வாட மருதிடை பிரவேசம்
கிருஷ்ண அவதாராதிகளில் இழவு தீர திருச் சித்ர கூடத்தில் வந்து சந்நிஹிதனானான் –
எல்லோரும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –
(கீழே ராம கிருஷ்ண அவதார அபதானங்களை ஆச்ரயணத்துக்கு உறுப்பாக இங்கே வந்து சேவிக்க
அவதாரங்களுக்குப் பிரதியாக இங்கே இருக்க
விபவத்தில் நெஞ்சு சென்று -விரோதி நிரசன சீலத்தையை பஹு முகமாக அருளிச் செய்து -நம் பிரதிபந்தகங்களையும்
சேவிக்க முடியால் பிற்காலத்தவராய் இருக்கும் இழவும் தீர
அவனே இங்கு உள்ளான் என்று நம் நெஞ்சில் படும்படி அருளிச் செய்கிறார்
கிருஷ்ணாதி -ராமாவதாரமும் நரசிம்ம அவதாரமும் )
————————————————–
வாட மருதிடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நன் மா வுடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-
ஒக்கலித்திட்டு = நடை பழகினதாய்
நன் மா -விபரீத லக்ஷணை –
சேடு -இளகிப் பதித்தாய்
ஆசுர ஆவேசத்தாலே வந்த மருது ஆகையாலே இவன் கிட்ட கிட்ட அவை வாட
மருதின் நடுவே போய்
சாணூர முஷ்டிகரை நிரசித்து-( மல்லரை மாட்டிய தேவாதி தேவன் )
ஆவாலம் கொட்டி -ஆவாலம் கொட்டுகை-குதிரை நடை பழகுகைக்கு கொட்டுகை –
ஆடல் – தன் சஞ்சாரத்திலே இவன் அந்ய பரனாம்படி ஆடிக் கொண்டு வந்து தோற்றின கேசியைக் கொன்று –
இடையர் உடைய பசு நிரைக்கு அன்று இடர் தீர்க்கைக்காக
இந்த்ரன் பிரேரித்த புஷ்கலா வர்த்தகாதி மேகங்கள் எல்லாம் கூடி
வர்ஷித்த பெரு மழையைக் காத்த மநோஹாரி சேஷ்டிதத்தை உடையவன்-(கூத்தன் கோவலன் )
( அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தான் )
என்று எல்லாரும் சொல்ல வருகிறவன்
சேடு -இளமையும் திரட்சியும்-( அவனுக்குத் தக்கபடி )
——————————————————
கோவர்த்தன உத்தரணாதி அதி மானுஷ சேஷ்டிதங்களை செய்தவனே இங்கு உள்ளான் என்று எப்படி அறிந்தீர் என்று கேட்க
ஸ்ரீ யபதி என்று இடையர்கள் அறிந்தார்கள் -ஆயர் புத்ரன் அல்லன் அரும் தெய்வம் -அன்றோ
ப்ரேமம் உள்ளாருக்கு அவன் தன்னை மறைத்துக் கொண்டாலும் அறிவார்கள் போல் நீங்களும் அறியலாம் என்கிறார்
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இது வென்றால்
மா நில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டுண்
பூ மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி
தே மலர் தூவ வருவான் சித்திர கூடத்து உள்ளானே —3-3-2-
மா நில–50 கோடி யோஜனை தூரம் பதினான்கு லோகங்கள்
நாயகன் -பதி-உரிமைக் கணவன்
கேள்வன் -வல்லபன் -ஆசைக் காதலன்
பிள்ளை உடைய படி –
(பிள்ளை உடைய செயல் என்று ஒரு கோஷ்ட்டி
பிள்ளை யுடைய படி
பிள்ளை உடைய படியே -மானுஷ்யமான படி
பிள்ளை வேஷம் போல் அவளும் வேஷம் போட்டுக் கொண்டு வந்தாள் –
பேய் மனுஷ்யம் வேஷம் கொண்டதும் அது த்ருஷ்டாந்தம் )
பேயாய் வந்த ஸ்திரீயினுடைய முலையில் நஞ்சை உண்டது ஆச்சர்யமான செயல் என்றால்
இவன் கேவலம் பிள்ளை அல்லன்
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வல்லபன்
பெரிய பிராட்டியாருக்கு நாயகன்
என்று நாட்டார்-கண்டார் – உடைய இந்திரியங்களைப் பிணைக்கும் வடிவை உடைய
இடைப் பெண்கள் பாடி செவ்வைப் பூவைத் தூவ வருமவன்
பொலன் கெழு கோவியர் -என்ற பாடம் ஆன பொழுது
பொன்னாலே செய்த ஆபரணத்தை உடைய கோவியர் என்னவுமாம்-
———————————————————-
கட்டுண்ட பொழுதே பரத்வம் தெரிய நடந்தவன்
பேய் முலை -இத்யாதி மேன்மை பேசினாலும்
வெண்ணெய் உண்டான் என்று ஏசினார்களும் உண்டே என்றால்
கட்டுண்டே பொழுதே விரோதிகளை போக்கினவன் என்று தேவராலும் இடையராலும் ஸ்துதிக்கப் பட்டவன்
என்று நம் நெஞ்சில் உரைக்கும் படி அருளிச் செய்கிறார்
பண்டு இவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
எண் திசையோரும் வணங்க இணை மருதூடு நடந்திட்டு
அண்டரும் வானத்தவரும் ஆயிர நாமங்களோடு
திண் திறல் பாட வருவான் சித்திர கூடத்து உள்ளானே–3-3-3-
இழிப்ப -ஏச
அழைக்க –பாட பேதம்
அண்டரும்-நித்யர்களும் இடையர்களும் –
இவன் வெண்ணெய் உண்டான் என்று இடைப் பெண்கள் கூடி ஏச
எட்டுத் திக்கில் உள்ளாறும் திருவடிகளிலே வணங்கும்படியாக
நிர்விகாரமான மருதின் உள்ளிட்டுப் போய்
இடையர்களும் தேவர்களுமாய் ஆயிரம் திரு நாமங்களை சொல்லிக் கொண்டு
தன்னுடைய ஆண் பிள்ளைத் தனத்தை பண்டு பாட வருவான்-
———————————————————-
மாருதி இருத்த அளவு அன்றிக்கே
பாம்பின் படத்திலே தானே போய் நடமாடிய வ்ருத்தாந்தத்தாலும் இவனே பராத்பரன் என்று இருப்பார்கள்
பூத்த கதம்பம் ஏறி காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து -1000 தலைகள் -ஒற்றைப்படை -இரட்டைப்படை –
தலைகளில் ஆடி நாட்டியம் ஆடினான் -போர் களமாக ந்ருத்தம் செய்தானே
காளியன் பத்தினிகள் சரண் அடைய கொல்லாமல் விட்டானே –
வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட
திளைத்தமர் செய்து வருவான் சித்திர கூடததுள்ளானே–3-3-4-
தளைத்தவிழ்-தளை அத்து அவிழ் -அத்து சரிகை -தளை அவிழ்-கட்டு அவிழ்கிற
வளையாலே அலங்க்ருதமான கையையும்
பீதைகளாய் பார்க்கும் நோக்கையும் உடைய இடைப் பெண்கள் அஞ்சிக் கூப்பிட
கட்டவிழ்ந்து அலர்ந்த தாமரைப் பொய்கையினுடைய ஸ்ரமஹரமான கரையிலே சென்று
இடையர் காண முளைத்த எயிற்றை உடைய பாம்பின் உடைய உச்சியிலே புக்கு நின்று
அது வாடும்படி கூட விளையாடி அமர் செய்து வருமவன்-
—————————————————————
அதி மானுஷ சேஷ்டிதங்கள் கீழே நான்கு பாசுரங்கள்
பராத்பரன் -என்று காட்டி அருளிய பின்பு
இனி மேல் பாட்டுக்களில் நப்பின்னை பிராட்டி அடைய விரோதிகளை போக்கி உதவியது போல்
நமக்கும் பிரதிபந்தகங்கள் போக்கி அருளுவான் என்கிறார் அடுத்த நான்கு பாசுரங்களால்
பருவக் கரு முகில் ஒத்து முத்துடை மா கடல் ஒத்து
அருவித் திரள திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை யொத்து
உருவக் கரும் குழல் ஆய்ச்சி திறத்து இனமால் விடை செற்று
தெருவில் திளைத்து வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-5-
பருவக் கரு முகில் ஒத்து-வடிவு அழகால் சாம்யம்
முத்துடை மா கடல் ஒத்து-குணங்களால் சாம்யமும் -குண சாகரம் –
அருவித் திரள திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை யொத்து–ரத்ன மயமான மலை -ஆபரண பூஷிதை –
மூன்றையும் சொன்னவாறு
வர்ஷூக வலாஹம் போலேயும்
முத்துடைய பெரும் கடலே போலேயும்
அருவித் திரள் களாலே விளங்கா நின்றுள்ள
ஆயிரம் பொன் மலை போலேயாயுமாய்
அழகிய வடிவையும்
கறுத்த திருக் குழலையும் உடைய நப்பினை பிராட்டி யிடையாட்டத்துக்காக
திரண்டு பெருமையை உடைய ருஷபங்களைக் கொன்று
தன் பருவத்தில் பிள்ளைகளோடே தெருவிலே கூடி விளையாடி வருமவன்
– ——————————————————–
பிராட்டிக்கு பசுக்களுக்கும் உதவியது போல் நமக்கும் உதவுவான் என்கிறார்
பசு மேய்க்கும் பிள்ளை தானே
பிராட்டிக்குத் தான் உதவுவான்
என்று சொல்லி விலகாமல் நாமும் பற்ற அருளிச் செய்கிறார்
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான்
உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே
தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-6-
வையத் தேவர் – பூ ஸூரர் –
வையத்து எவரும் பாட பேதம்
சாத்விகரும் -அனைவரும் என்றபடி
இவன் பண்டு எய்ய இலங்கை அழிந்தது
(மூன்றே பதங்களால் ஸ்ரீ ராமாயணம் -கிள்ளிக் களைந்தான் போல் )
பசுக்களும் இடையரும் மலங்கும்படியாக வருகிற மழையைக் காக்கைக்காக
அவை உய்யும்படிக்கு ஈடாக பெரிய மலையை எடுத்துக் காத்தான் என்று
ஏத்தி பூமியில் உள்ளார் எல்லாரும் ஆஸ்ரயிக்க
தேவா விஷ்டமான மலை போலே பெரிய திருவடி மேலே ஏறி வருமவன்-
———————————————————–
ஆ நிரை காத்த அளவு மட்டும் இல்லாமல்
வடமதுரைப் பெண்களுக்கு களிறு தரு புணர்ச்சி கொடுத்தவன் உங்களுக்கு உதவுவான்
பூ தரு புணர்ச்சி
களிறு தரு புணர்ச்சி
புனல் தரு புணர்ச்சி -மூன்றும் உண்டே
இது லௌகிக பெண்கள்
வைதீகத்தில் அவன் பூ சூட நாம் நம்மை சமர்ப்பிப்போம்
ஆவர் இவை செய்தறியார் அஞ்சன மா மலை போலே
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய
காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான்
தேவர் வணங்கு தண் தில்லைத் சித்திர கூடத்துள்ளானே–3-3-7-
ஆவர் இவை செய்தறியார்-ஆனைத்தொழில்கள் சேஷ்டிதங்கள் செய்வது அறிவார் யார்
அஞ்சன மலை -விசேஷணம் யானைக்கும் கண்ணனுக்கும் வேழப் போதகம் அன்னவன் அன்றோ
ஆவர் இவை செய்தறியார்
எவர் இவை செய்வது அறிவார்
இப்படிப்பட்ட -ஜென்ம கர்ம மே திவ்யம்
அறிவார் இல்லை ஆழ்வார் நொந்து எத்தனை உபதேசித்தாலும் திருத்துவார் இல்லையே
அன்றிக்கே
ஆஸ்ரிதற்காக இப்படி செயல்களை செய்தவர் யார் இல்லை
அன்றிக்கே
மதுரைப் பெண்கள் ஈடுபாடாய் -கை கூப்பிச் சொன்ன படி
பெரிய தொரு அஞ்சன கிரி போலே ஸ்வா பாவிகமான சினத்தை உடைத்தாய்
யுத்த உந்முகமான ஆனைக் குட்டிச் சுவர் போலே விழும்படி சீறி
தர்சநீயங்களாய் காவி மலர் போலே கறுத்து நெடிய கண்ணை உடைய ஸ்திரீகள்
கை தொழும்படி வீதியிலே வருமவன் தேவர்கள் ஆஸ்ரயிக்கும் தில்லைச் சித்திர கூடத்துள்ளானே-
————————————————————————
திருத்துவார் ஒருவரும் இல்லை என்கிற பக்ஷத்தில்
கிருபா அதிசயத்தால் விலகிப் போவார் எல்லாரும் ஹிரண்யன் பட்டது படுவார் என்கிறார் இதில்
மற்ற பக்ஷங்களில்
பெண்களுக்கு உதவினவன் அன்றிக்கே அஸுர சிறுவனுக்கு உதவினவன் நமக்கும் உதவுவான் என்கிறார் –
பொங்கி அமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ
அங்கு அவனாகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்தாட
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றோடு பேழ் வாய்
சிங்க வுருவின் வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-8-
யுத்தத்திலே பண்டு ஒருகால் ஹிரண்யனை வெருவும்படி சீறி
அவ்விடத்திலேயே அவனுடைய உடம்பை அளைந்து
ஆயிரம் தோள் தோற்ற வ்யாபரித்த
ஜாதி உசிதமாக எரி கான்ற பசுமையை உடைய கண்ணும்
நீண்ட எயிறும் பெரிய வாயும் ஆன சிம்ஹ ரூபத்தை உடையவனாய் வருமவன்
பொங்குகை மிகுதி- –
—————————————————————-
மிடுக்கை ஆஸ்ரயண உபயுக்தமாக சொல்லி
காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு
ஆயுத சேர்க்கை
பிராட்டிமார் சேர்க்கை
துர்மானிகளான ப்ரஹ்மாதிகளும் வணங்க
நீங்கள் வணங்காமல் இருக்கலாமோ
கருமுகில் போல்வது ஓர் மேனி கையன் ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ ஏழுலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்
திருமகளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-9-
கண்ணனை சொல்வதால் இங்கே நீளா தேவி முதல்
மற்றை திரு மகள் கடைசியில்
காளமேகம் போலே இருக்கும் வடிவையும்
கையில் திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையனாய்
பெரிய மிடுக்கை உடைய ப்ரஹ்மாதிகள் சூழ்ந்து
சேவிக்க
சப்த லோகத்தில் உள்ளாறும் திருவடிகளில் விழுந்து ஏத்த
பிராட்டிமார் மூவரோடும் கூட வருமவன்-
—————————————————
தேனமர் பூம் பொழில் தில்லைச் சித்திர கூடம் அமர்ந்த
வானவர் தங்கள் பிரானை மங்கையர் கோன் மருவார்
ஊனமர் வேல் கலி கன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்
தானிவை கற்று வல்லார் மேல் சாரா தீ வினை தானே–3-3-10-
தேன் -வண்டுகள்
வானவர் -கீழே -ப்ரஹ்மாதிகள் -துர்மானிகள்
இங்கு வானவர் -நித்ய முக்தர்கள் -அயர்வரும் அமரர்கள்
தங்கள் பிரான் -அசாதாரணமாக அருளிச் செய்வதால்
ப்ரஹ்மாதிகளுக்கு பிரான் என்றால் பெருமை சேராதே அவனுக்கு –
அமரர்களுக்கு எய்தாத அண்டத்து இருப்பது கீழே பலன்
ஸ்வரூபம் -ப்ராப்ய கோடி கடிதரான நித்ய ஸூரிகளாகவே வேண்டும்
வண்டுகள் படிந்து பூத்த பொழிலை உடைய
தில்லையில் சித்திர கூடத்தில் அமர்ந்த
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
திருமங்கைக்கு குரவராய்
சத்ருக்கள் சரீரமே தனக்கு உறையாக உடைய
வேலை உடைய ஆழ்வார் அருளிச் செய்த
அழகிய தமிழான இப்பத்தும்
அப்யசித்தவர்கள் பக்கலில்
அவர்கள் பண்ணின பாபம்
பல அனுபவத்துக்கு சாரா-
————-
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
வாட வேழம் மல்லர் அரவம் மருதம் மால் விடை
பாடு அழித்துப் பிள்ளை பிள்ளைக்கு அளித்தது -ஈடா நாம்
எண்ணிய செய்யும் சித்திர கூடத்தான் என் நீலன்
ஒண் கழல்கள் உன்னும் ஒருங்கு -23-
பிள்ளை-அவன் பிள்ளை ப்ரஹ்லாதன் /பின்னை -நப்பின்னைப்பிராட்டி
மருதம் -அசுராவேச நள கூபரன் -மணிக்ரீவன் –காமம் க்ரோதாதி இரட்டைகள்
உன்னும் -உள்ளுதல் -நினைத்தால் -/ ஒருங்கு முழுவதும் /
மால் விடை ஏறு ஏழும்-காமம் க்ரோதம் -லோபம் -மோஹம்–மதம் –மாத்சர்யம் -அஸூயை /
வருவான் -என்று ஒன்பதில் கால் பதிகத்தில் அருளிச் செய்தது -வீதியில் எழுந்து அருளும் போது
மங்களா சாசனம் செய்தமை தோற்றும் –
—————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply