மேல் உள்ள உலகங்கள்
செய்த உபகாரங்களை அருளிச் செய்கிறார் –
————————————————————————————————————–
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே
—————————————————————————————————————————-
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது -உயர் விண்ணில்
நிர்ஹெதுகமான சேஷியாய் இருக்கின்றவனுடைய
அடியார்களைக் கண்டு
நல்ல நீரை உடையனவான மேகங்கள் ஆனவை
உகப்பாலே உயர்ந்த ஆகாசத்திலே பூர்ண கும்பங்களாக
சமைந்தன –
முற்பட கண்டு உகந்தன
பின்பு அவை தானே பூர்ண கும்பங்கள் ஆயின -என்கை
ஒரு கால் வாத்திய ஒலியைச் செய்தோம் -என்று இருக்கின்றன இல்லை –
அன்றிக்கே
ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவர்களான தேவர்களாலே
ஆகாசம் எல்லாம் பூர்ண கும்பம் வைக்கப் பட்டன —
என்றுமாம் –
நீரணி கடல்கள் நின்றார்த்தன-
நீராலே அணியப்பட்ட கடல்கள்
ஒரு கால் ஆடினோம் என்று இராமல்
உவகையால் எப்பொழுதும் ஆர்த்துக் கொண்டன –
உலகே- நெடுவரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் –
அவ்வவ் உலகங்களில் உள்ளார் நெடிய வரை போலே இருந்துள்ள தோரணங்களை நட்டு
தாங்களும் தொழுதார்கள் –
உலகம் எனபது உயர்ந்தோரை அன்றோ –
அன்றிக்கே
அங்கு உள்ளாரைச் சொன்னபடி யுமாம்
சத்ர சாமர பணிஸ்து லஷ்மன அனுஜகாம ஹ
ஜூ கோப பிராதரம் பிராதா ரதம் ஆஸ்தாய ப்ருஷ்டத -அயோத்யா -18-92-
இலக்குமணர் குடை சாமரம் இவற்றைக் கையிலே உடையவராய்
தமையனாரோடு தேரிலே எரிக் கொண்டு தமையனாரைக் காத்து வந்தார்
என்கிறபடியே உவகையாலே எல்லா அடிமைகளையும் செய்யா நின்றார்கள் –
மேல் உள்ள லோகங்கள்
கீழ் உள்ள சொல்லி முடித்த பின்பு
தாமரைக் கண்டு உகந்து
நாரணன் நிருபாதிக சேஷி உடைய தமர்
நல்ல நீரை உடைத்த மேகங்கள்
உகப்பாலே பூர்ண கும்பமாக சமைக்கப் பட்டன
முற்பட கண்டு தூரியம் முழக்கின
இப்பொழுது பூர்ண கும்பம்
தூரய கோஷம் செய்தோமே இருக்கிறது இல்லை
அதே மேகங்கள் பூர்ண கும்பம்
அனைவரும் பூர்ண கும்பம்
நீர் அணி கடல்கள் நின்று
நெடு வரை தோரணம் நட்டு
மலை போன்ற தோரணங்கள்
உலகம் -அங்கு உள்ளாரை
உயர்ந்தோர் மாட்டு உலகு
சத்திர சாமர பானிஸ்து போலே
திரு வெண் கொற்றக்குடையும் சாமரமும்
ஸ்வயம் பாகத்தால் -வயிற்றை பெருக்கியதால் -ஒப்பூண் பண்ண மாட்டாமையாலே
ஹர்ஷத்தால் எல்லா அடிமைகளும் செய்தார்கள்
————————————————————————————————————————————————
Leave a Reply