திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-6-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நாள் தொறும் என்னை அனுபவியா நின்றாலும்
பெறாப் பேறு பெற்றால் போலே
அனுபவிக்கிற இவனுடைய
குணத்தின் தன்மையை
பொறுக்க ஒண்ணுகிறது இல்லை
என்கிறார்

———————————————————————————————————————

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே

————————————————————————————————————————-

கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான் –
இதற்குப் பலபடியாக அருளிச் செய்வர் –
என் பக்கல் ஒரு உபகாரம் கொள்ளாமலே -ஒரு காரணமும் இன்றிக்கே –
என் உயிரை அனுபவித்தான் –
நிர்ஹெதுகமாக –
வெறிதே அருள் செய்வர் -8-7-5-
எந்நன்றி செய்தேனோ -4-5-9-
அன்றிக்கே –
இதற்கு முன்பு இப்படி பட்டது ஒரு சரக்கினைப் பெற்று அறியாதானாய் -பக்கம் நோக்கு அறியான் -2-5-2- போலேயும்
அனந்தன் பாலும் -பெரியாழ்வார் திருமொழி -5-4-8- போலேயும்
என் பக்கல் காதலை உடையவன் ஆனான் -என்னுதல் –
அன்றிக்கே –
என்னால் தான் கொள்ளப் படாது இருக்க
தான் யென்னைக் கைக் கொண்டான் -என்னுதல் –

நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான் –
ஒரு நாள் அனுபவித்து
இனி இது நாம் அனுபவித்தது அன்றோ -என்று
கை வாங்கி இருந்தானோ
நாள் தோறும் நாள் தோறும் வந்து –
அவனுடைய அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் இருக்கிறபடியைத் தெரிவித்தபடி –
முற்றவும் தானுண்டான் –
அணு அளவிதான இவ் உயிரை
எங்கும் பரந்து இருக்கிற தான்
விளாக்குலை கொண்டு அனுபவித்தான் என்கிற இது
தனக்கு ஏற்றமாம் படி ஆதரியா நின்றான் –
சிறிய என் ஆர் உயிரை -என்ற அது தம்மை பார்த்து
இது அவனுடைய அனுபவத்தைக் கொண்டு சொல்கிறார் –

காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு –
கறுத்த நீர் கொண்டு எழுந்த
காளமேகம் போலே இருக்கிற வடிவை உடையவனாய்
அம்மேகம் தான் மழை பெய்யும் இடத்திலே படிந்தாப் போலே
திருக் காட் கரையிலே வந்து
அண்மையிலே எழுந்து அருளி இருக்கிற
நிருபாதிக பந்துக்கு –
வடிவழகு அது
ஊர் அது
தனக்கு என்ன குறை உண்டாய் இப்படி படுகிறான் –

ஆள் அன்றே பட்டது –
அடிமை அன்றோ புக்கது -என்றது
இராவணன் முதலியோர்களை போன்று
எதிர் அம்பு கோத்தேனோ-என்றபடி –

என் ஆர் உயிர் பட்டதே  –
ஓர் உயிர் படும் பாடே இது –
எதிர்த்தார் உடம்பு இழத்தல்
புண் பட்டதற்கு மருந்து வைத்து ஆற்றுதல் -செய்யும் அத்தனை அன்றோ
இங்கு ஆர் உயிர் அன்றோ நோவு பட்டது
குணத்தால் வரும் நோவு ச்வரூபத்தோடு சேர்ந்ததாய்
அதற்கு மாற்று இல்லை அன்றோ –

நாள் தொறும் அனுபவியா நின்றாலும்
பெறாப் பேறு பெற்றது போலே
குணம் -பொறுக்க முடியவில்லையே
கோள் உண்டான் அன்றி வந்து -மூன்று
நிர்ஹெதுகமாக -காரணம் இல்லாமல் என்னை உண்டான்
உபகாரம் சாதனம் ஒன்றும் இல்லாமல்
இதுக்கு முன்பு இது போலே வஸ்து காணாதது போலே உண்டான்
ஆத்மாக்கள் சமம் சொல்லி இருந்தாலும் மேலே விழுந்து புஜித்தான்
என்னால் தான் கொள்ள படாமல் இருக்க
தானே மேல் விழுந்து புஜித்தான் –
என் உயிர் தான் உண்டான் –
நாளு நாளும் வந்து
புசித்து கை வாங்காமல் தினம் தினம் வந்து
அவனுடைய அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராமுதம் இருக்கிற படி
அணு பரிமாணம் விபு அனுபவியா நின்றது
தனக்கு பெருமை என்று
சிறியவன் -ஆத்மா தன்னை பார்த்து சொன்னது
இப்பொழுது ஆர் உயிர்
குசேலர் அவல் -கண்ணன் மேல் விழுந்து –
இவர் நெஞ்சு பட்ட பாடு -அது போலே –
முற்றவும் தான் உண்டான் –
விளாக்கொலை கொண்டு அனுபவித்தான்
முற்றவும் -சொல்ல இங்கே என்ன –
இருப்பதோ அணு -முழுக்க -முற்றவும் உண்டான்
அவன் அபிப்ராயத்தால் விபு போலே -அனுபவித்தான் -சிறியவன் ஆர் உயிர் தம்மை பார்த்து
முற்றவும் அவன் அனுபவம் கொண்டு சப்தம்
கருத நீர் கொண்ட மேகம் போலே
வர்ஷிக்கும் ஸ்தலம்
வடிவு அழகு அது
ஊர் அது
என்ன குறை உண்டாய் இப்படி படுகிறான்
ராவணாதி போலேயோ
உடம்பு இழக்கவோ புன் படவோ மருந்து வைத்து ஆற்றலாம்
குணத்தால் ஆத்மா -படும் நோயை ஆற்ற முடியாதே

————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading