ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –12–ஆவியை அரங்கமாலை–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

அவதாரிகை –

உபய விபூதியையும் அழிக்கப் புக்கேன் –
என்கிறார்-

————————————————————-

ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர்  வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே -12-

பதவுரை

ஆவியை

–

உலகங்கட்லெல்லாம் ஓருயிராயிருப்பவனும்
அரங்கம் மாலை

–

திருவரங்கத்தி லுள்ளவனுமான எம்பேருமானைக் குறித்து,
அழுக்கு உடம்பு எச்சில் வாயால்

–

இவ் வழுக்குடம்பின் எச்சில் வாயினால்
தூய்மை இல் தொண்ட நான்

–

அபரிசுத்தனும் கண்ட விடங்களில் தொண்டு பட்டவனுமான நான்
தொல்லை நாமம்

–

அநாதியான திருநாமங்களை
சொல்லினேன்

–

சொன்னேன்;
பாவியேன் பிழைத்தவாறு என்று அஞ்சினேற்கு

–

பாவியான நான் பிழை செய்த விதம் என்னே!“ என்று அநுதாபமுற்ற வெனக்கு
அஞ்சல் என்று

–

அபயமளித்து
காவி போல்

–

கருங் குவளை நிறத்தரான
வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினார்

–

என் கண்களினுள்ளே ஸேவை ஸாதித்தார்.

—————————————————————

ஆவியை –
உலகங்கட்கு எல்லாம் ஆர் உயிர் ஆனவனே –

அரங்க மாலை –
கண்ணுக்கு தோற்றாதபடி நின்று தாரகமாகை அன்றிக்கே
கண்ணாலே காண -வ்யாமோஹம் -தான் ஒரு வடிவு என்னலாம் படி இருக்கை –

அழுக்கு உடம்பு எச்சில் வாயால் –
எத்தனை பேர் காலில் விழுந்தது –
எத்தனை பேரை ஸ்தோத்ரம் பண்ணிற்று –

(ஆவியை –
ஆர் உயிரேயோ அகல்இடம்முழுதும்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த*
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து* அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த*
சீர்உயிரேயோ மனிசர்க்குத் தேவர் போலத்* தேவர்க்கும் தேவாவோ*
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்* உன்னை நான் எங்கு வந்து உறுகோ? — என்கிறபடியே

அனைத்துலகுக்கும் பிராணனாயிருப்பவன் எம்பெருமான்.

இப்படிப் பட்டவனை யன்றோ என்னுடைய எச்சில் வாயில் கொண்டு கெடுத்தேனென்கை.)

தூய்மையில் -நான் –
தப்புச் செய்தோம் -என்கிற அனுதாபமும் இல்லாத நான் –

தொண்டனேன் -நான் –
கண்டது எல்லாவற்றிலும் தொண்டு பட்டு திரிந்த நான் –

சொல்லினேன் தொல்லை நாமம் –
நித்ய ஸூரிகள் இனி என் கொண்டு ஜீவிக்கக் கடவர்கள் –
சொல்லி யற்றது -இதுக்கு முன்பு அழிந்து அறியாத ஓன்று –
நமோ நாராயணா -என்று பல்லாண்டு பாடி ஜீவிக்கக் கடவர்கள் –
இனி என் கொண்டு ஜீவிக்கக் கடவர்கள் –

பாவியேன் பிழைத்தவாறு என்று என்று அஞ்சினேற்கு –
தொல்லை நாமத்தை நான் சொல்லி விடுகை அன்றிக்கே –
நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்று
இப்படி அழிப்பார் உண்டோ –

(கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-)

சாத்விகனாய் இருப்பான் ஒருவன் –
ரஜஸ் தலை எடுத்து
மத்திய ராத்ரத்திலே கிரஹத்திலே நெருப்பை வைத்து
சத்யம் தலை எடுத்தவாறே அநுதபிக்குமா போலே
பாவியேன் நான் தப்பினேன் -என்று அஞ்சினேனுக்கு

அஞ்சல் என்று –
உன் கார்யம் உனக்கே பரமோ -என்று
மாஸூச –என்று -அஞ்சாதே -என்று –

காவி போல் வண்ணர் வந்து –
வடிவழகைக் காட்டி
மருந்து இட்டுப்
பொருந்த விட்டார் –

காவி -கருங் குவளை

இவ் வடிவை நம் கண்ணாலே நோக்கி
அழிக்க ஒண்ணாது என்று
கண்ணைச் செம்பளித்தேன் –
செம்பளித்தல் -ஸ்வ யத்னம் தவிருகை –

என் கண்ணுள்ளே தோற்றினாரே –
கண்ணுக்கு உள்ளே தோன்றினார் –
இவர் கண் செம்பளித்து பார்க்கிறது எப்போதோ என்று
பார்த்து இருந்தான் போலே காணும் அவனும் –

(திருக் கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன -அமலனாதி -1-)

(தன் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று செம்பளிக்க உள்ளே பிரகாசித்தார்)

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading