அவதாரிகை –
அவன் இப்படிக் கண்ணிலே வெண்ணெய் இட்டுக் கொண்டு
விரோதிகளைப் போக்கித் தன்னுடையாரை நோக்கா நிற்க
ஆர் தான் இவர்களைக் கண் கொண்டு சிவக்கப் பார்ப்பார்
என்கிறார் –
யம படர் ஆராய்கை யாவது என்-என்றபடி –
——————————————–
அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் —55-
பதவுரை
அரவு அணை மேல்–சேஷ சயனத்தின் மீது வாழ்கிற
பேர் ஆயற்கு–இடைத் தனத்தில் குறைவின்றிப் பூர்ணமாயிருக்கிற ஸ்ரீகிருஷ்ணனுக்கு
ஆட் பட்டார் பேர்–அடிமைப் பட்டவர்களின் திரு நாமத்தை வஹிக்குமவர்களும்
நமன் தமரால்–யம படர்களாலே
“அவன் தமர் எவ்வினையர் ஆகிலும்–“ அந்த சர்வேச்வரனுடைய பக்தர்கள் எவ்வகையான
செயலை யுடையவராயிருந்தாலும்
எங்கோனவன் தமரே”–எம்பெருமானுடைய பக்தர்களன்றோ”
என்று–என்று கொண்டாடிக் சொல்லி
ஒழிவது அல்லால்–(தாங்கள்) விலகிப் போவது தவிர,
ஆராயப்பட்டு அறியார்–ஆராயப் பட்டிருநக்க அறிய மாட்டார்கள்
————————————
வியாக்யானம் –
அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை
இத் தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –
எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-
நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –
அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –
செய்தாரேல் நன்று செய்தார் -என்று
பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –
நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –
—————————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply