திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-9-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

ஆமுதல் வன்இவன் என்றுதன் தேற்றிஎன்
நாமுதல் வத்து புகுந்துநல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்னஎன்
வாய்முதல் அப்பனை என்று மறப்பனோ!

பொ-ரை : ‘கவி பாடுகைக்கு முதல்வன் ஆவான் இவன் என்று தன்னை நான் தெளியும்படி செய்து, முதலிலே என் நாவிலே வந்து புகுந்து நல்ல இனிய கவிகளை. முதன்மை பெற்ற பரிசுத்தரான அடியார்கட்குத் தானே தன்னைச் சொன்ன என் வாக்கிற்குக் காரணனான அப்பனை இனி ஒருநாளும் மறக்க உபாயம் இல்லை,’ என்றபடி.

வி – கு : ‘இவன் ஆம் முதல்வன் என்று தன் தேற்றி, வந்து புகுந்து, இன் கவி பத்தர்க்குச் சொன்ன வாய் முதல் அப்பன்? என்க.

ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘கைம்மாறு செய்யாதொழியவுமாம் கண்டீர், நான் மறந்து பிழைக்கப் பெற்றானாகில்!’ என்கிறார்.

ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி-‘முதல்வன் ஆம் இவன்,’ என்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு உண்டாம் படியாகச் செய்து: என்றது, ‘காரண வாக்கியங்களில் உபாசிக்கத் தக்கவனாகச் சொல்லப்படுகிறான் தானே என்று தன் பக்கலிலே நான் தெளியச்செய்து,’ என்றபடி. அன்றிக்கே, ‘பரமபதத்தைப் போன்று, சம்சாரத்தையும் திருத்த நினைத்தோம். அதற்கு அடி ஆம் இவன், என்று என்பக்கலிலே தன் சொரூபம் முதலானவைகளைத் தெளியச் செய்து என்னுதல். 2இங்கே அருளிச்செய்யும் வார்த்தை: ‘திருப்புற்றுக்குக் கிழக்கே கரியமாணிக்காழ்வார் திருமுன்பின் படிக் கட்டிலிலே ஆளவந்தார் எழுந்தருளியிருக்க, உடையவர்திருப்புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கிறவரைக் கண்டு, ‘ஆம் முதல்வன் இவன்’ என்று அருளிச்செய்தாராம்’ என்பது. என் நா முதல் வந்து புகுந்து – 1சர்வேஸ்வரன் பிரமனுக்குத் திருவருள் செய்ய, அவன் பின்னர் 2‘முனிவரே! இந்தச் சரஸ்வதியானது என்னுடைய அருளாலேயே உமக்கு உண்டாயிற்று; நீர் இராமசரிதம் முழுதினையும் செய்யும்,’ என்கிறபடியே

மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குரு த்வம் ரிஷிஸத்தம’-
என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 31

அவன் சரஸ்வதியை ஏவி, இப்படி நாலிரண்டு நிலை நின்றே அன்றோ ஸ்ரீவால்மீகி பகவானைப் பேசுவித்தது? அங்ஙனம் ஓர் இடையீடு இன்றிக்கே, என்னுடைய நாக்கிலே முற்பாடனாய் வந்து புகுந்து. அன்றிக்கே, 3‘என் நாவுக்கு அடியாய் வந்து புகுந்து’ என்னுதல்.

நல் இன் கவி – இலக்கணங்கள் எல்லாம் நிறைந்தவனாய், அந்த இலக்கணங்கள் கிடக்கச்செய்தே, சொல்லில் இனிமை தானே கவர்ச்சிகரமாம்பாடி இனியவான கவிகளை. தூ முதல் பத்தர்க்கு – சம்சார சம்பந்தம் சிறிதும் இல்லாத நித்தியசூரிகளுக்கு, 4‘கேட்டு ஆரார் வானவர்கள்’  திருவாய். 10. 7 : 11.-என்கிறபடியே அவர்கள் கொண்டாடும்படி சொன்ன. அன்றிக்கே, ‘சம்சாரத்திலே தலை நின்ற முழுக்ஷூக்களுக்கு’ என்னுதல். தான் தன்னைச் சொன்ன -தானே சொல்லுதல், நானே ஒருபடி சொல்லுதல் செய்கை அன்றிக்கே, என் நா முதல் வந்து புகுந்து தான் தன்னைச் சொன்னான் ஆயிற்று. என் வாய் முதல் அப்பனை -எனக்கு வாயத்த காரணனான மஹோபகாரகளை. அன்றிக்கே, ‘என் நா முதல்’ என்றதுதன்னையே பின் மொழிந்து, ‘என் வாக்குக்கு முதலான அப்பனை’ என்கிறார்.என்னுதல். என்று மறப்பேனோ – 1‘முன்பு அநாதி காலம் மறந்து போந்ததாகில் இனிமேல் நினைக்கைக்குக் காரணமான காலத்தை எல்லாம் மறக்கைக்கு உடலாக்கினால்தான் மறப்பனோ?’ என்றது, ‘முன்பு நினைக்கையில் உள்ள அருமையோபாதியும் போரும் இனி மறக்கையில் உள்ள அருகையும்: இனி ஏதேனும் ஒரு நாள் தான் என்னாலே மறக்கப்போமோ?’ என்றபடி.

பிரத்யுபகாரம்
செய்து அருளின உபகாரம் மறக்க முடியாதே

மறந்து பிழைக்கப் பெற்றோம் ஆகில் பிரத் யுபகாரம் செய்ய வேண்டாமே
தன்னை தேறும் படி பண்ணி
நாவில் புகுந்து
நல்ல இனிய கவிகளை தூ முதல் பத்தர்களுக்கு
தான் தன்னை சொன்ன வாய் முதல் அப்பன்
வாய்த்த உபகாரகன்
வாயில் இருந்த உபகரிதவன்
முதல்வனாம் இவன் என்று தன பக்கலிலே தெளிவு அடையும்படி பண்ணி
இவன் முதல்வனாம் -இவரே சரி என்று
இதனை இவன் முடிக்கும் என்று அதை அவன் கண் விட -வள்ளுவர்
தன தேற்றி தெளிவு உண்டாகும்படி
காரண வஸ்து தானே என்று தெளியும்படி பண்ணி
காரண வஸ்துவை த்யானிக்க வேதம் சொல்ல
பரமபத்ததோ பா தி சம்சாரத்தை திருத்த நினைத்தோம் -அதுக்கு இவன் முதல்வனாம் -அடுத்த அர்த்தம்
எம்பெருமான் தான் முதல்வனாம் தெள்வு தான் அறிந்து கொள்ளும் படி -முதல் அர்த்தம்
ஒன்றும் தேவும் –உயிர் படைத்தான் ‘உயர்வற உயர் நலம்
உடையவன் போன்ற பாசுரங்கள் அருளும் படி

சஜாதீயரை கொண்டு திருத்த -கடாஷம்
பள்ள மடை யாகையால் தெற்கே விழுந்தது –
ஆ முதல்வன் இவன் என்று -ஆழ்வார் மேலே –
கரிய மாணிக்க ஆழ்வார் சந்நிதி இலே திரு முன்பே பின் சோபானத்திலே படியிலே
ஆளவந்தார் எழுந்து அருளி நிற்க
திரு புற்றுக்கு கிழக்காக உடையவர் இருக்க
கடாஷிதது போலே –
அரச மரம் -அபிஷேக மண்டபம் அத்யயன உத்சவ மண்டபம் ராமர் மேடு என்பர்
திரு புற்று இதை சொல்லி –
மடப்பள்ளி பிரதட்சிணம் போகும் பொழுது
இளைய ஆழ்வார் -சிவந்த ஆஜானுபாஹு
பவிஷ்யத் ஆசார்ய விக்ரகம் த்யானத்தில் கண்டு முதல்வனாம்
சரம உபாய நிர்ணயம்
ஆம் முதல்வன் இவன் -என்று அருளிச் செய்தாராம்
ஆளவந்தார் திரு பேரனார் திருமலை நம்பி என்பர் சிலர்
அடையாளம் காட்ட திரு கச்சி நம்பி இடம் கேட்ட
கொள்ளுப் பேரன் கேட்க வேண்டுமா சங்கை
சரஸ்வதியை ஏவி ப்ரஹ்மா வால்மீகி நாவில்
மச்சந்தா தேவ -இயம் சரஸ்வதி –
நாலிரண்டு நிலையில் வழி வழி
இடையீறு இன்று நேராக முற்பாடனாக புகுந்து
அங்கே சத்வாகரகம்
இங்கே அத்வாரகம்
என் நா முதல் வந்து
முதல் அடியாய் விஷய பூதனாய்
சொல்லில் இனிமை எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே
தூ முதல் பத்தல் –
பத்தர்
முதல் பத்தர் முக்தர்
தூ முதல் பத்தர் -நித்யர் -அச்ப்ருஷ்ட சம்சாகர கந்தர் நித்ய சூரிகள்
கேட்டு ஆரார வானவர்கள்
கொண்டாடும் படி
சம்சாரத்தில் நிலையான முமுஷுக்கள்
அனைவருக்கும் திருவாய்மொழி
மரங்களும் இரங்கும் வகை

எனக்கு வாய்த்த காரண பூதனன்-மகா உபாகரகன் – வாய் முதல் அப்பன்
வாயில் நுனியில் இருந்து உபகரிதவன்
இனி மறப்பேனோ
அவனே மறக்க பண்ண முயன்றாலும் முடியாதே
முன்பு நினைக்கையில் அருமை போலே இனி மறக்கையில் அருமையும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading