திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-8-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

  என்ன இயற்கைக ளால்எங்ங
னேநின்றிட் டாய்என்கண்ணா!
துன்னு கரசர ணம்முத
லாகஎல் லாஉறுப்பும்
2உன்னு சுவைஒளி ஊறுஒலி
நாற்றம் முற்றும்நீயே
உன்னை உணர உறில்உலப்
பில்லை நுணுக்கங்களே.

பொ – ரை : ‘என் கண்ணா! எவ்வகையான இயற்கைகளோடு கூடி என்ன பிரகாரத்தால் நிற்கிறாய்? செறிந்திருக்கின்ற கை கால் முதலான எல்லா அவயவங்களும் நீயே; நினைக்கப்படுகின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படுகிற புலன்கள் முழுதும் நீயே; உன்னை அறியல் உற்றால் நுணுக்கங்கள் எல்லை இல்லாதவனாய் இருக்கின்றனு,’ என்க.

ஈடு : ஒன்பதாம் பாட்டு. 3ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஐம்புலன்களும் அவனுக்கு விபூதியாக இருக்கிற இருப்பை அருளிச்செய்கிறார்.

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா-என்ன தன்மைகளையுடையையாய்க்கொண்டு என்ன பிரகாரத்தாலே நிற்கிறாய்? எனக்குப் பவ்யனான கிருஷ்ணனே! துன்னு கர சரணமுதலாக எல்லா உறுப்பும் – நெருங்கி இருந்துள்ள கைகள் கால்கள் தொடக்கமான எல்லா அவயவங்களுக்கும்,1நினைக்கப்படுவனவாய் ஆசைப்படப்படுவனவாய் இருக்கின்ற ஐம்புலன்களுக்கு கடவையாய் இருந்தாய். உன்னை உணர உறில் – உன்னை அறியப்புகில். உலப்பு இல்லை 2நுணுக்கங்களே – உன் வைலக்ஷண்யங்களுக்கு முடிவு இல்லை, ‘நுண்பொருளாய் உள்ளவனை’ என்கிறபடியே, ‘அசித் வஸ்துவான சரீரத்தில் சூக்கும ரூபத்தாலே எங்கும் புக்குப் பரந்திருக்கும் ஆத்துமவஸ்து, இவ்விரண்டிலும் சூக்கும ரூபத்தோடு பரந்திருப்பாய் நீ’ என்றபடி.

‘நாராயணம் அஸேஷாணாம் அணியாம்ஸம் அணீயஸாம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 8 : 40.


‘ப்ரஸாஸிதாரம் ஸர்வேஷாம் அணீயாம்ஸம் அணீயஸாம்’-
என்பது, மனு தர்மம், 1 : 22.

எங்கனே நின்ன்ட்டாய் இங்கு உண்டே
ஞான கர்ம இந்த்ரியங்கள் சப்தாதி விஷயங்களும் அவன் ஆதீனம் -விபூதி
நின்ன்ட்டாய் என்னை ஆளும் கண்ணா முந்திய பாசுரம்
எங்கனே நின்ன்ட்டாய் -6000/36000 படி
உன்னுடைய ஆகாரங்களை காட்டி அடிமை கொள்ளும் கிருஷ்ணன்
இரண்டு வ்யாக்யானங்கள் –
துன்னு நெருங்கிய கர சரணங்கள் முதலா -கர்ம இந்த்ரியம் நிர்வாஹகன்
சப்தாதி விஷயங்கள் -உண்ணு சுவை ஒளி ஊரு -ஸ்பர்சம் -ஒலி நாற்றம்
ஞா இந்த்ரியங்கள் முதலா சப்தம்
கடவனாய் இருக்க
உலப்பில் முடிவு இல்லாத
அசித் வஸ்துவை சூஷ்ம ரூபதயா-எங்கும் புக்கு வியாபித்து இருக்கும் ஆத்மவஸ்து -ஞானத்தால் -ஸ்வரூபத்தால் இல்லை
தூசி -ஒவ் ஒன்றிலும் ஆத்மாவஸ்து உண்டே –
அசேதனம் சேதனம் இரண்டிலும் -பரமாத்மா
வஸ்துக்கள் ஆக வ்யாப்தி உண்டே
அசெதனத்திலும் தனியான வ்யாப்தி உண்டாம் வஸ்துவாக இருக்க –
சரீரத்திலும் ஈஸ்வர வ்யாப்தி உண்டே -பிரேதம் நாமம் வர வேண்டுமே
இரண்டிலும் தனி தனியாக வ்யாப்தி உண்டு
வஸ்து என்றால் அவன் இருந்தே தீரும்
சூஷ்மம் நிரூபிக்க புகில் அறிய முடியாதே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply