ஸ்ரீ திரு மாலை-2-பச்சை மா மலை போல் மேனி -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

அவதாரிகை –

திரு நாமத்தின் உடைய பாவநத்வமும்
அது கற்கையாலே தமக்கு பிறந்த ராஜ குலமும் சொல்லிற்று கீழ்

இதில்
திரு நாமத்தின் உடைய போக்யதையைச் சொல்லுகிறது

ஆனால் போக்யதையைச் சொல்லி
பாவனத்வத்தைச் சொன்னாலோ -என் என்னில் –

பயம் போனால் இறே ரஸ்யதையிலே இழிவது
ஜ்வரம் அனுவர்த்தியா நிற்க பால் ரசிக்குமோ –
முன்பு பாபத்தை கூடு பூரித்து யம பீதனாய் இருக்கிறவனுக்கு
அந்த பயம் நிவர்த்தம் ஆனால் அல்லது
போக்யதையிலே நெஞ்சு செல்லாது இறே

யன் நாம சந்கீர்த்தனதோ மகா பயாத் விமோஷ மாப்நோதி ந சம்சயம் நா -என்று
ரிஷிகள் பய நிவ்ருத்திக்கு ஹேதுவாக சொல்வார்கள்

ஆழ்வார்கள் –
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -என்று
போக்யதா பிரகர்ஷத்தைச் சொல்லுவார்கள் –

இத் திரு நாமம் தான்
பிரயோஜநாந்த பரருக்கு பிரயோஜனத்தைக் கொடுக்கும் –
உபாயாந்தர நிஷ்டருக்கு உபகரணமாய் இருக்கும் –
பிரபன்னருக்கு தேக யாத்ரை சேஷமாய் இருக்கும் –

முத்துப் படும் துறையிலே முக்குவார்
முத்தை கொடுத்து பழம் கொள்ளுவார்கள்

செழு முத்து வெண்ணற்க்கும் என்று ஆறுவார்கள் இறே
விலை அறியும் செட்டி பக்கல் புகுந்தவாறே பெரு விலையனாம்
செருக்கர் ஆனவர்கள் இதைப் பூண்டு அனுபவிப்பார்கள் –

(தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்*  தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்*
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்*  அடி வைத்த அம்மான் இடம்*
மா மதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்*  செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*
முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!  -3-8-7-
செழு முத்து வெண் நெல்லுக்கு என்ன -தங்கள் முத்துவின் சீர்மையும் தாங்கள் பெரும் நெல்லின் தாழ்வும் தெரிவிக்கப் பட்டன)

அப்படியே பிரயோஜநாந்த பரருக்கும் உறுப்பாய்
சாதநாந்த நிஷ்டருக்கும் உறுப்பாய்
பிரபன்னருக்கு ஸுயம் பிரயோஜனமுமாய் ஆய்த்து இத் திரு நாமம் இருப்பது –

கீழ் நின் நாமம் கற்ற -என்னா நின்றீர்
நம் பேர் சொன்னாருக்கு நாம் கொடுக்கக் கடவதொரு நாடு உண்டு
அத்தை அவர்களால் கொள்ளோம் என்ன ஒண்ணாது
அத்தைக் கொள்ளீர் -என்று
பெரிய பெருமாள் அருளிச் செய்ய –

திரு நாமம் சொல்லும் போதை ரசம் ஒழிய
அவ்வருகு போய் அனுபவிக்கும் ரசம் எனக்கு வேண்டா -என்கிறார் –

———————————-

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-

பதவுரை

அரங்கமா நகருளானே!-;

பச்சை மா மலை போல் மேனி– பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும்
பவளம் வாய்–பவளம் போன்ற சிவந்த திருவாயையும்
செம் கமலம் கண்–செந்தாமரை மலர்போன்ற திருக் கண்களையுமுடைய
அச்சுதா–அச்சுதனே!
அமரர் ஏறே–நித்ய ஸுரிகளுக்குத் தலைவனே!
ஆயர் தம் கொழுந்தே–இடையர் குலத்தில் தோன்றிய இளம் குமாரனே
என்னும் –என்று (எனது) வாயினாற் சொல்லுவதனால் (எனக்கு) உண்டாகின்ற
இச்சுவை–இந்த அநுபவ ருசியை
தவிர–விட்டுவிடும்படி
யான் போய்–யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று
இந்திர லோகம் ஆளும்–(அந்தப்) பரமபதத்தை ஆளுகின்ற
அச்சுவை–அந்த அநுபவ ருசியை
பெறினும்–அடைவதாயிருந்தாலும்
வேண்டேன்–(அதனை) விரும்பமாட்டேன்.

வியாக்யானம் –

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை –
இந்த ரசம் இருந்த படி கண்டீர் –
உமக்குத் தான் புறம்பே போ என்ன வேண்டி இருந்ததோ -என்கிறார் –

பச்சை மா மலை போல் மேனி –
பச்சை நிறத்தை உடைத்தாய்
ஸ்லாக்கியமாய்
இருப்பதொரு மலை போலே யாய்த்து திரு மேனி இருப்பது –

காணப் புக்கால் கண்ணும் குளிர்ந்து
நெஞ்சும் குளிரும்படி ஸ்லாக்கியமாய்த்து இருப்பது –

தாபத் த்ரயம் உடையவர்களின் சகல தாபங்களும் கண்ட போதே
ஆறும்படி யாய்த்து திருமேனி இருப்பது –

நெய் திணுங்கினால் போலே அகவாயில் தண்ணளி உடைய செறிவு எல்லாம்
வடிவிலே காணலாம் படி இருக்கை –

மா மலை -என்றது
பூஜ்யமான மலை என்றபடி –

பிரதமத்தில்
சுபாஸ்ரயமாய்
பின்பு நித்ய அனுபாவ்யமாய் இருக்கும் ஸ்லாக்கியதையைச் சொல்லுகிறது –

மலையானது
ஸ்தைர்யத்துக்கு ஒப்பாய்
வளர்த்திக்கும் ஒப்பாம் இத்தனை ஒழிய
போக்யதா அதிசயம் எல்லாம் இல்லையே அதனுக்கு –

மேனி
ஆனந்த மய -என்கிற ஸ்வரூபமும்
ஆனந்தாதி குணங்களும் அல்ல –
இவரை உகப்பிப்பது –

இவை இரண்டும் அகவாயிலே யாம்படியான இவ்வடிவு யாய்த்து இவரை உகப்பித்தது –
இச்சா க்ர்ஹீத அபிமதோருதேக -என்றும்
குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போலே குரை கடல் போல்
நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமால் -என்றும் சொல்லக் கடவது இறே

கழுத்தே கட்டளையாக நீரை முகந்து போக மாட்டாதே மலை உச்சியினிலே சாய்ந்த மேகம் போலவும்
கண்ணாலே முகந்து அனுபவிக்க குவளைகள் போலவும்
அனுபவித்து முடிக்க ஒண்ணாமைக்கு கடல் போலவும்
வைத்த கண் வாங்க ஒண்ணாமைக்கு மயில் திரள்கள் போலவும்
ஆய்த்து இத் திரு மேனி இருப்பது –

சிஞ்சேதி மஞ்ச ஜன மிந்திரியா தடித்வான் பூஷா மணி தியுதிபிரிந்த்ரத நுர்த்ததான
ஸ்ரீ ரெங்க தாம்நி தயாரச நிர்புரத்வாதத் ரௌ சயாளுரிவ சீதள காளமேக -என்றார் இறே

(ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி,
காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார தாபங்களை யெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியாநஞ்செய்தற்கு உரியதாய் இருத்தலும் பெருங்கருணைக்கு இருப்பிடமாய் இருத்தலும்
முதலிய குண விசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால் ‘பச்சை மா’ என்ற அடைமொழி மலைக்குக் கொடுக்கப்பட்டது.)

பவளச் செவ்வாய் கமலச் செங்கண்-
திரு மேனி ஒரு பெரும் கடல் போலேயாய்
அதிலே கொண்டு முழுகும் சுழிகள் போலே யாய்த்து திவ்ய அவயவங்கள் இருப்பது –

பவளச் செவ்வாய்–திரு மேனிக்கு பரபாகமான -பவளம் படர்ந்தால்  போலே யாய்த்து திரு அதரத்தில் அழகு இருப்பது –
மலையிலே பவளம் படர்ந்தாப் போலே இருக்கை –
சந்த்ரோயதத்தில் கடல் கொந்தளித்தாப் போல
ஆஸ்ரித முக தர்சனத்தாலே வந்த அழகு ஓதம் ஏறின படி –
வசஸா சாந்த்வயித்வா -என்கிறபடியே–
ஆஸ்ரிதரை வினவுகிற திரு வதரம் இருக்கிறபடி

கமலச் செங்கண் –
ஜீவன அத்ருஷ்டத்தாலே இத் திருப் பவளத்துக்கு தப்பினாரையும்
அகப்படுத்திக் கொள்ளும் கண்கள் –

வாயால் சொல்ல மாட்டாத குறையும் கண்ணாலே இறே
தலைக் கட்டுவது –
லோச நாப்யாம் பிபந்நிவ-என்கிறபடியே
அகவாயில் வாத்சல்யாதி குணங்களுக்கு பிரகாசமாய் இருக்கிறபடி

மென்மை குளிர்த்தி நாற்றம் -தொடக்கமான வற்றுக்கு ஒரு போலியாம் இத்தனை அல்லது
அகவாயில் தண்ணளி எல்லாம் இல்லையே அதுக்கு –

விக்ரஹம் இல்லை குணம் இல்லை விபூதி இல்லை -என்கிற
சூன்யவாதிகள் சஞ்சரிக்கிற சம்சாரத்திலே
இப்படி விக்ரஹத்தை ஆதரித்த இவர்கள்
உத்தேச்யராய்ப் பெற்றோமே -என்று ஜீயர் அருளிச் செய்வர் –

அச்சுதா –
திருஷ்டாந்தமாக சொன்ன மலை -பவளம் -தாமரை -போலே
நாள் செல்லச் செல்ல
செவ்வி மாறுதல் -தான் அழிதல்-செய்யாதே
ஏக ரூபமாய் இருக்கை-
சதைக ரூப ரூபாய -என்னக் கடவது இறே –

அதவா –
இச் செவ்வி மாறாதே செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார் -என்றுமாம்
சேவடி செவ்வி திருக் காப்பு -என்னக் கடவது இறே –
இவ் அழகிலே அகப்பட்டாரை ஒரு நாளும் நழுவ விடான் என்றுமாம்

அமரர் ஏறே –
இவ் அழகை சதா தர்சனம் செய்யும் போக்தாக்களைச் சொல்லுகிறது –
காலம் எல்லாம் இடைவிடாது அனுபவியா நின்றாலும்
எல்லை காண ஒண்ணாத படி அவ்வருகாய் இருக்கை –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்னக் கடவது இறே –

அவ்வனுபவம் மாறினால் முடியுமவர்கள் என்று தோற்றுகைக்காக
அனுபவதினுடைய அவிச்சேதத்தாலே அமரர் -என்கிறது –
சதா பஸ்யந்தி ஸூரய-என்னக் கடவது இறே

ஆனால் பிராட்டி திருவடி திரு வநந்த ஆழ்வான் போவார்கள்
அனுபவிக்குமதாய்
அதிக்ருதாதி காரமாய் இருக்கிறதோ வென்னில்

ஆயர் தம் கொழுந்தே –
மேன்மைக்கு எல்லை யானவர்களுக்கு நியாமகனாய் இருக்குமா போலே
தாழ்வுக்கு எல்லையான இடையருக்கும் பசுக்களுக்கும் ஸூலபன் ஆனபடி

வடிவு அழகும்
மேன்மையும்
நீர்மையும்
ஒரு பசும் கூட்டமாய் இறே பரத்வம் இருப்பது-

என்னும் –
இஸ் ஸ்வபாவங்களை அனுபவித்தோ உமக்கு இவ்வினிமை பிறந்ததோ என்னில்
அங்கன் அன்று
திரு நாமத்தின் உடைய உக்தி மாத்ரத்திலே வந்த இனிமை –

இச்சுவை தவிர –
இந்த ரசத்தை விட்டு
சுவை -ரசம் –
கைப்பட்டதை விட்டு இவ் அறு சுவைக்கு வேறு ஒரு சுவை இருந்த இடம் தேடித் போகச் சொல்லுகிறாயோ –
இவருடைய அறு சுவை இருக்கிறபடி –
திரு நாமத்தை உம் நாக்கிலே இட்டுப் பாராமை இறே
நான் உபதேசிக்க வேண்டி இருக்கிறது –

யான்
திருநாமம் சொல்லுகைக்கு பாங்கான நாவை உடைய நான்
யான் –
ஒரு தேச விசேஷத்தே போய் அனுபவிக்கும் அளவும் விளம்பத்தை சஹியாத
த்வரையை உடைய நான் –

போய் –
கோயிலுக்கு அணித்தாய் இருக்கை அன்றிக்கே
நெடும் கை நீட்டான அத் தூரம் எல்லாம் போய் –

(போய் என்பதனால்-போவதிலுள்ள அருமைப்பாட்டையும்
இப்போது பயன் எளிதிற் கைப்பட்டிருத்தலையும் குறிப்பித்தனர்.
ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே.”)

இந்திர லோகம் –
நிரவதிக ஐஸ்வர்ய உக்தனுடைய லோகம்
ப்ரஹ்ம இந்த்ராதி சப்தங்கள் பரமாத்ம வாசகம் -என்கிற
வேதாந்த வாசனை தோற்ற அருளிச் செய்கிறார்

ஆளும் –
ஆள்மின்கள் வானம் -என்னும்படியே
இஷ்ட விநியோஹ அர்ஹமாம் படியாய் இருக்கை –

அச்சுவை –இச்சுவை
அது ஸ்ருதி பிரசித்தம் –இது பிரத்யஷ சித்தம் –
அது கேட்டார் வாய் கேட்டுப் போமது –இது கைப்பட்டது –

பெறினும் வேண்டேன் –
கிட்டும் அளவும் வேண்டா என்கிறீர்
கிட்டினவாறே நீரே அதிலே தோள் மாறுகிறீர் என்ன –
பெற்றாலும் எனக்கு வேண்டா –
அத்தை தந்து பார்க்கலாகாதோ நான் ஆதரிக்கும் படி காண என்கிறார்

உறாது -என்னாது ஒழிந்தது
தம்மிலும் அளவுடையார் நித்ய அனுபவம் பண்ணுகிற
விஷயத்துக்கு குற்றம் சொன்னோமாக ஒண்ணாது என்று –
இன்னமும் அதுக்கு உத்கர்ஷம் சொல்லுகிற பிரமாணங்களையும் அநாதாரித்தார் ஆவார் –

பால் கைக்கும் புளிக்கும் என்னில் அன்றோ பிணங்க வேண்டுவது
அது வேண்டாம் என்பாரை செய்யலாவது இல்லையே –
பாவோ நான்யத்ர கச்சதி -என்றவனைச் செய்யலாவது உண்டோ –

(ஸ்நேஹோ மே பாமோ ராஜன் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித
பக்திஸ் ச நியதா வீர பாவோ நான் யத்ர கச்சதி –
சத்யம் சபே வாரண சைல நாத வைகுண்ட வாசேபி ந மேபிலாஷ-தேசிகம்)

(நிரந்தரம் நிர்விசாதா த்வதீயம்
அஸ்ப்ரஷ்ட சிந்த பதம் ஆபி ரூப்யம்
சத்யம் சபே வாரண சைல நாத
வைகுண்ட வாஸே அபி ந மே அபி லாஷா-4வரதராஜ பஞ்சாசத் -9-

த்வதீயம் அஸ்ப்ரஷ்ட சிந்த பதம் ஆபி ரூப்யம் -மனசுக்கும் எட்டாத உன்னுடைய ஸுந்தர்ய திவ்ய மங்கள விக்ரஹத்தை
யாதோ வாசா நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹா –
அடியேனுடைய ஊனக் கண்-மாம்ச சஷூஸ் – கொண்டே -நிரந்தரம் பருகும்படி அருளிச் செய்த பின்பு
சத்யம் சபே வாரண சைல நாத வைகுண்ட வாஸே அபி ந மே அபி லாஷா –மோக்ஷ அனுபவ ஆசை அற்றதே -இது சத்யம் –
இன்று வந்து உன்னைக் கண்டு கொண்டேன் –உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் -இனிப் போக விடுவதுண்டே-)

பரம பதம் வேண்டா என்ன -இங்குத்தை நன்மை ஏது என்ன –
அரங்க மா நகர் உளானே –
பரம பதத்தில் அனுபவத்தை விட்டு
இவ் வழகையும் சீலத்தையும் இங்கு உள்ளாரை
அனுபவிக்கைக்கு
அங்கு உள்ளாறும் இங்கே வாரா நிற்க
என்னை அங்கே போகத் தேடுகிறது என் –

இத்தால் சொல்லிற்று ஆய்த்து –
இங்கே இருந்து திரு நாமம் அனுபவிக்கும் இனிமைக்கு
பரம பத அனுபவமும் சத்ருசம் அன்று என்னும்படி
தமக்கு திரு நாமம் ரசித்த படியை சொல்லிற்று ஆய்த்து-

———————————————————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading