அவதாரிகை
பிறவியுள் பினங்குமாறு -என்று
விலஷண விஷயத்தை விட்டு
துர் விஷயங்களை பற்றி அனர்த்தப் படுவதே -என்று வெறுத்தார் -கீழ்
ஏன் தான் ஷோடச வயசைகளான ஸ்திரீகள் சஞ்சரிக்கிற
சம்சாரத்துக்கு பொல்லாங்கு சொல்லுவான் என் என்று
லோகாயதிகள் ப்ரத்ய வஸ்தானம் பண்ணினான்
அவனாகிறான் –
தேஹாதி ரிக்தமாய் இருப்பான் ஒரு ஆத்மா உண்டு என்றும்
தர்ம அதர்மங்கள் உண்டு என்றும்
பர லோகம் உண்டு என்றும்
சொல்லுகிறவை அசத்யம்
பிரத்யஷிக்கிற உடம்பு கொண்டு அனுபவிக்கிற த்ரஷ்ட அனுபவம் ஒழிய
வேறு ஓன்று இல்லை என்னுமவன் –
அவர்களைக் குறித்து விஷயங்கள்
அல்ப அஸ்திரத் வாத்யநேக தோஷி தூஷிதங்கள் என்று
இவை எல்லாம் சொல்ல வேண்டுவது லபித்தால் இறே
துராரதமாகையாலே லபிக்கை அரிது -என்கிறார் –
——–
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே
பதவுரை
பெண்டிரால்–மனைவியரால்
சுகங்கள்–ஸகல ஸூகங்களையும்
உய்ப்பான்–அநுபவிப்பதாகக் கருதி
பெரியது ஓர் இடும்பை–மிகப் பெரிதான துயரங்களை
பூண்டு–மேற் கொண்டு
இரா–இராப் பொழுதிலே
உண்டு–புஜித்து
கிடக்கும் போதும் –படுக்கையிலே சாயும் போதும்
உடலுக்கே கரைத்து–சரீரத்திற்காகவே கவலைப் பட்டு
நைந்து–நெஞ்சு உளையப் பெற்று,
தண் துழாம் மாலை மார்பன் தமர்கள் ஆய்–குளிர்ந்த திருத் துழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமனது அடியாராய்
பாடி–(அவன் குணங்களை வாயாரப்) பாடி
ஆடி–(பரவசமாய்க்)கூத்தாடி
தொண்டு பூண்டு –(இவ்வகைகளாலே)சேஷ வ்ருத்தியை மேற் கொண்டு
அமுதம் உண்ணா தொழும்பர்–(பகவத் குணானுபவமாகிற) அமுதத்தை புஜிக்கப் பெற்றாத நீர்
சோறு உகக்கும் ஆறே–சோற்றை விரும்பும் வகை என்னோ!
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்-
இவனுடைய சங்கல்ப வாக்கியம் –
அக்நியை அணைத்து விடாய் தீர நினைப்பாரைப் போலேயும்
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்கி கிலேசம் தீர நினைப்பாரைப் போலேயும்
விஷ பஷணத்தைப் பண்ணி தரிக்க நினைப்பாரைப் போலேயும்
துக்க சாதனைத்தை இறே
சுக சாதனமாக பிரமிக்கிறது –
கொண்ட பெண்டிர் -என்கிறபடியே
தன்னுடைய அனந்யத்வம் தோற்ற
அது வேணும் இது வேணும் என்று துச் சககங்களை அபேஷித்து
அலைக்கும் விஷயம் இறே
இவனுடைய த்ரவ்யத்தளவும் -போகத்தளவும் இறே
இவன் பக்கலதாம் –
பெண்டிரால் -என்றது –
ஜாதி அபிப்ராயமான போது
த்ரயத்தளவிலே காலத்தையும் பரிச்சேதித்து பரிகிரஹிப்பார்கள் –
த்ரவ்ய பிரதானகைகள் ஆகையால் –
இவை நினைத்த போக ரசம் அங்கு இல்லை
பிறர் காணில் எளிவரவு –
அத்தைத் தப்பினான் ஆகில் மேல் நரகம் –
இது வாய்த்து விஷய ஸ்வபாவம் இருப்பது –
ஆனந்த மய -என்கிற விஷயத்தை லபித்தாப் போலே இறே
இவனுக்கு ஸ்திரீ பதார்த்தம் லபித்தால் இருப்பது –
ஸூகங்கள்
என்கிற பஹூ வசனத்தாலே
சர்வ ரசங்களும் இவளால் என்று இருக்கை-
இவள் கால் நலத்தாலே தனம் உண்டாம்
பகவை யான வளவில் காம ரசம்
தத் அனந்தரத்திலே புத்திர சம்பத்து -என்றாப் போலே ஆயிற்று
இவன் அபிமானித்து இருப்பது-
உய்ப்பான் -என்றது –
இவன் இப்படி பாரித்து போமது ஒழிய
அவ் விஷயத்தில் அனுபாவ்யமாய் இருப்பது ரசம் இல்லை –
நிஹீன விஷயம் ஆகையாலே
நெடுநாள் சென்றாலும் இன்னது அனுபவித்தோம் என்று
பிரத்யபிஜ்ஞ்ஞை பண்ணலாவது ஓன்று இல்லை
இவனுடைய பாதி சம்வாதமே உள்ளது
அவர்கள் த்ரவ்ய பரைகளாய் அநாதரித்தாலும்
அவ் அநாதாரமே ஹேதுவாக ஸ்ரத்தை மிகும் -இவனுக்கு
பெரியதோர் இடும்பை பூண்டு-
அத்தாலே காலன் கொண்டும்
பர ஹிம்சை பண்ணியும்
துச்சகமான மகா துக்கங்களை
ஏறிட்டு கொள்ளும்
பூண்டு -என்றது
கழுத்திலே புக்க வாயோடு போலே
தன்னாலே கழற்ற ஒண்ணாது இருக்கை
அளவிறந்த ஸூகத்தை அனுபவிக்க வேணும் என்று கோலி
அளவிறந்த துக்கத்தை யாய்த்து யாய்த்து ஏறிட்டு கொள்வது
ஓர் அஞ்சலி உண்டு அறுக்க மாட்டாத விஷயத்தை அன்றே பற்றிற்று
ஸூ ஸூகம் கர்த்தும் -என்கிறபடியே
சாதன வேளையே தொடங்கி ரசிக்கும் விஷயம் அன்றே
தூய வமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன் – என்னக் கடவது இறே
இங்கே சாத்திய சாதனங்கள் -இரண்டும் துக்க ரூபமாய் இருக்கும் –
உண்டிரா –
இரா உண்டு –
ஜீவிக்கவும் அவசரம் இல்லாதபடி
பகல் எல்லாம் தட்டித் திரிந்து
அஸ்தமன வேளையிலே யாய்த்து ஜீவிப்பது
முதல் ஸ்வ சரீர ரஷணத்தைப் பண்ணிக் கொண்டு நின்று
பின்னை இறே
விஷய அனுபவம் பண்ணப் பார்ப்பது –
கிடக்கும் போது –
அநந்தரம் ஓர் இடத்தில் விழ விடுகை
அபேஷிதமாய் இருக்கும்
அப்போது சிதிலன் ஆகையாலே
விஷயங்களை அனுசந்தித்தல் அனுபவித்தல்
செய்ய ஷமன் அல்லன் –
வுடலுக்கே கரைந்து நைந்து –
நாளை இவற்றை ரஷித்து -நாமும் ஜீவித்தோமாய் விட வல்லோம் -என்று சிந்தியா நிற்கும்
வுடலுக்கே-அவதாரணத்தாலே –
தேக அதிரிக்தமாய் இருப்பதொரு ஆத்மவஸ்து உண்டு என்று இருக்கில் இறே
அதுக்கும் ஒருக்கால் கரைய வேண்டுவது –
சரீர சமனந்தரத்தில் வகுத்த புருஷார்த்தை லபிக்கும் விரகு ஏதோ
நரகத்தையும் கர்ப்ப வாசத்தையும் தப்ப விரகு ஏதோ என்று
கரைய விறே அடுப்பது
அதுக்கு யோக்யதை இல்லாமையாலே -தேக உதாரணத்துக்கே -கரையா நிற்கும்
கரந்து -நைந்து –
என்றது -பகவத் குண வித்தராய் இருப்பார் –
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்று
படும் அது அடங்க தேகத்திலே படும் ஆய்த்து இவன் –
தண் துழாய் மாலை மார்பன் -தமர்களாய்ப் –பாடி யாடித் –
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று
களித்து செருக்குக்குப் போக்கு விட்டுத் திரியக் கடவ
சேதனர்
படும் அனர்த்தமே -என்கிறார் –
தண் துழாய் மாலை மார்பன் –
சர்வேஸ்வரத்வ ஸூசுகமான திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதமானவன் –
இவர்கள் பற்றின துராரராத விஷயங்கள் போல் அன்றியே
தன் வெறுமையை முன்னிட்டு என்னைப் பற்றுமவனை
ரஷிக்க கடவேன் என்று
தனி மாலை இட்டு கொண்டு இறே அவன் இருப்பது –
அவன் ரஷகன் ஆகாதவன்றும்
கிட்டுவார்க்கு அவ் வடிவும் ஒப்பனையுமே பிரயோஜனம் போரும் கிடீர்
தமர்களாய்ப் –
இவ்விஷயத்தில் இவனுக்கு சாத்தியம் ஒன்றும் இல்லை –
ஸ்வா பாவிக சம்பந்தத்துக்கு அனுமதி பண்ணும் இத்தனையே வேண்டுவது
இவ் வாத்மாவுக்கு நிலை நின்ற ஸ்வரூபம் இது இறே
அவனை –பதிம் விஸ்வஸ்ய -என்றும்
இவனை –யஸ் யாஸ்மி -என்றும் –
தாசோஹம் -என்றும் இறே
நிர்த் தோஷ பிரமாணங்கள் சொல்லுகிறது –
தமர் -அடியார்
கீழ்ச் சொன்னவை அடங்க இவன் தானே ஏறிட்டுக் கொண்டவை இறே –
பாடி யாடித் –
பகவத் அனுபவ ப்ரீதிக்கு போக்குவீடாகப் பாடி –
அது தான் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே ஆடி –
காயந்தி கேசித் பிரணமந்தி கேசித் ந்ர்த்யந்தி கேசித் -என்று
மது வனத்தில் புக்க முதலிகள் படியாய்த் திரியக் கடவன் இறே இவன் –
ஒரு தேச விசேஷத்தில் சென்றாலும்
ஹாவு ஹாவு ஹாவு -என்று பிரீதி பிரகர்ஷத்தாலே பாடி
சசம்ப்ர்ம ந்ர்த்தம் பண்ணி இறே திரிந்து இருப்பது –
தொண்டு பூண்டு –
அடிமை பூண்டு
தனக்கு வகுத்த சேஷ வ்ருத்தியை ஏறிட்டுக் கொண்டு
உறும் –
என்று ஏறிட்டு கொள்ளுகை அன்றிக்கே –
உகந்து ஏறிட்டுக் கொண்டு –
பூண்டு
இவ் வாத்மாவுக்கு தாஸ்யம் இறே ஆபரணம்
த்ருமசீரை ரலங்ர்த்த -என்றது ஆபரணமானால் போலே
நம் பெருமாளுக்கு சேர சுந்தர பாண்டியன் தம்பிரான் பதக்கம் போலே
இவனுக்கு தாஸ்யம் இறே ஆபரணம் –
அவனுக்கும் அது நெஞ்சிலே கிடப்பது ஓன்று
இவனுக்கும் இது நெஞ்சிலே கிடப்பது ஓன்று இறே
இடும்பை பூண்டு -என்கிறது போல் அன்றே இது –
அஹம் சர்வம் கரிஷ்யாமி –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிறது இறே இது –
பூண்டு -என்கிற
சப்தம் இரண்டிலும் ஒத்து இருக்க
நெடு வாசி பட அர்த்தம் சொல்லுவான் என் என்னில்
அர்த்த பலத்தாலே -அப்ராப்த விஷயத்தில் சேவையை –
சேவாச்வவ்ர்த்தி -என்றும்
பிராப்த விஷயத்தில் பாரதந்த்ர்யத்தை –பாரதந்த்ர்யம் பரே பும்சி -என்றும் –
சாகிபர்த்தம் ந சேவ்யதே -என்றும்
விஷயம் பேதித்தால் போலே
இங்கும் அர்த்த பலத்தாலே பேதித்துச் சொல்கிறது
அமுதம் உண்ணாத்–
ஸ்வரூப பிராப்தமாய்
நித்ய அனுபாவ்யமாய் இருக்கும் அர்த்தம் ஆய்த்து இது –
தவ தாஸ்ய சுகைக சங்கினாம் -என்றும்
தவ தாஸ்ய மகா ரசஜ்ஞ-என்றும் -சொல்லக் கடவது இறே
தொழும்பர்-
இதனுடைய போக்யதை அறியாதே
அபோக்யமாய்
அப்ராப்தமாய்
இருந்துள்ள சூத்திர விஷயங்களை விரும்பும் நீசர்
தொழும்பர்
தண்ணியர் –
பிராப்தி இல்லாமல் இத்தை இழக்கிறார் அல்லர்
லபிக்கையில் நேர்த்தி உண்டாய் இழக்கிறார் அல்லர்
சூத்திர விஷயங்களுக்கு இதுக்கு நெடு வாசி அறியும் சேதனராயும் இருக்க
துராராதமாய் -அபோக்யமாய் விஷயத்திலே
மண்டப் பண்ணிற்று இறே பாப பலம்
சோறு உகக்குமாறே –
மண்ணில் காட்டிலும் சோற்றுக்கு வாசி அறிந்து ஜீவிக்கிற படி எங்கனே
நித்தியமான ஆத்ம வஸ்துவுக்கு-பகவத் சேஷமே தாரகம் என்று அறியாதவன்
அநித்யமான தேகத்திற்கு சோறு தாரகம் என்று ஜீவிக்கிறான் இத்தனை இறே
பித்ராதிகள் ஜீவிக்க காண்கிற வாசனை கொண்டு ஜீவிக்கிறான் இத்தனை இறே
வாசியறியுமாகில் ஆத்மாவுக்கு நன்மை எண்ணானோ
ஒன்றிலே விசேஷ ஞானம் உண்டாகில்
மற்றை யதிலும் அறிவு உண்டாகாதோ-
——————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply