தன்னைப் பெறாவிடில் தரிக்க மாட்டாதபடி சிநேகத்தை உடையவர்களான
பெண்களாலே ஆபத்து வந்த காலத்திலே இகழப்படுவர்
ஆனபின்பு
ஒரே தன்மையான சிநேகத்தை உடைய இறைவனைப் பற்றுவது ஒழிய
சுகம் வேறு இல்லை -என்கிறார்
—————————————————————————————————————————————————————
சதிரமென்று தம்மைத் தாமே
சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே
வைகி மற்றொன்றுறுவர்
அதிர்காள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் இன்பமே
——————————————————————————————————————————————————————–
சதிரமென்று –
சதிராகா வாழா நின்றோம் -என்று
தம்மைத் தாமே சம்மதித்து –
தங்களை தாங்களே இசைந்து
நாம் சதிரர் நாம் சதிரர் -என்றாயிற்று எல்லாரும் ஒக்க
தங்கள் தங்களை நினைத்து இருப்பது
சிறிது இயற்றியை உடையவனாய் இருக்குமவன் –
ஒருவனைப் பார்த்து -அங்கே நம்மை சதிரன் என்று நினைப்பிட்டுக் கொடு வா
நாம் அதிலே மேல் எழுத்து இட்டுத் தா -என்னும்
அவைக்கு பொருத்தம் இல்லாத இச் செயலுக்கு துணை செய்வார் கிடையாரே –
தானே அன்றோ இருக்கிறான் –
இன்மொழியார் –
இனிய பேச்சை உடையவர்களாய் இருந்துள்ளவர்கள் உடைய
அகவாய் மயிர்க் கத்தியாய் இருக்கச் செய்தேயும்
அன்பு கலந்த இனிய வார்த்தைகளாலே வசீகரிக்க வல்லவர்கள்
ஆதலின் -இன் மொழியார் -என்கிறார் –
மதுரபோகம் துற்றவரே –
இனிய இன்பத்தை அவர்களுடனே நெருங்க அனுபவித்தவர்கள் –
வைகி மற்றொன்றுறுவர் –
வைகி மற்று ஓன்று உறுவர்
இன்பத்தை அனுபவிப்பதற்கு தகுதியான யௌவனமும்
அதற்கு கைமுதலான செல்வமும் போமே
பின்னையும் ஆசை மாறாதே
அவ்வவ் இடங்களிலே போய் இருக்கும்
வருவார்க்கும் விரோதியாய் –
முற்பட மனிச்சிலே -மனித தன்மைக்கு சேர -நாலிரண்டு பண்ணை போகலாகாதோ -என்பார்களே
போகிறோம் போகிறோம் என்று இருக்குமே
போகாதே பின்னை வெள்ளாட்டியை இட்டுப் பரிபவிப்பர்கள்
அதற்கும் போகானே
பின்னை ஆணை இட்டு எழுப்பிப் பார்ப்பார்கள்
அதற்கும் எழுந்திரான்
பின்னை காலைப் பற்றி இழுப்பார்கள்
இவன் தூணைக் கட்டிக் கொள்ளும்
இப்படியால் அவர்களாலே சிறுமை உறுவர்கள்
பலம் கிடைக்கும் வேளையில் பிறக்கும் சிறுமையை நினைந்து வெறுத்து
அவனை தம் திருவாயால் அருளிச் செய்ய மாட்டாமையால்
மற்று ஓன்று -என்கிறார்
அங்கன் இன்றிக்கே
பலம் கிடைக்கும் வேளையில் நன்மையொடு தலைக் கட்டும் விஷயத்தைப் பற்றி
பிழைத்துப் போகப் பாருங்கோள் -என்கிறார் மேல் –
அதிர்காள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு –
மனிதருடைய மனங்கள் அதிரும்படியான செயல்களை உடைய அசுரர் கூட்டம்
முடியும்படி வடமதுரையில் வந்து திரு வவதரித்தவற்கு –
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் –
எதிர்முகமாதலை உடைய அடியாராய் உய்யுமது ஒழிய
அவனுக்கு நான் செய்ய வேண்டுவது இது
அவன் தானே மேலே விழா நின்றால்-முகத்தை மாறா வைக்காது ஒழிகையே வேண்டுவது
அந்யப் பூர்ணாத் அபாம் கும்பாத் அன்யாத் பாதரவ நேஜநாத்
அந்யத் குசல சம்ப்ரசநாத் நசேச்சதி ஜனார்த்தன -பாரதம் உத்தியோக பர்வம் 89-13
அந்யப் பூர்ணாத்-
பாண்டவர்கள் இடத்தில் அன்புள்ளவனான கிருஷ்ணன் வாரா நின்றான்
அவனுக்கு நாட்டையும் கொடுத்து பொன்னையும் கொடுத்து நமக்கு ஆக்கிக் கொள்வோம்
எனபது போன்ற சில வார்த்தைகளை திருதராஷ்ட்ரன் சொல்ல -என்றது
இவற்றால் அவனை படை அறுத்துக் கொள்ளுவோம் என்றபடி
அவன் தான் நெஞ்சாலே நினைப்பது ஒன்றாய் வாயாலே பேசுவது ஒன்றாய் இருப்பது
இதனை அறிந்த சஞ்சயன்
வருகிறவன் அங்கன் ஒத்தவன் அல்லன் காண்-அவனுக்கு வேண்டுவது இவ்வளவு -என்கிறான்
தான் குடிக்கும் தண்ணீரை குடத்திலே இட்டு குளிர வைக்கக் கடவனே
அதனை அவன் வருகிற வழியிலே வாசலிலே வைக்க அமையும்
தன் இல்லத்திலே விருந்து வந்து புகுந்தால் கால் கழுவ கடவதாக சாமான்ய சாஸ்த்ரம் விதித்தது
அதற்கு மேற்பட அவனான வேற்றுமைக்கு சிறப்பாக ஒன்றும் செய்ய வேண்டுவது இல்லை
அன்யாத் பாதரவநே ஜநாத்
அந்தக் குடத்திலே நீரைக் கொண்டு அவன் திருவடிகளை விளக்க அமையும் -மற்று வேண்டா –
அந்யத் குசல சம்ப்ரசநாத் –
நெடும் தூரம் வந்தவனை -நடந்த கால்கள் நொந்தவோ -என்னத் தக்கதே அன்றோ –
நசேச்சதி –
உண்டவனுக்கு உண்ணப் போகாதே அன்றோ
அப்படியே இவன் முயற்சி மாத்ரத்திலே அவன் வயிறு நிறையும்
ஆனா பின்பு இவன் செய்யுமவை அடைய அவனுக்கு மிகையாக இருக்கும் –
இல்லை கண்டீர் இன்பமே –
துன்பங்களிலே சிலவற்றை இன்பம் என்று மயங்குகின்ற இத் துணையே ஒழிய
இன்பத்தை தர வல்லதாய் இருப்பது ஓன்று இல்லை
உயிர் கழுவிலே இருக்கிறவனுக்கு தண்ணீர் வேட்கையும் பிறந்து
தண்ணீரும் குடித்து தண்ணீர் வேட்கையும் தணிந்தால்
பிறக்கும் இன்பம் போலே இருப்பது ஒன்றே அன்றோ –
மனிதர்க்கு கல்வியால் பிறக்கும் இன்பம் ஆகிறது
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்கி
அது அள்ளிக் கொள்ளும் -என்று அறியாமல்
வெய்யிலைத் தப்பப் பெற்றோம் என்று மகிழ்ந்து இருப்பாரை
போலே அன்றோ விஷய அனுபவங்களால் களித்து இருக்கிற
இருப்பு ஒருவனுக்கே –
————————————————————————————————————————————————————————–
பெறா விடில் தரிக்க மாட்டாத ஸ்திரீகளை விடு
எம்பெருமானை ஆஸ்ரயிப்பதே நலம்
பகவத் பாகவத கைங்கர்யம் அனுகூல பந்துக்களே உபாதேயம்
மற்றவர் த்யாஜ்யம் –
ஆபத்து வந்தால் விட்டு போவார்
ஆபத்து காலத்தில் ரஷிப்பவன் அவன் ஒருவனே
சதிர் -சாதுர்யம் சதுராச்ய பாபம்
தானே பட்டம் கொடுத்து
இன் மொழியார் மதுர போகம் –
லோகம் அதிரும் படி கார்யம் செய்த அசுரர் மங்க -வடமதுரை பிறந்த
அவனுக்கு அபிமிக்யம்
சதுரம் -சதிராக வாளா நின்றோம்
இருந்ததே குடியாக தம்மையே -அல்பம் இயற்றி சக்தி இருந்தாலும் –
நம்மைப் போலே சாதுர்யம் இல்ல என்பர்
தன்னை பிறர் அறியாத இடம் -விவாதம் -சொல்லி கொள்ள வேண்டும் -self appraisal bio data
தானே -வேறு சஹகரிப்ப்பார் இல்லாமல் –
சதச்யம் -அசதச்ய பிரவ்ருத்தி -கௌரவம் இல்லாமல்
சதுரம் சத்திரம் பன்மை
இன் மொழியார் பேச்சில் தான் இனிமை
அகவாய் மயிர் கத்தியாய் இருக்கச் செய்தேயும் -மயிர் விட சூஷ்மம்
பிரணய -பேச்சால்
மதுர போகம் துற்றவரே -துயரு அவரே
யௌவனம் பணம் போன பின்பு
கிட்டே சேர்க்காமல்
ஆசை மாறாமல் அங்கெ போவானே
வருவார் போவார் இருவருக்கும் விரோதியாய்
மனுஷ்ய தன்மை -போ என்பர் முதலில்
போகிறோம் போகிறோம் என்று இருக்குமே
பின்னை வெள்ளாட்டி இட்டு பரிகரிப்பார்கள் வேலைக்காரி
ஆணை இட்டு எழுப்ப பார்ப்பார்கள் காலை பற்றி இழுப்பார்
தூணை கட்டி கொள்ளும்
நாசமான பாசம் விட்டு
ஈசி போமின் சி சி போமின் இங்கு இரென்மின்
இருமி இளைத்து உள்ளம் –பேசும்
குவளை அம் கண்ணியர் பேசும் பொழுதும் இப்படி நினைக்கிறான்
அவமானம் வெறுத்து வாயால் சொல்லாமல் மற்று ஓன்று -என்கிறார்
விபாகத்தில் நன்மை உடன் -மற்று ஓன்று –
இன்பம் பகவத் விஷயம் போக பாரும் -என்றுமாம்
சேதனர் நெஞ்சு அதிரும்படி போவார்கள் அசுரர்
வர்க்கம் முடிய -மண்ணின் பாரம் நீக்க வடமதுரை பிறந்தான்
ஆபிமுக்கியம் -எதிர் கொள்
வரும் பொழுது எதிர் நின்றாள் போதும்
கை கூப்பக் கூட வேண்டாம்
பிரதிஷேதம் வேண்டாம்
விலக்காமை
விமுகர்
அவன் தானே மேல் விழ
தூது -கண்ணன் -நம் பக்கம் -சஞ்சயன் –
அந்ய பூர்ணாத் –குசலம் -திருவடி விழுந்து
எதிர் கொள் ஆளாய் -இந்த ஸ்லோஹம் வியாக்யானம்
நாட்டையும் பொன்னையும் கொடுத்து நம் ஆள் ஆக்கிக் கொள்வோம் -த்ருஷ்ட்ராதன்
நெஞ்சால் நினைப்பதே வாயால் ஓன்று மனஸ் ஏக்கம் வாய் வேற கார்யம் வேற துராத்மா
அறிந்த சஞ்சயன்
வேண்டுவது இவ்வளவு தான்
பூர்ணாத் கும்பாத் ந இச்சத்
தான் குடிக்கும் தண்ணீரை -குளிர வைக்க -பானை வாசலில் வைத்தாலும் பூர்ண கும்பம் என்று நினைப்பான்
அதிதி வந்தால் கால் கழுவ -சாமான்ய சாஸ்திரம்
விசேஷித்து அவனுக்கு செய்ய வேண்டுவது இல்லை
குடம் நீரை விட்டு -காலில் விட்டால்
அர்க்க்யம் பாத்யம் ஆசமன்யம்
காலில் விழுந்து வணங்க வேண்டாம் –
கண்ணன் வாசிக்கு விசேஷம் வேண்டாம்
குசல -நடந்த கால்கள் நொந்தவோ -வார்த்தை போதும்
உண்டவனுக்கு உண்ணப் போகாதே
இத்தாலே வயிறு நிறைந்து போவான் –
உத்தியோகத்தில் பிரயோகத்திலே -வயிறு நிறையும்
என்ன செய்தாலும் மிகையாய் இருக்கும்
எதிர் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை
இது ஒழிய சுக ரூபம் வேறு இல்லை
உயிர் கழுவில் இருப்பவன் -தாகம் தண்ணீர் கதறி -உணர்ச்சி ஏற்பட்டு வேதனை அனுபவிக்க –
சம்சாரம் உயிர் கழு போலே
புலி -துரத்த பாம்பு
நடுவில் செடி எலி கடிக்க
தென் சொட்ட நாக்கில் ஆனந்தம் இனிமை நினைப்பவன் போலே
நரகம் -ஜன்மம் -வாள் களாக நாள்கள் செல்ல இனிமை –
சம்சாரி போகத்தால்
ஆடுகிற பாம்பின் நிழலில் ஒதுங்கி –
விஷய அனுபவம் களிப்பு
வாசுதேவ தரு சாயா -ஒன்றே நிழல் –
————————————————————————————————————————————————————-
Leave a Reply