை விளைப்பித்து-
தன்னை மறந்து -உருமாயப் பண்ணுமதாகையாலே -சாபராதன் தன் படியையும் அபராதத்தையும் அறிகைக்கு
ஸ்ரீ சர்வஜ்ஞனுமாய் -அறிந்தபடி அனுபவிக்கைக்காக – சர்வ சக்தியுமாய்-
தான் ஸ்வ தந்த்ரனுமாய் இருக்கையாலே -இவன் அபராதத்தைக் கண்டு -அழியச் செய்யாமைக்கு -புருஷகாரம் வேணும் –
(ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –-ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-102-
வரத
ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் –
ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்
ச து –அந்த எம்பெருமானாரோ
யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –
ச ச –அந்த ஆளவந்தார் தாமும்
நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்
பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே
ச ச -அந்த நாதமுனிகளும்
பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு
இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ
ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும்
தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்
ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ –
பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ
இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத்
தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ
நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம்
என்னும் இடத்தை மூதலிக்கிறார்
சித்திர் பவதி வாநேதி சம்சய அச்யுதபி சேவிநாம்
ந சம்சய யோஸீத் தத் பக்த பரிசர்யாரதாத்மநாம் –அந்தப்புர பரிகரத்தை நோக்காது இருக்கப் போகாதே
யஸ்யா வீஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே அகிலம்
ஸ்ருத்வா வரம் தத் அநு பந்த மதாவலிப்தே நித்யம் ப்ரஸீத பகவான் மயி ரெங்கநாத –தேசிகன்)
ஆனால் ஸ்ரீ பிராட்டிக்கும் ஸ்ரீ எம்பெருமானுக்கும் ப்ராப்தி ஒத்து இருக்குமாகில்
ஸ்ரீ பிராட்டியை புருஷகாரமாகச் சொல்லுவான் என் என்னில் -இருவருக்கும் இரண்டு குணம் யுண்டாகையாலே-
ஸ்ரீ எம்பெருமானுக்கு ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் யுண்டு
ஸ்ரீ பிராட்டிக்கு வெறும் நீர்மையே வடிவாய் இருக்கும் -எங்கனே என்னில் –
மத்திய ராத்ரியிலே காதுகரும் கூட இரங்கும்படியான சரணாகதியை முன்னிட்டு கொண்டு வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும் கூட
வத்யதாம் பத்யதாம் -என்ன ஒரு நிலை நின்று கைக் கொண்டது ஸ்ரீ பெருமாள் பிரகிருதி –
தன்னை நலிந்த ராஷசிகளை ஸ்ரீ திருவடி நலியப் புக ஸ்ரீ பெருமாள் பரிகரம் என்று மதியாதே –
ந கச்சின் ந அபராத்யதி -என்று பிராட்டி பிரகிருதி –
(மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத: ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-
பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்
தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்; ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு, தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.
விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத: – எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான். காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத: – மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான். ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான். ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்துகொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல், அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.
அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே) ———–
ஆனால் ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ ஆசார்யனும் இரண்டு புருஷகாரம் வேண்டுவான் என் என்னில் –
சரண்யன் குறையும் சரணாகதன் குறையும் தீர்ந்து இருவருக்கும் ஸ்வரூபம் பெறுகைக்காக -என்று அருளிச் செய்தார் (நஞ்சீயர்)
குரு பரம்பரையை முன்னிடவே சரணாகதன் குறை தீரும் –
ஸ்ரீ பிராட்டியை முன்னிடவே சரண்யன் குறை தீரும்-
(உகாரம் -பிராட்டி
அவ் வானவருக்கே மவ்வானவர் சேஷப்பட்டவர் என்று உவ்வானவர் உரைத்தார் -உகாரம் ஆச்சார்யர்)
ஸ்ரீ சரண்யனுக்கு குறை யுண்டோ என்னில் -நித்ய விபூதி போலே தெளி விசும்பு இன்றிக்கே
இருள் தரும் மா ஞாலமான சம்சாரத்திலே வர்த்திக்கிற சேதனனை இந்நிலத்தின் தண்மை பாராதே
பிழை எழுதும் ஸ்வா தந்த்ர்யம் சரண்யனுக்கு குறை –
அக் குறை ஸ்ரீ பிராட்டியை முன்னிடவே தீரும் —
ஸ்ரீ எம்பெருமான் இவ் வாத்மாவைப் பற்றும் போது ஸ்ரீ பிராட்டியையும் ஸ்ரீ ஆசார்யனையும் முன்னிட்டாய் யாயிற்று பற்றுவது –
ஆத்மா எம்பெருமானை பற்றும் போது ஸ்ரீ பிராட்டியையும் ஸ்ரீ ஆசார்யனையும் முன்னிட்டாய் யாயிற்று பற்றுவது –
இவ் வர்த்தம் ஸ்ரீ இளைய பெருமாள் -ஸ்ரீ விபீஷண பெருமாள் -ஸ்ரீ குஹப் பெருமாள் -ஸ்ரீ திருவடி -ஸ்ரீ மஹா ராஜர் –
உள்ளிட்டார் பக்கலிலும் காணலாம் –
(அந்தரங்கர்களுக்கும் புருஷகாரம் வேண்டும்
திருக்கச்சி நம்பிக்கும் -வீசினத்துக்கு பேசினத்தோடே போம் -ஆச்சார்ய சம்பந்தம் அடியாகவே பேறு
ராமானுஜர் திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் அனைவருக்கும் பேறு
நம் ராமானுஜர் உடையார் அருளப் பாட்டில் பெரிய நம்பி வம்சத்தாரையும் வரச் சொல்லி அழகர் தீர்த்தம் பிரசாதித்த ஐதினம்)
ஸ்ரீ எம்பெருமானுக்கு ரஷித்தே ஸ்வரூபம் பெற வேணும் –
ஸ்ரீ பிராட்டிக்கு ரஷிப்பித்தே ஸ்வரூபம் ஸ்வரூபம் பெற வேணும் –
ஸ்ரீ ஆச்சர்யனுக்கும் இவ் வர்த்தம் அறிவிப்பித்தே ஸ்வரூபம் பெற வேணும் –
இவ் வர்த்தம் அறிந்து அத்யவசித்தே போதே ஸ்வரூப சித்தி –
சேதனனுக்கு அர்த்த காமத்தில் நசை யறவே ஆஸ்ரயம் நிறம் பெரும் –
அஹங்கார மமகாரம் அற ஸ்ரீ வைஷ்ணவத்வம் நிறம் பெரும் –
இவை தான் ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பிரதி பந்தகங்களாய் இருக்கும் –
ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பிரதிபந்தகமான ஸ்வ வியாபார நிவ்ருத்தி பிரபத்தி –
பிரபத்தியாவது -ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுகை -என்று ஸ்ரீ ஆழ்வான் பணிக்கும் –
அதாவது -அஜ்ஞனாய் அசக்தனாய் அப்ராப்தனான தன்னை விட்டு
சர்வஜ்ஞனாய் சர்வ சக்தியாய் ப்ராப்தனான ஸ்ரீ எம்பெருமானைப் பற்றுகை –
————-
ப்ரபத்திக்கு -ஸ்வரூபம் ஏது-அங்கம் ஏது -பிரமாணம் ஏது – -அதிகாரிகள் யார் -என்னில்
ஸ்ரீ திருவடியைக் கட்டின பிரம்மாஸ்திரம் சணல் கயிறு காண விட்டுப் போனால் போலே தன்னை ஒழிந்த
உபாயாந்தரங்களைப் பொறாது ஒழிகை -ஸ்வரூபம் –
இதர உபாயத் த்யாகம்-அங்கம் –
சகல பிரமாண பிரதிபாத்யனான ஸ்ரீ எம்பெருமான் தானே -மாமேவ யே ப்ரபத்யந்தே -என்று அருளிச் செய்கையாலே –
அது தானே பிரமாணம் –
தானும் பிறரும் தஞ்சம் என்று இருக்கும் நன்மைக்கு ஸ்ரீ எம்பெருமானுக்கு அவ் வருகு இல்லை என்று இருக்கையும்
பிறருடைய அநர்த்த அப்யுதயங்கள் தன்னது என்று இருக்கையும் -இவை தொடக்கமானவை அதிகாரி ஸ்வரூபம்
——-
அர்த்த ஸ்ரத்தை பிறந்த போது தேஹாத்மாபிமானம் போயிற்றில்லை யாகக் கடவது
தன்னை உள்ளபடி ஆராயும் அன்று பிறருடைய குணா குண நிரூபணம் பண்ண அவசரம் இல்லை -பிராப்தியும் இல்லை –
ஸ்ரீ எம்பெருமானை உள்ளபடி ஆராயும் அன்று பிறருடைய குணா குண நிரூபணம் பண்ண அவசரம் இல்லை -பிராப்தியும் இல்லை –
சைதன்யம் நடையாடினவன்
தன்னைப் பார்த்துத் தளர்தல் -எம்பெருமானைப் பார்த்துத் தேறுதல் -செய்யும் இத்தனை ஒழிய பொழுதைப் போக்கான்-
இனி பிறருடைய குணா குண நிரூபணம் பண்ணுகிறது ஸ்ரீ பகவத் ஜ்ஞானம் நெஞ்சில் படாமையாலே –
உணர்த்தி அற்றவன் உறங்குகிறானாய் இறே இருப்பது -மன ஜ்ஞானே -என்கிற தாது –
——-
அசித்துக்கும் ஒரு குணம் யுண்டு -ஸ்ரீ ஈஸ்வரனுக்கும் ஒரு குணம் யுண்டு –
அசித்து தன்னை அபிமாநித்தாரைப் பிறர் (ஈஸ்வரன்)காலில் துவள ஒட்டாது -தேஹாத்மாபிமானி பிறர் (ஈஸ்வரன்)காலில் துவளான்-
ந நமேயம் என்று இருக்குமது ஒழிய ஸ்ரீ எம்பெருமானை யாதல் -ஸ்ரீ வைஷ்ணவர்களே யாதல் வணங்கானே –
ஸ்ரீ எம்பெருமானும் தன்னை அபிமாநித்தாரைப் பிறர் (தேவதாந்தரர்)காலில் துவள ஒட்டான் -(என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றைக் காணாவே)
(யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-
யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் ஸ்ரீ எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில்
உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்)
ஸ்ரீ திரு மந்திர நிஷ்டன் அசத்துக்கள் காலில் வணங்கான் –
ஆத்மா பிரகிருதியை அண்டை கொண்டு ஸ்ரீ எம்பெருமானை உறுமுதல்-
ஸ்ரீ எம்பெருமானை அண்டை கொண்டு பிரக்ருதியை உறுமுதல் செய்யுமது ஒழிய ஒன்றில் நில்லாது –
ஹிரண்யன் பிரக்ருதியை அண்டை கொண்டு ஸ்ரீ எம்பெருமானோடே எதிரிட்டு முடிந்து போனான் –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் ஸ்ரீ எம்பெருமானை அண்டை கொண்டு பிரகிருதியை எதிரிட்டு வாழ்ந்து போனான் –
பிரக்ருதியைச் செறியச் செறிய அந்தகாரம் மிகும் -ஸ்ரீ எம்பெருமானைச் செறிய செறிய வெளிச் சிறப்பு மிகும் –
ஹிரண்ய ராவணாதிகள் கைகேயி கூனி பக்கலிலே காணலாம்
திரிசடை ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கலிலேயும் காணலாம் –
பிரக்ருதியினுடைய அஸ்திரத்வாதி தோஷங்களை ஆசார்யன் காட்டக் கண்ட சேதனனுக்கு இவ் வர்த்தம்
நெஞ்சில் படாதாகில் பகவத் ப்ராப்தி அளவும் பயம் கெட்டு இருக்க விரகு இல்லை –
தேறேல் என்னை உன் பொன்னடிச் சேர்த்து ஒல்லை வேறே போக எஜ்ஞ்ஞான்றும் விடல் -என்பது-
மங்க ஒட்டு -என்பது –
இந் நின்ற நீர்மை -என்பது –
இது கண்டாய் -என்பதாய்-
வழித் தங்கு வல் வினையை மாற்றானோ -என்பதாய் –
நடுவே ஓர் உடம்பில் இட்டு -என்று அஞ்சிக் கூப்பிடா நிற்பர்கள்-
ஸ்ரீ பகவத் சம்பந்தம் பண்ணின பின்பு இவ் வுடம்பை கண்டு வைத்து அஞ்சாதே இருந்தவனுடைய ஜ்ஞானத்தை சோதிக்க வடுக்கும் –
ஆத்மா அச்சேத்யனாய்-அதாஹ்யனாய் – அக்லேத்யனாய் -அசோஷ்யனாய் -சர்வ கதனாய் -ஜ்ஞானானந்த ஸ்வரூபனாய்-
ஸ்ரீ பகவத் சேஷ பூதனாய் -இருந்து வைத்து
பிரகிருதி சம்பந்தத்தாலே மக்னனாய் கொண்டு- உரு மாய்ந்து -அசந்நேவ ச பவதி -என்று யுண்டாய் இருக்கச் செய்தே –
இல்லாதார் கணக்காய் நின்ற நிலையை ஸ்ரீ ஆசார்யன் காட்டக் கண்ட அனந்தரம்
விரோதி கழிந்து ப்ராப்ய தேசத்திலே புகுரும் அளவும் –
(அசந்நேவ ச பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத் த்வேத ஸந்த மேனம். ததோ விது: ப்ரஹ்மம் இல்லை என்று அறிபவன் இல்லாதவனாகிறான்)
ராஷசிகள் மத்யையில் இருந்த ஸ்ரீ பிராட்டியுடைய தனி இருப்பைப் போலேயும்
காலாக்னி மத்யையில் அகப்பட்டாரைப் போலேயும் –
ஹாலாஹல விஷத்தினிடை அகப்பட்டாரைப் போலேயும் –
இதனுடன் பொருந்தாமை தோற்ற பெரும் கூப்பீடாக கூப்பிட்டு இத்தை விடுவிக்க வல்ல மஹா பாகவதர்களான
சத்துக்கள் யுடைய சஹ வாசங்களால் பெற்ற பகவத் கிருபையாலும்
ஸ்வரூப யாதாம்யத்தாலும் வெளிச் சிறப்பு பிறந்து
இவ் விரோதியை விடுவித்துக் கொள்ளுகையிலே த்வரை விஞ்சிச் செல்லா நிற்கும் –
—–
ஜ்ஞானான் மோஷ அஜ்ஞ்ஞாநாத் சம்சார -என்கிறது –
ஜ்ஞானம் ஆகிறது -ஜ்ஞேயமாகிற ஸ்ரீ பகவத் சம்பந்தத்தை அறிந்து –
சம்பந்தத்துக்கு விரோதியான சம்சார சம்பந்தம் பெறாது ஒழிகை இறே
அஜ்ஞாநாத் சம்சாரம் ஆகிறது -ஸ்ரீ பகவத் சம்பந்தத்துக்கு விரோதியான
பிரகிருதி பராக்ருதங்களோட்டை செறிவு சம்சாரம் ஆகிறது என்றபடி –
அநாத்மநி ஆத்ம புத்தியும் (அஹங்காரமும்)அஸ்வே ஸ்வம் புத்தியும் (மமகாரமும்)கர்ம பரம்பரையும் சம்சார ஹேது
ஸ்ரீ பகவத் பிரசாத பரம்பரை மோஷ ஹேது –
(கிருபைக்கு பீஜம்
அருள் புரிந்த சிந்தை -அடியார் மேல் வைத்து -இரண்டாம்-59
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து
வேம்பின் பொருளை நீர்மையாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த அருள் -இரண்டாம் -58-
-என்கிற சௌஹார்தம் என்கை-
ஈஸ்வரஸ்ய ச சௌஹார்தம் -என்று இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு அவன் கிருஷி
பண்ணுகையில் இழிகைக்கு மூல காரணமாக சௌஹார்தத்தை சொல்லிற்று இறே-
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -யாத்ருச்சிக ஸூஹ்ருதம் -விஷ்ணோர் கடாக்ஷம் -அத்வேஷம் -ஆபிமுக்யம் –சாத்விக சமாகமம்—ஆச்சார்ய அபிமானம் மூலம் விஷ்ணு பிராப்தி)
———–
சேதனனுடைய அஹமர்த்தம் அறியலாவது –
தேஹாத்மா அபிமானிகளோடு தனக்குத் தான் நன்மைகள் அடையத் தனக்கு நாசம் என்று இருக்கை –
ஸ்ரீ நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே யுடையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் தம்முடைய அந்திம தசையில் –
இவ் வஸ்தையில் எனக்குத் தஞ்சமாக நீ வைத்து இருக்கலாவது ஏது-என்று விண்ணப்பம் செய்ய
இப்போது இந் நினைவும் கூட அறுகை -என்று அருளிச் செய்தார் –
அதாவது –
ஜ்ஞானம் பிறந்த பின்பு ஜ்ஞான கார்யமான கைங்கர்யம் கை புகுரும் தேச விசேஷத்திலே செல்லும் அளவும்
அறிவு நடையாடின சேதனனுக்கு ஆபத்து என்றபடி –
ஆத்மா நோ துர்தசாபத்திம் விம்ருசச்ய ச ஹரேர் குணான்-என்கிறபடியே –
ஆதலால் தன்னுடைய நினைவு மாறினால் அல்லது -ஸ்மராமியும் -நயாமியும் -பலியாது என்று அருளிச் செய்வர் –
(அவன் நினைவு எப்பொழுதும் உண்டே-அது கார்ய கரமாவது இவன் நினைவு மாறினால் தானே)
இவ்வளவு உபாயத்தை ஓட வைத்தது ஏக பதம் –
உபேயத்தை ஓட வைத்தது மேலில் நமஸ்ஸூ
உபாயத்தை நிலை இட்டார்கள் -ஸ்ரீ பிராட்டி -ஸ்ரீ த்ரௌபதி -ஸ்ரீ திருக் கண்ணமங்கை ஆண்டான் உள்ளிட்டார்கள்
உபேயத்தை நிலையிட்டார்கள் ஸ்ரீ இளைய பெருமாள் -ஸ்ரீ பெரிய யுடையார்- ஸ்ரீ சிந்தயந்தி -ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் –
எங்கனே என்னில்
சீதோபவ என்ன வல்லவள் தன்னுடைய தனி யிருப்பையும் மாற்ற வல்லளாய் இருக்க –
ஸ்ரீ பெருமாளுடைய வீரத்துக்கு கொத்தையாம் என்று துரும்பு நறுக்காது இருந்த படியாலும்
லஜ்ஜை யில்லாத கோஷ்டியிலே லஜ்ஜையை யுடையவன் கையிலே தன்னுடைய லஜ்ஜையைப் பொகட்டு நிர் லஜ்ஜையாய் இருந்தபடியாலும்
தன் பரபரப்பை மாற்றா வகுத்தவன் வாசலிலே தன்னைப் பேணாது ஒதுங்கின படியாலும்
உபாயத்துக்கு சீமா பூமி அவர்கள் –
நில் -என்ன -குருஷ்வ (மாம் அநுரஜம்) என்றபடியாலும் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்றபடியாலும் –
க்ரியதாமிதி மாம் வத-என்றபடியாலும் –
லஷ்மணேந கதாம் கதிம் -என்கிறபடியான பிராப்தியாலும்
சஹஜ கைங்கர்ய விதய -என்கிற அர்த்தம் கைப்பற்றது அவர்க்கே யாகையாலும்
ஸ்ரீ பெரிய யுடையாரும்- ஸ்ரீ சிந்தயந்தியும் -ஸ்ரீ பிள்ளை திருநறையூர் அரையரும் வகுத்த விஷயத்தைப் பிரித்து
தந்தாமுடைய யுடம்பைப் பேணாமையாலும்
வகுத்த விஷயத்தைக் கண்ட மாத்ரத்திலே விரோதியான யுடம்பை விடுகையாலும் –
உபேயத்துக்கு சீமா பூமி இவர்கள் –
இதர உபாய த்யாக பூர்வகமாக அவனே உபாயமாக வேணும் என்னும் உபேய பிரார்த்தனையை -த்வயம் -என்கிறது –
இவ் வர்த்தம் நெஞ்சில் பட்டவர் ஸ்ரீ பிராட்டியைப் போலே துரும்பு நறுக்காதே ஒழியும்-
ஸ்ரீ த்ரௌபதியைப் போலே தன்னுடைய லஜ்ஜையைப் பொகட்டு இருக்கும் –
ஸ்ரீ திருக் கண்ண மங்கை ஆண்டானைப் போலே பரபரப்பு அற்று வகுத்தவன் வாசலிலே தன்னைப் பேணாதே ஒதுங்கும் –
ஸ்ரீ இளைய பெருமாளும் ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையரும் ஸ்ரீ சிந்த யந்தியும் போலே
தந்தாமை முடித்தும் ஸ்வரூபம் அழியாமல் நோக்கி நிற்பார்கள் –
———-
ஸ்ரீ ஆசார்ய அங்கீகார அநந்தரத்திலே-ஸ்ரீ குரு பரம்பரையையும் -ஸ்ரீ திரு மந்தரத்தையும் -ஸ்ரீ சரம ஸ்லோகத்தையும் அனுசந்தித்து
இருந்த இடம் அறியாமல் தன்னை ஒருங்க விட்டுக் கொண்டு தன்னைக் கரை ஏற்ற வல்லனாய்
அர்த்த காம உபஹதன் அல்லாதான் ஒரு பரம சத்வ நிஷ்டன் கையிலே தன்னைப் பொகட்டு நிர்ப் பரனாய் இருக்கைக்கு மேலில்லை –
இவனுக்குப் பரிஹரிக்க வேண்டுவது –
ஸ்ரீ தேவதாந்திர பஜனம் பண்ணுவாரோட்டை சம்பந்திகளுடைய சஹவாசம் விநாசம் என்று அஞ்சித் தவிரவும்
ஸ்ரீ பகவத் ஸ்வத்தை வருந்தி யாகிலும் அபஹரித்து ஜீவியாது ஒழிகையும்
ஸ்ரீ பகவத் பிராப்திக்கு விரோதியான விஷய ப்ராவண்யம் தன்னை முடிக்கும் என்று அஞ்சிப் போரவும்
ஸ்ரீ ஆசார்யன் அளவில் பிரகிருதி ப்ராக்ருதங்கள் நிமித்தமாக வரும் அநர்த்தம் பரிஹரித்துப் போரவும்
நிலை நின்ற ஸ்ரீ பகவதபசாரம் வருந்தியும் பரிஹரித்துப் போரவும் வேணும் –
ஒரோ அவதாரங்களில் செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் ஒரோ பாகவத அபசாரம் பண்ணின பலம்
அனுபவிக்கைக்காக -என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர்
———-
நல்லடிக் காலத்தில் நம்மாச்சார்யர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களை தங்களோ பாதி பிரக்ருதிமான்களாக நினைத்து இருக்கும்
புல்லிமை இன்றிக்கே யாயிற்று இருப்பது –
திருவுடை மன்னர் –
செழு மா மணிகள் –
நிலத் தேவர் –
தெள்ளியார் –
பெரு மக்கள் –
பெரும் தவத்தர் –
உருவுடையார் இளையார்
ஒத்து வல்லார் –
தக்கார் மிக்கார் –
வேதம் வல்லார் –
வேத விமலர் –
சிறு மா மனிசர் –
எம்பிரான் தன் சின்னங்கள் -என்று
நம் குல நாதரான ஸ்ரீ ஆழ்வார்கள்- ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம் சாற்றுகையாலே
கேவலம் தன்னோடு ஒக்க ஒரு மனுஷ்யர் என்று- ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைத்து இருக்கை -ஸ்ரீ பாகவத அபசாரம் –
ஸ்ரீ பகவத் அபசாரம் பண்ணுகையாவது – ஸ்ரீ எம்பெருமானுடைய நல் சீவனான ஸ்ரீ வைஷ்ணவர்கள் திறத்துப் பண்ணும் அபசாரம் –
ஸ்ரீ பாகவத அபசாரம் பண்ணுகை யாவது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் யுடைய உயிர் நிலையான ஸ்ரீ எம்பெருமான் திறத்துப் பண்ணும் அபசாரம் –
ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தைப் பிறப்பிக்கும் –
ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷ பர்யந்தம் அல்லது இராது-
அபாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -ஸ்ரீ பகவத் விஸ்லேஷத்தையும் பிறப்பித்து -இவனையும் முடித்து விடும் –
ஸ்ரீ பாகவத ஸம்ஸ்லேஷம் ஸ்ரீ பகவத் ஸம்ஸ்லேஷத்தையும் பிறப்பித்து -அபாகவத விஸ்லேஷத்தையும் பிறப்பித்து
இவனையும் எடுத்துக் கரை மரம் சேர்த்து விடும் –
இவ் வெல்லை மயக்கு ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டத்திலே வர்த்திக்குமவனுக்கு வாராது –
ஸ்ரீ ஆசார்யன் கண் வட்டம் விட்டால் -நித்ய சம்சாரியாய்ப் போம் இத்தனை –
ஸ்ரீ ஆசார்யனாவான் ஓட்டை ஓடத்தோடே ஒழுகல் ஓடமாய் தன்னைக் கொண்டு முழுகுமவன் அன்று –
தன்னைக் கரை ஏற்ற வல்லனாய் -தன்னை அடைந்தாரையும் கரை ஏற்ற வல்லனான ஜ்ஞானாதி பரிபூர்ணனாய் இருப்பான் ஒருவன் –
ஸ்ரீ ஆசார்யனுடைய ஜ்ஞானம் வேண்டா -சிஷ்யனுக்கு விக்ரஹமே அமையும்
கருட த்யானத்துக்கு விஷம் தீருமா போலே ஸ்ரீ ஆசார்யனை த்யாநிக்கவே சம்சாரம் ஆகிற விஷம்
தீர்த்துக் கொள்ளலாம் என்று அருளிச் செய்வார்கள் –
குரோர வஜ்ஞாயா ம்ருத்யு மந்த்ராவஜ்ஞா தரித்ரதா குரு மந்த்ர பரித்யாகீ ரௌரவம் நரகம் வ்ரஜேத் -என்றும் யுண்டு-
அத்ருஷ்டமே தஞ்சம் என்று இருப்பார்கள் நித்ய முக்தர்கள் –
த்ருஷ்டமே தஞ்சம் என்று இருப்பார்கள் நித்ய சம்சாரிகள்
முமுஷூவுக்கு திருஷ்ட அத்ருஷ்டங்கள் செல்லா நிற்கச் செய்தே
அத்ருஷ்டத்தை மறைய வருவதொரு த்ருஷ்டம் யுண்டானால் த்ருஷ்டத்தை விட்டு அத்ருஷ்டத்தைப் பற்றுமவன் முமுஷூ –
அத்ருஷ்டத்தை மறைய வருவதொரு த்ருஷ்டம் யுண்டானால் அத்ருஷ்டத்தை விட்டு த்ருஷ்டத்தைப் பற்றுமவன் நித்ய சம்சாரி –
இப்போது தன்னுடைய அஹம் அர்த்தம் அறியலாவது இவ் விரண்டு அர்த்தமும் ஒரு எல்லை வந்தால் அல்லது காண ஒண்ணாது –
அல்லாத போது இருந்ததே குடியாக என்று இருக்கவும் –
வைஷ்ணவர்கள் தாங்களும் தங்கள் படியாலே வைஷ்ணவர்கள் என்று இருக்கவும் ஒரு தட்டில்லை –
———-
ஸ்ரீ பரத்வ அபஹாரிகள் சைவர் –
போக அபஹாரிகள் விஷய ப்ரவணர்-
குண அபஹாரிகள் மாயா வாதிகள் –
தானும் ஸ்ரீ எம்பெருமானும் அறிய ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று அறியலாவது –
த்யாஜ்யமான சிலவற்றில் வந்தால் -தானும் ஸ்ரீ எம்பெருமானும் அறிய நசை அற்று இருக்கையும்
உபாதேயம் யாதொன்று -அதிலும் வந்தால் -தானும் ஸ்ரீ எம்பெருமானும் அறிய நசை யுண்டாய் இருக்கையும்
தேசாந்தரமும் தேஹாந்தரமும் உண்டு என்று அறிந்து பயத்தோடு கூட வர்த்திக்க அடுக்கும்-
———
நம் ஸ்ரீ முதலிகளுக்கு ஒரு மூர்த்தி நியதமும் -ஒரு மந்திர நியதியும் -ஒரு ஆசார்ய நியதியும் உண்டு –
அவை யாவன –
ஸ்ரீ பெருமாளும்–ஸ்ரீ த்வயமும்– ஸ்ரீ த்வயத்தை முதலடியிலே அருளிச் செய்த மகா உபகாரகனான ஸ்ரீ ஆசார்யனும்
ஸ்ரீ எம்பெருமான் முதலடியிலே ஷிபாமி -என்னும் —
புருஷகாரத்தை முன்னிடவே -ததாமி -என்னும் –
பின்பு -நயாமி -என்னும் –
அவன் ரஷிக்கைக்கு பரிகரம் ஆர்த்தி அல்லது இல்லை –இது குறைவற இருவர் ஸ்வரூபமும் குறைவறும்-
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் -இத்யாதி
(அவா அறச் சூழ்ந்தாய் -இதுவே ஆர்த்தி)
(படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-)
இத்தால் –
ருசி ஜனகன் ஸ்ரீ எம்பெருமான் என்னுமத்தையும்
ஸ்வ வ்யதிரிக்த சகல பதார்த்தமும் அவனாலே ஜன்யம் என்றும் சொல்லிற்று ஆயிற்று –
இடைப்புக்கோர்-என்கையாலே சிருஷ்டி சம்ஹாரங்களுக்கும் நான் நான் என்கிற ப்ரஹ்மாதிகள் அன்றியே
மாதா பிதாக்களாக பிரமிக்கிறவர்களையும் சொல்லுகிறது –
ஆஹார த்வாரம் உபாதேயம் –விஹார த்வாரம் த்யாஜ்யம் –ஆகையால் லஜ்ஜா புரஸ்ஸர நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
காலத்துக்கும் கர்மத்துக்கும் வேதத்தில் பூர்வ பாகத்தில் சொல்லப் பட்ட நாமத்துக்கும் ப்ரபன்னன் குடிமகன் அல்லன் –
ஆத்ம விஸ்வாசமும் அத்யவசாயமும் உடையராய் -க்ருதஜ்ஞராய் இருப்பார்க்கு அல்லது ஸ்ரீ பகவத் விஷயம் சொல்லலாகாது
என்று பலகாலும் அருளிச் செய்வர் –
ஸ்ரீ ஆசார்ய விஸ்வாசமும் -அத்யவசாயமும் -தேவதாந்திர பஜன சம்பந்தம் அறுகையும்-
நிலை நின்ற ஸ்ரீ பாகவத அபசாரம் பரிஹரித்துப் போரவும் வேணும் –
ஸ்ரீ ஆசார்யனுக்கு இவன் உபகரிக்குமதாவது -அவன் தந்த வஸ்துவை நால் சந்தியிலே வையாது ஒழிகை –
ஸ்ரீ பகவத் பிரசாதம் பாகவத ருசியைப் பிறப்பிக்கும் –
ஸ்ரீ பாகவத ருசி ஆசார்ய அங்கீ காரத்தைப் பிறப்பிக்கும் –
ஸ்ரீ ஆச்சார்ய அங்கீ காரம் ஸ்ரீ பகவத் ஸ்வீ காரத்தைப் பிறப்பிக்கும் –
ஸ்ரீ பகவத் பிராப்தி தத் கைங்கர்யத்தைப் பிறப்பிக்கும் –
தத் கைங்கர்யம் விரோதி நிவ்ருத்தியை அபேஷித்து இருக்கும் –
சச் சிஷ்யன் ஸ்ரீ சதாசார்யன் பக்கல் பண்ணும் விசத ஸ்ரவணம் -சதா பஸ்யந்தி-க்கே அந்வயிக்கும் –
இவ் வர்த்தம் ஸ்ரீ சதாசார்யன் சந்நிதி யுண்டாகத் தோற்றும் –
————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply