திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-8-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

சித்திரத் தேர்வல வா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனை யோர்உக மும்அவை யாய்அவற் றுள்இயலும்
ஒத்தஒண் பல்பொருள் கள்உலப் பில்லன வாய்வியவாய்
1வித்தகத் தாய்நிற்றி நீஇவை என்ன விடமங்களே!

    பொ-ரை : ‘அழகிய தேரை நடத்தியவனே! அழகிய சக்கரத்தையுடையவனே! யுகங்கள் அவையுமாகி, அவற்றுள் நடக்கின்ற ஒத்தனவாயும் ஒள்ளியவாயும் எல்லையில்லாதனவாயும் இருக்கின்றவாகிய பல பொருள்களாகியும் அவற்றின் வேறுபாடுகளாகியும் ஆச்சிரயப்படத்தக்கவனாய் நீ நிற்கின்றாய்; இவை என்ன வேறுபாடுகள்! அருளிச்செய்ய வேண்டும்,’ என்கிறார்.

வி – கு : ‘எத்தனையோர் உகம் அவையுமாய்’ எனப் பிரித்துக் கூட்டுக. ‘ஒத்த ஒண் உலப்பு இல்லன பல்பொருள்களாய்’ என்க. வியவு – வேறுபாடு, விடமம் – வேறுபாடு.

ஈடு : மூன்றாம் பாட்டு. 2‘கிருதயுகம் முதலான யுகங்களையும், அந்த அந்தக் காலங்களில் உண்டான தேவர் மனிதர் முதலான பொருள்களையும் விபூதியாகவுடையவன்,’ என்கிறார்.

சித்திரம் தேர் வலவா – விசித்திரமாம்படியாகத் தேரை நடத்த வல்லவனே! 3விசித்திரமாவது, துரோணன் கையும் அணியும் வகுத்து வாசலைப் பற்றி நிற்க, அவனை வளைந்து அவனுக்கு அவ்வருகே தேரைக் கொடுபோய் நிறுத்தி, அவன் போர் செய்தற்கு இடம் அறுத்தல். அன்றிக்கே, ‘வீடுமன் கையில் அம்பு தூரப்போய்விழும்; அருச்சுனன் கையில் அம்பு இவ்வருகே விழும்; ஆகையாலே, அவன் அம்பு விடப் புக்கவாறே தேரைப் பின்னே கழலக் கொடுபோயும், இவன் அம்பு விடப் புக்கவாறே தேரைக் கிட்ட நிறுத்தியும், இப்படித் தேரை நடத்தும்படியை நோக்கி’ என்னவுமாம். திருச்சக்கரத்தாய் – 1பகலை இரவாக்கும் பரிகரத்தையுடையவனே! எத்தனையோ உலமுமவையாய் – கிருத்யுகம் முதலான யுகங்களுக்கெல்லாம் நிர்வாககனாய். அவற்றுள் இயலும் – அவற்றுக்குள்ளே வாழ்கிற. 2ஒத்த வியவாய் ஒண்பல் பொருள்கள் உலப்பில்லனவாய் – ஓர் ஆகாரத்தாலே ஒத்தும், வேறு ஆகாரத்தாலே வேறுபட்டும் இருப்பனவுமாய், விலட்சணமுமான பல வகைப்பட்ட பொருள்கள் பலவற்றையுடையையாய். என்றது, ‘தேவர் மனிதர் முதலிய சாதியாலே ஒத்தும், வடிவு வேறுபட்டாலே வேறுபட்டும் இருக்கிற பல பொருள்களுமாய்’ என்றபடி. அன்றிக்கே, எல்லா ஆத்துமாக்களும் ஞானத்தாலே ஒத்திருக்கச் செய்தேயும் நான் நீ முதலிய வேறுபாட்டாலே வேறுபட்டவர்களாய் இருப்பர்கள் அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி ஆகலுமாம். வித்தகத்தாய் நிற்றி நீ – இப்படி ஆச்சரியப்படத் தக்கவனாய்க் கொண்டு நில்லாநின்றான் நீ. இவை என்ன விடமங்களே – இவை ஏன்ன சேராச் சேர்த்தியான செயல்கள்தாம்?

யுகங்கள் -தேவ மனுஷ்யாதிகளை விபூதியாக கொண்டவன்
கிருத யுக தர்மம் வேற
சித்திர தேர் வலவா-
விசித்ரமான -தேரை நடத்தி –
துரோணர் -வியூகம் வகுத்து -நுழைய இடம் இல்லாமல்
சாரதி சாமர்த்தியம்
பீஷ்மர் கையில் அம்பு தூரப் போகும்
அர்ஜுனன் அம்பு கிட்டே வரும்படி தேரை நகற்றி
பின்னும் முன்னும் நடத்தி –
திருச் சக்கரத்தை
பகலை இரவாக்கும் பரிகரம் கொண்டவன்
கிருதாதி யுகங்களுக்கு நிர்வாஹகன்
அவற்றுள் இயலும் -ஒத்த ஒண் பொருள்கள் வியவாய் -பலவாய்
ஓர் ஆகாரத்தால் ஒத்தும் வேறு ஆகாரத்தால் வேறு பட்டும்
மனுஷ்யர் -ஒத்தும் -ஒருவருக்கு ஒருவர் வாசி
வசிஷ்டர் சண்டாளர் வேறுபாடு உண்டே
ஞாந ஏக தயா ஒத்து இருக்க செய்தேயும் –
அஹம் புத்தி வேறு பாடு உண்டே
உலப்பில் -முடிவு இன்றி எண்ணிக்கை பல
வித்தகத்தாய் ஆச்சர்யமாக
வித்தகத்தால் -12000 படி/20000 படி – பாடம் பிரகாரத்தால் நில்லா நின்றாய் –
விஷமம் சேரா சேர்த்தி –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading