ராக்ஷசர் -அரசன் பணிந்த –2-9
உபாயாந்தர உபாசகர் ஆஸ்ரயிக்க –2-10-
அநன்ய உபாயாந்தர அநன்ய ப்ரயோஜனர் இதில்
தேவதாந்த்ர அந்தர்யாமியாக இல்லாமல் தன்னையே நேராகப் பற்றுமவர்கள் இதில்
பிரவேசம் –
அவ்வோ நிலங்களுக்கு சிறப்பானவற்றை இட்டுச் சொல்ல கடவர்கள் ஆயிற்று கவிகள் ஆனவர்கள் –
அப்படி அன்றிக்கே
யதாபூதவாதிகளான ஆழ்வார்கள் உகந்து அருளின நிலங்கள் விஷயமாகச் சொல்லுமவற்றில்
நாம் கண்டு காணாதவை கொள்ளும்படி எங்கனே என்றால்
அவர்கள் உடைய பிரேமத்துக்கு அவதி இல்லாமையைக் கொள்ளும் இத்தனை –
தன் புத்திரன் விரூபமாய் இருக்கச் செய்தேயும் அல்லாதவர்கள் உடைய புத்ராதிகளில் காட்டிலும்
ரூபவானாய் தோற்றும் இறே பிரேமத்தால் –
அப்படியே இவர்கள் உகப்புக்கு அவதி இல்லாமையாலும்
சொன்ன ஏற்றம் எல்லாம் பொறுக்கும்படி சர்வேஸ்வரன் விஷயமாக சொல்லுகையாலும்
இப்படி ஆகையில் ஒரு தட்டில்லை –
காரணமான பிரேமத்துக்கு ஒரு அவதி இல்லாமையாலே அதின் கார்யமாய் வருமவை
எல்லாம் உண்டாகைக்கு ஒரு குறை இல்லை இறே –
ரஜோ குண பிரசுரனான பல்லவனும் கூட பரமேச்சுவர விண்ணகரிலே ஆஸ்ரயிக்கலாம்படி
சந்நிஹிதனான படியை அனுசந்தித்தார் -2-9-
அங்கன் அன்றிக்கே
சத்வ நிஷ்டராய் சர்வ சாஸ்திரம் உசிதமானவர்களை பகவத் சமாராதான புத்த்யா மாறாதே அனுஷ்டிக்கும்
பிராமணர்க்கு உபாச்யனாய்க் கொண்டு திருக் கோவலூரிலே வந்து சந்நிஹிதனாபடியை அனுசந்தித்தார் -2-10-
தேவர்களுக்கு அந்தர்யாமி என்கிற புத்தி விசேஷத்தைப் பண்ணி அவ்வோ முகங்களாலே ஆஸ்ரயிக்கை அன்றிக்கே
அவன் தன்னையே ஆஸ்ரயிக்கும் அனுகூலர்களுக்காக
லோகத்துக்கு காதாசித்தமாக உண்டாகும் பிரளயத்தை போக்கி நோக்குமா போலேயும்
நித்ய ஸூரிகளுக்கு சதா தர்சனம் பண்ணுகைக்கு தன்னைக் கொடுத்து கொண்டு இருக்குமா போலேயும்
அபரிச்சின்னனான தன்னை இவன் இவ்வளவில் உள்ளான் என்று இவர்களுக்கு பரிச்சேதித்து பிரதிபத்தி பண்ணலாம் படி
தனக்கு உள்ளது அடைய இவர்களுக்கு காட்டிக் கொடுத்து கொடு நிற்கிற இடம் ஆகையாலே
அவ்விடத்தை பிராப்யம் என்று புத்தி பண்ணி அத்தை பேசி அனுபவிக்கிறார்.
இத் திரு மொழிக்கு உயிர் பாட்டு –வையம் ஏழும் உண்டு -பாசுரம் என்பர்
அடியவர்க்கு மெய்யனான தெய்வ நாயகன்-தாச சத்யன் –
(திருப்பதிகளுக்கு சிறப்பான குணங்களை அருளிச் செய்வதற்கு காரணம்
ப்ரேமத்தால் அருளிச் செய்வது
அனுகூலருக்கு முகம் கொடுக்கும் பொழுது இவர்களுடன் சேர்ந்து அனுபவிக்க அவனும் த்வரிக்கிறான்
வண்டுகள் சோலைகள் குரங்குகள் இவை எல்லாம் ஸ்வாபதேசத்தில்
பாகவதர்கள் என்று திரு உள்ளம் பற்றி அருளிச் செய்கிறார் )
– ——————————————————-
இரும் தண் மாநிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நன் மலர்த் தேறல்
அருந்த இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே–3-1-1-
இரும் தண் மாநிலம்
மா நிலம் என்று பூமிப் பரப்பைச் சொல்லுகையாலே –
தட்பத்தாலே போக்ய போக உபகரண போக ஸ்தான பிரசுரமாய் இருக்கும்படியாய்
இருமையால் –அதில் பெருமையாய் கிடக்கிறது –
இத்தை பிரளயம் கொண்ட இடத்தில் சேதனருக்கு உறுப்பாகாத ஆகாரமே ஆயிற்று திரு உள்ளத்தில் பட்டுக் கிடக்கிறது
ஏனமதாய் -வளை மருப்பினில் அகத்தொடுக்கி –
கார்யம் தெரிந்தவாறே தன்னை அழிய மாறினான்
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராஹ விக்ரஹத்தைப் பரிகரித்தான்
வளைந்த கொம்பில் அகவாயில் ஏக தேசத்திலே அடக்கினான் –
இத்தால் ரஷ்யத்தின் அளவில்லாத ரஷகனுடைய பாரிப்பைச் சொன்னபடி
இது ஸூரஷிதம் என்று திரு உள்ளத்தில் பட்டவாறே-
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –
கடல்கள் தோறும் கண் வளர்ந்து அருளும் என்ற பிரசித்தி உண்டு –
அத்தாலே –
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -என்கிறபடியே சொல்லிற்றாகவுமாம்
அன்றிக்கே
திருப் பாற் கடல் தான் மகா வராஹத்தின் உடைய குளம்பிலே துகளாய்க் குழம்பி தன்னிறம் போயிற்று என்னவுமாம் –
அன்றிக்கே-
நஞ்சீயர் கருமை =பெருமை என்று கொண்டு பாற்கடலையே சொன்னவாறு
கமல நன் மலர்த் தேறல் அருந்தி இன்னிசை முரன்று எழும் அளி குலம்
தாமரையினுடைய செவ்வி பெறாத அலர்ந்த வில்ஷணமான புஷ்பங்களிலே
வண்டுகளானவை புக்கு மதுபானத்தைப் பண்ணும்
கழுத்தே கட்டளையாக மது பானத்தைப் பண்ணுகையால் உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே இனிய இசையை முரலா நிற்கும்
செவிப்பாடு உடைத்தாக ஆளத்தி வையா நிற்கும்
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே கொண்டு கிளர்ந்து எழுகிற வண்டுகளின் உடைய
சமூஹமானது தாமரையில் மதுபானம் பண்ணச் செய்தே
பின்னையும் சாபல அதிசயத்தாலே செருந்தியிலே-சுர புன்னையிலே – போய் மதுபானம் பண்ணுவதாக நினைத்து
அதின் தேன் வெள்ளத்தை அனுசந்தித்து கிண்ணகத்தில் இழிவார் கை கோத்து கொண்டு இழிய
ஆள் திரள் பார்த்து இருப்பாரைப் போலே-
பொதுளி அம் பொழிலூடே செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே –
பொதுளி -திரண்டு இருந்து உழி தரா நிற்கும்
தாமரைப் பூவில் மது ஆசையால் இழிந்து மதுபானம் பண்ணின வண்டினம்
செருந்தியில் மது வெள்ளத்தை அனுசந்தித்து
விசாரியாதே இழிந்து அகப்பட்டு கொடு நிற்குமது கார்யம் அல்ல என்று பார்த்து
கிண்ணகத்தில் இழிய அஞ்சி கரையிலே உலாவுவாரைப் போலே
செருந்திப் பூவைச் சென்று கிட்டி அதில் இழிய அஞ்சி கரையிலே நின்று
இதஸ்தயா சஞ்சரியா நிற்கும் ஆயிற்று
பொதுளி -செறிவு -பொழிலுக்கு விசேஷணம் ஆகவுமாம்-
செருந்தி நாட் பூ-சுர புன்னை பூ-
ஷட் பத-ஸ்ரீ த்வயம் – ஏக நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் தெய்வ நாயகன் திருவடி தாமரைகளில்
தேனைக் குறைவற உண்டு-ஆசையாலே-
ஆகையாலே நித்யஸூரி பரிஷத் கதனான வாஸூதேவ தருவின் பாத மலரில் தேனை புஜிக்க கோலி
சஞ்சரித்து கொண்டு இருப்பார்கள் என்று ஸ்வாபதேசம்
——————————————————–
ஆபந் நிவாகரனே ப்ராப்யம் என்றார் கீழே
சர்வ ஸ்மாத் பரன் – ஆகவே இவனே ப்ராப்யம் என்கிறார் இதில்
சர்வாதிக ஸூ ஸகத்வம் –திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்
ஸ்ரீ லஷ்மீ பதியாதல் வேதைக சமைதிகன் ஆதல்-மூன்றும்
அணைவது அரவணை பூம்பாவை இருவர் அவர் முதல்வனாம் மூன்றும் நம்மாழ்வார்
மின்னும் ஆழி அம் கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம் வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் தரு திருவயிந்தபுரமே–3-1-2-
மின்னும் ஆழி இத்யாதி –
சர்வேஸ்வர லஷணம் ஆகிறது –
திரு ஆழியைக் கையிலே சலியாதே பிடித்தல்
ஸ்ரீ லஷ்மீ பதியாதல்
வேதைக சமைதிகன் ஆதல்
இவை ஆயிற்று இவை மூன்றும் இங்கே உண்டு
மின்னும் ஆழி அம் கையவன்-
மேகத்திலே மின்னினால் போலே இருக்கிற திரு ஆழியைக் கையிலே உடையவன் –
செய்யவள் உறை தரு திரு மார்பன் –
அந்த மின் கொடி தான் பிரதேசாந்தரத்திலே தழுவினால் போலே ஆயிற்று
பெரிய பிராட்டியாரை திருமார்பில் உடையவனாய் இருக்கும்படி
தரு–உறைவதை தருகிறாள் என்றது -பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று
பன்னு நான்மறைப் பல் பொருளாகிய பரனிடம்-
பரந்து நாலுவகைப்பட்ட வேதத்தில் அவ்வோ இடங்கள் தோறும் சொல்லப்பட்ட பதார்த்தங்கள் அடங்க
தனக்கு சரீரதயா பிரகாரமாய் தான் ஒருவனே பிரகாரியாய் இருக்கையாலே சர்வ ஸ்மாத் பரனானவன்
வேதைச சர்வைஸ் ரஹமேவ வேத்யே-என்றான் இறே
ஹரீஸ் சதே அச்யேசாநா- வரை இத்யாதி –
பிராட்டியும் தானுமான சேர்த்தியிலே பிரணய கலஹம் மாறாதே செல்லுமா போலே ஆயிற்று
அங்குத்தை திர்யக்குகள் உடைய யாத்ரையும் –
மலையின் பர்யந்தத்தில் நெருங்கப் பட்டு இருந்துள்ள மாதவிப் பந்தலிலே மது பானம் பண்ண இழிந்த
வண்டுகளானவை-தன்னில் தானே பிரணய ரோஷத்தால் நீ நான் என்ன
அவ்வளவிலே பேடையானது இனி நீ ஜீவிக்கும் படி எல்லாம் நான் காண்கிறேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி
மாதவியிலே-குருக்கத்தி பூவில் – செறியப் பூத்த பூவிலே புக்கு ஒழித்தது –
அத்தை ஒழிய அரை ஷணம் ஜீவிக்க மாட்டாமையாலே
ந ஜீவேயம் – என்றும்
ந தம்சான் – என்று படும் இறே-சேவல் ஆண் வண்டு
அப்படி நோவு பட்டு எல்லா சாதனங்களையும் அனுஷ்டித்து-(தூது விடுதல் போல்வனவும் செய்து )
பல் பன்னிரண்டும் காட்டின இடத்திலும்
அதுக்குக் கேட்டதில்லை யாயிற்று
பதினாறும் என்று சொல்லாதது மந்த ஸ்மிதம் செய்தது என்று தோற்ற –
இனி செய்வது என் -என்று பார்த்து -கை கழிய போக மாட்டாது
நாம் படும் துயரம் மறைந்த இத்தனை நம் மிடற்றோசையாலே முகம் காட்டுவித்துக் கொள்வோம் என்று பார்த்து பின்னும்
மாதவிப் பந்தலில் பேடை வரப்பிணியவிழ் கமலத்து தென்ன வென்று வண்டு இன்னிசை முரல்-
அதிலே புக்க பேடையானது ஊடல் தீர்ந்து வந்து முகம் காட்டும்படி
அப்போது அலர்ந்த செவ்வித் தாமரையிலே போய் புக்கு
தென்ன தென்ன என்ற ஆளத்தி வைக்கத் துடங்கிற்று ஆயிற்று –
நக்குண்டார் நா வெழார் இறே -கிஞ்சித்காரம் பெற்றார்கள் குற்றம் சொல்ல மாட்டார்கள்
பாடப் பகை தீரும் -எனபது இறே
பேதை நெஞ்சறவற பாடும் பாட்டால் -திருவாய் மொழி -9-9-9-பகை தீர்ந்ததே –
(நைவளமும் ஆராயா நம்மை நோக்கா -நட்டப்பாடை பாடி நாணினார் போல் இறையே
நயங்கள் -பல் பன்னிரண்டும் காட்டியது )
——————————————————–
தாச சத்யன்-அடியவர்க்கு மெய்யன்
ஹயக்ரீவர் -ஒளஷதாதி மலை மேல்
லஷ்மி ஹயக்ரீவர் –74 படிக்கட்டுகள்
வேணு கோபாலன் கருடன் ஹயக்ரீவர் சேர்ந்து சேவை மலைக்கு மேல்
தலை எழுத்து மாற்றும் திருவடித் தாமரை துகள்கள்
மூவராகிய மூர்த்தி -தெய்வ நாயகன்
அஹீ -திருவானந்தாழ்வான் சேஷ தீர்த்தம் கருட தீர்த்தம் கடில நதி
புரட்டாசி சரவணம்
அச்யுத சதகம் -பிராக பாஷையிலும் உண்டே -கோபால விம்சதி ரகுவீர கத்யம் எல்லாம் இங்கே
சந்த்ர விமானம்
மாடத்தெருவில் மா முனிகள் -அழகிய சந்நிதி -உத்சவங்கள் பிரசித்தம் –
திவ்ய தேச பெருமாள் திரு நாமம் -அடியவர்க்குமெய்யனாகிய தெய்வ நாயகன் -சேஷத்வ ஞானம் கொண்டு
கைங்கர்யம் செய்பவர்களுக்கு தன்னை உள்ளபடி காட்டி அருளும் அமரர்கள் அதிபதி
கீழே மேன்மை -அகடி கடநா சாமர்த்தியம் இதில்
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வ நாயகனிடம் மெய் தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யம் கொடி யாட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே–3-1-3-
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன்
பூமிப் பரப்பு அடங்கலும் வயிற்றிலே எடுத்து வைத்து ஒரு பவனான ஆலம் தளிரிலே
கண் வளர்ந்து அருளின ஆச்சர்ய சக்தி உக்தன் –
அகடிதகடங்களைச் செய்தும் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமவன்-
அடியவர்க்கு மெய்யனாகிய –
காதாசித்கமாக லோகத்துக்கு வந்த பிரளயத்தை பரிஹரித்தாப் போலே அன்றிக்கே
தன்னை நித்ய அனுபவம் பண்ண வேணும் என்று இருப்பார்க்கு
அதுக்கு ஒரு ஷணம் விச்சேதம் வருகையாவது நித்ய பிரளயம் இறே
தனக்கு அசாதாரணமாய் இருப்பார்க்கு தன் படிகளை எல்லாம் இவனுக்கு உள்ளது இவ்வளவு என்று பரிசேதித்து
அனுபவிக்கலாம் படி வெளி இட்டுக் கொண்டு நிற்கிற-
இதுவும் அகடிதகடநா சாமர்த்தியம்-
தெய்வ நாயகனிடம்-
நித்ய ஸூரிகளுக்கு தன் படிகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு இருக்குமா போலே
இங்கு உள்ள ஆஸ்ரிதர்க்கும் தன்னை அனுபவிக்கலாம் படி கொடுத்துக் கொண்டு நிற்கிற விடம் –
அஹம் ஏவம் வித-ஞானம் த்ரஷ்ட்டும் இத்யாதி -ஸ்ரீ கீதை –11- என்றான் இறே
நான் பக்த்யைகலப்யன் -என்று அருளிச் செய்தார் இறே-
பரம் ப்ரஹ்ம பரம் தாம சாஸ்வதம் திவ்யம் ஆதி தேவன் விபு -ஸ்ரீ கீதை –10-12-என்று கேட்டு இருந்தபடியாலே
நீ ஒருவன் பக்திக்கு எளியவன் ஆவது என் என்ன
அஹம் மேம் வித – நாட்டில் பரிமாறுகிற படி கண்டு சொல்ல ஒண்ணாது காண்-
அவ்வோ வ்யக்திகளில் கண்டபடி சொல்ல வேணும் காண்
எனக்கு இதுவே பிரகாரம் என்றான் இறே–
(பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –எளிய பக்தியால் அடையலாம் -இது என்னுடைய ஸ்வபாவம்
பெருமை சொல்லி எளிமை ஸ்ரீ கீதையில்
இங்கேயோ எளிமை சொல்லி பரத்வம்
மாம் -அஹம் போலவே –
தெய்வ நாயகன் இடு சிகப்பு-அடியவர்க்கு மெய்யன் ஸ்வ பாவம் –
நெருப்பு சுடுவது போலவும் தண்ணீர் குளிர்வதாய் இருப்பது போலவும்)
மெய் தகு வரைச் சாரல்
மெய்க்கு தக்கதாய் இருக்கை –
மென்மை உடைத்தாய் இருக்கை –
இதர விசாஜாதீயமாய் இருந்துள்ள மலையில் -பர்யந்தத்திலே
மொய் கொள் மாதவி செண்பகம் முயங்கிய முல்லை யமகொடி யாட
மொய் என்று பலத்துக்கும் செறிவுக்கும் –பெயர்
இங்கு செறிவாய் நெருங்கி உள்ள குருக்கத்தியானது செண்பகத்தைச் சென்று கட்டிக் கொண்டது –
முல்லை நிலத்திலே அந்த கொடியானது காற்றாலே அசைய மருத நிலத்தில் உண்டான தாமரைகளில்
அலருமளவாய் நின்ற பூக்களானவை இக்கொடி அசைகிற காற்று பட்டு அலரா நிற்கும் ஆயிற்று –
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு
சிவந்த தாமரையை உடைத்தான நீர் நிலங்களிலே உஜ்ஜ்வலமாக நின்றுள்ள திருவயிந்திரபுரமே –
அகடிகடதங்களை கடிப்பித்தும் அவன் ஆஸ்ரித ரஷணம் பண்ணுமா போலே
விருத்தமான தேசத்தில் அவை இரண்டையும் சம காலத்தில் கிட்டி அனுபவிக்கலாம் தேசம் ஆயிற்று
குறிஞ்சி நிலமான மலை சாரலிலே முல்லை நிலமும் மருத நிலமும் இருந்தது போலே-
(மெய்த்து திருமேனி மார்த்வம்
முல்லை நிலம் -நிர்ஜலப் பிரதேசம் -முல்லைக்கொடி ஆட
செழும் பணை -நீர் நிலத்தில் தாமரை மலர -மருத நிலம்
மலைச்சாரல் குறிஞ்சி நிலம்
இப்படி அனைத்தும் சேர இருக்கும் தேசம் )
– —————————————————————–
அடியவர்க்கு மெய்யன் என்றார் கீழே
எப்படி நம்மையும் அடியவர்களாக ஆக்கி அருளுகிறார் என்பதை இதில்
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா
கூறு கொண்டு அவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங்கழை தகை விசும்புற மணி நீழல்
சேறு கொண்ட தண் பழனமது எழில் திகழ திருவயிந்தபுரமே–3-1-4-
இன்னருள்-சீற்றத்துடன் அருள் அன்றோ –
மாறு கொண்டு –
ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் – என்று இருக்குமவனோடே
நான் மாறு -என்று வந்தான் ஆயிற்று -நான் சத்ரு -என்று கொண்டு –
உடன்று எதிர்ந்த-
நான் சத்ரு என்று சொல்லா நிற்கச் செய்தேயும் அகவாயில் இன்றிக்கே இருக்கவுமாம் இறே –
அங்கன் இன்றிக்கே
அகவாயில் த்வேஷத்தோடே எதிரிட்டு முன்னே வந்த
வல்லவுணன் –
ஹிரண்யன் உடைய சத்ரு என்று வாயாலே சொல்லுகையும் –
அதுக்கு அடியான நெஞ்சில் த்வேஷமும் –
அதின் கார்யமான முன்னே வந்து நிற்கையும்
மூன்றையும் சொன்ன படி-
(வாசிகம் மாநசம் காயிகம்–மூன்றாலும் எதிர்த்தால் தான் கை விடுவார்
கைக் கொள்ள ஒன்றே போதுமே சிரமம் இதை வாசோ ஏவ)
தேவர்கள் உடைய வரத்தை ஊட்டியாக இட்டு வளர்த்த மிக்க பலத்தை உடையனான ஆசூர பிரகிருதி உடைய-
தன் மார்பகம் இரு பிளவா –
பரந்த மார்பானது இரண்டு பிளவாகும்படி கூறு செய்தவன் –
சீற்றத்தோடே நரசிம்ஹம் வந்து தோற்றின தோற்றம் கண்டவாறே மெல்கினான்-
பின்னை இரண்டு கூறாக்கி பொகட்டான் ஆயிற்று –
கூறு கொண்டு அவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவனிடம்
குல விரோதியான ஹிரண்யனைப் போக்கி அவன் குல புத்ரனுக்கு தன் பேறான அருளைப் பண்ணினான்
சர்வேஸ்வரன் தானே இறே
பிதாவுக்கு பிரஜை பக்கலில் வாத்சல்யம் உறைத்து அவனை நோக்கும்படி பண்ணுகிறான் –
அதில் அந்த வாத்சல்யம் போய் தானே தானாம்படி தோற்றி நின்ற வாறே
தான் தகப்பனில் அண்ணிய உறவாய் வந்து உதவினான் ஆயிற்று —
மிடைந்து இத்யாதி —
பெற்ற தமப்பன் பகையா அவனில் அண்ணிய உறவாய் உதவினவன் தனக்கு தன்னில்
அண்ணிய உறவு இல்லை இறே -புறம்பு –
இப்படி இருக்கிற தானும் -ஆத்மைவ ரிபுர் ஆத்மான -என்கிறபடி
தனக்குத் தானே பகையாய் தன்னை முடிக்கப் பார்த்த வன்று –
உன்னை உன் கையில் காட்டித் தாரேன் -என்று நோக்குகைக்காக வந்து நிற்கிற விடம் –
சாறு கொண்ட மென் கரும்பு இளங்கழை தகை விசும்புற மணி நீழல் –
பரஸ்பரம் நெருங்கி -அன் நெருக்கம் பொறாமையாலே சாரமானது பிரவஹியா நின்றுள்ள
மெல்லிய கரும்பின் உடைய இளங்கழை-உண்டு –
நுனியானது ஆகாசத்திலே சென்று வளர இனி அவ்வருகு போக ஒட்டோம் என்று தடுக்கும் ஆயிற்று ஆகாசம் –
இப்படி வளர்ந்த கரும்பின் உடைய அழகிய நிழலை உடைத்தாய்
சேறு கொண்ட தண் பழனமது எழில் திகழ திருவயிந்தபுரமே –
கருப்பஞ்சாற்றாலே வெள்ளம் இட்ட சேறுகளை உடைத்தாய் இருந்துள்ள நீர் நிலங்களின் அழகு
உஜ்ஜ்வலமாய் நின்றுள்ள திருவயிந்தபுரமே –
தழீஇக் கொண்டு போரவுணன் தன்னை சுழித்து எங்கும் தாழ் விடங்கள் பற்றிப் புலால் வெள்ளம் தானுகள -பெரிய திருவந்தாதி -57
வ்யாபாரித்த போது ஹிரண்யன் உடைய ருதிர வெள்ளத்தாலே பார்த்த பார்த்த இடம் எங்கும் சேறு செய்தாற் போலே
கரும்புகள் ஒன்றோடு ஓன்று நெருங்கி பிரவஹித்த சாற்று வெள்ளத்தாலே பூமி எல்லாம் சேறாய்க் கிடக்கும் ஆயிற்று-
————————————————————-
கீழே அத்தாலே அனன்ய ப்ரயோஜனர் ஆக்குவார் என்றார்
அடியவர்க்கு மெய்யன் கேட்க வேண்டுமோ
ப்ரயோஜனாந்தர பரனுக்கும் அருள் செய்தவன்
நப்பின்னைக்கு செய்தவற்றையும் சேர்த்து அருளுகிறார் இதில்
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை
கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே–3-1-5
மகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே
தன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம்
அவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு –
இடையர் பூத்த கொடி போலே இருக்கிற நப்பின்னை பிராட்டிக்காக
உபக்னம் தேட்டமான பருவம் ஆயிற்று
பதிசம்யோக சுலபம் வய -என்கிறபடியே
(சீதாபிராட்டி அனசூயை இடம் ஜனகர் கவலைக்கடலில் ஆழ்ந்ததை –கோல் தேடி ஓடும் கொழுந்து போல் )
ஒரு கொள் கொம்பிலே கூட்டில் கிடக்குமவளாய்- இல்லையாகில் தர்மி லோபம் பிறக்குமவளாய் இருக்கை
இனம் இனமான ருஷபங்களோடே பொருதவன் உடைய ஸ்தானம் –
பொன் இத்யாதி – குரக்கினம் ஆனது பொன் போலே இருக்கிற மலர் விளங்கா நின்றுள்ள
வேங்கை கொங்கு செண்பகக் கொம்பினிலே
இவற்றில் தாவி பெரிய வேகத்தோடே வந்து அவ்வருகு போக்கின்றிக்கே
தேன் கலந்த தேன் மிக்கு இருந்துள்ள பலாப் பழத்தை புஜியா நிற்கும் ஆயிற்று-
( திரு வெள்ளறை பதிகம் இதே வர்ணனை உண்டு )
————————————————————
பிரயோஜனாந்தர பரர்களுக்கு உதவியதை அருளிச் செய்ய
கூனி சொல்வதையும் செய்து அருளினவன் இவன் என்கிறார் –
கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளங் கொடியோடும்
கானுலாவிய கருமுகில் திரு நிறத்தவன் இடம் கவினாரும்
வானுலாவிய மதி தவழ் மால் வரை மா மதிள் புடை சூழ
தேனுலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே–3-1-6-
கவினாரும்– கவின் ஆரும் –அழகு மிக்கு இருந்துள்ள –
கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து
சர்வாத்மந அந்தக-என்று கண்ணிலே குருடே அன்றிக்கே நெஞ்சம் குருடு பட்டு இருக்கும் என்றாப் போலே
முதுகிலே கூனே அன்றிக்கே நெஞ்சம் க்ரூரமாய் ஆயிற்று இருப்பது –
(கூன் தொழுத்தை சிதைகுலைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு பெரியாழ்வார் )
கூனியின் உடைய கொடும் சொல் உண்டு –
ராமோ வா பரதே வா அஹம் விசேஷம் நோபலஷயே -என்ற கைகேயி –
ஏஷமே ஜீவிதச்யாந்தோ ராமோயத்யபி ஷிச்யதே -என்று சொல்லும்படி பண்ணின கொடிய சொல் ஆயிற்று –
(இது தான் கலக்கிய மனம் -)
இளங் கொடியோடும்-
கொள் கொம்பு தேட்டமாய் இருப்பது அதில் தானே சென்று பற்ற மாட்டாதே இருப்பதான பருவம் ஆயிற்று –
கானுலாவிய-
ஒரு சர்க்கமாக பெருமாள் தாமே உனக்குக் காட்டில் வெம்மை பொறாது-என்று அருளிச் செய்தார் இறே –
கருமுகில் –
மின்கொடி தழுவிய ஒரு மேகம் சஞ்சரிக்குமா போலே காட்டிலே இருவருமாய் உலாவின படி –
கவின் -என்று அழகு அழகு மிக்கு இருந்துள்ள ஆகாசத்தில் சஞ்சரிக்கிற சந்த்ரனுக்கு
குழவிகள் சுரம் ஏறுமா போலே தாழ்ந்து ஏற வேண்டும்படியான ஒக்கத்தை உடைய
பெரிய மலைகளையும் பெரிய மதிள்களையும் சுற்றிலே உடைத்தாய்
வண்டுகள் சஞ்சரியா நின்றுள்ள அழகிய பொழிலாலே சூழப்பட்ட திருவயிந்திரபுரமே
முன்பு -சக்கரவர்த்தி திருமகனுக்கு சித்ர கூடத்தையும் தண்ட காரண்யத்தையும் விஸ்மரித்து
வர்திக்கலாம் தேசம் ஆயிற்று
———————————————————
ஸ்ரீ ராமாவதாரம் பிரஸ்த்துமானதும் இதில் ஸ்ரீ ராமாவதாரம் விரித்து அருளுகிறார்
அவன் மிடுக்கை அனுபவிக்கிறார்
ஸ்ரீ சீதை காரணம் இல்லாமல் அவளின் அழகே காரணம் என்கிறார் இதில்
மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன் இடம் மணி வரை நீழல்
அன்ன மா மலர் அரவிந்தத் தமளியில் பெடையொடும் இனிதமர
செந்நெலார் கவரிக்குலை வீசு தண் திருவயிந்திரபுரமே–3-1-7-
மணி வரை -ஒவ்ஷதாத்ரி
செந்நெலார் கவரிக்குலை வீசு -செந்நெலார் குலை கவரி வீசு-சீரார் செந்நெல் கவரி வீசும் திருக்குடந்தை -நம்மாழ்வார்
மின்னொடு ஒத்த நுண்ணிய இடையை உடையளாய்
ஆத்ம குணங்களுக்கு எல்லாம் தானே ஆஸ்ரயமாய்
ஒரு உபக்னத்தோடே சேர்க்க வேண்டும்படியான பருவத்தை உடைய
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ஹேதுவாக –
பிரிவில் ரஷகனை இவ்வார்த்தை சொல்லுவிக்கும்படியான அழகு இறே
புரேவ மே சாரு ததீம் –
மாயா மிருகத்தின் பின்னே போவதுக்கு முன்பே
இம் மானைப் பிடித்துத் தர வேணும் என்ற முறுவலோடு
கொடு வந்து காட்டிற்று இலர்கள் ஆகில்
அநிந்திதாம்-
அவளைப் பெறாமையால் ஜகத் உபசம்ஹாரம் பண்ணினார் என்றால்
அவளுக்காக இது செய்த விடம் தப்பச் செய்தார் -என்ன வல்லார் உண்டோ –
யுக்த மித்யேவ மே மதி –( திருவடி வார்த்தை-முதல் தடவை பிராட்டியைப் பார்த்ததும் )
என்னும் இத்தனை யாகாதே
பிராட்டியை உள்ளபடி எல்லாம் அறியாத எனக்கும் இருந்த படி இது –
இனி இவளை உள்ளபடி அறிவார் என் நினைந்து இருப்பார்களோ –
சதவேத்யாதி –
இத்தை வகுக்கைக்கு-(சதேவ –ஸ்ருஷ்டிக்க ) நெஞ்சால் பட்ட இடர் பட வேணுமே அழிக்கைக்கு
(ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்து போல் சம்ஹரிக்கவும் சங்கல்பம் செய்யலாமே )
விலங்கல் இத்யாதி –
ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே
படைவீடாய் இறே இருப்பது
இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ
என்று அபிமானித்து இருக்கிற பையலுடைய-
தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும்
துகளாம்படி பண்ணின மிடுக்கனானவான் வர்த்திக்கிற ஸ்தானம் –
மணி வரை நீழல் –
ரத்ன பர்வத சாயலிலே –
அன்னம் இத்யாதி –
அன்னமானது பெரிய தாமரை மலரான படுக்கையிலே
அதாகிறது
குளித்தல் உண்ணுதல் மது பானம் பண்ணுதல்
ஊடினால் ஒருத்தருக்கு ஒருத்தர் அணித்தாகாத படி
கடக்க கிடைக்கைக்கு வேண்டும் இடம் போரும் படி
பரப்புடைத்தான படுக்கையிலே
ஜாத்ய சண்டாளரைப் பொறுத்தாலும்
பிரணய அபராத சண்டாளரை பொறுப்பார் இல்லை இறே
பள்ளிக் கமலத்து இடைப்பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி –நள்ளி ஊடும் நறையூர் –என்னுமா போலே-
செந்நெலார் -இத்யாதி
அப் படுக்கையிலே பேடையோடே இனிது அமரும்படியாக
அவ் வனுபவத்துக்கு தண்ணீர் துரும்பாகை அன்றிக்கே
இனிது அமர வீசும் ஆயிற்று செந்நெல்
ஒரு சேதனன் என்று துணுக் என்ன வேண்டாதே
நிறைந்த கவரிக் கொத்தை வீசா நிற்கும் ஆயிற்று-
——————————————————
வில்லை எடுத்ததும்
மலை எடுத்ததும்
ராம கிருஷ்ணர் இன்று நாமும் சேவிக்க ப்ராப்யமான திவ்ய தேசம்
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்த அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடமார்
வரை வளம் திகழ மதகரி மருப்பொடு மலைவளர் அகில் உந்தித்
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே–3-1-8-
செழு நதி-கருட நதி
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்த-
நறு நாற்றம் கமழா நிற்பதுமாய்
மிருதுவான கரும் குழலை உடைய
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஹேதுவாக வில்லை முறித்து –
சர்வ கந்த -என்கிற வஸ்து முடியும் முடியாதே என்றும் பாராதே
மேல் விழுந்து வில்லை முறிக்கும்படியாக யாயிற்று குழலின் பரிமளம் –
அதாகிறது அவ்வருகு பெற இருக்கிறது இவளை யாகில்
நடுவு உண்டான பிரதிபந்தகங்கள் கொடு கார்யம் என்று இருந்தார்-
அடல் மழைக்கு
அவள் அழகிலே துவக்குண்டு செய்த செயலே அன்றிக்கே
ஸ்வ ரஷணத்தில் அந்வயம் இல்லாத பசுக்களுக்கும்
இடையருக்குமாக மலையை எடுத்து
மழையை பரிகரித்தான் ஆயிற்று –
இந்த்ரனாலே ஏவப்பட்ட மேகங்கள் வர்ஷிக்க
அதிலே பசுக்களும் இடையரும் நோவு பட புக –
கோவர்த்தன கிரியை தரித்து ரஷித்தான் ஆயிற்று –
அடல் மழைக்கு-
போர் களத்து என்னுமா போலே
யுத்த உன்முகமான வர்ஷத்துக்கு
நிரை கலங்கிட –
அதீவார்த்தம் -என்கிறபடியே நோவுபட
நிரை கலங்கிட -அடல் மழைக்கு—-வரை குடை எடுத்தவன் –
விஸ்வாமித்ரராதிகளோடு ஆதல் -சனகாதிகளோடு ஆதல் –
கூட்டிச் செய்யும் ஜன்மம் அன்றே
தோற்றிற்று ஒரு மலையை எடுத்து பரிகரித்தான் ஆயிற்று
நிலவிய இடம் –
இந்த்ரன் வர்ஷிப்பிக்க பிற பாடராய் நோவு பட விட்டால்
போலே ஆக ஒண்ணாது என்று ஏற்கவே
நோவு படாமே நோக்குகைக்காக வந்து
நித்யவாசம் பண்ணுகிற இடம் ஆயிற்று –
தடமார் வரை வளம் திகழ மதகரி மருப்பொடு
தடம் என்று தாழ் வரையாய்-தான் வளரா நின்றுள்ள வரை போல்
அழகு விளங்கா நின்றுள்ள மத்தகத்தின் உடைய மருப்போடு கூட-என்னுதல் –
அன்றிக்கே
தடம் என்று தடாகமாய்
தடங்கள் மிக்கு இருந்த வரைக்கு அழகாய் கொண்டு விளங்கா நின்றுள்ள மத்தகத்தின் உடைய
மருப்போடு கூட என்னுதல் –
மலைக்கு சிறப்பாக ஆனைகளைச் சொல்லக் கடவது இறே
மலை வளர் அகில் உந்தித் –
மலையில் மனுஷ்யாதிகளால் வரும் சங்கோசம் எல்லாம்
இல்லாமையாலே ஆகாச அவகாசம்
இடம் அடைத்துக் கொண்டு தான் கண்டபடி வளருகிற அகிலை
வேரோடே பறித்துத் தள்ளிக் கொண்டு-
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே
வர்ஷித்தவாறே மலை அருவிகள் ஆனவை
ஆனைக் கொம்பையும் அகில் மரத்தையும் முறித்து
தன் திரைகள் ஆகிய கைகளாலே
ஏத்திக் கொண்டு வயலிலே வந்து புகுரும் ஆயிற்று –
அளவுபட்ட வாய்த்தலைகளே யாதல்
வாய்க்காலே யாதல்
புகுருகை அன்றிக்கே
விளைவில்லாக் கடலிலே போய் புகுகையும் அன்றிக்கே
ஆறு தானே வயலிலே வந்து புகுரும் ஆயிற்று
—————————————————————-
ஆஸ்ரித பக்ஷபாதி என்கிறார் இதில்
கொல்லா மா கோல்
பற்றலர் வீய கோல் கையில் கொண்டவன்
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணித்தேர்
கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரைச் சாரல்
கால் கொள் கண் கொடிக் கை எழக் கமுகு இளம் பாளைகள் கமழ சாரல்
சேலைகள் பாய் தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே–3-1-9-
வேல் கொள் கைத் தலத்து-
பகதத்தனில் குறைந்தார் இல்லை இறே
அங்கேறி போரில்
பார்த்தம் சஞ்சாத்ய பண்ண வேண்டும்படி இறே
அரசர் –
பரிகரம் தூசி ஏற ராஜாக்கள் கடக்க நிற்கை அன்றிக்கே
ராஜாக்களே தூசி ஏறின போர் ஆயிற்று
வெம் போரினில்-
பாரத சமரம் என்றால் கேட்டவர்களும் மயிர் எழ வேண்டும்படியான யுத்தத்திலே
காண வந்த சோழர்க்கும் தங்களை நோக்குகைக்காக கையிலே
ஓர் ஆயுதம் பிடித்துக் கொண்டு நிற்கும் வேண்டும் படி
பயாவஹம் இறே
விசயனுக்காய் –
அர்ஜுனனுக்காக தன்னை அழிவுக்கு இட்டு –
ரதியைச் சீறினவன் சாரதியை இறே அழியச் செய்வது –
உடம்புக்கு ஈடு இடாதே தன்னை அழிவுக்கு இட்டு நின்றான் ஆயிற்று –
(ஈடு -கவசம் என்றபொருளும் உண்டே -ஈடு திருவாய் மொழிக்கு கவசம் போல் என்றும் )
தான் கொண்ட விஜயமும் அர்ஜுனன் தலையிலே கிடக்கும்படி –
தன்னைத் தாழ விட்டு வைத்தான் ஆயிற்று –
மலை புரை தோள் இத்யாதி –
மணித் தேர் கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் இடம்
ஸ்லாக்கியமான தேரிலே
கையிலே உழவு கோலைக் கொண்டு நின்ற
என் குல நாதன் உடைய ஸ்தானம் –
குலவு தண் வரைச் சாரல் –
கொண்டாடப் பார்த்தால் தன்னையே கொண்டாடும்படியாய்
இருக்கிற
குளிர்ந்த மலைச் சாரல் பர்யந்தத்தில்
கால் கொள் கண் கொடிக் கை எழக் கமுகு இளம் பாளைகள் கமழ சாரல்
கால் உண்டு வெற்றிலைக் கால்
அது மறையும்படியாக கண் தோறும்
பல்லி பற்றும் ஆயிற்று வெற்றிலைக் கொடி–பல்லி பற்றுகை கிளருகை –
அக்கொடிகள் கமுகளினுடைய இளம் பாளைகள் விரிந்த
பரிமளத்தாலே எரு இட்டாப் போலே இருக்க
கை எழா நிற்கும்
கை என்று வெற்றிலைக் கிளைகள் இறே
இப்படிப் பட்ட சோலையை உடைத்தாய்
இச் சோலைக்கு அணித்தாய் இறே ஆறும் இருப்பது –
சேலைகள் பாய் தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே –
அப்பரிமளத்திலே மது பானம் பண்ணினாப் போலே
களித்து சேல்கள் பாயா நிற்கும் ஆயிற்று –
இப்படி இருக்கிற அழகிய நதியானது வயலிலே புகும் ஆயிற்று
அதாவது இவ் வயல் அளவுமாயிற்று ஆறாய் வருவது —
இங்கே வந்தவாறே வயலிலே புகுந்து ஆயிற்று போவது –
ஆக தாரகம் தார்யத்துக்கு உள்ளே
மறைந்து இருக்கும் தேசம் ஆயிற்று –
தான் வெல்லச் செய்தேயும் -அர்ஜுனன் வென்றான் என்று சொல்லலாம்படி
கிருஷ்ணன் அவனுக்கு பரிகரமாய்
அந்தர்பவித்து நிற்குமா போலே
தான் விளைவிக்கச் செய்தே -வயல் விளைந்தது -என்று
சொல்லலாம்படி யாயிற்று இருப்பது
————————————————
மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே–3-1-10-
மூவராகிய மூர்த்தி -முதல்வன் தன்னை -நம்மாழ்வார் –
ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய சரீரத்துக்கும்
ஆத்மாவுக்கும் அந்தராத்மதயா நின்று
சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகையாலும் –
ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணுகையாலும்
மூவராகிய ஒருவனை
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம் ஏக ஏவ ஜனார்த்தனன் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ஆக
சர்வ நியந்தாவாய் ஆயிற்று –
மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை-
ஆபத் சகனும் ஆயிற்று
தேவர் தானவர்-சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து மேவு சோதியை
தேவானாம் தனவாநாஞ்ச–ஜிதந்தா ஸ்லோகம் -என்கிறபடியே
தன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும்
ஒத்து இருக்கையாலே
தம்தாமுடைய அபேஷித சித்திக்காக
தேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிக்கலாம் படி
திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி
அத்தாலே
மேவு சோதியை
பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை
எல்லாம் இல்லை இறே பரமபதத்தில்
இவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த
ஏற்றம் உண்டு இறே இங்கு
வேல் வலவன் –
அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன் என்னுமா போலே
கலி கன்றி விரித்து உரைத்த –
சொல்லுகிற லஷணங்கள் உண்டாம்படி சொன்ன
விரித்து உரைத்த என்றும்
தொகுத்து உரைத்த என்றும் உண்டு இறே
சிவிட்கு என்று நெஞ்சிலே படும்படி பண்ணுகையும்
இவர்களுக்கு பரக்கச் சொல்லுகையும்
இவை எல்லாம் வேணும் இறே
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப்
பாவு -பரந்து சபாத லஷமாய் இருக்கை அன்றிக்கே-(மஹா பாரதம் 125000) பத்தாயிற்று –
பாவங்கள் பயிலாவே –
பாப அனுபவம் பண்ணுகைக்காக இறே சம்சாரத்தில் பிறக்கிறது
அத்தை அனுபவிக்க வந்த இத் தேசத்தில் இத்தை அதிகரிக்கில்
அவை தாம் நமக்கு இருப்பிடம் இல்லை என்று விட்டு ஓடிப் போம் –
————
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
இரு நிலம் இடந்து இரும் துன்பம் தொண்டர் அண்டர்க்கு
உருத்து ஆல்மேல் சேர் அடியார் மெய்யன் -பொருந்தும்
அயிந்தை சீர் உட்பொருள் உடன் சொல் கலியன்
செயரில் பா நாம் உண்னும் ஊண்–21-
உருத்து -கோபித்து -அதனால் அழித்து-/செயிர் -குற்றம் /செயரில் -குற்றம் அற்ற /
கமல நன் மலர்த் தேறல் அருந்தி இன்னிசை முயன்று எழும் அளிகுலம் பொதுளி அம் பொழில் சூடி
செருந்தி நாண் மலர் சென்று அணைந்து உழி தரு —
தேனேமலரும் திருப்பாதத்தை தேறல் அருந்தி அவன் புகழ் பாடி பின்னர்
பரமபத நாதனின் -பத்தே பரமே மத்வ உத்ஸா -பாத மலர் நறவு அருந்தச் செல்வர்
அளிகுலம் -வண்டு–ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றவாறு–
————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply