திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-5-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால்
இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்
கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி
முடிசேர் சென்னி யம்மானே

——————————————————————————————————————————————————–

என் விடாய் கெடும்படி
அழகிய மயிர் முடியுடன் வந்து தோன்றி அருள வேண்டும்
என்கிறார் –

காண வாராய் என்று என்று –
ஒருகால் காண வாராய் -என்றால்
வரக் காணாவிட்டால் -ஆறி இருக்க வல்லர் அல்லீரே –
பின்னையும் காண வாராய் காண வாராய் -என்பார் ஆயிற்று

கண்ணும் வாயும் துவர்ந்து –
எங்கனே வரும் என்று அறியாமையாலே திக்குகள் தோறும் பார்த்து கண்கள் பசை அற உலர்ந்தன என்றது –
கண்ணநீர் கைகளால் இறைக்கும் -திருவாய்மொழி -7-2-1-என்னும் நிலையும் கழிந்தது -என்றபடி –
கூப்பிட்டு வாயும் பசை அற உலர்ந்தது –

அடியேன் நாணி –
அத்தலைக்கு வரும் குற்றம் நம்மது ஆம்படியான சம்பந்தம் உடைய நான் நாணி -என்றது
இவனை உலகத்தார் என் சொல்லுவார்களோ -என்று அதற்காக நாணி -என்றபடி –
அன்றிக்கே –
பிரயோஜனத்தின் பொருட்டு கூப்பிடுகை அன்றியே
முறை அறிந்து காண்கைக்கு கூப்பிட்ட நமக்கு தன்படி
அழகியதாய் இருந்தது -என்று நாணி -என்னுதல் –

நல நாடு –
எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் இருப்பிடம் ஆகையாலே விபரீத லஷணையால் சொல்லுகிறார் –
அன்றிக்கே
ஐம்புல இன்பங்களின் அனுபவத்தாலே மக்கள் களித்து வசிக்கும் தேசம் ஆகையாலே சொல்லுகிறார் ஆதல் –
அன்றிக்கே
பிள்ளான் -எம்பெருமானைப் பெற்று அனுபவிக்கும் நாடு காண் -என்பாராம்
இல்லையாகில் கூப்பிட்டார்களோ -என்று

அலமந்தால் –
தடுமாறினால் –

இரங்கி-
உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் பிறர் கேட்டிற்கு இரங்க வேண்டாவோ -என்றபடி
முனிவர்களுக்கு உள்ள இரக்கமும் இல்லையோ -என்றபடி

யொருநாள் –
பலநாள் வேண்டும் என்கிறேனோ –

நீ –
கண்டுகொண்டு நிற்க வேண்டும்படி வேறுபட்ட சிறப்பினை உடைய நீ –

யந்தோ –
உன் வேறுபட்ட சிறப்பினை அறியாது ஒழிந்தால்
என் துயரத்தையும் அறியாது ஒழிவதே –

காண வாராய் –
பிரயோஜனத்தின் பொருட்டு அழைக்கிறேனோ

கரு நாயிறுதிக்கும்
கரு நாயிறு உதிக்கும் –
கரிய நிறத்தின் உடைய சூரியன் தோன்றுகிற

கருமா மாணிக்கம் நாள் நன்மலைபோல் –
அந்த சூர்யன் உதிக்கிற உதயகிரி இருக்கிறபடி –
நீலமாய்
பெரு விலையதான இரத்னமலை போலே
நாள் பூ என்னுமா போலே புதியதாய் காட்சிக்கு இனியதான மலை ஆதலின் நாள் நல் மலை -என்கிறது
அன்றிக்கே
கரு மா மாணிக்கம் நல் மலை மேலே
கரு நாயிறு உதிக்கும் பொழுது போலே
முடி சேர் அம்மான் -என்று கூட்டிப் பொருள் கோடலுமாம் –
நாள் -பொழுது –

சுடர்ச் சோதி முடி-
மிக்க புகரை உடைய முடி

கரு நாயிறு உதிக்கும் -என்கிற திருஷ்டாந்த பலத்தாலே முடி என்றது மயிர் முடியைக் காட்டுகிறது –

சேர் சென்னி –
அதற்குப் பற்றுக் கோடான திருமேனி இரத்தின மலை போலே யாயிற்று இருப்பது –

யம்மானே –
சர்வேஸ்வரனே –
சம்சாரி முத்தனாய்ச் சென்றால் தாபத்தைப் போக்குவதற்காக இவனால் செய்யப்படுவது
திருக் குழலை பேணுதல் இத்தனை –
கேசவன் கிலேசத்தை போக்குகிறவன்-என்றே அன்றோ இருப்பது
கிம் த்வயா நார்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -எனபது பிரமாணம்-

விடாய் கெடும்படி அழகிய மயிர் முடி உடன்
சுடர் சோதி முடி சேர் அம்மானே -உடன் வந்து அருள வேண்டும்
துவர்ந்து
நாணி
அலமந்து
இரங்கி ஒரு நாள் காண வாராய்
கரு நாயிறு உதிக்கும் -கரு மா மாணிக்க மலை மேலே –
முடி சேர் அம்மான்
கிரீடம் சொல்ல வில்லை -இத்தால்
கரு நாயிறு கேசபாசம் -மயிர் முடியைச் சொல்கிறார்
காண வாராய் என்று என்று -இதுவே யாத்ரை
ஆறி இருக்காமல் -விஷய வை லஷண்யம் -இருக்கிற படி
திக்குகள் தோறு பார்த்து கண் பசை அற்று உலர
கண்ணா நீர் கைகளால் இறைக்கும் நிலை கடந்தது
கூப்பிட்டு வாயும் பசை அற்று உலர்ந்தது
அடியேன் நாணி
அத்தலையில் அவத்யம்
நம்மதாம் படியான சம்பந்தம் உண்டே
லஜ்ஜித்து -தன்னை நொந்து கொள்வது -நன்றாகதான் ஆசைப் பட்டேன் –
அவனை பழிப்பார்கள் -என்று லஜ்ஜித்து என்றுமாம் –
கூலி கொடுத்து எழுதி வைக்க சொன்னானே என்பர்
ஆளவந்தார்
துக்கம் எனக்கு சஹாஜம்
ஒரே கஷ்டம் துவக்ர்த்தே -உன் பெருமைக்கு தகாதே
அதற்காக என்னை அனுக்ரகிக்க வேண்டும்
பட்ட மகிஷி உஞ்ச விருத்திக்கு பயந்து –
முறை அறிந்து -பிரயோஜனார்த்தியாய் கூப்பிடுகை அன்றியே
காண்பதே பிரயோஜனம் அறிந்து
தன்படி அழகியதாய் இருந்தது
நன்னாடு இந்த லோகம்
அநந்த கிலேச பாஜனம் -விபரீத லஷனையால் –
கறுப்பு நல்லவாடு தெலுங்கு விபரீத லஷனை பொல்லாதவர் என்பார் –
விஷயானுபவத்தால் களித்து உள்ள நாடு
பிள்ளான் -நிர்வாஹம்
லோகம் முழுவதும் எம்பெருமானை அனுபவித்து ஆனந்தம் அடைந்து உள்ளார்
கதறவில்லையே-என்பதால் -அப்படி நினைத்து இருக்கிறார் –
அலமந்தால் தடுமாறினால்
இரங்க எண்ணம் இல்லையானாலும் இப்படி துடிப்பாரைக் கண்டால் இரங்க வேண்டாவோ
ரிஷிகள் உள்ள ஆன்ருசம்சயம்-
சம்சார விஷயத்தில் துக்கிக்கும் ஸ்திரீகளை ஏறெடுத்து பார்க்காத
வால்மீகி பிராட்டி பக்கல் காட்டினாரே
ஒரு நாள்
உன் வை லஷண்யம் அறிந்து
காண வாராய்
இதுவே நான் வேண்டுவது
திருமேனி காட்டி அருள வேண்டும்
உதாரா கொண்டாடி
வரும் பொழுது
சுடர் சோதி வடிவுடன்
கருத ஆதித்யன் உதிப்பதுபோலே
கரு மா மாணிக்க மலை – போலே திரு மேனி
உச்சியில் உதிக்கும் சூர்யன் -மயிர் முடி கூந்தல் -கிரீடம் சொல்ல வில்லை
கேசவன் கிலேச நாசக
பாசுரம் சொல் அர்த்தம் புரிந்து கொண்டு –
நீ -கண்டு கொண்டே இருக்கும் படியான வை லஷண்யம் உள்ளவனே
நாள் நல் மலை –
உதயகிரி -உதய சாகரம் சில இடங்களில் -இடம் பொறுத்து
நீளமாய்
மா பெரு விலையனான
மாணிக்க தர்சநீயமான ரத்னமயம்
நாள் மலை -நாள் பூ அன்றைக்கு கிடைத்த பூ
அபிநவமாய் தர்சநீயமான மலை –
முடி சேர் சென்னி அம்மான் –
கரு -சப்தம் மயிர் முடியைக் குறிக்கும்
கிரீடம் கதிர் ஆயிரம் இரவி போலே இருக்குமே
அம்மானே
சர்வேஸ்வரனே
கொள்கின்ற கோள் இருளை -கறுப்பு சூர்யன் -இல் பொருள் உவமை அணி
திருவடிகளுக்கு இரண்டு சூர்யன் உபமானம் சொல்ல
சொல்ல மாட்டேன் அடியேன் –எல்லையில் சீர் ஞாயிறு இரண்டு போலே -காஞ்சி ஸ்வாமி
திரு முடி உடன் சேவிக்க ஆசை
முக்தனாய் சென்றால்
தாப ஹராமாக -சம்சாரி -போகும் படி
திருக் குழலை பேணும் அத்தனை
எம்பெருமான் தலை தடவி கொடுப்பானாம் –
அவனுக்கு செய்வது
அவன் திருக் குழல் பார்த்து தாபம் தீர்க்கலாமே
நரகம் வாட்டி இருக்க யமனே கஷ்டப் பட்டு கேசவ கிலேச நாச -ஒரு தடவை  கூட சொல்ல வில்லையே
யமனே பரிபாஷித கேட்க்கப் பட்டான் –

———————————————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading