சிறிய திருமடல்–69-காரார் திருமேனி காணும் அளவும் போய் -77 வாரார் பூம் பெண்ணை மடல் – -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திருவேங்கடமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெக்காவே
பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர்
ஆராமம் சூழ்ந்த வரங்கம் கண மங்கை
காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல் மலை
ஏரார் பொழில் சூழ் இட வெந்தை நீர் மலை
சீராரும் மால் இரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வட மதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள் விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப்
பேராயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்-

————————————————————————–

காரார் திருமேனி காணும் அளவும் போய் –
காரார் திருமேனி கண்டதுவே காரணமாக வி றே
அடியிலே இப்படிப் பட்டது –
இத்துணிவு எவ்வளவும் சொல்லக் கடவது ஏன் என்னில்
காரார் திருமேனி கண்டதுவே காரணமாகப் பிறந்த துணிவு
காரார் திருமேனி காணும் அளவும் செல்லக் கடவது இ றே –
இவளுடைய உத்தியோகத்தைக் கண்ட தோழி
அவனோடு சம்ச்லேஷிக்கக் கடவை -என்ன
பண்டும் கண்ட மாத்ரத்திலே யாயிற்று இப்பாடு பட்டது
இப்போதும் கண்டுவிடும் அத்தனை

நீ காணும்படி என் என்னில்
சீரார் திருவேங்கடமே –
அவன் குணங்களை கொண்டாடி இருக்கும் தேசம் எங்கும் புக்கு
என் வடிவைக் காட்டி அவன் குணத்தை அழித்துப் பெறக் கடவேன் –

சீரார் திருவேங்கடமே –
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற
நிலையாய் யுள்ள ஏற்றம் உண்டு இ றே திருமலைக்கு –
அங்கே சென்று என் வடிவைக் காட்டி
அவன் உபய விபூதிக்கும் ஆளாகாத படி பண்ணுகிறேன்–

பேரகமே
மதிளும் இன்றியே
ஆற்றங்கரையிலே
திருப் பேரிலே வழிப் போவாரும் தன்னைக் காணும்படி
திறந்த வாசலாத் தன்னை சர்வ ஸ்தானம் பண்ணிக் கிடக்கிறான் -என்று பிரசித்தம் இ றே
அங்கே சென்று என் வடிவைக் காட்டி -அவன் சர்வ ஸ்தானம் பண்ணுகிறபடி பாருங்கோள் -என்கிறேன்

பேரா மருது இறுத்தான் வெள்ளறையே-
பேரா மருது -என்றது அசூராவேசத்தாலே பேராதே நின்றது -என்னுதல்
தளர் நடையிட மருது இறுத்தான் என்னுதல்
ஸ்தாவரங்களிலும் அகப்பட அசூராவேசம் உண்டாய் இரா நின்றது –
அசூராவேசம் இல்லாதபடி பரிவர் உள்ள திரு வெள்ளறையிலே
நின்றானாய் இருக்கிறான் இ றே –
அங்கே சென்று என் வடிவைக் காட்டி
பரிவையான எனக்கு முகம் தந்தபடி பாருங்கோள் -என்கிறேன் –

வெக்காவே –
ஆசரித்தான் போ -என்ன படுக்கை சுருட்டிக் கொண்டு அவன் பின்னே போய்
கிட -என்ன கால்கடை தலை மாடாகக் கிடந்தானாக
ஆசரித்தான் சொன்னபடி செய்தான் -என்று பிரசித்தம் இ றே
நான் சொன்னபடி செய்தானாக வில்லையே -என்று என் வடிவைக் காட்டுகிறேன்-

பேராலி
பிறந்த ஊருமாய்த் திருப்பதியுமாய்
எனக்குத் தன்னை முற்றூட்டாக்குகிறான் என்று இ றே நாட்டில் பிரசித்தி
அங்கே சென்று எனக்கு முற்றூட்டாக இவன் உடம்பு கொடுத்தபடி என் உடம்பில் பாருங்கோள் என்று காட்டுகிறேன்
ஏன் தான் இவள் திருவாலியிலே யன்றோ இருக்கிறது
திருவாலியிலே சென்று பழி இடுவேன் என்னுமது கூடாதே -என்னில்
அதுவும் அசத் கல்பமாய்க் கிடக்கிறது காணும் இவளுக்கு

தண் கால் –
குளிர்ந்த காற்றுப் போலே ஆஸ்ரிதர் உடைய ஸ்ரமம் தீர
உதவும் ஸ்வபாவன் என்று இ றே –தண் கால் -என்று பேராயிற்று –
அங்கே சென்று என் ஸ்ரமம் தீர உதவின படி பாருங்கோள் என்று என் வடிவைக் காட்டுகிறேன் –

நறையூர்-
தன ஸ்வ தந்த்ர்யம் எல்லாம் செல்லாமே பிராட்டி ஸ்வ தந்த்ர்யமேயாக எண்ணி
அவளுக்கு பவ்யனாய் இருக்கிறான் என்று பிரசித்தம் இ றே –
அங்கே சென்று இவன் பிராட்டிக்கு பவ்யனான படி என் வடிவில் பார்த்துக் கொள்ளுங்கோள் என்கிறேன் –

திருப் புலியூர்-
மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க வீங்கு இளம் தாள் கமுகு இ றே –
அவன் நின்ற ஊரில் ஸ்தாவரங்களும் உட்பட பரஸ்பரம் மிதுனமாய் சேர்ந்து வர்த்திக்கும் என்று இ றே பிரசித்தி
அங்கே சென்று என்னோடு சேர்ந்தபடி பாருங்கோள் என்கிறேன்-

ஆராமம் சூழ்ந்த வரங்கம்-
உகந்து அருளின தேசங்கள் எல்லாம் பகல் இருக்கையாய்
ஆஸ்ரித ரஷணததுக்கு ஏகாந்த ஸ்தலம் என்று
கோயிலிலே நித்ய வாஸம் பண்ணுகிறானாய் இருக்கிறது –
வன்பெரு வானகம் உய்ய -இத்யாதியில் சொல்லுகிறபடியே
அங்கே சென்று என் வடிவைக் காட்டி என்னுடைய ரஷணம்
பண்ணின படி பாருங்கோள் என்கிறேன்-

கண மங்கை –
கண்கள் ஆரளவும் நின்று கண்டு கொண்டேன் -என்று நான் சொன்னேன் இ றே-
அங்கன் சொன்னது அவனைப் பேணினேன் இத்தனை –
நான் கண்ணாரக் கண்டேனோ இல்லையோ என்று என் வடிவைக் காட்டுகிறேன் –

காரார் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம் –
பரம பதத்தை விட்டுக் குறைவாளர்க்கு முகம் கொடுக்கத் திரு விண்ணகரிலே வந்தான்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழல் – என்று பிரசித்தம் இ றே –
குறைவாட்டியாய் இருக்கிற எனக்கு முகம் தந்தானோ இல்லையோ -என்று என் வடிவைக் காட்டுகிறேன் –

சீரார் கணபுரம்-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ-என்று
நான் தனக்கு அனன்யார்ஹை யாகத் தாலி கட்டி இருக்க
அங்கே சென்று
என்னைத் தனக்குப் புறம்பாக்கின படி பாருங்கோள்-என்று
என் வடிவைக் காட்டுகிறேன் –

சேறை –
மண் சேர முலை யுண்ட மாமதலாய் -என்று தாய் முலைக்கும் வேற்று முலைக்கும் வாசி அறியாத முக்தன் என்று பிரசித்தம் இ றே –
அங்கே சென்று என் வடிவையும் முலையையும் காட்டி என்னை ஸ்பர்சித்தானோ இல்லையோ -என்கிறேன் –

திருவழுந்தூர்
திருவாய்ப்பாடியிலே ஆஸ்ரிதர் கர ஸ்பர்சம் பட்ட த்ரவ்யத்தால் அல்லது
தனக்கு செல்லாது என்னும் இடம் பிரகாசிக்க நிற்கிற இடம் இ றே –
அங்கே சென்று ஆஸ்ரித ச்பர்சமே இவனுக்கு தாரகமாய் இருக்கிறபடி பார்க்கலாகாதோ -என்று-என் வடிவைக் காட்டுகிறேன் –

காரார் குடந்தை –
ஸ்ரமஹரமான திருக் குடந்தையிலே -குடந்தை எம் கோவலன் -என்று ஆஸ்ரித பவ்யனான கிருஷ்ணன் வந்து கண் வளர்ந்து அருளுகிறான் என்று பிரசித்தம் இ றே –
அங்கே சென்று என் வடிவைக் காட்டி -இவன் ஆஸ்ரித பவ்யனோ அபவ்யனோ -என்னும் இடம் சாதிக்கிறேன்-

கடிகை –
கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த அக்காராக் கனி -என்று பிரசித்தம் இ றே –
அங்கே சென்று தன்னுடைய ரச்யதை ஆர்க்குக் கண்டது -என்கிறேன் –

கடல் மலை –
திருக் கடல் மல்லையில் திரு வனந்த ஆழ்வானையும் விட்டு
ஆஸ்ரிதனுக்காக தரைக்கிடை கிடக்கிறானாய் இ றே கிடக்கிறது –
அங்கே சென்று -இவனோ நானோ தரைக்கிடை கிடக்கிறார் -என்று என் வடிவைக் காட்டுகிறேன்

ஏரார் பொழில் சூழ் இட வெந்தை –
ஜாதி உசிதமான செருக்குப் போக்குவீடாகச் சோலைகளை யுடைத்தான திருவிட வெந்தையிலே
ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் தனக்கு உண்டான வ்யாமோஹம்
பார் வண்ண மட மங்கை பத்தர் -என்னும்படி வடிவிலே தோற்ற நிற்கிறான் இ றே –
அந்தபுர பரிகரமான என்னைப் படுத்தின பாட்டைக் காட்டி
அவளுக்கு வ்யாமுக்தனான படி இதுவோ என்று
தன் வ்யாமோஹத்தை எல்லாம் நிலை நிறுத்துகிறேன் –

நீர் மலை –
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் -என்னும்படி அடக்கம் குடி போனார்க்கு
கிலேசம் தீரும்படி ஒதுங்க நிழலாய் இருக்கும் திரு நீர் மலை என்று இ றே பிரசித்தி –
அடக்கம் குடி போன எனக்கு அத் தேசத்திலே புக ஒண்ணாத படி இருக்கிறபடியை
என் வடிவில் பாருங்கோள் என்கிறேன் –

சீராரும் மால் இரும் சோலை-
ஆர்யர்கள் இகழ்ந்த தெற்குத் திக்கிலே அங்குத்தை ஸ்தாவரன்களோடும் தன்னோடும்
வாசி அற நின்று ம்லேச்சர் அகப்பட முகம் கொடுக்கும் நீர்மையை யுடையனாய் இருக்கிறான் இ றே –
அங்கே சென்று என் வடிவைக் காட்டி எனக்கு முகம்கொடுக்கும்படி எல்லாம் நிலை நிறுத்துகிறேன் –

திரு மோகூர்-
திரு மோகூர் ஆத்தன் -என்று
ஆஸ்ரிதரோடு அவிபாக ரசம் அனுபவிக்கிரானாய் இ றே இருக்கிறது

பாரோர் புகழும் வதரி –
என் பேற்றுக்குத் தானோ நானோ தபஸ்ஸூ பண்ணினார் ஆர் -என்று
என் வடிவைக் காட்டுகிறேன்

வட மதுரை –
சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்து தபஸ்ஸூ பண்ணி –
லவண வதம் பண்ணி ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படை வீடு செய்து இருந்து ராஜ்யம் பண்ணி –
சர்வேஸ்வரன் தான் வந்து திருவவதரித்து
இப்படியாலே பகவத் சம்பந்தம் மாறாத தேசம் இ றே – ஸ்ரீ மதுரை –
நான் தோற்றி அத்தையும் கை விட்ட படி பாருங்கோள் -என்கிறேன்-

ஊராய வெல்லாம் ஒழியாமே –
ஓர் இடத்தே யிருந்து இரண்டு ஒரு கால் சொல்லி விடுகிறோனோ –
சொல்லிச் சொல்லாத ஊர் எல்லாம் புகக் கடவேன் –
வேனுமாகில் என் பின்னே வந்து பட்டோலை எழுதிக் கொள்ளுங்கோள்-

நான் –
அவன் புக்கவிடம் புக்கு அவனை அளிக்கக் கடவ நான்

அவனை –
என்னையும் இப்பாடு படுத்தி அர்ச்சக பராதீனன் என்று
காஹளம் பிடித்து இருக்கிறவனை –

இனி அறும் இடத்தை எல்லாம் சொல்லி அற வேணும் இ றே –
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள் விடுத்த சீரானை –
ஆனையான ஏக ஜாதித்வம் பொருந்தி இருக்கச் செய்தே –
ஓர் ஆனையைக் கொல்லுகை யாவது என் –
ஓர் ஆனையை ரஷிக்கை யாவது என் –
இதிலே கண்டது இ றே இவன் ஒரு முலை பாலும் ஒரு முலை சீயுமாய்ப் போரும் பஷ பாதி என்னும் இடம் —

சீரானை –
இப்படி பொரி புறம் தடவி ரசிக்கிற குணங்களை யுடையவனை
வெளியிட வி றே புகுகிறேன் –

செங்கண் நெடியானை –
அகவாயில் வாத்சல்யத்துக்கு எல்லாம் ப்ரகாசகமான திருக் கண்களைக் கொண்டு
எனக்கு எட்டாதே இருக்கிறவனை –
சேர்த்துக் குளிர்ந்த தண்ணீரை விடாயர்க்கு எட்டாமல் வைப்பாரைப் போலே

தேன் துழாய்த் தாரானை –
ஆசைப் பட்டாரை பிரிந்து தனி இருக்க அமையும் காணும்
மார்பில் மாலை மது ஸ்யந்தியாகைக்கு –

தாமரை போல் கண்ணானை –
ஆசைப் பட்டாரைப் பிரிந்த அன்று முதல் நாள் தோறும் செவ்வி பிறக்கும்
திருக் கண்களை யுடையவனை –

எண்ணரும் சீர்ப் பேராயிரமும் பிதற்றி
குணகதனம் பண்ணுகைக்கு ஒரு ஸ்ரீ சஹச்ர நாமம் உண்டு இ றே
அப்படி குண ஹாநிக்கும் ஒரு ஸ்ரீ சஹச்ர நாமம் பண்ணுகிறேன் -நீ சொல்லப் படுகிற சஹச்ர நாமம் தன்னைச் சொல்லிக் காணாய் -என்ன
நால்வர் இவருக்குச் சொல்லி விடுவேனோ ஒரு மூலையில் இருந்து –
இல்லையாகில் என் செய்வாய் என்ன

பெரும் தெருவே
நடுத் திரு வீதியிலே புறப்படக் கடவேன் -என்கிறாள் –

ஊரார் இகழிலும்-
ஊரார் இகழ்ந்து இடப் பட்டாளே-என்று அவளை ஊரார்
கொண்டாடினால் போலே
என்னையும் தலையாலே சுமப்பார்கள் -சுமவாதே இகழ்ந்தார்களே யாகிலும் –
ஊராது ஒழியேன் நான் –
இவர்கள் கொண்டாடாதே பழி சொன்னார்களே யாகிலும்
நான் மடலூருகை தவிரேன்

வாரார் பூம் பெண்ணை மடல் –
கையிலே பிரஹ்மாஸ்திரம் இருக்கச் செய்தே
எதிரிகள் கையிலே எளிவரவு படுவாரைப் போலே
என் கையிலே மடல் இருக்க
அபிமதம் கிடையாது இருக்க வேணுமோ -எனக்கு

வாரார் பூம் பெண்ணை மடல் –
ஒழுகு நீண்டு தர்சநீயமான பனை மடல் இருக்கிறபடி
கண்டு அறிதியே
பிரஹ்மாஸ்திரம் இருக்கிற படி கண்டு அறிதியே –

————————————————————————–

திரு கம்ப நாட்டு ஆழ்வார் அருளிச் செய்த தனிப் பாடல்-

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலைத் தடங்கள் சேரளவும் –பாரெல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க ஊர்வன் மடல்-

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading