மேலே கூறப்பட்ட செல்வம் முதலானவைகளும்
இறைவனே உலகின் படைப்பு முதலானவற்றுக்கு எல்லாம் காரணமான சர்வேஸ்வரனாய்
தனக்கு மேல் ஓன்று இல்லாத ஆனந்தத்தை உடையனாய்
இருக்கும் இருப்பும்
பாகவத பிரீதி ரூபமாக திருவாய்மொழி பாடி அனுபவிக்கும் இன்பத்தோடு ஒவ்வாது -என்கிறார்
புட்பாகன் உடைய பெரிய ஒப்பு இல்லாத வி லஷணமான
புகழை திருவாய் மொழி யாலே
நுகருமதற்கு விபுவான அவனுடைய ஆனந்தமும் போராது என்கிறார் –
—————————————————————————————————————————————————————————
நுகர்ச்சி உறுமோ மூ வுலகின்
வீடு பேறு தன் கே ழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகரச் செம் பங்கி எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே
———————————————————————————————————————————————————————–
நுகர்ச்சி உறுமோ-
திருவாய் மொழி முகத்தாலே பகவானுடைய குணங்களை
அனுபவிக்குமதனோடு ஒக்குமோ –
மூ வுலகின் வீடு பேறு –
தன் நினைவின் ஏக தேசத்தாலே உலகத்தைப் படைத்தல் அழித்தல்கள் ஆகும்படி இருக்கிற
இறைமைத் தன்மைதான் அதனோடு ஒக்குமோ –
அவனுக்கு அன்றோ இது ஐஸ்வர்யமாகத் தோற்றுவது –
இவர்க்கு இது புருஷார்த்தமே –
உலகத்தை படைத்தல் முதலான தொழில்கள் நீங்கலாக
ஏனையவற்றில் பரமாத்வோடே
ஒத்தவன் ஆகிறான் முக்தன் -என்கிறபடியே
ஜகத் வியாபார வர்ஜம்-சாரீர மீமாம்சை -4-4-17-
ஸ்வரூபத்துக்கு தக்கவை ஆனவை அன்றோ புருஷார்த்தம் ஆவது
தன் கே ழ் இல் புகர்ச் செம் முகத்த களிறு அட்ட –
மிடுக்கிற்கு தனக்கு ஒப்பு இன்றிக்கே இருப்பதாய்
புகரையும்
சீற்றத்தாலே சிவந்த முகத்தையும் உடைத்தான
குவலயா பீடத்தை முடித்த –
பொன் ஆழிக்கை –
அழகிய திரு ஆழி மோதிரத்தாலே
அலங்காரத்தை உடைத்தான திருக்கையை உடையவன் –
குவலயா பீடத்தின் கதுப்பிலே அடித்த பொது கையும் திரு வாழி மோதிரமும் இருந்தபடி –
என் அம்மான் –
கையும் அறுகாழியுமான-மெல்லிய மோதிரம் -வடிவைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டான் –
உகவாதாரை மிடுக்காலே அழித்தான்-
உகந்தாரை அழகாலே அழித்தான் –
நிகரச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன் –
சாதிக்கு தக்கதான சிவந்த மயிரை உடையவராய்
எரி போலே விழியா நின்றுள்ள கண்களை உடையவராய்
பெரிய வடிவை உடையரான அசுரர்கள் உடைய உயிரை எல்லாம்
தகர்த்து உண்டு –
இது தானே இயல்பாக இருக்கிற பெரிய திருவடியைக் கருத்து அறிந்து
நடத்து கின்றவனுடைய
பெரிய தனி மாப் புகழே-
அளவிடற்கு அரியனாய்
உபமானம் இல்லாதவனாய்
இருந்துள்ள கல்யாண குணங்களை திருவாய் மொழி முகத்தாலே அனுபவிக்கும்
அனுபத்துக்கு ஒக்குமோ -என்றது
திருவாய் மொழி நுகரும் ஆனந்தத்துக்கு
ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல வீற்று இருக்கும்
ஆனந்தமும் போராது –என்கிறார் -என்கிறபடி –
புட்பாகன் தனி மா புகழே
திருவாய் மொழி கொண்டு பெரும் ஆனந்தம் எதற்கும் ஒப்பாகாதே
தனக்கு ஒப்பு இல்லாதவன்
குவலையா பீடம் அட்ட எம்மான்
செம்பட்டை மயிர் சிவந்த கண் ராஷசர் வதம் செய்த
புட்பாகன் –
மூ உலகின் வீடு பேறு
புருஷார்த்தம்
அவனுக்கு ஐஸ் வர்யம் இவை
ஜகத் வியாபார வர்ஜம் -ஜீவாத்மாவுக்கு இல்லையே
மிடுக்கு ஒப்பு இன்று இவனுக்கு
பொன் ஆழி கை
குவலையா பீடம் கையும் மோதிரமும் அழகில்
உகந்தாரை அழகால் அழித்து
பெரிய வடிவை உடைய அசுரரை முடித்த
தகர்த்து புஜித்து இதுவே யாத்ரை பெரிய திருவடி தனி மா புகழை
திருவாய் மொழி பாடும் ஆனந்தம் எதற்கும் ஒப்பு இல்லை
இதுவும் பாகவத கைங்கர்யம்
தொண்டர்க்கு அமுது உண்ண
———————————————————————————————————————————————-
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply