ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -44 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவர்கள் தங்கள் ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே சமையவே
அவனும் இவர்களுக்கு ஈடாகத் தன்னைச் சமைத்துக் கொடுக்கும்
என்கிறார் –

———————————————————————-

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் ——44–

பதவுரை

ஆழியான்–திருவாழி யாழ்வான் முதலிய நித்திய ஸூரிகளைப் பரிஜநமாகவுடைய எம்பெருமான்,
தமர் உகந்தது எவ்வுருவம்–ஆஸ்ரிதர்களால் உகக்கப்பட்ட உருவம் எதுவோ,
அவ்வுருவம் தானே ஆம்–அவ் வுருவமாகத் தான் பரிணாமமடைவன்;
தமர் உகந்தது எப் பேர்–ஆஸ்ரிதர்களால் உகக்கப்பட்ட திருநாமம் எதுவோ
அப்பேர் ஆம்–அந்தத் திருநாமமே தனக்காம்படி யிருப்பன்;
தமர்–ஆஸ்ரிதர்கள்
உகந்து–உகப்புடனே
எவ் வண்ணம் சிந்தித்து–குணம் சேஷ்ட்டிதம் முதலியவற்றில் யாதொரு விதத்தை அநுஸந்தித்து
இமையாது இருப்பர்–ஓயாமல் பாவநை பண்ணிக் கொண்டிருப்பார்களோ
அவ் வண்ணம் ஆம்–அவ் வண்ணமே யாவன்

————————————————————————-

வியாக்யானம் –

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே –
ஆஸ்ரிதர் ஆனவர்கள் எதேனுமாக ஒரு திரு மேனியை விரும்பி
இருந்தால் அவனும் அத்தை தனக்கு அசாதாரணமான திரு மேனியாகக் கொண்டு
விரும்பக் கடவனாய் இருக்கும் –

இவர்கள் யாதொரு த்ரவ்யத்திலே வாசனை யுடையராய்
அதிலே ருசி பண்ணிக் கிடந்தார்கள்
அவனும் அத்தையே தனக்குத் திரு மேனியாக ஆதரியா நிற்கும்
ஆஸ்ரித அர்த்தமாக இறே விக்ரஹங்களைக் கொடு வந்து காட்டுவது

ஆத்மாநாம் மாநுஷம் மன்யே -யுத்த -120-11-

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்யயம் -கீதை -4-11-

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:—கீதை -4-11-

பார்த யே மாம் யதா ப்ரபத்யந்தே-பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
தாந் அஹம், ததா ஏவ பஜாமி-அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்,
மநுஷ்யா: ஸர்வஸ:-மனிதர் யாங்கணும்,
மம வர்த்ம அநுவர்தந்தே-என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்.
பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

நமக்கு நல்லார்கள் இன்னார் என்று இல்லை
இன்னபடி பஜிப்பார் என்றும் இல்லை –
அவர்கள் நின்ற நிலையிலே -அவர்கள் பஜித்த படியிலே-அவர்களைப் பற்றுவேன் -என்கிறது –

ஸூ வர்ண ரஜதாதிபி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -103-16-
அதொரு காலத்திலே உள்ளார் பெற்றுப் போய் பிற்பாடர் இழைக்கை  யாலே
அவர்கள் இழவே திரு உள்ளத்திலே பட்டு   –
அவர்களுக்கு கண்ணுக்கு இலக்காகாக் கொள்ளுமதிலே யாய்த்து திரு உள்ளம் பொருந்தி இருப்பது –

எம்பெருமானார் பிஷைக்கு எழுந்து அருளா நிற்க
சில சிறு பிள்ளைகள் கையாலே ஒரு விக்ரஹமாக கீறி
உம்முடைய எம்பெருமான் திரு மேனி என்று காட்ட
பாத்ரத்தை வைத்து தண்டன் இட்டு அருளினார் –

தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் –
ரூபத்துக்கு மேலே மற்றும்
திரு நாமங்களும் அவர்கள் உகந்ததாய் இருக்கும்

தனக்கு சத்தா பிரயுக்தமான நாராயணாதி நாமங்களை ஒழிய
இவன் உகந்திட்ட இதுவே தனக்குத் திரு நாமமாக நினைத்து இருக்கும்

கஞ்சனூரிலே வண் துவரைப் பெருமாள் என்று ஒருத்தன் தன் நாயனாரை
சதங்கை யழகியார்  -என்று திரு நாமம் சாத்தினான் –
அந் நாயனார் ஸ்வபனத்திலே சதங்கையும் தானுமாய் அவன் முன்னே நின்றாடினார்
நாயனை -நீர் ஆர் -என்று கேட்க –
நான் சதங்கை யழகியார் -என்றாராம்

எங்கள் ஆழ்வார் பாடே ஆயர்தேவு சென்று நாவற் பழம் வேண்ட -நீ யார் -என்ன
நான் ஜீயர் மகனான ஆயர் தேவு -என்ன
ஜீயரைக் கண்டு உம்முடைய பிள்ளை குடி இருக்க  வொட்டுகிறிலன் -என்றார் –

தமருகந்து எவ் வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே அவ் வண்ணம்-
ஆஸ்ரிதர் ஆனவர்கள் உகந்து கொண்டு யாதொரு பிரகாரம் அனுசந்தித்து
அனந்தரத்திலே
அநவரத பாவனை பண்ணி  இருப்பார்கள் –
சர்வேஸ்வரன் அந்த பிரகாரத்தை உடையனாம் –

ஸ்ரஷ்டாவாய் நியாமகனாய் இருக்கிறவன்
ஸ்ருஜ்யனுமாய் நியாம்யனுமாய்
இவர்கள் சத்தாதிகளும் நாம ரூபங்களும் தன் அதீனமானாப் போலே
தனக்கு சர்வமும் ஆஸ்ரித ஆதீனம்

சென்றால் குடையாம் -என்று
இவன் அவனுக்கு இருக்குமா போலே அவன் இவனுக்கு இருக்கும்
அவனது பிரணயித்வம்-
இவனது ஸ்வரூபம் –

ஆழியானாம்-
அப்ராக்ருதமான சகல பரிகாரங்களுக்கும் உப லஷணம்
அவை எல்லாம் கிடக்க
இவர்கள் நினைத்த படியாகத் தன்னை அமைத்துக் கொடுக்கும்
அவனாகும் நீள் கடல் வண்ணனே -திருவாய்மொழி -3-7-6-

இத்தால் நாம ரூபாதிகள் அன்றிக்கே
குண சேஷ்டிதாதிகளும் அவன் இட்ட வழக்காய் இருக்கும்
என்கிறது –

———————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading