ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -46 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவர்களுக்குத் தான் முற்கோலி நின்று ஹித பரனாகை அன்றிக்கே
இவர்கள் தாங்கள் உகந்தபடி கடக்கப் போய்
அனர்த்தங்களைச் சூழ்த்துக் கொண்டு நிற்கும் அன்றும்
பாபத்தைப் போக்கி ரஷிப்பான் அவன் கிடீர் –
என்கிறார் –

கீழே ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லிற்று –
இதில் ருத்ரனுடைய அறிவு கேடு சொல்லுகிறது  –

—————–

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் –46-

பதவுரை

பண் புரிந்த நான்மறை யோன்–ஸ்வரங்களோடு கூடின நால் வேதங்களை நிரூபமாக வுடையனான பிரமனுடைய
சென்னி–தலையில்
[கிள்ளி யெறிந்ததனால் கையிலொட்டிக் கொண்ட கபாலத்தில்]
பலி ஏற்ற–பிச்சை யெடுத்துத் திரிந்தவனும்
வெண் புரி நூல் மார்பன்–வெளுத்த யஜ்ஞோ பவீதத்தை மார்பிலே அணிந்தவனுமான ருத்ரனுடைய
வினை–ப்ரஹ்ம ஹத்தி பாபமானது
தீர–நீங்கும்படியாக
[ரக்த ஜலத்தை எடுத்துக் கொடுப்பதற்காக]
புண் புரிந்த ஆகத்தான்–தன்னுடைய திரு மார்பைப் புண்படித்தி கொண்டவனுடை எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணிவார்–ஆஸ்ரயிக்குமவர்கள்
அமரர் தம் போகத்தால்–நித்ய ஸூரிகளின் போகமாகிய பரமபதாநுபவத்தோடு
பூமி–இந்த லீலா விபூதியை
ஆள்வார்–ஆட்சி புரிவர்கள்.

————————————————

வியாக்யானம் –

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற –
அழகிய ஸ்வரத்தை யுடைத்தான
வேதத்தைத் தரித்துள்ள
ப்ரஹ்மாவினுடைய தலையை ருத்ரன் அறுத்தான் ஆய்த்து-

லோக குருவுமாய்
தனக்குப் பிதாவுமான அவனுடைய சிரஸை இறே சேதித்தது   –

வாமாங்குஷ்ட நகாக்ரேண சிந்னம் தஸ்ய சிரோ மயா -என்கிறபடியே –
அவனும் கபாலீத்வம் பவிஷ்யசி -என்று சபிக்க
ப்ரஹ்ம ஹத்யையாலே
அத்தலை யோட்டிலே சிரகாலம் பிஷை புக்குக் கொடு திரிந்தான் ஆய்த்து –

வெண் புரி நூல் மார்பன் வினை தீர –
பிராயச்சித்த வேஷத்தோடு கூட சர்வேஸ்வரன் உடைய முன்னே வந்து தோற்றினான் ஆய்த்து –

வெண் புரி நூல் மார்வன் –
விநீத வேஷத்தோடு ப்ராயசித்தியான படி –
மூலை யடியே திரிந்தார் பாதகிகள் ஆனவாறே முழுகித் திரியுமா போலே
இவனும் தேவியும் சண்டேஸ்வரனும் அப்படியே

வினை தீர -என்கிற இத்தால்
இவனுடைய கர்ம வஸ்யத்வமும்
தான் பண்ணின கார்யம் தனக்குப் பரிஹரிக்கப் போகாமையும் சொல்லுகிறது
இத்தால் ஈஸ்வரத்வ சங்கை இல்லை -என்கிறது –

இவனுடைய பாபம் போம்படிக்கு ஈடாக
புண் புரிந்த ஆகத்தான் –
ஐயோ அருமருந்தானான் ஒருவன் இங்கனே படுவதே என்று
திரு உள்ளம் புண் பட்டது ஆய்த்து

அன்றிக்கே
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் -திருச் சந்த விருத்தம் 113-
ஸ்வேதத்தை வாங்கிக் கொடுத்த படி யாகவுமாம்-

அவன் தலை அறுப்புண்டு ஆற்றாமைப் பட்டு நின்றான்
இவன் தலை அறுத்துப் பாதகியாய் திரிந்தான்
அவர்கள் இவருடைய வ்யசனத்தையும் போக்கினான் ஆய்த்து சர்வேஸ்வரன் –

ஆக
இப்படி இருந்துள்ள சர்வேஸ்வரன் உடைய திருவடிகளை
ஆஸ்ரயித்து இருக்குமவர்கள் கிடீர்
தாள் பணிவார் கண்டீர் அமரர் தம் போகத்தால் பூமி யாள்வார்

ருத்ராதிகள் படும் எளிவரவு படாதே
நித்ய ஸூரிகள் உடைய அனுபவத்தோடு கூட
சம்சாரத்தில் போகமும் புஜிக்கப் பெறுவார்
விண்ணுளாரிலும் சீரியர் –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – ஸ்ரீ திரு விருத்தம் -79

உய்வுபாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண் கழல்கள் மேல்
செய்ய தாமரைப் பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் யாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வார் மண்னூடே –திருவாய்மொழி -4-3-11-என்கிறபடியே

அன்றிக்கே
பூமியும் ஆண்டு
பரம பதத்தில் போகமும் அனுபவிப்பார்கள் -என்றுமாம் –

———————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading