அவதாரிகை –
உமக்கு பரம பதம் வேண்டாவாகில்
கோயிலோடு தோள் தீண்டியான சம்சாரத்திலே இருந்து
திரு நாமத்தை அனுபவியும் என்று
ஸ்ரீ பெரிய பெருமாள் அருளிச் செய்ய –
அத்தையும் நிரூபித்த வாறே அவகாசம் இல்லாதபடி துரித பரம்பரையேயாய் இருந்தது –
ஆகையாலே அது எனக்கு அது வேண்டா வென்ன –
திரு நாமம் சொல்லுகைக்கு அவகாசம் இல்லாதபடி சம்சாரத்துக்கு நீர் சொல்லுகிற குறை என் என்று அருள
சம்சாரத்தின் உடைய தோஷங்களை உப பாதித்துக் காட்டுகிறார்
இத்தால்
பழகிப் போகிற சம்சார யாத்ரையிலும் ஜூகுப்சை பிறக்கும்படி
திரு நாமம் இனிது என்று
அம் முகத்தாலே திரு நாமத்தின் உடைய போக்யதா பிரகர்ஷத்தை சொல்கிறது –
————————–
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே
பதவுரை
அரங்கமாநகருளானே!
மனிசர் தாம்–மநுஷ்யர்கள்
வேதம் நூல்–வேத சாஸ்திரத்திற்படியே
நூறு பிராயம் புகுவரேலும் –நூறு பிராயம் வாழ்ந்திருப்பர்களே யானாலும்
பாதியும் –அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும்
உறங்கி போகும்–உறக்கத்தாலே கழியும்;
நின்ற இப்பதினையாண்டு –மிகுந்த ஐம்பது வருஷம்
பேதை–சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும்
பாலகன் –‘சிறு பயல்’ என்னும்படியான அவஸ்தையாயும்
அது ஆகும்–நெஞ்சால் நினைக்கவும் தகாத யௌவநாவஸ்தையாயும்
பிணி–வியாதி மயமாயும்
பசி–ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும்
மூப்பு–கிழத் தனமாயும்
துன்பம் –மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்;
ஆதலால்–இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால்
பிறவி–ஜந்மத்தை
வேண்டேன்–விரும்புகிறேனில்லை.
வியாக்யானம் –
வேத நூல்-
வேத சாஸ்த்ரா விரோதிநா -என்கிறபடியே
வேதமாகிற நூல் -வேதாக்ய சாஸ்திரம் -என்னக் கடவது இறே
நூல் -சாஸ்திரம்
அதவா
வேதங்களும் நூல்களும் -என்னவுமாம்
வேதங்களும்
வேதார்த்த ஞானம் உடைய புருஷர்கள் உடைய வசனங்களும் –
பிராயம் நூறு–
சதாயுர்வை புருஷ -என்று இறே சொல்வது
இது இறே பரமாவதி
இது தான் ஓலைப் புறத்திலே கேட்டுப் போம் இத்தனை –
புகுகைக்கு சம்பாவனை இல்லை
அந்த நூல் தான் அளவுகோல் வாசியால் வந்த ஏற்றத்தாலே
சிலர் பக்கலிலே நெடு வாசிப் பட்டு இருக்கும் –
அத்தை வ்யாவ்ருத்திக்கிறது –
மனிசர் -என்று
ந ஜாயதே ம்ரிய தேவா கதாசிந்நாயம் பூத்வாபவிதாவா ந பூய-என்கிறபடியே
கல்பாதியிலே தோற்றி
கல்பாந்தத்திலே முடிவாய் இருக்கும் இறே
சிலருக்கு அங்கன் இன்றிக்கே இருக்கை –
தாம் –
கர்ப்பம் தொடங்கி மரணத்துக்கு யோக்யமாய் இருக்க
தமக்கு ஒரு ஜீவனமும் பரிக்ரஹமும் காண் என்று
ஷேபிக்கிறார் –
புகுவரேலும் –
முதலிலே புகுவார் இல்லை –
கர்ப்பத்திலே முடிதல்
ஜனியா நிற்க முடிதல்
பிறந்து முடிதல்
நாலு நாள் இருந்து முடிதல்
பால்யத்திலே முடிதல்
செருக்கித் திரியும் யௌவனத்திலெ முடிதல்
ஜரையிலே முடிதல்
மரணத்தை நிர்ணயிக்க அரிதாம் படி இறே இருப்பது –
கர்ப்பே விலீயதி பூயோ ஜாயமானோ ஸ்தமேதிச
ஜாத மாத்ரேச ம்ரியதேபால பாவேத யொளவநே
மத்யமம் வாவய ப்ராப்த்தே வார்த்தே கேவா த்ருவாம்ர்தி – என்னக் கடவது இறே-
பிராணிகள் தங்கள் ஆயுஸ் போகிறபடி ஒன்றையும் அறியாதே
உதய அஸ்தமயங்களைக் குறித்து உகவா நிற்பார்கள் –
நந்தந்த யுதித ஆதித்யே நந்தந்த யஸ்தமிதோ வௌ
ஆத்மனோ நாவ புத்யந்தே மனுஷ்யா ஜீவித ஷயம் -என்றும்
ஜாயஸ்வ ம்ரியஸ்வ -என்றும்
மின்னின் நிலையில -என்றும்
வாள்களாகி நாள்கள் செல்ல -என்றும் சொல்லக் கடவது இறே
புகுவரேலும் –
வருந்தி நூறு வயசு புக்கராகில் –
பாதியும் உறங்கிப் போகும் –
அதிலே செம்பாதி கடிக் கூறாய் பாழாய் நிற்கையாலே கழியும் –
பாதியும் உறங்கிப் போகும் கணக்கிலே
திரு நாமம் சொல்லக் கடவ காலம் வ்யர்த்தமே போவதே -என்று வெறுக்கிறார் ஆய்த்து –
ஐ ஹௌ நித்ராஞ்ச தந்த்ரீஞ்ச -என்று
இளைய பெருமாளைப் போலே இருக்கை இறே அடுப்பது
சததம் கீர்த்தநந்த– என்று
சர்வ காலமும் திரு நாமம் சொல்ல விறே கண்டது –
நின்ற விப்பதினை யாண்டு
நின்றதில் பதினையாண்டு
சேஷித்ததில்-பதினைந்து சம்வஸ்தரம்
பாலனாயும்
உவாவாயும்
விஷய பிரவணனாயும் -இங்கனே -கழியும்-
நின்ற இப்பதினைந்தாண்டு -என்ற போது –
சேஷித்த நாள் பதிற்று ஐஞ்சு ஐம்பது சம்வஸ்தரம் -என்று ஆகிறது –
இவன் போரப் பொலியப் பாரிக்கிற காலம் எல்லாம் தமக்கு ஓன்று இராமையாலே –
இது -என்று
ஸூத்தரமாகப் பேசுகிறார் –
பேதை–
திரு நாமம் சொல்லுகைக்கும் யோக்யதை இன்றிக்கே
தன்னுடைய ஹிதாஹிதங்கள் ஜனனியினுடைய
புத்தி அதீனமாய் இருக்கும் அத்யந்த சைசவம் –
பாலகனதாகும் –
பாலனாகிய அந்த அவஸ்தையாம் -என்றபடி
தீம்புகள் செய்தாலும் பொடிய ஒண்ணாத பருவம் –
இவனை திரு நாமம் சொல்லிற்று இலன் -என்று வெறுக்க ஒண்ணாதே –
அதாகும்
ததநந்தரமான அந்த அவஸ்தையாம் -என்றபடி –
ததநந்தரம் யௌவனம் வந்து பிரவேசித்து விஷய பிரவணனாய் திரியும் –
ஜனனி உடைய புத்தி அதீனமான பேதைத் தனமே நன்று எனும்படி யாய்த்து
இதின் அறிவு கேடு இருப்பது –
உள்ள அறிவு அகருத்ய கரணத்துக்கு உடலாகையாலே
அந்த யௌவனம் கழிவதற்கு முன்னே வியாதி வந்து கைக் கொள்ளும்
அத்தை வேரும் விரகும் தேடி ஒரு படி பரிஹரித்துக் கொள்ள கண்டு பசி தலை எடுக்கும் –
பசி யாவது சர்வ இந்த்ரியங்களும் ஸ்வ ஸ்வ விஷயங்களில் பிரவணம் ஆகை
ஆரோக்கியம் பிறந்த வாறே இந்த்ரியங்கள் தலை எடுத்து
விஷயங்களை காட்டு காட்டு என்று நலியத் தொடங்கும் –
ஐவர் திசை திசை வலித்து எற்றுகின்றனர்-என்றும்
ஐவர் அறுத்து தின்னிட அஞ்சி நின்னடைந்தேன் -என்னக் கடவது இறே
காலன் கொண்டு பர ஹிம்சை பண்ணி த்ரவ்யார்ஜனம் பண்ணுகிறது இந்த்ரியங்களால் வரும் நலிவு தீர்க்கைக்கு இறே
இங்கனம் சொல்லா நிற்க ஜரை வந்து கைக் கொள்ளும்
ஜரை யாவது சாலப் பொல்லாதது ஓன்று இறே –
போக யோக்யதை இன்றிக்கே இருக்கச் செய்தே
சாபலம் அனுவர்த்திக்கும் இறே
பண்டு காமர் ஆனவாறும் -என்று வ்ருத்த கீர்த்தனம் பண்ணி யாகிலும்
தரிப்போம் என்று பார்க்கும்
இவ்வளவில் இடி விழுந்தால் போலே
மரணம் வந்து உபஸ்திதமாம் —
துன்பம் –
இதுவே துக்கமாய்
நிரந்வய விநாசத்தோடே தலைக் கட்டும்
பால்யே க்ரீடா நகாசக்தா யௌவனெ விஷயோன்முகா
அஞ்ஞான அயந்த்யசன்காச்ச வர்த்தகம் சமுபஸ்திதம் –
ஆதலால் பிறவி வேண்டேன் –
என்று விபூதி த்வயத்துக்கும் கண் அழிவு சொல்லா நின்றீர்
நிற்பாயாகில் திரு வாணை
கிடப்பாயாகில் திரு வாணை -என்பாரைப் போலே நீர் படுத்துகிறது என் –
நமக்கு விபூதி த்வயமே யன்றோ உள்ளது -என்ன –
அரங்க மா நகர் உளானே –
விபூதி த்வயத்துக்கு புறம்பாய்
த்ரீதீயா விபூதியான கோயிலிலே எனக்கு ஓர் இருப்பு அரிதோ -என்கிறார்
கோயிலிலே வந்தால் அதி பால்யத்திலே அன்ன ப்ராசனத்துக்கு என்றாகிலும்
திருவடிகளிலே கொண்டு புகுருவர்கள் –
க்ரீடா அவஸ்தையிலும் -பாலா அபிக்ரீடமானா –
செல்வர் எழுந்து அருளும் படியை அனுகரியா நிற்பார்கள்
பக்வனானால் தாம் விரும்பிய விஷயங்களைப் பற்ற உள்ளே புகக் கடவனாய் இருக்கும்
பெருமாளுடைய வடிவு அழகும்
அங்குத்தை பாவனத்வமும்
விஷயாந்தரங்களில் துவக்கையும் அறுக்கும் –
வ்ருத்தனாய் உள்ளே புக மாட்டாத வற்றைக்கு இவன் வாசலிலே வந்து நிற்பார்
ஆக
இப்படி வாசிதம் ஆகையாலே
ஸ்வப்பனத்திலும் காண்பது இவர் வடிவேயாய் இருக்கும்
இனி –தேசோயம் சர்வ காம துக் –
தேசம் தான் எல்லா நன்மையையும் பண்ணிக் கொடுக்க வற்று
ஆகையாலே கோயில் வாசம் அடிக் கழஞ்சு பெற்று செல்லா நிற்கும் இறே-
——————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply