ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -49 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

எல்லாம் செய்தாலும் இவ்வருகு உண்டான
பிரகிருதி பிராக்ருதங்களில் விரக்தி பிறந்து
அவனை ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது
ஒரு படி கண்டதாய்த் தலைக் கட்ட முடியாது
என்கிறார் –

—————————————

மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49–

பதவுரை

மகிழ் அலகு ஒன்றே போல்–(கணக்கில் நிபுணனான ஒருவனால் வைக்கப்பட்ட) ஒரு மகிழும் விதையே
காணி ஸ்தாநத்திலும் கோடி ஸ்தாநத்திலும் மாறி மாறி நிற்பது போல
மாறும் பல் யாக்கை–மாறி மாறிப் பலவகையாக வருகின்ற சரீரங்கள்
நெகிழ–தன்னடையே விட்டு நீங்கும் படியாக
முயலகிற்பார்க்கு அல்லால்–முயற்சி செய்யக் கூடியவர்களுக்குத் தவிர
ஆர்க்கும்–மற்ற எவர்க்கும்
முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பு–விண்டு விருந்த தேஜஸ்ஸைப் போல்
தோன்றுகிற தேஜஸ்ஸை யுடைய அழகிய பெரிய திரு வபிஷேகத்தை யுடையனான எம்பெருமானைக் காண்பது
அரிது–கூடாத காரியம்.

———————————————————-

வியாக்யானம் –

மகிழல கொன்றே போல் மாறும் பல்யாக்கை –
ஒரு மகிழ அலகு -விதை-தானே
காணித் தானத்தாலும் -சிறிய ஸ்தானம்
கோடித் தானத்தாலும் -பெரிய ஸ்தானம் –
நிற்குமா போலே

ஓர் ஆத்மா தானே
கர்மம் அடியாக
யாதானும் ஓர் ஆக்கை யில் புக்கு -திருவிருத்தம் -95-
ப்ரஹ்ம சரீரத்தோடு
பீபீலிகா சரீரத்தோடு வாசியற
எங்கும் புக்கு  மாறி மாறி வரக் கடவதான
பல்வகைப் பட்ட சரீரங்கள் உண்டு -அவற்றை –

நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் –
அது தானே தன்னை விட்டுப் போம்படிக்கு ஈடாக
யத்னம் பண்ணுமவர்களுக்கு அல்லது
அது தனக்கு இங்கனேயும் ஒரு ஸ்வ பாவம் உண்டு
அதாகிறது
தன்னையே வேண்டுவாரை வேண்டி
வேண்டாதாரை வேண்டாத படியாய் இருக்கும்   யாய்த்து –

உன் கண் இதினத்தனை சௌகுமார்யம் உடையது ஒன்றும் இல்லை யாய்த்து
பிரகிருதி ப்ராக்ருதங்களில் அருசியும்
எம்பெருமானைக் காண்கையில் ருசியும் உடையார்க்கு எளிதாகக் காணலாம் -என்றபடி –

முகிழ் விரிந்த சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் -ஆதி காண்பார்க்கும் அரிது –
விகசித ஸ்வ ரூபமான தேஜஸ் ஸூ ப்போலதோன்றும் தேஜஸ் சை உடைத்தாய்
ஸ்ப்ருஹணீயமுமாய்
ஆதி ராஜ்ய ஸூ சகமுமான திரு வபிஷேகத்தையும் உடையனான
எம் ஆதி உண்டு
இதுக்கு அடங்க காரண பூதனானவன்
அவனைக் காண்பார்க்கும்
அத்தை நெகிழ முயல்கிற்ப்பார்க்கு  அல்லது அரிது
நமக்குக் கடவன் அன்றோ
இவனைக் காண்கையில் அருமை உண்டோ -என்று இருந்தாலும்
சொன்னபடி இல்லாதார்க்குச் சால அரிதாம் –

ஆதி –
கரண களேபரத்தைக் கொடுத்து
இவன் இசைவு கொண்டு
சம்சார சம்பந்தம் அறுத்து
அடிமை கொள்ளுகைக்கு இடம் பார்த்து
நிற்கிறவனை –
பிரக்ருதியே யுகப்பார்க்கு முகம் காட்டும் பர புருஷன் அல்லன்  –

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading