ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –10–சித்தமும் செவ்வை நில்லாது–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

அவதாரிகை –

சம்சாரத்தை அஞ்சி உன் திருவடிகளைப் பற்றின அளவேயோ-திருவடிகளில் பரம பக்தியும் உண்டாயிற்று -என்கிறார் –

———————————————————

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன்
பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே-
-10-

பதவுரை

சித்தமும்–நெஞ்சமும்
செவ்வை நில்லாது–தரித்து நிற்கிறதில்லை;
தீ வினையேன்–மஹா பாபியான நான்
என் செய்கேன்–என்ன பண்ணுவேன்?
எந்தாய்–எம்பெருமானே!
பத்திமைக்கு–அளவிறந்து பெருகிச் செல்லுகின்ற) பக்தியின் ஸ்தானத்திலே
அன்பு உடையேன் ஆவதே–(கீழ்ப்படியான) அன்பை உடையேனாம்படி
பணியாய்–செய்தருள வேணும்;
முத்து–முத்துப் போன்றவனே!
ஒளி மரகதமே–ஒளி பொருந்திய மரகதப் பச்சை போன்றவனே!
முழங்கு ஒளி முகில் வண்ணா–கர்ஜிப்பதும் ஒளி பொருந்தியதுமான காளமுகம் போன்றவனே!
என் அத்த–என் நாயனே!
நின் அடிமை அல்லால்–உன் பக்கல் கைங்கரியம் தவிர
யாது ஒன்றும் அறிகிலேன்–வேறொன்றும் (புருஷார்த்தமாக) அறிய மாட்டேன்.

———————————————————-

சித்தமும் செவ்வை நில்லாது –
நீஞ்சப் புக்கு வாய்க் கரையிலே தெப்பம் இழப்பாரைப் போலே அனுசந்திக்கப் புக்கால் -தரித்து நிற்க மாட்டுகிறது இல்லை நெஞ்சு -(கடலிலே நீந்த வேணுமென்று புகுந்து முதலடியில் தானே தெப்பத்தை இழக்குமா போலே, அநுஸந்திக்கப் புகுந்து தரித்து நிற்க மாட்டாதே நெஞ்சு பறியுண்டதென்கிறார்)

என் செய்கேன் தீ வினையேன்-
பக்தி பாரவஸ்யத்தால் அனுபவிக்கப் போகாதபடி பாபத்தைப் பண்ணினேன் —என் செய்கேன் -என்று செயல் மாட்சி –உத்தேஸ்ய விரோதி பாபமாம் -அத்தைப் பற்ற –தீ வினையேன் -என்கிறார் –

(உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1
—என்ற நம்மாழ்வாரைப் போலே கதறுகிறார்.-பக்திப் பாரவச்யத்தாலே அநுபவிக்கப் போகாமால் நெஞ்சை யிழக்கும்படியான பாபத்தைப் பண்ணின நான் என்ன செய்வேனென்கிறார்:

பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய்-
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்னும்படியே நூல் பிடித்த பக்தியை அளவாக்க வேணும் –
அளவிறந்த பத்தியை மாற்றி நூல் பிடித்த செவ்வே அனுபவிக்கக் கூடிய பக்தியை அளவாக்க -மட்டமாக்க -வேணும்-எந்தாய் –-பக்தியை உண்டாக்கின நீயே அளவு படுத்த வேணும் -(அளவு கடந்த ஆசை நிலைமைக்குப் பத்திமை யென்று பெயர்;-ஓரளவிலே நிற்கிற ஆசை நிலைமைக்கு அன்பு என்று பெயர் என்பதாகக் கொள்க.)–இப்போது ஆழ்வாருடைய ஆசையின் நிலைமை எல்லை கடந்த அவஸ்தையிலே நிற்பதால் ‘இப்படிப்பட்ட பத்திமையைக் கொண்டு என்னால் பாடாற்றப் போகவில்லை, இந்த நிலைமையை மாற்றி வெறும் அன்பு நிலைமையையே தந்திடாய்‘ என்று வேண்டிக் கொள்ளுகிறார்.

(ஜந்ம தரித்ரனுக்கு அளவு கடந்த பசியுண்டானால் பசிக்குத் தக்கபடி உணவு கிடைக்கப் பெறா தொழியில் ‘பசி மந்தித்துப் போவதற்கு மருந்து கொடுப்பாருண்டோ?‘ என்று விசாரிக்குமா போலே
ஆழ்வாரும் தம்முடைய பேராசைக்குத் தக்கபடி அநுபவிக்கப் பெறாமையாலே ஆசையை அளவுபடுத்தினால் போது மென்கிறார்.)

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு
–100- என்னுமா போலே அளவுகடந்து செல்லுகின்ற ஆசைப் பெருக்கத்தைக் குறைத்து ஓரளவிலே அமைத்திடாய் என்கை.

பசிக்குத் தக்க சோற்றையாவது இடு; அல்லது,பசியையாவது உள்ள சோற்றுக்குத் தகுதியாக அமைத்திடு என்பாரைப்போலே சொல்லுகிறார்.

“கண புரத்துப் பொன் மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்,
என்னிவை தான் வாளாவெனக்கே பொறையாகி, முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்,
மன்னு மருந்தறிவீரில்லையே
” என்ற பெரிய திருமடலும் இக் கருத்துப் பட நின்றமை உணர்க.)

முத்தொளி மரகதமே –
பக்தி ஜனகமான வடிவு –முத்தின் உடைய குளிர்த்தியையும் –மரகதத்தின் உடைய ஸ்யாமத்தையும்
உடைத்தாய் -இருக்கை –

முழங்கொளி முகில் வண்ணா-
மின்னி முழங்கி வில்லிட்டு சஞ்சரிப்ப தொரு மேகம் போன்ற நிறத்தை உடையவனே –

என் அத்த-
அழகுக்கு தோற்று –என் ஆயன் -என்கிறார் –

(இங்ஙனே தமக்கு அளவுகடந்த பக்திப் பெருங்காதல் விளைவதற்கு அடி இன்னதென்கிறார்
முத்தொளி மரதகமே! முழங்கொளி முகில்வண்ணா! என்ற விளியினால்,-முத்துப் போலே குளிர்ந்ததாயும் மரதகம் போலே சாம நிறத்ததாயிருக்கின்ற திருமேனி யழகில் ஈடுபட்டதனால்
இப்படிப்பட்ட பக்தி யுண்டாயிற்றென்றவாறு.)

நீர் சித்தமும் செவ்வை நில்லாது என்பது-தீ வினையேன் -என்பதே கிடந்தது-என் இப்படிப் படுகிறீர் –
இத்தை விட்டு வேறு ஒன்றோடு போது போக்கினாலோ என்
ன –

நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே
உன் திருவடிகளில் கைங்கர்யம் ஒழிய வேறு ஓன்று அறியேன் —மறந்தேன் உன்னை முன்னம் -என்றது போக்கி-ஏது செய்தால் மறக்கேன் -என்னும்படி பண்ணி வைத்த பின்பு வேறு ஒன்றை அறிய விரகு உண்டோ –

மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில்  மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன்  நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே
—6-2-2-அந்த பொருள் இன்பங்களோ பாதி உன்னையும் ஒரு மூலையிலே ஆதரித்துக் கொடு போரப் பெற்றிலேன் – அது செய்து போந்தார் ஆகில்
அப்போதைக்கு இப்போது அவற்றுக்கு இப்போது பரிஹாரம் பண்ணினார் ஆவரே–மறந்தேன்-யாதொரு விஷயம் விடாதே நினைக்க வடுக்கும் அது ஒன்றையும்  மறந்து போனேன்--நம்பிள்ளை மதுரையிலே நிர்வஹியா நிற்கச் செய்தே-ஒப்பிலாத பெருமாள் -த்யேயோ நாராயணஸ் சதா –
என்கிற விஷயத்தை யாகாதே மறந்து போந்தது
-என்றார் –(கங்கை கொண்ட சோழ புரம் -குருகைக் காவல் அப்பன் நினைக்க வழி கேட்டவர்களுக்கு –நீங்கள் -மறக்க வழி சொல்லில் அன்றோ நான் சொல்ல முடியும்–எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் அன்றோ) அல்லாதவை செய்தபடி செய்ய உன்னை முந்துற முன்னம் மறந்து –மறந்து கொடு நின்றேன் -என்னுதல்–அன்றிக்கே-அநாதி காலம் மறந்து போனேன் -என்னுதல்-இம்மறப்பு போருகிறது நெடு நாள் உண்டாகில்-உன்னை முன்னம் மறந்திலேன் என்று அன்றோ சொல்ல அடுப்பது என்னில் அது வேண்டா யாய்த்து (பல நாள்களாக மறந்தேன் என்றால் அதுக்கு முன்னம் மறந்திலேன் சொல்ல வழி இல்லாமல் – முன்னம் என்று அநாதியாகவே என்றத்தைச் சொன்னவாறு -உன்னை-என்கிற இடத்தில் சம்பந்தத்தை ஸ்மரித்தவர் ஆகையாலே சம்பந்தம் ஸ்வா பாவிகமே யாகையாலே முன்பு நெடு நாள் மறந்து போரச் செய்தேயும்
சில நாள் ஸ்மரித்து மறந்தால் போலே இருக்கத் தோற்றிற்று –(உறவில் உறைப்பு தோன்ற உன்னை என்கிறார்-என்னைப் பார்த்தால் அநாதி –-உன்னைப் பார்த்தால் நினைத்து இருந்த காலமும் உண்டு என்று தோன்றுமே )

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே
–9-3-3-நாட்டார் தம் தாம் உடைய அபிமதரைப் பிரிந்தால் கூடின போது மறக்க மாட்டாராய்- பிரிந்த போது நினைக்க மாட்டாராய் இருப்பர்கள் –இங்கன் அன்றிக்கே-பிரிவில் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றது –இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய் இருந்த பின்பு கிட்டினால் தான் மறக்கலாமாகில் பார்க்கலாம் –-போந்து காணாய் -என்கிறாள் – இவள் படி வ்யாவ்ருத்தமாய் இறே இருப்பது  – (நாட்டார் இயல்பு ஒழிந்து நாரணனை நண்ணுமவள் அன்றோ )

(வடிவழகிலே யீடுபடுமவர்கள்-”தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே” என்றாற்போல ஒவ்வொரு திவ்யாவபவத்திலும் நெஞ்சு நீர்ப்பண்டமா யுருகி ஈடுபட்டிருக்குமத்தனை யொழிய, தரித்து நின்று கைங்கரியம் பண்ண முடியாதாதலாலும், தமக்குக் கைங்கரியம் பண்ணுவதிலேயே அதிகமான ஆவல் இருப்பதனாலும்
”பக்திமைக்கு அன்புடையேனாவதே பணியாயெந்தாய்!” என்று வேண்டும்படி யாயிற்றென்பதை
ஈற்றடியினால் விளங்கக் காட்டினாராயி்ற்று.)

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading