திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-6-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே

————————————————————————————————————————————-

அல்லாத திருப்பதிகளும் எல்லாம் அவனுக்கு அப்படியே அன்றோ -என்னில்
அது அப்படியே யாகிலும்
என்னோடு கிட்டுகைக்கு உறுப்பான நிலம் என்று திருக் கடித் தானத்திலே மிக்க காதலன் ஆனான்
என்கிறார்

தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மிகவும் வேறுபட்ட சிறப்பினை உடையதாய்
பழையதாய் வருகிற தலங்கள் எங்கும் –

மாயத்தினால் –
காதலாலே -என்னுதல்
இச்சையாலே -என்னுதல்
மாயா வயுனம் ஞானம் -நிகண்டு

மன்னி வீற்று இருந்தான் –
விரும்பி
தன ஐஸ்வர்யம் எல்லாம் தோற்றும்படி
இருந்து அருளினவன் –
அன்றிக்கே
ஐஸ்வர்யத்தால் வந்த வேறுபாடு தோற்ற இருந்தவன் -என்றுமாம் –

உறை-
நித்ய வாசம் செய்கிற –

தேசத்தமரர் திருக்கடித் தானத்துள் –
ஒளியை உடைய நித்ய சூரிகளுக்கு
அடையத் தக்க பூமியான
திருக்கடித் தானத்துள் –

ஆயர்க்கதிபதி –
ஆயர் குலத்தினனாய் வந்து அவதரித்து
அவர்களில் தலைவன் ஆனவன்

அற்புதன் –
ஆச்சர்யமான படிகளை உடையவன் –
தானே
உகந்தருளின தேசங்கள் எல்லாவற்றிலும் விருப்பம் உண்டாகிலும்
என்னைப் பெறுவதற்காக திருக் கடித்தானத்திலே
தன் மேன்மையும் நீர்மையும் எல்லாம்
பிரகாசிக்க நின்றான் -என்கை –

அல்லாத திருப்பதிகளும் அவனுக்கு இது போலே என்றாலும்
என்னை பிடிக்க இது அமைந்ததால்
ஈடுபாடு அதிகம் என்கிறார்
தாயப்பதிகள் பல -108 திவ்ய தேசம்
மாயத்தினால்
அபிநிவேசம் இச்சை
ஞானம்
மன்னி வீற்றி -கம்பீரமாக இருந்தான்
திருக்கடித்தானம் தனி பிரீதி
தேசத்தமரர் -நித்தியரும் வருவார்களே
அயற்கு அதிபதி
அத்புதன்
மாயப்பிரான் மேன்மை
ஆயற்கு அதிபதி நீர்மை
பிரகாசிக்கிறான் இரண்டையும் இங்கே-

——————————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading