ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -50 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

புறம்புள்ள அந்ய பரதை போய் அவன் பக்கலிலே
சிநேக யுக்தராய்க் கொண்டு
அவனைக் காண்கை சால எளிது
என்கிறார் –

————————–

அரிய புலன் ஐந்தடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது ——50-

பதவுரை

அரிய–அடக்க முடியாத
புலன் ஐந்து–பஞ்சேந்திரயங்களையும்
அடக்கி–கட்டுப் படுத்தி,
ஆய்–ஆராயந்தெடுக்கப்பட்ட
மலர்–புஷ்பங்களை
கொண்டு–கையில் ஏந்திக் கொண்டு
ஆர்வம் புரிய பரிசினால்–அன்பு மிகுந்த விதத்தினாலே
புல்கில்–கிட்டப் பார்த்தால்
பெரியன் ஆய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால்–‘நாமே பெரியோம்’ என்னுமஹங்காரத்தை யுடையனாய்
தானஞ் செய்வது தவறாதவனாய் இருந்த மஹாபலி யிடத்தில்
வண் கை–உதாரமான தனது திருக் கையாலே
நீர் ஏற்றானை–உதக தாநம் வாங்கின பெருமானை
காண்பது–ஸேவிப்பது
எளிது–ஸுலபமாகும்.

—————————–

வியாக்யானம் –

அரிய புலன் ஐந்தடக்கி –
விஷயங்களில் போகாதபடி அடக்க அரிதான
ஸ்ரோத்ராதி  இந்த்ரியங்களை
வருந்தி நியமிப்பது
ஒரு செய்யில் பாயும் நீர் இரண்டு செய்யில் பாய்ந்தால் இரண்டுக்கும் போராது
ஒழியும் இத்தனை இறே
சர்வேஸ்வரனை பஜிக்கக் கடவதான இந்த்ரியங்கள்
விஷயங்களில் போகாத படி அடக்கி –

அரிய -என்றது –
தச்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் -கீதை -6-34-என்று
மனசை நியமிக்க வரிது என்று அர்ஜுனன் சொன்ன படியே இருக்கை-

சஞ்சலம் ஹி மந​: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்–கீதை -6-34

ஹி க்ருஷ்ண-ஏனெனில் கண்ணா!
மந​: சஞ்சலம்-மனம் சஞ்சலமுடையது,
ப்ரமாதி-தவறும் இயல்பினது,
பலவத் த்ருடம்-வலியது; உரனுடையது,
தஸ்ய நிக்ரஹம் வாயு: இவ-அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல்,
ஸுதுஷ்கரம் அஹம் மந்யே-மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் நினைக்கிறேன்.

கண்ணா, மனம் சஞ்சலமுடையது;
தவறும் இயல்பினது,
வலியது;
உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல்
காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

ஆய் மலர் கொண்டு –
புஷ்பாத் யுபகரணங்களை அங்குத்தைக்கு ஈடாக கொண்டு
ஸ்நேஹத்தைப் பண்ணும் பிரகாரத்திலே பண்ணி
ஆஸ்ரயிக்கில்

ஆய் மலர் –
செவ்விப் பூக்களைக் கொண்டு –

ஆர்வம் புரிய பரிசினால் –
ஸ்நேஹம் மிக்க பிரகாரத்தாலே

புல்கில் –
அணையில் –
ஆஸ்ரயணம் தானே போக்ய்மாய் இருக்கிறபடியாலே
நல்லது கண்டால் ஆசைப் படுமோபாதி
இவ் விஷயத்திலும் ஆசை பிறக்க அமையும்
சடங்கு வேண்டா –

பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால்-
தன்னை ஈஸ்வரனுக்கு மேலாக அபிமானித்து
அர்த்திகளுக்கு எல்லாம் மாறாதே கொடுக்கக் கடவேன் என்று
அதுக்கு ஈடாக இருந்த மகா பலி பக்கலிலே –

வண் கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது –
கொடுத்து வளர்ந்த கையிலே தானே சென்று நீர் ஏற்றவனை
காண்கை எளிது

ஏதேனுமாக ஒன்றைக் கொடுக்கக் கடவோம் என்று இருக்குமவன்
பக்கலிலே தான் அர்த்தியாய்க் கொண்டு சென்று நிற்குமவன் ஆய்த்து –
ஆகையாலே அவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே ஒரு அருமை தட்டாது
என்கிறார் –

—————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading