நிகமத்தில்
இத் திருவாய் மொழியினை கற்க வல்லவர்கள்
இட்ட வழக்கு பரம பதம் -என்கிறார் –
————————————————————————————————————————————–
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள் வது சூழ் பொன் விசும்பே
————————————————————————————————————————————–
நில்லா அல்லல் –
துக்கங்கள் ஆனவை
இது நமக்கு இடம் அன்று என்று தாமே விட்டுப் போம் –
நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்-
பெருத்த வயல்கள் சூழ்ந்துள்ள திருப்பேர் மேல்
ஆயிற்றுச் சொல்லிற்று
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்-
பெரியார் பலரும் தம்மை அனுபவித்து
இனியராய் இருக்கும் திரு நகரியை உடையராய்
இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது
நல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-அன்றோ
சர்வதா அபிகத சத்பி சமுத்ர இவ சிந்துபி
ஆர்ய சர்வ சமச்சைவ சதைக பிரியதர்சன -ஸ்ரீ சங்ஷேப ராமாயணம்
நதிகளால் அடையப் படுகின்ற கடல் போன்று சத் புருஷர்கள் ஆகிய பெரியோர்களால் அடையப் படுகின்றவர் என்றபடி –
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் –
சொற்கள் தாமே வந்து சேர்ந்த தமிழான ஆயிரம் -என்னுதல்
அன்றிக்கே
இனிமைக்கு சொல்லே அமைந்த தமிழான ஆயிரம் -என்னுதல் –
இவை பத்தும் வல்லார் தொண்டர் –
இப்பத்தினை கற்க வல்லவர்கள்
செஞ்சொற் கவிகாள் 10-7-1- -என்கிறபடியே
வாக்காலே அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ஆள் வது சூழ் பொன் விசும்பே-
எல்லை இல்லாத தேஜோ மயமான பரம பதத்தை
ஆயிற்று ஆளுவது
இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள் சென்றால்
ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று
அங்கு உள்ளார் சொல்லுவது
நிகமத்தில்
அப்யசிக்க வல்லார்
இட்ட வழக்கு பரமபதம் ஆகும்
இல்லா அல்லல்
துக்கம் நமக்கு தேசம் இல்லை என்று தானே ஓடும்
நீள் வயல் சூழ்ந்த திருப்பேர்
நல்லார் விலஷனர் பலரும் தம்மை அனுபவித்து வாழும் திருக் குருகூர்
நல்லார் நவிலும் குருகூர் நகரான் திரு விருத்தம்
சர்வதா அபிகத சப்தம்
எப்பொழுதும் நல்லார்களே நெருக்கப் பட்ட பெருமாள்
சொல்லார் -தமிழ் ஆயிரம்
இப்பத்தும் வல்லார்
செஞ்சொல் கவிகள் வாசிகமான
சூழ் விசும்பு ஆள்வார்கள் ஆள்மின்கள் என்று விட்டு விடுவார்கள் எப்பொழுதும்
—————————————————————————————————————————————
திருமால் தம்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என் பால் செய்வான் என் என்ன -இடர் உற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து
சாரம்
அன்று அருமாயம் அன்று வைத்து -அகல்வித்து
இன்று என் பால் செய்வான் என
இடர் உற்று நின்றான் திருமால்
துன்னு புகழ் மாறனை ஆழ்வாரை சூழ்ந்து
——————————————————————————————————————————————-
Leave a Reply