ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -52 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஏன் தான் -இவன் பேர் சொல்லா விடில் ஜீவிக்கை யரிதோ-என்னில்
நாட்டில் துர்மாநிகளாய் 
அதிகாரிகளாய்த்
திரிகிறவர்கள் அடங்கலும் தம் தாமுடைய அதிகாரங்கள்
நிர்வஹித்துக் கொள்ளுகிறது
அவனை ஆஸ்ரயித்துக் காண்
என்கிறார்  –

———————————–

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–

பதவுரை

எண்மர்–அஷ்ட வஸுக்களும்
பதினொருவர்–ஏகாதச ருத்ரர்களும்
ஈர் அறுவர்–த்வாதசாதித்யர்களும்
ஓர் இருவர்–இரட்டையரான அச்விநீ தேவதைகளும்
(ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்)
வைகலும்–நாள் தோறும்
வண்ணம் மலர் ஏந்தி–நாநா வர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக் கொண்டு
நண்ணி–(எம்பெருமானைக்) கிட்டி
ஒரு மாலையால்–ஒப்பற்ற புருஷ ஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு
ஓவாது–இடைவிடாமல்
எப்போதும்–எல்லா வேளைகளிலும்
பரவி–துதிசெய்து
திருமாலை சென்று–திருமகள் கொழுநனைக்கிட்டி
கை தொழுவர்–வணங்குவர்கள்

————————————————————————

வியாக்யானம் —

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர் –
அஷ்ட வஸூக்களும்
ஏகாதச ருத்ரர்களும்
த்வாதச ஆதித்யர்களும்
அஸ்வினி தேவதைகளுமான
இவர்கள் –

வண்ண மலரேந்தி –
நாநா விதமான புஷ்பங்களை தரித்துக்  கொண்டு –

வைகலும் நண்ணி –
எப்போதும் கிட்டி

ஒரு மாலையால் பரவி-
விலஷணமான புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு
அக்ரமாக ஸ்தோத்ரம் பண்ணி

யோவாது எப்போதும் –
எப்போதும் –
விச்சேதிக்கக் கடவதன்றிக்கே –

திரு மாலைக் கை தொழுவர் சென்று –
திருமால் –
வேண்டிற்று எல்லாம் பெறுகைக்கு அடி

எல்லாரும் நம் வாசலிலே வரும் இத்தனை -என்று
அபிமானித்து இருக்கக் கடவர்கள்
அவையடங்க அழிந்து
தாங்களே சென்று
ஆஸ்ரயிப்பார்கள்-

தது பர்யபி பாத ராயணஸ்  சம்பவாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -1-3-25-
தேவர்களுக்கும் பவிஷ்யத்தாய் இருந்துள்ள
அதிகார அர்த்தமாக ஆதித்ய அந்தர்யாமியாய் இருந்துள்ள
பரமாத்மா உபாசனம் விதியா நின்றது இறே –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading