அவதாரிகை –
கீழ்-
மூன்று பாட்டாலும்
ஸ்வ லாபத்தை பேசினாராய்-
மேல்
பதினோரு பாட்டாலே -பரோபதேசம் பண்ணுகிறார் –
ஸ்வ அனுபவத்தை விட்டு இவர் பரோபதேசம் பண்ணுகைக்கு
ஹேது என் என்னில் –
பிராப்தமுமாய்
ஸூலபமுமான
இவ் விஷயத்தை சம்சாரிகள் இழக்கிற இழவு பொறுக்க மாட்டாமையாலும்
இவ் விஷயம் தான் சம்சாரிகளைப் பற்று அல்லது தனியே அனுபவிக்க அரிதாகையாலும்
ஏகஸ் ஸ்வாது ந புஞ்ஜீத -என்கிறபடி
அனுபூதாம்சம் பிறரை அனுபவிப்பித்து அல்லது நிற்க மாட்டாத ப்ரக்ர்தி ஆகையாலும்
பரோபதேசத்திலே பிரவர்தகர் ஆகிறார் –
(ஸம்ஸாரிகளின் இழவைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தளர்ந்து ஒரு பக்கத்தில் ஆச்சர்யப்பட்டும், ஒரு பக்கத்தில் வருத்தப்பட்டும்,
மற்றொரு பக்கத்தில் வெறுப்புற்றும் இன்னொரு பக்கத்தில் நிந்தித்துக்கொண்டும் பேசுகிறார்.)
இதில் முதல் பாட்டு
சம்சாரிகள் பாபிகளான எங்களுக்கு
திரு நாமம் சொல்லுகைக்கு யோக்யதை உண்டோ என்ன
பிராயச் சித்தம் சாத்தியம் அல்லாதபடி
பாப பிரசுரனான ஷத்ர பந்துவும் திரு நாம பிரபாவத்தாலே
பரமபத பிராப்தியை
பண்ணின படியைக் கேட்டார்க்கு
அயோக்யன் என்று அகல விரகு உண்டோ என்ற இடத்திலும்
விமுகராக கண்டவாறே
அத்தைக் கேட்டு வைத்து பாப பலமான ஜென்மாதி கிலேசத்தை
அனுபவிப்பதே -என்று விஸ்மிதர் ஆகிறார் –
——-
மொய்த்த வல் வினையுள் நின்று மூன்று எழுத்துடைய பேரால்
கத்திர பந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியரானார்க்கு இரங்கும் நம் அரங்கனாய
பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே
பதவுரை
மொய்த்த–அடர்ந்து கிடக்கிற
வல் வினையுள் நின்று–கொடிய பாப ராசியினுள்ளே நின்று
மூன்று எழுத்து உடைய பேரால்–கோவிந்த நாமத்தாலே
கத்திர பந்தும் அன்றே–க்ஷத்ர பந்துவமன்றோ
பராங்கதி–சிறந்த பதவியை
கண்டு கொண்டான்–கண்டு அநுபவிக்கப் பெற்றான்;
இத்தனை அடியர் ஆனார்க்கு–இவ்வளவு ஆநுகூல்யம் உடையவர்கட்கும்
இரங்கும்–அருள் புரிகின்ற
நம் அரங்கன் ஆய பித்தனை–நம் அழகிய மணவாளனாகிற ஆஸ்ரித வியாமுக்தனை
பெற்றும் –சேஷியாகப் பெற்று வைத்தும்
பிறவியுள்–ஸம்ஸாரத்திலகப்பட்டு
பிணங்கும் ஆறே -வருந்துகிற விதம் என்னே!
அந்தோ –
மொய்த்த வல் வினையுள் –
மொய்த்த –
பாபங்கள் மிகைத்து –அஹம் அஹம் இகாயா –
நான் முற்பட நான் முற்பட -என்று மேல் விழுந்து
மொய்த்துக் கொண்டு கிடகிறபடி –
தேன் கூட்டை ஈ மொய்த்துக் கொள்ளுமா போலே மொய்க்கை –
நெய்க் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் -என்னக் கடவது இறே-
முதலிகள் இலங்கையை எனக்கு -என்னுமா போலே –
மேரு மந்திர மாத்ரோபி -என்றும்
இஷீக தூல மக்னௌ ப்ரோதம் -என்றும்
ஜகத் சிருஷ்டியில் ஈஸ்வரனுக்கு உண்டான சக்தி போரும்
சேதனனுக்கு பாப ஸ்ருஷ்டியில் உண்டான சக்தியும் –
வல் வினை –
ஒரு பாபம் தானே கால தத்வம் உள்ளதனையும்
அனுபவிக்க வேண்டும்படியாய் இறே அதன் கனம் இருப்பது
யத்ர ப்ரஹ்ம கல்ப நியுதா நுபவேபி –
ஒரு சர்வ சக்தி போக்குதல் தவிருதல் செய்ய வேண்டும்படி இறே பாபத்தின் கனம் இருப்பது –
உள் நின்று –
சமிதை இடா மாணி போலே
தானே சூழ்ந்து கொண்டு கிடக்கிறபடி
நடுக் கடலிலே ஒரு சூத்திர ஜந்து நின்று
அலையுமா போலே –
அணு பரிமாண வஸ்து
பாப சமுத்ரத்திலே நின்று அலைகிறபடி
சிறியனேலும் செய்வினையோ பெரிதால் -என்னக் கடவது இறே
நின்று –
பாபங்களுக்கு இடையாது ஒழிகை
சர்வம் சஹேமே -என்னக் கடவது இறே
நெருப்பிலே கால் வாங்கினால் போலே
பாபங்களிலே வேர் விழுவதே –
மூன்று எழுத்துடைய பேரால்-
மூன்று எழுத்து உடைய திரு நாமத்தாலே –
கெடும் இடர் ஆயவெல்லாம் -இத்யாதி –
பாபங்களைப் பண்ணின காலப் பரப்பும் கனமும் போலே இருக்கிறதோ
பாப விமோசனம் என்னில் –
மூன்று எழுத்து -என்கிறது
ஒரோ திரு அஷரமே போரும் என்கைக்காக
பிரகிருதி ப்ரத்யய யோகத்தாலே
பதமாய் இருக்கை அன்றிக்கே -மூன்று அஷரமாய் -இருக்கை
ஓர் அயுதாஷரீ சஹஸ்ராஷரீ -என்னுமவை போலே
முடிந்ததாய் விடவற்றே என்று இருக்குமது அன்றே இது –
பேரால் –
மந்த்ரம் என்னாது ஒழிந்தது
ரிஷச் சந்தோ தேவதை சக்தி பீஜம் வர்ணம் விநியோக த்யானம் –
என்னுமா போலே
சில சடங்குகள் உண்டாய்
அதிக்ருதாதிகாரமாய் இருக்கை அன்றிக்கே
சர்வாதிகாரமாய் –
ஸ்த்ரியால்-
சாத்தியமாய் இருக்கை –
இடறினவன் -அம்மே -என்னுமா போலே
இடர் வந்த போது சர்வரும் சொல்ல ப்ராப்தி உண்டாய் இருக்கை
இன்ன திரு நாமம் என்னாதே
மூன்று எழுத்து உடைய பேரால் -என்றது
ருசி பிறந்த வன்று உபதேசிக்கைக்காக
ஆசாதிக்கிறார்
மூன்று எழுத்தனை-என்று பெரியாழ்வார் மறைத்தாப் போலே –
(இன்ன திருநாமமென்னாதே ரஹஸ்யமாய்ச் சொல்லிற்று-
ருசி பிறந்த பின்பு ‘அந்தத் திருநாமம் ஏன்?’ என்று விரும்பிக் கேட்டால் அப்போதைக்கு உபதேசிப்போமென்றாம்.
“மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்” என்று பெரியாழ்வார் மறைத்தாற்போல)
கத்திர பந்தும் –
ஷத்ரியாணாமதம –
இது ஷத்ர பந்து
ப்ரஹ்ம பந்து -என்னுமா போலே
ச காரத்தாலே தண்மைக்கு-எல்லை நிலமான இவனும் –
அன்றே –
நம் முதலிகள் கோஷ்டியிலே
நாலூரான் என்றால் போலே
ரிஷிகள் கோஷ்டியில் ஷத்ர பந்து -என்றால்
செவி புதைக்கும் படி யாய்த்து இருப்பது –
சந்த்யக்தே பந்து லோகேன தஸ்மின் துர்வ்ர்த்த சேதசி
சிந்தாஞ்சகார சமுனி ஷத்ரபந்தௌ தயாபா –
(கத்திரபந்துமன்றே-க்ஷத்ரபந்துவின் உபாக்கியானம் ஸ்ரீவிஷ்ணு தர்மத்தில்
தொண்ணூற்றேழாவது அத்யாயத்தில் பரக்கக் கூறப்பட்டுள்ளது;
‘இது மாட்டாயாகில், எப்போதும் கோவிந்த! கோவிந்த! என்று சொல்லிக் கொண்டிருக்கவாவது உன்னால் முடியுமோ?
இருமினாலும் தும்மினாலும் கோவிந்த! என்றே சொல்லிக் கொண்டிருப்பாயாகில் உனக்கு மிக்க நன்மையுண்டாம்’
என்று சொல்லி விட்டுப் போயினர்;
அது முதலாக க்ஷத்ரபந்து கோவிந்த நாமத்தை இடைவிடாது ஸங்கீர்த்தநம் பண்ணிக் கொண்டிருந்தான்.
சிலகாலங் கழித்து அவன் மரணமடைந்து அந்தணர் குலத்தில் பூர்வ ஜந்ம ஸ்மரணத்துடன் பிறந்தான்.
உடனே அவனுக்கு இக் கொடிய ஸம்ஸாரத்தில் மிக்க நிர்வேதம் உண்டாயிற்று.
இப்படிப்பட்ட உத்தமோத்தமமான ப்ராஹ்மண குலத்தில் எனக்குப் பிறவிட நேர்ந்ததும் பூர்வ ஜக்ம ஸ்மரணமுண்டானதும்
நான் முன்பு பண்ணின கோவிந்த நாம ஸங்கீர்த்தகத்தின் பயனன்றோ?
ஆகவே எனக்கு மேலான நன்மையை விளைத்த அந்த கோவிந்தனையே நான் ஆராதனஞ்செய்து,
தீண்டாவழும்புஞ் செந்நீருஞ் சீயநரம்புஞ் செறிதசையும் வேண்டா நாற்றமிகு முடலைவிட்டு
மாய வன் சேற்றள்ளற் பொய் நிலத்தைக் கண்டது நலமந்தமில்லாதோர் நாடாகிய பரம பதத்தை அடையக் கடவேன்
என்பதாகத் துணிந்து அங்ஙனமே செய்து பரம பாகவதனாகி விடுபெற்றனன் என்பதாம்.)
பராங்கதி கண்டு கொண்டான்-
பாப விமோசனமே பலம் போந்து இருக்க
அவ்வளவு அன்றிக்கே
ஸ்வர்க்காதி பலங்களின் அளவும் அன்றிக்கே –
ஐஸ்வர்யம் கைவல்யங்கள் அளவும் அன்றிக்கே –
உத்தம புருஷார்தத்தைக் கிடீர் லபித்தது –
சம்சாரிகளில் கடையனானவன்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தம் உடைய அனுபவத்தை இறே பெற்றது –
கண்டு கொண்டான் -என்றது
இழந்தது பெற்றால் போலே இருக்கை –
திரு நாமம் சொன்னதுக்கு பலம் பெற்றானாய் இருக்கை அன்றிக்கே
தன்னது தான் பெற்றானாக வாய்த்து இவன் நினைத்து இருப்பது –
அஞ்ஞானத்தாலே மறைந்து கிடந்ததாய்
பகவத் விஷயீ காரத்தால் அதில் நிவ்ருத்தி பிறந்தால்
ஸ்வரூபமும் –
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷமும்
பிரகாசிக்கும் இத்தனை இறே –
பிரகாச்யந்தே ந்ஜந்யந்தே-என்னக் கடவது இறே –
இத்தனை அடியரானார்க்கு-
ஷத்ர பந்தின் அளவு ஆனுகூல்யம் உடையார்க்கு என்னுதல்
ஈஸ்வரன் சேஷி -நீ சேஷபூதன்-என்றால் அதில் அத்வேஷம் உடையார்க்கு -என்னுதல்
பதிம் விஸ்வஸ்ய -என்றும்
யஸ் யாஸ்மி -என்றும்
சிலர் சொன்னால் மனஸ் அதிர்ந்து இராது இருக்கை –
இவ்வளவைக் கொண்டு அடியனார்க்கு -என்னலாமோ என்னில் –
பகவத் அபிப்ராயத்தாலே சொல்லுகிறார் –
துராசாரோபி சர்வாசீ -என்று தொடங்கி
நிர்த்தோஷம் வித்திதம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -என்னக் கடவது இறே
இத்தனை -என்கிற இது தான்
மேரு மந்த்ரம் போலே மலையமலை சுமந்தாப் போலே யாய்த்து இருக்கிறது அத்தலைக்கு –
பூயிஷ்டாந்தே நம உக்திம் விதேம -என்னக் கடவது இறே
இரங்கும் –
அத்வேஷ உக்தனுக்கு இது புருஷார்த்தம் ஆம் போது
ஸ்வாபாவிக சம்பந்தத்தாலே இத்தலையில் ஆபிமுக்யத்தாலே
அவசர ப்ரதீஷனாய் இருக்கை இறே பெறுகிறது தன்னை –
இத் தலையில் உள்ளது விலக்காமை-பேற்றுக்கு இது எங்கனே போரும்
அன்று ஈன்ற கன்றுக்கு தாய் இரங்குமா போலே
தானே எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்திலோம்-என்னும்
இரக்கமே யாய்த்து உள்ளது -என்றுமாம் –
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -என்னக் கடவது இறே –
நம் அரங்கனாய-
அகிஞ்சனரான நமக்காக இறே கோயிலிலே வந்து
கண் வளர்ந்து அருளுகிறது –
பரம பதம் -நித்யருக்கும் முக்தருக்கும்
திருப் பாற் கடல் -முக்த ப்ராயரான சனகாதிகளுக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் –
அவதாரங்கள் -தத் காலீனரான பாக்யாதிகர்க்கு
கோயிலிலே நிலை -தேச காலங்களுக்கு பிற்பாடரான நிர்பாக்யர்க்கு முகம் கொடுக்க இறே
நம் -என்றது
ஷத்ர பந்துவோடு சகோத்ரிகளான நமக்கும்
ஸூலபனான இடம் -என்கை –
பித்தனைப் –
பித்தர் ஆகிறார் -பூர்வ அவஸ்தையிலே ஞானம் இன்றியே ஒழிந்தார்-
தன்னையும் அறியாதே
பிறரையும் அறியாதே
இருக்குமவர் -என்றுமாம்
அதாகிறது –
கொள்ளுமவன் சிறுமை பார்த்தல்
கொடுக்கிறவன் பெருமை பார்த்தல்
கொடையின் சீர்மை பார்த்தல் –
செய்வது அறியாது இருக்குமவன் -என்கை –
பெற்றும் –
தான் குறைவாளனே யாகிலும்
குறை தீர்க்கும் ரஷகன் இருந்த இடத்தே செல்ல வேணும் இறே –
அது வேண்டாதபடி -பூர்ணனான -தான் -என்னைக் கொள்வார் உண்டோ -என்று கிடக்கிற இடம் –
அந்தோ பிறவியுள் பிணங்குமாறே-
ஸூலபமான விஷயத்தை விட்டுப் போனாலும் இறே
போய்ப் பெறுகிற விஷயம் இத்தோடு துல்யமாய் இருக்குமாகில்
ஜன்மாதிகளில் தான் அகப்பட்டு கிடக்கச் செய்தே
அந்யோந்யம் விவாதம் பண்ணி முடிந்து போவதே -என்று வெறுக்கிறார் –
ஒரு விடக்கை பற்றி இரண்டு பதார்த்தம் விவாதம் பண்ணுமா போலே
அத்யந்தஹீனமாய் இருவருக்கு பாத்தம் போராத விஷயங்களைப் பற்றி
ஸ்பர்தை பண்ணித் திரிவதே
அந்தோ –
சர்வேஸ்வரனுக்கு
ஸ்ரீ கௌஸ்துபத்தோ பாதி ஸ்ப்ர்ஹா விஷயமான ஆத்ம வஸ்து
இப்படிப் படுவதே என்று
தர்மஹானி கண்டால் -படுகுலை படுகுலை -என்பாரைப் போலே வெறுக்கிறார்
ப்ராப்தமுமாய்
ஸூலபமுமாய்
ஸூஸீலமுமான
இவ் விஷயத்தை விட்டு
அப்ராப்தமுமாய்
துர்லபுமுமாய்
துஸ் சீலமுமான
விஷயங்களைப் பற்றி க்லேசிக்கக் கண்டால்
தார்மிகரான இவர்க்கு பொறுக்கப் போமோ –
——————————————————————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply