அவதாரிகை –
அப் படுக்கையும் தள்ளிப் பொகட்டுத்
தன் விபூதி அழியாத படிக்கு ஈடாக
இங்கே வந்து சந்நிதி பண்ணி இவற்றை ரஷிக்கும் ஸ்வ பாவன்
என்கிறார் –
எம்பெருமான் சேஷித்வத்தைக் குறைத்து பரிமாறும்படி அவன் ஸ்வரூபம் –
இது நிரைநிரை-என்று கொண்டு லஷணம் இருக்கிறபடி –
நிரல் நிரை அணி சேர்ந்தது –
————————————
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய்
குரவை குட முலை மற் குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் –54–
பதவுரை
செம் கண் அவன்–செந்தாமரைக் கண்ணனாகிய அப்பெருமான்
கரவு இன்றி–மறைவு இல்லாமல் [ஸர்வ லோக ப்ரஸித்தமாம்படி]
அரவம்–காளிய நாகத்தை
விட்டு–விட்டடித்தும்
அடல் வேழம்–பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யானையை
இறுத்து–(தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும்
ஆன்–பசுக்களை
மேய்த்து–(வயிறு நிரம்ப) மேய்த்தும்
குருந்தம்–அஸுரா வேகமுடைய குருந்த மரத்தை
ஒசித்து–ஒடித்துப் பொகட்டும்
புள்வாய்–பகாசுரனுடைய வாயை
கீண்டு–கிழித்தும்
குரவை–ராஸ க்ரீடையை
கோத்து–(இடைப் பெண்களோடு) கை கோத்து ஆடியும்
குடம்–குடங்களைக் கொண்டு
ஆடி–கூத்தாடியும்
முலை–பூதனையின் முலையை
உண்டு–(அவளுடைய உயிரோடு) உறிஞ்சி யுண்டும்
மல்–(கம்ஸனால் ஏவப்பட்ட) மல்லர்களை
அட்டு–கொன்றும்
குன்றம்–கோவர்த்தன மலையை
எடுத்த–(குடையாக) எடுத்துப் பிடித்த இச் செயல்கள்
(என்ன ஆச்சரியம்!..)
——————————–
வியாக்யானம் –
புண்டரீகாஷனான சர்வேஸ்வரன்
கரவின்றி விட்டு
இறுத்து
மேய்த்து
ஒசித்து
கீண்டு
கோத்து
ஆடி
உண்டு
அட்டு
எடுத்தனவானவை
அரவம்
அடல் வேழம்
ஆன்
குருந்தம்
புள்வாய்
குரவை
குடம்
முலை
மல்
குன்றம் -என்கிறார் –
1-காளியன் ஆகிற அரவத்தை விட்டு
2-குவலயா பீடத்தை இறுத்து
3-பசுக்களை மேய்த்து
4-குருந்தத்தை ஒசித்து
5-புள்ளைக் கீண்டு
6-குரவையைக் கோத்து
7-குடமாடி
8-பேய் முலை உண்டு
9-மல்லரை முடித்து
10-கோவர்த்தனத்தை குடையாக எடுத்து
இது எல்லாம் செய்தான் -அவன் கிடீர்
என்கிறார்
கரவின்றி விட்டு -என்கிறது
முடியாதே தப்ப விட்டு -என்னுதல்
அன்றிக்கே
இவற்றை வஞ்சனங்கள் இன்றிக்கே செவ்வே செய்தான் -என்னுதல்
அட்டு எடுத்தன -என்று பாடமான போது
எடுத்தன வென்று பஹூ வசனம்
அப்படுக்கையும்
அங்கு உள்ளார் பரிமாற்றத்தையும் விட்டு வந்து கிடீர்
ஆஸ்ரிதர்க்காக இப்பாடு படுகிறது –
அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு -இரண்டாம் திருவந்தாதி -15-
திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு———இரண்டாம் திருவந்தாதி——–15-
——————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply