எம்பெருமானுக்கு இவர் விரும்பிய கார்யத்தை செய்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பெரிய பிராட்டியார் ஆணை இட்டுத் தடுத்து
மிகப் பெரிய துன்பத்தோடு கூப்பிட்டு
இவர் வேண்டிக் கொண்ட படியே
எல்லா வற்றாலும் நிறைந்தவனாய் கொண்டு வந்து கலந்து அருளக் கண்டு
அளவிட முடியாததான மூலப் பகுதி தத்வத்தாலும்
ஆத்மா தத்வத்தாலும்
உன்னுடைய நினைவின் உருவமான ஞானத்திலும்
பெரியதான என் விடாய் எல்லாம் தீர
வந்து -என்னோடு -கலந்தாய்
என்னுடைய விருப்பமும் ஒருபடி முடியப் பெற்றது
என்கிறார் –
இனி இல்லை -என்னும்படி என்னை விடாய்ப்பித்து
அதற்கு அவ்வருகான விடாயை உடையனாய்க் கொண்டு
என்னோடு வந்து கலந்து
உன்னுடைய விடாயும் ஒரு படி நீங்கியதே -என்கிறார்
என்னவுமாம் –
அங்கே பாரதம் ஆரோப்ய முனின பரிஷச்வஜே -யுத்தம் -180-39
பரதனை மடியிலே வைத்து சந்தோஷத்துடன் தழுவினார் -என்னும்படியே
—————————————————————————————————————————————————-
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே
————————————————————————————————————————————————————–
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ-
தன்னிடத்தில் உண்டான மகத்து முதலான தத்துவங்களை
பத்து திக்கிலும் புக்கு
எங்கும் ஒக்கப் பரந்து
என்றும் உள்ளதாய் -அளவிட முடியாததாய்
மக்களுக்கு புருஷார்த்தத்தை விளைத்துக் கொள்ளலாம் நிலமான
மூலப் பகுதிக்கு ஆத்மா ஆனவனே –
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-
அதற்குள்ளும் பரந்து
அதனைக் காட்டிலும் பெரியதாய்
அதனை ஏவுகின்றது ஆகையாலே மேலாய்
விகாரம் முதலானவைகள் இல்லாமையாலே சிறந்ததாய்
மலர்ந்த ஒளி உருவமான ஆத்மா வஸ்துவுக்கும்
ஆத்மா ஆனவனே –
பேறு பெறுகிற இப்பொழுது
மூலப் பிரக்ருதியையும் ஆத்மாவையும் சொல்லுகிறது
தம்முடைய காதல் பெரியவற்றிலும் பெரியது என்கைக்காக –
அவற்றுக்கும் ஈஸ்வரனை ஒழிய
தோன்றுதல் நிலைத்தல் இல்லாமையாலே அவ்வளவும் சொல்லுகிறது –
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ –
சுடர் இன்ப ஞானமேயோ -ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனே
சுடர் -சங்கல்ப ரூபமான -தடை இல்லாததால் சுடர் என்கிறார்
அவை இரண்டினையும் தன்னுள் அடக்கிக் கொண்டு
அவற்றுக்கு நிர்வாஹகனான
நினைவின் உருவகமாய்
சுகத்தின் உருவமான ஞானத்தை உடையவனே என்று
நினைவின் உருவமான ஞானத்தினைச் சொல்லுதல்
அன்றிக்கே
சுடர் ஞான இன்பமேயோ என்று
ஒளி உருவனும் -இன்பத்தின் உருவனும் ஆனவனே -என்று எம்பெருமானைச் சொல்லுதல் –
சூழ்ந்து –
மேலே கூறிய மூன்று தத்துவங்களையும்
விளாக்குலை கொண்டு –
அதனில் பெரிய –
அவை குளப்படியாம் படி பெரிதான –
என் அவா –
என்னுடைய காதலை
அறச் சூழ்ந்தாயே-
அதனிலும் பெரிய உன் காதலைக் காட்டி வந்து கலந்தாயே –
என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படி பண்ணிற்றே
பரதனை மடியில் ஏற்றுக் கொண்டு மகிச்சி உற்றவராய் தழுவினார் -என்கிறபடியே
மீண்டு புகுந்து
ஸ்ரீ பரத ஆழ்வானை மடியிலே வைத்து
உச்சி யை மோந்து உகந்து
அணைத்தால் போலே -ஆயிற்று
இவருடைய விடாய் கெடும்படி கலந்தது –
அபேஷிதத்தை செய்து அல்லாமல் நிற்க முடியாமல்
திருவடியில் சேர்த்து கொண்டான்
பரத ஆழ்வானை மடியில் வைத்து கொண்டது போலே
சம்சாரத்தில் ஆழ்வார்
அங்கே பெருமாள் காட்டில்
நலம் மதி பரம பக்தி
மதி நலம் ஞானம் பக்தி
பர பக்தி -அடைய துடிப்பு பாரிப்பு
பர ஞானம் அடைந்து விட்டால் போல பாவம் -மானஸ அனுபவம்
உடனே அடைந்து
ஷணம் கூட பிரிந்து இருக்க முடியாமல் பரம பக்தி
பொய் நின்ற ஞானம் தொடங்கி திருமால் இரும் சோலை -பர பக்தி
நாரணன் தாமரை கண்டு உகந்து அன்யாபதேசம் பர ஞானம்
ஸ்ரீ வைஷ்ணவர் பெற்ற பேறு தாமும் பெற்றால் போலே சூழ் விசும்பு
பரம பக்தி -முனியே நான்முகனே பதிகம்
பெரும் கூச்சல் இட்டு கதற
பெரிய ஆர்த்தி உடன் கூப்பிட்டு
திரு ஆணை நின் ஆணை கண்டாய்
பிரார்த்திக்க
பரி பூர்ணனாய் சம்ச்லேஷித்து
விடாய் தீரும்படி கலந்து
பிரகிருதி தத்வம் விட -ஜீவாத்மா -பரமாத்மா தத்வம் –
பெரியது -அணு -ஞானம்
ஆசை இவற்றை விட பெரியதாக
அத்தை காட்டிலும் அவன் விடாய் –
அவா அறச் சூழ்ந்தாயே
உன்னுடைய விடாயும் தீர்ந்து
என்னில் முன்னம் பாரித்து
அருள் பெறுவார் -அவன் இவரை தொடர்ந்து துடித்த துடிப்பு
பரத ஆழ்வான் மடியில் வைத்து உச்சி முகந்து
இருவர் விடாயும் தீர கலந்தது போலே
பெருமாள் வனத்தில்
ஜீவாத்மா சம்சாரத்தில்
சூழ்ந்து
ஆழ்ந்து
அகன்று
உயர்ந்த
முடிவில்
பெரும்
பாழ்
எதுவும் விதிக்கலாம்
சம்சாரம் விடுபடவும் ஆழ்ந்து போகவும் போக மோஷங்கள்
பாழ் -ஆறு விசெஷணங்கள்
அபிநிவேசம் மிகுந்து
பெரியவற்றிலும் பெரியது
நித்தியமாய் அபரிச்செத்யமாய்
பிரகிருதி மகான் அகங்காரம் தன்மாத்ரை
சேதனருக்கு புருஷார்த்தம் விளைவித்து கொள்ள
பிரகிருதி தத்வதுக்கு ஆத்மாவாக -நிர்வாஹகனே
பர நல மலர் சோதி -ஆத்மதத்வம்
ஞானம் வ்யாப்தி
ரூபத்தால் பெரியது எனபது இல்லை
தர்ம பூத ஞானம்
அது ஜடம்
அதுக்கும் நியந்தா
விகாரங்கள் இல்லாமல் -நிரந்தரம்
தேஜோ ரூபம் சோதி
சுயம் பிரகாசம் ஆத்மா வஸ்துவுக்கும் ஆத்மா நிர்வாஹகன்
சுடர் ஞான இன்பம்
சங்கல்ப ரூப ஞானம் சுக ரூபம் எம்பெருமான் ஞானம்
அவன் தன்னையே சொல்லுவதாக்கவுமாம்
சுடர் ஞான இன்பம் உடையவன்
தத்வ த்ரயங்களையும் இப்படி சொல்லி
அதனில் பெரிய அவா –
விளாக்குலை கொண்டு -பூரணமாக வியாபித்து
குளப்படி ஆகும் படி ஆழ்வார் அபிநிவேசம்
கடலில் மிக பெரிய அவா
அறச் சூழ்ந்தாயே
என்னுடைய அவா குளப்படி ஆகும் படி
குகப் பெருமாள்
பரத ஆழ்வான் இடம்
இளைய பெருமாள் பெருமையை சொல்லி
கடலை கையால் இரைக்குமா போலே
உவர் கழி போலே பரத ஆழ்வான் பெருமை
ஸ்லோகம் காட்டி அருளி
பரதாயா அப்ரமேயா
ஆயிரம் ராமன் நின்னை ஒப்பரோ கம்பர்
கழி பெருமையை கடலுக்கு சொல்வது போலே
அவா அறுந்து விட்டது
வேண்டிய பலன் பெற்றேன்
பரத ஆழ்வானை மடியில் வைத்து உச்சி முகர்ந்து
தீரும் படி -அல்பம் ஆகும் படி இரண்டு அர்த்தங்கள்
இடுப்பு இல்லாத சொல்வது போலே
————————————————————————————————————————————————————-
Leave a Reply